Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Thursday, January 16, 2014
பாஜக கூட்டணி.. விஜய்காந்த் மெளனம் சாதிப்பது ஏன்?: தமிழருவி மணியன் சிறப்பு பேட்டி
தமிழருவி மணியன். காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்தவராயினும் ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்த காங்கிரஸை இல்லாது ஒழிப்பதே தன் முதல் பணி என பம்பரமாய் சுழன்று வருபவர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரிக்கும் மதிமுக பொதுச்செயலர் வைகோவை தமிழகத்தின் முதல்வராக்க வேண்டும் என்பதில் பெருவிருப்பை வெளிப்படுத்தி வருபவர் தமிழருவி மணியன்..
தமிழகத்தில் மது ஒழிப்புக்கான களத்தில் கட்சி வேறுபாடுகளை கடந்து கரம் கோர்த்து களம் அமைத்து போராடுகிறவர் தமிழருவி மணியன். லோக்சபா தேர்தலில் காங்கிரஸை வீழ்த்த, திமுக- அதிமுகவுக்கு மாற்றாக ஒரு அணி அமைக்க பாரதீய ஜனதா தலைமையில் மதிமுக, தேமுதிக, பாமக ஆகியவற்றை கொண்ட மாற்று அணிக்காக தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறவர்.
லோக்சபா தேர்தல் கூட்டணி முயற்சிகள், கொள்கைசார் முரண்பாடுகள், அவற்றுக்கான நியாய தர்க்கங்கள், தமிழக- தேசிய அரசியல் நிலைமைகள் குறித்து நம்மிடையே விரிவாக பகிர்ந்து கொண்டார் தமிழருவி மணியன். தமிழருவி மணியன் அளித்த சிறப்பு பேட்டி:
பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இடம் பெற வாய்ப்புள்ளது?:
கேள்வி: தமிழகத்தில் பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இடம் பெற வாய்ப்புள்ளது?. பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினீர்களா?
தமிழருவி மணியன்: மதிமுக, தேமுதிக, பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு வேளாளர் பேரவை உள்ளிட்ட கட்சிகள் பாஜக கூட்டணியில் நிச்சயம் இடம் பெறும். பாமக உடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். பாஜக அணியில் பாமக நிச்சயம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அரசியலில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.
விஜய்காந்த் வசம் 13% வாக்குகள்:
கேள்வி: தேமுதிகவை இழுக்க பலரும் முயலுகிறார்கள். திமுக பலமாக முயல்கிறது. வாசன் மூலமாக காங்கிரஸ் கூட முயற்சிக்கிறது. பாஜக பக்கம் கொண்டு வர மேற்கொள்ளப்படும் உங்களது முயற்சிகள் எந்த அளவில் உள்ளது?
தமிழருவி மணியன்: தேமுதிக அனைத்து கட்சியினரும் தங்களின் கூட்டணியின் இணைக்க விரும்புவதன் காரணம், தேமுதிகவிற்கு என 10 சதவிகித வாக்கு வங்கி உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக உடன் இணைந்து 10 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது.
தேர்தலில் தனித்து நின்று 13 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. எனவே இந்த வாக்கு வங்கிக்காகத்தான் எல்லோரும் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கின்றனர். அதிமுகவிற்கு தனியாக 30 சதவிகித வாக்கு வங்கி உள்ளது. இடது சாரிகளுடன் இணைந்து 33 சதவிகிதமாக அது உயர வாய்ப்புள்ளது.
காங்கிரஸ் கட்சி ஊசலாடிக் கொண்டிருக்கிறது:
எனவே அதிமுகவை விட கூடுதலாக வாக்குகளைப் பெறவேண்டுமானால் மதிமுக, தேமுதிக, பாமக, பாஜக போன்ற கட்சிகள் ஒன்றாக இணைந்தால் மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவினை விட அதிக வாக்கினை பெற முடியும். அதிமுகவிற்கு அடுத்தபடியாக வாக்கு வங்கியுள்ள திமுகவும் அதனால்தான் தேமுதிகவை இழுக்க முயற்சிக்கிறது.
காங்கிரஸ் கட்சி ஊசலாடிக் கொண்டிருக்கிறது. கொஞ்சமேனும் மீடேறுவோம் என்ற நம்பிக்கையில்தான் விஜயகாந்தினை அந்த கட்சி நாடுகிறது. இப்படி பாஜக, திமுக, காங்கிரஸ் என அனைத்துக் கட்சியினரும் விஜயகாந்தினை கூட்டணியின் இணைக்க முயற்சி செய்வதினால்தான் அவர் தற்போது மவுனம் சாதிக்கிறார்.
விஜயகாந்தை 3 முறை சந்தித்துப் பேசியுள்ளேன்:
விஜயகாந்தினை இதுவரை நான் மூன்றுமுறை சந்தித்துப் பேசியுள்ளேன். திமுக கூட்டணிக்கு சென்றால் ஏற்படும் இழப்புகளைப் பற்றியும், காங்கிரஸ் கூட்டணிக்குச் சென்றால் ஏற்படும் மோசமான விளைவுகளைப் பற்றியும் கூறியுள்ளேன். அவரும் பொறுமையாக கேட்டுக்கொண்டார். பிப்ரவரி 2ம் தேதி உளுந்தூர் பேட்டையில் நடைபெற உள்ள மாநாட்டில் அவர் கூட்டணி பற்றி அறிவிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஜனவரி 31ம் தேதிக்குள் கூட்டணிக் கட்சிகளிடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சினை பேசி தீர்வு காணப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
காங்கிரஸ் அரசை அகற்ற வேண்டும்:
கடந்த ஒன்பதரை ஆண்டுகாலம் மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் காங்கிரஸ் தலைமையிலான அரசை அகற்ற வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள். எனவேதான் அதற்கு சமமான பலமுள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
எப்படி சட்டமன்ற தேர்தலில் திமுகவை அகற்ற அதற்கு மாற்றாக உள்ள அதிமுக, தேமுதிக, இடதுசாரிகள் கட்சிகளை ஒன்றிணைத்து திமுகவை வீட்டுக்கு அனுப்பினோமோ அதே போல காங்கிரஸ் கட்சியை அகற்றிட வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டு வருகிறது இந்த பாஜக, தேமுதிக, மதிமுக, பாமக கூட்டணி.
தமிழகத்தில் பாஜக அணி 15 இடங்களில் வெல்லும்:
இது திமுக, அதிமுக அல்லாத அணி. 15 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும். ஒரு சமயம், மிகப்பெரிய மாற்றத்தை தமிழக வாக்காளர்கள் மோடிதான் பிரதமராகவேண்டும் என்று விரும்பினால், அதிமுகவை விட கூடுதல் இடங்களைக் கைப்பற்றும். இது வரும் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
தமிழர் திருநாள் தை பொங்கல்: உலகமெங்கும் உற்சாக கொண்டாட்டம்
சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரும் உற்சாகத்துடனும் மண்ணின் மணத்துடனும் கொண்டாடினர்.
தமிழர்களின் வாழ்வாதாரமான உழவுக்கு உதவி புரியும் சூரியன், தாய் மண், கால்நடைகள் அனைத்துக்கும் மரியாதை செய்யும் விதமாக கொண்டாடப்படுகிறது பொங்கல் திருநாள்.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த மண்ணுக்கு உரிய கலாச்சாரத்துடன் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 7 எம்பிக்கள் உறுதி: வைகோ
கலிங்கபட்டி: நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் ம.தி.மு.கவைச் சேர்ந்த 7 எம்.பி வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ, தனது சொந்த கிராமம் கலிங்கப்பட்டியில் தமிழர் திருநாள், பொங்கலை கொண்டாடினார். பொங்கல் தினத்தன்று காலையில் கட்சி பிரமுகர்கள், தொண்டர்களுடன் நடந்துசென்று பொதுமக்களை சந்தித்தார். வழியெங்கும் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். உள்ளூர் பெரியவர்கள் அவருக்கு மாலையணிவித்தனர். பல்வேறு இடங்களில் மதிமுக கொடியினை ஏற்றிவைத்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் கட்சியினரை கவுரவித்தார்.
மகிந்தவின் அமைச்சரவையில் மாற்றம்? மகிந்த சமரசிங்க வெளிநாட்டமைச்சர்? புதிய பிரதமர்?
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.
பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சு பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறும் எனவும் வெளியுறவு அமைச்சராக தற்போது மனித உரிமைகள் அமைச்சராக பதவி வகிக்கும் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனீவா மனித உரிமைச் சபை, மற்றும் தென் மாகாணம், மேல் மாகாணம் ஆகியவற்றின் தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்னர் அமைச்சரவை மாற்றம் நடைபெறலாம் என குளோபல் தமிழ்ச் செய்திகளின் கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஆகியோருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்துiயாடியதாகவும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய பிரமர் தொடர்பாக இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அதற்கான தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் அமைச்சரவை மாற்றம் குறித்து அரசாங்கம் அறிவிக்கும் என்றும் கூறப்படுகின்றது.
பல இளம் உறுப்பினர்களுக்கு பிரதியமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
EUவின் கொள்கைகளில் சீர்திருத்தம் அவசியம் இல்லையேல் UK வெளியேறுவது தவிர்க்க இயலாதது: George Osborne
ஜரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளில் சீர்திருத்தம் கொண்டு வரப்படாத பட்சத்தில் பிரித்தானியா முழுமையாக அதிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என பிரித்தானியாவின் நிதிஅமைச்சர் ஜேர்ஜ் ஒஸ்போன் (George Osborne) கூறியுள்ளார். இது ஜரோப்பிய ஒன்றிய அரசியல் மட்டங்களில் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரித்தானிய நிதி அமைச்சர்; உலக சனத்தொகையில் 7% சனத்தொகையைக் கொண்ட ஜரோப்பா உலகப் பொதுநல சேவைக்காக மொத்த உலகப் பொதுநல சேவைச் செலவீனத்தின் (Welfare expenses) 50% ஏற்றுக் கொள்வது வருங் காலங்களில் சர்ச்சைக்குரிய விடயமாகலாம் எனவும், ஜரோப்பாவின் கடன் பிரச்சைனைகளால், உற்பத்தியிலும், வியாபாரத்திலும் (Trade and industry) வளர்ந்து வரும் இந்தியா, சீனா நாடுகளோடு போட்டி போட இயலாமையாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக மேற்கு ஜரோப்பாவில் குழந்தைகளுக்காகத் தரப்படும் கவர்ச்சியான உதவிப் பணமும், இலவசமான வைத்திய உதவியும், கிழக்கு ஜரோப்பிய மக்களை மேற்கு நோக்கி வரவழைத்து மேற்கு ஜரோப்பிய பொருளாதார வளர்ச்சியைக் குன்றிடச் செய்வதாகவும் அவர் சுட்டியுள்ளார். இதனால் ஜரோப்பிய ஒன்றிய அரசியலில் சீரமைப்புச் செய்யப்படுவது அவசியம் என்றும், இல்லையேல் இங்கிலாந்து அதிலிருந்து விலக நேரும் நிலையைத் தவிர்க்க முடியாது எனவும் தெரிவித்திருப்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தின் மீது ஐயத்தை தோற்றுவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
நீங்க நல்ல நடிகர்தானுங்கோ! : யாழ்ப்பாணத் தம்பி
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் பண்பாட்டை எப்படியெல்லாம் மதிக்கிற ஒரு உன்னத தலைவர்! என்று இந்தப் புகைப்படத்தை பார்க்கும் ஒருவர் நினைக்க வேண்டும் என்பதே மகிந்த ராஜபக்சவின் ஆசை. தைப் பொங்கலையும் தனது இனவாத ஒடுக்குமுறை அரசியலுக்கு ராஜபக்ச பயன்படுத்துவார் என்று இதற்கு முந்தைய பத்தியில் எழுதியிருந்தேன். அது எதிர்பார்த்ததைவிட அதிகமாக நடந்திருக்கிறது.
இன வெறி - இனப்படுகொலையை செய்த ஜே.ஆர்.ஜெயவர்தனவோ அல்லது மகிந்தவுக்கு முன்பாக இலங்கையை ஆண்ட சந்திரிக்காவோ தமிழில் பேசி தமிழர் இதயங்களை வெல்ல முயற்சி செய்யவில்லை. ஆனால் தமிழைக் கொலை செய்தேனும் தமிழில் பேசி தமிழ் மக்கள்மீது அன்பும் நல்லிணக்கமும் கொண்ட தலைவன் நான் என்று காட்ட மகிந்த முயன்றுகொண்டே இருப்பவர்.ஈழப் போர் நடந்துகொண்டிருந்தபோது ஐ.நாவில் ராஜபக்ச தமிழில் பேசினார். அப்போதெல்லாம் வன்னியில் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டுக ;கொண்டிருந்தனர். தமிழில் பேசிப் பேசியே தமிழ் மொழியை மாத்திரமின்றி தமிழ் மக்களையும் கொலை செய்த பெருமைக்குரியவர் ராஜபக்ச. இப்பொழுது தமிழ் பொங்கலிலும் தன் அரசியலைத் தொடங்குகிறார்.
பொங்கலுக்கு வாழ்த்துத் தெரிவித்த ராஜபக்ச தைப் பொங்கலை இந்துக்களின் பண்டிகை என்றும் இலங்கை வாழ் இந்துக்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் சொல்லியிருந்தார். தைப் பொங்கல் தமிழ் மக்களின் பண்டிகை நாள். அது தமிழகத்திலும் ஈழத்திலுமே கொண்டாப்படுகிறது. அப்படியிருக்க இந்துக்களின் பண்டிகை என்று ராஜபக்சே சொல்லுவது எதற்காக?பொங்கல் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் குறிக்கிற ஒன்று என்றும் தனது ஞானத்தால் உணர்ந்து ராஜபக்ச திருவாய் மலர்ந்திருக்கிறார். உண்மையில் ஐக்கியம், சமாதானம், நல்லிணக்கம் என்பது ராஜபக்சவின் மொழியில் எப்படி அர்த்தம் கொள்கிறது என்பதை வைத்துப் பார்த்தால் அவரது சொல்லும் தமிழர் பொங்கல் நிகழ்வுக்கும் எதிர் எதிர் நிலை உண்டு.
எனது முந்தைய பத்தியில் சொன்னதைப் போல ராஜபக்சவின் படைகள் ஆனையிறவில் பொங்கலை செய்து தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். கிறிஸ்மஸ் மரங்களை மிக உயரமாக நடுவதாலும் பண்டிகை நாட்களில் இராணுவத்தின் இசைக்கச்சேரிகளை போடுவதாலும் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது.அண்மையிலும் இரண்டு தேவாலயங்கள் போலி மதவாதிகளால் உடைக்கப்பட்டது. வடக்கு கிழக்கில் தாக்கப்பட்ட இந்து ஆலயங்கள் எண்ணிக்கையற்றவை. ஆலயங்களை அழிப்பதற்கான திட்டமிட்ட திருட்டுக்களால் வடக்கு கிழக்கு மாத்திரமின்றி தெற்கில் உள்ள ஆலயங்களும் இலக்காகின. பள்ளிவாசல்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிரான வன்முறைகள் வெளிப்படையாக நடக்கின்றன.
இவ்வாறு இன மத ஒடுக்குமுறைகளுக்குமான கட்டளையை இட்டுவிட்டு எதுவும் தெரியாத பிள்ளையாக கொழும்பில் பொங்கிக்கொண்டே தனது நடிப்பாற்றலை மகிந்த ராஜபக்ச நன்றாக வெளிப்படுத்துகிறார்.
இதையெல்லாம் செய்து கொண்டே ஐக்கியம், சமாதானம், நல்லிணக்கம் என்று ஜனாதிபதி பேசுவதைப் பார்க்கையில் தமிழ் பேசும் மக்கள் இன்னமும் அவதானமாகவே இருக்க வேண்டும் போலத் தோன்றுகிறது.
யாழ்ப்பாணத் தம்பி
Subscribe to:
Posts (Atom)




