Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Monday, January 27, 2014
மீத்தேன் உரிஞ்சலால் ஏற்படும் தீங்குளை மேலும் அறிய பிரெய்ன் மெக்மேகனின் இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.
தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு தாலுகாக்களிலும், திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம், குடவாசல், வலங்கைமான் தாலுகாக்களிலும் மீத்தேன் வாயுவும் பழுப்பு நிலக்கரியும் எடுக்கப்பட உள்ளன. சுமார் 691 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது இத்திட்டம். மன்னார்குடியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கவிருக்கிறது. கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிட்.இது தஞ்சையின் பிரச்சினை அல்ல
தமிழகத்தின் பிரச்சனை.
-----------------------------------------------------------------------------------------------------------------------
தந்தி டிவி நிகழ்ச்சியில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த “ சுந்தராஜன் அவர்கள் “ கூறிய ஆழமான கருத்து என்னவெனில்
அசாம், பீகார் போன்ற வடக்கு மாநிலங்களில் மத்திய அரசின் இது போன்ற தவறான திட்டங்களால் தான் இன்று தமிழகத்தில் அம்மக்கள் அகதிகளாக குறைந்த கூலிக்கு வேலை பார்க்கு அவலநிலை.
தற்போது தமிழகத்திலும் அணு உலை, கெயில், மீத்தேன், நீயூட்ரினோ....... போன்ற திட்டங்கள் செயல்பட்டால், நம் தமிழக மக்களும் வேறு மாநிலங்களுக்கு அகதிகளாக செல்லும் நிலை ஏற்படும் என கூறினார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
இளைஞர்களே இணைவோம். இத்திட்டத்தை தடுப்போம்.
மீத்தேன் அபாயம்! சோத்துக்கும் வருகிறது வேட்டு! உபயம் மத்திய அரசு!
தமிழகத்தை பாலைவனமாக்க , கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர முனைப்பு காட்டுகிறது மத்திய அரசு. தஞ்சை - திருவாரூர் மாவட்டப் பகுதிகளில் மீத்தேன் வாயு மற்றும் பழுப்பு நிலக்கரி எடுத்துக்கொள்ள, ‘கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிட்(GEECL)’ என்ற வெளிநாட்டு நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு.
காவிரிப் பாசனப் பகுதியின் விவசாயக் கருவூலங்கள், தஞ்சை - திருவாரூர் - நாகை மாவட்டப் பிரதேசங்கள். பசுமையான இந்த மருத நிலப் பகுதிகளை ஒட்டுமொத்த பாலைவனமாக மாற்ற வந்திருப்பதே இத்திட்டம் எனக் குமுறுகின்றனர் காவிரி விவசாயிகள்.
============================================================================================================================
தமிழ்நாடு - பாண்டிச்சேரி கடலோரப் பகுதியில் அமைந்துள்ள காவிரி பெருங்குழிப் படுகையில் உள்ள பழுப்பு நிலக்கரிப் படிவத்தின் ஒரு பகுதியாக இருப்பதே மன்னார்குடி படுகைப் பகுதியில் மீத்தேன் தொகுதி. இந்த நீள்வடிவ பழுப்பு நிலக்கரி மண்டலம் பாண்டிச்சேரியின் பாகூரில் தொடங்கி, நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் முதல் ஸ்ரீமுஷ்ணம், ஜெயங்கொண்ட சோழபுரம், மன்னார்குடி மற்றும் தெற்குப் பகுதி வரை பரந்துள்ளது" என்கிறது கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவன ஆய்வறிக்கை.
----------------------------------------------------------------------------------------------------------------------------
தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு தாலுகாக்களிலும், திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம், குடவாசல், வலங்கைமான் தாலுகாக்களிலும் மீத்தேன் வாயுவும் பழுப்பு நிலக்கரியும் எடுக்கப்பட உள்ளன. சுமார் 691 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது இத்திட்டம். மன்னார்குடியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கவிருக்கிறது. கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிட்.
==============================================================================================================================
இந்திய மாநிலங்கள் பலவற்றில் மின் உற்பத்தி கட்டமைப்புக்காகப் பணியாற்றி வருபவர் பொறியாளர் கோ.திருநாவுக்கரசு. இவர் ‘பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின், ஒருங்கிணைப்பாளர். இத்திட்டம் குறித்து இவரிடம் பேசினோம்.
திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டப் பகுதிகள் அடங்கிய மன்னார்குடி மண்டல நிலப்பகுதிகளில் தரைமட்டத்திலிருந்து 150 மீட்டர் முதல் 600 மீட்டர் ஆழத்துக்கு, சுமார் 760 சதுர கி.மீ.க்கும் அதிக பரப்பளவில் பழுப்பு நிலக்கரிப் படிமங்கள் இருக்கின்றன என்கிறது ஜி.இ.இ.சி. ஆய்வறிக்கை. ஆசியாவிலேயே மிக அதிக அளவு பழுப்பு நிலக்கரி இங்கே இருக்கின்றனவாம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
மன்னார்குடியை மையமாகக் கொண்டு திருவாரூர் - தஞ்சை மாவட்டப் பகுதிகளில் சுமார் 690 சதுர கி.மீ. பரப்புக்கு மீத்தேன் வாயு மற்றும் பழுப்பு நிலக்கரி எடுத்திட வரைவுத் திட்டம் தயாரித்துள்ளது அந்த நிறுவனம்" என்றவரிடம், மீத்தேன் வாயு எரிபொருளுக்கும் பழுப்பு நிலக்கரி மின் உற்பத்திக்கும் பக்கபலமாக இருக்ககும். இரண்டுமே நமக்கு ‘இப்ப’ தேவைதானே?" எனக் கேட்டோம்.
இந்தப் பழுப்பு நிலக்கரிப் படிமங்கள் அதிக நுண் துளைகள் கொண்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அந்த நுண்துளைகளுக்குள் அடைபட்டிருக்கும் மீத்தேன் வாயுவை வெளியேற்றிய பின்னரே, பழுப்பு நிலக்கரிப் படிமங்களை வெட்டியெடுக்க முடியும். அப்போது தரைமட்டத்துக்குக் கீழே பூமிக்கடியில் பெருமளவு தண்ணீரை முதலில் வெளியேற்றியாக வேண்டும். இயற்கையின் கொடையான நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றி விட்டால், தஞ்சை - திருவாரூர் - நாகை மாவட்டங்களின் வயல்வெளிகள் அனைத்துமே கருகிப் போய்விடும். விவசாய விளை நிலங்களுக்கும், பொதுமக்களுக்கும் ஜீவாதார பாசன நீரும், குடிநீரும் கிட்டாது போய்விடும். வளமான நிலப்பரப்புப் பாலைவனமாக்கி விடும்!" என்கிறார் இவர்!
------------------------------------------------------------------------------------------------------------------------------
‘மேற்கு வங்கத்தின் பர்த்வான் மாவட்ட தாமோதர் பள்ளத்தாக்கில் ராணிகஞ்ச் பகுதியில் சுமார் 210 சதுர கி.மீ. பரப்பளவில் மீத்தேன் வாயு மற்றும் நிலக்கரியை எடுத்து வருவதாகச் சொல்கிறதே கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனம்’ என்று பேரழிவுக்கு எதிரான இயக்கத்தின் தலைவர் அத்திவெட்டி லெனினிடம் கேட்டோம்.
அங்கு விளைநிலங்களும், பொதுமக்கள் வசிப்பிடங்களும் மிகமிகக் குறைவு. இங்கு அப்படி அல்ல. ஆசியாவிலேயே இதுபோன்றதொரு மிகப்பெரிய பரப்பளவுக்கு சமவெளி வேளாண் பிரதேசம் வேறெங்குமே இல்லை என்பதுதான், தஞ்சை - திருவாரூர் - நாகை மாவட்டங்களின் காவிரி டெல்டாவின் மாபெரும் தொன்மை!" என்கிறார் லெனின்.
================================================================================================================================
தரைமட்டத்துக்குக் கீழே (core drilling) உள்ளீட்டுத் துரப்பணத் துளைகள் மூலமாக, துரப்பணக் குழாய் கிணறுகள் அமைத்து, நிலத்தடி நீரை அருகருகே இருக்கும் பாசன வாய்க்கால்கள் மூலமாக வெளியேற்ற உள்ளனர். மீத்தேன் வாயு மற்றும் நிலக்கரிப் படிமங்களிலிருந்து வெளியேற்றப்படும் நீர், கடல்நீரைவிட ஐந்து மடங்கு உப்புத்தன்மை கொண்டது. அது வாய்க்கால் வழியாகச் செல்லும் போது விளைநிலங்களின் படிந்திருக்கும் அற்புதமான நுண்ணுயிர்களும், பயிர்களும் மடிந்து போகும். அப்புறம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் பாலைவனமாவதைத் தவிர வேறு வழியில்லை."
திருவாரூர் மாவட்டத்தில் 38 இடங்களிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 12 இடங்களிலும் உள்ளீட்டுக் குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. கடந்த நான்கைந்து மாதங்களாகவே இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டங்களும், பொதுக் கூட்டங்களும் மன்னார்குடி மற்றும் தஞ்சாவூரில் நடைபெற்று வருகின்றன. காவிரி பாசனப் பகுதிக்குள் இத்திட்டத்தை முற்றிலுமாகக் கைவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டத் துணைச் செயலாளர் பி.ஆர். பாண்டியன்.
=================================================================================================================================
ஏற்கெனவே காவிரி பொய்த்துப் போச்சு. இப்போது இதுவேற எங்களை வதைக்குது! விளைநிலங்களும், பொதுமக்களும் அடர்த்தியாக உள்ள பகுதியில் இத்திட்டத்துக்கு முன்னுரிமை அளித்துள்ளது முதல் குற்றம். பொதுமக்களுக்கு மருந்தில்லா நோய்கள் பரவக்கூடிய அபாயம் ஏற்படும். வெளியேற்றப்படும் நீரில் உள்ள மிக அதிகளவு உப்பு, கதிரியக்கக் கழிவுகள் மற்றும் ரசாயனக் கழிவுகளால் சுமார் இருபது லட்ச ஏக்கர் வயல்வெளிகளிலும் பூண்டுச் செடிகள் முளைக்கக் கூட லாயக்கற்றதாகப் போய்விடும். எங்கள் மூன்று மாவட்ட மக்களின் ஒரே வாழ்வாதாரமே விவசாயம் தான். அதுலயும் மண்ணை அள்ளிப் போட்டா நாங்க எங்கே போவோம்" என்கிறார் பி.ஆர். பாண்டியன்.
=================================================================================================================================
மீத்தேன் உரிஞ்சலால் ஏற்படும் தீங்குளை மேலும் அறிய பிரெய்ன் மெக்மேகனின் இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.
மீத்தேன் திட்டத்தை நம் மண்ணில் அனுமதித்தால் இப்படிதான்
மீத்தேன் திட்டத்தை நம் மண்ணில் அனுமதித்தால் இப்படிதான் எங்கும் துளையிடும் கருவிகளும்,கொதிநீர் குளமுமாக நம் மண் மாற்றிவிடும்.விளையும் நிலத்தில் வேதிக்கழிவா?
விடமாட்டோம் விடமாட்டோம் எம் மண்ணை
மலடாக்கா விடமாட்டோம்.
வளைதளதிருந்து எடுக்கப்பட்ட தகவல் இது
மீத்தேன் வாயு எடுக்க GREAT EASTERN ENERGY CORPORATION LTD. என்ற நிறுவனம் ஒப்பந்திக்க பட்டுள்ளது . அதன் வளைதளதிருந்து எடுக்கப்பட்ட தகவல் இது. இதன் வலைதள முகவரியை இங்கே கொடுத்துள்ளேன்.அந்த நிறுவனத்தின் திட்ட வரைபடம் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது
http://www.geecl.com/mannargudi-block.phpThe Company received its second CBM block in 2010 in CBM IV round conducted by Ministry of Petroleum and Natural Gas (MoPNG). The block is situated in the state of Tamil Nadu located in the southern region of India.
Area of 667 sq. km;
0.98 TCF Gas-in-Place as per the Directorate General of Hydrocarbons;
Single seam of up to 80 m;
High permeability expected;
Existing external pipeline infrastructure in place;
Petroleum Exploration Licence (PEL) signed with Tamil Nadu Government;
Plan to drill 50 core wells and 30 pilot production wells as per the minimum work program;
Environmental clearance received; consent to establish in progress.
என் சாமியை (மண்ணை) காக்க யாரு இருக்க இங்க ??
நாங்க விரட்டி அடிச்ச வெள்ளையனோ வேறு ரூபத்தில் எங்களை அழிக்க வந்து நிற்கிறான் !
எங்க கிட்ட மிச்சமுள்ள பூமியிலே #மீத்தேன் எடுத்துப்புட்டா சத்து இல்லாத மண்ணை வச்சி நாங்க என்ன பண்ணுவோமுய்யா ?
காப்பாத்தவேண்டியவனோ எங்களை காவுக்குடுக்க பார்க்கிறான் !!
எதிர்க்க வேண்டியவனோ ஏதோ ஒரு போதைக்கு அடிமையாகி நிற்கிறான் !!
எங்களை காப்பாத்த யாரு இருக்கா?
படிச்சவனோ எங்களை காப்பாத்த நினைக்கல
படிப்பை பாதியில விட்டவனுக்கோ நாங்க எதுக்காக போராடுறோமுனு விளங்கள!
என் சாதிசனம் வாழ என் சாமியை (மண்ணை) காக்க யாரு இருக்க இங்க ??
விவசாயம் மட்டுமே செஞ்சிக்கிட்டு வெள்ளந்திய வாழ்ந்த சனத்தை விவரம் சொல்லி புரிய வைக்க யாரு இருக்க இங்க ??
சிரியா பேச்சுவார்த்தை : ஒரே அறையில் இருதரப்பும்
ஜெனிவாவில் நடக்கும் சிரியா சமாதானப் பேச்சுக்களில் போரில் ஈடுபடும் இரு தரப்பும் முதல் தடவையாக ஒரே அறையில் சிறிது நேரம் நேருக்கு நேர் அமர்ந்திருக்கிறார்கள்.
ஆனாலும் அவர்கள் நேரடியாக ஏதும் பேசிக்கொள்ளவில்லை.
இந்த முதல் கூட்டம் சுமார் அரை மணிநேரம் நடந்ததாக செய்திகள் கூறுகின்றன.
இதற்கு முன்னதாக இரு தரப்பும் தாம் ஐநாவின் மத்தியஸ்தரான லக்தர் பிரஹமி அவர்களுடன் மாத்திரந்தான் பேசுவோம் என்று கூறிவந்தன.
தமது முக்கியமான கவனம் மனித நேய உதவிகள் மற்றும் கைதிகளை விடுதலை செய்தல் ஆகியவை குறித்தே இருக்கும் என்று ஐநாவுக்கான சிரியாவின் தூதுவர் பிபிசியிடம் கூறினார்.
அதிபர் அசாத்தின் எதிர்காலம் போன்ற முக்கிய விடயங்களை கையாள்வதற்கு முன்னதாக மத்தியஸ்தர்கள் இரு தரப்புக்கும் இடையே ஒரு பொதுத்தளத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக சுவிட்ஸர்லாந்தில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
சிரியா செல்லும் இளம் முஸ்லிம்கள் பிரிட்டனையும் தாக்கலாம்'
சிரியாவில் போராடுவதற்காக பிரிட்டனிலிருந்து செல்லும் முஸ்லிம் இளைஞர்கள் மீண்டும் நாடு திரும்பியதும் பிரிட்டனிலும் தாக்குதல்களை நடத்த முயற்சிக்கக் கூடும் என்று முன்னணி பிரிட்டிஷ் முஸ்லிம் விவகார அவதானி ஒருவர் கூறியுள்ளார்.
கடுமையான வன்முறைகளுக்குப் பழகிப் போனவர்களை மீண்டும் பிரிட்டிஷ் சமூகத்தில் இணைப்பது என்பது மிகக்கடினமாக இருக்கும் என்று மொஹமட் அன்சார் தெரிவித்தார்.
சிரியாவின் மோதலுடன் தொடர்புடைய பயங்கரவாதக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரிட்டனில் கைதாவோரின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக பிரிட்டிஷ் காவல்துறை எச்சரித்துள்ள நிலையில், இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
சிரியாவில் பயங்கரவாத உதவி நடவடிக்கைகளுக்காக லண்டனில் பணம் ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் இந்த வாரத்தின் ஆரம்பத்தில் பெண்கள் இருவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சிரியாவிலிருந்து பிரிட்டனுக்கு வரும் பிரிட்டிஷ் பிரஜைகள் நாட்டின் குடிவரவு எல்லைகளிலேயே தடுக்கப்பட்டு கைதுசெய்யப்படுவார்கள் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
தாய்லாந்து எதிர்ப்பு இயக்கத் தலைவர் சுட்டுக் கொலை
தாய்லாந்தில் தலைநகர் பாங்காக்கில் அரசாங்க ஆதரவாளர்களுடனான மோதல் ஒன்றின் போது அரச எதிர்ப்பு போராட்ட இயக்கத்தின் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது சுதின் டரட்டின் அவர்கள், துப்பாக்கியால் சுடப்பட்டார்.
அடுத்த வாரம் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலுக்காக, வாக்காளர்கள் முன்கூட்டிய வாக்களிப்பில் கலந்துகொள்வதை தடுக்கும் நோக்கில் தலைநகரிலும், ஏனைய நகரங்களிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கான வழியை தடுக்க முயன்றபோது வன்செயல்கள் வெடித்தன.
பாங்காக்கில் உள்ள 50 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு முற்றாக தடுக்கப்பட்டது அல்லது நிறுத்தப்பட்டது.
தற்போதைய அரசியல் முறை மாற்றஞ்செய்யப்படும் வரை எந்தவொரு தேர்தல் நடப்பதையும் எதிர்ப்பு இயக்கம் நிராகரிக்கிறது.
இ-சிகரெட்டை 18 வயதுக்கு கீழ் தடைசெய்ய பிரிட்டன் சட்டம்
இங்கிலாந்தில் இலக்ட்ரோனிக் சிகரெட்டுகளை (மின்னணு மூலம் புகை போன்ற வாயுவை உருவாக்கும் நவீன சிகரெட்) 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விற்பனை செய்வதை தடைசெய்து பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய சட்டத்தைக் கொண்டுவரவுள்ளது.
இ- சிகரெட் மூலம், இளம் பராயத்தினர் நிக்கோட்டின் சுவைக்கு பழகிவிடக்கூடும் என்று மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனால், அதிகளவான இளம் பராயத்தினர் உண்மையான சிகரெட்டுகளை புகைக்கப் பழகிவிடுவார்கள் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
புகையிலை சிகரெட்டுகளை விட இ- சிகரெட்டுகள் சுகாதார ரீதியில் பாதுகாப்பானவை என்று கருதப்படுகிறது. ஆனால் அவற்றால் பாதிப்பு இல்லாமல் இல்லை.
நீண்டகாலத்தில் என்ன வகையான பாதிப்புகளை இந்த இ-சிகரெட்டுகள் ஏற்படுத்தும் என்பது பற்றியும் எவருக்கும் தெரியாது.
இதேவேளை, இங்கு இங்கிலாந்தில் சிறார்களுக்காக பெரியவர்கள் உண்மையான சிகரெட்டை வாங்குவதும் சட்டவிரோதம் என்று அறிவிக்கும் சட்டமும் கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்தமான் படகு விபத்தில் 21 பேர் பலி
இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தபட்சம் 21 பேராவது பலியாகியுள்ளனர்.
அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தின் தலைநகரான போர்ட் பிளயருக்கு அருகே படகு, நீரில் மூழ்கிய போது அதில் 40க்கும் அதிகமானோர் இருந்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள். காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் 3 குழந்தைகள் அடங்கலாக 32 பேர் இருந்திருக்கிறார்கள்.
13 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் சிலர் நீரில் மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
திடீரென இந்தப் படகு ஏன் மூழ்கியது என்று தெரியவில்லை. புலன்விசாரணைகள் நடக்கின்றன
பெரும்பாலும் படகுகள் மோசமாக நிர்மாணிக்கப்பட்டிருப்பதாலும், அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் செல்வதாலும், இந்தியாவில் படகு விபத்துக்கள் அதிகமாக நடப்பது வழக்கம்.
வடக்கு மாகாணசபையை இயங்க வைப்பது அரசின் நோக்கமல்ல': சம்பந்தன்
வடக்கு மாகாணசபையை முறையாக இயங்க வைப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டுகிறது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் திருகோணமலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஜனாதிபதியிடம் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேரடியாக பல தடவைகள் கேட்டுக்கொண்டும் வடக்கு மாகாணசபையின் நிர்வாகத்தில் இருக்கின்ற முட்டுக்கட்டைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்று கூறினார்.
வடக்கில் மக்களால் தெளிவாக அளிக்கப்பட்ட ஜனநாயக ஆணையை அரசாங்கம் நிராகரித்துவருவதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.
அரசியல் கைதிகளை விடுவிப்பதில் அரசுக்கு என்ன பிரச்சனைநாட்டின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, அண்மையில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயரை சந்தித்துப் பேசியிருந்தார்.
அதன்போது, சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் பற்றி ஆயர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்தப் பிரச்சனை பற்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடமும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடமும் பேசியிருப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ கூறியதாக ஆயர் கூறியிருந்தார்.
அதுபற்றி கேட்டபோது பதிலளித்த சம்பந்தன், 'அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் விரும்பினால், அதனை அவர்கள் தாராளமாகச் செய்யமுடியும், அதற்கு எங்களின் சம்மதத்தைக் கேட்க வேண்டியதில்லை' என்றார்.
குற்றச்சாட்டுக்களின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மீது வழக்கு இல்லாவிட்டால், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறினார்.
சீன நீதிமன்றம் மனித உரிமை ஆர்வலர் ஒருவரிற்கு நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சீனாவின் நீதிமன்றம் முக்கிய மனித உரிமை ஆர்வலர் ஒருவரிற்கு நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மனித உரிமை ஆர்வலரான சூ ஷியாங் (Xu Zhiyong) ஏழைக் குழந்தைகளின் கல்வி உரிமைக்கும், ஆட்சியாளரின் ஊழலிற்கு எதிராகவும், மதிக்கப்பட வேண்டிய மக்கள் உரிமைக்காகவும் குரல் கொடுத்திருந்தார்.
மக்களின் அமைதியையும், நாட்டின் சட்ட திட்டங்களையும் சீர்குலைக்கும் வகையில் மக்களைத்திரட்டிக் குழப்பம் விளைவிப்பதாக் குற்றம் சாட்டப்பட்டு இவர்மேல் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது .
சட்ட வல்லுனர்களில் ஒருவரான இவர், சீனாவின் முக்கிய மனித உரிமை ஆர்வலர்களில் ஒருவரும், 2010ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசைத் தற்சமயம் சிறையைலிருக்கும் மற்றொரு மனித உரிமை ஆர்வலரான லூ ஷியாபோ(b) (Liu Xiabo) வுடன் கூட்டாகப் பெற்றிருந்தார்.
சாட்சிகளேதும் விசாரிக்கப்படாமலும் பத்திரிகையாளர் எவரும் நீதிமன்ற வளாகத்தினுள் அனுமதிக்கப்படாமலும் தீர்ப்பு வழங்கப்பட்டமை, மனித உரிமை சீனாவில் அடியோடு அழிந்து கிடக்கும் நிலைக்கு ஒப்பற்ற உதாரணமென Human Rights Watch தெரிவிக்கிறது.
சர்வதேசத்தின் கடும் விமர்சனங்களின் மத்தியில். கைதாகியிருக்கும் சகல மனித உரிமை ஆர்வலர்களையும் விடுதலை செய்யுமாறு ஜரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 135 கோடி மக்களைக் கொண்ட சீனாவின் வர்த்தக சந்தையை இழக்க விரும்பாத உலகப் பொருளாதார அரசியல், சீனாவில் மனித உரிமை மீறல் பற்றி வேதனைப்படுவதில் அர்த்தமில்லை என உலக மனிதாபிமானிகள் மத்தியில் கருத்து எழுந்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)





