Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Monday, November 18, 2013
கேரளாவில் இன்று பந்த்: வெறிச்சோடிய ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்
கேரளாவில் இன்று முழு அடைப்பு நடைபெறுவதால் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை நேற்று வெறிச்சோடியது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் தமிழகத்திலேயே மிகப்பெரிய மொத்த வியாபார மார்க்கெட்டாகும்.
இந்த காய்கறி மார்க்கெட்டிற்கு திருச்சி, ஈரோடு, திருப்பூர், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கு விற்பனைக்கு வரும் காய்கறிகளில் 90 சதவீதம் கேரளாவிற்கு அனுப்பப்படுகிறது.
இதனால் தினந்தோறும் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் பரபரப்பாக செயல்படும். மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் மேற்கு தொடர்ச்சி மலையை மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும் பகுதியான இடுக்கி, வயநாடு ஆகிய 2 மாவட்டங்களில் உள்ள 60 சதவீத இடங்களில் சுற்றுலா, விவசாயம் உள்ளிட்டவை பாதிக்கப்படும். இதனால் கேரள இடதுசாரி கூட்டணி கட்சிகள் இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறது.
இதன் எதிரொலியாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. 10 சதவீத காய்கறிகள் மட்டுமே வந்ததால் அவற்றை உள்ளூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
மேலும் பல்வேறு விவசாயிகள் காய்கறிகளை மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டுவரவில்லை. கேரளாவில் நடைபெறும் ஸ்டிரைக் குறித்து அறியாத சில விவசாயிகள் தாங்கள் விளைவித்த சில காய்கறிகளை கொண்டுவந்தனர். அவைகள் பாதி விலைக்கு விற்கப்பட்டது.
போர் பயிற்சியின் போது திடீர் கோளாறினால் அமெரிக்க போர் கப்பலில் மோதிய ஆளில்லா உளவு விமானம்
அமெரிக்க கடற்படை வீரர்கள் சுமார் 300 பேர் தெற்கு கலிபோர்னியா கடற்பகுதியில் நேற்று போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 'சான்சலர்வில்லி' என்ற போர் கப்பலில் இருந்து ஆளில்லா உளவு விமானங்களை ஏவி ஒத்திகை பார்த்தனர்.
கப்பலில் இருந்து சீறி புறப்பட்ட ஒரு ஆளில்லா உளவு விமானம் இயந்திர கோளாறினால் திசை திரும்பி போர் கப்பலை தாக்கியது.
எதிர்பாராத இச்செயலினால் கடற்படையினர் அதிர்ச்சி அடைந்தனர். கப்பலில் இருந்த 2 வீரர்களுக்கு லேசான தீக்காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும், கப்பலுக்கோ, இதர வீரர்களுக்கோ பெரும் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் கடற்படை செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
"கட்சிக்கு அதிகம் செலவு செய்யாதீர்' : வைகோ யோசனை
கள்ளக்குறிச்சி: லோக்சபா தேர்தலில் ம.தி.மு.க., போட்டியிடுமென பொதுச்செயலர் வைகோ அறிவித்து உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் நேற்று நடந்த ம.தி.மு.க., தேர்தல் நிதி சேகரிப்பு கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலர் வைகோ பேசியதாவது : இந்த இயக்கம் (ம.தி.மு.க.,) பலமான சக்திகளோடு மோத வேண்டியுள்ளது. இனி, உழைப்பவர்கள் தான் பொறுப்புக்கு வரவேண்டும். முடியாதவர்கள் தானாக விலகி கொள்ளலாம். லோக்சபா தேர்தலில், ம.தி.மு.க., கண்டிப்பாக போட்டியிடுகிறது. ஆனால் எத்தனை தொகுதி என்று இப்போது அறிவிக்க முடியாது. போராடி நிச்சயம் வெற்றி பெறுவோம். அரசியலில் இல்லாத இளைஞர்களை, கட்சிக்கு அழைத்து வாருங்கள். குடும்ப நலனைப் பாதுகாத்து கொள்ளுங்கள். கட்சிக்கு அதிகம் செலவு செய்யாதீர்கள். வருமானத்திற்கு தகுந்தாற்போல் செலவு செய்யுங்கள். இவ்வாறு, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார்.
சத்தீஸ்கரில் நாளை 2–ம் கட்ட தேர்தல்: 72 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 11–ந்தேதி 12 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடந்தது.
சுமார் 1½ லட்சம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு, அந்த முதல்கட்ட தேர்தல் நடந்தது. அதில் சுமார் 67 சதவீத வாக்குகள் பதிவானது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 18 தொகுதிகளுக்கு ஓட்டுப் பதிவு நடந்து விட்ட நிலையில் மீதமுள்ள 72 தொகுதிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது.
இந்த 72 தொகுதிகளும் 19 மாவட்டங்களில் உள்ளன. நேற்று மாலையுடன் இந்த 19 மாவட்டங்களிலும் பிரசாரம் ஓய்ந்தது.
நாளை காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்ட தேர்தல் போலவே இரண்டாம் கட்ட தேர்தலிலும் அதிக அளவில் வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆளும் பா.ஜ.க. முதல்– மந்திரி ராமன்சிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று கருத்து கணிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று 5 சிமி தீவிரவாதிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பாட்னா குண்டு வெடிப்பு தீவிரவாதிகளுக்கு உதவி செய்தவர்கள் என்று கூறப்படுகிறது.
கைதான 5 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை திட்டித் தீர்த்த கோத்தபாய ராஜபக்ச
விடுதலைப்புலிகளை திருப்திபடுத்தும் முகமாகவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கொழும்பில் செயற்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கமரூனின் செயற்பாடு, பிரித்தானியாவில் உள்ள உலக தமிழர் பேரவை மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஆகியவற்றின் பின்னணியில் இடம்பெற்றதாக கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்காக இலங்கை வருவதற்கு முன்னர் பிரித்தானிய பிரதமரின் குழுவினரை, பிரித்தானிய தமிழ் குழுக்கள் சந்தித்தமையையும் கோத்தபாய சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானியாவில் கொன்சவேட்டிவ் மற்றும் ஜனநாயக்கட்சியின் தேர்தல் வெற்றியை கருத்திற்கொண்டு செயற்படுகின்றனர். இதன் ஒரு செயற்பாடே இலங்கையிலும் இடம்பெற்றிருக்கிறது என்றும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றம் தொடர்பில் கமரூனின் எச்சரிக்கை, இலங்கை இன்னும் பிரித்தானிய ஆளுகைக்குள் இருப்பதை போன்ற நிலைமையில் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)