Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, February 21, 2014

வேப்ப மரத்திலிருந்து வீசும் காற்று ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது

வேப்ப மரத்திலிருந்து வீசும் காற்று ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது.இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் பாக்டீரியாகளைக் கொல்லும் சக்தியை உடையது.வேப்பமரங்கள் அதிகமாக இருக்கும் கிராமங்களில் மற்ற இடங்களில் நோய்கள் பரவுவது போல் பரவுவது இல்லை.நன்றாக தழைத்து வளர்ந்து இருக்கும் வேப்ப மரத்தை தினந்தோறும் பார்த்து வந்தாலே கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும். அம்மரத்தின் அடியில் மாலை நேரங்களில் அமர்ந்து இருந்தாலே மன இறுக்கம் குறையும். உடல் உபாதைகளும் நீங்கும்.இதனால் தான் மன நல காப்பகங்களில் கூட அதிகமாக நாம் வேப்ப மரங்களை காண முடியும். இதனால் மன நலம் பாதிக்கபட்டவர்கள் குணமடைய வாய்ப்பு உண்டு.
இயற்கையாகவே வேப்பமரத்தின் இலைகளின் நுனி பகுதிகள் பூமியை பார்த்த படியே கீழ் நோக்கி இருக்கும்.இதனால் ஒளிச்சேர்கையின் போது வெளியாகும் ஆக்சிஜனில் வெகு சக்தியுள்ள ஒசான் (O3)கலந்து உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ------------------------------------------------------------------------------------------- மனித உடலில் உண்டாகும் சகல வியாதிகளையும் குணமாக்கிடும் மருத்துவ குணத்தைக் கொண்ட சஞ்சீவி மரமாக வேம்பு திகழ்கின்றது. ------------------------------------------------------------------------------------------- இம்மரத்தில் வேர், பட்டை, மரப்பட்டை ,மரக்கட்டை , வேப்பங் கொட்டையின் மேல் ஓடு ,உள்ளிருக்கும் பருப்பு,வேப்பமரத்து பால் ,வேப்பம் பிசின்,வேப்பங்காய் , வேப்பம் பழம் ,பூ,இலை ,இலையின் ஈர்க்கு ,வேப்பங் கொழுந்து போன்றவை மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளபடியால் அவை அனைத்துமே சித்த , ஆயுர்வேத முறை வைத்தியங்களில் மருந்துப் பொருளாகச் சேர்க்கப்பட்டு வருகிறது. ------------------------------------------------------------------------------------------- இதனால் தான் அம்மை கண்டுள்ள வீட்டின் வாசற்புறத்தில் வேப்பிலைக் தோரணம் கட்டி வைப்பார்கள் .இவ்வாறு வைப்பதினால் அம்மை நோயானது பரவாமல் இருக்கும்.அம்மை நோய்க்கு ஆளானவர்களை வேப்பிலை மீது தான் படுக்க வைத்திருப்பார்கள் .இது அம்மை நோய் இறங்கும் போது உடம்பில் ஒரு வித நமைச்சலும் அரிப்பும் உண்டாகும் .இதை தடுக்கவே இவ்வாறு செய்கிறார்கள்.அம்மை நோய் இறங்கிய பின் தலைக்கு தண்ணீர் விடுவார்கள்.அவ்வாறு தண்ணீர் விடும் சமயத்தில் வேப்பிலை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து எடுத்த விழுதினை நோயாளியின் உடம்பு முழுவதும் பூசி பின் உடம்பை கழுவுவார்கள். ------------------------------------------------------------------------------------------- சமீப காலமாக அறிவியல் ஆய்வுகளின் வாயிலாக வேப்பிலைக்கு நச்சினை முறிக்கும் தன்மை மற்றும் நுண்ணிய விஷ கிருமிளையும் அழிக்கும் தன்மை உடையது என தெளிவு படுத்துகிறது. ------------------------------------------------------------------------------------------- மேலும் குழந்தை பிரசவமான வீட்டின் வாசற்புறத்தில் வேப்பிலைக் தோரணம் கட்டி வைப்பார்கள் .இவ்வாறு வைப்பதினால் வெளியிலிருந்து வருபவ்ரகளிடமிருந்து நச்சுகிருமியானது தாய் சேய் இருவரிடமும் பரவாமல் தடுத்து இருவரையும் பாதுகாக்கும். ------------------------------------------------------------------------------------------- நீரழிவு என்று சொல்லகூடிய சர்க்கரை வியாதியையும் இது கட்டுபடுத்தும். எவ்வாறென்றால் வேப்பங் கொழுந்தை மை போல் அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை வியாதியின் கடுமை குறைந்து அதை கட்டுபடுத்தலாம் .மேலும் மஞ்சள் காமலை,குடற்புண்,பாம்புகடி,வீக்கம்,காய்ச்சல் போன்றவைகளையும் இது குணபடுத்த வல்லது. ------------------------------------------------------------------------------------------- வேப்பபூ ஆனது நிம்பஸ்டி ரோல் என்ற பொருளை கொண்டுள்ளது,இது மனித உடலில் சுரக்கும் ஹார்மோன்களில் ஒன்றை ஒத்து போவதால் இது பசியை தூண்டிடவும், பித்தம் ,வாந்தி, வாதம் சமந்தப்பட்ட நோய்களை குணபடுத்துகிறது. ------------------------------------------------------------------------------------------- மரங்கள் அனைத்திலும் புனிதமாகவும்,பலவகையான நோய்களை குண படுத்த வல்லதுமாக இந்த வேப்பமரம் கருத படுகிறது. இதனால் நாமும் கோயில்கள்,குளக்கரை பொது இடங்கள் போன்ற பகுதிகளில் நட்டு வைத்து பராமரித்தால் விஞான ரீதியாகவும்,சாஸ்த்திர ரீதியாகவும் பல நன்மைகளை பெற்று வாழலாம். ------------------------------------------------------------------------------------------- இலை : வேப்ப மரத்தின் இலைகள் தோல் நோய்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகின்றன. வேப்ப மர இலைகளை அரைத்து பசைபோல் செய்து வீக்கம், நாள்பட்ட புண்கள், கட்டிகள் மீது பூசி வரலாம். தாய்மார்கள் பால் சுரப்பை நிறுத்த வேப்ப மர இலைகளை மார்பகங்களின் மீது வைத்து கட்டுவார்கள் ------------------------------------------------------------------------------------------- .வேப்பம் பூ: வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல்,பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்பார்கள். ------------------------------------------------------------------------------------------- வேப்பங்காய்: வைரஸ் காய்ச்சலால் தொழுநோய், சிறுநீர் சம்பந்தமான நோய்களுக்கு வேப்பங்காய் நல்ல பலன் தருகின்றது. ------------------------------------------------------------------------------------------- வேப்பம் பழம் : வேப்பம் பழத்தை அரைத்து சாற்றை எடுத்து தோல் புண், சொறி, சிரங்குகளில் பூச அவை குணம் பெறும். ------------------------------------------------------------------------------------------- வேப்பங் கொட்டை: உடலில் உள்ள புண்களில் தொற்று நோய்க்கிருமிகள் தாக்காதபடி செய்ய வேப்பங்கொட்டையை அரைத்துப் பூசும் வழக்கம் கிராமங்களில் நிலவி வருகின்றது. ------------------------------------------------------------------------------------------- பட்டை: வேப்பம் பட்டையுடன் நீர்,எண்ணெய் மற்றும் பிற மருந்துப்பொருட்களைச் சேர்த்து காய்ச்சி தைலங்களாக தோல் புண்,சொறி, சிரங்குகளின் மீது பூசிவந்தால் அவை குணம் பெறும் என்று மூலிகை மருத்துவ நூல்களில் கூறப்பட்டு வருகிறது. ------------------------------------------------------------------------------------------- மேலை நாட்டு அறிவியல் வல்லுனர்கள் இந்திய குடும்ப பெண்கள், பல நூற்றாண்டு களாக நம்பி வந்த கருத்தை அறிவியல் மூலம் நிரூபித்துள்ளனர். அதுதான் வேப்ப மரத்தின் பயன். வேப்ப மரத்தின் நோய் நீக்கும் பயனை தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் அறிந்துள்ளனர். வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும். சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று வேம்பு சிறப்பிக்கப்படுகிறது. ------------------------------------------------------------------------------------------- வேம்பு (Azadirachta indica). வேப்ப மரம் இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு மரம். இதன் மருத்துவ பண்புகள் கருதி, ஒரு மூலிகை என்றும் வகைப்படுத்தலாம். வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடா தன்மை கொண்டவை என்று கருதப்படுகின்றது. வேப்பம் பூ இல் இருந்து வேப்பம் பூ வடகம், பச்சடி, ரசம் என்பவை செய்யலாம். வேப்ப எண்ணையும் மருத்துவ ரீதியாக பாவிக்கப்படுகின்றது. ------------------------------------------------------------------------------------------- சித்தர்கள் மூலமாக நமக்கு தெறிந்த சித்த மருத்துவம்: இப்படிப்பட்ட வேம்பு மருந்தாகித்த தப்பா மரம் என்பதை சித்தர்கள் அறிந்தனர். அவர்கள் சொன்னவற்றை இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்கின்றனர். இன்று வரை 30-க்கும் மேற்பட்ட தாவர இரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ------------------------------------------------------------------------------------------- *இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.Streptomycinie போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன. ------------------------------------------------------------------------------------------- *லக்னோவிலுள்ள King George மருத்துவக் கல்லூரியில் செய்த ஆய்வின் மூலம் வேப்பிலை மோசமான தோல் நோய்களையும் கட்டுப்படுத்தும், மேலும் குடல் புழுக்களையும் அகற்றும் ஆற்றல் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.மேகாலாயவில் உள்ள பழங்குடி மக்கள் இதய நோய்க்கும், காச நோய்க்கும் வேப்பம் பழங்களையும், இலைகளையும் பயன்படுத்துகிறார்கள். ------------------------------------------------------------------------------------------- *வேப்பெண்ணெய்க்கு விந்துவிலுள்ள உயிர் அணுக்களைச் செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கண்டறிந்துள்ளது. வேப்பிலையிலுள்ள குயிர் சிடின் என்னும் சத்து Bacteria-க்களைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.வேப்ப எண்ணெய்யை சிதைத்து வடித்துப் பெறும் பைரோனிமின் மூலம் Rocketகான உந்துவிசை மாற்று எரிப்பொருளைப் பெறலாம் என்கின்றனர். ------------------------------------------------------------------------------------------- *எலிகளுக்கு வேப்பிலை சாற்றைக் கொடுத்து ஆராய்ந்ததில் அது கருத்தரிக்கும் ஆற்றலை 11-வது வாரத்தில் முற்றிலும் இழந்து விட்டதை அறிந்தனர். சாறு கொடுப்பதை நிறுத்தி விட்டால் மீண்டும் கருத்தரிக்கும் ஆற்றல் பெற்று விடுவதையும் கண்டுள்ளனர். ------------------------------------------------------------------------------------------- *நிலத்தின் அமிலத் தன்மையை நிலப்படுத்தும் தன்மையிலும், காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் வேம்பு தன்னிகரற்றது.வேப்பம் பூவிலிருந்து அடுத்த சத்து 3 வகையான நுண்புழுக்களைக் கட்டுப்படுத்துவதாக சித்திக் ஆலம் என்னும் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.சுற்றுச் சூழலை பாதுகாத்து நிலைப்படுத்தும் ஆற்றல் வேம்பிற்கு உள்ளது. காற்றில் கலந்துள்ள தூசியை வடிகட்டும் திறனும், Anthro cyanine என்னும் நச்சு வாயுக்களை ஈர்த்துக் கொள்ளும் பண்பும் வேம்பிற்கு இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றனர். ------------------------------------------------------------------------------------------- *வேம்பு வெளியிடும் பிராகிபிடின் என்னும் வேதிப்பொருள் காற்றில் கலந்து மனிதனையும் தாவரங்களையும் தாக்கும் கிருமிகளை இயங்க விடாமல் தடுத்து அழிக்கிறது என்று Dr.சக்சேனா கண்டறிந்துள்ளனர்.வேப்பம் விதைக்கும், எண்ணெய்க்கும் பிண்ணாக்கிற்கும்-123க்கும் மேற்பட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.வேம்பு Meliazia தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. ------------------------------------------------------------------------------------------- ***வேறுபெயர்கள்: அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்திரம், பிசுமந்தம், வாதாளி. மருத்துவப் பண்புகள்: ------------------------------------------------------------------------------------------- *இலை: . புழு, பூச்சிகளால் நேரிடும் துன்பங்களை ஒழிக்கும்.------------------------------------------------------------------------------------------- *2. வேப்பங்கொழுந்தும், எள்ளும் சேர்த்து அரைத்துப் பூசிவர ஆறாத நாட்பட்ட புண்கள் ஆறும்.------------------------------------------------------------------------------------------- *3. வேப்பிலையை கற்ப முறைப்படி சாப்பிட்டு வர எந்த நோயும் அணுகாது.------------------------------------------------------------------------------------------- *4. வேப்பிலைச் சாறு + பழச்சாறு கலந்து படுக்கபோகும் முன் அருந்த ஆழ்ந்த உறக்கம் உண்டாகும். பூ:------------------------------------------------------------------------------------------- *பூவை குடிநீரிட்டு குடிக்க குன்ம நோய் தீரும். காய் + பழம்: *தோல் நோய் தீரும். விதை:------------------------------------------------------------------------------------------- 1. மூலம், தோல் நோய், சூதக சன்னி, குடல் கிருமி, நரம்புப் பிரிவு நீங்கும். 2. விதை + கசகசா + தேங்காய் பால் சொறி, சிரங்கு, நமைச்சல், தேமல் தீரும். நெய்:----------------------------------------------------- 1. துஷ்ட புண்கள் தீரும்.--------------------------------------------------- 2. ஆராத இரணங்கள் தீரும்.----------------------------------------------- வேப்பம் பட்டை:-------------------------------------------------------------------- 1)வேப்பம் பட்டை + திப்பிலி குடிநீர் இடுப்பு வாதம், கீல் வாதம் தீரும்.---------------------------------------------------------------- *2)கஷாயம் குட்டம் தீரும். *அதிகமான மருந்துகளைப் பயன்படுத்தினால், மரபியல் குணங்களை நிர்ணயிக்கும் Chromosomes சிதைவுறுவதாக தற்கால ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. வேம்பு Chromosome களை பாதிக்காமல் நோய்க் கிருமிகளை மட்டும் அழிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. பிசின்: *மேக நோயைப் போக்கும். குறிப்புகள்:---------------------------------------------------- 1. பூவைத் தலையில் வைக்க ஈறும் பேணும் தீரும். ------------------------------------------------------------------------------------------- *2. 100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் அணுகாது. ------------------------------------------------------------------------------------------- *3. பூச்சாறு + நெல்லிக்காய் சாறு கலந்து தர எந்த நோயும் அணுகாது, தோல் பளபளக்கும், இரத்தம் சுத்தமாகும். ------------------------------------------------------------------------------------------- *4. வேப்பமுத்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்து முழுகி வரப் புழுவெட்டு மாறும். முடி செழித்து வளரும். ------------------------------------------------------------------------------------------- *5. வேப்பம்பட்டைத் + தூள் கரிசாலை + மல்லிச் சாறு 7 முறை பாவனை செய்து 1 மண்டலம் தேனில் உண்ண உடல் கருங்காலி மரம் போல் வலிமை உடையதாகும். விந்து கட்டும். ------------------------------------------------------------------------------------------- *6. வேப்பம்பூ + வேப்ப எண்ணெய் கலந்து காய்ச்சி காதுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தக் காதில் உள்ள பூச்சிகள் வெளிப்படும். காது வலி, காது சீழ் மாறும். ------------------------------------------------------------------------------------------- *7. நம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன் தத்துவம் என்னவென்றால் வேம்பை சுற்றி 10 ஆநவசந நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளதென்றும், காற்றானது தூய்மையுறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------- கிராமங்களின் மருத்துவ சாலை ------------------------------------------------------------------------------------------- வாஷிங்டனில் உள்ள தேசிய விஞ்ஞான ஆய்வு மையத்தில் வேப்பமரம் பற்றிய சிந்தனை கள் ஒரு புதிய திருப்புமுனையை உருவாக்கியுள்ளது. வேப்ப மரம் பல்லாயிரக்கணக்கான மக் களுக்கு விலை குறைவான மருந்துகளை தருகிறது. வேப்பமரம் எண்ணிக்கையில் அதிகம் வளர்வதால் சுற்றுப்புற சூழ்நிலையை பாதுகாக்கிறது. பூமியில் சூரியனின் வெப்ப தாக்குதல் குறைகிறது. ------------------------------------------------------------------------------------------- வேப்ப மரம் கிராமங்களின் மருத்துவச் சாலை என்ற கருத்தை அமெரிக்க விஞ்ஞானி கள் வலியுறுத்துகின்றனர். கி.பி.1959-ல் ஜெர் மானிய பூச்சிக்கொல்லி அறிஞர் திரு. ஹெயன் ரிச் ஸ்கூமுட்டர் சூடானில் ஒரு அதிசயத்தை கண்டார். பூச்சிகள் ஒரு தோட்டத்தை நாசமாக்க படை யெடுத்து சென்றன. தோட்டத்தில் இருந்த வேப்ப மரத்தை தவிர அனைத்து செடி, கொடிகளும் நாசமாயின. இந்த அதிசயத்தை கண்ட ஜெர் மானிய விஞ்ஞானி இதனை உலகுக்கு அறிவித் தார். புதுடெல்லியில் இருக்கும் இந்திய விவசாய கழகத்தில் இருந்து வெளியாகும் பத்திரிகையில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை வேப்பமரத்தின் பயன்குறித்து கட்டுரைகள் வெளிவரலாயின. ------------------------------------------------------------------------------------------- வேப்ப மரப்பட்டையின் சாறு மாத்திரை களாக தயாரிக்கப்பட்டு ஆண்கள் உட்கொண் டால் ஆண்களுக்கு அது இயற்கையிலேயே ஒரு குடும்ப கட்டுப்பாட்டு சாதனமாக அமைகிறது. வேப்ப மரப்பட்டைகள் மற்றும் வேப்ப இலைகள் இயல்பாகவே ஒரு பூச்சி கொல்லி மருந்தாக வேலை செய்கிறது. ------------------------------------------------------------------------------------------- பூச்சிக்கொல்லி மருந்து ------------------------------------------------------------------------------------------- வேப்ப மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பருத்தி மற்றும் புகை யிலைச் செடிகளை அழிக்கும் பூச்சிகளை அழிக்கிறது. இதனை சோதனை முறையில் இந்தியா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் பயன்படுத்தி அறிவியல் வல்லுநர்கள் வெற்றிகண்டனர். ------------------------------------------------------------------------------------------- வேப்பமரம் சுற்றுப்புறச் சூழ்நிலையை பாதுகாக்கிறது. மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. அதிகமான வேப்ப மரங்கள் நடுவதால் பூமி குளிர்ச்சி அடைகிறது. எந்த சூழ்நிலை யிலும் வேப்பமர வளர்ச்சி பாதிப்பு அடைவது இல்லை. வேப்பமரம் மிக வேகமாக வளரும் மரமாகும். தொண்ணூறு அடி உயரம் வரை வளரும். பூமியின் பசுமையை காப்பாற்றும் மரம் வேப்ப மரமாகும். ------------------------------------------------------------------------------------------- கனடாவில் உள்ள ஒட்டவா பல்கலைக்கழகம் விவசாய ஆய்வில் சிறப்பான இடத்தை வகிக்கிறது. அதில் பணியாற்றும் விஞ்ஞானி டாக்டர் ஜான் ஆர்னசான் வேப்ப மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கையான பூச்சிக் கொல்லி மருந்துகள் தற்போது சந்தையில் இடம் வகிக்கும் வேதியியல் பூச்சிக் கொல்லி மருந்துகளை பின்னுக்கு தள்ளிவிடும் என்கிறார். ------------------------------------------------------------------------------------------- வியாபார முக்கியத்துவம் ------------------------------------------------------------------------------------------- வேப்பமரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தாவரங்களை அழிக்கும் பூச்சிகளை அவை கூட்டு புழு பருவத்தில் இருக்கும் போதே அழித்து விடுகிறது. வேப்பமரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளித்தால் அம்மருந்தின் வாசனை இருக்கும் வரை பூச்சிகள் எந்த செடியினையும் அழிக்காமல் உள்ளது. மேலும் அப்பூச்சிகள் பட்டினியால் சாவதையும் கண்டார் டாக்டர் ஜான் ஆர்னசான். ------------------------------------------------------------------------------------------- வேப்ப மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்தில் உள்ளடையதில் டால மேட்டை விட அதிக சக்தி வாய்ந்தவை யாகும் ------------------------------------------------------------------------------------------- இத்தகு கண்டுபிடிப்புகளின் பலனாய் வேப்ப மரத்தின் முக்கியத்துவம் வியாபார முக்கியத்துவம் அடைந்து விட்டது. ரசாயன பூச்சி மருந்துகளை பயன்படுத்துவதால் ஆண்டுக்கு இருபது ஆயிரம் பேர் மரணம் அடைகின்றனர் பத்து லட்சம் பேர் நோயால் பாதிக்கப்படுகின்றனர் என கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞான டாக்டர் மர்ரே இஸ்மான் கூறுகிறார். ------------------------------------------------------------------------------------------- ஆண்மைக் குறைவு ------------------------------------------------------------------------------------------- ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் அமெரிக்காவில் தற்போது 450 மில்லியன் டாலருக்கு விற்பனை ஆகிறது. வரும் ஆண்டுகளில் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளின் விற்பனை இரு மடங்கு ஆகிவிடும். இதனால் சுற்றுப்புற சூழ்நிலை பாதிப்பு அடைந்து விடும் என்பதை உணர்ந்த அமெரிக்க மக்கள் இயற்கை உரமான வேப்ப மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். ------------------------------------------------------------------------------------------- வேப்பங்கொட்டையை பொடியாக்கி பயன் படுத்தும் ஊர்களில் மக்கள் மத்தியில் இரண்டு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதனால் ஆஸ்துமா என்ற ஒவ்வாமை நோய் ஏற்படுகிறது என்றும். ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது என்றும் மக்கள் கருதுகிறார்கள். இந்த ஐயப்பாட்டை வேளாண் அறிஞர்கள் களைய வேண்டிய நிலையில் உள்ளனர். ------------------------------------------------------------------------------------------- இவ்வளவு பெருமை வாய்ந்த வேப்ப மரத்தின் காப்புரிமையைத் தற்போது அமெரிக்க அரசு இந்தியாவிடம் கோரியுள்ளது. எனவே வேப்ப மரத்தின் அவசியத்தை இந்திய மக்கள் உணர்ந்து வேப்ப மரம் வளர்த்து சுற்றுப்புறச் சூழ்நிலை பாதுகாக்க வேண்டுமாய் நமது வேளாண் விஞ்ஞானிகள் கேட்டுள்ளன

சர்க்கரை நோயை கட்டு படுத்தும் கோவைக்காய்

சர்க்கரை நோயை கட்டு படுத்தும் கோவைக்காய் !!! Coccinia cordifolia
நம்முடைய உணவுப் பழக்க முறைகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். சாதாரணமாக எல்லா காய்கறி அங்காடிகளிலும் தாராளமாகக் கிடைக்கக் கூடியதுதான் கோவைக்காய். --------------------------------------------------------------------------------------------- நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் வைக்க நாம் சாப்பிட வேண்டி உணவு பற்றி பார்க்கிறோம். --------------------------------------------------------------------------------------------- சர்க்கரை நோயை கோவக்காய் கட்டுப்படுத்துகிறது : --------------------------------------------------------------------------------------------- கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். --------------------------------------------------------------------------------------------- நீரிழிவு நோய்யை உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளால் இதைக் கட்டுப் படுத்த முடியும்.சர்க்கரை நோய் கட்டுப் பாட்டுக்குள் இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாவிட்டால் அதைப் போன்ற ஆபத்தான நோய் வேறு எதுவுமில்லை. --------------------------------------------------------------------------------------------- நோயாளிகள் பாகற்காய், வேப்பிலைச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிக்கடி சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு குறைந்துவிடுகிறது என்று சாப்பிட்ட பலர் கூறுகிறார்கள். ( ஆனால் அது ரொம்ப ரொம்ப கஷ்டம். சாப்பிடுவர்களை பார்த்தால் அவர்கள் முகம் எத்தனை கோணத்தில் போகும் என்று பார்ப்பவருக்கு மட்டும் தான் தெரியும்.இந்த நிலையில் கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். --------------------------------------------------------------------------------------------- கோவைக்காய் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பரிசோதித்ததில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து இருந்ததைக் கண்டுபிடித்தனர். தினமும் 50 கிராம் சமைத்த கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்று அந்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. --------------------------------------------------------------------------------------------- ரகம்- 2 சர்க்கரை நோயாளிகள் தினமும் கோவக்காயை சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அனைத்துக் கடைகளிலும் மிக எளிதாகக் குறைந்த விலையில் கிடைக்கும் கோவக்காய் நார்ச்சத்து நிரம்பியது. அதை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிடலாம். --------------------------------------------------------------------------------------------- கோவைக்காய் பற்றி சில துளிகள்: --------------------------------------------------------------------------------------------- மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. இதன் இலையின் பிளவு அமைப்பைக் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை என்ற பிரிவுகள் உண்டு. இதன் பூ வெள்ளை நிறமானதாகும். இலை, காய், தண்டு, வேர் என எல்லாப் பாகங்களும் மருத்துவ குணமுடையனவாகும். இலைக்கஞ்சியில் இதன் இலை சேர்க்கப்படுவதுண்டு.கொஞ்சமாய் துவர்ப்புச் சுவையுடைய இந்த கோவைக்காயில் பொரியல், வற்றல், கூட்டு, சாம்பார் செய்து உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு.மற்றும் கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. --------------------------------------------------------------------------------------------- நாக்கு சுவையை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டால் எல்லா உணவுகளுமே விருப்ப முடையதாகத்தான் ஆகும். இதனைப் பொதுவாக எல்லோருமே சாப்பிடலாம்.பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம். --------------------------------------------------------------------------------------------- கோவைக்காயின் ச‌த்துக்க‌ள்: --------------------------------------------------------------------------------------------- வைட்டமின் ஏ 156 மைக்ரோ கிராம், போலிக் அமிலம், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன. --------------------------------------------------------------------------------------------- கண்குளிர்ச்சியை உண்டாக்கும். இலைச்சாற்றுடன் வெண்ணெய் சேர்த்து சிரங்குகளுக்குப் பூசலாம். இதன் இலைச்சாற்றைப் பருகி வந்தால் நீரழிவு நோய் கட்டுப்படும். கொவ்வங்காய் கோரோசனை மாத்திரை செய்யப் பயன்படுகிறது.நாக்கில் உள்ள வெடிப்பு, நாக்குப் புண், வாய்ப்புண் நீங்கும். --------------------------------------------------------------------------------------------- கோவக்காயில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம்.இக்காய் கொஞ்சாம் சூடு. அதனால் உதடு வெடிப்பு, வயிற்றுப் புண் ஏற்ப்படும்.ஆனால் நாம் ( நீரிழிவு நோய்யாளிக‌ள் நீர் மோர், எலுமிச்சை சாறு என்று எடுத்துக் கொள்ளுவ‌தால் இந்த‌ சூடு அதிக‌ம் ஏற்ப்ப‌டாது.ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.முக்கியமா முற்றின கோவைக்காய் வாங்ககூடாது. --------------------------------------------------------------------------------------------- பிஞ்சு காயா பார்த்து வாங்கணும். பிஞ்சு காய் இளம்பச்சை நிறத்தில் இருக்கும்.இக்காய்யை நீரிழிவு நோயாளிகள் மட்டும் அல்லாமல் எல்லரும் சாப்பிட்டலாம்.

இனிப்பைத் தவிர்க்கும் புத்திசாலி கரப்பான் பூச்சிகள்!

இனிப்பைத் தவிர்க்கும் புத்திசாலி கரப்பான் பூச்சிகள்! *********************************************
கரப்பான் பூச்சிகளின் குணாதிசயத்தில் ஏற்படும் வேகமான வளர்ச்சி மரபணு மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கரப்பான் பூச்சிகளை ஒழிப்பதற்கு வீடுகளில் வைக்கப்படும் பொறிகளில் பயன்படுத்தப்படும் இனிப்பு உணவுகளை நாடாமலிருக்கும் குணாதிசயம் சிலவகை கரப்பான் பூச்சிகளிடத்தில் இயல்பாகவே வளர்ந்திருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வகையான உணவுப் பொருட்களை அண்டாமல் இருக்கும் பழக்கம் இந்தக் கரப்பான் பூச்சிகளிடத்தில் ஒருசில ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ந்திருப்பதாகவும் வடக்கு கரோலினா அரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தப் பழக்கம் பூகோள ரீதியிலும் உலகின் பல பாகங்களிலும் உள்ள கரப்பான் இனங்களிடத்திலும் வேகமாகப் பரவி வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 19 வகையான கரப்பான் பூச்சி இனங்களில் 7 இனங்களிடத்தில் சீனி உணவுப் பொறியில் சிக்காமல் அந்த உணவுகளை வெறுக்கும் போக்கு வளர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. தமக்கு தீங்கு ஏற்படுத்தும் இனிப்பு உணவுகளைத் தவிர்க்கும் இயல்பு கரப்பான் பூச்சிகளின் அடுத்தடுத்த பரம்பரைகளில் இயல்பாகவே மரபணு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தவல்லது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். உயிராபத்தில் சிக்கிக்கொள்ளாமல் தப்பும் இயல்பு கொண்ட கரப்பான் பூச்சி வகைகள் பெருகும் வாய்ப்பு இதன்மூலம் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

மரத்தினால் உருவாக்கப்பட்ட இயங்கும் கைக் கடிகாரம்..

மரத்தினால் உருவாக்கப்பட்ட இயங்கும் கைக் கடிகாரம்.... ********************************************************* மரவேலைப்பாடுகளில் மன்னராக விளங்கும் உக்ரைனைச் சேர்ந்த Valerii Danevych எனும் நபர் மரத்தினால் தொழிற்படக்கூடிய கைக்கடிகாரம் ஒன்றினை உருவாக்கி அசத்தியுள்ளார்.
எனினும் இக்கடிகாரமானது நாள் ஒன்றிற்கு ஏனைய கடிகாரங்களுடன் ஒப்பிடுகையில் 5 நிமிட நேர வித்தியாசத்தை கொண்டிருப்பதுடன், 20 மணித்தியாலங்கள் வரை வலுவை சேமிக்கக்கூடிய மரத்தினாலான சில்லுகளையும் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

சிதம்பர இரகசியம் என்றால் என்ன ...!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்."
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,க ணிதவியல்,மருத்துவவியல்குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள். ------------------------------------------------------------------------------------------------ முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்." ------------------------------------------------------------------------------------------------ (1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ). ------------------------------------------------------------------------------------------------ (2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம். ------------------------------------------------------------------------------------------------ (3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது. ------------------------------------------------------------------------------------------------ (4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600). ------------------------------------------------------------------------------------------------ (5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும். ------------------------------------------------------------------------------------------------ (6) திருமந்திரத்தில் " திருமூலர்" மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது. ------------------------------------------------------------------------------------------------ (7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது, ------------------------------------------------------------------------------------------------ (8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது. ------------------------------------------------------------------------------------------------ (9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது. ------------------------------------------------------------------------------------------------ (10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது

அல்சர், சர்க்கரை வியாதியை நீக்கும் வெற்றிலை.

அல்சர், சர்க்கரை வியாதியை நீக்கும் வெற்றிலை.
மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது.இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும். வயிற்றுவலி: இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின்னர் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும். தலைவலி: வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும். தேள் விஷம்: இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும். சர்க்கரை வியாதி: சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரைகொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும். அல்சர்: அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ்சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

ரொம்ப நன்றி புண்ணியவான்களா..!

ரொம்ப நன்றி புண்ணியவான்களா..! ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது! ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு வசதியை மேம்படுத்தும் நடவடிக்கையாக, நிமிடத்திற்கு, 7,200 இ-டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் வகையில், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது.

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம். இப்படி நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர். Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke, Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும். இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel செய்து விடலாம். தவறுதலாக எடுக்கப்பட்டிருந்து நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு Complaint செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும். 24 மணி நேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் கான்சல் செய்யப்படும். நீங்களாக Activate செய்த சர்வீஸ்களையும் இதில் Deactivate செய்யலாம். அநேகமாக அனைத்து நிறுவனங்களும் தற்போது இதை கொண்டு வந்துவிட்டன. உங்கள் நெட்வொர்க்குக்கும் இது வந்து விட்டதா என்று அழைத்து பாருங்கள். அழைக்க வேண்டிய எண் - 155223

இயற்கை முறையில் மூட்டு வலிக்கான நிரந்தர தீர்வுகள்:-

இயற்கை முறையில் மூட்டு வலிக்கான நிரந்தர தீர்வுகள்:-
மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை எனலாம். மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்: 1. மூட்டழற்சி(osteo arthritis):இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும். 2. முடக்குவாதம்(rheumatoid arthritis): இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும். அறிகுறிகள்: மூட்டழற்சி: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பின்போ, வேலை செய்த பின்போ வலி அதிகமாகும். முடக்குவாதம்: இது ஆரம்பத்தில் தெரியாது. நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். முழு உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும். காரணம்: அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம். முடக்குவாதம்: சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரணமாகும், பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம். வைத்தியம்: 1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும். 2.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். 3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். 4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு மூட்டில் நன்கு தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும். 5. ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம். 6. இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும்.(இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும்). மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது. 7. ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும். உணவுப்பழக்கம்: 1. வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும். 2. காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம். 3. கால்சியம் அதிகம் உள்ள பால்,பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும் தவிர்க்க வேண்டியவை: காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்

விஞ்ஞான உலகத்தின் மிகப் பெரிய சாதனை

விஞ்ஞான உலகத்தின் மிகப் பெரிய சாதனை, நாம் வாழும் பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்ற கோட்பாட்டை விஞ்ஞானிகள் கண்டறிந்ததுதான் என்று பலர் அறிவர். அதிசயமும், ஆச்சர்யமும் கொண்ட அந்த கோட்பாடு கூறியது என்னவென்றால் சுமார் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மிக மிக அதிக வெப்பமும், மிக மிக அதிக அடர்த்தியும் கொண்ட அணு அளவு சிறிய வடிவிலிருந்து ('பிக் பேங்' என்றழைக்கப்படும்') ஒரு 'மா வெடிப்பின்', விரிவாக்கத்தினால்தான் இந்த பிரபஞ்சம் தோன்றியது என்பதாகும்.
'காலமும்', 'வெளியும்' அந்த மாவெடிப்பிலிருந்துதான் உருவாகின என்று நாம் கற்பனையிலும் நினைக்கமுடியாத உண்மையினை அந்த கோட்பாடு கூறியது. galaxy_380உலகத்தை உலுக்கிய அந்த கோட்பாடு கூறியது என்னவென்று சுருங்கச் சொல்வதென்றால் 'from nothing the universe appeared' அதாவது ஒன்றுமில்லாத நிலையிலிருந்து இந்த பிரபஞ்சம் உருவாகியது என்பதுதான். மேலும் குறிபிடத்தக்க ஒன்று என்னவென்றால், ஓர் அசுர வேகத்தில் நடந்த அந்த வெடிப்பிலிருந்து ஒரு சீரான, பௌதீக விதிகளுக்கு கட்டுப்பட்ட பிரபஞ்சம் தோன்றியதாகவும் அக்கோட்பாடு கூறியது. ஒரு பெரும் வெடிப்பு எப்போதும் ஒரு சீரான விஞ்ஞானத்திற்கு கட்டப்பட்ட ஓர் அமைப்பை உண்டாக்குவது என்பது இயல்பன்று. மா வெடிப்புக்கு முன்பு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் கூறினர். ஆரம்ப கட்ட சில எதிர்ப்புக்களுக்குப் பிறகு விஞ்ஞான உலகம் அதை ஏற்றுக்கொண்டது. அந்தக் கோட்பாடு கூறிய மா வெடிப்பு நடந்ததற்கு ஆதாரங்கள் பிறகு பெரும் முயற்சிக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டன. காரணம் இல்லாமல் ஒரு காரியமா? ஆனால் ஒன்றுமில்லா (from nothing) நிலையிலிருந்து இவ்வளவு பெரிய சீரான, விஞ்ஞான விதிகளுக்கு கட்டுப்பட்ட ஒரு பிரபஞ்சம் உருவாகியதென்பதும், காலம் அப்போதுதான் தோன்றியதென்பதும் அந்த கோட்பாடு கூறியது விஞ்ஞானிகளுக்கு ஒரு நெருடலாகவே இருந்து வந்தது. காரணம் இல்லாமல் ஒரு காரியம் நடக்காது. அதாவது மாவெடிப்பு ஒரு காரணம் இல்லாமல் நடந்திருக்க முடியாது என்று சிந்திக்க ஆரம்பித்தனர். 'பெண்களின் கூந்தலுக்கு ஒருக்காலும் இயற்கையில் மண‌ம் இருக்க முடியாது' என்று நக்கீரர் ஆணித்தரமாக கூறியது போல 'ஒன்றுமில்லா (from nothing) நிலையிலிருந்து இவ்வளவு பெரிய சீரான, விஞ்ஞான விதிகளுக்கு கட்டுப்பட்ட' ஒரு பிரம்மாண்டமான பிரபஞ்சம் ஒருக்காலும் உருவாகி இருக்கவே முடியாது என்றும் நம்பினர். பலர் இந்தக் கேள்விக்கு விடை தேடி அலைந்தனர் -விளைவு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சில விஞ்ஞானிகள் இந்த மா வெடிப்பு ஒரு தொடக்கமல்ல, ஒரு தொடர் கதைதான் என்கிறார்கள்.. அப்படியென்றால்? நாம் கூறும் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அந்த 'மா வெடிப்பு' முதல் முறையாக நடந்தது அல்ல, அது தொடர்ந்து பல முறை நடந்து இருக்கின்றது -அதாவது ஒரு மா வெடிப்பிலிருந்து ஒரு பிரபஞ்சம் உருவாகி அது போதிய அளவு விரிந்த பின், ஈர்ப்பு விசையினால் பிரபஞ்சம் மீண்டும் சுருங்கி ஒரு புள்ளியாகி பிறகு மீண்டும் மாவெடிப்பு ஏற்பட்டு விரிவடைகின்றது என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வேறு சில விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தில் உள்ள கருந்துளைகள் மூலமாக புதிய பல பிரபஞ்சங்கள் உருவாகின்றன என்றும் கூறுகின்றனர். குழந்தைகள் சோப்பு நீரை உபயோகித்து சோப்பு முட்டைகளை ஊதிவிடுவார்களே அதுபோல புதிய பிரபஞ்சங்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. நமது பிரபஞ்சம் வேறு ஒரு பிரபஞ்சத்தின் கருந்துளையிலிருந்து 'மா வெடிப்பு' அடைந்து வந்திருக்கும் என்றும் நாம் வாழூம் இந்த பிரபஞ்சத்திலிருந்து கருந்துளைகள் மூலமாக வேறு பிரபஞ்சங்கள் தோன்றுகின்றன என்று மெய்சிலிர்க்கவைக்கும் கோட்பாட்டினை கூறுகின்றனர். இக்கருத்துக்களை பல விஞ்ஞானிகள் ஆதரிக்கின்றனர். புதிய பல பிரபஞ்சங்களா? கேட்கவே ஆச்சர்யமாக இருக்கின்றது. நாம் வாழும் பிரபஞ்சம்தான், வேறு ஒன்றுமில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த நமக்கு இது நம்பமுடியாமல் இருக்கின்றது. விஞ்ஞானிகள் கூறும் இந்த வகையான புதிய கோட்பாடுகளைப் பற்றி புரிய வேண்டுமென்றால் நாம் முதலில் மா வெடிப்பு மற்றும் பிரபஞ்சத் தோற்றம் என்பதைப் பற்றி நன்கு அறிய வேண்டும். அது தெளிவாகப் புரிந்தால் விஞ்ஞானிகள் கூறும் புதிய கோட்பாடாகிய 'பல பிரபஞ்சங்கள்' எப்படி சாதியமாகும் என்று விளங்க முடியும். பிரபஞ்சத்தின் தோற்றம் பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்றால், சந்தேகமேயில்லை, காலகாலமாக அப்படியே இருந்திருக்கின்றது; வரும்காலத்திலும் அதன் கோலம் மாறாது என்று தான் பலரும் உறுதியாக நினைத்துக் கொண்டிந்தனர். 'இதற்கு ஒரு துவக்க்கமா? ஆச்சரியமாக இருக்கின்றதே' என்று விஞ்ஞானிகள் கூறியதைக் கேட்டு வியந்தவர்களுக்கு அது துவங்கிய விதத்தைக் கேட்டவுடன், அதை நம்பவே முடியவில்லை. அப்படி என்ன கூறினார்கள்? பிரபஞ்சம் ஆரம்பத்தில் ஓர் அணு அளவிலிருந்து இப்போது நாம் காணும் அளவு பெரியதாய் ஆகி இருக்கின்றது என்று கூறினர். ஒரு புள்ளியிலிருந்து பிரபஞ்சமா? நம்புவது மிக மிகக் கடினம்தான். இப்படித்தான் பூமி தட்டையில்லை உருண்டைதான் அல்லது பூமிதான் சூரியனைச் சுற்றி வந்துகொண்டிருக்கின்றது என்று அறிஞர்கள் கண்டறிந்து கூறியபோது முதலில் நம்ப முடியவில்லைதான். பிரபஞ்சத்தின் பிரமாண்டம் பற்றி நாம் இங்கு தெரிந்துகொள்ளல் அவசியம். பர‌ந்து விரிந்த கடல்களையும், காடுகளையும், மலைகளையும் கொண்ட நாம் வாழும் இந்த பூமியின் தோற்றமே நம்மை பிரமிக்க வைக்கின்றது. இந்த பூமி போல பத்து லட்சம் பூமிகளை உள்ளடக்கக்கூடிய அளவு பெரியது நமது சூரியன். இந்த சூரியனைச் சுற்றி எட்டு கிரகங்கள், அதற்கு நிலவுகள். கடைசி கிரகம் நெப்டியூன் சூரியனிலிருந்து 450௦ கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அதற்குப் பிறகு ப்ளுட்டோ என்ற சிறிய கிரகமும் மற்றும் எண்ணிலடங்கா விண்கற்களும், வால் நட்சத்திரங்களும் கொண்ட இந்த சூரிய குடும்பமே மிகப் பெரியது. நம் சூரியனைப்போல சுமார் நானூறு கோடி நட்சத்திரங்களைக் கொண்டது நம் சூரியன் இருக்கும் பால்வெளி மண்டலம். நமது சூரியனைக் காட்டிலும் பல ஆயிரம் மடங்கு பெரிய நட்சத்திரங்களும் உள்ளன. நமது பால்வெளி மண்டலத்தின் குறுக்களவு எவ்வளவு தெரியுமா? மணிக்கு சுமார் மூன்று லட்சம் கிலோ மீட்டர் வேகம் செல்லக்கூடிய ராக்கெட் கிடைத்தால், அதில் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள் பயணித்தால்தான், ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குச் செல்ல முடியும். நம் பால்வெளி மண்டலத்தைக் காட்டிலும் பல நட்சத்திர மண்டலங்கள் (கூட்டங்கள்) அளவில் பெரியவை. பிரபஞ்சத்தை பிரமிக்க வைக்கும் பிரமாண்டம் என்று கூறுவது ஏன் என்றால், இந்த பால்வெளி மண்டலம் போல் சுமார் நானூறு- ஐநூறு கோடி மண்டலங்கள் கொண்டதுதான் 'நாம் அறிந்த' பிரபஞ்சமாகும். மனிதனுடைய கற்பனை வளம் மிகப்பெரியது. ஆனால் எந்த கற்பனைக்கும் எட்டாததுதான் நமது பிரபஞ்சத்தின் பிரமாண்டம். நம் பால்வெளி மண்டலத்திலிருந்து அடுத்துள்ள மண்டலத்திற்கு தூரம் எவ்வளவு தெரியுமா? மணிக்கு மூன்று லட்சம் வேகம் செல்லும் வாகனத்தில் புறப்பட்டால், அடுத்த மண்டலத்தை அடைய ஒரு சில லட்சம் ஆண்டுகள் தான் ஆகும். அவ்வளவு பெரிய பிரபஞ்சம் ஒரு சிறிய அணு அளவிலிருந்து வந்தது என்பது ஜீரணிக்கவே முடியாததுதான். அணு அளவிலிருந்து அதி வேகமாக விரிவடைந்து வந்ததால் தான் அதை மாவெடிப்பு என்றார்கள். உண்மையில் இந்தக் கோட்பாட்டை சொன்ன விஞ்ஞானி மாவெடிப்பு என்ற வார்த்தையை உபயோகிக்கவில்லை. இந்த கோட்பாட்டினை எதிர்த்த விஞ்ஞானி தான் இந்த கோட்பாட்டை 'நையாண்டி' செய்யவே இப்படி பெயர் வைத்தார். இந்த கோட்பாட்டை பலர் எதிர்த்தனர். ஏன் அழியாப் புகழ் கொண்ட மாபெரும் விஞ்ஞானி 'ஐன்ஸ்டீன்' முதலில் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. தன் வாழ்வில் செய்த மிகப்பெரும் தவறு என்று பெருந்தன்மையோடு ஒத்துக் கொண்டார் பிறகு. மாவெடிப்புக்கு முன் 'வெளி' இல்லை வெடிப்பு என்பது சத்தத்துடன் இணைந்தது தான். ஆனால் அங்கே சத்தம் இல்லை. ஏன் என்றால் அங்கு வெளி இல்லை. வெளி இல்லாததால் காற்றும் இல்லை. அதனால் சப்தம் இல்லை. sound வெளியிலுள்ள காற்றினூடே சென்றால்தான் அந்த sound யை கேட்கமுடியும் . என்ன 'வெளி' இல்லையா? காற்று இல்லையா? என்று கேள்வி கேட்பவர்களுக்கு ஒரே பதில்தான். என்னவென்றால், பிரபஞ்சம் ஆரம்பிக்கும்போது உலகில் நாம் இப்போது காணும் ஒரு பொருளுமே இல்லை. ஏன் தூசியும் கூட இல்லை. ஆரம்பத்தில் பிரபஞ்சத்தில் சக்தி மட்டுமே இருந்தது. சக்தி அணுதுகள்களாக மாறி அந்த அணுத்துகள்கள் அணுக்களாக மாறி நாம் காணும் எல்லாப் பொருட்களுமாகி, மிருகங்களும் மனிதனும் ஆனது. காலத்தின் துவக்கம் காலங்காலமாக நாம் நினைத்துக்கொண்டிருந்தது 'காலத்திற்கு துவக்கமோ அல்லது முடிவோ இல்லை, அது எப்பொழுதுமே இருந்துகொண்டிருக்கின்றது' என்றுதான். ஆனால் மாவெடிப்பிலிருந்துதான் 'காலம்' துவங்கியது என்பதை ஜீரணிப்பது கடினம். காலம் வேறு வேறு இடங்களில் வேறு வேறு விதமாக நகருகின்றது என்றும் விஞ்ஞானிகள் கூறியதை தற்பொழுது ஒத்துக்கொள்கிறார்கள். எப்படி இந்த வகையான முடிவுக்கு வந்தார்கள்? தொலைநோக்கி கண்டுபிடிக்கும்வரை 'தொல்லை' இல்லாமல் இருந்தது. தொலைநோக்கியை கண்டுபிடித்த குற்றவாளி கலிலியோ தான். அவரது தொலைநோக்கி நமது சூரிய குடும்பத்தின் உண்மையான நிலையை எடுத்துக் காட்டியது. பின்னர், பல சக்தி வாய்ந்த, அதி நவீன தொலைநோக்கிகளை கண்டுபிடித்தனர். 'மடை திறந்த வெள்ளம் போல' பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம் பற்றி அறிய முடிந்தது. அதில் மிக முக்கிய ஒரு கண்டுபிடிப்பு என்னவென்றால் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கின்றது என்பதாகும். சூரியனைச் சுற்றும் கிரகங்களையும், கிரகங்களைச் சுற்றும் நிலவுகள் தவிர, பிரபஞ்சம் அசைவின்றி, என்றென்றம் நிலையாக இருக்கின்றது என்ற பிரபஞ்சத்தைப் பற்றிய நமது தவறான கருத்து உடைத்தெறியப்பட்டது. பிரபஞ்சம் எல்லா திசைகளிலும் விரிவடைந்து கொண்டிருக்கின்றது. நம் பால்வெளி மண்டலத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள மண்டலங்கள் (galaxy) நம்மை விட்டு வெகு வேகமாக விரிவடைந்து நகர்கின்றன என்ற செய்தி சில விஞ்ஞானிகளுக்கு, ஒரு உண்மையைப் புலப்படுத்தின. வேகமாக விரிவடையும் இந்த பிரபஞ்சம் ஒரு காலகட்டத்தில் சிறியதாய் இருந்திருக்க வேண்டும். ஒரு வெடிப்பிலிருந்து கிளம்பிப் பரவும் துகள்கள் போல 'மண்டலங்கள்' சிதறிப் பரவுவதால், பிரபஞ்சம் ஒரு வெடிப்பிலிருந்து தோன்றியது என்று கோட்பாடு உருவாக்கப்பட்டது. இந்தக் கோட்பாட்டினை உறுதிசெய்ய விஞ்ஞான உலகம் பெரும் முயற்சியில் இறங்கியது. அப்படி ஒரு மாவெடிப்பு நிகழ்ந்திருந்தால் அதன் கதிர்வீச்சு இன்றும் பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் என்று கூறினர். பலர் அதனைத் தேடி அலைந்தபோதும் , தற்செயலாக பென்சியாஸ், வில்சன் என்ற இருவர் அதைக் கண்டுபிடித்தனர். பிரபஞ்சத்தின் எல்லாப் பகுதியிலிருந்தும் மா வெடிப்பின் பின்விளைவான தேடப்பட்ட அந்த 'அண்ட நுண்ணலைக் கதிர்வீச்சு' (cosmic microwave radiation) நம் பால்வெளி மண்டலத்தையும் தாண்டி பிரபஞ்சத்தின் எல்லாப் பகுதிகளிலும் இருப்பதை அவர்கள் கண்டறிந்ததால் அந்த மாபெரும் கண்டுபிடிப்புக்கு 1978ல் அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பூமியின் நிலப்பரப்பிலிருந்து கிடைத்த ஆராய்ச்சியின் முடிவு போதாதென, இந்த கோட்பாட்டை நூறு சதம் உறுதி செய்ய மேலும் பிரபஞ்சத்தின் எல்லா குணாதிசயங்களையும் கண்டறிய அண்ட வெளிக்கு மிகுந்த பொருட்செலவில் 'வில்கின்சன் மைக்ரோவேவ் அணிசோ ற்றோபீ பரோப் ' (wilkinson microwave anisotropy probe) என்ற அதிநவீன செயற்கைக்கோள் 2001இல் அனுப்பப்பட்டது இந்த ஆராய்ச்சி பிரமிக்கத்தக்க வெற்றி அளித்தது. பிரபஞ்சம் எப்போது ஆரம்பித்தது, டார்க் மேட்டர், டார்க் எனெர்ஜி போன்ற பல புதிய விவரங்களையும் மிகத் தெளிவாக கொடுத்து, 'மா வெடிப்பு கோட்பாட்டை' சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிசெய்தது கருந்துளைக் கோட்பாடு பிரபஞ்சத்தின் ஆரம்பத்தைப் பார்த்தோம். சுமார் 1370 கோடி ஆண்டுகளாக அது நிற்காமல் விரிவடைந்து கொண்டிருக்கின்றது. ஒரு சில வினாடிகளில் அது சூரிய குடும்பத்தின் அளவு விரிவடைந்தது என்றால் அந்த வேகம் என்னவென்று பார்த்துக் கொள்ளுங்களேன். இவ்வளவு ஆண்டுகளாக விரிவடைந்த பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தைக் கற்பனை செய்து பாருங்களேன். black_hole_380சரி 'மா வெடிப்பு' தொடக்கமா அல்லது தொடர்கதையா என்ற விவாதத்துக்கு வருவோம். நம் பிரபஞ்சத்தின் கருந்துளைகள் மூலமாக வேறு பிரபஞ்சங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன என்றும் நமது விரிவடையும் பிரபஞ்சம் அதன் விரிவாக்கம் நின்று, சுருங்கி அணுவளவு அடைந்து மீண்டும் மா வெடிப்பு அடைகிறது என்று விஞ்ஞானிகளின் புதிய கோட்பாட்டினைக் கண்டோம். இதைப் புரிந்துகொள்ள வேண்டுமேன்றால், நட்சத்திரங்கள் எப்படி உருவாகின, கருந்துளைகள் என்றால் என்ன என்று தெரிய வேண்டும். இதைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல.. சிறிது கவனம் செலுத்தினால் போதும், நீங்கள் பிரபஞ்சத்தின் இயக்கத்தைப் புரிந்துகொண்டவர் ஆவீர்கள். பிரபஞ்சம் தோன்றும் போது உருவாகிய சில சக்திகளில் ஈர்ப்பு விசை (force of gravity) என்ற சக்தியும் ஒன்று. இந்த சக்தி என்னவென்று யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை. வழுக்கி விழுந்தவர்கள் நம்மில் பலபேர் இருக்கின்றார்கள். நம்மை பூமியை நோக்கி விழ வைப்பது பூமியின் ஈர்ப்புவிசை. இந்த சக்தி இல்லை என்றால் என்ன ஆகும் என்பதைக் காண்பது மிக அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும். அதாவது நீங்கள் மிதக்க ஆரம்பித்து விடுவீர்கள். உங்களைச் சுற்றிய எல்லாப் பொருட்களுமே மிதக்க ஆரம்பித்து விடும். ஆபத்து என்னவென்றால், சூரியனைச் சுற்றிவரும் நமது பூமி தனது வட்டப் பாதையை விட்டு 'வெளியில்' கட்டுப்பாடின்றி சுற்ற ஆரம்பித்துவிடும். சூரியனின் அருகில் பூமி சென்றால் பூமியின் வெப்பம் பலநூறு டிகிரிகளை எட்டும். சூரியனை விட்டு விலகிச் சென்றால் சூரிய ஓளி இல்லாமல் முதலில் எல்லாப் பயிர்களும் பிறகு அதனை உண்டு வாழும் மிருகங்களும், மனித குலமும் அழியும். முடிவில் சூரிய குடும்பத்தின் எல்லா கோள்களும் சூரியனை விட்டு பிரிந்து சென்று விடும். இந்த ஈர்ப்பு விசையினால் தான் நட்சத்திரங்கள் தோன்றுகின்றன. எப்படி என்று பார்போம். பிரபஞ்சம் ஆரம்பித்த போது, முதலில் சக்தி அணுத்துகள்களாக மாறின, சில லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு அணுத்துகள்கள் இணைந்து அணுக்கள் தோன்றின. அவை பெருமளவு ஹைட்ரோஜென் மற்றும் சிறிது ஹீலியம் என்ற வாயுக்களின் அணுக்க‌ளாகும். பிரபஞ்சமெங்கும் இந்த இரண்டு வாயுக்கள் மட்டும் நிரம்பியிருந்தன. அவை தவிர ஆர‌ம்ப பிரபஞ்சத்தில் வேறு ஒன்றுமில்லை. ஈர்ப்பு விசை தன் வேலையைத் துவக்கியது. பிரபஞ்சத்தில் எல்லாப் பொருட்களுமே ஒன்றை ஒன்று ஈர்ப்பு விசையால் இழுத்துக் கொள்ளும் என்பது விஞ்ஞானத்தின் விதி. இதை உறுதி செய்ய, முதலில் ராக்கெட்டில் விண்வெளி சென்றபோது, ஒரு பாட்டிலில் உப்பு எடுத்துச் செல்லப்பட்டது. பூமியில் உள்ளவரை தனித் தனி துகள்களாக இருந்த உப்பு, அண்டவெளி சென்றவுடன் அவைகள் உடனே ஒன்றினை ஒன்று இழுத்து கட்டியாகிக் கொண்டது. பூமி உருவாகியதே, சூரியனைச் சுற்றிவந்த பல மலைபோன்ற கற்கள் ஒன்றை ஒன்று இழுத்து இப்படி இணைந்ததுதான். இதே போல பிரபஞ்சத்தில் உள்ள ஹைட்ரோஜென் அணுக்கள் ஈர்ப்பு விசையால் ஒன்றை ஒன்று இழுத்து, பெரும் கூட்டாக இணைய ஆரம்பித்தன. பெரும் கூட்டு என்றால் இந்த பூமியை விட லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில், பெரிய கூட்டுகளாகக் கூடி இணைய ஆரம்பித்தன. ஈர்ப்பு விசை மேலும் மேலும் அணுக்களை நெருக்கமாக இழுத்தன. நெருக்கம் அதிகமாக அதிகமாக வெப்பம் அதிகரித்தது. பல லட்சம் டிகிரி வெப்பம் அடைந்த உடன் அங்கே 'அணுச்சேர்க்கை' நடக்கத் தொடங்கியது . இந்த அணுச்சேர்க்கையில் சிறிது mass எனப்படும் பொருண்மை அழிக்கப்பட்டு சக்தியாக மாறும். ஒரே சமயம் பல லட்சம் ஹைட்ரோஜென் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இணையும்போது ஏற்படும் சக்தி பல லட்சம் அனுகுண்டுகளுக்கு இணையாகும். ஒவ்வொரு வினாடியும் பல லட்சம் அணு இணைப்புக்கள் மூலமாக வெளியாகும் சக்திதான் 'சூரிய சக்தி'. அதாவது அங்கே ஒரு சூரியன் உருவாகிறது. நமது சூரியன் எனும் நட்சத்திரம் பூமியைப் போல பத்து லட்சம் மடங்கு பெரிது. அவ்வளவு பெரிய வாயுக்கூட்டம். அந்த வாயுக்கூட்டதில் உள்ள எல்லா ஹைட்ரோஜென் அணுக்களும் தீரும்வரை சூரியன் 'அணுச்சேர்க்கை' மூலமாக சூரிய சக்தியான வெப்பத்தையும் ஒளியையும் கொடுக்கும். அது தீர்ந்துவிட்டால், பெட்ரோல் தீர்ந்த வண்டி போலத்தான். சூரியன் அழிந்துவிடும். பலர் நினைத்தது போல சூரியன் (நட்சத்திரங்கள்) என்றும் நிலையான ஒரு சக்தி அல்ல. அதற்க்கும் பிறப்பு உண்டு, அழிவும் உண்டு. கருந்துளை என்றால் என்ன ? சூரியனைவிட பெரிய நட்சத்திரங்களின் வாழ்நாள் முடியும்போது 'கருந்துளை' உருவாகின்றன. நட்சத்திரங்கள் உருவாக ஈர்ப்பு விசை காரணம் என்று கண்டோம். அந்த ஈர்ப்பு விசை தொடர்ந்து சூரியனை சுருங்கவைத்து மேலும் மேலும் சிறிதாக்க எப்போதும், அதாவது, சூரியனின் வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்துகொண்டே இருக்கும். ஈர்ப்பு விசைக்கு தடங்கல் இல்லை என்றால் அது நட்சத்திரங்களை மிக மிக சிறியதாகிவிடும் . ஆனால் நட்சத்திரம் சுருங்கும்போது அணுச்சேர்க்கையினால் அணுசக்தி உருவாகிறது என்று கண்டோம். இந்த அணுசக்திதான் நட்சத்திரங்களை விரிடைய செய்கிறது . அணு சக்தி நட்சத்திரத்தை விரிவடையச் செய்யும்பொது, ஈர்ப்பு விசை அதை சுருங்கவைக்க முயலுகிறது. இந்த எதிர் எதிர் சக்திகளினால் நட்சத்திரங்கள் அதே உருவில் இருக்கின்றன. நட்சத்திரங்களின் வாழ்நாள் முழுவதும் இந்த 'tug of war' என்ற இழுபறி நடந்துகொண்டே இருக்கின்றது. ஆபத்து எப்போது வருகின்றது என்றால் நட்சத்திரத்தின் எரிபொருளான ஹைட்ரோஜென் தீரும்போது, அணுசேர்க்கை குறைந்து, அதனால் வரும் நட்சத்திரத்தை விரியச்செய்யும் அணுசக்தி வெளிப்பாடு இல்லாத நிலை வரும்போது, ஈர்ப்பு விசையின் கை ஓங்கி நட்சத்திரம் சுருங்க ஆரம்பிக்கிறது. நமது சூரியன் என்ற 'பாக்டரி' நிற்கும்போது அது வெள்ளைக் குள்ளன் அல்லது வெள்ளைக் குள்ளி என்ற பூமி அளவுள்ள ஒரு நட்சத்திரமாக சுருங்குகிறது. ஆனால் நமது நட்சத்திரத்தை விட சில மடங்கு பெரிய நட்சத்திரமாயிருந்தால் அது அழியும்போது ஒரு 'கருந்துளை' ஆகிவிடுகிறது. பிரபஞ்சத்தின் அதி பயங்கர, அச்சமூட்டும் ஒன்றுதான் கருந்துளை. மாபெரும் அரக்கன் என்ற பெயர் கொண்டது கருந்துளை. ஏன்? தன் அருகில் எது வந்தாலும், நட்சத்திரங்களோ அல்லது கோள்களோ, எதுவாயினும் அதை அப்படியே 'ஸ்வாகா' செய்து விடும். பூமியை விட கோடி மடங்கு பெரிய நட்சத்திரம் ஆனாலும் அப்படியே விழுங்கப்பட்டுவிடும். வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர் வேகம் (அதாவது பூமியை வினாடிக்கு ஏழு முறைக்கு மேலாக சுற்றும்) கொண்ட ஒளியைக் கூட தன்னுள் இழுத்துவிடும், கருந்துளை. அங்கு ஒளி சுத்தமாக இல்லாததினால்தான் அது கருப்பாக இருக்கின்றது. பிரபஞ்சத்தின் பெரிய பெரிய ரகசியங்களையும் கண்டுபிடித்து, பல மூட நம்பிக்கைகளை அகற்றிய விஞ்ஞானிகளுக்கு பிரபஞ்சத்தின் விஞ்ஞானத்தில் சவாலாக இருப்பது கருந்துளைக்குள் செல்லும் நட்சத்திரம் போன்ற பொருட்கள் என்னவாகின்றன என்பதுதான். அதற்குள் சென்ற பொருட்களின் தடயமே இல்லாமல் போகின்றது. அந்த பொருள் என்னவாயிற்று என்று தெரியவில்லை. பௌதீக விதிகள் எல்லாம் அங்கு ............... பிரபஞ்சத்தின் பல, பல உண்மைகளை வெளிக்கொணர்ந்த விஞ்ஞானிகள், தற்போது நிரூபிக்க முடியாமல் இருப்பது இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள், ஒன்று கருந்துளைக்குள் செல்லும் பொருள் என்னவாகின்றன? மற்றொன்று மாவெடிப்பு நடப்பதற்குமுன் என்ன நடந்தது? நன்றாகப் பார்த்தால் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை. மாவெடிப்பு (created matter)) பொருட்களை உண்டு பண்ணுவ‌து. கருந்துளை (destroyed matter) பொருட்களை அழிக்கின்றது. மா வெடிப்பில், ஒன்றுமில்லா நிலையில் இருந்து பொருட்கள் உற்பத்தியாகின்றன. அதே சமயம், கருந்துளையில் பொருட்கள் ஒன்றுமில்லாமல் போகின்றன. இதை இரண்டையும் இணைத்துப் பார்கலாமா? கருந்துளையில் அழியும் பொருட்கள் மாவெடிப்பில் தோன்றுகின்றன என்று? பிரபஞ்சத்தில் தோன்றும் கருந்துளைகள் மூலமாக புதிய பிரபஞ்சம் உருவாகிறது என்ற விஞ்ஞானிகளின் புதிய கோட்பாட்டை ஒத்துக் கொள்ளலாமா?

ஆச்சரியப்படும் உண்மைகள்

1* இன்னும் 100 வருடம் கழித்து பேஸ்புக்கில் 50 கோடி இறந்தவர்களின் அக்கவுன்ட் இருக்குமாம். 2* குதிக்க முடயாத ஒரே உயரினம் யானை தான். 3* டைட்டானிக் கப்பலை உருவாக்க 7 மில்லியன் டாலர் செலவானது ஆனால் டைட்டானிக் படத்தை உருவாக்க 200 மில்லியன் டாலர் செலவாகியுள்ளது. 4* சோனி கம்பெனியின் ஒரிஜினல் பெயர் டாட்சூகன் 5* யூடியூபில் இப்பொழுது உள்ள வீடியோவை முழுவதுமாக பார்க்க 1000 வருடம் தேவைபடும் 6*ஒருவர் சந்தோஷமாக அழும் பொழுது முதலில் வலது கண்ணிலும், வலியால் அழும் பொழுது இடது கண்ணிலும் கண்ணீர் வரும். 7*99 சதவீத மக்கள் தங்கள் பாஸ்வேர்டை டைப் செய்யும் பொழுது ஒரு எழுத்து தப்பாக டைப் செய்துவிட்டால் பாஸ்வேர்டை முழுவதுமாக அழித்து புதிதாக டைப் செய்கின்றனர். 8*ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின்ஆய்வின் படி ஒரு நபர் காதலில் விழும் பொழுது தனது இரண்டு நெருங்கிய நண்பரை இழந்துவிடுகிறாராம். 9*கெட்டு போகாத ஒரே உணவு பொருள் தேன் 10*வெங்காயம் உரிக்கும் போது ச்சீவிங் கம் சாப்பிட்டால் அழுகை வராதாம,...

நளினி மகள் ஹரித்திரா சென்னை வருகிறார் பெற்றோரை விடுங்கள்: ராகுலுக்கு.. -

எனது பெற்றோரை விடுங்கள் என முருகன் – நளினியின் மகள் அரித்ரா, ராகுல் காந்திக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ----------------------------------------------------------------------------------------------- ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என நேற்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ---------------------------------------------------------------------------------------------------- மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினை தெரிவிக்காவிட்டால், மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியிருந்தார். ---------------------------------------------------------------------------------------------------- முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், “நாம் நாட்டின் பிரதமரை கொன்றவர்களையே தண்டிக்காமல் விடுவிப்பது எப்படி சரியாகும்? பிரதமரை கொன்றவர்களையே விடுவிக்கும் போது, சாதாரண மனிதர்கள் பாதிக்கப்படும் போது எப்படி நீதி கிடைக்கும்?” என அவர் கூறியிருந்தார். ---------------------------------------------------------------------------------------------------- இந்நிலையில், தனது பெற்றோரை விடுமாறு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு முருகன், நளினி தம்பதியினரின் மகள் அரித்ரா கோரிக்கை விடுத்துள்ளார். ---------------------------------------------------------------------------------------------------- இதுகுறித்து, தனியார் செய்தி சனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ---------------------------------------------------------------------------------------------------- ராகுல் காந்தியிடம் மிகவும் வருந்தி கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் விரும்பிய ஒருவரின் இழப்பை என்னால் புரிந்து கொள்ள முடியும். ---------------------------------------------------------------------------------------------------- என் பெற்றோருக்கு கொடுக்கப்பட்ட தண்டனையால் நான் பாதிக்கப்பட்டேன். எனது பெற்றோர்கள் உயிருடன் இருந்தும், அவர்களுடன் நான் இருந்ததில்லை. தற்போதும் நான் எனது பெற்றோர்களுடன் இருக்க விரும்புகிறேன். அவர்கள் குற்றம் செய்து இருந்தாலும் அதற்கான தண்டனையை போதுமான அளவு அனுபவித்துவிட்டனர். எனக் கூறியுள்ளார். ---------------------------------------------------------------------------------------------------- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்தான் இதனை சாதித்துள்ளார். நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை என்னால் வெளிபடுத்த முடியவில்லை. எனது பெற்றோர்கள் கண்டிப்பாக வெளியே வருவார்கள் என்று எனக்கு தெரியும். அவர்கள் நிரபராதிகள் எனவும் அவர் கூறியுள்ளார். ---------------------------------------------------------------------------------------------------- நளினியின் மகள் ஹரித்திரா சென்னை வருகிறார் ---------------------------------------------------------------------------------------------------- இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஏழு பேர்களில் ஒருவரான முருகன் – நளினி விடுதலையாக விருப்பதாக அறிவித்துள்ளதையடுத்து அவர்களது மகள் ஹரித்திரா லண்டனில் இருந்து சென்னை வருகிறார். ---------------------------------------------------------------------------------------------------- காதலர்களான முருகனும், நளினியும், புதுமணத் தம்பதிகளாகியிருந்த நேரத்தில் தான், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணை கைதியாக செங்கல் பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது நளினி 5 மாத கர்ப்பிணி. வயிற்றில் குழந்தையை சுமந்தபடியே கடுமையான வலியுடன் காலம் தள்ளினார் நளினி. ---------------------------------------------------------------------------------------------------- டாக்டர்கள் குறித்துக் கொடுத்த தேதிக்கு முன்னரே நளினி அழகான பெண் குழந்தையை சிறையிலேயே பெற்றேடுத்தார். அக் குழந்தைக்கு ஹரித்திரா என்று பெயரிட்டனர். சிறையில் பூத்த மலரான ஹர்த்திராவுக்கு 2 வயது இருக்கும் போது நளினியை சேலம் சிறைக்கு மாற்றியிருக்கிறார்கள். அப்போது பசுமாட்டையே கண்கொட்டாமல் ஆச்சரியமாக பார்த்திருக்கிறார் ஹரித்திரா. ---------------------------------------------------------------------------------------------------- இதற்கு மேலும் தங்களது குழந்தை வெளி உலகமே தெரியாமல் சிறைக்குள் வளர வேண்டாம் என்று முடிவெடுத்த அவர்கள் ஹரித்திராவை வெளியில் தங்களது உறவினர்களிடமோ அல்லது தெரிந்தவர் களிடமோ கொடுத்து வளர்க்கச் சொல்லலாம் என்று திட்டமிட்டனர்.
---------------------------------------------------------------------------------------------------- இதன் பின்னர், ராஜீவ் கொலை வழக்கில் சகசிறை வாசியாக இருந்த சுசிந்திரனின் தாயிடம் ஹத்திராவை ஒப்படைத்தனர். அவர் சிறிது காலம் கோவையில் வைத்து ஹரித்திராவை வளர்த்து வந்தார். பின்னர் ஈழத்துக்கு சென்ற அவர், தற்போது 22 வயது இளம் பெண்ணாக லண்டனில் வசித்து வருகிறார். ---------------------------------------------------------------------------------------------------- மருத்துவம் தொடர்பான படிப்பை படித்து வரும் ஹரித்திரா, பெற்றோரின் விடுதலையாகப்போகும் தகவலால் மகிழ்ச்சியில் திளைத்துப் போயுள்ளார். நளினி, முருகனின் விடுதலைக்காக காத்திருக்கும் ஹரித்திரா அவர்களை சந்திப்பதற்காக சென்னை வருகிறார். ---------------------------------------------------------------------------------------------------- நளினியும், முருகனும் விடுதலையாகும் தேதி தெரிந்த பின்னர், ஹரித்திராவின் பயண தேதி திட்டமிடப்பட உள்ளது. ---------------------------------------------------------------------------------------------------- சென்னை வரும் அவர் தனது பெற்றோரின் விடுதலைக்காக போராடிய அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து நன்றி தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளார். விவரம் தெரிந்த பின்னர் தனது தாய், தந்தையை சிறைக்கு வெளியில் வைத்து முதன் முதலாக சந்திக்க உள்ளார் ஹரித்திரா. எனவே, அவர் சென்னை வரும் போது சிறப்பான வரவேற்பு அளிக்கவும் தமிழ் ஆர்வலர்கள் திட்மிட்டுள்ளனர். ---------------------------------------------------------------------------------------------------- விடுதலையான பின்னர் நளினியும் முருகனும் மகள் ஹரித்திராவுடன் லண்டன் சென்று குடியேற திட்டமிட்டுள்ளனர். அவர்கள் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் இங்கிலாந்தில் குடியேறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும். ---------------------------------------------------------------------------------------------------- பாஸ்போர்ட், விசா எடுப்பது போன்ற வழக்கமான நடைமுறைகளுக்கு மத்தியில் முருகனும், நளினியும் லண்டனில் குடியேறுவதில் இருக்கும் சட்ட சிக்கல்கள் பற்றியும் அவர்களது வக்கீல் புகழேந்தி ஆய்வு செய்து வருகிறார்.

ராஜீவ் கொலை குறித்த இந்திய உச்ச நீதிமன்றின் தீர்ப்பை மதிக்கின்றோம் - இலங்கை

ராஜீவ் கொலை குறித்த இந்திய உச்ச நீதிமன்றின் தீர்ப்பை மதிக்கின்றோம் - இலங்கை -------------------------------------------------------------------------------------------- இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விதித்த தீர்ப்பை மதிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட 7 பேர் தொடர்பில் இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மதிப்பதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். -------------------------------------------------------------------------------------------- தனிப்பட்ட ரீதியில் எவ்வாறான நிலைப்பாடு காணப்பட்டாலும் இந்தியாவின் நீதிமன்றக் கட்டமைப்பிற்கு மரியாதை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாழன் ஆகியோருக்கான மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருந்தது. -------------------------------------------------------------------------------------------- குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கைதிகளை விடுதலை செய்ய தமிழக மாநில அரசாங்கம் தீர்மானித்திருந்தது. எனினும், இந்த தீர்;மானத்திற்கு இந்திய உச்ச நீதிமன்றம் இன்று தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாக்கிஸ்தான் அரசாங்கத்திற்கும் தலிபானுக்குமிடையே இடம் பெற்று வந்த பேச்சு வார்த்தை நிறுத்தம்-

ஐரோப்பிய செய்தியாளர் - பாக்கிஸ்தான் அரசாங்கத்திற்கும் தலிபானுக்குமிடையே இடம் பெற்று வந்த பேச்சு வார்த்தை நிறுத்தம்- ------------------------------------------------------------------------------------------------ பாக்கிஸ்தான் அரசாங்கத்திற்கும் தலிபானுக்குமிடையே இடம் பெற்று வந்த பேச்சு வார்த்தை, இருபத்தி மூன்று ராணுவ வீரர்கள் கொலை செய்யப்பட்டதையிட்டு, இடை நிறுத்தப்பட்டுள்ளது. பாக்கிஸ்தான் சிறைச்சாலைகளில் தலிபான் கைதிகள் கொல்லப்பட்டதற்குப் பழி வாங்கும் நடவடிக்கையே, இந்த 23 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டமையென தலிபான் இயக்கம் கூறுகிறது. ------------------------------------------------------------------------------------------------ June 2010 இல் எல்லைக் காவலிலீடுபட்டிருந்த 23 ராணுவ வீரர்கள் தலிபானால் கடத்தப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தனர். ராணுவ வீரர்கள் தலிபானால் கொல்லப்பட்டதையடுத்து, பாக்கிஸ்தான் ராணுவம் நடாத்திய குண்டு வீச்சில் 40ற்கும் மேற்பட்ட தலிபான் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். ------------------------------------------------------------------------------------------------ தலிபான் இயக்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்துபவரில் ஒருவரான மெளலான அசிஸ் என்பவர், குறானும், ஷாரியாவும் பேச்சுவார்த்தைகளின் வரம்புகளையும், திட்டங்களையும் வடிவமைக்க வேண்டுமென்றும், அதுவரை பேச்சு வார்த்தைகளில் தான் சமூகமளிப்பது சாத்தியமற்றதெனவும் குறிப்பிட்டமைக்கு, பாக்கிஸ்தான் அரசு சட்ட ஒழுங்கு மாற்றத்திற்கு முழுமையான மறுப்புத் தெரிவித்துள்ளது. ------------------------------------------------------------------------------------------------ நடை முறையில் இருக்கும் சட்டதிட்டங்களைத் தலிபான் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பது பாக்கிஸ்தான் அரசின் முக்கிய அதிகார வேண்டுகோளாகும். ------------------------------------------------------------------------------------------------ ஷாரியா என்பது குரானை அடிப்படையாகக் கொண்ட, இஸ்லாம் சமூகம் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்கு முறைகளாகும். இதில் ஐரோப்பிய, ஜேர்மன் சட்டங்களில் காணப்படுவது போன்று குடும்பச்சட்டம், தண்டனைச்சட்டம், வாரிசுக்கான சொத்துருமைச்சட்டம் போன்றன கிடையாதென்பதும், பதிலாக சமய சம்பந்தமான கடமைகளும், பிரார்த்தனை முறைமைகளும், சமய சடங்குகள் பற்றிய விபரங்களுமே உள்ளடக்கப்பட்டு சமூகம் சக மனிதர்களோடு உறவாடுவதற்கான ஒரு சில வழிகளும் பேசப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

'நாம் பயங்கரவாதிகள் அல்ல' – விக்னேஸ்வரன்

வட மாகாணத்தை பயங்கரவாதப் பகுதியாக நோக்குவதனை இலங்கையின் மத்திய அரசாங்கம் கைவிட வேண்டும்" -------------------------------------------------------------------------------------- 'நாம் பயங்கரவாதிகள் அல்ல' – விக்னேஸ்வரன் -------------------------------------------------------------------------------------- நாம் பயங்கரவாதிகள் கிடையாது என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். -------------------------------------------------------------------------------------- வட மாகாணத்தை பயங்கரவாதப் பகுதியாக நோக்குவதனை இலங்கையின் மத்திய அரசாங்கம் கைவிட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். -------------------------------------------------------------------------------------- சர்வதேச செய்தி ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். -------------------------------------------------------------------------------------- மாகாணத்திற்கு போதியளவு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். -------------------------------------------------------------------------------------- வடக்கை பயங்கரவாத மாகாணமாக அடையாளப்படுத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். -------------------------------------------------------------------------------------- யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இராணுவத்தில் இணையுமாறு படையினர் நிர்ப்பந்தம்:-

விவசாய அமைச்சரிடம் கண்ணீர் விட்டழுத இளம் பெண்கள்! இராணுவத்தில் இணையுமாறு படையினர் நிர்ப்பந்தம்:- ---------------------------------------------------------------------------------------- இராணுவத்தில் இணையுமாறு படையினர் தம்மை நிர்ப்பந்தித்து வருவதாகக் கிளிநொச்சியிலுள்ள இளம் பெண்கள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கண்ணீர் மல்க முறையிட்டுள்ளனர். ---------------------------------------------------------------------------------------- கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி புழுதி ஆற்றிலிருந்து மாயவனூர் கிராமத்துக்கு ஏற்றுநீர்ப்பாசனம் மூலம் விவசாய நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் அந்தக் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். குறித்த திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளையுடன் அங்கு சென்றிருந்தார். ---------------------------------------------------------------------------------------- புழுதி ஆற்றினைப் பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்வது தொடர்பில் ஆராய்ந்த அமைச்சர் அதன் பின்னர் மாயவனூர் கிராம மக்களுடனான சந்திப்பினை மேற்கொண்டு அந்தக் கிராமத்தின் குறை நிறைகள் தொடர்பில் கேட்டறிந்தார். அதன் போது கண்ணீர் விட்டழுத அந்தக் கிராமத்தினைச் சேர்ந்த இளம் பெண்கள், ---------------------------------------------------------------------------------------- இராணுவத்தினர் தம்மை இராணுவத்தில் இணையவேண்டும் அல்லது வட்டக்கச்சி விவசாயப் பண்ணையில் வேலை செய்யவரவேண்டும் என நிர்ப்பந்தித்துவருவதாகவும் தம்மால் படையினரின் அழுத்தங்களில் இருந்து மீள முடியவில்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர். ---------------------------------------------------------------------------------------- இதற்குப் பதிலளித்த விவசாய அமைச்சர், ---------------------------------------------------------------------------------------- வலுக்கட்டாயமாக படைச் சேர்ப்பில் பெண்களை ஈடுபடுத்துவதை ஏற்கமுடியாது. இலங்கை அரசாங்கம் போர்க்காலத்தில் அதிகமான இராணுவத்தினரை உள்வாங்கிய நிலையில் தற்போது இராணுவம் உப்பிப்போயுள்ளது. போருக்குப் பின்னர் இராணுவத்தின் தேவையில்லை என்ற நிலையில் இவ்வாறான கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் எதற்காக அரசாங்கம் ஈடுபடவேண்டும். இதனை ஒரு போதும் ஏற்க முடியாது என்பதுடன் இந்த நடவடிக்கையினை வன்மையாகக் கண்டிக்கின்றேன். ---------------------------------------------------------------------------------------- இதேவேளை வட்டக்கச்சியில் உள்ள விவசாயப் பண்ணை எமது விவசாயத் திணைக்களத்திற்கு சொந்தமானது. அதனை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு எமது பெண்களை அங்கு வேலைக்கு வருமாறு நிர்ப்பந்திக்கின்றது. விவசாயப் பண்ணை இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் அங்கு வேலைக்குச் செல்வதற்கு பெண்கள் அஞ்சுகின்றனர். இந்த நடவடிக்கை அந்தப் பகுதி மக்களின் வறுமைக்கு ஒரு காரணமாகவும் அமைந்துள்ளது. ---------------------------------------------------------------------------------------- போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் இதுபோன்ற தொடர் நெருக்கடிகளையும் தொந்தரவுகளையும் எமது மக்கள் எதிர்கொண்டே வருகின்றனர். இதன் காரணமாகவே இராணுவத்தினரை எமது பகுதிகளிலிருந்து வெளியேறவேண்டும் என நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். இராணுவத்தினர் வெளியேறுகின்றபோதே இவ்வாறான நெருக்கடிகளிலிருந்து எமது மக்கள் மீண்டெழுவதுடன் எமது வறுமைக்குட்பட்ட மக்களின் பொருளாதாரமும் மேம்பாடடையும் என்று தெரிவித்த விவசாய அமைச்சர், இது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் கவனத்துக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தார். ----------------------------------------------------------------------------------------

இலங்கைக்கு எதிராக 23 நாடுகள் வாக்களிக்கும் - GTF

இலங்கைக்கு எதிராக 23 நாடுகள் வாக்களிக்கும் என க்ளோபல் தமிழ் போராம் என்ற பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் அமைப்பு எதிர்வு கூறியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அமெரிக்கா பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளன. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகள் வாக்களிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரி;மைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் அறிக்கையின் அடிப்படையில் அமெரி;க்கா தீர்மானம் முன்வைக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவும் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் என எதிர்வு கூறியுள்ளது, இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு பல நாடுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதாகவும், இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்கள் வலுப்பெற்று வருவதாகவும் க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். செக்குடியரசு, எஸ்டோனியா, மொன்டஜெனரோ, ஒஸ்ட்ரியா, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, பிரித்தானியா, வட அயர்லாந்து, அமெரிக்கா, கொரியா, இந்தியா, ஆர்ஜன்டீனா, பிரேஸில், பேரு, அன்டிகுவா, ச்சிலி, கொஸ்டரிக்கா, சியரே லியோன், கோட் டிவோரி, பெனின், மெக்ஸிக்கோ, மெஸிடோனியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் என தெரிவித்துள்ளார். இன்னும் சில நாடுகள் வாக்களிப்பில் பங்களிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, ரஸ்யா, சவூதி அரேபியா, வியட்நாம், குவைட், மாலைதீவு, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, சீனா, கொங்கோ, கியூபா மற்றும் வெனிசூலா ஆகிய 13 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என எதிர்வு கூறியுள்ளார்.