Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Wednesday, January 22, 2014
24 மணி நேரமும் கரண்ட் கொடுப்பதாக இருந்தால் தமிழக அரசுக்கு ரூ. 60,000 கோடி தேவைப்படுமாம்!
சென்னை: தமிழக மக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டுமா்னால் தமிழக அரசுக்கு ரூ. 60,000 கோடி தேவைப்படுமாம். மின்சார நிபுணர்கள் இப்படிக் கூறியுள்ளனர். ஆனால் அந்த அளவுக்கு தமிழக அரசிடம் பணமும் இல்லை, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் இல்லையாம். எனவே இது இப்போதைக்கு சாத்தியமில்லை என்றும் அவர்கள் பீதியைக் கிளப்புகிறார்கள். இவ்வளவு பணம் செலவழித்து அனல் மின் நிலையங்களை அதிக அளவில் உருவாக்குவதன் மூலம் மட்டுமே தமிழகத்தின் மின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்து 24 மணி நேரமும் மின் விநியோகத்தை தடையில்லாமல் தர முடியுமாம்.
அதிகரித்த மின் தேவை.. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மின் தேவை பெருமளவில் அதிகரித்து விட்டது. ஆனால் அதற்கேற்ற திட்டமிடல்கள் சுத்தமாக இல்லையாம். இதனால்தான் தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
தொழில் வளர்ச்சி தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் தொழில் துறை நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது. பல நிறுவனங்கள் இங்கு வந்துள்ளன. அதை விட முக்கியமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருமளவில் வந்து குவிந்துள்ளன. ஆனால் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், மின் நுகர்வைப் பற்றி சரியாக கணிக்காமல், முறையாக திட்டமிடாமல் போனதால்தான் மின் தட்டுப்பாடு இந்த அளவுக்கு அதிகரிக்க முக்கியக் காரணமாம்.
அரைகுறையாக நிற்கும் மின் திட்டங்கள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மின் திட்டங்களும் அரைகுறையாக முடியாமல் தொங்கிக் கொண்டுள்ளன. பல வருடங்களாக இவை இழுபறியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிக அளவில் அனல் மின் நிலையங்கள் தேவை தமிழகத்தின் மின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய அதாவது 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தை விநியோகிக்க வேண்டுமானால் நிறைய அனல் மின் நிலையங்கள் தேவைப்படுமாம். இவற்றுக்காக குறைந்தது ரூ. 60,000 கோடி வரை தேவைப்படுமாம்.8000 மெகாவாட் மின்சாரம் கண்டிப்பாக தேவை மேலும் புதிய மின் நிலையங்கள் மூலம் தங்கு தடையில்லாமல் 8000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் மின் பற்றாக்குறையை நீக்க முடியுமாம்.
ஒரு மெகாவாட் மின்சாரத்திற்கு ரூ. 6.5 கோடி அனல் மின்நிலையத்தில் ஒரு மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய ரூ. 6.5 கோடி செலவாகுமாம். மேலும் ஒரு முழுமையான அனல் மின் நிலையத்தை அமைக்க குறைந்தது 5 ஆண்டுகள் தேவைப்படும்.
மின்சாரம் அதிகரிக்காவிட்டால் முதலீடுகள் பறிபோகும் தமிழக அரசு உடனடியாக சுதாரித்து, தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு, துரித கதியில் மின் உற்பத்தியை அதிகரிக்க முயலாவிட்டால், மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு பறிபோகும் வாய்ப்புள், அபாயங்கள் அதிகமாக உள்ளன.
தொங்கலில் நிற்கும் 3300 மெகாவாட் மின் திட்டங்கள் தமிழகத்தில் உடன்குடியில் ஒன்றும், எண்ணூரில் இரண்டுமாக 3 மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் மொத்தம் 3300 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். ஆனால் இந்தத் திட்டங்கள் இன்னும் முடியாமல் தொங்கலில் நிற்கின்றன. ஆனால் இவற்றை வேகப்படுத்தி முடிப்பதாக இருந்தால் கூட குறைந்தது இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள்.
அடுத்த 10 ஆண்டுகளில் பற்றாக்குறை 3000 மெகாவாட் ஆகும் அடுத்த ஐந்து அல்லது 10 ஆண்டுகளில் தமிழகத்தின் மின் பற்றாக்குறை மேலும் அதிகரித்து 3000 மெகாவாட் ஆக உயரும் என்றும் நம்பப்படுகிறது.
காற்றையும், சூரியனையும் நம்பி தமிழகம் பெரும்பாலும் காற்றாலை மின்சாரத்தைத்தான் பெரிதும் நம்பியுள்ளது. இதுதான் சிக்கலாகி விடுகிறது. காற்று நின்று போனால், மின்சார உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்க இதுவரை உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்றும் நிபுணர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
பாதிக்கு மேல் காற்றாலை மின்சாரம்தான் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் 13, 766 மெகாவாட் மின்சாரத்தில் கிட்டத்தட்ட 7000 மெகாவாட் மின்சாரத்தை நாம் காற்றாலை மூலம்தான் பெறுகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பது நிபுணர்களின் கருத்து. சுதாரிக்குமா தமிழகம்...
நடிகர் கார்த்திக் கார் மீது கல் வீச்சு!- கருத்துக் கேட்பு கூட்டத்தில் பரபரப்பு :மதுரை:
மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் கருத்து கேட்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட, கட்சியின் தலைவரும் நடிகருமான கார்த்திக் கார் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில், கார் கண்ணாடி உடைந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் மாநில செயலாளராக இருந்த பாலமுருகனை நீக்கி திங்கள்கிழமை தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து கட்சிக்கு புதிய செயலாளர் நியமனம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது பாலமுருகன் ஆதரவாளர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் மாநில செயலாளர் பூபாலன் 5 மாதத்திற்கு முன் இறந்த துக்கத்தினை, விசாரிக்காத கார்த்திக் மீது கோபம் கொண்ட அவரது ஆதரவாளர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மதுரை திருநகர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற திருநகர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சதானந்த கவுடா:கர்நாடகாவில் ராகுல் எங்கு போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டி
பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் சதானந்த கவுடா கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகத்தில் மைசூர், உடுப்பி, சிக்மகளூர் உள்ளிட்ட எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து பாஜக சார்பில் நான் போட்டியிடுவேன்.
பெங்களூரு வடக்கு மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட நான் உள்பட 6 பேர் விருப்பம் தெரிவித்துள்ளோம். நடப்பாண்டு கர்நாடக சட்டசபை கூட்டத் தொடர் 7 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது. இது குறைந்தபட்சம் 15 நாட்களாவது நடத்தப்பட வேண்டும். அதிக நாள்கள் கூட்டத் தொடர் நடைபெறுவதை அமைச்சர்களும், ஆளும் கட்சி உறுப்பினர்களும் விரும்புவதில்லை. அவர்களுக்கு ஆட்சி நடத்துவது தொடர்பான எந்தத் திறமையும் இல்லாததே இதற்கு காரணம். முதல்வர் சித்தராமையா ஆண்டுக்கு 60 நாள்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். ஆனால், அவர் கூறியதை என்றைக்குமே நிறைவேற்றமாட்டார். நான் முதல்வராகப் பணியாற்றிய போது, சகாலா திட்டத்தில் 4 லட்சம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், ஊழல்கள் 50% குறைந்தன. தற்போது காங்கிரஸ் அரசில் முறைகேடுகள் அதிகரித்துள்ளன. இவ்வாறு சதானந்த கவுடா தெரிவித்தார்.
வேட்பாளர் யார்?
ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் துவங்க உள்ளதால், சில தினங்களில், வேட்பாளர் பட்டியலை, முதல்வர் வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது
பதினோராயிரம் உயிர்களைப் பலி கொண்டிருக்கலாம் என நம்பப்படும் சிரியா யுத்தத்தம் முடிவுக்கு வருமா?
மூன்று வருட காலத்தில் பதினோராயிரம் உயிர்களைப் பலி கொண்டிருக்கலாம் என நம்பப்படும் சிரியா யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் எண்ணத்தில், ஆட்சியாளரையும் எதிரணியினரையும் பேச்சுவார்த்தை மேசையில் வருகின்ற புதன் கிழமை அமரவைக்கும் செயலிற்கான அழைப்பு ஜ. நா. சபையின் பொதுச் செயலர் பன்கி மூனால் ( Ban - Ki Moon ) விடுக்கப்பட்டுள்ளது,
அவுஸ்திரேலியா, கிரேக்க நாடு, லக்ஸம் பேர்க் ( Luxemburg ) போன்ற நாடுகள் தங்கள் பிரதி நிதிகளை அனுப்பிவைக்க முடிவு செய்துள்ளது. சிரியா நாட்டு இரத்தைப் பெருக்கை நிறுத்த இந்த நாடுகளால் என்ன செய்ய முடியுமென்பது புரியாத புதிரக உள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தை Genf II எனப் பெயரிடப்பட்டது, சுவிஸ் நாட்டிலுள்ள ( Montreux ) மொன்றுவா இல் இடம் பெறவுள்ளது.
உலகின் முப்பது நாடுகள் பங்கு கொள்ள விருக்கும் இந்தப் பேச்சுவார்த்தை மூலம் இடைக்கால அரசாங்கமொன்றை நிறுவுவது ( Transitional Goverment ) முக்கிய நோக்கமாயுள்ளது
சிரியாவின் சர்வாதிகாரி பஷார் அல் அசாத் ( Bascha Al - Asaad ) உடன் மிகநெருங்கிய உறவைக் கொண்டிருக்கும் ருஷ்யாவும், ஈரானும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருந்தன.
ஈரான் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கான நிபந்தனைகள் பற்றி அமெரிக்காவும் ருஷ்யாவும் மாதக் கணக்கில் திரைக்குப் பின்னால் வாதங்களில் ஈடுபட்டன. மற்றைய நாடுகள்போல், Gen I இல் எடுக்கப்பட்ட முடிவுகளை ஆதரிக்கப் போவதாக. ஈரானின் வெளிவிவகாரச் செயலர் Sarif தனக்குக் கூறியதாக Ban ki Moon வெளியிட்டிருந்த செய்தி ஈரானின் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
ஈரான் ஜனாதிபதி ஹசான் ரொஹானி ( Hasan Rohani ) உள்நாட்டு அரசியற் பிரச்சனைகளுக்கு ஆளாகவேண்டி வருமென அதிருப்தி ஈரானில் நிலவுகிறது. இது தவிர சிரியா நாட்டு சர்வாதிகாரி தான் எந்த விலை கொடுத்தும் Demaskus ஆட்சியில் தொடர்ந்து இருக்க விரும்புவதாகவும், June மாதத்தில் இடம் பெறவிருக்கும் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
சிரியாவின் ஒரு பகுதியிற் தன்னும் போர் நிறுத்தத்திற்கான வழியை இப்பேச்சு வார்த்தை மூலம் சாதிப்பது கடினமாக அமையக் கூடுமென Bascha Al - Assad இன் அறிக்கையையும், ஈரான் பேச்சு வார்த்தையிலிருந்து அமெரிக்காவின் எதிர்ப்பால் விலத்தப்பட்டமையையும் கவனித்த விமசகர்கள் கருதுகின்றனர்.
அத்தோடு Iran இன் உள் நாட்டு அரசியல் நிலைமையானது மிகவும் திடகாத்திரமற்ற நிலையை அடைந்துள்ளது.
அல்கொய்டா ( Al - Quida ) சுனிற் ( Sunniti ) முஸ்லீம்களைப் பலப்படுத்தி ஈரானிற்கு பிரச்சனயைத் தருவதும், லெபனானின் மிகவும் ஆயுதப்பலம் பொருந்திய Hisbollah, 2006 ஆம் ஆண்டு இஸ்ரேல் போரில் இழந்த போராளிகளை விட அதிகளவில் சிரியாப் போரில் இழந்தமையும் ஈரானின் செல்வாக்கை அதன் பிராந்தியத்தில் பலமிழக்கச் செய்துள்ளது.
ஈரான் தன் பலத்தை உலகிற்கு மீண்டும் புதுப்பித்துக் காட்டும் வகையில் இரண்டு போர்க் கப்பல்களை Atlantic கடலிற்கு அனுப்பியுள்ளது. இது வெறும் பயிற்சி முறைகளிலொன்றென அதன் கப்டன் கூறுகிறார்.
.அமெரிக்கக் கரையோரப் பகுதியை அண்மித்த சர்வதேச கடற் பரப்பில் தன் கப்பலை நிறுத்தப் போவதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஈரான் குறிப்பிட்டிருந்த்து..
அரசியல் என பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்குப் பதில் அதன் தோற்றங்களை மாற்றியமைத்து உவகை கொள்ளும் அதிகாரக் கலை உலகில் அரசியல் எனப்படுகிறது.
ஐரோப்பிய செய்தியாளர் மகேந்தி:-
சேர்பியா 2020ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைகிறது? ஐரோப்பிய செய்தியாளர்:-
சேர்பியப் ( Serbia) பிரதமர் Ivia Dacic தனது நாடு 2020 இல், ஜரோப்பிய ஒன்றியத்தோடு இணைய விரும்புவதாகத் தன் எண்ணத்தை தெரிவித்துள்ளார். பல ஆண்டுகள் தொடர்ச்சியாக இடம் பெற வேண்டிய பேச்சு வார்தைகளுக்கான ஆரம்பம் இதுவாகும்.
தன் நாடு ஜரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான சகல நிபந்தனைகளையும் 2018 ஆம் ஆண்டு அளவில் பூர்த்தி செய்துவிடுமென்றும், 2020 ல் ஜரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது ஜரோப்பிய ஒன்றியக் கூட்டு நாடுகளின் எண்ணிக்கையை இருபத்தொண்பதாக உயர்த்தும்.
சேர்பியா, கொசொவோ ( Kosovo ) நாட்டோடு இணந்து எல்லைப் பரிபாலனத்தில் ஈடுபட்டதும், சேர்பியாவில் வாழும் வடகொசொவோ மக்களின் பிரச்சனைக்கான தீர்வையெட்ட கொசொவோவுடன் இணங்கியதுமே, சேர்பியா ஜரோப்பிய ஒன்றியத்தில் கூட்டுச் சேரும் வாய்ப்பைப் பெற்றுத் தந்துள்ளது.
மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதும், நீதி சுதந்திரம் பாதுகாப்பு என்பன நாட்டில் நிலவவேண்டியதும் ஜரோப்பிய ஒன்றியத்தோடு இணைய விரும்பும் அயல் நாடுகள் பயிற்சிக்க வேண்டிய முதன்மை வாய்ந்த அடிப்படை நிபந்தனையாகும். இந்த நிபந்தனைகள் தொடர்பான பேச்சுவார்த்தகள் 2014 ஆம் ஆண்டிலேயே ஆரம்பமாகுமென்றும் இது சம்பந்தமான சகல விடயங்களும் பேசி முடிவெடுக்கப்பட்டபின் தொடர்ந்து நிலுவையில் இருக்கும் முப்பத்தைந்து நிபந்தனைகளும் ஒவ்வொன்றாகக் கையளாப்படுமெனவும் ஜரோப்பிய ஒன்றியத்தை விரிவுபடுத்தும் ஆணயரான Stephan Fuela கூறியுள்ளார்.
சென்ற மாதங்களிள் மட்டும் 18,000 சேர்பியர்கள் ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியமையும், ஜேர்மன் அரசாங்கம் Brussel இல் அதனைக் கடுமையாகக் கண்டித்துப் பேசியமை காரணமாகவும், ஜரோப்பிய ஒன்றிய நாடுகளல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு நுளைவு அனுமதிபெறும் (Visa ) சட்டம் கடுமையாக்கப்பட்டு EU நாடுகளின் ஒப்புதலுக்குக் காத்துள்ளது.
சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க தலைமையில் சமயங்களுக்கு இடையிலான நல்லுறவுக் கூட்டம்:-
சமயங்களிடையேயான நல்லுறவை வளர்ப்பதற்கான அரங்கத்தின் கூட்டத்தில் பங்குபற்றுமாறு மூன்று பீடங்களினதும் மாநாயக்கர்களிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க நேரில் சென்று அழைர்ர் விடுத்துள்ளார். அந்த வகையில் ஒவ்வொரு பீடங்களும் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து அனுப்பி வைக்குமாறும் கோரி உள்ளார்.
இவ்வாறே, கிறிஸ்தவ, இந்து மற்றும் முஸ்லிம் சமயங்களின் உயர் பீடங்களும் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து, எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறும் கூட்டத்திற்கு அனுப்பிவைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென் ஆசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனம் இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது. இலங்கை மன்ற கல்லூரி மண்டபத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி பி.ப 4 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது.
இலங்கையில் சமய நல்லுறவை வளர்ப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய வரைபைத் தயாரிக்க, முக்கியஸ்தர்களின் குழுவொன்றை தென் ஆசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனம் நியமித்துள்ளது.
இந்த குழுவில் சமய தலைவர்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் சிவில் சமூக தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ந்தியப் புலிகளுக்கு புதிய நோய் ஆபத்து
இந்தியாவில் சட்டவிரோத வேட்டையால் புலிகள் அழிந்து விடலாம் என்கிற தொடரும் அபாயத்துக்கு மத்தியில், இந்திய புலிகளின் உயிர்களுக்கு புதிய அச்சுறுத்தலாக, நாய்களிடம் இருக்கும் ‘டிஸ்டம்பர்’ என்ற வைரஸ் கிருமி தற்போது புலிகளுக்கும் பரவியிருப்பதாக அஞ்சப்படுகிறது.
கடந்த ஒரு ஆண்டில் இந்தியாவின் வடக்கு பகுதிகளில் இந்த டிஸ்டம்பர் வைரஸ் கிருமி தாக்கியதால் குறைந்தது ஒரு புலியாவது இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து புலிகள் சரணாலயத்திலிருக்கும் புலிகளுக்கும் டிஸ்டம்பர் பரிசோதனை நடத்தப்படும் என்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் புலிகளை இந்த வைரஸ் கிருமி தாக்குவதிலிருந்து தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க கோரியும் அனைத்து புலிகள் சரணாலயத்திற்கும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிக்கை அனுப்பியுள்ளது. சரணாலயங்களைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள நாய்களைக் கண்டுபிடித்து அவற்றுக்கு தடுப்பூசி அளிப்பதும் ஒரு முன்னெச்சரிக்கை முயற்சியாகும்.
காரணம் "டிஸ்டம்பர்" வைரஸ் தொற்றிய நாய்களுக்கும் புலிகளுக்கும் தொடர்பு ஏற்பட்டால் இந்த வைரஸ் கிருமி புலிகளுக்கு பரவுவதற்கு வாய்ப்பு உண்டு. பசியால் புலிகள் இந்த டிஸ்டம்பர் வைரஸ் தாக்கிய நாய்களை உண்டால் அந்த நோய் புலிகளுக்கும் தொற்றிவிடும் என்று அஞ்சப்படுகிறது.
மூளையை தாக்கும் வைரஸ்
இந்த வைரஸ் முதலில் புலிகளின் மூளையைத்தான் பாதிக்கும் என்று தெரிவித்தார் இந்திய கால்நடை ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குனர் கயா பிரசாத்.
"இந்த வைரஸ், புலிகளின் நரம்பு மண்டலத்தைத்தான் முதலில் பாதிக்கும். அவ்வாறு பாதிக்கப்படுவதால் அவை முதலில் தனது பாதையை மறந்துவிடும். பின் காட்டுக்குள் செல்வதற்கு பதிலாக அவைகள் கிராமத்திற்குள்ளும் அதன் வீதிகளிலும், விவசாய நிலங்களிலும் அவை சென்றுவிடுகின்றன," என்றார் கயா பிரசாத்.இவ்வாறு மூளை பாதிக்கப்பட்ட புலிகள் தான் மனிதர்களைக் கொல்கிறதா என்று அவரிடம் கேட்டபோது, தன்னிடம் அதற்கான ஆதாரம் இல்லை என்றாலும், இது கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று அவர் சந்தேகம் வெளியிட்டார். "நரம்பு மண்டல பாதிப்புகளால் அதன் மூளையில் அவைகளின் முடிவெடுக்கும் செயல்திறனை அவை இழந்துவிடுகின்றன. எனவே இந்த டிஸ்டம்பரினால் அவை காட்டை விட்டு வெளியேறி, வேறு இடங்களுக்கு செல்கின்றன. மனிதர்களை அவை கொல்வதற்கு இந்த வைரஸும் ஒரு காரணமாக இருக்க எல்லா வாய்ப்புகளும் உண்டு’ என்றார் கயா பிரசாத்.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் டிஸ்டம்பர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தொடர்ந்து இந்தியாவில் உள்ள பல சரணாலயங்களில் நோய்த் தடுப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் சரணாலயத்தில் தாங்கள் இந்த நோய்த் தடுப்பு திட்டத்தை ஜபல்பூரின் கால்நடை பல்கலைகழகத்துடன் சேர்ந்து துவங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
"முதலில் எங்களின் சரணாலயத்தில் ஒரு புலி மர்மமான முறையால் இறந்ததலிருந்து இது துவங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த புலி இறந்ததில் எங்களின் சந்தேகம் சிறு பூச்சிகளின் மீது தான். அந்த புலி மீது அதிக பூச்சிகள் இருந்தது", என்றார் பன்னா புலிகள் சரணாலயத்தின் இயக்குநர் ஆர் எஸ் மூர்த்தி.
கடந்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் உள்ள துத்வா தேசிய பூங்காவின் ஒரு புலியிடமும், மேற்கு வங்காளத்தில் ஒரு காண்டா மிருகத்திடமும் இந்த டிஸ்டம்பர் வைரஸ் முதலில் கண்டறியப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இந்த வைரஸ் தொடர்பான எச்சரிக்கை அதிகரித்துவருகிறது.
சூரியஒளி பூச்சிக்கொல்லி விளக்கு: இயற்கை விவசாயத்துக்கு புது வரவு
இயற்கை விவசாயத்துக்கு உதவக்கூடிய பயிர்களை அழிக்கும் பூச்சிகளை கொல்லக்கூடிய சூரியஒளியால் செயற்படும் பூச்சிக்கொல்லி விளக்கை தமிழக அரசின் தோட்டக்கலை உதவி இயக்குநர் டேவிட் ராஜா பெவ்லா வடிவமைத்திருக்கிறார்
புகைப்போரின் எண்ணிக்கை ஏறக்குறைய 100 கோடி'
உலகில் புகைப்போரின் எண்ணிக்கை ஏறக்குறைய 100 கோடி என்ற அளவுக்கு உயர்ந்துவிட்டதாக புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
ஆனால் , புகைப்போரின் எண்ணிக்கை அதிகரித்தாலும், உலக மக்கள் தொகையில் விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால், புகைப்போரின் விகிதம் குறைந்து வருவதாக அமெரிக்க மருத்துவ சங்கத்தின் சஞ்சிகையில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
உலக மக்கள் தொகை கடந்த 50 ஆண்டுகளில் இரட்டிப்பாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா மற்றும் இந்தோனேஷியா போன்ற சில நாடுகளில், ஏறக்குறைய பாதிக்கும் அதிகமான ஆண்கள் தினமும் புகைக்கிறார்கள்.
மக்கள் புகைக்கும் பழக்கத்தைத் தொடங்குவதைத் தடுக்க, வரிகளை அதிகரிப்பது, சிகெரெட் பாக்கெட்டுகளில் சுகாதார எச்சரிக்கைகளை பிரசுரிப்பது மற்றும் பொது இடங்களில் புகைப்பதைத் தடைசெய்வது போன்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று இந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
குரங்குகளுக்கு வாழைப்பழம் கொடுக்கத் தடை
இங்கிலாந்தின் தென் மேற்குப் பகுதிலுள்ள மிருகக்காட்சிசாலை ஒன்று, ஆச்சரியமளிக்கும் வகையில் அங்குள்ள குரங்குகளுக்கு வாழைப்பழங்களை அளிக்க தடை விதித்துள்ளது.
வாழைப்பழம் ஆரோக்கியத்துக்கு உகந்தது அல்ல என்று கூறியே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெவன் பகுதியிலுள்ள பைண்டன் மருககாட்சிசாலையிலுள்ள ஊட்டச்சத்து வல்லுநர்கள், குரங்குகளுக்கு காட்டில் கிடைக்கும் பழங்களைவிட வாழைப்பழத்தில் சர்க்கரைச் சத்து கூடுதலாக உள்ளது என்று கூறுகிறார்கள்.
குரங்குகள் போன்ற விலங்குகளுக்கு வாழைப்பழம் கொடுப்பது, மனிதர்களுக்கு கேக்குகள் மற்றும் சாக்லெட்டுகள் கொடுப்பதற்கு சமம் என்றும், அது பற்களை பாதித்து உடலுக்கு கேடு ஏற்படுத்தும் என்றும் அந்த மிருகக்காட்சிசாலை கூறுகிறது.காய்கறிகளும் விருப்பம்வாழைப்பழங்களுக்கு பதிலாக அந்தக் குரங்குகளுக்கு காய்கறிகள் கொடுக்கப்படுகின்றன, அதை அவை பெரிதும் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
குரங்குகள் வாழைப்பழங்களை சாப்பிடுவதால் அவற்றுக்கு வயிறு மற்றும் குடல்பகுதிகளில் உபாதைகள் ஏற்படுகின்றன என்று அந்த மிருகக்காட்சிசாலையின் அதிகாரி ஏமி ஃப்ளோமேன் பிபிசியிடம் கூறினார்.
தமது பாதுகாப்பில் இருக்கும் குரங்குகளை வாழைப்பழங்களிலிருந்து விலக்கி காய்கறிகள் பக்கம் திருப்புவது கடினமாக இருக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
மனிதர்கள் உட்கொள்வதற்காக பயிரிடப்படும் பழவகைகளில் சர்கரைச் சத்து அதிகமாகவுள்ளது என்றும் ஆனால் காடுகளில் கிடைக்கும் பழங்களைவிட குறைவான புரதச்சத்து மற்றும் நார்ச்சத்துகளே அவற்றில் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
குரங்குகளின் குடல் மற்றும் வயிற்றுப் பகுதி பெரும்பாலும் நார்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொண்டு ஜீரணிக்கும் வகையிலேயே இயற்கையாக அமைந்துள்ளது என்றும் அந்த மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் கூறுகிறார்க
அழிவின் விளிம்பில் மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள்
மேற்கு ஆப்ரிக்காவுக்கே உரிய பிரத்யேகமான சிங்கங்கள் இன்றைய நிலையில் அங்கே வெறும் 400 மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் நிலைமை இப்படியே போனால், இந்த மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள் விரைவில் அழிந்துவிடும் என்றும் இது குறித்து நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு ஒன்று எச்சரித்திருக்கிறது.
பந்த்தேரா என்கிற தன்னார்வ அமைப்பு மேற்கு ஆப்ரிக்கப் பிராந்தியத்தில் இருக்கும் பதினேழு நாடுகளில் தனது ஆய்வை மேற்கொண்டது.
செனகலில் துவங்கி நைஜீரியா வரையிலான 17 நாடுகளில் சுமார் ஆறு ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் இறுதி அறிக்கையில் இந்த பிராந்தியத்துக்கே பிரத்யேகமானதும், மரபணு ரீதியில் மற்ற ஆப்ரிக்க சிங்கங்களிடமிருந்து வேறுபட்டதுமான மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள் வரலாற்று ரீதியில் வாழ்ந்த இடங்களில் இன்று வெறும் ஒரே ஒரு சதவீத இடங்களில் மட்டுமே அவை வாழ்வதாக தெரிவித்திருக்கிறக்கிறது.
இந்த அறிக்கையை எழுதிய ஆய்வாளர்களில் ஒருவரான பிலிப் ஹென்ஸ்ஷெசெல் இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசியபோது, சரித்திர ரீதியாக மேற்கு ஆப்ரிக்காவில் சிங்கங்கள் வாழ்ந்துவந்த அவற்றின் பாரம்பரிய வாழ்விடங்கள் 99 சதவீதம் குறைந்துள்ளது என்பது எமது ஆய்வில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.
சிங்கங்கள் வாழ்விடங்கள் விவசாயத் தேவைகளுக்காக பெருமளவில் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டத்தே இதற்கு முக்கிய காரணம் என்றும், பருத்தி பயிர் செயவதற்காகவும், உணவுத் தேவைக்கான இதர பயிர்களுக்காவும் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“கடந்த இருபது ஆண்டுகளில் பத்து நாடுகளுக்கும் மேலாக வாழ்ந்து சுற்றித்திருந்த சிங்கங்கள் இப்போது ஒரு குறிப்பிட்ட பாதுகாக்கப்பட்ட இடங்களிலேயே, அதிலும் மிகவும் ஆபத்தும் அபாயமும் நிறைந்த சூழலில் வாழ்கின்றன என்பது கவலையளிக்கும் ஒரு விஷயம்", என்றும் கூறினார் ஆய்வாளர் பிலிப் ஹென்ஷெசெல்.இந்த சிங்கங்கள் இப்படி வேகமாக அழிவின் விளிம்புக்கு சென்றுகொண்டிருப்பது தமக்கு மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்த ஹென்ஷெசெல், இவை ஆப்ரிக்க கண்டத்தில் இருக்கும் சிங்கங்களில் மரபணு ரீதியில் மாறுபட்டவை என்பதால் இவற்றின் அழிவு என்பது ஒட்டுமொத்தமாக ஒருவகையான சிங்க இனமே அழிவதாகவே அர்த்தப்படும் என்று கூறினார்.
அழிவின் விளிம்பில் நிற்கும் இந்த அரியவகை மேற்கு ஆப்ரிக்க சிங்கங்களை பாதுகாக்க தேவைப்படும் நிதிவசதி இங்குள்ள அரசுகளிடம் இல்லை என்பதுடன், அந்த அரசுகளுக்கு வேறுபல முன்னுரிமை விவகாரங்களும் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, இந்த மேற்கு ஆப்ரிக்க சிங்கங்களை பாதுகாப்பதற்கு சர்வதேச நிதி உதவி தேவை என்று வாதாடும் அவர், அதற்கும் முன்னதாக, இந்த மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள் அழிவில் விளிம்பில் இருக்கும் அருகிவரும் விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அடுத்த கட்டமாக இந்த வகையான மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள் இயற்கையாக வாழும் பிரதேசங்களை பாதுகாக்கத் தேவையான சர்வதேச நிதி உதவியையும் உலக நாடுகள் செய்யவேண்டும் என்றும் அவர் கோரினார்.
மாரடைப்பு நோயாளிகளின் ரத்தத்தில் வித்தியாசமான செல்கள்
மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளின் இரத்தத்தில் வித்தியாசமான செல்கள் அதாவது கலங்கள் மிதப்பதை தாம் கண்டு பிடித்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
111 பேரிடம் நடத்தப்பட்ட சோதனைகளை மையமாகக் கொண்ட இந்த ஆய்வு அறிக்கை உயிரியல் பௌதீகம் குறித்த சஞ்சிகை ஒன்றில் வெளியாகியிருந்தது. இது மாரடைப்பு நோயாளிகளுக்கும், நோயற்றவர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை காட்டக்கூடியதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒருவரது இரத்தத்தில் இந்த பிரத்யேக செல்கள் இருக்கின்றனவா என்பதை அறியும் இந்த பரிசோதனையை வைத்து, ஒருவருக்கு மாரடைப்பு வரக்கூடுமா என்பதை முன்கூட்டியே அறியமுடியுமா என்றும் அவர்கள் தற்போது ஆராய்கிறார்கள்.
கலிபோர்னியாவின் ஸ்கிரிப்ஸ் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த இந்த ஆய்வாளர்கள் குழு, நோயாளிகளின் குருதிச் சுற்றோட்டத்தில் எண்டோதெலியல் கலங்கள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்தது.
மாரடைப்பு எப்படி உருவாகின்றது என்று பார்த்தால், குருதிக் குழாய்களில் உருவாகும் கொழுப்புப் படிமங்கள் வெடித்து இரத்த ஓட்டத்தில் கலக்கின்றன. அவை இதயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இரத்த ஓட்டத்தை தடுத்து மாரடைப்பை உருவாக்குகின்றன.
இந்தச் செயற்பாட்டின் போது, எண்டோதெலியல் செல்களும் இரத்தத்தில் வெளியிடப்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
மாரடைப்பு வந்த பின்னர் 79 நோயாளிகளிடம் செய்யப்பட்ட சோதனைகள், நோயற்ற ஆரோக்கியமாக உள்ள 25 பேர் மற்றும் இரத்தக்குழாய் நோய்களுக்கு சிகிச்சை பெறும் 7 பேருடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன.
மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் இந்த எண்டோதெலியல் செல்கள் காணப்படுகின்றன என்றும், அது ஆரோக்கியமானவர்களிடம் இல்லை என்றும் கூறுவதற்கான ஆதாரத்தை கண்டு பிடிக்கவே இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும், அந்த இலக்கை தாம் எட்டிவிட்டதாகவும் இந்த ஆய்வுக்குழுவைச் சேர்ந்த பேராசிரியர் பீட்டர் குன் தெரிவித்துள்ளார்.
மாரடைப்பு நோயின் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களை கண்டு பிடிக்கவும் தமது ஆய்வு உதவும் என்றும் அவர் கூறுகிறார்.
கிழக்கிலங்கை: அத்துமீறிய குடியேறிகளை அகற்ற உத்தரவு
இலங்கையின் கிழக்கே கால்நடைகளுக்கான மேய்ச்சல் இடங்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் அத்துமீறி குடியேறியுள்ள சிங்கள மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசத்தில் அவ்வகையில் மேய்ச்சல் தரைகளில் அத்துமீறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் மீதே சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க காணி அபிவிருத்தி அமைச்சர் ஜான பண்டார தென்னக்கோன் உத்தரவிட்டுள்ளார்.
போருக்கு பின்னரான காலகட்டத்தில் அந்த மாவட்டத்தில் அரச காணிகளிலும், வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளிலும், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள மக்கள் அத்துமீறி கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வேளாண்மை செயல்பாட்டில் ஈடுபட்டனர் என்று பல்தரப்பட்டவர்கள் அரசிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதன் காரணமாக அங்கு கால்நடைகள் கொல்லப்படுவது உட்பட பல சமூக விரோத செயல்பாடுகள் இடம்பெற்றிருந்ததும் குறிப்பிடத்தகுந்தது.
அவ்வகையில் பிரச்சினைகள் மேலோங்கியதை அடுத்தே இன்று-செவ்வாய்கிழமை பல்துறை அமைச்சுகளின் அதிகாரிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா உட்பட பலர் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று பிபிசி தமிழோசையின் மட்டக்களப்புச் செய்தியாளர் கூறுகிறார்.
போருக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்ட கால்நடைகளின் மேய்ச்சலுக்கு என்று சுமார் 50 ஆயிரம் ஏக்கர் காணி என அடையாளமிட்ப்பட்டுள்ள போதிலும் இது வரை வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படாமை தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆராய்யப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தை அடுத்து இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து அரச துறைகளும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் ஜானக பண்டார அந்தக் கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளதாக பொன் செல்வராசா பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
மனித உரிமைகள் விஷயத்தில் இலங்கையில் முன்னேற்றம் இல்லை"
இலங்கையில் கடந்த மூன்று மாதங்களில் மனித உரிமை நிலவரங்கள் எந்த வகையிலும் மேம்படவில்லை என்று பிரிட்டனின் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் நாடுகளுக்கான அமைச்சகம் தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.உலகளவில் 27 நாடுகளிலுள்ள மனித உரிமைகள் நிலவரம் குறித்து நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, கடந்த அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் அந்த நாடுகளில் மனித உரிமைகள் நிலவரம் எப்படியிருந்தது என்பதை விபரிக்கிறது.
கடந்த ஆண்டு இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்ற போது, மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் பார்வை அதன் மீது கூடுதலாக இருந்தபோதிலும், அதில் முன்னேற்றத்தை காண முடியவில்லை என்று பிரிட்டிஷ் அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.தமது இந்தக் கருத்துக்கு ஆதாராமாக சில விஷயங்களை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கொழும்பில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான ஒரு நிகழ்வில் பங்குபெற வடபகுதியைச் சேர்ந்த, காணாமல் போனோரின் உறவினர்கள் கொழும்பு போக முற்பட்ட வேளையில், இராணுவத்தினரால் அவர்கள் தடுக்கப்பட்டனர் என்று கூறும் அந்த அறிக்கை, நவம்பர் மாதம் 14 ஆம் தேதி அந்த நிகழ்வின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் கூறுகிறது.
அந்த நிகழ்வுக்கு சென்ற ஒரு தமிழ் இளைஞர் காவல்துறையால் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டார் என்றும், தாக்குதலுக்கு உள்ளானார் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அதேபோல கொழும்பில் அதேமாதம் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் மனித உரிமை ஆர்வலர்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி முன்னெடுத்த விழிப்புணர்வு நடவடிக்கையை தடுக்கும் நோக்கில் நீதிமன்றத்திலிருந்து ஒரு தடையாணையை பெற்றனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.அதேபோல காமன்வெல்த் மாநாட்டின் போது ஊடகவியலாளர்கள் அச்சுறுத்துப்பட்டு பவேறு பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர், சாட்சிகளுக்கான பாதுகாப்புச் சட்டம் நாட்டில் முன்னெடுக்கப்படுவதையும் அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என கடந்த டிசம்பரில் தெரிவித்திருப்பது ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கை என்றும் பிரிட்டிஷ் அரசின் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)











