Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Friday, April 11, 2014
புலிகள் உருவாகின்றனர்! 65 பேர் இரண்டு மாதங்களில்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப உதவி செய்ததாகக் கூறப்படும் 65 பேர் கடந்த 2 மாதங்களில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
வடக்கு கிழக்குப் பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அதில் ஐவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
10 பெண்களில் எண்மர் பூஸா முகாமிலும் இருவர் வவுனியா தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு பணம் இவர்களிடம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கோபியின் மனைவிக்கு நான்காம் மாடியில் கருச்சிதைவு
இலங்கை இராணுவத்தால் தேடபப்ட்டுவரும் கோபி மற்றும் கஜதிபனின் துணைவியர்கள் மற்றும் தாயார் ஆகியோர்கள் நான்காம் மாடியில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்படுகின்றனர்.
இந்த சித்திரவதைகளின்போது கோபியின் துணைவியார் கருச்சிதைவிற்குள்ளாகியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை மீளிணைக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டுடன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்டு வரும் கோபியின் மனைவி கடந்த மாதம் திருகோணமலையில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கர்ப்பிணியான அவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். இந்தநிலையிலேயே அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீளுருவாகின்றனர் என்றும், அவர்களை மீளிணைக்கும் முயற்சிகளில் கோபி என்று அழைக்கப்படும் கஜீபன் என்பவர் ஈடுபட்டார் என்றும் தெரிவித்து அவரைத் தேடப்படுபவராக அறிவித்தது பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் பிரிவு. அதைத் தொடர்ந்து வடபகுதி முழுவதும் இராணுவத்தின் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டதுடன், கோபியுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்று கூறியும், சந்தேகத்தின் பேரிலும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
---------------------------------------------------------------------------------------------------------
அந்த வரிசையில் கடந்த மாதம் 11ஆம் திகதி கோபி என்று கூறப்படும் கஜீபனின் மனைவி சர்மிளா (வயது 26) பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். தேடப்படுவரான கோபியின் இருப்பிடத்தைக் கண்டறிவதற்காகவே அவர் கைது செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது. கர்ப்பிணிப் பெண்ணான அவர் மறுநாள் 12ஆம் திகதி ரயில் மூலமாகக் கொழும்பில் உள்ள குற்றப் தடுப்புப் பிரிவுக்கு (நாலாம் மாடி) கொண்டு செல்லப்பட்டார்.
-----------------------------------------------------------------------------------------
இந்தக் கைது நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் காரணமாக மூன்று மாதங்களான சர்மிளாவின் கர்ப்பம் 14 ஆம் திகதி காலை கலைந்தது என்று கூறப்படுகின்றது. எனினும் அப்போது அவருக்கு சாதாரணமாக வழங்கப்பட வேண்டிய மருத்துவ உதவிகள் கூட வழங்கப்படவில்லை. மாறாக அதன் பின்னரும் அவர் கொழும்பில் இருந்து பூஸாவுக்கு ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, இந்தக் குற்றச்சாட்டை அடியோடு மறுத்துள்ளார் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண.
வவுனியாவில் புலிகளின் முக்கியஸ்தர்கள் சுட்டுக்கொலை
இராணுவத்தினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பதில் துப்பாக்கிப் பிரயோகத்திலேயே கோபி, அப்பன், தேவியன் ஆகிய மூவரும் கொல்லப்பட்டனர் என்று இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டார்.
மோடி ஏன் மனைவியை பிரிந்தார் துலக்குகிறார் சகோதரர்
எங்களின் பெற்றோர் போதிய கல்வியறிவு இல்லாதவர்கள். நாங்கள் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அப்போது இருந்த சமூக வழக்கத்தின்படி மிகவும் சிறிய வயதிலேயே நரேந்திர மோடிக்கும், யசோதா பென்னுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டனர்.
கோபியுடனான மோதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இராணுவ வீரரை, இராணுவத்தினரே சுட்டுக்கொன்றனர்!
விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என அரசாங்கம் கூறும் கோபி என்பவருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இராணுவ வீரர், இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டிலேயே இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
----------------------------------------------------------------------------------------------
அத்துடன் அவர் இராணுவ வீரர் அல்ல எனவும் இராணுவத்தினர் பயன்படுத்தி வந்த உளவாளி எனவும் தெரியவந்துள்ளது.
----------------------------------------------------------------------------------------------
இந்த உளவாளி கொக்காவில் இராணுவ முகாமில் பணியாற்றிய செல்வராஜா கமலராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
----------------------------------------------------------------------------------------------
எவ்வாறாயினும் இந்த உளவாளியின் கொலையை பயன்படுத்தி வேறு காரணம் ஒன்றை பிரசித்தப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பேசப்படுகிறது.
----------------------------------------------------------------------------------------------
இதற்கு முன்னர் கிளிநொச்சியில் கோபி என்பவரின் துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தாக கூறப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் பற்றிய தகவல்களை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை.
----------------------------------------------------------------------------------------------
கோபி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
----------------------------------------------------------------------------------------------
இந்த நிலையில், இன்று காலை இடம்பெற்றதாக கூறப்படும் மோதல் சம்பவம் குறித்த செய்தி பெரும் சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் மோதல்! கோபி உட்பட மூவரும் சுட்டுக் கொலை?
நெடுங்கேணி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் இரண்டு தரப்பினருக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------
தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், ஒரு இராணுவ படைவீரர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------------
எனினும் இந்த தகவல்கள் இன்னமும் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
----------------------------------------------------------------------------------------------
இந்த மோதல் சம்பவத்தில் பிரதான தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களில் ஒருவரான பொன்னையா செல்வநாயகம் எனப்படும் கோபி என்பவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
----------------------------------------------------------------------------------------------------
நேற்றிரவு நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவத்தினர் தீவிர தேடுதல் நடத்தியுள்ளனர்.
இதன் போது இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சம்பவம் தொடர்பிலான தகவல்களை திரட்டி வருவதாகவும் தற்போதைக்கு எதனையும் குறிப்பிட முடியாது எனவும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
---------------------------------------------------------------------------------
இரண்டாம் இணைப்பு
வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் நேற்றிரவு விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் சிலருடன் மோதல் ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)


