Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Friday, November 29, 2013
“பேரறிவாளன் உள்ளிட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்கி உடனே விடுதலை செய்ய வேண்டும்” மாவீரர் நாள் கூட்டத்தில் தோழர் பெ.மணியரசன்
நீதிபதி கே.டி.தாமஸ், விசாரணை அதிகாரி தியாகராஜன் போன்றோரின் வாக்குமூலங்கள் வந்த பிறகும், பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரையும் சிறையில் வைத்திருப்பது சட்டவிரோதம்! அவர்கள் அனைவருக்கும் தலா 10 கோடி இழப்பீடு வழங்கி உடனே விடுதலை செய்ய வேண்டும்” என, வடசென்னை மாவீரர் நாள் கூட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.
தமிழீழ விடுதலைக்காக உயிரீந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளான நவம்பர் 27 – மாவீரர் நாளையொட்டி, வடசென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில், தண்டையார்பேட்டையில் மாபெரும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. த.வெள்ளையன், தந்தை பெரியார் தி.க. பொதுச் செயலாளர் தோழர் கோவை கு.இராமகிருட்டிணன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன்,தற்சார்பு உழவர் இயக்க அமைப்பாளர் திரு. கி.வே.பொன்னையன், தமிழ்ப்புலிகள் அமைப்பின் தலைவர் திரு. நாகை திருவள்ளுவன், இயக்குநர் புகழேந்தி தங்கராசு உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்று உரையாற்றினர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு தோழர் பெ.மணியரசன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்:
தமிழீழ விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதற்காக நாம் இங்குக் கூடியுள்ளோம். இந்தக் கூட்டத்திற்கு தடை வந்துவிடுமோ என்றெண்ணி, தடை வந்தால் கூட்டத் தலைவர் மீது தானே வழக்குப் போடுவார்கள், அதை என் மீது போடட்டும் என திரு. வைகோ அவர்கள், தானே முன்வந்து இக்கூட்டத்திற்கு தலைமையேற்றிருக்கிறார் எனக் கருதுகிறேன். கூட்டத்திற்கான ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
மாவீரர்களுக்கு என்றைக்கும் மரணமில்லை. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ‘தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை, தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ?’ எனக் கேட்டார். அது போல, இன, மொழி விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் போராளிகளுக்கு என்றைக்கும் மரணமில்லை. அவர்கள் மரணத்திற்கு பின்னும் வாழும் மகத்துவம் படைத்தவர்கள். ஈழ விடுதலைக்குப் போராடி மாய்ந்த மாவீர்ர்கள் ஒவ்வொரு நவம்பர் 27 ஆம் நாளும் புதிதாகப் பிறக்கிறார்கள். நாமெல்லாம் ஒரு தடவை பிறந்ததோடு சரி.
வயோதிகம் காரணமாக கொடியவன் இராசபக்சே பின்னால் இறந்து போனால், அவனை இலங்கையே நினைவில் வைத்துக் கொள்ளாது. ஆனால், மாவீரர்களோ மறுபடியும் மறுபடியும் நினைவில் கொள்ளப்பட்டு, மரணத்திற்குப் பிறகும் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். கரும்புலி வீரர்கள் மரணத்திற்குப் பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பகத்சிங், திலீபன் ஆகியோர் மரணத்திற்குப் பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மரணத்திற்குப் பிறகும் வாழ்வு நீடிக்க வேண்டுமென விரும்பினால், மொழி – இன விடுதலைக்கு நாம் போராட வேண்டும்.
இந்த ஈகியருக்கு நாம் வீரவணக்கம் செலுத்துவதோடு மட்டும் நின்றுவிடக் கூடாது. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தனது மாவீரர் நாள் உரையில், ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்துவதோடு மட்டும் நிற்க மாட்டார். தற்போது போராட்டத்தின் நிலை என்ன? அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, கணக்குப் போடுகின்ற வகையில் அவர் உரையாற்றுவார்.
அதுபோல, தமிழீழ மக்களை இரத்த வெள்ளத்தில் இனப்படுகொலை செய்த கொடியவன் இராசபக்சே – மன்மோகன் கும்பலை, பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த நாம் எந்தளவிற்கு முயற்சி எடுத்திருக்கிறோம்? தமிழீழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்காக உலக நாடுகளிடம் எந்தளவு கருத்துருவாக்கம் செய்திருக்கிறோம்? என்பதையெல்லாம் நாம் இம்மாவீர்ர் நாளில் கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டும்.
கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டை கனடா புறக்கணித்தது. எங்கோ இருக்கும் சின்னஞ்சிறியத் தீவான மொரீசியஸ் புறக்கணித்தது. பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரூன், அங்கு யாழ்ப்பாணத்தில் பணயக் கைதிகள் போல் வைக்கப்பட்டிருக்கும் நம் தமிழ் மக்களை தானே நேரில் சென்று பார்த்தார். வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை அவைக் கூடுவதற்கு முன்பு, இலங்கையின் மனித உரிமை மீறல்கள் முறையாக விசாரிக்கப் படவில்லையெனில், அதே கூட்டத்தில் சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கு ஏற்பாடு செய்வோம் என்று டேவிட் கேமரூன் எச்சரித்தார்.
பிரித்தானியத் தமிழர்களின் போராட்டம் காரணமாக, பிரிட்டன் பாராளுமன்றத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடியின் எதிரொலி இது. உலகெங்கும் வாழும் தமிழ்நாட்டுத் தமிழ் மக்களும், புலம் பெயர்ந்த தமிழ் மக்களும் தங்களது போராட்டங்களின் மூலம் ஏற்படுத்திய முன்னேற்றம் இது! நம்முடைய போராட்டங்கள் இல்லையேல், உலகம் இலங்கையில் கொல்லப்ட்ட ஒன்றரை இலட்சம் தமிழர்களை மறந்திருக்கும்.
குளிக்கப் போய் சேறு பூசிக் கொண்டவனைப் போல, பவுடர் பூசப் போய் கரி பூசிக் கொண்டவனைப் போல, உலக நாடுகளின் பாராட்டைப் பெறலாம் என்று காமன்வெல்த் மாநாடைஇலங்கையில் நடத்தி அம்பலப் பட்டுப் போனான் இராசபட்சே ! இலங்கையில் நடந்த போர் குற்றங்களை, மனித உரிமைமீறலகளை பலநாட்டுத் தலைவர்களும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக காமன் வெல்த் மாநாடு அமைந்தது.
வரும் மார்ச் மாதம் ஐ.நா.வில் நடைபெறும் மனித உரிமை அவைக்கூட்டத்தில், கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகளவு நாடுகள் இலங்கையை எதிர்க்கும். அந்தளவிற்கு இலங்கையைத்தனிமைப்படுத்தும் பணிக்கு, நம்முடைய போராட்டங்கள் பயன்பட்டிருக்கின்றன.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதில்லை என்ற முடிவை மனப்பூர்வமாக எடுக்கவில்லை. தமிழ்நாட்டுத் தமிழர்களின் போராட்டம், நெருங்கி வருகின்ற மக்களவைத் தேர்தல் ஆகியக் காரணிகள், அவரை அம்முடிவை எடுக்க வைத்திருக்கின்றன.
நம் போராட்டம் இலங்கையை, இந்தியாவை மட்டும் அசைக்கவில்லை. இங்கே ஆண்டு கொண்டிருக்கும் செயலிதா – கருணாநிதி ஆகியோரையும், நமக்குப் பின்பாட்டுப் பாட வைத்திருக்கிறது. இனத்துரோகி என இன்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் கருணாநிதியின் கதி நமக்கும் வந்து விடுமோ என்றெண்ணி, அம்மையார் செயலலிதா தானும் தமிழர்களுக்கு ஆதரவானவர் என்பதாகக் காட்டிக் கொள்ள ஒப்புக்கு சில தீர்மானங்களைப் போடுகிறார்.
இவர்கள் இருவரும் முழு உள்ளத்தோடு, தமிழர்களுக்கு ஆதரவானத் தீர்மானங்களையும்,அறிக்கைகளையும் தருவதில்லை. பழைய காலம் போல், இப்பொழுது தமிழர்களை ஏமாற்ற முடியாது என புரிந்து கொண்ட காரணத்தினால் தான் அவர்கள் இந்த நிலையை எடுக்க வேண்டியிருக்கிறது.
பழைய காலம் போலில்லாமல், புதிய சிந்தனையுடன் இளைஞர்கள் வருகிறார்கள். இணையதளங்களில், முகநூல் பக்கங்களில் விவாதிக்கிறார்கள். கருத்துருவாக்கத்தில் ஈடுபடுகிறார்கள். அதன் வெற்றியே இது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த வெற்றி, தமிழர்கள் கட்சி சார்பற்று, இனச்சார்புடன் போராடியதன் விளைவு! இதை நாம் எக்காரணம் கொண்டும் மறந்துவிடலாகாது! நம் எதிரிகள் வலைக்குள் மாட்டிக் கொள்ளும் கயிறு சுருங்கிக் கொண்டே வருவதன் வெளிப்பாடு இது!
இராசீவ் காந்தி கொலை வழக்கு பற்றி விசாரித்த சி.பி.ஐ.யின் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை அதிகாரி தியாகராஜன் ஐ.பி.எஸ்., என்பவர், பேரறிவாளன் நிராபராதி என்றும், அவருடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் போது தான் கடமை தவறிவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். பேரறிவாளன் பேட்டரி வாங்கிக் கொடுத்தது உண்மையே என்றாலும், அந்த பேட்டரியைப் பயன்படுத்தித்தான் இராசீவ் காந்தியைக் கொல்லப் போகிறார்கள் என்ற செய்திஎனக்குத் தெரியாது என்று பேரறிவாளன் என்னிடம் சொன்னார்.
ஆனால் ‘எனக்குத் தெரியாது’ என்று அறிவு சொன்ன வார்த்தையை வாக்குமூலத்தில் நான் பதிவு செய்யவில்லை. ஏனெனில், வாக்குமூலம் அளிப்பவர்கள் சொல்வதையெல்லாம் அப்படியே எழுதுவது காவல்துறை மரபல்ல. காவல்துறை தயாரித்துள்ள வழக்குக்கு வலுச்சேர்க்கும் வகையில் தான், ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்பது வழக்கம். அதனால்தான், நான் பேரறிவாளன் சொன்னதை அப்படியே பதிவு செய்யவில்லை. இதன் காரணமாகவே பேரறிவாளன் மரண தண்டனை பெற்றிருக்கிறார் என்பது என் மனதை உருத்துகிறது என்று தியாகராஜன் கூறியிருக்கிறார்.
இதன் பொருள், ஒருவரை துன்புறுத்தி, அடித்து, உதைத்து, அவர் மீது என்ன குற்றத்தைக் காவல்துறை சுமத்தியிருக்கிறதோ, அதை அவர்களே ஒப்புக் கொள்ளும் வகையில் தயாரிக்கப்படுவது தான், ஒப்புதல் வாக்குமூலம் என்பது. தியாகராஜன் 16 பேரிடம் வாங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் இந்த வழக்கில் மரண தண்டனை, வாழ்நாள் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், வழக்கில் சிக்க வைக்கப்பட்ட 26 பேரும் அப்பாவிகள். நவநீதம் என்ற சவநீதம் பூந்தமல்லி நீதிமன்றத்தில், 26 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கினார். அது, உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு சென்ற போது, அங்கு National Collective consiciousness.அதாவது, தேசத்தின் கூட்டு மனச்சான்றின்படி, இவ்வழக்கில் மரண தண்டனை வழங்கியாக வேண்டும் என்று அங்கே 4 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கினார்கள்.
நாங்கள், கொலை செய்தவர்களை சும்மா விடச் சொல்லவில்லை. ஆனால், சும்மாயிருந்தவர்களை கொலை செய்யாதீர்கள் என்று தான் கேட்கிறோம்.
07.05.1991 அன்று சிவராசன் புலிகளின் தலைமையகத்திற்குப் பேசியதை, இடைமறித்துக் கேட்ட போது, இராசீவ் காந்தியைக் கொலை செய்யும் இத்திட்டம் தமிழகத்தில் யாருக்குமே தெரியாது என்று அவர் சொல்லியிருக்கிறார். எனவே, இவ்வழக்கில் கூட்டுச்சதிக்குரிய சட்டப்பிரிவான 120(b) பொருந்தாது என நீதிபதி கே.டி.தாமஸ் இப்பொழுது கூறியிருக்கிறார். அப்போது அந்த வயர்லஸ் பேச்சை மேம்போக்காக எடுத்துக் கொண்டோம் என்று அவர் இப்பொழுது பேசுகிறார்.
இந்த இரண்டு அதிகாரிகளும் இப்பொழுது கூறுபவற்றை, அப்பொழுதே கணக்கில் எடுத்துக் கொண்டிருந்தால், யாருக்குமே இந்த வழக்கில் தண்டனை கிடைத்திருக்காது. இந்த வழக்கை வைத்துக் கொண்டு, இவர்களை மட்டுமல்ல ஒரு இனத்தையே அல்லவா குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினார்கள்? தமிழ்நாட்டுத் தமிழர்களை இந்திய அரசும், வடநாட்டு ஊடகங்களும் குற்றப் பரம்பரைப் போல் நடத்தின; நடத்துகின்றன. தமிழீழத்திற்குப் படையனுப்பி, ஒன்றரை இலட்சம் மக்களை துடிக்கத் துடிக்க இனப்படுகொலை செய்தார்கள். இந்தக் கொலையை வைத்து, அம்மையார் செயலலிதா, இராசீவ்வின் மறைவையொட்டி என்ன ஆட்டம் ஆடினார்? கூட்டங்களுக்குத் தடை, ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, அய்யா பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்டவர்களுக்கு பொடா சட்டத்தின் கீழ் சிறை, விடுதலைப்புலிகள் மீதான தடை என செயலலிதா ஆடிய ஆட்டமென்ன? கருணாநிதி ஆடிய ஆட்டமென்ன?
தமிழீழத்தில் இனப்படுகொலைப் போர் நடைபெற்ற 2008-2009ஆம் ஆண்டுகளில், போர் நிறுத்தம் கோரி பேசியதற்காக எத்தனை பேரைக் கைது செய்தார் கருணாநிதி? தோழர் கொளத்துர் மணி மீது, இயக்குநர் சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டது. ஈரோட்டில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஏற்பாடு செய்த ஒரு பொதுக்கூட்டத்தில், போர் நிறுத்தம் கோரி பேசியதற்காக என்னையும், தோழர் கொளத்தூர் மணி அவர்களையும், இயக்குநர் சீமான் அவர்களையும் கோவைச் சிறையில் அடைத்தார் கருணாநிதி.
அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் அப்பாவிகள் என்ற உண்மை இப்போது வெளிவந்துவிட்டதே, என்ன செய்யப் போகிறீர்கள்?
இராசீவ் கொலை வழக்கில் மறுவிசாரணையெல்லாம் தேவையில்லை. இந்தியக் குடியரசுத் தலைவருக்கு இந்திய அரசமைப்புச் சட்ட விதி 72 வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி,தூக்குத் தண்டனையிலுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தனையும், வாழ்நாள்தண்டனையிலுள்ள நளினி, இராபர்ட் பயஸ், அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன், ஜெயகுமார் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். நீதிபதி கே.டி.தாமஸ், அதிகாரி தியாகராஜன் ஆகியோர் வாக்குமூலங்கள் வழங்கிய பிறகும், இவர்கள் அனைவரும் சிறையில் இருப்பது சட்ட விரோதம்! எனவே, அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? ஆரியத்தின் சூழ்ச்சி நடக்கிறதா?
குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மனித உரிமை வல்லுநர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து, இந்த வழக்கில் நடந்தத் தவறுகளை விசாரிக்க வேண்டும். தவறு செய்த அதிகாரிகளைத் தண்டிக்க வேண்டும். அதில் முதலில் விசாரிக்கப்பட வேண்டியவர், சி.பி.ஐ. விசாரணைக் குழுத் தலைவர் - தமிழ்நாட்டுத் தடியர் கார்த்திகேயன்.
மரண தண்டனைக்கு எதிராக இப்பொழுது பேசி வரும் அவர், அண்மையில் புதிய தொலைக்காட்சி ‘நேர்படப்பேசு’ விவாதத்தில், இராசீவ் கொலை வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டுமென கூறியதற்கு ஆத்திரத்துடன் எதிர்த்துப் பேசினார். “என்ன விளையாடுறீங்களா? சட்டம், கோர்ட் எல்லாம் நீங்க வச்சதா? மறுவிசாரணை செய்ய முடியாது” என்றார். நீதிபதி கே.டி.தாமஸ், தியாகராஜன் ஆகியோர் மனச்சான்று உறுத்தி உண்மையைப் பேசியிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் பிறந்த தடியரான கார்த்திகேயன், நடுநிலையோடு நடந்து கொள்ளவில்லையே ஏன்? அவருக்கு பின்னாலிருந்து இயக்கியவர்கள் யார்? இவற்றையெல்லாம்விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டும்.
தூக்குத் தண்டனையிலிருக்கும், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரையும், வாழ்நாள் தண்டனை பெற்று 22 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் நளினி, இராபர்ட் பயஸ், அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன், ஜெயகுமார் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் அனைவருக்கும் இழப்பீடாக இந்திய அரசு, தலா 10 கோடி ரூபாய் வழங்க வேண்டும். தண்டனைக் காலம் முடிந்து விடுதலையாகிவிட்டதாக அறிவிக்கப்பட்ட 19 பேருக்கும் தலா 5 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை இந்திய அரசு வழங்க வேண்டும்.
இது நடந்தால் தான், இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாகப் பொருள். இல்லையெனில், இங்கு தமிழினத்திற்கு எதிரான ஆரிய சூழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மையாகும்.
மாவீரர் நாளான இன்று, அந்த மாவீரர்களுக்குக் காணிக்கை செலுத்தும் விதமாக, இராசீவ் கொலை வழக்கு குறித்த உண்மைகளை அம்பலப்படுத்தும் வகையில், நம்முடைய இளைஞர்கள் பெருமுயற்சி செய்து இந்த ‘உயிர்வலி’ ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார்கள். தியாகராஜனுடைய பேட்டியை பி.பி.சி. வானொலி எடுத்து வெளியிட்டிருக்கிறது. இவர்களுக்கு நம் பாராட்டுகள்!
தமிழ்நாட்டில் என்ன நிலைமை? இனப்படுகொலைப் போரில் இறந்து போன தமிழீழத் தமிழர்களுக்கான ஒரு நினைவுச் சின்னமாக எழுப்பப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தை, செயலலிதா அரசு இடித்திருக்கிறது. இதற்கு, இந்திய அரசின் தூண்டுதல் பின்னணியில் இருந்திருக்கலாம். அவ்வப்போது தமிழீழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுவதாகக் காட்டிக் கொள்கிறாரே நடுவண் அமைச்சர் ஜி.கே.வாசன், அவர் அண்மையில் கருத்துத் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் முற்றம் தமிழகத்தில் தேவையில்லை என்றார். காங்கிரசுக் கட்சி கூடத்தான் தமிழர்களுக்குத் தேவையில்லை! அந்த வேண்டாத கட்சியை தலையில் சுமக்கிறானே தமிழன்! முள்ளிவாய்க்கால் முற்றம் தமிழ்நாட்டில் வைப்பதில் என்ன கேடு? தமிழ்நாட்டில் வைக்காமல் வேறு எந்த நாட்டில் வைப்பது?
ஆனால், வெறும் இந்திய அரசின் தூண்டுதல் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அ.தி.மு.க. தலைவி செயலலிதாவுக்கு இயல்பிலேயே இருக்கும் தமிழ் மொழி – தமிழ் இனத்திற்கு எதிரானக் காழ்ப்புணர்ச்சியால் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்திருக்கிறார்.
முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு விழாவுக்குத் தடை கேட்டு மதுரை உயர்நீதிமன்றம் வரைச் சென்றது தமிழக அரசு. அங்கு முதலில் தீர்ப்பு வழங்கிய ஒற்றை நீதிபதி, நிகழ்ச்சி நடத்தத் தடையில்லை என்று கூறி அனுமதி வழங்குமாறு காவல்துறைக்குக் கட்டளையிட்டார்.அதன்பிறகு, அங்கேயே இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விடம், விழாவுக்குத் தடை கோரிதமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இரு நீதிபதிகளும் விழாவுக்கு அனுமதி வழங்கக் கட்டளையிட்டனர்.
நடுவண் அரசின் தூண்டுதல் மட்டும் தான் காரணமென்றால், தமிழக அரசு, நீதிமன்ற உத்தரவைக்காட்டி, நிகழ்ச்சிக்குத் தொந்தரவு கொடுக்காமல் ஒதுங்கியிருக்கலாம். ஆனால், உச்சநீதிமன்றத்திற்கும் சென்று, விழாவுக்குத் தடை கோரியது தமிழக அரசு. உச்சநீதிமன்றம் உடனடியாக அவ்வழக்கை எடுக்க மறுத்தது. திறப்பு விழா சிறப்பாக முடிந்த பின்,முள்ளிவாய்க்கால் முற்றத்தை மூடி முத்திரையிடுவதற்கு ஆணை தருமாறு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. அவ்வழக்கையும் உடனடியாக எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த நிலையில் தான், விழா முடிந்த பிறகு நவம்பர் 13 அன்று அதிகாலை 5.30 மணியளில் முற்றத்தைத் திருட்டுத் தனமாக, சட்டவிரோதமாக இடிக்க முற்பட்டது செயலலிதா அரசு. அன்றைக்கு தஞ்சையில் இருந்த எனக்கு, காலையில் அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் கைபேசியில் பேசினார். “முற்றத்தை இடிக்கிறார்கள் சீக்கிரம் வாருங்கள்” என அய்யா நெடுமாறன் கூறியது, மதுரையில் கண்ணிகி எழுப்பிய ஓலம் போல் இருந்தது.
உடனே தோழர்களை அழைத்துக் கொண்டு அங்கு சென்றோம். த.தே.பொ.க., ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி, சி.பி.ஐ. கட்சி ஆகியவற்றின் தோழர்கள் அங்கு, அந்த அதிகாலையிலும் திரண்டுவிட்டார்கள். அங்கு காவல்துறை எங்களை உள்ளே செல்ல விடாமல் இழுத்துப் பிடித்துத் தள்ளியது. தள்ளுமுள்ளு நடந்தது. அந்த வேளையில், கைலிபனியனுடன் அங்கு வந்த திரு. பழ.நெடுமாறன் அவர்கள், எனது கையை இழுத்துப் பிடித்து, “என்னுடன் வாருங்கள், போலீசுடன் மோத வேண்டாம், சட்டப்படி பார்த்தக் கொள்வோம்” என்றார். அங்கு நடந்த இடிப்பு அட்டூழியங்களை நாற்காலியில் உட்கார்ந்து அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர், அரசு அதிகாரிகளை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும், அரசின் சொத்துகளை இடித்துத் தகர்த்ததாகவும், இன்னும் பல பிரிவுகளையும் சேர்த்து அன்று, அய்யா நெடுமாறன் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவருடன் சேர்த்து, 82 பேர்களையும் கைது செய்தனர். திருச்சி நடுவண் சிறையில் அடைத்தனர்.
காலனியாட்சிக் காலத்தில், காந்தியார் எத்தனையோ போராட்டங்கள் நடத்தினார். கொடுங்கோல் ஆட்சி செய்த வெள்ளையர்கள் கூட, காந்தியார் கத்தியால் குத்தச் சொன்னார் என்று பொய் வழக்குப் போட்டதில்லை. ஆனால் செயலலிதா அரசு, நெடுமாறன் அரசு அதிகாரிகளுக்கு எதிராகக் கொலை மிரட்டல் விட்டார் என்றும், மண்வெட்டி – கடப்பாரையுடன் அரசுக் கட்டுமானத்தை இடித்தார் என்றும் பொய் வழக்குப் போடுகிறது. என்னென்ன பிரவுகளில் வழக்குப் போட வேண்டுமென்பது, சென்னையிலிருந்து தஞ்சாவூர் காவல்துறைக்கு கட்டளையிடப்பட்டது. இதெல்லாம், செயலலிதாவின் கைவரிசை அல்லாமல் வேறு யாருடைய வேலை? தமிழ் இனத்தின் மீது செயலலிதாவுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சி தான், இதற்கெல்லாம் காரணம். தமிழர்களின் நினைவுச் சின்னங்கள், பெருமிதத்திற்குரிய அடையாளங்கள் எதையும் செயலலிதாவால் சகித்துக் கொள்ள முடியாது.
இப்பொழுது, சென்னை கடற்கரைச் சாலையிலிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி சிலையை அகற்றத் தமிழக அரசு முனைகிறது. சிவாஜி, தமிழ் இனத்தின் கலைப்பெட்டகமாக, கலையுலக ஆற்றலாக, தலைச்சிறந்த நடிகராக வெளிப்பட்டவர். அந்த வகையில், தமிழினத்தின் அடையாளச் சின்னமாக சிவாஜி கணேசன் இருக்கிறார். சிவாஜி, தமிழ்த் திரையுலகின் பிதாமகன் ஆவார். அவரது சிலையால் வலது பக்கம் திரும்ப முடியாமல், இடது பக்கம் திரும்ப முடியாமல் போக்குவரத்துக்கு இடைஞ்சல் என தமிழக அரசுச் சொல்வது கற்பனை.
அம்மையார் செயலலிதா அவர்களே, சிவாஜி சிலையல்ல இடைஞ்சல். நீங்கள் சாலையில் செல்கின்ற போது தான், பொதுமக்களுக்கு சாலையோரம் எங்கும் இடைஞ்சல். சாலைகளெங்கும் அ.தி.மு.க.வினர், தமிழில், ஆங்கிலத்தில், தெலுங்கில், மலையாளத்தில் என உங்களுக்கு பாதபூஜை செய்து பிளக்ஸ் போர்டுகளை வைக்கிறார்கள். அவற்றால் பொது மக்களுக்கு, ஊர்தி ஓட்டுநர்களுக்கு எவ்வளவோ இடையூறு ஏற்படுகிறது. இதையெல்லாம் நீங்கள் அகற்றச் சொல்லாமல், அருவருக்கத்தக்க வகையில் இரசித்து மகிழ்கிறீர்கள், நடிகர் திலகம் சிவாஜி சிலையை அகற்றச் சொல்லலாமா?
நடிகர் சிவாஜி சிலையை அகற்றிவிட்ட பிறகு, அம்மையார் கண்ணகி சிலையை நோக்கித் திரும்புவார் என நான் ஐயப்படுகிறேன். ஏற்கெனவே, கண்ணகி சிலையை அம்மையார் அகற்றினார். பின்னர் வந்த தி.மு.க. அரசு, அதை அதே இடத்தில் நிறுவியது. இப்பொழுது, சிவாஜி சிலையை அகற்ற நாம் விட்டுவிட்டோம் என்றால், அடுத்து அதே துணிச்சலில் அவர்கண்ணகியை நோக்கித்தான் பாய்வார்.
ஏனெனில், தமிழ் இனம், மொழி என்றாலே ஒவ்வாமை ஏற்பட்டுவிடும் செயலலிதாவுக்கு. தமிழர்களின் நினைவுச் சின்னங்களை அகற்ற வேண்டுமென்ற காழ்ப்புணர்ச்சி இருக்கிறது. அதுவே இதற்கான காரணம்!
எனவே, தமிழ்நாட்டு இளைஞர்கள், தமிழ் இனத்துக்குக் கங்காணி வேலை பார்க்கும் கருணாநிதி – செயலலிதா ஆகியோரைப் புரிந்து கொண்டு புறந்தள்ளி, மாற்று அரசியலைக் கையிலெடுக்க வேண்டும். தமிழ் இனத்திற்கான, இன அரசியலைக் கையிலெடுக்க வேண்டும். கட்சிகளைக் கடந்து நாம் ஒன்று சேர வேண்டும்.
தமிழக முதல்வரும், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் சட்டப் பேரவையில் ஒருநாளாவது ஒன்றாக அமர்ந்து பேசியிருக்கிறார்களா? இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது இந்த அநாகரீகம் உண்டா? இவர்களைத் தேர்ந்தெடுத்தத் தமிழ் மக்கள் காட்டுமிராண்டிகளா? முக்கியப் பிரச்சினைகளுக்கு முதலமைச்சர் செயலலிதா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதே இல்லை. இவர்கள் சந்தித்துக் கொண்டால், ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு செத்துவிடுவார்களா என்ன? ஏன் கூடிப் பேசக் கூடாது?
காவிரிச் சிக்கலில் அழுத்தம் கொடுக்க, தமிழக முதல்வர் தலைமையில், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவாகச் சென்று இந்தியப் பிரதமரைச் சந்தித்து முறையிட வேண்டுமென நாங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், செயலலிதா அனைத்தக் கட்சிக் கூட்டம் கூட்டுவதில்லை.
இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைகக் வேண்டுமென வலியுறுத்தியும், தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி காவிரி உரிமைக்கு தமிழகம் தழுவிய பேரணிகளை நடத்த வேண்டுமென வலியுறுத்தியும் கர்நாடகம் தமிழகத்திற்குத் தர வேண்டிய 26 டி.எம்.சி. காவிரி நீர் பாக்கியை உடனே பெற்றுத் தர வேண்டுமெனக் கோரியும், வருகின்ற திசம்பர் 3ஆம் நாள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிதம்பரம் ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடத்தவுள்ளோம். இதில், விவசாயிகள் சங்கங்களும், ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, த.தே.பொ.க., விடுதலைத் தமிழ்ப்புலிகள், தமிழர் தேசிய இயக்கம் போன்ற அரசியல் இயக்கங்களும் பங்கு கொள்கின்றன.
தமிழ் இனத்திற்கு என்னக் கேடு நேர்ந்தாலும் தமிழர்கள் ஒன்று சேர மாட்டார்கள் என்ற இந்த சூழல் தான் சிங்களனுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. கன்னடனுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது.இந்திய அரசுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. செயலலிதாவும் – கருணாநிதியும் தான் நமக்குப் பாதுகாப்பு என்று அவர்கள் கருதுகிறார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து நம்மை எதிர்த்துவிடாமல் பிரித்து வைத்து, தமிழ்நாட்டிலேயே நமக்குப் பாதுகாப்பான அரண்களாக செயலலிதாவும், கருணாநிதியும் விளங்குகிறார்கள் என்ற அவர்கள் நினைக்கிறார்கள்.
எனவே, தமிழ்நாட்டு இளைஞர்கள் இதிலிருந்தெல்லாம் பாடம் கற்றுக் கொண்டு, கட்சி கடந்த தமிழர் ஒற்றுமையை, இன அரசியலை மாற்று அரசியலாகக் கையிலெடுக்க வேண்டும்.
இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.
தொழிற்சாலைகள் மிகுந்திருந்த வடசென்னை பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல்லாயிரக்கணக்கான ம.தி.மு.க.வினரும், தமிழின உணர்வாளர்களும் எழுச்சியுடன் பங்கேற்றனர்.
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)
நியூசிலாந்தில் நடைபெற்ற மாவீரர் நாள்
மாவீரர் நாள் தமிழீழ விடுதலைக்காகப் போராடி தமது இன்னுயிரை ஈந்த வீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் ஒரு நாள்ஆகும். இம்மாவீரர்கள் எம் வரலாற்றின் அழியா நினைவுச் சின்னங்கள். எம்மினம் வாழ தம் வாழ்வை தியாகம் செய்த தியாச்சுடர்கள்.இவர்களின் உன்னத தியாகத்தை போற்ற எமக்கு கிடைத்த ஒரு உன்னத நாளே இம் மாவீரர் நாள். இம்மாவீரர் நாள் வழமை போல்இம்முறையும் நியூசிலாந்து மண்ணிலே கார்த்திகை மாதம் 27ம் திகதி புதன்கிழமை இ மாலை 6.30 மணியளவில் , Owairaka Primary School, 113-115 Richardson Road, Mt Albert, Auckland மண்டபத்தில் நடைபெற்றது.
மாவீரர் கேப்டன் கண்ணன் அவர்களின் அன்னை திருமதிகணபதிப்பிள்ளை அவர்கள் பொதுச்சுடரை ஏற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமாகியது. அதனை தொடர்ந்து நியூசிலாந்துதேசியக் கொடியினை மகளீர் அணியின் பொறுப்பாளர் சுமதி அவர்கள் ஏற்றிவைத்தார்இ தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை மாவீரர்திலகா அவர்களின் சகோதரன் துறை மாஸ்டர் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து ஈகைச்சுடரினை மாவீரர் ஆரதனைஅவர்களின் சகோதரர் கேதீஸ்வரன் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து மக்கள் அனைவரும் எழுந்து அகவணக்கம்செலுத்தினர்.
அதனை தொடர்ந்து மக்கள் அனைவரும் மலர் தூவி தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்துமாவீரர்நாள் அறிக்கையினை குமரன் அவர்கள் வாசித்தார். தொடர்ந்து தேசிய தலைவர் அவர்களின் 2008ம் ஆண்டின் மாவீரர் நாள்உரையின் ஒரு பகுதி திரையில் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு விருந்தினராய் கலந்துகொண்ட ளுஆநு-வாசினாதன் அவர்களின்உரையும் இடம்பெற்றது அதனை தொடர்ந்து எமக்கு நடந்த கொடுமைகளுக்கு நீதி கேட்கும் விதமாய் அமைந்த சிறார்களின் நடனம்இடம்பெற்றது. இதனை தொடர்ந்து சிறுவன் யிப்சன் அவர்களின் பேச்சும் இ அதனை தொடர்ந்து ஹரிணி அவர்களின் கவிதையும் இ பிரசாத்அவர்களின் பேச்சும் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து தமிழ் இளையோர் அமைப்பினால் ஒருங்கமைக்கப்பட்ட மாவீரர் தின ஓவியப்போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வுகள் இடம் பெற்றன.தொடர்ந்து ஏனைய நிகழ்வுகள் யாவும் இடைவேளை தொடர்ந்துஇடம்பெற்றது.இடைவேளையை தொடர்ந்து கேசவன் அவர்களின் உரையும்இ தொடர்ந்து கீர்த்தனன் அவர்களின் உரையும் இ தொடர்ந்துபிரேம் அவர்களின் உரையும் இடம்பெற்றதுஇ இறுதிக்கலை நிகழ்வாக "உறங்காத விழிகள்" என்ற நாடகம் அரங்கேறியது. அதனைதொடர்ந்து தமிழ் ஒருங்கமைப்பு நிர்வாக பொறுப்பாளர் கௌரீசன் அவர்களால் நியூசிலாந்துக் கொடியும் தமிழ் ஒருங்கமைப்பு பொறுப்பாளர் அசோக் அவர்களால் தமிழீழ தேசியக் கொடியும் இறக்கப்பட்டது. இறுதியாக தமிழீழ எழுச்சிப்பாடல் இசைத்ததை தொடர்ந்துநிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. இந்நிகழ்வில் நூற்றுக்கனக்கான மக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .





மாவீரர் கேப்டன் கண்ணன் அவர்களின் அன்னை திருமதிகணபதிப்பிள்ளை அவர்கள் பொதுச்சுடரை ஏற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமாகியது. அதனை தொடர்ந்து நியூசிலாந்துதேசியக் கொடியினை மகளீர் அணியின் பொறுப்பாளர் சுமதி அவர்கள் ஏற்றிவைத்தார்இ தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை மாவீரர்திலகா அவர்களின் சகோதரன் துறை மாஸ்டர் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து ஈகைச்சுடரினை மாவீரர் ஆரதனைஅவர்களின் சகோதரர் கேதீஸ்வரன் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து மக்கள் அனைவரும் எழுந்து அகவணக்கம்செலுத்தினர்.
அதனை தொடர்ந்து மக்கள் அனைவரும் மலர் தூவி தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்துமாவீரர்நாள் அறிக்கையினை குமரன் அவர்கள் வாசித்தார். தொடர்ந்து தேசிய தலைவர் அவர்களின் 2008ம் ஆண்டின் மாவீரர் நாள்உரையின் ஒரு பகுதி திரையில் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு விருந்தினராய் கலந்துகொண்ட ளுஆநு-வாசினாதன் அவர்களின்உரையும் இடம்பெற்றது அதனை தொடர்ந்து எமக்கு நடந்த கொடுமைகளுக்கு நீதி கேட்கும் விதமாய் அமைந்த சிறார்களின் நடனம்இடம்பெற்றது. இதனை தொடர்ந்து சிறுவன் யிப்சன் அவர்களின் பேச்சும் இ அதனை தொடர்ந்து ஹரிணி அவர்களின் கவிதையும் இ பிரசாத்அவர்களின் பேச்சும் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து தமிழ் இளையோர் அமைப்பினால் ஒருங்கமைக்கப்பட்ட மாவீரர் தின ஓவியப்போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வுகள் இடம் பெற்றன.தொடர்ந்து ஏனைய நிகழ்வுகள் யாவும் இடைவேளை தொடர்ந்துஇடம்பெற்றது.இடைவேளையை தொடர்ந்து கேசவன் அவர்களின் உரையும்இ தொடர்ந்து கீர்த்தனன் அவர்களின் உரையும் இ தொடர்ந்துபிரேம் அவர்களின் உரையும் இடம்பெற்றதுஇ இறுதிக்கலை நிகழ்வாக "உறங்காத விழிகள்" என்ற நாடகம் அரங்கேறியது. அதனைதொடர்ந்து தமிழ் ஒருங்கமைப்பு நிர்வாக பொறுப்பாளர் கௌரீசன் அவர்களால் நியூசிலாந்துக் கொடியும் தமிழ் ஒருங்கமைப்பு பொறுப்பாளர் அசோக் அவர்களால் தமிழீழ தேசியக் கொடியும் இறக்கப்பட்டது. இறுதியாக தமிழீழ எழுச்சிப்பாடல் இசைத்ததை தொடர்ந்துநிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. இந்நிகழ்வில் நூற்றுக்கனக்கான மக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .





Thursday, November 28, 2013
புதிய மெட்ரோ ரயில்கள்: 3 நாளில் கோயம்பேடு வரும்'
பிரேசிலில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்ட 2 மெட்ரோ ரயில்கள் துறைமுகத்தில் இருந்து 3 நாள்களில் கோயம்பேடு பணிமனைக்கு கொண்டு செல்லப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரேசிலில் உள்ள சாபாலா நகரில் சென்னை மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் முதல் மெட்ரோ ரயில் கடந்த மே மாதம் சென்னை வந்தடைந்தது. மேலும் 2 ரயில்கள் 2 வாரத்துக்கு முன்பாக சான்டோஸ் துறைமுகத்தில் இருந்து கப்பலில் ஏற்றப்பட்டன. அந்தக் கப்பல் புதன்கிழமை காலை சென்னை துறைமுகம் வந்தடைந்தது. மெட்ரோ ரயில் பெட்டிகள் ராட்சத கிரேன்களின் உதவியுடன் கப்பலில் இருந்து இறக்கி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த ரயில் பெட்டிகள், கனகரக உபகரணங்களை சுமந்து செல்லும் பிரத்யேக டிரய்லர் லாரி மூலம் 3 நாள்களில் துறைமுகத்தில் இருந்து கோயம்பேடு பணிமனைக்கு கொண்டு செல்லப்படும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை துறைமுகத்தில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக 10 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில் பெட்டிகள் கொண்டு செல்லப்படும். இதற்காக சாலையில் நள்ளிரவு போக்குவரத்து ஒழுங்குப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயில் நிறுவனத்தில் டெக்னீசியன் பணி
செயில் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னீசியன்
மொத்த காலியிடங்கள்: 185 டிப்ளமோவுக்கு - 124, ஐடிஐ - 61
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மெட்டலர்ஜி, சிவில், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது வெல்டர், பிட்டர், எலக்ட்ரீசியன், பிளம்பர் போன்ற எதாவதொரு துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.sail.shine.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.12.2013
கர்நாடகாவில் கிராம கணக்காளர் பணி
கர்நாடகா மாநிலம் மாண்டி மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம கணக்காளர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது கர்நாடக வருவாய்த்துறை அலுவலகம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 90
பணி: கிராம கணக்காளர் அதிகாரி(Village Accountant Officer)
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயுதுவரம்பு: பொது பிரிவினருக்கு 35 வயதும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 38 வயதும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.200,
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.125. இதனை கணக்கு எண். 64050199087 SBM ADB Branch MANDYA-வில் மாற்றத் தக்கவகையில் செலுத்த வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 21000
விண்ணப்பிக்கும் முறை: www.mandyava.kar.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.12.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mandyava.kar.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பணி
தமிழகத்தின் தலைமையிடமான சென்னையில் செயல்பட்டு வரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
பணிவாரியான காலியிடங்கள் விவரம்:
மொத்த காலியிடங்கள் 268
01. Personal Assistant to the Hon’ble Judge - 57
02. Personal Assistant - 07
03. Assistant - 37
04. Computer Operator - 28
05. Typist - 139
வயதுவரம்பு: 22.11.2013 தேதிப்படி 30-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: எதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை:
01. Personal Asst பணிக்கு Written Examination, Skill test and Oral Test.
02. Asst & Computer operator பணிக்கு Written Examination and Oral test.
03. Typist பணிக்கு Written Examination & Skill test மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்:
பணி 1 க்கு ரூ. 15,600 - 39,100 + Grade Pay ரூ. 5400
பணி 2 க்கு ரூ. 9,300 - 34,800 + Grade Pay ரூ. 4,600
பணி 3 க்கு ரூ. 5,200 - 20,200 + Grade Pay ரூ. 2600
பணி 4 க்கு ரூ. 5,200 - 20,200 + Grade Pay ரூ. 2800
பணி 5 க்கு ரூ. 5200 - 20,200 + Grade Pay ரூ. 2400
தேர்வுக் கட்டணம்: ரூ.150
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2013
வங்கிகள் மூலம் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 24.12.2013
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 23.02.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
குரூப் 4: 222 காலி பணியிடங்களுக்கு டிசம்பர் 6-இல் கலந்தாய்வு
குரூப் 4 தொகுதியில் காலியாகவுள்ள 222 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.
அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்தில் இந்தக் கலந்தாய்வு நடைபெறும் என்று தேர்வாணையச் செயலாளர் விஜயகுமார் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.
குரூப் 4 தொகுதியின் கீழ் உள்ள இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் பதவிகளுக்குக் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை 7 ஆம் தேதியன்று தேர்வு நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களில் இதுவரை காலியாகவுள்ள 222 இடங்களுக்கான ஐந்தாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தற்போது நடத்தப்படவுள்ளது.
இந்தக் கலந்தாய்வுக்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் அழைக்கப்படுவர். அதுகுறித்த விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை கலந்தாய்வுக்கு வரும் போது எடுத்து வர வேண்டும் என்று செயலர் விஜயகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
ஐடிஐ தகுதி பாண்டிச்சேரி் பல்கலைக்கழகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கம்ப்யூட்டர் மையம் நடத்தும் PASAA டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறுகிறது. நல்ல
முறையில் இந்த பயிற்சியை முடிப்பவர்கள் அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சகத்தினால் நடத்தப்படும் அகில இந்திய டிரேடு தேர்வில் கலந்து
கொள்ளலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி: PASAA Trade Apprenticeship Tranining Programme
பயிற்சி காலம்: 1 வருடம்
ஊக்கத்தொகை: மாதம் ரூ.3000
தகுதி: +2 தேர்ச்சியுடன் COPA(Computer Operator & Programming Assistant) டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.pondiuni.edu.in என்றஇணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அல்லது இணையத்தின் மூலம்
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் படிவத்தினை பிரிண்ட் அவுட் செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் சான்று பெற்று அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
ஆன்லானில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் நகல் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, Pondicherry University, R.V.Nagar, Kalapet, Puducherry - 605014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.pondiuni.edu.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.12.2013
பொறியியல் பட்டதாரிகளுக்கு BEL நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி
பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (BEL) அளிக்கப்பட உள்ள ஒரு வருட கிராஜூவேட் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு தகுதியான
பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கிராஜூவேட் அப்ரண்டிஸ்
பயிற்சி காலம்: 1 வருடம்
வயதுவரம்பு: 12.12.2013 தேதிப்படி 25-க்குள் இருத்த வேண்டும்.
மாத உதவித்தொகை: ரூ.3,560
கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன், மெக்கானிக்கல்,
இண்டஸ்ட்ரியல் புரடக்சன், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், சிவில், என்விரான்மென்டல் போன்ற பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக்
முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://bghrrecruitment.com/Default.aspx?recid=73 என்ற முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பொறியியல் பிரிவில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். 01.01.2012-க்குப் பிறகு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்
மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bel-india.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ஐடிஐ முடித்தவர்களுக்கு ராணுவ வாகன தயாரிப்பு தொழிற்சாலையில் டெக்னீசியன் பணி
இந்திய ஆயுத தொழிற்சாலையின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள ராணுவ வாகன தயாரிப்பு தொழிற்சாலையில் குரூப் 'C' பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 342
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: Examiner Engg -13, Fitter Automobile - 41, Fitter Genl - 53, Fitter Electric - 02, Fitter Investment - 01, Fitter T & G - 01, Grinder - 10, Machinist - 137,
Mason - 01, Miller -15, Millwright - 11, painter - 06, Turner - 39, Welder -12
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + குரேடு சம்பளம் ரூ.1,800
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் vfj.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.12.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய vfj.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ரிசர்வ் வங்கியில் உதவி மேலாளர் பணி
இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) Assistant Manager (Security) 'A' பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Manager (Security) 'A'
மொத்த காலியிடங்கள்: 34
வயதுவரம்பு: 01.11.2013 தேதிப்படி 25 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.17,100 - 33,200 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: இராணும், கப்பல் படை, விமானப்படைகளில் அதிகாரி அந்தஸ்தில் 5 வருடம் பணியாற்றிருக்க வேண்டும் அல்லது துணை ராணுவ படைகளான BSF,
CRPF,ITB,CISF,SSB, RPF, SPF, Defence Security Force, Special Frontier Force and Home Guards-ல் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் அந்தஸ்தில் ஐந்து வருடம் பணியாற்றிய அனுபவம்
பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் கோடுகளும்: பெங்களூர் -12, கொல்கத்தா - 15, சென்னை - 17, குவஹாத்தி - 18, ஹைதராபாத் - 19, ஜம்மு - 21, மும்பை - 25,
புதுதில்லி - 27.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.12.2013
ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 21.12.2013
விண்ணப்ப பிரிண்ட அவுட் மற்றும் சான்றிதழ் நகல்கள் சாதாரண அஞ்சலில் அனுப்புவதற்கான கடைசி தேதி: 24.12.2013
விண்ணப்ப பிரிண்ட் அவுட் மற்றும் சான்றிதழ் நகல்கள் அஞ்சலில் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Thr General Manager, Reserve Bank of India Services Board, Post Bag
No.4618, Mumbai Central Post Office, Mumbai - 400008.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rbi.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
தில்லி AIIMS-ல் பல்வேறு பணி
தில்லி செயல்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிலையத்தில் (All India Institute of Medical Sciences) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Security Officer
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4,200
தகுதி: பட்டப்படிப்பு முடித்து துணை ராணுவம் அல்லது ராணுவத்தின் சுபேதார் அல்லது Inspector of Police-ல் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Yoga Instructor
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4,600
தகுதி: பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அத்துடன் யோகா படிப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கற்பித்தல் மற்றும் பயிற்சி அளிப்பதில் 10 வருட அனுபவம்
பெற்றிருக்க வேண்டும். Yoga in Orthopaedics-ல் அனுபவம் பெற்றிருத்தல் விரும்பத்தக்கது.
பணி: Programmer
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4,600
தகுதி: கணினி அறிவியல் பிரிவில் பி.இ. அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். அல்லது அறிவியில், கணித பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
பணி: Librarian (Grade III)
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4,200
தகுதி: பிஎஸ்சி பட்டத்துடன் நூலக அறிவியலில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில்
25 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பதும், மெடிக்கல் லைப்ரரியில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருப்பதும் விரும்பத்தக்கது.
பணி: Dental Technician (Grade II)
காலியிடங்கள்: 08
வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.2,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன்Dental Hygiene/ Dental Mechanic/Maxillo - Facial Prosthesis and Orthodentic Appliances பிரிவுகளில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
Dental கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். அதே துறையில் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.100. இதனை AIIMS என்ற பெயரில் Delhi/New Delhi
மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.aiims.edu என்ற இணையதளத்தின் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன்
தேவையான சான்றிதழ் நகல் அட்டெஸ்ட் பெறப்பட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Sr.Administrative Officer (Recruitment), All India Institute of Medical Science, Ansari Nagar, New Delhi -
110608.
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.12.2013
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்களைக்கழகத்தில் இணை பேராசிரியர் பணி
சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்களைக் கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இணை பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Associate Professor
மொத்த காலியிடங்கள்: 12
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. PEDAGOGICAL SCIENCES - 02
02. VALUE EDUCATION - 02
03. EDUCATIONAL PSYCHOLOGY - 02
04. EDUCATIONAL TECHNOLOGY - 02
05. CURRICULUM PLANNING AND EVALUATION - 02
06. EDUCATIONAL PALANNING AND ADMINISTRATION - 02
மேலும் கல்வித்தகுதி மற்றும் பொதுவான தகவல்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.tnteu.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.12.2013
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: TAMILNADU TEACHERS EDUCATION UNIVERSITY, Lady Willingdon College Campus, Kamarajar Salai,
Chennai - 600005.
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் கிளார்க் பணி
தமிழகத்தின் தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கிளார்க்
வயதுவரம்பு 31.10.2013 தேதிப்படி பட்டதாரிகிளுக்கு 24-க்குள்ளும், முதுகலை பட்டதாரிகளுக்கு 26-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் கலை, அறிவியல், வணிகவியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருடம் புரபேஷனரி காலமா கருதப்படும். அப்போது மாதம் ரூ.16,006 வழங்கப்படும். அதன்பிறகு ரூ.7,200 - 20,100 என்ற விகிதத்தில் சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.150. இதனை Tamilnadu Mercasntile Bank Ltd என்ற பெயருக்கு Toothukudi/Tuticorin அல்லது
Tirunelveli-ல் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையாக எடுக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் முறையில் நடைபெறும் தேர்வில் தேர்ச்சி மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.tmb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதன் இரண்டு பிரிண்ட்
அவுட் எடுத்து அதில் ஒன்றில் கலர் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி கையெழுத்திட வேண்டும். மற்றொன்றை கைவசம் வைத்துக்கொள்ளவும்.
பிரிண்ட் அவுட்டுடன் டி.டி, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், +2 மதிப்பெண் சான்றிதழ் நகலில் சுயமாக அட்டெஸ்ட் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Human Resourcse Development, Tamilnadu Mercantile Bank Ltd., Head Office, 52, V.E.Road, Thoothukudi-628002.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tmb.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.12.2013
ஆன்லைன் விண்ணப்ப படிவத்தின் பிரிண்ட் அவுட் மற்றும் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அனுப்புவதற்கான கடைசி தேதி: 09.12.2013
மூளைக்காய்ச்சல் - 2,830 பேர் பலி
உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளில், குழந்தைகளுக்கு, மூளைக்காய்ச்சல், மூளை வீக்கம் நோய் பாதிப்பு உள்ளது. தினமும், ஏராளமான குழந்தைகள் இந்த கொடிய நோய்க்கு பலியாகி வருகின்றன.
கோரக்பூரின், அரசு மருத்துவமனையில் நேற்று நான்கு குழந்தைகள் இறந்ததை அடுத்து, இந்த ஆண்டில், இந்த நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை, 2,830 ஆக உயர்ந்துள்ளது. 300 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றன. இத்தனை குழந்தைகள் இறந்த பிறகும், ஆளும், முதல்வர், அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி அரசு, எவ்வித சிறப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அடுத்தகட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்கும் : பழ.நெடுமாறன் பேச்சு - படங்கள்
நவம்பர் 27 மாவீரர் தினம். உலகம் முழுவதும் உள்ள உணர்வாளர்கள் அனுசரிக்கும் நாள். இந்த நாளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர் தின அரங்க கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து கலந்து கொண்டனர். சின்னாளப்பட்டி தனியார் பள்ளி மாணவர்கள் 60 பேர் வந்து முற்றத்தை பார்த்தனர்.
விழாவில் நெடுமாறன் பேசும்போது.. முற்றத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். இது தமிழினத்தின் அவலத்தின் துயர சின்னம். இந்த முற்றம் இனி போராளிகளை உருவாக்கும் பயிற்சி களமாக பாசறையாக செயல்படும்.
அடுக்கட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்க இருக்கிறது. அந்த போருக்கு இந்த பாசறையில் இருக்கும் போராளிகளும் பங்கேற்க வேண்டும் என்று பேசினார்.
- இரா.பகத்சிங்
புதுக்கோட்டை தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள்; முகாமில் மாவீரர் தினம்

புதுக்கோட்டை தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள்; முகாமில் இலங்கையில் தனி ஈழம் மீட்க தன்னு டைய உயிர்களை போரில் நீத்தவர்களுக்காக மாவீரர் தினம் புதன்கிழமை மாலை அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு முகாம் தலைவர் ச.கமலநாதன். தலைமைதாங்கினார். மாவீரர் இளங்குயில் ஆ.ஜெயசுதா (இரண்டாம் லெப்டினன்) அவரின் பெற்றோர் ஆ,பாப்பா முன்னிலையில் 5 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு. ஈழம்பாடல்கள் ஒலிக்க மிகப்பிரமாண்டமாக மெழுகுவர்த்தி தீபம் ஏற்றப்பட்டது. நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை கணேசன்.வ.கோபி மற்றும் முகாம் பொதுமக்கள் ஆகியோர் செய்தனர்.
படங்கள் : பகத்சிங்
பேய் பிடித்துவிட்டதாக சொல்லி நிர்வாணமாக ஓடவிட்டு எரிக்கப்படுகிறார்கள் பெண்கள்
நாகரிகமான சமுதாயத்திலும், பேய் பிடித்ததாகக் கூறி பெண்களை உயிருடன் எரிக்கும் சம்பவங்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிகரித்து உள்ளன.
மிகவும் பின்தங்கிய ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேய் பிடித்ததாகக் கூறப்படும் பெண்களை நிர்வாணமாக ஓட விடுவதும் தண்டிப்பதுமாக உள்ளனர். சில பெண்கள், தீ வைத்தும் எரிக்கப்படுகின்றனர். இத்தகைய செயல்களை தடுத்து நிறுத்த, எவ்வித முயற்சிகளும் போலீசார் மேற்கொள்வதில்லை.
இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு எதிராக, எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பெண் களுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைய தடுத்து நிறுத்தும் பணியை அரசு ஊழியர்கள் சிலர் செய்து வருகின்றனர். இந்த மாநிலத்தில், 1991 முதல், 2013 வரை, 1,312 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில், ராஞ்சி அருகில் உள்ள, சிமடேகா மாவட்டம், முதலிடத்தில் உள்ளது. இங்கு, 10 மாதங்களில், 10 பெண்கள், பேய் பிடித்துள்ளது என்ற பெயரில் கொலை செய்யப்பட்டுள்ளதாக, போலீசார் கூறியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநில அரசு அனைத்து நிலைகளிலும் தோல்வி : மோடி குற்றச்சாட்டு
சிகார்: ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு அனத்து நிலைகளிலும் படுதோல்வி அடைந்துள்ளதாக குஜராத் மாநில முதல்வரும், பாஜ பிரதமர் வேட்பாளருமான மோடி குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் அரசுக்கு தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார். ராஜஸ்தான் மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியில், முதல்வர் கெலாட் அரசு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார் கூறினார்.
Wednesday, November 27, 2013
13ஆவது அரசமைப்பின்படி அதிகாரங்களை வழங்க வேண்டும் - அஸாத் சாலி
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே மாகாண சபை முறை கொண்டுவரப்பட்டது. அதே போன்றே 13 ஆவது அரசமைப்புத் திருத்தமும் செய்யப்பட்டது. இதற்கிணங்க 13ஆவது அரசமைப்பின்படி அதிகாரங்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி வேண்டுகோள் விடுத்துள்ளார். கண்டி, பள்ளேகலையில் நடைபெற்ற மத்திய மாகாண சபையின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-
நான் தமிழ் மக்களைப் பற்றியும் முஸ்லிம் மக்களைப் பற்றியும் பேசுகின்றேன். அதனால் நான் இனவாதி ஆகிவிடுவேனா? மத்திய மாகாண மக்களின் நிதியில் நடத்திய கூட்டங்களுக்கான செலவு 60 கோடி ரூபா. ஆனால் அபிவிருத்தி திட்டங்கள் ஏதாவது என்றாவது நடைபெற்றதா? மத்திய மாகாண சபை மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகளை திருப்திகரமாகவும் முறையாகவும் செய்வதாகத் தெரியவரவில்லை.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மக்கள் நலனுக்காகவும் அபிவிருத்திக்காகவும் சமர்ப்பிக்கின்ற பிரேரணைகள் தொடர்பான எந்தவித தகவல்களும் அது நிறைவேற்றப்பட்ட பின் வெளியிடப்படுவதில்லை. பிரேரணைகள் தொடர்பாக எந்தவித மீள் பரிசீலனைகளும் செய்யப்படுவதில்லை. உரிய அதிகாரிகளும் இவை தொடர்பாக சபைக்கு அறிவிப்பதில்லை - என்றார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-
நான் தமிழ் மக்களைப் பற்றியும் முஸ்லிம் மக்களைப் பற்றியும் பேசுகின்றேன். அதனால் நான் இனவாதி ஆகிவிடுவேனா? மத்திய மாகாண மக்களின் நிதியில் நடத்திய கூட்டங்களுக்கான செலவு 60 கோடி ரூபா. ஆனால் அபிவிருத்தி திட்டங்கள் ஏதாவது என்றாவது நடைபெற்றதா? மத்திய மாகாண சபை மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகளை திருப்திகரமாகவும் முறையாகவும் செய்வதாகத் தெரியவரவில்லை.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மக்கள் நலனுக்காகவும் அபிவிருத்திக்காகவும் சமர்ப்பிக்கின்ற பிரேரணைகள் தொடர்பான எந்தவித தகவல்களும் அது நிறைவேற்றப்பட்ட பின் வெளியிடப்படுவதில்லை. பிரேரணைகள் தொடர்பாக எந்தவித மீள் பரிசீலனைகளும் செய்யப்படுவதில்லை. உரிய அதிகாரிகளும் இவை தொடர்பாக சபைக்கு அறிவிப்பதில்லை - என்றார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. வெற்றி வாய்ப்பு பிரகாசம்: விஜயகாந்த் பேட்டி
டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. 11 இடங்களில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று டெல்லி சென்றார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:–
டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
சென்னை கடற்கரை ரோட்டில் உள்ள சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி அகற்றப் பார்க்கிறார்கள். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அகற்ற வேண்டிய சிலைகள் ஏராளமாக உள்ளன. அந்த சிலைகளை அகற்றுவதற்கு பதில் சிவாஜி சிலையை அகற்றுவதில் மட்டும் ஏன் அக்கறை காட்ட வேண்டும்.
தமிழ்நாட்டில் நிலவும் மின் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசை குறை கூறுவதை ஏற்க முடியாது.
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
சென்னை கடற்கரை ரோட்டில் உள்ள சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி அகற்றப் பார்க்கிறார்கள். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அகற்ற வேண்டிய சிலைகள் ஏராளமாக உள்ளன. அந்த சிலைகளை அகற்றுவதற்கு பதில் சிவாஜி சிலையை அகற்றுவதில் மட்டும் ஏன் அக்கறை காட்ட வேண்டும்.
தமிழ்நாட்டில் நிலவும் மின் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசை குறை கூறுவதை ஏற்க முடியாது.
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
இலங்கை பாராளுமன்றத்தில் பிரபாகரனுக்கு புகழாரம்: தமிழ் எம்.பி.ஸ்ரீதரன் பேச்சு
இலங்கை பாராளுமன்றத்தில் பிரபாகரனுக்கு தமிழ் எம்.பி. ஸ்ரீதரன் புகழாரம் சூட்டினார்.
இலங்கை பாராளுமன்ற கூட்டம் கொழும்புவில் நடந்தது. அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. ஸ்ரீதரன் சிவஞானம் கலந்து கொண்டு பேசினார். அப்போது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு புகழாரம் சூட்டினார்.
பாராளுமன்றத்தில் அவர் பேசியதாவது:–
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் போராட்டம் நியாயமானது. அதில் தவறில்லை. அவரது பிறந்த நாள் இன்றைய தினம் அமைந்துள்ளது.
மாவீரர் தினத்தில் பிரபாகரன் மற்றும் உயிரிழந்த மற்ற போராளிகளுக்கு (விடுதலைப்புலிகளுக்கு) அஞ்சலி செலுத்த வேண்டியது அவசியம். தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் ஒரு சுதந்திர போராட்டமாக கருதப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அவரது இந்த உரைக்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரபாகரன் தமிழ் மற்றும் சிங்கள தலைவர்களை கொலை செய்துள்ளதாக உயர்கல்வி மந்திரி குற்றம் சாட்டினார்.
மந்திரி வாசுதேவ நாணயக்காராவும் எதிர்ப்பு தெரிவித்தார். பிரபாகரன் குறித்து ஸ்ரீதரன் எம்.பி. ஆற்றிய உரையை அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். எனவே பிரபாகரன் குறித்தும் மாவீரர்கள் குறித்தும் அவர் உரையாற்றிய சில பகுதிகள் நீக்கப்பட்டன.
எனவே பாராளுமன்றத்தில் ஸ்ரீதரன் எம்.பி. பேசிய உரையின் முழு பகுதியும் இலங்கை பாராளுமன்ற இணையதளத்தில் பிரசுரிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
அவரது இந்த உரைக்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரபாகரன் தமிழ் மற்றும் சிங்கள தலைவர்களை கொலை செய்துள்ளதாக உயர்கல்வி மந்திரி குற்றம் சாட்டினார்.
மந்திரி வாசுதேவ நாணயக்காராவும் எதிர்ப்பு தெரிவித்தார். பிரபாகரன் குறித்து ஸ்ரீதரன் எம்.பி. ஆற்றிய உரையை அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். எனவே பிரபாகரன் குறித்தும் மாவீரர்கள் குறித்தும் அவர் உரையாற்றிய சில பகுதிகள் நீக்கப்பட்டன.
எனவே பாராளுமன்றத்தில் ஸ்ரீதரன் எம்.பி. பேசிய உரையின் முழு பகுதியும் இலங்கை பாராளுமன்ற இணையதளத்தில் பிரசுரிக்கப்படவில்லை.
மூவரின் தூக்குத் தண்டனை இரத்தாக வேண்டும்- வைகோ !
நீதி தூக்கிலிடப்பட்டுவிட்டது, மேலும் அநீதி நிகழாமல் மூவரின் தூக்குத் தண்டனை இரத்தாக வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில், “குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால், நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது” என்பதுதான் உலகமெல்லாம் ஜனநாயகத்தில் நீதித்துறையின் அடிப்படை தத்துவமாகும். ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், அச்சம்பவத்தில் எள்ளளவும் தொடர்பில்லாத நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். நீதிக்கு முற்றிலும் முரணான விதத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சித்ரவதை செய்து, காவல்துறையினர் பெற்ற ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் தடா நீதிமன்றம், தடா எனும் கொடிய அடக்குமுறைச் சட்டத்தின் மூலம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது.
தடா வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு கிடையாது. அதனால் உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 4 பேருக்கு தூக்குத் தண்டனையும், 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மரணக் கொட்டடியில் இருந்த நளினிக்கு தூக்குத் தண்டனை குறைக்கப்பட்டாலும் 22 ஆண்டுகளாகியும் விடுதலை செய்யப்படவில்லை.
தற்போது தமிழக மக்களையும், ஏன்? இந்தியாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கும் விதத்தில், இந்த வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வுத்துறையின் காவல்துறை கண்காணிப்பாளர் கேரளத்தைச் சேர்ந்த தியாகராஜன் வாக்குமூலம் தந்துள்ளார். மனித மனங்களை உருக்கும் உணர்ச்சிமயமான ஒளிப்படமான “உயிர்வலி”யில் தியாகராஜன் தன் மனசாட்சியைப் பாரமாக உலுக்கிக் கொண்டிருந்த உண்மையை இப்போது கூறுவதாகவும், பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலமாக நான் பதிவு செய்தபோது, பேட்டரி செல்கள் எதற்கு என்னை வாங்கச் சொன்னார்கள் என்பது தனக்குத் தெரியாது என்று கூறியதை தான் பதிவு செய்யவில்லை என்றும், பேரறிவாளனின் கருணை மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, மரண தண்டனையில் இருந்து அவர் விடுபடுவார் என்று நினைத்ததாகவும், தற்போது அவர் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி இருப்பதால், தன் நெஞ்சில் உறுத்தும் முள்ளாகிய இந்த உண்மையைக் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பொய்யின் அடிப்படையிலேயே வழக்கு சோடிக்கப்பட்டது என்று இந்த வழக்கு விசாரணையின்போது, என்னைப் பிரண்ட சாட்சியாக அரசு வழக்கறிஞர் அறிவித்த நேரத்தில் நான் ஆணித்தரமாகக் கூறினேன்.
முருகன், சாந்தன் மீதும் இட்டுக்கட்டிய பொய்களை காவல்துறையிடம் தந்ததாக ஒப்புதல் வாக்குமூலமாக்கி, இந்த வழக்கைப் புனைந்தனர் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
தியாகராஜனுடைய வாக்குமூலத்துக்குப் பிறகாவது மத்திய உள்துறை அமைச்சகம் மேலும் நீதி குழிதோண்டிப் புதைக்கப்படாமல் இருக்க, குடியரசுத் தலைவருக்கு உண்மையை தெரிவித்து, மூவரின் மரண தண்டனையை இரத்துச் செய்ய வேண்டும்.
ஒரு உண்மை புலப்பட்டுவிட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே நீதி தூக்கிலிடப்பட்டுவிட்டது என்பதுதான் அந்த உண்மையாகும். அநீதியின் கொடுங்கரங்கள் அவர்களுக்கு மேலும் துன்பம் விளைவிக்காமல் காக்க அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தடா வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு கிடையாது. அதனால் உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 4 பேருக்கு தூக்குத் தண்டனையும், 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மரணக் கொட்டடியில் இருந்த நளினிக்கு தூக்குத் தண்டனை குறைக்கப்பட்டாலும் 22 ஆண்டுகளாகியும் விடுதலை செய்யப்படவில்லை.
தற்போது தமிழக மக்களையும், ஏன்? இந்தியாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கும் விதத்தில், இந்த வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வுத்துறையின் காவல்துறை கண்காணிப்பாளர் கேரளத்தைச் சேர்ந்த தியாகராஜன் வாக்குமூலம் தந்துள்ளார். மனித மனங்களை உருக்கும் உணர்ச்சிமயமான ஒளிப்படமான “உயிர்வலி”யில் தியாகராஜன் தன் மனசாட்சியைப் பாரமாக உலுக்கிக் கொண்டிருந்த உண்மையை இப்போது கூறுவதாகவும், பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலமாக நான் பதிவு செய்தபோது, பேட்டரி செல்கள் எதற்கு என்னை வாங்கச் சொன்னார்கள் என்பது தனக்குத் தெரியாது என்று கூறியதை தான் பதிவு செய்யவில்லை என்றும், பேரறிவாளனின் கருணை மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, மரண தண்டனையில் இருந்து அவர் விடுபடுவார் என்று நினைத்ததாகவும், தற்போது அவர் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி இருப்பதால், தன் நெஞ்சில் உறுத்தும் முள்ளாகிய இந்த உண்மையைக் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பொய்யின் அடிப்படையிலேயே வழக்கு சோடிக்கப்பட்டது என்று இந்த வழக்கு விசாரணையின்போது, என்னைப் பிரண்ட சாட்சியாக அரசு வழக்கறிஞர் அறிவித்த நேரத்தில் நான் ஆணித்தரமாகக் கூறினேன்.
முருகன், சாந்தன் மீதும் இட்டுக்கட்டிய பொய்களை காவல்துறையிடம் தந்ததாக ஒப்புதல் வாக்குமூலமாக்கி, இந்த வழக்கைப் புனைந்தனர் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
தியாகராஜனுடைய வாக்குமூலத்துக்குப் பிறகாவது மத்திய உள்துறை அமைச்சகம் மேலும் நீதி குழிதோண்டிப் புதைக்கப்படாமல் இருக்க, குடியரசுத் தலைவருக்கு உண்மையை தெரிவித்து, மூவரின் மரண தண்டனையை இரத்துச் செய்ய வேண்டும்.
ஒரு உண்மை புலப்பட்டுவிட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே நீதி தூக்கிலிடப்பட்டுவிட்டது என்பதுதான் அந்த உண்மையாகும். அநீதியின் கொடுங்கரங்கள் அவர்களுக்கு மேலும் துன்பம் விளைவிக்காமல் காக்க அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் வீட்டில் 1 கிலோ தங்கம் கொள்ளை: பணம் - பாஸ்போர்ட்டும் பறிபோனது
பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்கின் வீடு லாகூரில் உள்ளது. நேற்று அதிகாலை குளியலறை ஜன்னல் வழியாக இவரது வீட்டிற்குள் கொள்ளையர்கள் நுழைந்தனர்.
வீட்டினுள் இருந்த இரும்பு லாக்கரை உடைத்து திறந்தால் சத்தம் கேட்கும் என யூகித்து லாக்கரையே 'அபேஸ்' செய்த கொள்ளையர்கள் முன்வாசல் வழியாக வெளியேறினர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக லாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள அப்துல் ரசாக், 'லாக்கரின் உள்ளே சுமார் ஒரு கிலோ தங்கம், 8 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், 2 ஆயிரத்து 500 பிரிட்டிஷ் பவுண்டுகள், சில ஆவணங்கள் மற்றும் என்னுடைய பாஸ்போர்ட்டும் இருந்தன' என தெரிவித்துள்ளார்.
தடையையும் மீறி சீன கடல் எல்லையின் மேல் பறந்து அமெரிக்க போர் விமானங்கள் சாகசம் ..
கிழக்கு சீனாவின் கடல் எல்லைக்கு மேலே எந்த நாட்டின் விமானங்களும் பறக்க கூடாது. அவ்வாறு பறக்க நேரிட்டால் எங்களிடம் முன் அனுமதி பெற வேண்டும். என சமீபத்தில் சீனா எச்சரிக்கை செய்து தடை அறிவிப்பு வெளியிட்டது. கொரியா, ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட வான்எல்லை வழியாக 2 போர் விமானங்களை அமெரிக்க பறக்க வைத்துள்ளது.
சீனாவுக்கு எவ்வித முன்னறிவிப்பும் தெரிவிக்காமல் பி.52 எனப்படும் 2 குண்டுவீச்சு போர் விமானங்கள் சீன ரேடார்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு வெற்றிகரமாக பறந்து பத்திரமாக திரும்பி வந்துள்ளன.
இது தொடர்பாக கருத்து கூறிய அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்கன் செய்தி தொடர்பாளர் 'குவாமில் இருந்து ஓர் போர் விமானம் புறப்படும் அதே வேளையில் இன்னொரு போர் விமானம் குவாமை வந்தடையும் வண்ணம் ஒத்திகை பார்க்க நாங்கள் நீண்ட நாட்களுக்கு முன்னரே திட்டமிட்டிருந்தோம்.
நேற்றிரவு அந்த ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டது' என்று கூறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சீன அரசு எந்த பதில் அறிக்கையோ, செய்தியோ வெளியிடவில்லை.
Tuesday, November 26, 2013
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் தினம் ( படங்கள் )


நவம்பர் 27 மாவீரர் தினம். இந்த நாளை உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் தமிழின உணர்வாளர்கள் அனுசரித்து வருவது வழக்கம்.
ஈழத்தில் மாவீரர்கள் துயிலகங்களில் அனுசரிக்கப்பட்டு மாவீரர் உரை நிகழ்த்துவார் பிரபாகரன். 2009 முள்ளிவாய்க்கால் கொடூர சம்பவத்திற்கு பிறகு துயிலகங்கள் தகர்க்கப்பட்டது. அதன் பிறகு ஏதாவது ஒரு இடத்தில் மாவீரர் தின வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
பொது இடங்களில் இந்த நிகழ்ச்சிக்கு தடைகள் இருந்த போதிலும் கடந்த ஆண்டில் சென்னை கடற்கரை போன்ற இடங்களில் குழந்தைகள், மாணவர்கள் ஏராளம் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்.
இந்த ஆண்டு துயிலகம் போல தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் தின வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதிலும் இருந்து உணர்வாளர்கள் கலந்த கொள்கிறார்கள். மேலும் வெளிநாடு களில் இருந்தும் உணர்வாளர்கள் வந்து கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
27 ந் தேதி புதன் கிழமை நாள் முழுவதும் மாவீரர் தின நிகழ்வுகள் நடக்கிறது.
- இரா.பகத்சிங்
Monday, November 25, 2013
சென்னையில் கார் விபத்து: புதுச்சேரி முதல்–மந்திரி ரங்கசாமி உயிர் தப்பினார்
முதல்–அமைச்சர் ரங்கசாமி கார் விபத்தில் சிக்கிய தகவல் அறிந்த என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் நள்ளிரவில் முதல்–அமைச்சர் வீட்டு முன்பு திரண்டனர்.
புதுவை முதல்–அமைச்சர் ரங்கசாமி சென்னை எழும்பூரில் நேற்று இரவு நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர், மீண்டும் கார் மூலம் புதுவை திரும்பி கொண்டிருந்தார்.
அவரது காருக்கு முன்பு போலீசாரின் பாதுகாப்பு வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது இரவு 9.15 மணியளவில் கார் சாந்தோம் சர்ச்சை கடந்தபோது கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து வேகமாக வந்த கார் முதல்–அமைச்சர் ரங்கசாமியின் காருக்கு முன்பாக சென்ற போலீசாரின் பாதுகாப்பு வாகனத்தில் மோதியது.
தொடர்ந்து பின்னால் வந்த முதல்–அமைச்சர் ரங்கசாமியின் கார் மீதும் மோதியது. இதில் போலீசாரின் பாதுகாப்பு வாகனம் பலத்த சேதம் அடைந்தது. வாகனத்தில் இருந்த போலீசார் வெங்கடேசன், செல்வம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதேபோல் முதல்–அமைச்சரின் காரின் முன்புறம் பலத்த சேதம் அடைந்தது. ஆனால், காரில் இருந்த ரங்கசாமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
தகவல் அறிந்த போலீசார் விபத்து ஏற்படுத்திய காரை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் காயமடைந்த போலீசார் ராயபேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து சென்னை கே.கே.நகரில் உள்ள புதுவை அரசு விடுதியில் இருந்து மாற்று கார் கொண்டு வரப்பட்டு அதில் முதல்–அமைச்சர் ரங்கசாமி புதுவை திரும்பினார். ரங்கசாமி கார் விபத்துக்குள்ளான தகவல் அறிந்ததும் என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் அவரது வீட்டு முன்பு திரண்டனர்.
இதேபோல் அமைச்சர்கள் ராஜவேலு, பன்னீர் செல்வம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், வாரிய தலைவர் கிழக்கு கடற்கரை சாலை அனுமந்தை டோல்கேட் அருகே திரண்டனர். ரங்கசாமியின் கார் நள்ளிரவு 12 மணிக்கு அங்கு வந்தது.
அப்போது அவரிடம் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உடல்நலம் குறித்து விசாரித்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். நள்ளிரவு 12.15 மணிக்கு ரங்கசாமி தன் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பெண்கள் கதறி அழுதனர்.
இதனையடுத்து முதல்–அமைச்சர் ரங்கசாமி அவர்களிடம் தனக்கு எந்த காயமோ பாதிப்போ இல்லை என்றும் சிறிய விபத்துதான் என்றும் கூறினார். மேலும் அனைவரும் வீடு திரும்பும்படியும் கேட்டு கொண்டார்.
ஒடிசா முதல்–மந்திரி நவின் பட்நாயக்குடன் ஜெகன்மோகன் சந்திப்பு
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசு முயற்சிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன்ரெட்டி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
மாநில மக்களின் கருத்தை கேட்காமல் மத்திய– மாநில காங்கிரஸ் அரசு ஒருதலை பட்சமாக முடிவு எடுப்பதாக அவர் குற்றம் சாட்டி வருகிறார்.
பாராளுமன்றத்தில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யும்போது அதனை எதிர்க்க அவர் முடிவு செய்துள்ளார். தனது போராட்டத்துக்கு தேசிய தலைவர்களின் ஆதரவை பெறும் முயற்சியாக ஜெகன் மோகன்ரெட்டி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். முதல் கட்டமாக டெல்லி சென்ற அவர் கம்யூனிஸ்டு தலைவர்களை சந்தித்து பேசினார்.
பின்னர் கொல்கத்தா சென்று மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
நேற்று ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் சென்றார். மாலையில் பிஜு ஜனதா தள தலைவரும், ஒடிசா முதல்– மந்திரியுமான நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசினார்.
மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு ஓட்டுக்காக முறைகேடாக ஆந்திர மாநிலத்தை பிரிக்க முயற்சிக்கிறது. இதனை தடுக்காவிட்டால் மற்ற மாநிலங்களுக்கும் இதேநிலை ஏற்படும். எனவே தெலுங்கானா மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது அதனை எதிர்க்க வேண்டும்’’ என்று நவீன்பட்நாயக்கிடம் ஜெகன்மோகன் ரெட்டி கேட்டுக் கொண்டார்.
‘‘உங்களது போராட்டத்துக்கு எனது ஆதரவு இருக்கும்’’ என்று நவீன் பட்நாயக் உறுதி அளித்ததாக ஜெகன்மோகன் ரெட்டி பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஜெகன்மோகன்ரெட்டி இன்று மும்பை சென்றார். அங்கு தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய விவசாயத்துறை மந்திரியுமான சரத்பவாரை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். பின்னர் சிவசேனா தலைவர் உத்தம் தாக்ரேவையும் சந்திக்கிறார்.
நாளையும், நாளை மறு நாளும் ஆந்திராவில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளை சந்திக்கிறார். 30–ந்தேதி முதல் மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து பஸ் யாத்திரையை மேற்கொள்கிறார்.
இன அழிப்பை மேற்கொண்ட சிங்கள அரசாங்கம் தமிழர்களின் அடையாளங்களை அழிப்பதில் தீவிர முயற்சி
போர் நடைபெற்ற காலங்களில் தமிழ் இனத்தைக் கருவழித்த இனவாத சிங்களம், அத்துடன் மட்டும் நின்றுவிடாது, தமிழர்களின் பூர்விக நிலங்களை அடையாளம் கண்டு அழித்துவருவதுடன், தமிழர்களின் சமய சின்னங்களையும் அழிப்பதில் தீவிர முயற்சிளை மகிந்த அரசாங்கத்தின் கும்பல் ஈடுபட்டுவருகிறது.
இஸ்ரேல் எவ்வாறான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் காசாவில் மேற்கொண்டு வருகிறதோ அதை ஒத்த நடவடிக்கையையும் மகிந்த அரசாங்கம் மேற்கொண்டுவருகிறது. போர் நடவடிக்கையின் போது சிறீலங்கா அரசாங்கத்திற்கு பல்வேறு தரப்பட்ட உதவிகளை வழங்கிய நாடுகள் இன்று போர் முடிவடைந்த பின்னரும் பாதிக்கப்பட்ட இனத்தின் மீதான் ஒடுக்குமுறைகளை மேற்கொள்ள மகிந்த அரசாங்கம் இவ்வாறான நாடுகளை பின்பற்றிவருகிறது.
கடந்த ஐந்து மாத காலத்தில் தொடர்ச்சியாக தாயகப் பகுதியில் தமிழ் மக்களின் சமய அடையாளங்களை அழித்தொழிப்பதில் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுவருவதைக் காணக் கூடியதாகவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 01.06.2013 அன்று ஒரே இரவில் கிரான்குளத்தில் சிறி செல்லக்கதிர்காமம், மாங்காட்டுப்பிள்ளையார், பண்டிருப்பில் திரௌபதி அம்மன் ஆலயத்தில் பெறுமதி மிக்க பொருட்கள் கொள்ளையிடப்பட்டதுடன், விக்கிரகங்களும் சேதமாக்கப்பட்டன.
இவ்வாறான சம்பவம் ஒன்று 04.06.2013 அன்று யாழ்ப்பாணம் மணியம் தோட்டத்தில் இருந்த இயேசுநாதனின் திருச்சொரூப உருவம் உடைத்து சேதமாக்கப்பட்டது. ஆலயங்களில் கொள்ளையும், அழித்தொழிப்புக்களும் இடம்பெறும் அதேசமயத்தில் ஆலயங்களைக் கைப்பற்றி இராணுவ முகாங்களை அமைப்பதிலும் சிங்கள அரசாங்கம் ஈடுபட்டுவருகிறது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கண்ணகிபுரம் சிறீ முருகன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமை அகற்றி ஆலயத்தையும் அதன் வளாகத்தையும் மீளப் பெற்றுத்தருமாறு ஆலய பரிபாலன சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இஸ்ரேல் எவ்வாறான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் காசாவில் மேற்கொண்டு வருகிறதோ அதை ஒத்த நடவடிக்கையையும் மகிந்த அரசாங்கம் மேற்கொண்டுவருகிறது. போர் நடவடிக்கையின் போது சிறீலங்கா அரசாங்கத்திற்கு பல்வேறு தரப்பட்ட உதவிகளை வழங்கிய நாடுகள் இன்று போர் முடிவடைந்த பின்னரும் பாதிக்கப்பட்ட இனத்தின் மீதான் ஒடுக்குமுறைகளை மேற்கொள்ள மகிந்த அரசாங்கம் இவ்வாறான நாடுகளை பின்பற்றிவருகிறது.
கடந்த ஐந்து மாத காலத்தில் தொடர்ச்சியாக தாயகப் பகுதியில் தமிழ் மக்களின் சமய அடையாளங்களை அழித்தொழிப்பதில் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுவருவதைக் காணக் கூடியதாகவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 01.06.2013 அன்று ஒரே இரவில் கிரான்குளத்தில் சிறி செல்லக்கதிர்காமம், மாங்காட்டுப்பிள்ளையார், பண்டிருப்பில் திரௌபதி அம்மன் ஆலயத்தில் பெறுமதி மிக்க பொருட்கள் கொள்ளையிடப்பட்டதுடன், விக்கிரகங்களும் சேதமாக்கப்பட்டன.
இவ்வாறான சம்பவம் ஒன்று 04.06.2013 அன்று யாழ்ப்பாணம் மணியம் தோட்டத்தில் இருந்த இயேசுநாதனின் திருச்சொரூப உருவம் உடைத்து சேதமாக்கப்பட்டது. ஆலயங்களில் கொள்ளையும், அழித்தொழிப்புக்களும் இடம்பெறும் அதேசமயத்தில் ஆலயங்களைக் கைப்பற்றி இராணுவ முகாங்களை அமைப்பதிலும் சிங்கள அரசாங்கம் ஈடுபட்டுவருகிறது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கண்ணகிபுரம் சிறீ முருகன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமை அகற்றி ஆலயத்தையும் அதன் வளாகத்தையும் மீளப் பெற்றுத்தருமாறு ஆலய பரிபாலன சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Friday, November 22, 2013
டெல்லி பல்கலை.யில் 360 உதவி பேராசிரியர் பணியிடங்கள்
டெல்லி பல்கலைக் கழகத்தில் 360 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: உதவி பேராசிரியர். மொத்த இடங்கள்: 360
வயது வந்தோர் தொடர் கல்வி-2, ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்-3, அரேபிக்-3, உயிர் வேதியியல்-1, உயிர் இயற்பியல்-1, அம்பேத்கார் ஆராய்ச்சி மையம்-2, வணிக பொருளியல்-2, வேதியியல்-11, கிளஸ்டர் இன்னோ வெஷன் மையம்-16, வணிகவியல்-14, கம்ப்யூட்டர் சயின்ஸ்-6, ஈஸ்ட் ஆசியன் ஸ்டடீஸ்-3, பொருளியல்-13, கல்வி-10, ஆங்கிலம்-9, சுற்றுப்புறச்சூழலியல்- 6, பைனான்சியல் ஸ்டடீஸ்-4, புவியியல்-3, நிலத்தியல்-4, ஜெர்மானிக் மற்றும் ரோமன் ஸ்டடீஸ்-10, இந்தி-18, வரலாறு-5, சட்டம்-61, நூலகவியல் மற்றும் தகவல் அறிவியல்-2, மொழியியல்-3, மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ்-23, கணிதம்-8, நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கியம்-10, இசை-11, ஆபரேஷனல் ரிசர்ச்-3, பெர்சியன்-2, தத்துவம்-9, இயற்பியல் மற்றும் அஸ்ட்ரோ பிசிக்ஸ்- 17, பிளான்ட் மாலிகுலார் பயாலஜி- 2, அரசியல் அறிவியல்- 12, உளவியல்-4, பஞ்சாபி-4, சமஸ்கிருதம்-16, ஸ்லோவானிக் மற்றும் பின்னோ உக்ரியன் ஸ்டடீஸ்-5, சமூகவியல்-3, சோஷியல் வொர்க்- 6, புள்ளியியல்-5, உருது-4, விலங்கியல்-4.
மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.du.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 6.12.2013.
ராணுவத்தில் ஹவில்தார்கள் பட்டப்படிப்புன் பி.எட் படித்தவர்களுக்கு வாய்ப்பு
இந்திய ராணுவத்தின் கல்விப் பிரிவில் குரூப் எக்ஸ் மற்றும் குரூப் ஒய் பிரிவில் ஹவில்தாராக பணியாற்ற பட்டப்படிப்புடன் பி.எட்., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த பணியிடங்கள்: அறிவியல் பிரிவு: 218. கலைப்பிரிவு: 52 இடங்கள்.
கல்வித்தகுதி: கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ்--ல் பி.எஸ்சி/கம்ப்யூட்டர் பாடத்தில் பிசிஏ. ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருந்தால் மற்ற பாடங்களில் ஏதேனும் ஒன்று துணைப் பாடமாக இருக்க வேண்டும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://www.indianarmy.gov.in இணையதளத்தை பார்க்கவும்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 23.2.2014.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.12.2013.
சேலம் இரும்பு ஆலையில் 55 பணியிடங்கள்
சேலம் இரும்பு ஆலையில் மெடிக்கல் ஆபீசர் மற்றும் டெக்னீசியன் டிரெய்னிகளை தேர்வு செய்ய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி விவரம்:
1. மெடிக்கல் ஆபீசர்: 2 இடங்கள்
தகுதி: எம்பிபிஎஸ்சுடன் மருத்துவக்கல்லூரி அல்லது மருத்துவமனை அல்லது மருத்துவ நிறுவனத்தில் டாக்டராக ஓராண்டு முன்அனுபவம்.
2. அட்டெண்டென்ட்: 53 இடங்கள்
தகுதி: எஸ்எஸ் எல்சியுடன் பிட்டர் டிரேடில் ஐடிஐ அல்லது எஸ்எஸ் எல்சியுடன் எலக்ட்ரிக்கல் டிரேடில் ஐடிஐ அல்லது எஸ்எஸ்எல்சியுடன் மெஷினிஸ்ட் டிரேடில் ஐடிஐ.
விண்ணப்ப கட்டணத்தை செயில் இணையதளத் தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா செலானை பதிவிறக்கம் செய்து அக்கவுன்ட் எண்:33182116230என்ற கணக்கில் செலுத்தவும்.
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
http://www.sail.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.11.2013.
இந்துஸ்தான் காகித ஆலையில் அப்ரன்டிஸ்
பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் காகித கழகத்தில் அப்ரன்டிஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிலை-1 Engineering Graduate Apprentices
தகுதி: பி.இ.,/பி.டெக்.,
நிலை-2 Technician (Diploma) Apprentices.
தகுதி: டிப்ளமோ.
நிலை-3 Technician (Vocational) Apprentice:
தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் பிளஸ் 2.
கூடுதல் விவரங்களுக்கு www.hindustanpetroleum.com என்ற இணையத்தை பார்க்கவும்.
கடைசி நாள்: 30.11.2013.
முப்படைகளில் 509 காலியிடங்களுக்கு யுபிஎஸ்சி தேர்வு
இந்திய ராணுவ அகாடமி, கப்பல் படை அகாடமி, விமானப்படை அகாடமி மற்றும் ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் பயிற்சி பெற்று பணியில் சேர Combined Defence Service Examination-I 2014 யுபிஎஸ்சி தேர்வு 2014ம் ஆண்டு பிப்.9ம் தேதி நடத்தப்பட உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
(அ) இந்திய மிலிட்டரி அகாடமி: மொத்த இடங்கள்-250. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
(ஆ) கப்பல் படை அகாடமி: மொத்த இடம்-40. கல்வித்தகுதி: பி.இ.
(இ) விமானப்படை அகாடமி: 32 இடங்கள். தகுதி: டிகிரி அல்லது பி.இ.
(ஈ) ஆபீசர்ஸ் பயிற்சி அகாடமி- (ஆண்கள்). 175 இடங்கள். தகுதி: ஏதே னும் ஒரு பட்டம்.
(உ) ஆபீசர்ஸ் பயிற்சி அகாடமி- (பெண்கள்). 12 தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.
விபரங்களுக்கு http://www.upsc.gov.in/ என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 2.12.2013.
சபரிமலை- ஆந்திராவில் இருந்து 128 சிறப்பு ரயில்
ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு 128 சிறப்பு ரயில்களை இயக்க தென்மத்திய ரயில்வே போர்டு ஏற்பாடு செய்துள்ளது. ஐதராபாத், காக்கிநாடா, நிஜாமாபாத், விஜயவாடா, மசூலிபட்டனம், நரசபூர், கரீம்நகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வரும் டிசம்பர் 6ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரை இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.என்று ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு நவ.25ம் தேதி முதல் துவங்க உள்ளதாக தென்மத்திய ரயில்வே தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
அய்யா பழ நெடுமாறன் உள்ளிட்ட 83 பேரும் இன்று காலை விடுதலை
அய்யா பழ நெடுமாறன், வழக்கறிஞர் நல்லதுரை, புதுக்கோட்டை ஜெயசீலன் உள்ளிட்ட 83 பேரும் இன்று காலை 9:௦௦க்கு விடுதலையாகினர்.. ஆயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் வரவேற்க சென்றனர் தற்போது முள்ளிவாய்க்கால் முற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைத்துறை சொத்தை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பழ.நெடுமாறன் உள்பட 83 பேருக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை பிணை வழங்கியது. இந்நிலையில், திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று காலை 9.05 மணிக்கு பழ.நெடுமாறன் உள்பட 83 பேர் விடுதலையானார்கள்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன்,
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய பிரிட்டன் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டப்பட்டதில் விதிமீறல் இல்லை என்றும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுற்றுச்சுவரை இடித்தது சட்டவிரோமானது என்றும் கூறினார்.
மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைத்துறை சொத்தை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பழ.நெடுமாறன் உள்பட 83 பேருக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை பிணை வழங்கியது. இந்நிலையில், திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று காலை 9.05 மணிக்கு பழ.நெடுமாறன் உள்பட 83 பேர் விடுதலையானார்கள்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன்,
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய பிரிட்டன் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டப்பட்டதில் விதிமீறல் இல்லை என்றும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுற்றுச்சுவரை இடித்தது சட்டவிரோமானது என்றும் கூறினார்.
மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
சென்னையில் நடந்த உலக செஸ் : கார்ல்சன் வெற்றி
சென்னையில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில், 9வது சுற்றில் 28வது காய் நகர்த்தலில் விஸ்வ நாதன் ஆனந்தை தோற்கடித்து கார்ல்சன் வெற்றி பெற்றார்.
3வது முறையாக ஆனந்தை வென்றார் மேக்னஸ் கார்ல்சன் .
நடிகர் வாசுவிக்ரம் திமுகவில் சேர்ந்தார்
நடிகர் எம்.ஆர்.ஆர். வாசுவின் மகனும் நடிகருமான வாசுவிக்ரம் திமுகவில் வியாழக்கிழமை சேர்ந் தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கலைஞர் முன்னிலையில் அவர் திமுகவில் சேர்ந்தார். பின்னர் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார்.
திருச்சி சிறையில் இருந்து பழ.நெடுமாறன் விடுதலை
திருச்சி சிறையில் இருந்த பழ.நெடுமாறன் உட்பட 82 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கடந்த 8-ந் தேதி திறப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலம் தமிழக அரசு திறப்பு விழாவிற்கு தடை கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு சென்றதும் அவசரமாக 6 ந் தேதியே திறக்கப்பட்டது. ஆனாலும் திட்டமிட்டபடி 8,9,10 ஆகிய மூன்று நாட்களும் விழா நடந்தது. அதிலும் பல பிரச்சனைகளை முற்றம் திறப்புக் குழு சந்திக்க வேண்டியிருந்தது. சில வழக்குகளும் போடப்பட்டது.
இந்த நிலையில் 13 ந் தேதி அதிகாலை தஞ்சை மாவட்ட எஸ்.பி.தர்மராஜன் தலைமையில் 200 போலிசாருடன் வந்த நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் முற்றத்தின் முன்பக்கம் இருந்த சுற்று சுவர் மற்றும் பூங்கா, நீா் ஊற்று, மரங்களை உடைத்து அப்புறப்படுத்தி இது நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் என்று பெயா் பலகை வைத்தனர்.
முற்றத்தின் சுற்று சுவர் இடிக்கப்பட்ட தகவல் அறிந்து வந்த உணர்வாளர்கள் நெடுஞ்சாலைத் துறை வைத்த வேலி மற்றும் பெயர்பலகைகளை உடைத்தனர். இதனால் போலிசாருக்கும் உணர்வாளர் களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 82 நபர்களை போலிசார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு புதன்கிழமை மாலை மதுரை உயர்நீதிமன்ற கிளை நிபந்த னையற்ற ஜாமின் வழங்கியது. அதையடுத்து இன்று 22.11.2013 சிறையில் இருந்து விடுதலை ப்பெற்றார்கள்.
தமிழீழத்திற்கான மாதிரி பொது வாக்கெடுப்பை தமிழகத்தில் முன்னெடுக்க இருக்கும் மாணவர்கள்
தமிழீழம் என்பதே ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை தரும் என்ற அடிப்படையில் தமிழக மாணவர்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க தமிழகத்தில் தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை முன்னெடுக்க உள்ளனர்.
இது குறித்து மாணவர்களின் அறிக்கை வருமாறு :
இந்தியாவும் சர்வதேசமும் தொடர்ந்து தனி ஈழ கோரிக்கையை மட்டுப்படுத்தி வருகின்றன. இந்த சூழலில் நமது கோரிக்கையை அழுத்தமான முறையில் பதிவு செய்வதும் மக்களிடையே எடுத்துச் செல்வதும் இப்போது அவசியம்.
ஆகவே அரசாங்கமானது போராட்டத்தை ஒடுக்கிவரும் இந்த சூழலில் மக்களிடையே நமது கோரிக்கையை எடுத்து செல்வதற்காக தமிழகம் முழுவதும் தமிழீழத்திற்கான மாதிரி பொது வாக்கெடுப்பை இளைஞர்கள் மற்றும் மாணவர்களாகிய நாங்கள் முன்னெடுக்க இருக்கிறோம்.
ஐ.நா மன்றத்தின் அடுத்த அமர்வில் இந்த மாதிரி பொது வாக்கெடுப்பின் முடிவுகளை சமர்பிக்க இருக்கிறோம்.
கட்சிகள், அமைப்புகள்,இயக்கங்கள், தனி நபர்கள் அனைவரும் தமிழர்களாக இணைந்து இந்த மாதிரி பொதுவாகெடுப்பினை வெற்றி பெறச் செய்வோம் .
இந்த நகர்வின் மூலமாக :
1)தனி ஈழத்திற்கு ஆதரவாக இத்தனை பேர் தமிழகத்தில் இருக்கிறோம் என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறவும்..
2)பொது வாக்கெடுப்பே நமது கோரிக்கை அதுவே தனி ஈழத்தை அமைத்துக் கொடுக்கும் என தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கவும்..
3)நமது கோரிக்கைகளை வலுவற்றதாக்கும் இந்தியாவின் சதிகளை முறியடிக்கவும் ..
தமிழக மக்களிடம் மாதிரி பொது வாக்கெடுப்பை எடுக்க இருக்கிறோம்!
எங்களது வாக்குபதிவு செய்யும் மையங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று இடங்களில் நிறுவ உள்ளோம் .பொதுமக்கள் அங்குவந்து அவர்களுடைய கருத்தை பதிவு செய்யலாம்.
இதுமட்டுமல்லாமல் மாணவர்கள் கிராமங்களுக்கு வீடு வீடாக சென்று வாக்கு பதிவு செய்வோம்.
பெரு நகரங்களில் மக்கள் கூடும் வணிக வளாகங்களுக்கு சென்று வாக்கு சேகரிப்போம் .
இணைய தளத்திலும் வாக்கு சேகரிப்பு நடைபெறும்.
இதுமட்டுமல்லாமல் புலம் பெயர் தேசங்களில் இருக்கும் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் நமக்கு ஆதரவாக அவரவர் நாடுகளில் மாதிரி பொது வாக்கெடுப்பை நடத்த உள்ளார்கள் .
ஜனவரி 1 முதல் 15 வரை மாதிரி பொதுவாக்கெடுப்பு நடக்கும் .
தமிழீழமே தீர்வு என்பதை அதன் முடிவு தீர்மானிக்கட்டும் !
இவ்வாறு மாணவர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
தாயகத்தில் மாவீரர் வாரம் ஆரம்பம் - படையினரின் கெடுபிடிகளும் அதிகரிப்பு
தாயக விடுதலைக்காக போராடி வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் ஒருசேர நினைவு கூருகின்ற தமிழீழ தேசிய மாவீரர் தினம் நேற்று 21 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் ஆரம்ப சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகியது.
தமிழர் தாயகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட சில இடங்களில் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் இந்த மாவீரர் தின வணக்க நிகழ்வுகளை நடத்தியிருந்தனர். ஆனால், தொடர்ந்து அந்த இடங்களில் வணக்க நிகழ்வுகளை முன்னெடுக்க முடியாமையால் அந்த இடங்களில் ஆரம்ப நிகழ்வாக சுடரேற்றல் நிகழ்வுகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.
யாழ்.பல்கலைக்கழகத்திலும் ஒன்றுகூடிய மாணவர்கள் இந்த ஆரம்ப நிகழ்வுகளில் தீபமேற்றியுள்ளனர். இந்த ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து தமிழர் தாயகம் எங்கும் படையினரின் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் எத்தகைய இடர்கள் வந்தாலும் மாவீரர்களை நினைவுகூருவார்கள் என்று நம்பிய படையினர் இவற்றை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். இதற்காக புலனாய்வுத் துறையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் என்ன தடைகள் வந்தாலும் மாவீரர் தினத்தை தாங்கள் அனுஸ்டிப்போம் என்று சபதமெடுத்துள்ள தமிழ் மக்கள் சிறிலங்கா படையினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு நேற்றைய ஆரம்ப வணக்க நிகழ்வுகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வடமராட்சியின் சில இடங்களிலும் தீவகம் மற்றும் வலிகாமத்தின் சில இடங்களிலும் இந்த ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இதேவேளை, தென்மராட்சியில் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் சிறிலங்கா படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த இடத்திற்கு சமீபமாக நேற்று மாலை ஒன்றுகூடிய சில இளைஞர்கள் மாவீரர்களின் நினைவாக மலர்தூவி வணக்கம் செலுத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டதாகவும் அந்தச் செய்தியைக் கேள்வியுற்ற படையினர் அங்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டதாவும் நேற்றிரவு தெரிவிக்கப்பட்டது.
கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள மக்கள் தமது பிள்ளைகளான வீர மறவர்களை நினைத்து வீடுகளில் தீபமேற்றி ஆரம்ப வணக்க நிகழ்வுகளைத் தொடங்கியுள்ளனர். இதேபோன்று வடக்கு கிழக்கு மாகாணம் எங்கணும் நேற்று பெரும்பாலான மக்கள் தமது வீடுகளில் நேற்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.
சிறிலங்கா படையினர் எத்தகைய தடைகளைப் போட்டாலும் தமிழர் தாயகத்தில் தமிழீழ தேசிய மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்படுவதை எவராலும் தடுக்க முடியாது என்பதற்கு தமிழ் மக்களின் நேற்றைய மாவீரர் தின தொடக்க நிகழ்வு எடுத்துக்காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தமிழீழ தேசிய மாவீரர் தினம் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகியதைத் தொடர்ந்து தமிழர் தாயகம் எங்கும் சிறிலங்கா படையினரின் நடமாட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று முழுவதும் வடக்கு – கிழக்கு பகுதிகளில் சிறிலங்கா படையினர் சோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்தனர். வீதிகளில் சென்ற இளைஞர், யுவதிகள் மறிக்கப்பட்டு சந்தேகத்திற்கிடமானவர்கள் உடற்சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். சிலர் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர்.
- தாயகத்திலிருந்து செந்தமிழன்
Tuesday, November 19, 2013
இலங்கை தமிழர்கள் அழிவுக்கு காரணம் காங்கிரஸ்: வைகோ பேச்சு
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒன்றிய பகுதியில் ‘‘மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சி பயணம்’’ மேற்கொண்டார்.
கொடுமுடி அருகே உள்ள நடுப்பாளையத்தில் இருந்து வைகோ தனது பயணத்தை தொடங்கினார். இந்த பயணத்துக்கு ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி தலைமை தாங்கினார்.
இந்த பயணத்தின்போது வைகோ வெள்ளோட்டம் பரப்பு, சாணார்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பாசூர், கொம்பனை, ஊஞ்சலூர், கொடுமுடி உள்பட பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
இலங்கை தமிழர்கள் இப்போது படும் அவதிக்கும் அழிவுக்கும் காரணமே மத்தியில் ஆளும் காங்கிரஸ் தான். இப்படி முக்கிய குற்றவாளியாக காங்கிரஸ் பிரதமர் மன்மோகன்சிங் இருக்கும்போது அவர் எப்படி இலங்கைக்கு செல்ல முடியும்?
இலங்கையில் போரை நடத்தியதே இந்தியாதான். இப்படி இருக்கும்போது அவர் இலங்கைக்கு போய் எப்படி தமிழர்களிடம் குறைகளை கேட்பார்? அவர் இலங்கை செல்வதை தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் தடுத்து விட்டன என்று கூறுகிறார்கள்.
இலங்கை போருக்கு காரணமாகவும், தமிழர்களின் அழிவுக்கு காரணமாகவும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் என்று இருக்கும்போது பிரதமர் மன்மோகன்சிங் இலங்கைக்கு சென்று என்ன பயன்தான் கிடைக்கப் போகிறது?
இங்கிலாந்து பிரதமர் கேமரூன் இலங்கையில் மனித உரிமைகள் குறித்து சுதந்திரமான உரிய விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணையை மார்ச் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். இல்லையென்றால் பன்னாட்டு விசாரணை நடத்த இங்கிலாந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறி உள்ளார். ம.தி.மு.க.வும் ஆரம்பத்தில் இருந்தே இதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இலங்கையில் 48 வருடத்துக்குப் பிறகு இங்கிலாந்து பிரதமர் கேமரூன் இலங்கை வந்துள்ளார். 2008–ம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் நான் பேசி உள்ளேன். இதையொட்டி இங்கிலாந்து பிரதமர் கேமரூன் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு உள்ளார். இது நல்ல விஷயம். அவருடன் இந்திய பிரதமரை ஒப்பிட்டு பார்க்க கூடாது. கேமரூனுடன் மன்மோகன் சிங்கை ஒப்பிட்டு பார்க்கவும் முடியாது.
வரும் பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் மீண்டும் கணேசமூர்த்திதான் போட்டியிடுவார். அவரை வெற்றிபெற செய்யுங்கள்.
இவ்வாறு வைகோ பேசினார்.
மன்னிப்பு கேட்டார் வி.கே.சிங்
ஓய்வு பெற்ற தலைமை ராணுவ தளபதி வி.கே.சிங்கின் வயது பிரச்சினை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து அவர் சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை விமர்சித்து சில கருத்துகளை வெளியிட்டார். அது குறித்து அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வி.கே.சிங் நேற்று நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். பேட்டியின்போது தான் தெரிவித்த கருத்துகளுக்கு எந்த வித உள்நோக்கமும் இல்லை என்று குறிப்பிட்ட வி.கே.சிங், நீதிபதிகள் தெய்வத்துக்கு சமமானவர்கள் என்றும், அவர்கள் மீது உயர்ந்த மதிப்பும், மரியாதை யும் வைத்து இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
அப்துல் கலாம் உடல்நிலையில் முன்னேற்றம்
டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென மயங்கி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர் டெல்லி ராஜாஜி மார்கில் உள்ள தனது இல்லத்தில் திடீரென மயங்கி விழந்ததையடுத்து, ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மயக்கமடைந்து கீழே விழந்ததில் நெற்றிப் பகுதியில் ஏற்பட்ட லேசான காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பூரண குணமடையும் நிலையில் உள்ள அவர் ஓரிரு நாட்களில் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
பேசும் சக்தியை இழந்தார் நெல்சன் மண்டேலா
தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவுகு 95 வயதாகிவிட்டது. அவர் தீவிர சிகிச்சைக்கு பின்பு ஓய்வெடுத்து வருகிறார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக பேசும் சக்தியை இழந்துவிட்டார்.
முக அசைவுகள் மூலமே குடும்பத்தினருடன் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார் என்று அவரது மனைவி வின்னி தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)



