Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Wednesday, November 6, 2013
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை கண்டித்து தமிழகத்தில் 12–ந்தேதி வணிகர்கள் கடையடைப்பு
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகிற 12–ந்தேதி வணிகர்கள் கடையடைப்பு நடத்த உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறியுள்ளார்.
பிரதமர் யாழ்ப்பாணம் செல்ல பரிந்துரை
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மன்மோகன் சிங் சென்றால், அந்நாட்டில் தமிழர்கள் அதிகம் வசிக்கும், யாழ்ப்பாணத்திற்கு செல்லக் கூடும் என தெரிகிறது.
இது தொடர்பாக பிரதமருக்கு, வெளியுறவுத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒருமித்த குரலில் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது என வலியுறுத்தி வருகின்றன. மேலும், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான அமைச்சர்களும் இதே கருத்தை வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில், மாநாட்டில் பிரதமர் பங்கேற்றால், எதிர்ப்பாளர்களைச் சமாதானப்படுத்தும் வகையில் அவர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்குச் சென்று பார்வையிடலாம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது. ஆனால் இந்த யோசனை குறித்து பிரதமர் அலுவலகம் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேசத்தில் 150 படையினருக்கு மரண தண்டனை!
வங்கதேசத்தில் 2009 இல் படையின் பல உயர் அதிகாரிகள் பலியாகக் காரணமான கிளர்ச்சியில் சம்பந்தப்பட்டதற்காக அந்த நாட்டு பொதுமக்கள் நீதிமன்றம் ஒன்று குறைந்தபட்சம் 150 படையினருக்காவது மரண தண்டனை விதித்துள்ளது.
எல்லைத் துணைப்படையின் உறுப்பினர்கள் 150க்கும் அதிகமானோருக்கும், பல பொதுமக்களுக்கும் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.இந்த எண்ணிக்கை மிகவும் பெரியது.800க்கும் அதிகமானோர் குற்றஞ்சாட்டப்பட்ட இந்த சிவில் நீதிமன்ற வழக்கில் ஒட்டுமொத்தமாக பலருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
இவர்கள் எல்லாரையும் ஒன்றாக விசாரிக்கபதற்காக ஒரு சிறப்பு நீதிமன்றத்தையே தற்காலிகமாக நிர்மாணிக்க வேண்டியிருந்தது.
இறுதியாக, வெகு சாதாரணமாக நீதிபதி முறையே குற்றவாளிகளின் இலக்கங்களையும், அவர்களுக்கான தண்டனையையும் வாசித்தார்.தலைநகர் டாக்காவில் வங்கதேச ரைபிள் படைப்பிரிவின் தலைமை அலுவலகத்தில், முன்னர் நடந்த 30 மணிநேர கிளர்ச்சியின் போது, கொலை மற்றும் சித்ரவதைகளில் ஈடுபட்டதாக பல முன்னாள் எல்லைக் காவலர்கள் குற்றஞ்சாட்டப்பட்டார்கள்.
அந்த கிளர்ச்சியில் 57 இராணுவத்தினர் உட்பட 74 பேர் கொல்லப்பட்டனர்.நாடளாவிய கிளர்சியில் சம்பந்தப்பட்டதாக ஏற்கனவே சுமார் 6000 படையினர் சிறையிடப்பட்டுள்ளனர்.அனைவரையும் கூட்டமாக வைத்துக் குற்றஞ்சாட்டி, தீர்ப்பு வழங்கப்பட்டதாக இந்த வழக்கை விபரித்த, நியூயோர்க்கை தளமாகக் கொண்ட ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு, அந்த விசாரணை நியாயமற்றது என்று கூறியுள்ளதுடன், மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுள்ளது.
சென்னை- பெங்களூரு இடையே சிறப்பு ரயில்
சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு இன்று இரவு 11 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதை போல் பெங்களூரு-சென்னை இடையிலான சிறப்பு ரயில் இன்று 11.15க்கு புறப்படுகிறது. சென்னை- பெங்களூரு செல்லும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
இலங்கை கடற்படையினரை கண்டித்து வேலை நிறுத்தம்
ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கியுள்ளனர்.
இலங்கை கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லைக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையினரை கண்டிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
800க்கும் மேற்பட்ட விசை படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த மங்கள்யான்
செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் மங்கள்யான் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோள் அனுப்பிய நான்காவது நாடு இந்தியா என்ற மைல் கல் சாதனை படைக்க உறுதுணையாக இருந்த விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் , பிரதமர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வு செய்வதற்காக மங்கள்யான் செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 2.38 மணிக்கு புறப்பட்டது. பி.எஸ்.எல்.வி சி-25 என்ற ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட மங்கள்யான், அடுத்தடுத்த நிலைகளைக் கடந்து 44-வது நிமிடத்தில் பூமியின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இணைந்தது.
பிரித்தானியா வாழ் தமிழர்களின் ஐனநாயக போராட்டத்தைப் பிரதமர் புரிந்து கொள்ள வேண்டும். - ஜெயானந்தமூர்த்தி கடிதம்!
இம்மாதம் சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பிரித்தானியா கலந்து கொள்ளக் கூடாது எனவும் கலந்து கொள்வதாக எடுத்துள்ள தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் கோரி பிரித்தானியா பிரதமர் டேவிட் கமரூனுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
நோ பயர் சோன் காணொளி பொதுநலவாய நாடுகள் கவலை – ரிச்சட் உக்கு
இலங்கையின் இறுதி யுத்த காலத்தில் அரசாங்க தரப்பு மேற்கொண்ட யுத்தக்குற்றங்களை வெளிப்படுத்தும் நோ பயர் சோன் காணொளி, பொதுநலவாய நாடுகள் அமைப்பை கவலையடைய வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநலயா நாடுகளின் செயலகத்தின் பேச்சாளர் ரிச்சட் உக்கு, இன்று தமது டுவிட்டர் பக்கத்தில் இதனை பதிவு செய்துள்ளார்.
செனல் 4 தயாரித்த நோபயர் சோன் காணொலியை தாம் தற்போதே பார்வையிட்டதாகவும், அதில் காண்பிக்கப்பட்ட காட்சிகள் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் எந்த அளவு கொடுமையானதாக இருந்திருக்கும் என்பதை உணரக்கூடியதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேசவிதிமுறைகளுக்கு அமைய, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க பரிந்துரைகளை முழுமையாக அமுலாக்குவதே, இலங்கை அரசாங்கத்துக்கு தற்போதுள்ள ஒரே ஒரு துருப்புச் சீட்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கைக்கு எதிரான எந்த சர்வதேச விசாரணைகளையும் அனுமதிக்க முடியாது என்று, பொதுநலவாய நாடுகளின் பொது செயலாளர் கமலேஷ் சர்மாக நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் இன்று மோதல்
தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் இன்று நடக்கிறது. முதல் இரு ஆட்டங்களில் இரு அணியும் தலா ஒன்று வீதம் வென்றன. இதனால் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முன்னிலையை ஏற்படுத்திக் கொள்ள இரு அணி வீரர்களும் கடுமையாக முயற்சிப்பார்கள்.
காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)