Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Saturday, March 8, 2014
இந்தியா ரஸ்யாவை பி;ன்பற்ற வேண்டும் - வைகோ
உக்ரேய்னில் வாழும் ரஸ்ய மொழி பேசும் மக்களுக்காகவே அந்நாட்டு விவகாரத்தில் ரஸ்யா தலையிடுகிறது:
------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியா ரஸ்யாவை பி;ன்பற்ற வேண்டும் - வைகோ :-
இந்திய மத்திய அரசாங்கம் ரஸ்யாவை பின்பற்ற வேண்டுமென மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோ தெரிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------
உக்ரேய்னில் வாழும் ரஸ்ய மொழி பேசும் மக்களுக்காகவே அந்நாட்டு விவகாரத்தில் ரஸ்யா தலையீடு செய்வதாகவும் இதேவழியை இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பின்பற்ற வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------
அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை நிறைவேற்றப்பட உள்ள தீர்மானமானது இனிப்பு சுவையூட்டப்பட்ட விசம் என அவர் தெரிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக் கோரி இந்தியான தனியான தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்கில் தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவே கருத தோன்றுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------
தனி ஈழம் அமைப்பது தொடர்பில் உள்நாட்டு மற்றும் புலம்பெயர் தமிழர்களின் வாக்களிப்புடன் கூடிய சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார்
வடக்கு முழுதும் இராணுவ மயம் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறி - முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்
வடமாகாணம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்கிடமாகியுள்ளது என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
துர்க்கா மணிமண்டபத்தில் மகளிர் தின நிகழ்வுகள் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றதுஇ இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
-----------------------------------------------------------------------------------------------------------
அண்மைக்காலமாக தமிழ் பெண் யுவதிகளை இராணுவத்தில் இணையுமாறு அழைக்கின்றனர். அப்படியானால் ஏன் ஆண்களை அழைக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
-----------------------------------------------------------------------------------------------------------
இராணுவத்தினர் இளம் பெண்களை வீடு வீடாக சென்று இராணுவத்தில் இணையுமாறு வலிந்து கேட்கின்றனர். இதேவேளை பயம்இ வறுமைஇ பாதுகாப்பற்ற தன்மை போன்ற பல காரணங்களினால் எம்பெண்கள் இராணுவத்தில் இணையக் கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
-----------------------------------------------------------------------------------------------------------
ஆனால் மேலிடத்து ஆணைகளை நிறைவேற்றுவதே இராணுவ கீழ்மட்ட சிப்பாய்களின் கடமை என்பதை இராணுவத்தில் சேரும் பெண்கள் உணர்ந்துள்ளார்களா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது என அவர் தெரிவித்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------
தடுப்புக்காவலில் உள்ள தமிழ்க் கைதிகளுக்கு போதிய சட்ட உதவிகள் இல்லை என அறிவித்திருந்தார்கள். அவர்களுக்கு உதவி செய்யக் கூடிய சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து ஒரு சட்ட உதவி குழு ஒன்றை அமைக்க முன்வர வேண்டும். இதற்கான நிதியினை ஏதேனும் ஒரு அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.
நூறு ஏக்கர் காணி சிங்கள குடியேற்றத்திற்காக சுவீகரிப்பு..
நூறு ஏக்கர் காணி சிங்கள குடியேற்றத்திற்காக சுவீகரிப்பு என வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தயிகலாநதி ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்.
-------------------------------------------------------------------------------------------------------------------
வவுனியா மாவட்டத்தில் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சூடுவெந்தபுலவு கிராமசேவையாளர் பிரிவிலுள்ள பாவற்குளம் படிவம்-1 இல் உள்ள நூறு ஏக்கரிற்கு மேற்பட்ட காணிகள் இராணுவகுடியிருப்பு அமைப்பதற்காக மிகவும் சூசகமான முறையில் சுவீகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என எனக்கு முறைப்பாடு பொது மக்களால் கிடைக்கப்பெற்றிருந்தது.
-------------------------------------------------------------------------------------------------------------------
இது தமிழர்களின் பாரம்பரிய பிரதேசமாகும். இப்பகுதியில் தமிழ்மக்கள் சேனைப்பயிர்ச்செய்கை மேற்கொண்ட வந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட யுத்த நிலைமை காரணமாக வேறுபகுதிகளுக்கு இந்த மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
-------------------------------------------------------------------------------------------------------------------
ஏறக்குறைய நூறு ஏக்கரிற்கு அதிகமான காணிகளை சுவீகரித்து இராணுவ குடியிருப்பு அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏற்கனவே இராணுவத்தின் உதவியுடன் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
-------------------------------------------------------------------------------------------------------------------
இதில் வேடிக்கையான விடயம் என்னவெனில் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் நிர்வாகத்திலுள்ள இந்த கிராமத்தின் காணியை அரசாங்க நில அளவையாளரை கொண்டு அளவீடு செய்ய வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலாளரின் கோரிக்கையின் பிரகாரம் காணி வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கான காணி எல்லைகள் சிங்களப்பிரதேச செயலகத்தைச் சேர்ந்த கிராம சேவகர், குடியேற்ற உத்தியோகத்தர்களால் இனங்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் மீள்குடியேற்றம் என்ற பெயரில் மாவட்ட காணி பயன்பாட்டுக்குழுவின் அனுமதியின்றி ஒட்டுமொத்தமாக அனைத்து காணி வழங்கல் தொடர்பான நியமங்கள் எதுவும் பின்பற்றப்படாமல் இரகசியமான முறையில் இந்த காணி சுவீகரிப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
-------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு பின்னணியில் அரசாங்ககட்சியின் சில அரசியல்வாதிகளும் துணைபோவதாக தெரிய வருகின்றது. இதுதொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எட்டுவதற்காக இந்த விடயத்தை வடமாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளேன் என்று தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)