Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Tuesday, March 4, 2014
முதலையை விழுங்கிய மலைப்பாம்பு: படத்தொகுப்பு
ஆஸ்திரேலியாவில் ஒர் பெரிய முதலையை விழுங்க முயன்ற மலைப்பாம்புக்கும், அந்த முதலைக்குமான போராட்டம் ஒன்று பல மணி நேரம் நடந்துள்ளது.
குயின்ஸ்லாண்டின் ஒரு வாவியோரமாக 3 மீட்டர்கள் நீளமான அந்த மலைப்பாம்பு அந்த முதலையை முழுதாக விழுங்குவதற்காக பல மணிநேரம் போராடியுள்ளது.
பலர் அந்தக் காட்சியைக் கூடிப் பார்த்திருக்கிறார்கள்.
அந்த முதலையைக் கடிப்பதற்கு முன்னதாக அந்தப் பாம்பு முதலையை சுற்றுவளைத்து, அதனுடன் கட்டிப் புரண்டதை ஒரு தொலைபேசி கமெராவில் பிடிக்கப்பட்ட படத்தில் பார்க்கக் கூடியதாக இருந்தது.
இறுதியாக அது எப்படியோ அதனை வெற்றிகரமாக விழுங்கிவிட்டது.
அந்த மலைப்பாம்பின் வயிற்றுப் பகுதியில் அந்த முதலையின் உருவம் பிதுங்கிக் கொண்டிருப்பதை பார்க்கக்கூடியதாக இருந்தது
சௌதி: வெளிநாட்டு தொழிலாளர் தடுப்பு மையத்தில் கலவரம்
சௌதி அரேபியாலிருந்து வெளியேற்றப்படக் காத்திருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான தடுப்பு மையம் ஒன்றில் நடந்த கலவரத்தில் ஒருவர் இறந்துவிட்டார் என்று சௌதி போலிசார் தெரிவித்தனர்.
இக்கலவரத்தில் ஒன்பது பேர் காயமடைந்திருக்கின்றனர்.
மெக்காவுக்கு அருகே இருக்கும் அல்-ஷுமைசி என்ற இடத்தில் இருக்கும் இந்த மையத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது, அதைக் கட்டுப்படுத்த தாங்கள் தலையிட வேண்டியிருந்தது என்று போலிசார் கூறினர்.
சௌதி அரேபியாவில் ஆவணங்கள் இல்லாத நிலையில் இருக்கும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் இருப்பை சட்டபூர்வமாக்கிக்கொள்ளக் கொடுத்திருந்த காலக்கெடு நவம்பர் மாதம், முடிந்தபோது, அவர்களை சௌதி அரேபிய அரசு நாட்டிலிருந்து வெளியேற்றியிருந்தது.
இந்த மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் சிலர் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் குறித்து மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் கடந்த மாதம் விமர்சனங்களைத் தெரிவித்திருந்தது.
க்ரைமீயாவில் பிடியை இறுக்குகிறது ரஷ்யா
யுக்ரெய்னின் க்ரைமீயா பிராந்தியத்தில் ரஷ்யா தனது தலையீட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ராஜீய ரீதியிலான சர்வதேச அழுத்தங்கள் கூடிவருகின்ற வேளையிலும், அங்கு ரஷ்யா தனது இராணுவப் பிரசன்னத்தையும் கட்டுப்பாட்டையும் வலுப்படுத்தியுள்ளது.
யுக்ரெய்னின் இராணுவ தளங்கள் தொடர்ந்தும் ரஷ்யத் துருப்பினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.
------------------------------------------------------------------------------------------------
ப்பிராந்தியத்துக்கான இணைப்புச் சாலைகளில் தடுப்புகள் போடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------
க்ரைமீயாவின் கட்டுப்பாடு என்பது யதார்த்தத்தில் ரஷ்ய துருப்பினர் வசமே உள்ளதாக அங்குள்ள செய்தியாளர் கூறுகிறார்.
------------------------------------------------------------------------------------------------
க்ரைமீயாவின் கெர்ச் நகருக்கு எதிர்ப்புறமாக உள்ள தமது கரையில் ரஷ்யா இராணுவ துருப்பினரை குவிக்க ஆரம்பித்துவிட்டதாக யுக்ரெய்னிய எல்லைக்காவல் படையினர் கூறுகின்றனர்.
------------------------------------------------------------------------------------------------
இப்பிராந்தியத்தில் சில இடங்களில் கைத்தொலைபேசி சேவை சிக்னல்கள் முடக்கப்பட்டுள்ளன.
எச்.ஐ.வி. குழந்தைகளுக்கு பள்ளிகளில் அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து வழக்கு
எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு பள்ளிகளில் அனுமதி மறுக்கப்படுவது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில் திங்கள்கிழமை இந்திய உச்சநீதிமன்றம் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------
எச்.ஐ.வி. தாக்குதலுக்கு உள்ளான குழந்தைகள் விவகாரத்தில், பள்ளிகள் பாரபட்சமாக நடந்துக்கொள்வதாக குற்றம் கூறியுள்ள நாஸ் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம், இது தொடர்பாக தொடர்ந்த பொதுநல வழக்கு இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.சௌஹான் மற்றும் செல்லமேஸ்வர் ஆகியோரை உட்கொண்ட அமர்வு முன்பு நடைபெற்றது.
-------------------------------------------------------------------------------------------
இந்த பொதுநல மனுவில், எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு பள்ளிகளில் அனுமதி மறுக்கப்படுவதாகவும், சில நேரங்களில் அனுமதி வழங்கப்பட்ட பிறகு பாதியில் அவர்கள் பள்ளியில் தொடர முடியாத சூழ்நிலையை உருவாக்குவதாகவும், அவற்றை தடுப்பதற்கு இந்த விவகாரத்தில் இந்திய உச்சநீதிமன்றம் தலையீட்டு இதற்கான வரைவு முறையை அமல்படுத்த கோரப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கொண்ட உச்சநீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------
இந்த விவகாரம் தற்போது மிக அவசியமான ஒன்றாக உருவாகியுள்ளதால்தான் இதற்காக தாம் வழக்கு தொடர்ந்துள்ளதாக நாஸ் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் அஞ்சலி கோபாலன் தெரிவித்தார்.
------------------------------------------------------------------------------------------------
எச்.ஐ.வி. தாக்குதலுக்கு உள்ளான குழந்தைகள் என்று வரும்போது அனைவருக்கும் கல்வி என்கிற கொள்கையை பள்ளிகள் பின்பற்றுவது இல்லை என்றும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தனிநபர் தகவல்களை காப்பாற்ற அவை தவறி விடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
552 படையணியின் தலைமையகம் அமைக்க 36 ஏக்கர் மக்களின் உறுதிகாணி சுவீகரிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு
கிளிநொச்சி பளை இயக்கச்சி பகுதியில் கிளி.80 முகாவில் கிராம அலுவலர் பிரிவிலுள்ள பொது மக்களின் 36 ஏக்கர் காணியினை 552 படையணியின் தலைமையகம் அமைப்பதற்கு சுவீகரிககும் திட்டத்திற்கு காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது இயக்கச்சி பிரதேசத்தில் இன்று(03) காலை பொது மக்களை அழைத்து குறித்த காணியினை தாங்கள் இராணுவ முகாம் அமை;பதற்கு எடுக்க போவதாகவும் உரிமையாளர்களுக்கு காணியின் பெறுமதியினை வழங்குவதாகவும் இராணுவத்தின் சுறியுள்ளனர்.
----------------------------------------------------------------------------------------------------
இதற்கு மறுப்புத் தெரிவித்த காணி உரிமையாளர்கள் 15 மேற்பட்டவர்கள் குறித்த காணியானது தங்களின் பாட்டன் பூட்டன் காலத்து சொத்து எனவும் அதனை தாங்கள் எச்சந்தர்ப்பத்திலும் வழங்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியதோடு தங்களுக்கு காணியின் பெறுமதி தேவையில்லை காணியே தேவை எனவும் உறுதியாக தெரிவித்துள்ளனர்.அத்தோடு தற்போது இராணுவ முகாம் உள்ள இடத்திலிருந்து 600 மீற்றர் தொலைவில் இராணுவத்திற்கு என ஒதுக்கப்பட்ட காணி ஒன்று உள்ளது எனவும் சுட்டிக்காட்டுகின்றனர் பொது மக்கள்.
----------------------------------------------------------------------------------------------------
இதேவேளை இன்றைய தினம் குறித்த காணி உரிமையாளர்களை பத்திரம் ஒன்றில் கையொப்பம் இடுமாறு இராணுவத்தினர் கோரியுள்ளனர் அதற்கும் அந்த மக்கள் மறுப்புத் தெரிவித்து வெளியேறியுள்ளனர்.
----------------------------------------------------------------------------------------------------
குறித்த காணி உரிமையாளர்களுக்கு இது தொடர்பான கடிதம் பளை பிரதேச செயலலாளரினால் காணி உரிமையாளர்களுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரதேசத்தில் குறித்த 15 இற்கு மேற்பட்ட குறித்த காணி உரிமையாளர்களே வீட்டுத்திட்டம் உள்ளிட்ட எந்த பயனையும் பெறாது தற்பொழுதும் சொந்த ஊருக்குள்ளேயே இடம்பெயர்நது வாழ்ந்து வருகின்றனர்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 5 பேர் காயம்
கிளிநொச்சி திருமுருகண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவமொன்றில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். பழைய இரும்புப் பொருட்களைச் சேர்க்கும் கடையொன்றில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இராமச்சந்திரன்(வயது 45) அவரது மகள்களான அல்லிராணி மற்றும் மேனகா ஆகியோருடன் கிருஸ்ணவேணி மற்றும் இராமநாதன் ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.ப டுகாயமடைந்தவர்களுள் சிலர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டுள்ளனர் .சிலரது நிலை அபாயகரமாக இருப்பதாக கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
--------------------------------------------------------------------------------------
தமிழீழ விடுதலைப் புலிகளினால் படையினருக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட பைப் குண்டு ஒன்றே இவ்வாறு வெடித்துச் சிதறியுள்ளது.
------------------------------------------------------------------------------------------
அடையாளம் தெரியாத பொருட்கள் மற்றும் நிலக்கண்ணி வெடிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென ஏற்கனவே படையினர் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர், வடக்கில் நிலக்கண்ணி வெடி அகழ்வுப் பணிகளின் போது ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட குண்டுகள் மீட்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
நவனீதம்பிள்ளையின் அறிக்கைக்கு பான் கீ மூன் வரவேற்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் இலங்கை குறித்த அறிக்கைக்கு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வரவேற்பை வெளியிட்டுள்ளார். சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25ம் அமர்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், நவனீதம்பிள்ளையின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மாத இறுதியில் நவனீதம்பிள்ளை இலங்கை குறித்த அறிக்கையை அமர்வுகளில் உத்தியோகபூர்வமாக சமர்பிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் n;தாடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென நவனீதம்பிள்ளையின் உத்தேச அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை சிறந்த முறையில் கடமையாற்றி வருவதாக பான் கீ மூன் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். நவனீதம்பிள்ளை இந்த ஆண்டு இறுதியுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஜனாதிபதி மஹிந்தவை மன்மோகன் ஏன் சந்திக்கின்றார் என்பதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எதற்காக சந்திக்கின்றார் என்பது குறித்த விளக்கத்தை அந்நாட்டு மத்திய அரசாங்கம் அளித்துள்ளது. நாளைய தினம் மியன்மாரில் நடைபெறவுள்ள பிம்டெஸ்க் மாநாட்டிற்கு சமாந்திரமாக இரு நாடுகளினதும் தலைவர்கள் சந்தி;க்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த சந்திபிற்கு தமிழகத்தின் பலரும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
--------------------------------------------------------------------------------------------------
இந்த சந்திப்பானது பிரத்தியேகமான சந்திப்பு அல்ல என இந்திய மத்திய அமைச்சர் வீ.நாரயணசுவாமி தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சி;ங் சில வேளைகளில் இலங்கை ஜனாதிபதியை சந்திப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் நிலையில் இந்திய பிரதமர், இலங்கை ஜனாதிபதியை சந்திப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என கருணாநிதி தெரிவித்திருந்தார். தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது இந்த சந்திப்பு நடத்தப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
வெளிவிவகார அமைச்சர் வெளிநாட்டுப் பிரஜைகளுடன் சந்திப்புக்களை நடத்த உள்ளார்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்கும் இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமை தாங்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளார். ஏனைய நாடுகளின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர்களை அமைச்சர் பீரிஸ் சந்திக்க உள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் அறிவித்துள்ளது.
------------------------------------------------------------------------------------------------------
அமைச்சர் பீரிஸ் நாளைய தினம் ஜெனீவாவை சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.அமைச்சர் பீரிஸ் நாளை மறுதினம் பேரவையின் அமர்வுகளில் உரையாற்றவுள்ளார்.எதிர்வரும் வியாழக்கிழமை நவனீதம்பிள்ளையை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------------
அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, சட்ட மா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட பலர் இந்த அமர்வுகளில் பங்கேற்ற உள்ளனர்.
போரையடுத்தான் வறுமையினால் துண்டாடப்படும் வட கிழக்கு மாணவர்களின் கல்வி காக்கப்படுமா? தியாகராஜா நிரோஷ்
வடக்கினையோ கிழக்கினையோ பொருத்தளவில் மக்கள் தமது கட்டுமானங்களை யுத்தத்தினால் முற்றாக இழந்து விட்டனர். எனவே அவர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினைகளுடனும் சங்கிலித் தொடரான சிக்கல்மிக்க அவலங்களே நிறைந்து கிடப்பதனால் மாணவர்கள் பாடசாலை இடைவிலகளுக்கு எதிராக மாணவர்களின் சமூக பொருளாதார நிலைமைகளுடன் இணைந்ததாக திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
தியாகராஜா நிரோஷ்
--------------------------------------------------------------------------------------------------
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்பட்டுவருகின்றது. குடும்ப வறுமையின் காரணமாக அனேக மாணவர்கள் தமது கல்வியை இடைநடுவில் கைவிட்டு தொழில்களுக்குச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் தகவல் ஒன்று தெரிவித்திருந்தது. அத் தகவல் சரியானது என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------
இது போன்றே கடந்த ஆண்டின் ஆரம்பத்திலும் போரினால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாடசாலை கல்வியைக் கைவிட நேர்ந்திருகின்றது என்பது ஆய்வுகள் வாயிலாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. 2013 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியாகிய 2012 ஆம் ஆண்டை மையப்படுத்திய ஆய்வில,; நாடளாவிய ரீதியில் 1 இலட்சத்து 26 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளனர். இதில் வடக்கு மாகாணத்தில் 38 ஆயிரத்து 321 மாணவர்களும் அதற்கு அடுத்த படியாக கிழக்கு மாகாணத்தில் 24 ஆயிரத்து 614 மாணவர்களும் தமது பாடசாலைக் கல்வியைக் கைவிட்டுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட இவ்விரண்டு மாகாணங்களும் பாடசாலைக் கல்வியிலிருந்து இடைவிலகுவோர் விடயத்திலும் முதன்மை இடத்தையே பிடிக்கின்றன.
--------------------------------------------------------------------------------------------------
பொதுவாக பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் இடைவிலகுவதற்கான சூழ்நிலைகள் போரின் பின்பான காலகட்டத்தில் அசாதாரணமாக அதிகரித்துக் காணப்படுகின்றன. போரின் பின்பான சமூகப் பொருளாதார தாக்கங்களைக் கையாள்வதில் மிகப் பெரும் இடைவெளியும் தோல்வியும் காணப்படுவதன் யதார்த்தமே இதற்கான காரணமாகும். அரசாங்கம் கூறும் அபிவிருத்தித் திட்டங்கள் வாயிலாகவும் தமிழ் மக்களின் சமூக அலகுகளினாலும் நிவர்த்திக்கப்படாத பிரச்சினையாகவுள்ளன. அல்லது கண்டு கொள்ளப்படாமலும் கைவிடப்படும் பிரச்சினையாகவும் உள்ளன.
--------------------------------------------------------------------------------------------------
இன்றைய நிலையில் வடக்குக் கிழக்கில், பாடசாலை மாணவர்கள் அதிகபடியாக பாடசாலைகளில் இருந்து இடைவிலகுவதற்கு குடும்ப வருமானம் அற்ற தன்மைகளே அதிகபடியான காரணம் என சகல தரப்பினரும் சுட்டிக்காட்டுகின்றன. மாணவர்கள் கல்வியை இடைநடுவில் கைவிடுவதற்கான காரணியாகவுள்ள குடும்ப வறுமை என்பது தனியாக கல்வி நிர்வாக அமைப்புக்களால் மாத்திரம் கண்டுகொள்ளப்பட்டு நிவர்த்தக்கப்பட முடியாதது ஆகும். அது நாட்டின் ஒட்டுமொத்த துறைகளையும் கொண்டே பாடசாலைக்கல்வியில் இருந்து மாணவர்கள் இடைவிலகும் பிரச்சினை வைக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
--------------------------------------------------------------------------------------------------
மாணவர்கள் இடைவிலகல்கள் தொடர்பான பிரச்சினைகளை அணுகுவதற்காக உதாரணமாக,; மல்லாகத்தில் உள்ள கோணப்புலம் இடம்பெயர்ந்தோர் இடைத்தங்கல் முகாமின் அவதானிப்புக்கள் இக் கட்டுரைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இருந்து கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பாக உயர்பாதுகாப்பு வலயம் ;காரணமாக வெளியேற்றப்பட்ட குடும்பங்களில் கணிசமான தொகையினர் இம் முகாமில் வசிக்கின்றனர். இம் முகாமில் குடும்பம் ஒன்று 10 அடி அகலமும் 15 அடி நீளமும் கொண்ட வீடுகளில் தான் பல வருடக்கணக்கில் நிரந்தரமாக வாழத் தள்ளப்பட்டுள்ளது. ஒரு மலசல கூடத்தினை குறைந்தது தினம் ஒன்றுக்கு 50 பேருக்கு மேல் உபயோகிக்க வேண்டியுள்ளது. பொதுக்கிணறுகளில் காலையில் மக்கள் அலைமோதுகின்றனர். இடப்பெயர்வுக்கு முன்னர் தமது சொந்தக் கிராமங்களில் விவசாய , கடல்தொழில் முயற்சிகள் வாயிலாக வருவாய் ஈட்டிவந்த இம் மக்கள் இடப்பெயர்வுகளுக்குப் பின் தொழிலுக்கான மூலாதாரங்கள் எதுவும் இன்றி கூலிவேலைகளுக்காக அலைகின்றனர். பொதுவாக குறைந்த சம்பளத்திற்கு நிச்சயமற்ற நாட்களைக் கொண்ட கூலிவேலைகளுக்கே மக்கள் அனேகமாகச் செல்கின்றனர். இவ்வாறானதோர் இடைத்தங்கல் முகாமில் நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் இருக்கின்றனர். இவர்களில் அனேகர் மேற்கூறப்பட்ட அவலங்களின் காரணமாக பாடசாலைகளுக்கு செல்லாது விட்டு விடுகின்றனர்.
--------------------------------------------------------------------------------------------------
இவ்வாறாக பாடசாலை செல்லாத மாணவர்;களை பாடசாலைகளுக்கு மீள ஈர்த்துச்; செல்லும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் திரும்பத் திரும்ப ஈடுபடுகின்றனர். அதன் ஒரு கட்டமாக மாணவர்களின் பாடசாலை வரவு அல்லது இடைவிலகல்கள் தொடர்பில் பெற'றோருடன் பேசுவதற்கு அரச அதிகாரிகள் முகாமிற்குச் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் அதிகாரிகளில் சிறுவர் நன்நடத்தை பகுதியினர், அரசாங்க நிர்வாக அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் எனச் பல மட்டங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். இவர்கள் எல்லோரும் பாடசாலைகளுக்கு மாணவர்கள் பெற்றோர்களால் உரியவாறு அணுப்பப் படவேண்டும். அவ்வாறாக பெற்றார் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பாது விடுவதன் பாதிப்பு பற்றி பேசுகின்றனர். கட்டாயக் கல்விக்கு மாணவர்கள் சேர்க்கப்படாது விட்டால் சட்ட நடவடிக்கை பற்றியும் பேசுகின்றனர். உண்மையில் இந்த அதிகாரிகளின் கடமையுணர்வு பாராட்டப்படவேண்டியது. அதேயிடத்தில் அதிகாரிகள் பலரும் மாணவன் பாடசாலை செல்வதையோ அல்லது இடைவிலகளையோ குடும்பப் பின்னணிகள் மற்றும் பாதிப்புக்களின் தன்மைகளுடன் தொடர்பு பட்டதாக அணுகுவதைத் தான் காண முடியவில்லை. இது யதார்த்த பூர்வமான தீர்வையும் இப் பிரச்சினையில் தள்ளிப் போடுகின்றது. சிலசமயம், அவ் அதிகாரிகள் தம்மால் தீர்வுகாண பட முடியாததை பற்றி பேசித்தான் என்ன என்ற நிலையில் இருக்கின்றார்களோ தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
--------------------------------------------------------------------------------------------------
இந்த இடத்தில் எம்மிடையே மாணவர்களது இடைவலகளுடன் தொடர்பு பட்டதாக அம் மாணவனின் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான பொறிமுறைகள் அவசியமாகத் தேவைப்படுகின்றன. இவ்வாறான ஆய்வுகளின் முடிவுகள் பாடசாலை மாணவர்களின் இடைவிலகள் தகவலுடன் முழுமையாக அரசியல் நோக்கங்கள் அற்று வெளிப்படுத்தப்பட வேண்டும். மேலுமொரு உதாரணத்தினை நோக்குவோமாயின், அச்சுவேலி பகுதியில் கல் உடைக்கும் தொழிலாளிகள் சிலர் தினம் ஒன்றுக்கு தம்மால் உண்பதற்கு வசதியில்லை. பின்னர் எவ்வாறு பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்ப முடியும்? பசியுடன் பிள்ளைகள் எவ்வாறு கற்பது பற்றி யோசிப்பது என இக் கட்டுரை வாயிலாகக் கேள்வி எழுப்புகின்றனர். எனவே கல்வி கற்கக் கூடிய பிள்ளைகள் உள்ள குடும்பங்களின் வறுமை நிலையுடன் இணைந்ததாகவே மக்களின் கல்வி விருப்பினை நாம் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. கல்வி என்பது சமூக முதலீடாகவுள்ள நிலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இனங்கண்டு காலையில் இருந்து மாலைவரையில் முழுநேர உணவுடன் கூடிய பாடசாலைகள் அறிமுகப்படுத்தப்படவேண்டிய அவசியங்களும் உள்ளன. காரணம் மக்களின் வறுமை நிலை மாணவர் கல்வியை துண்டாடிவிடுகின்றமையே ஆகும்.
--------------------------------------------------------------------------------------------------
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் உணவுக்காகத் திண்டாடுகின்றனர். இந்த இடத்தில் மக்களின் வறுமையினையும் கஷ்டத்தினையும் அவர்களின் நிலை நின்று கண்டு கொள்ளவேண்டிய தேவையுள்ளது. விதவைகள் மற்றும் பெண் தலைமையுள்ள குடும்பங்கள் வட கிழக்கில் 86 ஆயிரத்திற்கு மேலாக உள்ள நிலையில் அவர்களது பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்கு விசேடமான திட்டங்களை தயாரிக்க வேண்டியுள்ளது.
நடைபெற்ற யுத்தம் பல மாணவர்களை விரும்பியோ விரும்பாமலோ கல்வியில் இருந்து இடைநிறுத்தியுள்ளது. இவ்வாறாக இடைநின்று போன மாணவர்களை மீள பாடசாலைக் கல்வியில் உள்வாங்குவதில் காலந்தவறியமை உட்பட பல்வேறு சிக்கல்கள் நடைமுறையில் இருக்கின்றன. ஆகவே அவ்வாறு இடைவிலகியோருக்கு தொழில்துறைப் பயிற்சி வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டிய அவசியம் வடக்கு மற்றும் கிழக்குத் தலைமைகளிடத்தில் உள்ளது. வடக்கு மாகாணத்தில் மோசன் வேலைகள், தச்சுத் தொழிலாளர், கட்டிட அமைப்பில், இயந்திரங்களை இயக்குதல் என பலதரப்பட்ட விடயங்களுக்கும் தென்பகுதியில் இருந்தே தொழிலாளர்களை வரவழைக்கப்பட்டு பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். எனினும் உள்ளுர் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்கள் இன்றி வீடுகளில் இருக்கின்றனர். வட மாகாண இளைஞர்கள் வருமானமின்றி இருக்கையில,; அவர்களின் முன் நுகர்வுக் கலாசாரம் மாத்திரம் விரிவு படுத்தப்படுகின்றது. இது தமிழ் இளைஞர்களை குற்றச் செயல்களில் ஈடுபட்டாவது பணத்தினைத் தேடி எல்லோரையும் போல நுகரவேண்டும் என்ற துரதிஸ்ட நிலைமையினைத் தூண்டுகின்றது.
மாணவர் இடைவிலகளுடன் கல்வித்துறையில் காணப்படும் வளப்பற்றாக்குறைகளும் காரணமாக அவதானிக்கப்படுகின்றன. ஒப்பீட்டளவில் பாடசாலைகளுக்கு நீண்ட தூரம் மாணவர்கள் கால்நடையாகச் செல்லவேண்டிய நிலைமை வன்னியில் அதிகமாகவுள்ளது. இந்த விடயத்தில் போரினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களை இழந்த மாணவர்களுக்கு போக்குவரத்தில் சலுகைகள் அளிக்கப்படலாம். இதற்கு வடமாகாண கல்வி அமைச்சு பாடசாலைகள் வாரியாக வசதிக்குறைவான மாணவர்களை இனங்கண்டு வட மாகாண போக்குவரத்து அமைச்சிடம் இலவச பருவச் சீட்டுகளுக்கு வேண்டுகோள் விடுக்கலாம். மேலும் வன்னியின் சில கிராமங்களுக்கு பேருந்துகளே செல்வதில்லை. இது பற்றியும் வெளிப்படுத்தல்கள் அவசியமாகவுள்ளன. இவ்வாறாக போக்குவரத்து அற்ற கிரமங்களைச் சேர்ந்த பிள்ளைகள் தமது கிராமத்தில் இருந்து உயர்தர வகுப்புக்கு கற்பதற்காக செல்வதில் இருந்து புறந்தள்ளப்படுகின்றனர்.
--------------------------------------------------------------------------------------------------
மாணவர்கள் பாடசாலை செல்லாமைக்கு அல்லது இடைவிலகளுக்கு எதிராக மாணவர்களின் சமூக பொருளாதார நிலைமைகளுடன் இணைந்ததாக திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். காரணம் வடக்கினையோ கிழக்கினையோ பொருத்தளவில் மக்கள் தமது கட்டுமானங்களை யுத்தத்தினால் முற்றாக இழந்து விட்டனர். எனவே அவர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினைகளுடனும் சங்கிலித் தொடரான சிக்கல்மிக்க அவலங்களே நிறைந்து கிடப்பதனாலாகும். மாணவர்களின் இடைவிலகளை கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் மட்டும் பார்த்துக் கொள்ளட்டும் என விட்டுவிட்டால் இப் பிரச்சினை நிவர்த்திக்கப்பட முடியாத ஒன்றாகவே அமையும். குடும்பத்தில் இருந்தே போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விச் சவால்கள் தோன்றுவதனால் சகல நிர்வாக மட்டங்களும் இணைந்து ஆராய்ந்து நேர்த்தியான சிபாரிசுகளை முன்வைத்து இப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டும். மேலும் கடந்த காலங்களில் பாடசாலைகளில் இருந்து பல்வேறுபட்ட துன்பியல் சம்பவங்கள் காரணமாக இடைவிலகியோரை மீளவும் பாடசாலைக் கல்வியில் உள்வாங்க முடியாத நிலைகளும் வடக்கில் தாராளமாகவுள்ளன. எனவே நீண்ட கால கல்வி இடைவிலகல்களை எதிர்கொண்டு தொழிலுக்கான வழிவகைகள் தெரியாதவர்களாக உள்ள இளைஞர்களுக்கு முறைசார கல்வி முறைமையூடாக தொழில் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். இத் திட்டத்தினை விசேட முயற்சியாக நிபந்தனைகள் அற்று நிறுவனங்கள் ஊடாக வழங்கப்பட வேண்டும். இவ்வாறான விடயங்களில் வடக்கு மாகாண சபை அதிக கரிசனை செலுத்த முடியும். மாகாணத்தில் உள்ள நலன்விரும்பிகளைக் கூட இணைத்து செயற்பட முடியும். எவ்வாறாயினும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் சமூக நலிவுகளைச் சந்திக்காது இருப்பதற்கு அவர்களது கல்வி விடயத்தில் அதிக கரிசனை வேண்டும். மாணவர்கள் பாடசாலை இடைவிலகல்களைத் தடுக்கும் திட்டங்கள் அவசியமாகவுள்ள அதேவேளை கடந்த காலத்தில் இடைவிலகியோருக்கும் உரிய திட்டங்கள் அவசரமாக அவசியமாகவுள்ளன. இந் திட்டங்கள் சகல தரப்பினையும் சென்றமையும் வண்ணமும் மேற்கொள்ளப்படவேண்டும்.
Subscribe to:
Posts (Atom)








