பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் பிறந்தநாளையொட்டி அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேரில் வாழ்த்து தெரிவித்தார். டெல்லியிலுள்ள அத்வானியின் இல்லத்திற்கு இன்று காலை சென்ற நரேந்திர மோடி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Friday, November 8, 2013
அத்வானிக்கு பிறந்தநாள்:மோடி நேரில் வாழ்த்து
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் பிறந்தநாளையொட்டி அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேரில் வாழ்த்து தெரிவித்தார். டெல்லியிலுள்ள அத்வானியின் இல்லத்திற்கு இன்று காலை சென்ற நரேந்திர மோடி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
காங்கிரஸ் உயர்மட்டக்குழு ஆலோசனை:முடிவெடுப்பதில் இழுபறி
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் காமன்வெல்த் மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது. பிரதமர் மன்மோகனின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த கூட்டத்தில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாடு குறித்து தலைவர்கள் விரிவாக விவாதித்தனர்.
குறிப்பாக காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் பங்கேற்கக் கூடாது என்ற மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், நாராயணசாமி ஆகியோரது எதிர்ப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மாநாட்டை இந்தியா புறக்கணிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும், தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
காமன்வெல்த் மாநாடு தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய சோனியாகாந்தி, பின்னர் பிரதமருடன் தனியாக விவாதித்தார். இருப்பினும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதில் இழுபறி நீடிப்பதாகவே டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
’ஆரம்பம்’ படத்துக்கு தடையா?
அஜித் ரசிகர்கள் ஊர் முழுக்க வைத்திருக்கும் பேனர்களே ஆரம்பம் ரிலீஸுக்கு சாட்சி. நாளை(31.10.13) ‘ஆரம்பம்’ திரைப்படம் ரிலீஸ் என்பதை படம் எடுத்தவர்கள் யாரும் விளம்பரப்படுத்த தேவையில்லை.
பலதரப்பட்ட திட்டங்களுடன் ஆரம்பம் ரிலீஸுக்காக காத்திருக்கும் ரசிகர்களின் மகிழ்ச்சியை பாதிக்கும் விதத்தில் இயக்குனர் கே.கண்ணன் என்பவர் ஆரம்பம் திரைப்படத்தின் மீது சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறாராம்.
அவரது புகாரில் “கடந்த ஏப்ரல் 3 2013 அன்று நான்’இனி தான் ஆரம்பம்’ என்ற டைட்டிலை என் பெயரில் பதிவு செய்திருக்கிறேன். ஆனால் அஜித் படத்திற்கு அதே மாதிரியான டைட்டிலை உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். எனவே ஆரம்பம் படத்தின் டைட்டில் மீது தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறாராம்.
’ஆரம்பம் என டைட்டில் அறிவிக்கப்பட்டு இத்தனை மாதங்களுக்குப் பிறகு ஏன் புகார் கொடுத்து தடை கேட்க வேண்டும். இத்தனை நாட்கள் என்ன செய்துகொண்டிருந்தார்’ என அஜித் ரசிகர்களும், திரையுலக முக்கியஸ்தர்களும் டுவிட்டர் ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் குமுறிக்கொண்டிருக்கிறார்கள்.
12–ந் தேதி நடைபெறும் முழு அடைப்புக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்: வைகோ வேண்டுகோள்
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
லட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்க மின்றி படுகொலை செய்த கொடியவன் ராஜபக்சே அர சோச்சும் இலங்கை நாடு, காமன் வெல்த் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டால்தான், காமன் வெல்த்தின் குறிக்கோள் உயிரோடு இருப்பதாக அர்த்தம்.
காமன்வெல்த் மாநாட்டை கொழும்பில் ஏற்பாடு செய்ததே சோனியா காந்தி இயக்குகிற இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான். காமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகமாக தற்போது பதவியில் இருக்கும் கமலேஷ் சர்மா என்ற இந்தியரைக் கொண்டுதான் இம்மாநாட்டை நயவஞ்சக நோக்கத்தோடு இந்திய அரசு கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்தது.
இந்த மாநாடு எந்த நாட்டில் நடக்கிறதோ, அந்த நாட்டின் அதிபர்தான் அதிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்பின் தலைவராக செயல்படுவார். இலங்கையில் மாநாட்டை நடத்திவிட்டால் தமிழ் இனப் படுகொலை குற்றவாளியான ராஜபக்சேவை, இனக் கொலை குற்றத்திற்கான அனைத்துலக நீதிமன்ற விசாரணை என்ற கூண்டுக்குள் சிக்க விடாமல் தப்ப வைத்துவிடலாம் என்பது தான் இந்திய அரசின் திட்டமாகும்.
தமிழகத்தில் இளம் தலை முறையினரிடம், குறிப்பாக மாணவர்களிடம் ஏற்பட்டு வரும் தமிழ் ஈழ ஆதரவு உணர்ச்சிக் கனல் இந்திய அரசுக்கு எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால்தான் காமன்வெல்த் மாநாட்டை இந்திய–இலங்கை அரசுகள் நடத்த முற்பட்டுள்ளன.
இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளாமல் இருப்பதாலோ அல்லது இந்தியாவிலிருந்து எந்தப் பிரதிநிதியும் பங்கேற்காமல் தவிர்ப்பதாலோ தமிழர்களுக்கு எந்த நீதியும் கிடைக்கப்போவது இல்லை.
காமன்வெல்த் அமைப்பு அதிபர் கிரீடம் கொலைகார ராஜபக்சேவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு சூட்டப்பட்டு விடும். எனவே, “காமன் வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கு, மாநாட்டை நடத்தாதே” என்ற கோரிக்கையும் முழக்க மும்தான் ஈழத் தமிழர் விடியல் என்ற இலக்குக்கு வழிகாட்டுவதாக அமையும்.
இனிமேல் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தவிடாமல் செய்ய வாய்ப்பு இல்லை. இந்திய அரசின் சதித்திட்டம் நிறைவேறிவிடும். இதனால் மானத் தமிழர்கள் மனம் சோர்வடையத் தேவை இல்லை.
உலகில் 65 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறோம். நமது இனத்தை படுகொலைக்கு ஆளாக்கிய சிங்களவனின் கொடுமைகளை நிரூபிக்க நம்மிடம் அசைக்க முடியாத சாட்சியங்களும், ஆவணங்களும் உள்ளன.
இந்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து அம்பலப்படுத்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் சகோதரர் வெள்ளையன் தமிழகமெங்கும் நவம்பர் 12–ந் தேதி முழு கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதை வரவேற்று ஆதரிக்கிறேன்.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் நவம்பர் 7–ந் தேதி நடத்திய பல்வேறு கட்சியினர் பங்கேற்ற கூட்டத்தில், நவம்பர் 12–ந் தேதி தமிழகத்தில் ரெயில் மறியல் நடத்துவது என்றும்; முழு அடைப்பு நடத்துவது என்றும் எடுக்கப்பட்ட முடிவை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்று ஆதரிக்கிறது.
தாய்த் தமிழகத்திலே வாழும் மனிதாபிமானமுள்ள மக்கள் அனைவரையும் பணிவோடு வேண்டுகிறேன். 12–ந் தேதி ஏற்படும் பொருள் நட்டத்தையும், சிரமத்தையும் பொருட்படுத்தாது கடைகளை அடைக்குமாறு வேண்டுகிறேன். முழு அடைப்பை வெற்றிபெறச் செய்யும் வகையில், அன்று வாகனங்களை இயக்க வேண்டாம் என வேண்டுகிறேன். 12 ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து ரெயில் தடங்களிலும் ரெயில் மறியல் செய்ய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கண்மணிகளும், தமிழ் உணர்வாளர்களும் அடக்கு முறையை எதிர்த்து முன்வர வேண்டுகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கென்றே சிறிலங்கா படையினரின் ஒரு பிரிவினர் தனியாக களமிறக்கப்பட்டிருந்தனர்
வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கென்றே சிறிலங்கா படையினரின் ஒரு பிரிவினர் தனியாக களமிறக்கப்பட்டிருந்தனர் என்று யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.
இன்று 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்ற காணொளி மூலமாக இது அம்பலத்திற்கு வந்துள்ளது என்றும் மேற்படி பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சர்வதேச சமூகம் உடனடியாக உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மேற்படி பேரவை வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, வன்னியில் சிறிலங்கா படையினர் தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் தொடர்பாக சனல்-4 தொலைக்காட்சி கடந்த காலங்களில் பல்வேறு ஆதாரபூர்வமான தகவல்களை வெளியிட்டுள்ள போதிலும் அவற்றின் அடிப்படையில் சர்வதேச சமூகத்தால் எந்தவொரு விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லையென்றும் தெரிவித்துள்ள மேற்படி பேரவை சர்வதேச நாடுகளின் இரட்டை போக்கையே இது எடுத்துக்காட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது
உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் தஞ்சாவூர் விளார் சாலையில்.
அமைக்கப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இன்று காலை பத்தரை மணியளவில் மொழிப் போர் மறவர் திரு. ம. நடராசன் அவர்கள் தலைமையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
அத்துடன் முன்னதாக அறிவித்தபடி திறப்பு நிகழ்ச்சியை ஒட்டிய நிகழ்வுகள் எதிர் வரும் 8, 9, 10 தேதிகளில் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் கூறினார்.
கடும் குளிர் காரணமாக பரமேஸ்வரனின் உடல்நிலை பாதிப்பு
கடும் குளிருக்கும், பலத்த காற்று வீச்சுக்கும், மழைக்கும் மத்தியில் பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலம் முன்பாக பட்டினிப் போர் புரிந்து வரும் சுப்ரமணியம் பரமேஸ்வரனின் உடல்நிலை பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றது.
கொழும்பில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவைப் பிரித்தானியப் பிரதமர் மீளப்பெற வேண்டும் என வலியுறுத்திக் கடந்த நான்கு நாட்களாக தொடர் பட்டினிப் போராட்டத்தில் பரமேஸ்வரன் ஈடுபட்டு வருகின்றார்.
டிகிரி டிப்ளமோ தகுதி ILBS நிறுவனத்தில் பணி
Institute of Liver & Biliary Sciences (ILBS) நிறுவனம் Teaching மற்றும் Non Teaching பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 116
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
01. Professor Pediatric Hepatology - 01
02. Additional Professor Anaesthesia - 01
03. Associative Professor Anaesthesia/ Critical or Intensive care Medicine - 02
04. Assistant Professor Critical or Intensive care Medicine - 03
05. Assistant Professor Radiology/ Interventional Radiology - 02
06. Casualty Medical Officer - 01
கல்வித்தகுதி: மருத்துவ துறையில் சம்மந்தப்பட்ட துறையில் MD/ MS முடித்திருக்க வேண்டும்.
07. Principal Nursing - 01
கல்வித்தகுதி: Nursing பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
08. Junior Resident: - 04
கல்வித்தகுதி: மருத்துவத்தில் MBBS முடித்திருக்க வேண்டும்.
09. Nurse/ Jr. Nurse - 46
கல்வித்தகுதி: B.Sc in Nursing முடித்து அதே துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
10. Technical Executive Dialysis - 02
கல்வித்தகுதி: +2 முடித்து Dialysis பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
11. Patient Care Executive Nursing - 53
கல்வித்தகுதி: Diploma in Nursing & Midwifery முடித்து அதை துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு விவரம்:
பணி எண்.1 66-க்குள் இருத்தல் வேண்டும். பணி எண். 2,3 & 7 - 55-க்குள், 4 & 5 - 50-க்குள், 8 - 40-க்குள், 6 & 10 - 35-க்குள், 9 & 11 - 30-க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர் ரூ.500. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.100. இதனை புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் INSTITUTE OF LIVER & BILIARY SCIENCES” என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.ilbs.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் நகல் எடுத்து அதனுடன் வங்கி வரைவோலையை இணைத்து Dy. Head (HR) At Institute of Liver & Biliary Sciences, D-1, Vasant Kunj, New Delhi-110070 என்ற விலாசத்திற்கு ஆஞ்சலில் அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ilbs.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பட்டதாரிகளுக்கு ARSB-ல் விஞ்ஞானி பணி
வேளாண் ஆராய்ச்சி தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி பணியிடங்களை இரு நிலை தேர்வுகள் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 506 (Tentative)
பணி: விஞ்ஞானி
தேர்வு: Agriculture Research Service Exam 2013
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.08.2013 தேதிப்படி 21 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.15,600 - 39,100 + கிரேடு சம்பளம் ரூ.6,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் viva-voce மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20.
தேர்வுகள் விவரம்: எழுத்து தேர்வுகள் இரு நிலைகளில் நடைபெறும்.
நிலை.1: ARS -Preliminary Examination: 29.12.2013 (10.00 AM to 12.00 Noon)
நிலை.2: ARS-Main Examination: 16.03.2014 (10.00 AM to 01.00 PM)
விண்ணப்பிக்கும் முறை: www.asrb.org.in or www.icar.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.12.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.asrb.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பாரத ஸ்டேட் வங்கியில் கிளரிக்கல் பணி
பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள Pharmacists , Control Room Operators மற்றும் Armourer பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 76
துறைவாரியான காலியிடங்கள்:
01. Armourer - 12
02. Control Room Operators - 36
03. Pharmacists - 28
வயதுவரம்பு: 01.11.2013 தேதிப்படி 18 முதல் 28-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
Armourer பணிக்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Armed forces certificate பெற்றிருக்க வேண்டும்.
Control Room Operators பணிக்கு +2 தேர்ச்சி அல்லது 60 சதவிகித மதிப்பெண்களுடன் Armed Forces Special Certificate பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Pharmacists பணிக்கு Diploma in Pharmacy முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
பொதுப்பிரிவினருக்கு ரு.200. SC/ST/PWD/EXS உள்ளிட்டவர்களுக்கு ரூ.50 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.statebankofindia.com or www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் நகல் எடுத்து கீழ்கண்ட விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்.
State Bank of India,
Central Recruitment And Promotion Department,
3rd Floor, Atlanta Building,
Plot No. 209, BBR, Block No.III,
Nariman Point, Mumbai-400 021
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 08.11.2013
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.11.2013
பிரிண்ட் அவுட் நகல் சென்று சேர கடைசி தேதி: 03.12.2013
மேலும் சம்பளம், தேர்வு முறைகள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.sbi.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்
Can Fin Homes நிறுவனத்தில் அதிகாரி பணி
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் வீட்டு வசதி நிறுவனமான Can Fin Homes நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Officer பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 16
பணி: Junior Officer
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.
வயதுவரம்பு: 01.11.2013 தேதிப்படி 21 முதல் 30-க்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை வங்கி வரைவோலையாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.canfinhomes.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் வங்கி வரைவோலை இணைத்து கீழ்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Asst. General Manager – HRM,
Can Fin Homes Ltd.,
Registered Office: No.29/1, Ist floor,
Sir. M N Krishna Rao Road, Basavangudi,
Bangalore – 560 004, Karnataka State
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.11.2013
நேர்முகத் தேர்வு தேதி: 13.12.2013 முன்பு பெங்களூர், தில்லி மற்றும் கோயமுத்தூரில் நடைபெறும்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் இணையத்தின் மூலம் 16.12.2013 அன்று தெரிவிக்கப்படுவார்கள்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் சம்மந்தப்பட்ட இடங்களில் பணியமர்த்தப்படும் தேதி: 23.12.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.canfinhomes.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
இராஜதந்திர அழுத்தங்களுக்குள் அகப்படாத நில அபகரிப்பு விவகாரம்
கடந்த திங்களன்று, தென்னிலங்கையிலுள்ள பெலியத்த என்கிற நகரில் விசேட நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றது.
272 மில்லியன் டொலர் சீன நிதிஉதவியில், பாரிய தொடரூந்து பாதை நிர்மாணிக்கும் திட்டம் ,சபாநாயகர் சமல் ராஜபக்சவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் உட்கட்டுமான அபிவிருத்திப்பணிக்கு பெருத்த மனதோடு உதவிவரும் சீனாவிற்கு, அங்கு புகழாரம் சூட்டப்பட்டது.
ஏற்கனவே, 292 மில்லியன் டொலர் சீனக்கடனில் நிர்மாணிக்கப்பட்ட நெடுஞ்சாலையை அண்மையில்தான் சனாதிபதி திறந்து வைத்தார். பொதுநலவாய மாநாட்டிற்கு வருகை தரும் பிரமுகர்கள் இந்தப் பாதையை பயன்படுத்துவார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் பெருமை கொள்கிறது. ஆனால், பாதையை நிர்மாணிக்க சீனாவிடம் வாங்கிய கடனிற்கு மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் வட்டி செலுத்தப்படும் என்பதனை மறந்து விடக்கூடாது.
இதில் பெரும் சோகம் என்னவென்றால், அடுத்த ஆண்டிற்கான உத்தேச வரவு- செலவுத்திட்டத்தில் வடமாகாணத்திற்கு வெறும் 17 பில்லியன் ரூபாவும், கிழக்கு மாகாணசபைக்கு 15 பில்லியன் ரூபாவுமே அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைவிட , ஏறத்தாள 10 மடங்கு நிதி பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
2009 இல் $1.2 பில்லியனையும், 2010 இல் $ 821 மில்லியனையும், 2011இல் $ 784.7 மில்லியனையும் கடனாக இலங்கைக்கு வழங்கியிருக்கும் மக்கள் சீனக் குடியரசிற்கு , வட- கிழக்கு மாகாண சபைகளுக்கு இவ்வளவு குறைவான தொகையை அரசு ஏன் ஒதுக்கியுள்ளது என்பது குறித்தெல்லாம் கவலை கிடையாது. ஆனால் யுத்தம் நடைபெற்ற காலத்தில் மட்டும், வட-கிழக்கில் வீசப்படும் எறிகணைகளை யார் விநியோகிப்பது என்பதில், ஏனைய வல்லரசுகளோடு போட்டி போட்டது.
யுத்தத்திற்கு மட்டுமல்ல, நாட்டின் உட்கட்டுமான அபிவிருத்திக்கும் சீனாவின் நிதி உபயம் மிகப் பெரியது. இருப்பினும் பாரிய $1.3 பில்லியன் சீனக் கடனில் கட்டி முடிக்கப்பட்ட நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையம், கடந்த செவ்வாயன்று மீண்டும் தற்காலிகமாக தனது இயக்கத்தை நிறுத்தி விட்டதாக அமைச்சின் உத்தியோகபூர்வ செய்திகள் கூறின.
இதனைக் குறிப்பிடுவதன் நோக்கம் என்னவென்றால், அனேகமாக அடுத்த கட்டப்பணி ஆரம்பிக்க முன்பாக, சீன நிறுவனமொன்று இதன் முழுமையான நிர்வாகத்தினை கையேற்கும் சம்பவம் நிகழ வாய்ப்புண்டு என்பதைச் சுட்டிக்காட்டவே.
சீன மூலோபாய நகர்வின் அடுத்த கட்டமே அதுதான். தான் பெரியளவில் முதலீடு செய்த நிறுவனங்களை, அந்த நாடுகள் கையாள முடியாமல் தவிக்கும் போது, அதனை கையகப்படுத்துவதுதான் சீனாவின் மறைமுக நிகழ்ச்சி நிரலாகுமென எண்ணுகிறேன்.
ஏனெனில் இது ஆரம்பித்த நாளில் இருந்து இற்றைவரை, பழுது பார்க்கவென்று மூடப்பட்ட நாட்கள்தான் அதிகம். இலங்கை மின்சாரசபையின் நட்டக்கணக்கில், (அமெரிக்காவுக்குத் தெரியாமல் !)இறக்குமதியாகும் ஈரான் எண்ணெய்க்கு அடுத்தபடியாக இருப்பது, இந்த ‘லக்விஜய’ வால் வரும் நட்டந்தான்.
இதனையும் தாண்டி, 2015 இல் தலைக்குரிய வருமானத்தை $4000 ஆக உயர்த்த வேண்டுமாயின் இன்னும் பல படிகளை கடக்க வேண்டும் இலங்கை அரசு. அதேவேளை,
வரவு- செலவுத்திட்டத்தின் 47 சதவீதத்தை மூன்று சகோதரர்களின் அமைச்சுக்களும் பங்கு போட்டுக்கொண்டால் நாடு எப்படி முன்னேறும் என்று ஐக்கிய தேசியக் கட்சியினர் விமர்சிப்பது மக்களின் செவிகளில் விழுகிறது.
Shivaji University-யில் பேராசிரியர் பணி
Shivaji University-யில் காலியாக உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 30
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Professor/ Director - 09
i. Director/ Professor - 01
ii. Professor - 08
02. Associate Professor / Deputy Director - 01
03. Assistant Professor / Assistant Director - 19
04. Cultural Co-ordinator and Counsellor - 01
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டத்துடன் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.300. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரு.150 மட்டும் செலுத்தினால் போதுமானது.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியுள்ளவர்கள் http://apps.unishivaji.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.11.2013
பிரிண்ட் அவுட் நகல் சென்று சேர கடைசி தேதி: 07.12.2013
பிரிண்ட் அவுட் நகல் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Registrar, Shivaji University,
Vidyanagar, Kolhapur-416 004
பட்டதாரிகளுக்கு Shamrao Vithal Co-operative Bank-ல் பணி
Shamrao Vithal Co-operative Bank-ல் காலியாக உள்ள Customer Service Officer, Customer Service Representive பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
01. Customer Service Officer in the Officer Grade
வயதுவரம்பு: 32-க்குள் இருத்தல் வேண்டும்.
02. Customer Service Representative in the Clerical Cadre
வயதுவரம்பு: 30.11.2013 தேதிப்படி 30-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: Customer Service Officer பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இரண்டாம் வகுப்பு பட்டத்துடன் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Customer Service Representative பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 45 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி செயல்பாடுகள் குறித்த அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.svcbank.com - Career section என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.svcbank.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Shamrao Vithal Co-operative Bank-ல் கிளை மேலாளர் பணி
Shamrao Vithal Co-operative Bank-ல் கிளை மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Branch Manager, Assistant Manager
வயதுவரம்பு: கிளை மேலாளர் பணிக்கு 35 - 38-க்குள் இருத்தல் வேண்டும். உதவி மேலாளர் பணிக்கு 30-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும் C.A/I.C.W.A/C.S/M.B.A போன்றவற்றில் எதாவதொன்றை முடித்திருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Divisional Manager - Human Resource Management
The Shamrao Vithal Co-operative Bank Ltd.
5thFloor, Corporate Office, SVC Tower, J.N. Road,
Vakola, Santacruz (East), Mumbai–400055
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.svcbank.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
கிழக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு பணி
மேற்கு வங்காளத்தில் செயல்பட்டு வரும் கிழக்கு ரயில்வேயின் Asansol Division-ல் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான குரூப்-டி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Sports persons (Sports Quota -2013-14)
மொத்த காலியிடங்கள்: 05
துறைவாரியான காலியிடங்கள்: Athetics - 01, Weightlifting -01, Badminton - 01, Cricket - 01, Football - 01
சம்பளம்: ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18-25-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் Athetics பிரிவில் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயம், Weightlifting பிரிவில் 62 கிலோ எடை பிரிவு,
Badminton பிரிவில் பொது விளையாட்டு தகுதி, Cricket ஆல்ரவுண்டர், சுழற்பந்து வீச்சாளர், Football பிரிவில் Striker விளையாட்டு போட்டிகளில் மாநில அளவில், தேசிய
அளவில் பங்கு பெற்று குறைந்த பட்சம் 3-வது இடம் பெற்றிருக்க வேண்டும். இதுதொடர்பான முழு விரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் விளையாட்டுத்துறை சாதனைகள், மருத்துவத்தகுதி, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை குறுக்கு கோடிட்ட இந்தியன் போஸ்டல் ஆர்டராக செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Sr.Divisional Personnel Officer, Divisional Railway Manager's Office, Eastern Railway, Asansol, P.O. -Asansol, Dist-Burdwan, Pin-713301.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2013
மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.er.indianrailways.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
தொழிற்சாலை நிதி ஆணையத்தில் மேலாளர், உதவி மேலாளர் பணி
புதுதில்லியில் செயல்பட்டு வரும் Industrial Finance Corporation of India (IFCI)-ல் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Asst.Manager
தகுதி: எம்பிஏ(நிதி) அல்லது சி.ஏ முடித்திருக்க வேண்டும்.
பணி: Manager
தகுதி: எம்பிஏ(நிதி) அல்லது சி.ஏ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: Asst.Manager பணிக்கு ரூ.17,100 - 33,200. Manager பணிக்கு ரூ.21,000 - 36,400
வயதுவரம்பு: Asst.Manager பணிக்கு 01.11.2013 தேதிப்படி 27-க்குள் இருத்தல் வேண்டும். Manager பணிக்கு 35-க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ifciltd.com/Careers/Current Opening.Aspx என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.11.2013
மேலும் துறைவாரியான காலியிடங்கள், தேர்வுமுறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.ifciltd.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
சேலம் இரும்பு ஆலையில் டெக்னீசியன் பணி
இந்திய ஸ்டீல் அத்தாரிட்டி நிறுவனத்தின் கீழ் செயல்பட்டுவரும் சேலம் இரும்பு ஆலையில் காலியாக உள்ள டெக்னீசியன் பரணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Medical Officer (ME-1)
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: MBBS முடித்து மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை, நிறுவனங்களில் ஒரு வருடம் பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.20,600 - 46,500 மற்றும் இதர சலுகைகள்.
பணி: Attendant-Cum-Technician (Trainee)
பிரிவுகள்: பிட்டர், எலக்ட்ரீசியன், மெசினீஸ்ட்
காலியிடங்கள்: 53
பயிற்சி காலம்: 2 வருட பயிற்சிக்குப் பின் S-1 கிரேடில் பணி அமர்த்தப்படுவார்.
கல்வித்தகுதி: 10 வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.10.2013 தேதிப்படி 28-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: பயிற்சியின் போது முதல் வருடத்தில் மாதம் ரூ.8,600, இரண்டாம் வருடத்தில் ரூ.10,000 + மருத்துவ வசதிகள் வழங்கப்படும். பயிற்சி முடிவுக்குப் பின்பு மாதம்
ரூ.8630 - 12,080 என்ற விகிதத்தில் சம்பளம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த Medical Officers பணிக்கு ரூ.500, மற்ற பிரிவினர்களுக்கு ரூ.100. Attendant Cum Technician Trainee பணிக்கு
பொது மற்றும் ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.150, மற்ற பிரிவினர்களுக்கு ரூ.50. இதனை பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in(career Tab)-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.11.2013
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 30.11.2013
கட்டணம் செலுத்தியதற்கான தகவல்களை தெரிவிப்பதற்கான கடைசி தேதி: 04.12.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
அசாம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி
அசாம் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசியர் (நுண்ணயிரியல்) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பேராசிரியர் (நுண்ணுயிரியல்)
சம்பளம்: ரூ.37400 - 67000 + கிரேடு சம்பளம் ரூ.10000
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் முனைவர் அளவில் ஆராய்ச்சி வேட்பாளர்களை
வழிகாட்டும் அனுபவம், தேசிய அளவில் நிறுவனங்கள், பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் ஆராய்ச்சியில் கற்பித்தல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.400. இதனை பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் வரைவோலையாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.11.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aus.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Subscribe to:
Posts (Atom)