Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Saturday, January 25, 2014
இந்திய வரலாறு - ஒரு குறிப்பு
----------------------------------------------
கிமு 3500-1500 - சிந்து வெளி நாகரிகம்
கிமு 1000 - கங்கை நதிக்கரையில் ஆரியர்கள் குடியேறுதல்
கிமு 900 - மகாபாரதப் போர்
கிமு 800 - இராயமாயனத்தின் முதல் பகுதி துவக்கம். மகாபாரதத்தின் முதல் பகுதி வங்காளத்திற்கு ஆரியர்கள் இடம் பெயர்தல்
கிமு 550 - உபநிஷங்கள் தொகுப்பு
கிமு 554 - புத்தரின் நிர்வாணம்
கிமு 518 - பாரசீகர்களின் ஆதிக்கத்தில் இந்தியா
கிமு 326 - அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுப்பு
கிமு 321 - பாடலிபுரத்தில் சந்திரகுப்தர் மெளரிய வம்சத்தை நிறுவுதல்
கிமு 272-232 - அசோகர் ஆட்சி
கிமு 185 - புருஷ்யமித்திரன் சங்க சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தல்
கிமு 58 - விக்கரம் ஆண்டு
கிமு 30 - தெற்கில் பாண்டியர் சாம்ராஜ்யம்
கிபி 40 - சாகர்கள் சிந்து பகுதியில் ஆட்சி
கிபி 52 - புனித தாமஸ் இந்தியா வருகை
கிபி 78 - சகா சகாப்தம் ஆரம்பம்
கிபி 98-117 - கனிஷ்கரின் காலம்
கிபி 320 - குப்த சாம்ராஜ்யம் உருவாதல்
கிபி 380-143 - சந்திரகுப்த விக்கிரமாதித்தன் காலம், காளிதாசர் காலம், இந்து மதம் உயர்வடைந்தது
கிபி 405-411 - பாகியான் வருகை
கிபி 606 - ஹர்ஷவர்த்தனர் ஆட்சி
கிபி 609 - சாளுக்கிய வம்சம் தோற்றம்
கிபி 622 - ஹீஜிரா வருடம் துவக்கம்
கிபி 629-645 - யுவான் சுவாங் வருகை
கிபி 712 - முகமது பின் காசிம் படையெடுப்பு
கிபி 985 - ராஜராஜன் சோழன் காலம்
கிபி 1001-1026 - முகமது கஜினி இந்திய படையெடுப்பு சோமநாதர் ஆலயம் அழிப்பு
கிபி 1191 - முதலாம் தரைன் யுத்தம்
கிபி 1192 - இரண்டாம் தரைன் யுத்தம்
கிபி 1206 - டில்லியில் அடிமை வம்சத்தை உருவாக்குதல்
கிபி 1221 - ஜென்கின்கான் படையெடுப்பு
கிபி1232 - குதும்பினார் கட்டப்பட்டது
கிபி1298 - மார்க்கபோலோ இந்தியா வருகை
கிபி1333 - இப்னுபத்துக் இந்தியா வருகை
கிபி1336 - தென்னிந்தியாவில் விஜய நகரப் பேரரசு உதயம்
கிபி1347 - பாமினி அரசு துவக்கம்
கிபி1398 - தைமூரின் இந்திய படையெடுப்பு
கிபி1424 - டில்லியில் பாமினி வம்சம்
கிபி1451 - லோடி வம்சம்
கிபி1496 - குருநானக் பிறப்பு
கிபி1498 - வாஸ்கோடகாமா கடல் வழியாக இந்தியா (கோழிக் கோடு வருகை)
கிபி1516 - போர்த்துக்கீசியர் கோவாவை கைப்பற்றுதல்
கிபி1526 - முதலாம் பானிபட் யுத்தம்
கிபி1539 - குருநானக் இறப்பு
கிபி1556 - ஆக்கப் பதவி ஏற்பு - இரண்டாம் பானிபட் யுத்தம்
கிபி1564-65 - கானிகோட்டா யுத்தம்
கிபி1576 - ஹால்டி காந்தி யுத்தம்
கிபி1600 - கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வருகை
கிபி1604 - சீக்கியரின் ஆதிகிரந்தம் வெளியிடப்பட்டது
கிபி1631 - தாஜ்மகால் கட்டப்பட்டது
கிபி1639 - சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது
கிபி1658 - டெல்லி சக்கரவர்த்தி ஒளரங்கசீப்
கிபி1739 - நாதர்ஷா இந்தியாவில் ஊடுருவல், ஈரானுக்கு 6 விலாசனத்தை கொண்டு செல்லுதல்
கிபி1748 - முதல் ஆங்கிலேய - பிரஞ்சுப் போர்
கிபி1757 - பிளாசிப் போர்
கிபி1761 - மூன்றாம் பானிபட் போர்
கிபி1764 - பாக்ஸர் போர்
கிபி1790-92 - மைசூர் போர்
கிபி1799 - நான்காம் மைசூர் போர்
கிபி1803 - ஆங்கிலேய மராத்திய போர்
கிபி1805 - மராத்தியர் தோல்வி
கிபி1835 - ஆங்கிலேய கல்வி முறை ஆரம்பம்
கிபி1845 -1846 - ஆங்கிலேயர் - சீக்கியர் போர்
கிபி1853 - முதல் இந்திய ரயில் பாதை (பம்பாய் - தானே)
கிபி1857 - முதல் இந்திய சுதந்திரப் போர் (தென் இந்தியாவில் நெல்லை சீமையில் முதலில் ஆரம்பமானது)
கிபி1858 - கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவு
கிபி1885 - இந்திய தேசிய காங்கிரஸ் உதயம்
கிபி1906 - முஸ்லீம் லீக் உதயம்
கிபி1909 - மின்டோ - மார்லி சீர்திருத்தம்
கிபி 1914-18 - முதலாம் உலகப் போர்
கிபி1919 - மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம்
கிபி1920 - காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்
கிபி1921 - பிரின்ஸ் ஆக்கப் வேல்ஸ் இந்திய வருகை
கிபி1922 - சட்ட மறுப்பு இயக்கம்
கிபி1928 - சைமன் கமிஷன் வருகை
கிபி1931 - காந்தி - இர்வின் ஒப்பந்தம்
கிபி1934 - சட்டமறுப்பு இயக்கம் வாபஸ் வாங்கப்பட்டது
கிபி1938 - காங்கிரஸ் அமைச்சரவை ராஜினமா
கிபி1942 - வெள்ளையனே வெளியேறு போராட்டம்
கிபி1945 - ஜப்பான் துணையுடன் நேதாஜியின் இந்தியன் நேஷனல் ஆர்மி பிரிட்டிஷாரிடம் தோல்வி
கிபி1947 - இந்தியா விடுதலையானது (சுதந்திரம் பெற்றது)
200கோடி மது விற்பனை
31/12/2013 அன்று 200கோடி மது விற்பனை,
01/01/2014 அன்று
270கோடி மது விற்பனை
மொத்தம் 470கோடி....
தமிழகத்தில் மொத்தம்
*ஓரு கோடியே எண்பத்தி நான்கு லட்சம்(18400000)
குடும்ப அட்டைகள் உள்ளன,
*பொங்கலுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 100ரூபாய்
இனாம் மொத்தம்
*நூற்று எண்பத்தி நான்கு கோடி (18400000><100=
1840000000)ரூபாய்,
மற்றும் ஒரு கிலோ பச்சரிசி
ஒரு கிலோ சர்க்கரை தோராயமாக
*நூறு கோடி(1000000000), மொத்தம்
இருநூற்று எண்பத்தி நான்கு கோடி (2840000000)தோராயமாக ..
வருட பிறப்பு அன்று சாராயம்
விற்று சம்பாதித்தது நானூற்று எழுபது கோடி இதில்
பொங்கல் பரிசு
கொள்ளையடிப்பது நூற்று எண்பத்தி ஆறு கோடி...
(4700000000-2840000000=1860000000) ....
தமிழக மக்களே சிந்தித்து செயல்படுங்கள் .
குடிபோதையில் கார் ஓட்டிய பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் கைது
அதிவேகமாக.... பொதுவாக மக்கள் குடியிருப்பு பகுதிகளில் அங்கு மணிக்கு 30 கி.மீட்டர் வேகத்தில் மட்டுமே கார் ஓட்ட வேண்டும் என்ற சட்டம் அமெரிக்காவில் உள்ளது. ஆனால், பீபர் மணிக்கு 55 முதல் 60 கி.மீட்டர் வேகத்தில் கார் ஓட்டியுள்ளார்.
கார் பந்தயம்.... போலீசாரின் விசாரணையில், பீபர் தனது நண்பரும், சகபாடகருமான கலீல் ஷெரீயப்புடன் பந்தயம் கட்டி போட்டியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மதுபோதையில்... மேலும், காரோட்டிய போது அவர் மது அருந்தியதும், மறிஞ்சுனா என்ற போதை சிகரெட் புகைத்திருந்ததும் உறுதியானதைத் தொடர்ந்து ஜஸ்டின் பீபர் மற்றும் அவரது நண்பர் கலீல் ஷெரீயப்பை போலீசார் கைது செய்தனர்.
நிபந்தனை ஜாமீன்.... அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்ட பீபரும், அவரது நண்பரும் நிபந்தனையின் பேரில் ஜாமீனில் விடுவிக்கப் பட்டனர்.
சிரியாவின் நேரடி சமாதானப் பேச்சு வார்த்தை தடைப்பட்டது:-
வெள்ளிக் கிழமை ஆரம்பமாக இருந்த சிரியா சமாதானப் பேச்சு வார்த்தை எதிரணியினரின் கடும் போக்கால் தடைப்பட்டுள்ளது. Genf 1 மகாநாட்டில் முடிவெடுக்கப்பட்டதன் பிரகாரம், அதன் ஒப்பந்தத்தில் Assad அரசு கைச்சாத்திடாது போகின் தாம் மகாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லையென எதிரணியின் பிரதிநிதி அக்மட் அல் ஜர்பா திடமாகக் கூறியுள்ளார்.
Genf 1 ஒப்பந்தத்தில் இடைக்கால அரசாங்க அமைப்புப் பற்றிய ஒப்பந்த சரத்து ( Clause ) இடம் பெறுகிறது. இதனை ஏற்றுக் கொள்ள அசாத் (Assad) அரசு கண்டிப்போடு மறுக்கிறது.
Assad இன் பிரதிநிதிகள் சிரியாவில் இடம்பெறும் பயங்கரவாதத்தை நிறுத்தவே Genf மகாநாட்டில் கலந்து கொள்ள வந்ததாக அசாத் அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். இரு பகுதியினருக்கும் இடையில் நடைபெறவிருந்த நேரடிப் பேச்சு வார்த்தை, வடிவம் மாற்றப்பட்ட்டு மத்தியஸ்தர் (Negotiator) ஒருவரின் துணையுடன் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம் இரு பகுதியினரையும் நேரடிப் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளவைக்க முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. நாற்பது வெளிநாட்டு மந்திரிகளும், பிரதிநிதிகளும் கலந்து கொள்ளக் காத்திருக்கும் மகாநாடு திட்டமிடப்பட்ட இசையும் திசையுமின்றி மாற்றுப் பாதை தேடி அலைவதாக் கூறப்படுகிறது.
ஐரோப்பிய செய்தியாளர் - மகேந்தி:-
நல்லிணக்க முனைப்புக்களுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் - வியட்நாம்
இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என வியட்நாம் அறிவித்துள்ளது.
அமைச்சர் டியூ குணசேகர வியட்நாமிக்க விஜயம் செய்துள்ளார்.
அமைச்சர் டியூ, வியட்நாம் ஜனாதிபதி ட்ரொன் டான் சான்கீனை சந்தித்து பேச்சுவார்த்தைந நடத்தியுள்ளார்.
தேசிய அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க முனைப்புக்களுக்கு முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படு;ம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
வியட்நாமிற்கும் இலங்கைக்கும் இடையில் ராஜதந்திர மற்றும் பொருளாதார ரீதியில் நல்ல உறவு நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வியட்நாம் இலங்கைக்கு அளித்து வரும் உதவிகள் பாராட்டுக்குரியது என அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.
எகிப்து : குண்டுத் தாக்குதல்களில் 5 பேர் பலி
எகிப்தில் பொலிஸ் படையை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகத் தென்படும் குண்டுத் தாக்குதல்களில் 5 பேர் கொல்லப்பட்டதுடன், 70 பேர் காயமடைந்துள்ளனர்.
கெய்ரோவில் உள்ள பொலிஸ் தலைமையகத்துக்கு வெளியே நடந்த கார் குண்டுத் தாக்குதலுடன் இந்தத் தாக்குதல்கள் ஆரம்பித்தன. முதல் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதுடன், 51 பேர் காயமடைந்தனர்.
அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் ஏனைய இடங்களில் மேலும் இரு குண்டுகள் வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 15 பேர்வரை காயமடைந்தனர்.
2011 கிளர்ச்சியின் மூன்றாவது ஆண்டு நிகழ்வை ஒட்டி இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
அல்கைதாவால் கவரப்பட்ட ஒரு தீவிரவாதக் குழுவான அன்சார் பெய்ட் அல்-மக்டிஸ் இதற்கு உருமை கோரியுள்ளது.
றொஹிங்கா முஸ்லிம்கள் படுகொலை' : பர்மிய அரசு மறுப்பு
பர்மாவின் தூர மேற்குப் பகுதியில் கடந்த வாரம் நடந்த கலவரத்தில் குறைந்தபட்சம் 30 றொஹிங்கா முஸ்லிம்களாவது கொல்லப்பட்டதாக வந்த செய்திகளை பர்மிய அரசாங்கம் மறுத்துள்ளது.
மனிதப் படுகொலை எதுவும் நடக்கவில்லை என்றும், அந்தச் செய்திகளுக்கு ஆதாரம் எதுவும் கிடையாது என்றும், பர்மாவின் பெயரைக் கெடுக்கும் நோக்கில் அவை வந்துள்ளதாகவும் ஒரு அறிக்கையில் அரசாங்கம் கூறியுள்ளது.
ஒரு பொலிஸ்காரர் இறந்த சம்பவத்தை அடுத்து ரக்கைன் மாநிலத்தில், றொஹிங்கா முஸ்லிம்களை பாதுகாப்புப் படையினரும், உள்ளூர் பௌத்தர்களும் தாக்கியதாக சர்வதேச தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பிபிசியிடம் கூறியிருந்தனர்.
அங்குள்ள அதிகாரிகளை அதனை விசாரணை செய்யுமாறு ஐநா கேட்டுள்ளது.
நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜா மரண அச்சுறுத்தலுக்கு நடுவில் நீதி வழங்கினார்'
இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜா நேற்று வியாழக்கிழமை மாலை திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்தார். அவரது இறுதிக் கிரியைகள் வரும் 26-ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பொரளை கனத்தை மயானத்தில் நடைபெறும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதனிடையே, நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜா பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் இடையூறுகளுக்கும் நடுவே நீதி வழங்கிவந்ததாக சட்டத்தரணிகள் கூட்டமைப்பு (Sri Lanka Lawyers Collective) கூறியுள்ளது.
குறிப்பாக, தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவி நீக்கத் தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளித்திருந்த நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாக சட்டத்தரணிகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளரான மூத்த சட்டத்தரணி ஜே.சி. வெலியமுன கூறினார்.
நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கு தகுதிகளும் அனுபவமும் இருந்தும், நீதித்துறை அனுபவம் குறைந்தவர்களும் நீதிமன்ற கட்டமைப்புக்கு வெளியில் இருந்தவர்களும் ஜனாதிபதியால் உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப் பட்டதாகவும் வெலியமுன சுட்டிக்காட்டினார்.எனவே, அரசாங்கம் நீதிபதிகளின் நியமனத்திலும் பதவிநீக்க வழிமுறைகளிலும் வெளிப்படைத் தன்மையான, நீதியான நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளரும் ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் அமைப்பின் முன்னாள் தலைமை இயக்குநருமான ஜே.சி. வெலியமுன கோரிக்கை விடுத்தார்.
'இறுதி அரசியலமைப்புத் திருத்தங்களின்படி, ஜனாதிபதி எந்தவிதமான நடைமுறையும் என்றி எவரை வேண்டுமானாலும் இந்தப் பதவிகளுக்கு நியமிக்க முடியுமாக உள்ளது' என்று வெலியமுன கூறினார்.
'இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜாவின் பெயரைக் குறிப்பிட்டு, நீதிபதிகளின் பதவி உயர்வில் நிலவும் இந்த அநீதியான நடைமுறைக்குப் பதிலாக வெளிப்படையான பொறிமுறை ஒன்று அவசியம் என்று சுட்டிக்காட்டியிருந்தார்' என்றும் கூறினார் ஜே.சி. வெலியமுன.
நாட்டின் நீதித்துறை உட்பட சகல துறைகளிலும் சட்டம் ஒழுங்கு குலைந்துபோயுள்ளதாகவும் நீதித்துறையின் சுதந்திரம் வீழ்ச்சியடைந்துவிட்டதாகவும் வெலியமுன கூறினார்.
'ஜனாதிபதி உள்ளிட்ட ஒருசிலரிடம் மட்டும் அதிகாரம் குவிந்துகிடக்கிறது' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தர்ணா போராட்டத்தில் தேசிய கொடிக்கு அவமதிப்பு
புதுடெல்லி: ரயில் பவன் முன் கெஜ்ரிவால் நடத்திய தர்ணா போராட்டத்தின் போது, தேசிய கொடி அவமானப்படுத்தப்பட்டதாக தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் புகார் செய்துள்ளது. தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் கிஷோர் வர்ஷனி கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: அமைச்சர் உத்தரவை மதிக்காத போலீசாரை சஸ்பெண்ட் செய்ய கோரி ரயில் பவன் முன் முதல்வர் கெஜ்ரிவாலும், அவரது அமைச்சர்களும், கட்சியினரும் 30 மணி நேரம் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது ஆம் ஆத்மி கட்சியினர்., தேசிய கொடியை கையில் பிடித்தபடி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
தேசிய கொடியை எந்தப் போராட்டத்துக்காகவும் யாரும் பயன்படுத்த கூடாது. ஆம் ஆத்மி கட்சி, இதுவரை தேசிய கொடியைதான் எப்போதும் பயன்படுத்தி வருகிறது. இது தேசிய கொடியை அவமதிக்கும் செயல். இது பற்றி தேர்தல் கமிஷன் விசாரித்து, இனி தேசிய கொடியை ஆம் ஆத்மி கட்சியினர் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். தொடர்ந்து தேசிய கொடியை பயன்படுத்தினால், அந்த கட்சியை தடை செய்ய வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.
பின்னர் நிருபர்களிடம் வர்ஷனி கூறுகையில்,‘தேசிய கொடியை அவமதிப்பதை பொறுத்து கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லாவிடில் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி மீதும் முதல்வர் கெஜ்ரிவால் மீது பொது நல வழக்கு தொடர்வேன். கட்சியை தொடங்கியவர்கள், கொடியையும் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். தேசிய கொடியை கட்சி கொடியாக்க யாருக்கும் உரிமையில்லை’ என்றார்.
பா.ஜ. கூட்டணி குறித்து பிப்.8க்குள் இறுதி முடிவு
குலசேகரம்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜவினர் எவ்வாறு இயங்க வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக பாஜ கேந்திர தலைவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் நேற்று திற்பரப்பில் இந்த பயிற்சி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக பாஜ மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் திற்பரப்பு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மதிமுகவுடன் கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது. எந்தெந்த தொகுதிகள் என்பது விரைவில் அறிவிக்கப்படும். ஊழல் மலிந்த காங்கிரசுடன் தேமுதிக கூட்டணி வைக்க முடியாது.
விஜயகாந்த் தமிழ் உணர்வு உடையவர். இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு வலது கரமாக செயல்பட்ட காங்கிரசுடன் அவர் கூட்டணி அமைக்க மாட்டார். இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்க வேண்டும். இல்லை என்றால் வரும் காலத்தில் பாகிஸ்தானிடம் இருந்து பிரிந்து வங்காள தேசம் உருவான போன்று இலங்கையில் உருவாகும். இந்தியா அதை உருவாக்கும். தமிழகத்தில் தேர்தல் கூட்டணி அடுத்த மாதம் 8ம் தேதிக்கு பிறகு இறுதி செய்யப்பட்டு விடும். கன்னியாகுமரியில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும். போட்டியிட்டால் கன்னியாகுமரியில்தான் போட்டியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
திமுகவில் இருந்து மு.க.அழகிரி தற்காலிக நீக்கம் : அன்பழகன் அறிவிப்பு
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக தி.மு.க.வின் தென்மண்டல அமைப்புச்செயலாளர் மு.க.அழகிரி, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. குடும்ப அரசியல் நடத்துகிறது என்ற பழி இதன்மூலம் துடைக்கப்பட்டுள்ளது என்று கருத்து தெரிவித்தார்.
தனது நீக்கம் பற்றி கருத்து தெரிவித்த மு.க. அழகிரி, தி.மு.க. அழிவுக்கு கி.வீரமணி தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
“கருணாநிதி கைதானபோது, நாட்டுக்கு விடுதலை கிடைத்தது என்றவர் கி.வீரமணி. அவரைப் பற்றி தி.மு.க.வினர் நன்கு அறிவார்கள். அவர் ஒரு அரசியல் வியாபாரி. எனது ஆதரவாளர்கள் நீக்கத்தை பற்றி பேசியதற்கு கிடைத்த பரிசு தான் என்மீதான நடவடிக்கை” என்றும் அழகிரி கூறினார்
Subscribe to:
Posts (Atom)




