Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Thursday, October 31, 2013
தமிழகத்தில் ஜந்து முனைகளில் இருந்து மாணவர்கள் சுடர் பணயம்!
தமிழீழ விடுதலைக்கான மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழகத்தில் ஜந்து முனைகளில் இருந்து மாணவர்களின் சுடர்பயணம் எதிர்வரும் நான்காம் நாள்தொடங்கி தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தினை சென்றடையவுள்ளது.இந்த மாணவர் சுடர்பயணத்தின் நோக்கம்தொடர்பில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் அமைப்பினை சார்ந்த கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.இனப்படுகொலை செய்த சிறீலங்காவில் காமன்வெல்த் மாநாடு நடப்படு எமது நெஞ்சம் பொறுக்கவில்லை இந்தியா காமன்வெல் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது இதனை கருத்தில் கொண்டு மாவர்களாகிய நாங்கள் தொடர் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம் .
எதிர்வரும் நான்காம் நாள் சென்னை ,விருதுநகர் ,கூடலுர்,தர்மபுரி,கன்னாயாகுமாரி ஆகிய இடங்களில் இருந்து தொடங்கும் சுடர் பயணம் எட்டாம் நாள் தஞ்சாவூர்முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சென்றடையவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மங்கள்யான் செயற்கைக்கோள்:இன்று ஒத்திகை
நவம்பர் 5 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக் கோள் அனுப்பப்படவுள்ள நிலையில் அதற்கான ஒத்திகை, கட்டுப்பாட்டு அறையில் இன்று நடைபெறுகிறது.பூமியைத் தவிர வேறு ஏதேனும் கோள்களில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக செவ்வாய்க் கோளுக்கு இந்தியா செயற்கைக்கோளை அனுப்பவுள்ளது. "செவ்வாய் கிரக சுற்றுக்கலன் திட்டம்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தி்ன் கீழ் மங்கள்யான் -1 என்ற செயற்கைக் கோள் நவம்பர் 5 ஆம் தேதி பிற்பகல் 2.36 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பப்படவுள்ளது. இதற்கான 56 மணி 30 நிமிடத்திற்கான கவுண்டவுன் 3 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் ராக்கெட் ஏவுதள கட்டுப்பாட்டு அறையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கான ஒத்திகை இன்று நடைபெறுகிறது. இதில் ராக்கெட்டை ஏவுவதற்கு முன்பு ராக்கெட்டில் எரிபொருட்களை நிரப்புதல், பருவ நிலையை கண்காணித்தல், ராக்கெட் ஏவப்பட்டவுடன் அது செல்லும் பாதை, வேகம் உள்ளிட்டவற்றை உன்னிப்பாக விஞ்ஞானிகள் கவனிப்பார்கள், அப்போது கட்டுப்பாட்டு அறையில் உள்ள விஞ்ஞானிகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஒத்திகை இன்று காலை 10 மணி முதல் மாலை வரை நடைபெறுகிறது.
டீசல் விலையை உயர்த்த பரிந்துரை
டீசல் விலையை உடனடியாக 5 ரூபாய் உயர்த்த மத்திய அரசுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்கள் விலை நிர்ணயம் குறித்த பரிந்துரை அறிக்கையை மத்திய அரசிடம் கிரித் பாரிக் தலைமையிலான கமிட்டி இன்று சமர்ப்பித்தது. இதில் மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 250 ரூபாயும் உயர்த்த வேண்டும் என இந்தக் கமிட்டி அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது.
மானிய விலையில் தரும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 6 ஆக குறைக்கவும் இந்த கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இது தவிர டீசல் லிட்டருக்கு 6 ரூபாய் மானியமாக அரசு நிர்ணயிக்க வேண்டும் என்றும் அந்தக் கமிட்டி கூறியுள்ளது. பெட்ரோலை போல, டீசல் விலை நிர்ணய முடிவையும் எண்ணெய் நிறுவனங்களிடமே அரசு வழங்க வேண்டும் என்றும் இந்தக் கமிட்டி கூறியுள்ளது.
முசாஃபர்நகரில் மீண்டும் கலவரம்:4பேர் பலி
உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் மீண்டும் வகுப்பு கலவரம் மூண்டுள்ளது. இதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
முசாஃபர் நகர் மாவட்டம் முகமத்புரைசிங், ஹூசைன்பூர் கிராமங்களில் வசிக்கும் இரு சமூகத்தினருக்கு இடையே நேற்றிரவு இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது. இதில், அப்ரோஸ், மெகர்பான், அஜ்மல் ஆகிய மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். இதுதொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகமத்புரைசிங் கிராமத்தில் சிலர் புகுந்து ஹூசைன்பூர் கிராமத்தினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பரப்பிய வதந்தியால் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கடந்த மாதம் முசாஃபர் நகரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வகுப்பு கலவரத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிருக்கு பயந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்தனர்.
சவுத் இந்தியன் வங்கியில் கிளார்க் பணி
கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சவுத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 28
பணி: ப்ரொபேஷனரி கிளார்க்
மாநிலங்கள் வாரியான காலியிடங்கள்: மேற்கு வங்காளம் -15, ஒரிசா -04, சத்திஸ்கர் -03, திரிபுரா -02, நாகலாந்து -01
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 26-க்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.11.2013
மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.southindianbank.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
திருச்சி என்ஐடி-யில் பொறியாளர் பணி
திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழிற்நுட்ப கல்லூரியில் (NIT) காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Engineer (Civil, Electrical)
காலியிடங்கள்: 04
சம்பளம்: ரூ.35,000 - 45,000
வயதுவரம்பு: 55 முதல் 65-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் அல்லது டிப்பளமோ முடித்து 15 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.(பணி தற்காலிகமானது)
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்கள் முழு விவரங்கள் ஏ4 வெள்ளைத்தாளில் தயார் செய்து தெளிவாக பூர்த்தி செய்து சுயமாக அட்டெஸ்ட் செய்யப்பட்ட சான்றுகளின் நகல்களுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி: The Dean (Planning and Development), National Institute of Technology, Tiruchirappalli - 620015. Tamil Nadu.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.11.2013
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா-வில் Retired Technical Officer பணி
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Retired Technical Officer பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Retired Technical Officer
மொத்த காலியிடங்கள்: 30
கல்வித்தகுதி: Mechanical/ Production/ Electrical/ Electronics/ Chemical/ Pharma/ Textile Technology/ Metallurgy போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 02.10.1948 தேதிப்படி 65-க்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் dgm.crpd@sbi.co.in என்ற e-mail மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
e-mail மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.11.2013
விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் நகல் சென்று சேர கடைசி தேதி: 23.11.2013
பிரிண்ட் அவுட் நகல் அனுப்புவதற்கான அஞ்சல் முகவரி: The General Manager
State Bank of India
Central Recruitment & Promotion Department
Atlanta Building, 3rd Floor,
Plot no. 209, BBR, Block No. III,
Nariman Point, Mumbai 400 021(Maharashtra).
மேலும் சம்பளம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.sbi.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
டிப்ளமோ தகுதிக்கு ஸ்டீல் ஆலையில் டெக்னீஷியன் டிரெய்னி பணி
இந்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் பெரிய இரும்பு தயாரிப்பு நிறுவனமான செயில் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் டிரெய்னி பணியியங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 330
பணி: டெக்னீஷியன் டிரெய்னி
வயதுவரம்பு: 18 - 28-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: மெட்டலர்ஜி, எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மெகட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்ட்டேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இரண்டு ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். அதன்பின்னர், பணியில் அமர்த்தப்படுவர்.
உதவித்தொகை: பயிற்சின்போது முதல் ஆண்டுக்கு மாதம் ரூ.10,700, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.12.200 வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.50.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.11.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
இந்திய உருக்கு ஆலையில் ஆபரேசன் மற்றும் டெக்னீசியன் டிரெய்னி பணி
மேற்கு வங்க மாநிலம் பர்த்துவானில் செயல்பட்டு வரும் ஸ்டீல் தயாரிப்பில் பெரிய நிறுவனமான செயில் நிறுவனத்தில் ஆபரேசன் மற்றும் டெக்னீசியன் டிரெய்னி பணியில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 264
பணி: ஆபரேசன் மற்றும் டெக்னீசியன் டிரெய்னி
கல்வித்தகுதி: மெட்டலர்ஜி, எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மெகட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்ட்டேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 28-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.11.2013
மேலும் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
+2 முடித்தவர்களுக்கு ரப்பர் போர்டு நிறுவனத்தில் பணி
கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான ரப்பர் போர்டு நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 63
பணி: இயக்குநர் -01
கல்வித்தகுதி: பி.இ/பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் பத்து ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.15,600 - 39.100 + கிரேடு சம்பளம் ரூ.7,600
வயதுவரம்பு: 55-க்குள் இருத்தல் வேண்டும்.
பணி: உதவி கணக்காளர் -02
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4600
வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: எம்.காம் முடித்து சம்மந்தப்பட்ட துறையில் 3 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: புள்ளியியல் உதவியாளர் - 01
சம்பளம்: ரூ.9,300 -34,800 + கிரேடு சம்பளம் ரூ.4,200
கல்வித்தகுதி: புள்ளியியல், விவசாய புள்ளியில், பொருளாதாரம் உள்ளிட்ட எதாவதொரு துறையில் பட்டத்தும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Scientific உதவியாளர் - 03
சம்பளம்: ரூ.5200 - 20200 + கிரேடு சம்பளம் ரூ.2,900
வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: தாவரவியல், வேதியியல், விலங்கியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட துறையில் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஃபார்ம் உதவியாளர் - 07
சம்பளம்: ரூ.5200-20200 + கிரேடு சம்பளம் ரூ.2400
வயதுவரம்பு: 27-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் விவசாயத்துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: இளநிலை உதவியாளர் - 27
சம்பளம்: ரூ.5200 - 20200 + கிரேடு சம்பளம் ரூ.1900
வயதுவரம்பு: 27-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளுக்கு குறையாமல் தட்டச்சு செய்யும் திறனும், கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் குறையாமலும் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.rubberboard.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.11.2013
வைசாக் ஸ்டீல் நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பணி
மத்திய அரசின் கீழ் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் விசாக் ஸ்டீல் நிறுவனத்தில் காலியாக உள்ள மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மேனேஜ்மெண்ட் டிரெய்னி
கல்வித்தகுதி: மெட்டலர்ஜி, மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ. அல்லது பி.டெக். முடித்திருக்க வேண்டும். மேலும் கேட் 2014 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.vizagsteel.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
இந்திய ராணுவத் தளவாட தொழிற்சாலையில் பணி
தில்லி ஷாக்குர்பஸ்த்தியில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ராணுவத் தளவாட தொழிற்சாலையில் காலியாக உள்ள லோயர் டிவிசன் கிளார்க், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 44
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: லோயர் டிவிசன் கிளார்க்( எல்.டி.சி) -24, தீயணைப்பு வீரர் -17, ஸ்டோர் கீப்பர் -03
கல்வித்தகுதி: லோயர் டிவிசன் கிளார்க்( எல்.டி.சி) மற்றும் ஸ்டோர் கீப்பர் பணிக்கு +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சும், 30 வார்த்தைகள் கணினியிலும் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். தீயணைப்பு வீரர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தேவையான உடற்தகுதிகளும் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18-25-க்குள் இருத்தல் வேண்டும். வயதுவரம்பில் அரசு விதிகளின்படி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 வருடமும், பிற்படுத்தப்படோருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் சலுகைகள் அளிக்கப்படும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.11.2013
மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.davp.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக் குழு ஒப்புதல்!
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் புதன்கிழமை மாலை கூடிய அக்கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.இதில், பொதுநலவாய மாநாட்டை பல நாடுகள் தொடர்புடைய சர்வதேச விவகாரமாக அணுகவேண்டும். இதை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பிரச்சினையாக கருதக் கூடாது.சர்வதேச விவகாரங்களில் இந்தியாவுக்கென பிரத்யேக கொள்கை உள்ளது. அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.ஆகவே பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதில் எந்தவித ஆட்சேபமும் இல்லை’ என்று காங்கிரஸ் உயர்நிலைக் குழுவில் முடிவு செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக அரசு மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அரசியல் உயர் தலைவர்களுடன் மந்திராலோசனை நடாத்துவதாக முன்னதாக இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
கனடாவில் பேரெழுச்சியுடன் திரண்ட மக்கள் !
கனடிய அரசிற்கும், குறிப்பாக கனடியப் பிரதமர் மாண்புமிகு ஸ்ரீபன் காப்பர், வெளிவிவகாரத்துறை அமைச்சர் யோன் பெயட், மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், அதன் தலைமைகள், கனடிய ஊடகங்கள், தமது சக கனடிய மக்கள் அனைவருக்கும் கொமன்வெல்த் நாடுகள் மாநாட்டை சிறீலங்காவில் புறக்கணித்தமைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும் ஒட்டாவா கனடிய நாடாளுமன்ற முன்றலில் கனடியத் தமிழர்கள் நூற்றுக்கணக்கில் குளிரையும் பொருட்படுத்தாது பேரெழுச்சியுடன் அணிதிரண்டனர்.
Wednesday, October 30, 2013
Breaking News 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ₨14 உயர்ந்து ₨2,924க்கு விற்கப்படுகிறது - சென்னையில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கை வங்கிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு - இன்று முதல் நவம்பர் 1-ம் தேதி வரை 8,350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன - தீபாவளியை ஒட்டி கோயம்பேட்டில் 25 சிறப்பு முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன - இந்தியா-ஆஸி. இடையே 6-வது ஒருநாள் கிரிக்கெட்போட்டி நாளை நாக்பூரில் நடக்கிறது
Tuesday, October 29, 2013
ராகுல் மீது நடவடிக்கை:தேர்தல் கமிஷனிடம் பா.ஜ., புகார்
புதுடில்லி: மத உணர்வுகளைத் தூண்டி, மத கலவரம் ஏற்படும் வகையில் பேசிய, காங்., துணை தலைவர் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேர்தல் கமிஷனிடம், பா.ஜ., தலைவர்கள், நேற்று புகார் அளித்தனர். காங்., துணை தலைவர் ராகுல், ராஜஸ்தான் மற்றும் ம.பி., மாநிலங்களில் நடந்த, தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசினார். அப்போது, சமீபத்தில், மத கலவரம் நடந்த, உ.பி.,யின் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த, முஸ்லிம் இளைஞர்களை, பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., தொடர்பு கொண்டு பேசியதாக கூறினார்.
பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும்: இந்திய முன்னாள் அமைச்சர்
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என இந்தியாவின் முன்னாள் அமைச்சர் மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் இந்தியா சுமூக உறவை பேணுவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது கருத்துக்காக அவர் நியாயத்தையும் முன்வைத்துள்ளார்.
இலங்கையில் நடக்கவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இது குறித்து நேற்று புதுடில்லியில் செய்தியாளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய மணிசங்கர் ஐயர், இலங்கையின் போரால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் சீரமைப்புப் பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது
எனவே அந்த நாட்டுடன் பகையை ஏற்படுத்திக் கொண்டால் அது இலங்கை தமிழர்களுக்கே பாதகமாக அமையும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
வலி. வடக்கில் தமிழர் வீடுகளை இடித்து 6500 ஏக்கரிலும் இராணுவக்குடும்பங்களின் குடியிருப்பு
தமிழர் பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்ந்தும் அடாவடியில் ஈடுபட்டு வருவது நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமையாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
வலி.வடக்கு கட்டுவன் பகுதியில் உள்ள பொதுமக்களது வீடுகளை அண்மைக்காலமாக இராணுவத்தினர் இடித்தழித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் சில தலையீடுகளினால் அது நிறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த மூன்று தினங்களாக படையினர் மீண்டும் வீடுகளை இடித்தழிக்கும் செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளனர். அதனை நேரடியாக பார்வையிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன், உள்ளிட்ட மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை மற்றும் நகரசபையைச் சேர்ந்த உறுப்பினர்களும் நேற்று அங்கு சென்றிருந்தனர்.
இவர்கள் சென்று பார்வையிட்டுக்கொண்டிருந்த பேர்து அங்கு வந்த இராணுவ அதிகாரிகள் இவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்போது அவர்களைப் படம்பிடிக்கச் சென்ற ஊடகவியலாளர்களும் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டதுடன் அவர்களின் படப்பிடிப்புக் கருவிகளும் அவர்களால் பலவந்தமாக பறிக்கப்பட்டு படங்களும் அழிக்கப்பட்டன.
குறித்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
வலி. வடக்கு கட்டுவன் பிரதேசத்தில் உள்ள மக்களின் வீடுகள் இராணுவத்தினரால் உடைக்கப்பட்டு வருவதாக தகவல் அறிந்து நேரடியாக பார்வையிடுவதற்கு வடமாகாண சபை உறுப்பினர்களான சித்தார்த்தன், கஜதீபன் , வலி வடக்கு உப தவிசாளர், வலி தெற்கு தவிசாளர் மற்றும் நகர , பிரதேச சபை உறுப்பினர்களும் சென்றிருந்தோம்.
அங்கு சென்ற நாங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்கு செல்லவில்லை. இராணுவத்தினர் எல்லைப்படுத்தப்பட்டுள்ள இடத்திற்கு வெளியே அதாவது மக்கள் பகுதியில் தான் நின்றிருந்தோம். அப்போது ஒரு வீடு எங்கள் கண் முன்னே புள்டோசரால் இடிக்கப்படுவதைக் கண்டோம். அவற்றை நாம் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது ஊடகவியலாளர்கள் அவற்றை படம் பிடித்துக் கொண்டு நின்றனர்.
அப்போது தான் ஒரு பிரிகேடியர் என்று கூறிக் கொண்டு மிக வேகமாக அவ்விடத்திற்கு வந்த அதிகாரி உள்ளிட்ட இராணுவத்தினர் எங்களுடன் வாக்குவதாத்தில் ஈடுபட்டார். அத்துடன் இங்கு படம் எடுக்க முடியாது. படங்கள் எல்லாவற்றையும் அழியுங்கள் என்றும் அச்சுறுத்தும் பாணியில் கூறினார்.
அப்போது குறித்த இராணுவ அதிகாரி இங்கு இராணுவத்தினரின் முகாம் உள்ளது. பார்க்கத்தெரியவில்லையா உங்களுக்கு நீங்கள் படம் எடுக்க கூடாது என்றார். அதன்போது அவருடன் வந்திருந்த இராணுவத்தினர் ஒருவர் ஊடகவியலாளர்களை நோக்கிப் சென்று அவர்களின் புகைப்படக் கருவிகளை பலவந்தமாக பறித்து அதில் இருந்த படங்களையும் அழித்துக் கொண்டார்.
அவர்கள் எம்முடன் வந்து வாக்குவாதப்பட்ட இடம் இராணுவத்தினரால் போடப்பட்ட எல்லைக்கு வெளியே. நாமும் அவர்களும் தொடர்ந்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அதன்போது குறித்த அதிகாரி தேவைப்பட்டால் தனது அதிகாரத்தைப் பாவித்து இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என என்னையும் என்னுடன் நின்றிருந்தவர்களையும் மிரட்டியதுடன் காட்டுமிராண்டித் தனமான வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டிருந்தார்.
இது நாடாளுமன்ற உறுப்பினரான எனது சிறப்புரிமையினை மீறுகின்ற செயலாக அமைகின்றது. தொடர்ந்தும் அவரிடம் கேட்டிருந்தோம் இவ்வாறு உங்களின் இடங்களில் செய்வீர்களா என்று அப்போது அவர் தெரிவித்தார் யாழ்ப்பாணத்தில் உள்ள எல்லா இராணுவத்தினரையும் இங்கேயே கொண்டுவரப் போவதாகவும் அவர்களது குடும்பங்களுக்கான வீடுகள் அமைக்கப்படவுள்ளது என்றார்.
அப்போது தான் 6500 ஏக்கரிலும் இராணுவ குடும்பங்களுக்கும் வலி.வடக்கில் வீடுகள் அமையவுள்ளமை தெரியவந்துள்ளது. எனினும் அரசாங்கம் இங்கு எங்குமே உயர்பாதுகாப்பு வலையம் ஒன்று இல்லை என எமக்கும் சர்வதேசத்திற்கு கூறிவருகின்ற நிலையில் குறித்த அதிகாரியின் நடவடிக்கை நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான அறிகுறியாக தென்படவில்லை.
இதனை நான் அவருக்கும் நேரடியாக கூறினேன். எனினும் அவர் நீங்கள் மேலிடத்தில் போய் கூறுங்கள் இந்த நிலம் இராணுவத்திற்கு சொந்தமானது என வர்த்தமாணியில் அறிவிக்கப்பட்டு விட்டது என தெளிவாக கூறினார் என்றார்.
மௌனம் எப்போது கலையப் போகிறது? -
சர்வதேச சந்தையில் இலங்கையின் பிரச்சினைக்குரிய விற்பனைப் பொருளாக இப்போதிருப்பது பொதுநலவாய மாநாடு. இது நடைபெறுவதற்கு இன்னமும் மூன்று வாரங்கள் மட்டுமே உள்ளன.
நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இம்மாநாடு உத்தியோகபூர்வமாக நடைபெறவுள்ளது. இந்த திகதித் தெரிவு மிக முக்கியமானது. மாநாட்டின் முடிவுக்கு அடுத்த நாள் – நவம்பர் 18ஆம் திகதி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் 68வது பிறந்தநாள். அதற்கு அடுத்த நாளான நவம்பர் 19, அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற எட்டாவது ஆண்டுக் கொண்டாட்ட நாள்.
மாநாட்டில் பங்குபற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை முன்னிலைப்படுத்தி தமது பிறந்தநாளையும், ஜனாதிபதி பதவியேற்பு நாளையும் பெருவிழாவாகக் கொண்டாட மிக நுட்பமாகத் திட்டமிட்டு மாநாட்டுக்கான நாட்களை மகிந்த தெரிந்தெடுத்துள்ளார். 2015ஆம் ஆண்டில் மாநாடு மற்றொரு நாட்டில்(அனேகமாக மொறிசியஸ் நாட்டில்) நடைபெறும் வரை பொதுநலவாய அமைப்பின் தலைவராக இருக்கப் போகின்றவரும் மகிந்த ராஜபக்சவே.
அந்த வகையில் மாநாட்டையும் அதன் தொடர் நிகழ்ச்சிகளையும் புதிய பதவியையும் சரியாகக் கணக்கிட்டு அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது
ஒபாமாவின் டுவிட்டர் , பேஸ்புக் இணைப்புகளை முடக்கிய சிரியா அதிபரின் ஆதரவாளர்கள்
வாஷிங்டன்: நேற்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் டுவிட்டர், பேஸ்புக் பக்கங்களை சில மணி நேரத்திற்கு முடக்கி வைத்தனர் சிரிய அதிபர் அல் ஆசாத்தின் ஆதரவாளர்கள். இதனால், இந்த பக்கங்களை பார்வையிடுவதற்காக இணைப்புகளை கிளிக் செய்த நபர்கள், சிரியாவின் மின்னணு ராணுவம் என்ற இணைய இணைப்புக்கு திசை திருப்பப்பட்டனர்.
Monday, October 28, 2013
இஸ்ரோ தலைவர்: மற்ற நாடுகளோடு விண்வெளிப் போட்டி இல்லை
பெங்களூரு:மற்ற எந்த நாடுகளுடனும் இந்தியா விண்வெளிப் போட்டியிடவில்லை என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக (இஸ்ரோ) தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, இந்தியாவின் முதல் செயற்கைக்கோள், (வரும் மாதம்) நவம்பர் 5-ஆம் தேதி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி25 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.
பீகார் மக்களுக்கு முதல்வர் நிதிஷ் குமார் துரோகம்:பிரமாண்ட கூட்டத்தில் நரேந்திர மோடி தாக்கு
பீகாரில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடந்தது. ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார் முதல்வராகவும், பா.ஜ.,வின், சுஷில் குமார் மோடி, துணை முதல்வராகவும், பதவி வகித்தனர்.குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, பா.ஜ.,வில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதை பொறுத்துக் கொள்ள முடியாத, நிதிஷ் குமார், பா.ஜ.,வுடனான, கூட்டணியை முறித்தார். இதனால், சுஷில் குமார் மோடி உள்ளிட்ட, நிதிஷ் குமார் அமைச்சரவையில் அங்கம் வகித்த, பா.ஜ.,வினர், ராஜினாமா செய்தனர். நரேந்திர மோடியை ஆதரித்தால், பீகாரில், தங்களுக்கு சிறுபான்மையினரின் ஓட்டு கிடைக்காது என்பதற்காக, நிதிஷ் குமார் இந்த முடிவை எடுத்ததாக, பீகார் மாநில, பா.ஜ.,வினர் அதிருப்தி தெரிவித்தனர்.நிதிஷ் குமாருக்கு பதிலடி கொடுப்பதற்காக காத்திருந்தனர். இந்நிலையில், பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, பாட்னாவில், காந்தி மைதானத்தில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில், நேற்று கலந்து கொண்டார்.இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, 1 லட்சம் பேர், வந்திருந்ததாக, பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.
கூட்டணி பற்றி பேச வரவில்லை: விஜயகாந்த்
இலங்கையில், நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளக்கூடாது. நமது உணர்வுகளை மீறி இந்தியா பங்கேற்குமேயானால், இலங்கை அதிபர் ராஜபக்சேயின் நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளித்தது போல் ஆகிவிடும். இலங்கை தமிழர்களை காக்க கடந்த, 2009ல், லோக்சபா தேர்தலை புறக்கணிக்கும்படி, அரசியல் கட்சிகளை கேட்டு கொண்டேன். ஆனால், இதை ஏற்காத கட்சிகள், இன்று காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும்படி கூறுகின்றன. நான், டில்லியில் யாருடனும் கூட்டணி பேசுவதற்காக வரவில்லை. தமிழ் மக்களுக்கு, ஆதரவாக குரல் கொடுக்கதான் வந்தேன். இவ்வாறு, அவர் கூறினார்
புலம்பெயர் தேசங்களில் சிங்களம் புதிய வியூகம் - தமிழ் செல்பேசி நிறுவனத்தைக் குறிவைக்கும் கே.பி குழு!
சனல் 4 க்கு அனுமதி மறுப்பு
கொழும்பில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாடு தொடர்பான செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் பெருமளவில் வெளியிட்டு முடிக்கப்பட்டுள்ளன.
எனினும் மாநாடு தொடர்பான செய்திகளை சேரிக்க கொழும்புக்கு வருவதற்கு விண்ணப்பித்திருந்த சனல் 4 தொலைக்காட்சியின் கமெரா கலைஞருக்கு மட்டுமே இதுவரை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த தொலைக்காட்சி தெரிவித்தது.
ஊடகங்களுக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்கும் பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத்தின் டுவிட்டாரில் வழங்கியுள்ள தகவலுக்கு பதிலளித்துள்ள சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஜோனத்தன் மில்லர் இந்த தாமதத்திற்கு காரணம் என்ன என்று வினவியுள்ளார்.
தமது விண்ணப்பம் இன்னும் நிராகரிக்கப்படவில்லை என்றாலும் கிடைத்துள்ள தகவல்களின்படி ஊடக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள ஒரே பிரித்தானிய ஊடக வலையமைப்பு தமது வலைமைப்பே என்று சனல் 4 தொலைக்காட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
மாவீரர்களுக்கு கல்லறை கட்டக் கோரினால் கைது; கோத்தபாய
உயிரோடு வாழும் எந்தவொரு முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க போராளியும் முப்பதாண்டுப் போரில் இறந்தவர்கள் நினைவாக கல்லறைகளை அமைக்கக் கோரினால், கைது செய்யப்படுவார் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாவீரர் துயிலுமில்லங்களைப் புனரமைக்க சாவகச்சேரிப் பிரதேசசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச,
“விடுதலைப் புலிகள், உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கம். அவர்கள் சட்டபூர்வமாக முன்னிலைப்படுத்தப்படும் இடத்தில் இல்லை.
அவர்கள் நினைவாக போர் நினைவுச் சின்னங்களை அமைக்க எவருக்கும் உரிமை இல்லை.யாரேனும் அதைச் செய்வார்களேயானால், கைது செய்யப்படுவர்.
இளைஞர்களுக்குத் தவறாக வழிகாட்ட முற்படும் இவர்கள், ஏனைய முன்னாள் விடுதலைப் புலிகளைப் போலவே, கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவர்.
வடக்கு மாகாணம் காணி, காவல்துறை அதிகாரங்களைப் பெறவே முடியாது. அது நடைமுறைச்சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாணங்களுக்கு காணி அதிகாரங்கள் இல்லை என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ள நிலையில்,வடக்கு மாகாண முதல்வரும், மாகாணசபையும், காணி அதிகாரங்களைப் பெறுவது சாத்தியமில்லை என்பதை உணர வேண்டும்.
ஏனைய மாகாணங்களுக்கு தனியான காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாத நிலையில், எதற்காக வடக்கு மாகாணசபைக்கு மட்டும் தனியான சிறப்பு காவல்துறை அதிகாரங்களை வழங்க வேண்டும்?
வடக்கு மாகாணசபைக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாது என்று சிறிலங்கா அதிபரே கூறியுள்ளார். காவல்துறை அதிகாரங்களில் எதற்கு வடக்கு மாகாணசபைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்?
சட்டம் ஒழுங்கு, காவல்துறையை கையாளும் பொறுப்பு மத்திய அரசுக்கும், சிறிலங்கா அதிபருக்குமே உள்ளது. சட்டம் ஒழுங்கை பேணுவதற்கும் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கும் வடக்கு மாகாணசபை காவல்துறைக்கு உதவலாம்.
ஆனால், வடக்கு மாகாணசபைக்குத் தனியான காவல்துறை தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்
சிறிலங்கா பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் -அமெரிக்கா
அமெரிக்க இராஜாங்கத் திணைக்கத்தின் கடுமையான எச்சரிக்கை செய்தி ஒன்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம், நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்தவாரம், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிறப்புச் செய்தி ஒன்றுடன் அலரி மாளிகைக்குச் சென்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தார். ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை சிறிலங்கா நிறுத்தத் தவறினால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அதில் எச்சரித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதேவேளை, ஈரானுடன் சிறிலங்கா நெருக்கமான இராஜதந்திர உறவுகளை வைத்துள்ளது. அமெரிக்காவின் தடைகளை அடுத்து, ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்குவதை சிறிலங்கா நிறுத்தியுள்ளது. எனினும், அமெரிக்காவின் தடையை மீறும் வகையில், மூன்றாவது தரப்பு ஊடாக ஈரானிய மசகு எண்ணெயை சிறிலங்கா வாங்குவதாக, அமெரிக்காவுக்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்தே, அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சிறிலங்கா அதிபரிடம் அமெரிக்கத் தூதுவர் சிசன் கையளித்த சிறப்புச் செய்தியில், ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை சிறிலங்கா உடனடியாக நிறுத்தத் தவறினால், பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இராஜதந்திர மொழியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. -
Sunday, October 27, 2013
வீரபாண்டிய கட்ட பொம்மனின் வழித்தோன்றலாக திகழும் வைகோ : டாக்டர் சரவணன்
மருது சகோதரர்களின் 212–வது நினைவு தினத்தையொட்டி மதுரை தெப்பக் குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு ம.தி.மு.க. மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம், ‘’வீரத்தின் அடையாளமாய் விவேகத்தின் இருப்பிடமாய் நாட்டின் இலக்கணமாய் 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் சமுதாய விடி வெள்ளிகள், சிவகங்கை சீமையை ஆண்ட மருது சகோதரர்களின் 212–வது நினைவு தினத்தில் அவர்களின் தியாகத்தை நினைவு கூறுவோம். அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு செய்த தியாகத்திற்கு அர்த்தம் கொடுக்கும் வகையில், இந்த தலைமுறை யில் அகமுடையார் சமுதாயம் முன்னேற வீரத்துடனும், விவேகத்துடனும் பிற சமுதாயத்தினருடன் நட்புடன் வாழ்வோம் என்று சூளுறை எடுப்போம்.
அன்று வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையுடன் நட்பு பாராட்டி, முதல் சுதந்திர போரை நிகழ்த்தியதுபோல இன்று வீரபாண்டி கட்ட பொம்மனின் வழித்தோன்றலாக திகழும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுடன் நட்பு பாராட்டி இந்த தலைமுறையிலும் முன்னேற்றம் காண் போம்’’என்று தெரிவித்தார்.
படையினர் காவல்துறையினர் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு கிடையாது-கோத்தபாய!
படையினரை வெளியேற்றவோ காவல்துறைக்கு உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரமோ முதலமைச்சருக்கு கிடையாது என்று சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயறாஜபக்ச தெரிவித்துள்ளார்
வட மாகாணசபையின் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கு வட மாகாணத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமைகளை பாதுகாக்கும் பொறுப்பு இருக்கு என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் காவல்துறையினருக்கு உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் விக்னேஸ்வனுக்கு கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அர்த்தமற்ற அறிக்கைகளை வெளியிடுவதனை தவிர்த்து சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தவே முனைப்பு காட்ட வேண்டுமென தெரிவித்தார்.
இதனைவிட வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்காக மக்கள் ஆணை வழங்கவில்லை என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
Saturday, October 26, 2013
வெங்காயம் திருட்டை தடுக்க ரகசிய காமிராவில் கண்காணிப்பு: குஜராத் வியாபாரிகள் ஏற்பாடு
ஆமதபாத், அக். 26–
வெங்காயத்துக்கு நாடெங்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வெங் காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. டெல்லி, காஷ்மீரில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100–க்கும் அதிகமாக விற்பனை ஆகிறது.
குஜராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக ஒரு கிலோ வெங்காயம் ரூ.80 வரை விற்பனையாகிறது. இதனால் காய்கறி கடைகளில் வெங்காயம் திருடப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
குஜராத் மாநிலத்தில் மதுவா நகரில் உள்ள மார்க்கெட்தான் வெங்காயம் விற்பனைக்கான பெரிய மார்க்கெட்டாகும். இந்த மார்க்கெட்டில் மட்டும் தினமும் சுமார் 25 கிலோ வெங்காயம் திருட்டு போய் விடுவதாக தெரிய வந்துள்ளது.
நேற்று முன்தினம் மதுவா மார்க்கெட்டில் புகுந்த மர்ம மனிதர்கள் 2 மூட்டை வெங்காயத்தை எடுத்து சென்று விட்டனர். இதையடுத்து அந்த மார்க்கெட் முழுவதும் ரகசிய காமிராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இரவு–பகலாக கண்காணிக்கும் இந்த காமிராக்கள் மூலம் வெங்காயம் திருட்டை தடுக்க முடியும் என்று காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர். இது தவிர வெங்காயம் இருப்பு வைக்கப்படும் குடோன்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
tamil matrimony_INNER_468x60.gif
பீகாரில் நாளை மோடி பங்கேற்கும் பிரமாண்ட கூட்டம்: 14 ரெயில்களில் தொண்டர்கள் வருகை
பாட்னா, அக்.26–
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.
நேற்று அவர் ஜான்சி நகரில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் ராகுலின் சர்ச்சைக்குரிய பேச்சை குறிப்பிட்டு ஏராளமான கேள்விகளை எழுப்பினார்.
இந்த நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நரேந்திரமோடி பொதுக் கூட்டத்தில் பேச உள்ளார். இந்த பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் மிக, மிக பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டுள்ளன.
பீகார் மாநில அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த பொதுக்கூட்ட ஏற்பாடுகளில் புதுமை புகுத்தப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட மேடை 150 அடி நீளத்துக்கு முழுவதும் இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்டுள்ளது. மேடை மீது 30 அடி நீளத்துக்கு எலக்ட்ரானிக் ஸ்கிரீன் வைத்துள்ளனர்.
மோடி கூட்டத்தில் கலந்து கொள்ள பீகார் முழுவதும் இருந்து பா.ஜ.க.வினர் பாட்னா நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். இதற்காக பீகாரின் பல பகுதி களில் இருந்து 14 சிறப்பு ரெயில்கள் பாட்னாவுக்கு விடப்பட்டுள்ளது. இந்த ரெயில்கள் நாளை காலை பாட்னா வந்து சேரும்.
ரெயில்கள் தவிர 3 ஆயிரம் பஸ்களும் விடப்பட்டுள்ளன. எனவே பாட்னாவில் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீகாரில் நிதீஷ்குமார் தலைமையில் ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதா தளமும் பா.ஜ.க.வும் கடந்த 17 ஆண்டுகளாக கூட்டணி வைத்திருந்தன. மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிதீஷ்குமார், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகினார்.
இந்த கூட்டணி பிளவுக்கு பிறகு முதன்முதலாக பீகாருக்கு நாளை மோடி செல்கிறார். எனவே நாளைய கூட்டத்தை மிக, மிக பிரமாண்டமாக நடத்த பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
மோடி வருகையை முன்னிட்டு பீகாரில் மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் மோடி பட்டாசு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர பீகார் முழுவதும் மோடி இலவச டீக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் பாட்னா நகரம் இன்றே விழாக்கோலம் பூண்டுள்ளது. பாட்னாவில் உள்ள எல்லா ஓட்டல், விடுதி அறைகள் நிரம்பி விட்டன. பாட்னாவில் எங்கு பார்த்தாலும் மோடி படம் போட்ட போஸ்டர்கள், கட்–அவுட்டுகள் நிறைந்துள்ளன.
இதனால் பாட்னா கூட்டத்தில் நாளை மோடி என்ன பேசுவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.
நேற்று அவர் ஜான்சி நகரில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் ராகுலின் சர்ச்சைக்குரிய பேச்சை குறிப்பிட்டு ஏராளமான கேள்விகளை எழுப்பினார்.
இந்த நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நரேந்திரமோடி பொதுக் கூட்டத்தில் பேச உள்ளார். இந்த பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் மிக, மிக பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டுள்ளன.
பீகார் மாநில அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த பொதுக்கூட்ட ஏற்பாடுகளில் புதுமை புகுத்தப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட மேடை 150 அடி நீளத்துக்கு முழுவதும் இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்டுள்ளது. மேடை மீது 30 அடி நீளத்துக்கு எலக்ட்ரானிக் ஸ்கிரீன் வைத்துள்ளனர்.
மோடி கூட்டத்தில் கலந்து கொள்ள பீகார் முழுவதும் இருந்து பா.ஜ.க.வினர் பாட்னா நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். இதற்காக பீகாரின் பல பகுதி களில் இருந்து 14 சிறப்பு ரெயில்கள் பாட்னாவுக்கு விடப்பட்டுள்ளது. இந்த ரெயில்கள் நாளை காலை பாட்னா வந்து சேரும்.
ரெயில்கள் தவிர 3 ஆயிரம் பஸ்களும் விடப்பட்டுள்ளன. எனவே பாட்னாவில் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீகாரில் நிதீஷ்குமார் தலைமையில் ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதா தளமும் பா.ஜ.க.வும் கடந்த 17 ஆண்டுகளாக கூட்டணி வைத்திருந்தன. மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிதீஷ்குமார், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகினார்.
இந்த கூட்டணி பிளவுக்கு பிறகு முதன்முதலாக பீகாருக்கு நாளை மோடி செல்கிறார். எனவே நாளைய கூட்டத்தை மிக, மிக பிரமாண்டமாக நடத்த பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
மோடி வருகையை முன்னிட்டு பீகாரில் மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் மோடி பட்டாசு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர பீகார் முழுவதும் மோடி இலவச டீக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் பாட்னா நகரம் இன்றே விழாக்கோலம் பூண்டுள்ளது. பாட்னாவில் உள்ள எல்லா ஓட்டல், விடுதி அறைகள் நிரம்பி விட்டன. பாட்னாவில் எங்கு பார்த்தாலும் மோடி படம் போட்ட போஸ்டர்கள், கட்–அவுட்டுகள் நிறைந்துள்ளன.
இதனால் பாட்னா கூட்டத்தில் நாளை மோடி என்ன பேசுவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜப்பானில் நில நடுக்கம்: புகுஷிமா அணு உலைக்கு பாதிப்பு இல்லை
டோக்கியோ, அக். 26–
ஜப்பானில் கிழக்கு கடற்கரையில் இன்று அதிகாலை 2.10 மணியளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.
அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் ஓட்டம் பிடித்தனர்.
இதற்கிடையே நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து கடலில் சுனாமி (ராட்சத) அலைகள் ஏற்பட்டன. அவை வழக்கத்தை விட சுமார் 3 அடி உயரத்துக்கு சீற்றத்துடன் எழும்பி வந்து கரையில் சிறிதளவு தாக்கின.
அதை தொடர்ந்து ஜப்பானின் அவசர சேவை மையம் கடலோர மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. அதிகாலை நேரத்திலும் வீடுகளில் தங்கியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதிக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இங்குதான் புகுஷிமா அணு உலை உள்ளது. கடந்த 2011–ம் ஆண்டு பூகம்பமும், சுனாமியும் தாக்கியதில் அணு உலைகள் வெடித்து சேதம் அடைந்தன.
அதில் இருந்து வெளியேறிய கதிர்வீச்சினால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே இந்த முறை சுனாமி தாக்குதலின்போது புகுஷிமா அணுஉலையில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
இதற்கிடையே ராட்சத அலைகள் குறைந்து விட்டதால் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து புகுஷிமா அணு உலைக்கு எந்த பாதிப்பும் இல்லை என பரிசோதித்த நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஜப்பானில் நேற்று 7.6 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இதனால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் பொருட்சேத விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.
டெல்லியில் 10தொகுதிகளில் தேமுதிக போட்டி?
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட திட்டமிட்டிருப்பதாக அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுக் குறித்து நாளை ஆலோசனை செய்த பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
சச்சின் டெண்டுல்கர் பிரச்சாரம் காங்கிரசுக்கு ஆதரவாக:காங். செய்தி தொடர்பாளர் பிரமோத் குஹாலியா
மத்திய பிரதேச சட்டப் பேரவைக்கான தேர்தல் நவம்பர் 25ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி போபா-ல் மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரமோத் குஹாலியா செய்தியாளர்களிடம் கூறியதாவது, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக சச்சின் டெண்டுல்கர் பிரச்சாரம் செய்கிறார். சச்சின் பேச உள்ள 9 பொதுக் கூட்டத்துக்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றார்.
பொதுநலவாய மாநாட்டில் 13 நாடுகளின் தலைவர்களே பங்கேற்பு?
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக இதுவரை 13 நாடுகளின் தலைவர்களே உத்தியோகபூர்வமாக உறுதியளித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் 53 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றில் 32 நாடுகள் சிறிய நாடுகளாகும்.
இலங்கைக்கு அருகில் இருக்கும் மிகப் பெரிய பொதுநலவாய நாடான இந்தியாவின் அரச தலைவர் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ள நாடுகளில் பிரதான நாடுகளில் ஒன்றாக இருக்கும் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என்று கனடா ஏற்கனவே நேரடியாக அறிவித்து விட்டது.
பிரித்தானியா தலைமையிலான அரச தலைவர்கள் கொழும்பு மாநாட்டில் பங்கேற்க உள்ள போதிலும் பொதுநவாய அமைப்பின் இணக்கப்பாடுகளை முழுமையாக மீறியுள்ள இலங்கை அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைப்பதற்காகவே கொழும்பு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் சிறிய நாடுகளுக்கு சென்று அந்நாட்டு தலைவர்களிடம் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிச்சை கேட்டு வருவதாக சிங்கள இணைதளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதனிடையே பொதுநலவாய நாடுகள் மாநாட்டுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்காத நிலையில் இலங்கை அரசாங்கம் நெருக்கடிகளை சந்தித்துள்ளதுடன் திறைசேரியில் உள்ள முழு பணத்தையும் மாநாட்டுக்காக செலவிட்டு வருகிறது.
இதனால் அரச நிறுவனங்களின் செலவுகளை ஈடுசெய்ய முடியாத நிதி நெருக்கடியை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளது.
அரச நிறுவனம் ஒன்றின் தேவைக்காக 50 ஆயிரம் ரூபாவைக் கூட பெற முடியாத நிலைமை காணப்படுவதாக அரச நிறுவனம் ஒன்றின் அதிகாரிகள் தெரிவிப்பதாக அந்த இணையதளம் கூறியுள்ளது.
நாடாளுமன்றத்தின் செலவுகளுக்காக கிடைக்க வேண்டிய 50 மில்லியன் ரூபா பணம் கிடைக்காத நிலையில் நாடாளுமன்ற உணவகத்திற்கு அவசியமான உணவு பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அந்த இணையதளம் கூறியுள்ளது.
பொதுநலவாய மாநாட்டில் விக்கி பங்கேற்கக்கூடாது
பொதுநலவாய மாநாட்டில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கலந்துகொள்ளக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்களிடையேயான கலந்துரையாடல் யாழ்.நகரில் நேற்று வெள்ளிக்கிழமை மூன்று மணி நேரம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் போதே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணசபையின் கன்னியமர்வு முடிவடைந்த பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்றது.
இதில் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினருக்கும் ஒவ்வொரு அமைச்சின் கீழான பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன், புளொட்
தலைவரும் மாகாணசபை உறுப்பினருமான த.சித்தார்த்தன், ரெலோவின் செயலாளர் நாயகமும் மாகாணசபை உறுப்பினருமான க.சிவாஜிலிங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பேச்சு மூன்று மணி நேரம் நீடித்தது. தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் வடக்கு மாகாண சபையின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பிலும் இதில் ஆராயப்பட்டது.
அத்துடன் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கெடுப்பது தொடர்பாகவும், இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பங்கேற்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இதன்போது அனைவரும் பொதுநலவாய மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்கக் கூடாதென்றே வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும், பெயரளவிற்குக்கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் கலந்து கொள்ளக்கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது; திமுக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி , பதில் முடிந்ததும் முதல்வர் ஜெயலலிதா எழுந்து, ஒரு தனி தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அதில் கூறியிருப்பதாவது: 2009ம் ஆண்டு, இலங்கை உள்நாட்டு போர் உச்சகட்டத்தில் இருந்த நிலையில் சர்வதேச சட்டம் மற்றும் ஜெனீவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி, லட்சக்கணக்கான அப்பாவி இலங்கை தமிழர்களை கொன்று குவித்து ஒரு இன படுகொலையை இலங்கை அரசாங்கம் நடத்தியது. இதற்கு தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதில் இருந்தும் கண்டன குரல்கள் எழுப்பப்பட்டன. இலங்கை அரசின் மீது பொருளாதார தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் 8.6.2011 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்தின் மீது இதுநாள் வரை இந்திய அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து, 2013ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை வேறு நாட்டிற்கு மாற்றுவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்றும், இலங்கையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்து 25.3.2013 அன்று பிரதமரை கேட்டுக் கொண்டேன். இது மட்டுமல்லாமல் 27.3.2013 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில், இலங்கை நாட்டை ‘நட்பு நாடு‘ என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும், தமிழர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ‘தனி ஈழம்‘ குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தீர்மானம் இந்த மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்மீதும் மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. காமன்வெல்த் நாடுகளின் முக்கியமான கொள்கைகளையும், கோட்பாடுகளையும் நிலைநிறுத்த முன்வராத இலங்கை நாட்டில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கனடா நாட்டு பிரதமர் அறிக்கை விடுத்துள்ளார். தமிழர்கள் மிகக் குறைவாக வசிக்கும் கனடா நாடே இது போன்றதொரு முடிவை எடுத்து பெயரளவில் ஒருவரை அனுப்பவுள்ள சூழ்நிலையில், எட்டு கோடி தமிழர்கள் வசிக்கும் இந்தியா இந்த மாநாட்டில் பெயரளவிலும் கலந்து கொள்ளாது என்று தீர்க்கமான முடிவை இன்னமும் எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது. தமிழர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு சிறிதும் மதிப்பளிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்றும், பெயரளவிற்கு கூட ஒருவரும் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது; இதுபோன்ற நடவடிக்கை இலங்கை தமிழர்கள் மீது நியாயமான அணுகுமுறையை இலங்கை அரசு எடுக்க வழிவகுக்கும் என்றும் கோடிட்டுக்காட்டி ஒரு விரிவான கடிதத்தை பிரதமருக்கு 17.10.2013 அன்று எழுதியுள்ளேன். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையிலும், தமிழக மக்களின் உணர்வுகளை தெரிவிக்கும் வகையிலும், கீழ்க்காணும் தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்றார். “தமிழக மக்களின் ஒருமித்த கருத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை நாட்டில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநா ட்டை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். பெயரளவிற்குக்கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநா ட்டில் கலந்து கொள்ளக் கூடாது. இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும். இலங்கை தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இந்திய பேரரசை தமிழ்நாடு சட்டப்பேரவை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது’’ என்று தீர்மானத்தை முன்மொழிந்து ஜெயலலிதா பேசினார். இதையடுத்து தனபால் (பேரவை தலைவர்), பண்ருட்டி ராமச்சந்திரன் (தேமுதிக), மு.க.ஸ்டாலின் (திமுக), சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்டு), கோபிநாத் (காங்கிரஸ்), ஜவஹருல்லா (மமக), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), சரத்குமார் (சமக), கதிரவன் (பார்வர்டு பிளாக்), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), செ.கு. தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி) உள்ளிட்ட அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் தீர்மானத்தை ஆதரித்து பேசினர். இதையடுத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
Friday, October 25, 2013
வைகோ ஏமாற்றம்; ராமதாஸ் வரவேற்பு
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: முதல்வர் உரையையும், தீர்மானத்தையும் மேலோட்டமாகக் கவனித் தால், ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க எடுக்கப்படும் நடவடிக்கை போன்ற தோற்றத்தை தருவதால், அதனை வரவேற்கத் தோன்றும்.
அந்த தீர்மானத்தில் ஒன்றுபட்ட இலங்கைக்குள், சிங்களவர்களோடு தமிழர்கள் சமமாக வாழ, இலங்கை அரசு வழி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைதான் இந்த தீர்மானத்தில் அடங்கி இருக்கிறது. இது, புண்ணுக்குப் புனுகு பூசுகிற வேலை மட்டும் அல்ல, இனக்கொலைக் குற்றத்திற்கு, சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை என்ற கோரிக்கையை, நீர்த்துப் போக வைக்கின்ற செயல் ஆகும்.
பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஈழத்தமிழர்களின் உரிமைப்போரின் நியாயத்தின் கோரி க்கையை நீர்த்துப் போகச் செய்கின்ற விதத்திலும், மகத்தான தியாகங்கள் செய்து காட்டப்பட்ட இலக்கை, திசை மாற்றம் செய்யும் நோக்கிலும் அமைந்து இருப்பதால், இத்தீர்மானம் மன நிறைவைத் தரவில்லை; ஏமாற்றம் அளிக்கிறது.
வரவேற்பு: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தை பாமக வரவேற்கிறது. அனைவரின் உணர்வை மதித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருப்பது மனதிற்கு ஓரளவு நிறைவை அளிக்கிறது.
தீர்மானத்தை நிறைவேற்றியதுடன் தமிழக அரசு நின்றுவிடக்கூடாது. தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவுடன் முதலமைச்சர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து, தீர்மானத்தில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்த வேண்டும். அப்போது தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு ஓரளவாவது பலன் கிடைக்கும்.
நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க தமிழக மீனவர்கள் முடிவெடுப்பு
இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்டுத் தராவிட்டால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை தமிழகம் தழுவிய அளவில் மீனவர் சமுதாயம் கூட்டாகச் சேர்ந்து புறக்கணிக்க தீர்மானித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டினத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் காரைக்கால் ஆகிய 6 மாவட்ட மீனவர்களது அவசர கூட்டம் நடைபெற்றது.
இதில் மீனவர் சங்க தலைவர்கள் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்பதோடு தமிழக மீனவர்களின் படகுகளையும் மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களையும் படகுகளையும் மத்திய, மாநில அரசுகள் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் விடுவித்து இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்தியd-இலங்கை இரு நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக 1938 இற்கு முன்பாக இரு கடற்பரப்பிலும் மீன்பிடித்து வந்தது போல் பரஸ்பரமாக மீன்பிடித் தொழில் செய்ய மத்திய அரசு இலங்கை அரசுடன் இணைந்து இருநாட்டு மீனவ பிரதிநிதிகளையும் அழைத்து பேச்சு நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காணாத பட்சத்தில் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் ஒருங்கிணைந்து மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
வி.கே.சிங்கிற்கு ஜம்முகாஷ்மீர் சபாநாயகர் நோட்டீஸ்
ஜம்மு-காஷ்மீர் மாநில அமைச்சர்களுக்கு ராணுவம் பணம் வழங்கியதாக தெரிவித்த முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி வி.கே.சிங்கிற்கு அம்மாநில சபாநாயகர் முபாரக் குல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக 20 நாட்களுக்குள் சட்டப் பேரவையில் நேரில் ஆஜராகி அவர் விளக்கமளிக்க வேண்டுமென அந்த நோட்டீசில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமது பதவி காலத்தில் ஜம்மு காஷ்மீரில் ராணுவம் சில பணிகளை மேற்கொள்வதற்காக மாநில அமைச்சர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக வி.கே. சிங் கூறியிருந்தார்.
குறிப்பாக, கடந்த 2010- ஆம் ஆண்டு மாநில அமைச்சர் குலாம் ஹசன் மிருக்கு மட்டும் ஒரு கோடியே 19 லட்ச ரூபாய் வழங்கியதாகவும் அவர் கூறியிருந்தார். இதற்கு, குலாம் ஹசன் மிர் உடனடியாக மறுப்பு தெரிவித்ததோடு உமர் அப்துல்லாவின் அரசை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் தேமுதிக போட்டி: வேட்பாளர்களை தேர்வு செய்ய விஜயகாந்த் டெல்லி பயணம்
புதுடெல்லி, அக்.24-
டெல்லி சட்டசபைத் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடும் என்றும் வேட்பாளர்களை தேர்வு செய்ய கட்சி தலைவர் விஜயகாந்த் வரும் 27-ந்தேதி டெல்லி செல்வதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (டிசம்பர்) நடைபெறுகிறது.
இதனால் டெல்லி அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது. டெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தே.மு.தி.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யவும், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தே.மு.தி.க. சார்பில் வரும் 27-ந்தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் டெல்லி செல்கிறார். இதுகுறித்து டெல்லி தே.மு.தி.க. மாநில செயலாளர் வி.என்.தட்சிணாமூர்த்தி கூறியதாவது:-
டெல்லி ஐந்தர்மந்தர் பகுதியில் வரும் 27-ந்தேதி (ஞாயிறு) நடைபெறும் தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் கட்சி தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
அந்த கூட்டத்தில் டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடுவது பற்றிய அறிவிப்பை வெளியிடவும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கவும் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். கூட்டத்தில் டெல்லியில் வசிக்கும் தமிழர்களின் ஜாதிச் சான்றிதழ் பிரச்சினை பற்றியும் வேறு பிரச்சினைகள் குறித்தும் அவர் பேசுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லியில் வேறு கட்சிகளின் தலைவர்களை சந்திக்க விஜயகாந்த் திட்டமிட்டு இருக்கிறாரா? என்ற கேள்விக்கு அப்படிப்பட்ட திட்டம் ஏதும் இல்லை என்றும் டெல்லி வாழ் தமிழர்களை சந்திக்க மட்டுமே வருவதாக அவர் தெரிவித்து உள்ளார் என்றும் அவர் பதில் அளித்தார்.
மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மீட்போம்
சீர்காழி : ''மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்தால் கச்சத் தீவை மீட்போம்'' என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார். நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் நேற்று அவர் அளித்த பேட்டி: மக்களவை தேர்தலில் வெற்றி பெற ராகுல்காந்தி தானும் கொல்லப்படலாம் என்று கூறி அனுதாபம் தேடும் முயற்சியில் இறங்கி உள்ளார். ராகுல்காந்தி மீது காங்கிரஸ் கட்சியே தாக்குதல் நடத்தி விட்டு, பழியை பாஜ மீது போடுவார்கள். எனவே ராகுல்காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது அன்றாட நிகழ்வாக உள்ளது. இதற்கு மத்திய அரசின் மெத்தன போக்கே காரணம். ஏற்காடு இடைத்தேர்தலில் முழுமையாக களத்தில் நிற்பவர்கள் யார் என்று தெரிந்த பிறகு பாஜ ஆதரவு யாருக்குகென்று முடிவு செய்வோம். ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற பாஜகவிற்கு மாற்று கருத்து இல்லை. மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை மீண்டும் நிலை நாட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
Wednesday, October 23, 2013
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் வலியுறுத்தல்
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் வலியுறுத்தல்
சென்னை: "இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்கக் கூடாது,'' என, அந்நாட்டின் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் கூறினார்.
தமிழக பா.ஜ., தலைவர்களை, சென்னையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் சம்பந்தன் நேற்று காலை சந்தித்தார். இதில், பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் இல.கணேசன், தமிழிசை சவுந்திரராஜன், எஸ்.ஆர்.சேகர், வானதி சீனிவாசன், மோகன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இச்சந்திப்பு குறித்து, சம்பந்தன் அளித்த பேட்டி: இலங்கை தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து, தமிழக பா.ஜ., நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தேன். தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று, இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்துக் கூறி, அவர்களின் ஆதரவைத் திரட்ட உள்ளோம்.
புதிய முதல்வர்:
இலங்கையின் வடக்கு மாகாணத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்று, விக்னேஷ்வரன் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவருடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள், விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளோம். இந்திய பிரதமர் மற்றும் பிற கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளோம். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களையும், நாங்கள் சந்திப்போம். இலங்கைத் தமிழர் சம உரிமையுடன் வாழ, நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டியது, இந்தியாவின் கடமை. இந்திய நாட்டைத் தவிர, பிற நாடுகளுக்கு இந்த பொறுப்பு இல்லை.
தமிழக கட்சிகளுக்கு ஆதரவு:
போர் முடிந்து பல ஆண்டுகளாகியும், இலங்கைத் தமிழர்களின் நிலையில் மாற்றமில்லை. இலங்கை அரசு, இந்தியா மற்றும் ஐ.நா., சபைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க, 13வது அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்த ஒப்புக் கொண்டு, அதை நிறைவேற்ற விடாமல் தற்போது தடுத்து வருகிறது. போரில் வீடுகளை இழந்து, வெளியேறிய தமிழர்களை, மீண்டும் மறு குடியமர்த்த, இலங்கை அரசு உறுதி அளித்தது. ஆனால், தற்போது அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல், போரின் போது, நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாக்களித்தது. ஆனால், எந்த விசாரணையும் இதுவரை நடக்கவில்லை. தமிழர்கள் மறுவாழ்வுக்கு, இலங்கை அரசு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத நிலையில், கொழும்பில் நடக்கும், காமன்வெல்த் மாநாட்டில், இந்திய அரசு பங்கேற்கக் கூடாது என, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்துவது நியாயமானது. இக்கோரிக்கையை, தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரிக்கிறது.
மார்ச்சில் அறிக்கை:
ஐ.நா., மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை, இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை பார்வையிட்டுச் சென்றுள்ளார். இவரது வருகையால், போர் பாதிப்பு குறித்து வெளிவராத பல விவரங்கள் வெளியாகியுள்ளன. இலங்கை சுற்றுப்பயணம் குறித்த அறிக்கையை, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், 2014, மார்ச் மாதம், நவநீதம் பிள்ளை தாக்கல் செய்ய உள்ளார். அதில், இன்னும் பல தகவல்கள் வெளியாகும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, சம்பந்தன் கூறினார். சம்பந்தனுடனான சந்திப்பு குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ""இலங்கை தமிழர் நல்வாழ்வுக்கு, பா.ஜ., தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரதமர் வேட்பாளர் மோடி ஆகியோரும், இலங்கை தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த, முழு கவனம் எடுத்து வருகின்றனர். இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை,'' என்றார்.
சென்னை: "இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்கக் கூடாது,'' என, அந்நாட்டின் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் கூறினார்.
தமிழக பா.ஜ., தலைவர்களை, சென்னையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் சம்பந்தன் நேற்று காலை சந்தித்தார். இதில், பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் இல.கணேசன், தமிழிசை சவுந்திரராஜன், எஸ்.ஆர்.சேகர், வானதி சீனிவாசன், மோகன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இச்சந்திப்பு குறித்து, சம்பந்தன் அளித்த பேட்டி: இலங்கை தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து, தமிழக பா.ஜ., நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தேன். தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று, இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்துக் கூறி, அவர்களின் ஆதரவைத் திரட்ட உள்ளோம்.
புதிய முதல்வர்:
இலங்கையின் வடக்கு மாகாணத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்று, விக்னேஷ்வரன் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவருடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள், விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளோம். இந்திய பிரதமர் மற்றும் பிற கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளோம். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களையும், நாங்கள் சந்திப்போம். இலங்கைத் தமிழர் சம உரிமையுடன் வாழ, நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டியது, இந்தியாவின் கடமை. இந்திய நாட்டைத் தவிர, பிற நாடுகளுக்கு இந்த பொறுப்பு இல்லை.
தமிழக கட்சிகளுக்கு ஆதரவு:
போர் முடிந்து பல ஆண்டுகளாகியும், இலங்கைத் தமிழர்களின் நிலையில் மாற்றமில்லை. இலங்கை அரசு, இந்தியா மற்றும் ஐ.நா., சபைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க, 13வது அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்த ஒப்புக் கொண்டு, அதை நிறைவேற்ற விடாமல் தற்போது தடுத்து வருகிறது. போரில் வீடுகளை இழந்து, வெளியேறிய தமிழர்களை, மீண்டும் மறு குடியமர்த்த, இலங்கை அரசு உறுதி அளித்தது. ஆனால், தற்போது அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல், போரின் போது, நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாக்களித்தது. ஆனால், எந்த விசாரணையும் இதுவரை நடக்கவில்லை. தமிழர்கள் மறுவாழ்வுக்கு, இலங்கை அரசு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத நிலையில், கொழும்பில் நடக்கும், காமன்வெல்த் மாநாட்டில், இந்திய அரசு பங்கேற்கக் கூடாது என, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்துவது நியாயமானது. இக்கோரிக்கையை, தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரிக்கிறது.
மார்ச்சில் அறிக்கை:
ஐ.நா., மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை, இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை பார்வையிட்டுச் சென்றுள்ளார். இவரது வருகையால், போர் பாதிப்பு குறித்து வெளிவராத பல விவரங்கள் வெளியாகியுள்ளன. இலங்கை சுற்றுப்பயணம் குறித்த அறிக்கையை, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், 2014, மார்ச் மாதம், நவநீதம் பிள்ளை தாக்கல் செய்ய உள்ளார். அதில், இன்னும் பல தகவல்கள் வெளியாகும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, சம்பந்தன் கூறினார். சம்பந்தனுடனான சந்திப்பு குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ""இலங்கை தமிழர் நல்வாழ்வுக்கு, பா.ஜ., தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரதமர் வேட்பாளர் மோடி ஆகியோரும், இலங்கை தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த, முழு கவனம் எடுத்து வருகின்றனர். இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை,'' என்றார்.
Saturday, October 19, 2013
தலைவர் தமிழருவி மணியன் பங்கேற்கும் - புதிய தலைமுறை டிவி "அக்னி பரீட்சை" நிகழ்ச்சி
மாற்று அரசியல் குறித்து .... தலைவர் தமிழருவி மணியன் பங்கேற்கும் - புதிய தலைமுறை டிவி "அக்னி பரீட்சை" நிகழ்ச்சி - நாளை 20.10.2013 ஞாயிறு இரவு 7.30 மணிக்கு காணத் தவறாதீர்கள்
Subscribe to:
Posts (Atom)