Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Monday, February 10, 2014
ஜெனிவா அமர்வில் நேரடியாக களமிறங்கும் பிரித்தானிய, கனடா -
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் 25வது அமர்வின், துவக்க நாளன்று பிரித்தானிய, மற்றும் கனேடிய வெளிவிவகார அமைச்சர்கள், பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.
அடுத்தமாதம், 3ம் நாள், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது அமர்வு ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் ஆரம்ப அறிக்கையை அடுத்து, முதல்நாளன்று, உயர்மட்டப் பிரதிநிதிகளின் உரைகள் இடம்பெறும்.
இதில் பங்கேற்று உரையாற்றும் உயர்மட்டப் பிரதிநிதிகளின் அட்டவணை கடந்த வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
காலை அமர்வில், காபோன், கம்போடியா, ரஸ்யா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் உரையை அடுத்து, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹகியூ உரையாற்றுவார்.
பிற்பகல் அமர்வில், கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் உரையாற்றவுள்ளார்.
கனேடிய வெளிவிவகார அமைச்சர் தமது உரையில், சிறிலங்காவைக் கடுமையாக விமர்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹகியூ, அந்த அமர்வில் அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் குறித்து கருத்து வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியா இந்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கவுள்ளது.
அதேவேளை, சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கனேய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் வலியுறுத்தி வரும் நிலையில், ஜெனிவாவிலும் அதை அவர் மீண்டும் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும, உயர்மட்டப் பிரதிநிதிகளின் உரை அட்டவணையில், ஐரோப்பிய ஆணைக்குழுவின் உதவித் தலைவரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான உயர் பிரதிநிதியுமான கத்தரின் அஸ்ரன், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் லோறன்ட் பபியஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
அதேவேளை, உயர்நிலைப் பிரதிநிதிகளின் உரை அமர்வில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உரையாற்றுவாரா என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.
குளிர்கால ஒலிம்பிக் 2014 ரஷ்யாவின் ஸோச்சி கடலோர-சுற்றுலா நகரில் வெள்ளியன்று அதிகாரபூர்வமாக தொடங்குகிறது.
முன்னெப்போதும் நடந்திராத அளவுக்கு மிகப் பெரும் பணச் செலவில் இந்த விளையாட்டு விழா நடக்கிறது.சுமார் 40 ஆயிரம் பாதுகாப்பு பணியாளர்களுடன் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆரம்ப விழா தொடர்பான விபரங்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
விளையாட்டு வீரர்கள் அவர்களின் நாட்டு வரைபடங்களுடன் மைதானத்தின் மத்தியில் தோன்றுவார்கள் என்ற விபரத்தை மட்டும் ஏற்பாட்டாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இம்முறை வின்டர் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் பற்றிய பிரச்சாரங்கள் பல்வேறு கவலைகளால் மூழ்கடிக்கப்பட்டிருந்தன.
விளையாட்டரங்குகளுக்கான பாதுகாப்பு, மனித உரிமை விவகாரங்கள் மற்றும் மைதான கட்டுமானங்களில் ஏற்பட்ட தாமதங்கள் போன்ற விவகாரங்களால் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.
ஆனால், இனிமேல் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பில் கவனம் குவியும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
முந்தைய வின்டர் ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் செலவினங்களுக்கும் அதிகமாக, இம்முறை போட்டிகளுக்காக 40 பில்லியன் டாலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்காட்லாந்து எம்முடனேயே இருக்க வேண்டும்': பிரதமர் கெமரன்
ஸ்காட்லாந்து மக்களை தம்மோடு தொடர்ந்தும் இணைந்தே இருக்குமாறு இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வட- அயர்லாந்து பிராந்தியங்களின் மக்கள் கோர வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஸ்காட்லாந்து தனிநாடாக சுதந்திரம் பெற வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு இந்த ஆண்டு செப்டெம்பெரில் நடக்கிறது.ஸ்காட்லாந்து பிரியவேண்டும் என்று தீர்மானித்தால், முழு ஐக்கிய இராச்சியமும் 'மோசமாக சுருங்கிவிடும்' என்று பிரதமர் கெமரன் லண்டனில் ஆற்றிய உரையில் கூறியுள்ளார்.
அதேபோல, நாடு ஐக்கியப் பட்டிருக்கவேண்டும் என்பதை ஆதரிப்பவர்கள் 'அலட்சியமாக' இருந்துவிடக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அதேநேரம், டேவிட் கெமரன் 'கோழைத் தனமாக' இந்த உரையை ஸ்காட்லாந்தில் ஆற்றவில்லை என்று ஸ்காட்லாந்து தேசியக் கட்சி கூறியுள்ளது.
கிழக்கு லண்டன் ஒலிம்பிக் பார்க் அரங்கில் உரையாற்றிய கெமரன், 2012- ஒலிம்பிக் போட்டிகளில் 65 பதக்கங்களை வென்ற பிரிட்டன் ஒலிம்பிக் அணியின் ஒற்றுமை உணர்வை நினைவுகூர்ந்தார்.
ஆளும் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி வாக்குறுதி அளித்தபடி, எதிர்வரும் செப்டெம்பர் 18-ம் திகதி நடக்கவுள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், ஸ்காட்லாந்தில் வாழும் 16 வயதுக்கு மேற்பட்ட சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர்.
'உலகில் பெரிய பங்கு வகிக்கும் நாடொன்றின் அங்கமே ஸ்காட்லாந்து' என்று கூறிய கெமரன், 'ஒட்டுமொத்த 63 மில்லியன் ( 6.3 கோடி) பேரான நாம் எல்லோரும் இந்த வாக்கெடுப்பால் கடுமையாகப் பாதிக்கப்படுவோம்' என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தொழு நோயாளிகளின் எண்ணிக்கை
இலங்கையில் தொழு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றமை பல தரப்பிலும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுக்கு 2000 புதிய நோயாளிகள் என்ற அளவில் தொழு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்த கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சுகாதார அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்துள்ளது.
எனினும், ஏற்கனவே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்துவந்த இடங்களிலேயே தற்போதும் இந்த அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொழு நோய் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம் தமிழோசையிடம் கூறியது.
குறிப்பாக, 2013-ம் ஆண்டில் மேல்மாகாணத்திலேயே 44 வீதமான தொழு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகிறது.
அடுத்தபடியாக, 14 வீதமான நோயாளர்கள் கிழக்கு மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.
கடந்த ஆண்டு நாடெங்கிலும் பதிவான தொழு நோயாளர்களில் 177 பேர் சிறார்கள் என்று தொழு நோய் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் இயக்குநர் டாக்டர் நிலந்தி பெர்ணான்டோ தமிழோசையிடம் கூறினார்.
2020-இல் ஆண்டுக்கு 1000 நோயாளிகளாக குறைப்பது அரசின் இலக்கு
இந்த சிறார் நோயாளிகளில் கூடுதலானோர் வடக்கு மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். அங்கு 40 சிறார்கள் கடந்த ஆண்டு தொழு நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.
1000க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் ஆண்டுதோறும் பதிவாகும் 16 நாடுகளில் இலங்கையும் ஒன்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கிறது.
இலங்கையில் தொழு நோய் ஒழிக்கப்பட்டதாக 1995ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், தொழு நோய் இலங்கையில் பெரும் சுகாதாரப் பிரச்சனையாக இனிமேலும் இருக்கமுடியாது என்ற அர்த்தத்திலேயே 1995-ம் ஆண்டு அறிவிப்பு வந்தது என்றும் தொழு நோயை முழுமையாக ஒழிப்பதில் சிரமங்கள் இருப்பதாகவும் டாக்டர் நிலந்தி பெர்ணான்டோ கூறினார்.
2020-ம் ஆண்டில் இலங்கையில் தொழு நோயை ஒழிப்பதற்கு அரசு இலக்கு வைத்துள்ள போதிலும், தொழு நோயை முற்றாக ஒழிப்பது என்பது சந்தேகத்துக்குரியதே.
இலங்கையில் புதிதாக பதிவாகும் தொழு நோயாளிகளின் எண்ணிக்கையை 2020-இல் ஆண்டுக்கு 1000 என்ற அளவுக்குள் குறைத்துக்கொள்ளும் நோக்கத்துடனேயே தமது நிகழ்ச்சித்திட்டம் செயற்படுவதாகவும் சுகாதார அமைச்சின் தொழு நோய் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் இயக்குநர் கூறினார்.
மைகோபக்டீரியம் லெப்ரே (Mycobacterium leprae) என்ற பக்டீரியா மூலம் தொற்றும் தொழு நோயின் அறிகுறிகளை கண்டுபிடிக்க பல ஆண்டுகள் எடுக்கலாம் என்பதே இந்த நோயை ஒழிப்பதில் உள்ள பெரிய சவால் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் புள்ளிவிபரங்களின்படி, ஆண்டுக்கு 1000க்கும் அதிகமான தொழு நோயாளர்கள் பதிவாகும் 16 நாடுகளில் இலங்கையும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் சிங்கள அரசால், படுகொலை செய்ய காங்கிரசே காரணம்: மோடியிடம் வைகோ:-
தமிழக மீனவர்கள் பிரச்னையில் வாஜ்பாய் கடைபிடித்த அணுகுமுறையையே நீங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று மோடியிடம் வைகோ கேட்டுக்கொண்டார். அதற்கு மோடி, ''அப்படியே செய்வோம்" என்று ஏற்று கொண்டுள்ளார்.
வண்டலூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்திற்கு பின் நேற்று இரவு தனியார் ஹோட்டலில் நரேந்திர மோடியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்தார். அப்போது, காலையில் இம்பாலில் பேசிவிட்டு, பகலில் கெளஹாத்தியில் பேசிவிட்டு, மாலையில் இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் உணர்ச்சிமிக்க உரையாற்றுவது என்பது அனைவராலும் இயலாது.
“இந்தியில் நீங்கள் உரையாற்றும் நிமிடங்களில் அம்மொழியைப் புரிந்து கொள்ளாதவர்களைக் கூட நீங்கள் எழுப்பும் உணர்ச்சி மிக்க குரல், அதன் தொனி, உங்களுடைய கரங்களும் முகமும் வெளிப்படுத்தும் பாவனை மக்களை வசீகரித்தது. இன்று நீங்கள் ஆற்றிய உரை, உன்னதமான சொற்பொழிவாகும்” என்று வைகோ கூறியபோது, “மிகச்சிறந்த பேச்சாளரான நீங்கள் அல்லவா? பாராட்டுகிறீர்கள்” என்றார் மோடி.
“இன்றைய பேச்சில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மாநில உரிமைகளை நசுக்குவதைக் கண்டித்து, கூட்டாட்சி தத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தியது, நாட்டுக்கு மிக அவசியமான கருத்தாகும்” என்று வைகோ கூறியபோது, “தமிழ்நாட்டுக்கு இந்தக் கருத்து மிகவும் அவசியமாயிற்றே” என்றார் மோடி.
“தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்படுவதையும், அதைத் தடுக்காத மத்திய அரசின் கையாலாகாத தன்மையைப் பற்றிச் சாடியதும், நதிகள் இணைப்பின் அவசியத்தை வலியுறுத்தியதும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பங்கேற்ற தமிழ்நாட்டு கட்சிகள் ஊழல் செய்து அதனால் பலன் பெற்றதைப் பற்றியும் நீங்கள் கூறியதோடு, தன்னை மேதையாகக் கருதிக்கொள்ளும் மறு வாக்கு எண்ணிக்கை புகழ் அமைச்சர் சிதம்பரத்தை கிண்டல் செய்த முறையும் பேச்சின் சிறப்பான முத்திரைகள் ஆகும்” என்றார் வைகோ.
“வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க. மட்டுமே 250 முதல் 272 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறும். நாடெங்கும் மோடி அலை வீசுகிறது. தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தி.மு.க., அ.தி.மு.க. என்று இதுவரை இருந்த பரிமாணம் மோடி அலையால் இம்முறை உடையும். புதிய மாற்றம் தொடங்கும்” என்று வைகோ கூறியபோது, “நானும் அப்படித்தான் எதிர்பார்க்கிறேன்” என்றார், மோடி.
“லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் சிங்கள அரசால், படுகொலை செய்யப்பட்டதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் துரோகமும் காரணம் ஆகும். அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் கடைபிடித்த அணுகுமுறையையே நீங்கள் அமைக்கப் போகிற அரசும் பின்பற்ற வேண்டும்” என்று வைகோ கூறியதற்கு, “அப்படியே செய்வோம்” என்று கூறினார் மோடி.
சீனா, இலங்கை போன்ற நாடுகள் இந்தியா மீது அழுத்தங்களை பிரயோகிக்கின்றன – மோடி
சீனா, இலங்கை போன்ற நாடுகள் இந்தியா மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் அரசாங்கம் அண்டை நாடுகளுடன் உரிய முறையில் தொடர்புகளை பேணவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிய நாடுகள் இந்தியா மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ராஜதந்திர விவகாரங்களில் காங்கிரஸ் அரசாங்கம் பலவீனமாக காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா வலுவாக இருந்தால் அண்டை நாடுகளின் அழுத்தங்களுக்கு அஞ்ச வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சுவிஸின் பொதுஜனவாக்கெடுப்பு வெளிநாட்டவரின் பிரவேசத்தை கட்டுப்படுத்தும் முடிவை கொடுத்துள்ளது-
பழமை வாத தேசிய மக்கள் கட்சியினரால் சுவிஸ் நாட்டில் நேற்றைய ஞாயிற்றுக் கிழமை நடாத்தப்பட்ட பொது ஜன வாக்கெடுப்பு, பெருந்திரளான குடியேற்றத்தைத் தவிர்ப்பதற்கான முடிவுகளைத் தந்துள்ளது.
ஏறத்தாள பதினைந்து சிறிய மாநிலங்கள் (kanton) அதனை ஆதரித்தும், ஒன்பது சிறிய மாநிலங்கள் மறுப்புத் தெரிவித்தும் வாக்களித்திருந்தன. இந்த வாக்கெடுப்பின் முடிவானது ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தை உறையச் செய்வதாகவும், மிகவும் அபாயகரமான விளைவை ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைவில் ஏற்படுத்துமெனவும், ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கம் கருதுகிறது.
இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகள் அதிகமாக சுவிஸ் நாட்டில் வாழ்வதாகவும், இவர்களின் இருப்பும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வியாபார ஒப்பந்தங்களும் சுவிஸ் நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைத் தோற்றுவித்திருந்தன.
குறிப்பாக சூரிச் மாநிலத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் முளைத்தெழுந்த உணவு விடுதிகளும், கட்டிடங்களும், தொழில் நிறுவனங்களும் வெளிநாட்டவர்களின் வருகையாலெனும் உண்மை நிலை இருக்கும் போது, அதன் புனிதத்தைப் பொய்கள் புனைந்து புதைத்து, ஐரோப்பிய இணைவைக் குலைக்க எடுத்த முயற்சி மிகவும் பாதகமானது.
எதுவொன்று தன் சொந்த அடையாளத்தைக் காத்துக் கொள்ள மற்றொன்றை விலத்துகிறதோ, அது மிகவும் பலவீனம் அடைந்துள்ளதாகக் கருதப்படல் வேண்டுமென்றும், பெருந்தொகையான பணத்தை வைத்திருக்கும் நாடு கடுமையாகப் பயப்படுவது வேதனைக்குரியதென்றும் பிற ஐரோப்பிய நாட்டு மக்கள் கருதுகின்றனர்.
பெண்களுக்குஎதிரான வன்முறைகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைககளை நடைமுறைப் படுத்திய நாடு இலங்கை– சிராந்தி
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைககளை நடைமுறைப்படுத்திய நாடாக இலங்கை விளங்குகின்ற அதேவேளை, இலங்கை அரசியலமைப்பின் படி ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்பது அனைத்துப் பிரஜைகளினதும் உரிமையுமாகும் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என ஜனாதிபதியின் பாரியாரும் இலங்கையின் முதல் பெண்மணியுமான ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறீ சிறீ ரவிசங்கரின் ஆர்ட் ஒப் லிவிங் (வாழும் கலை) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் மாநாடு, இந்தியாவின் பங்களுர் நகரில் நேற்று (08.02.14) நடைபெற்றது. ஆறாவது முறையாக நடத்தப்படும் இந்த மாநாடானது இம்முறை 'பரிபூரணமாக அபிவிருத்தி' என்ற தொனிப்பொருளின் கீழ் நடத்தப்பட்டது.இதில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதியின் பாரியார், 'இலங்கையில் நடைமுறையிலுள்ள மகளிர் கொள்கைகளுக்கு அமைய பெண்களுக்கான அரசியல் மற்றும் பொது உரிமைகள், கல்வி, பொருளாதார நலன்கள், பாதுகாப்பு மற்றும் போசனை, சமூக சீர்கேடுகளிலிருந்தான பாதுகாப்பு, சித்திரவதைகளிலிருந்து விடுபட்ட வாழ்க்கை உள்ளிட்ட பல உரிமைகளை இலங்கைப் பெண்கள் அனுபவித்து வருகின்றனர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)





