நியூயார்க்கில் இருந்து வெளிவரும் 'டைம்' பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக சேவை புரிந்து பிரபலமானவர்களை தேர்வு செய்து வருகிறது. டைம் பத்திரிகை வாசகர்கள் வாக்களித்து சிறந்த மனிதரை தேர்வு செய்து வருகிறார்கள். இந்த 2013–ம் ஆண்டில் சிறந்த மனிதராக போப் பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
போப் ஆண்டவராக பிரான்சிஸ் பதவி ஏற்ற கடந்த 9 மாதத்தில் அமைதிக்காக அவர் ஆற்றும் தொண்டுக்காகவும், இளைஞர்கள் பலரை நல்வழியில் மாற்றும் சக்தியாக விளங்குகிறார் என்பதாலும் சிறந்த மனிதராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டைம் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதுபற்றி வாடிகன் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "சர்வதேச அளவில் பெருமை வாய்ந்த ஒரு பத்திரிகை அவரை சிறந்த மனிதராக தேர்வு செய்து இருப்பது பெருமை அளிக்கிறது. புனிதமாகவும், மத நம்பிக்கையுடனும் இருந்து அமைதிக்கும், சிறந்த நீதிக்காகவும் பாடுபடும் ஒரு மனிதருக்கு கிடைத்த சிறந்த விருதாக இதை கருதுகிறோம்" என்றார்.
டைம் பத்திரிகை சார்பில் சிறந்த மனிதர் விருது பெறும் 3–வது போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஆவார்.
இதற்கு முன் 1994–ம் ஆண்டில் போப் ஜான் பால், 1962–ல் 23–ம் போப் ஜானும் டைம் பத்திரிகையின் சிறந்த மனிதர் விருது பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருது குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடிக்கு கிடைக்கும் என்று சிலர் கூறி வந்தனர். ஆனால் டைம் வாசகர்கள் முதல் 10 இடத்தில் கூட அவரை தேர்வு செய்யவில்லை.
Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Thursday, December 12, 2013
013–ம் ஆண்டின் சிறந்த மனிதராக போப் பிரான்சிஸ் தேர்வு
நியூயார்க்கில் இருந்து வெளிவரும் 'டைம்' பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக சேவை புரிந்து பிரபலமானவர்களை தேர்வு செய்து வருகிறது. டைம் பத்திரிகை வாசகர்கள் வாக்களித்து சிறந்த மனிதரை தேர்வு செய்து வருகிறார்கள். இந்த 2013–ம் ஆண்டில் சிறந்த மனிதராக போப் பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
போப் ஆண்டவராக பிரான்சிஸ் பதவி ஏற்ற கடந்த 9 மாதத்தில் அமைதிக்காக அவர் ஆற்றும் தொண்டுக்காகவும், இளைஞர்கள் பலரை நல்வழியில் மாற்றும் சக்தியாக விளங்குகிறார் என்பதாலும் சிறந்த மனிதராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டைம் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதுபற்றி வாடிகன் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "சர்வதேச அளவில் பெருமை வாய்ந்த ஒரு பத்திரிகை அவரை சிறந்த மனிதராக தேர்வு செய்து இருப்பது பெருமை அளிக்கிறது. புனிதமாகவும், மத நம்பிக்கையுடனும் இருந்து அமைதிக்கும், சிறந்த நீதிக்காகவும் பாடுபடும் ஒரு மனிதருக்கு கிடைத்த சிறந்த விருதாக இதை கருதுகிறோம்" என்றார்.
டைம் பத்திரிகை சார்பில் சிறந்த மனிதர் விருது பெறும் 3–வது போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஆவார்.
இதற்கு முன் 1994–ம் ஆண்டில் போப் ஜான் பால், 1962–ல் 23–ம் போப் ஜானும் டைம் பத்திரிகையின் சிறந்த மனிதர் விருது பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருது குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடிக்கு கிடைக்கும் என்று சிலர் கூறி வந்தனர். ஆனால் டைம் வாசகர்கள் முதல் 10 இடத்தில் கூட அவரை தேர்வு செய்யவில்லை.
டெல்லியில் ஆட்சியமைக்கப்போவது யார்?: பேச்சு வார்த்தைக்கு வருமாறு பா.ஜ.க.வுக்கு கவர்னர் அழைப்பு
டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளிவந்தது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்று குழப்பம் நிலவி வந்தது.
தேர்தலில் அதிக இடங்களை பிடித்த கட்சி என்ற முறையில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டது. மறுபுறம் பா.ஜ.கவை விட 4 இடங்கள் குறைவாக பெற்ற ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. பா.ஜ.க.வுக்கு ஆதரவு தர சுயேட்சை எம்.எல்.ஏ.வும், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்க ஐக்கிய ஜனதா தள கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.எல்.ஏ.வான ஷோயப் இக்பாலும் முடிவு செய்தனர். ஆனால் இரு கட்சிகளும் ஆட்சியமைக்க மறுத்துவிட்டன.
இந்நிலையில் சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்த பின்பு அம்மாநில ஆளுனர் நஜீம் ஜங், டெல்லியில் ஆட்சியமைப்பது குறித்து இன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு பா.ஜ.கவின் முதலமைச்சர் வேட்பாளரான ஹர்ஷ்வர்த்தனை அழைத்துள்ளார். முன்னதாக குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஆளுநரை நேற்று அழைத்து டெல்லி நிலவரம் குறித்து விவாதித்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பேச்சுவார்த்தைக்குபின் ஆட்சி அமைப்பது தொடர்பான அரசியல் குழப்பம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருடம் சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் தொகை 73 ஆக உயர்வு
ஜெனீவாவில் மகிந்தவின் கழுத்தை இறுக்கப்போகும் சுருக்குக்கயிறு!
தமிழகம்- 24 மணி நேரங்கள் மழை பெய்யும்
வங்கக்கடலில் உருவான மோடி புயல் வலு இழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாகியுள்ளது. புயல் சென்னைக்கு கிழக்கில் தென்கிழக்கில் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. மேலும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்தது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. சென்னை, தேனி, ஆண்டிப்பட்டி, கரூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
சென்னையிலும் நேற்று இரவு திருவல்லிக்கேணி, எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. காலையில் பலத்த காற்று வீசி வருகிறது. மேலும் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. தமிழகத்தில் இன்னும் 24 மணி நேரங்கள் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ரஜினிகாந்த் 64-வது பிறந்தநாள்: பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சி தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘’64-வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடனும், நிரந்தர ஆரோக்கியத்துடனும் எல்லா செல்வங்களும், நலங்களும் வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல அன்னை பராசக்தியை பிரார்த்திக்கின்றேன்.
பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து ஏழைகளின் துயரங்களை உணர்ந்து ஏழைகளோடு வாழ்ந்து இந்தியாவில் ஈடு இணையற்ற நடிகராகவும், மனிதராகவும் உயர்ந்து விட்ட பின்பும் தன் கடந்த காலத்தை என்றும் நினைவில் கொண்டு வாழ்ந்தும், வாழ்வித்தும் வரும் அண்ணன் ரஜினிகாந்த் கடந்த கால பணிகளை விட எதிர்கால பணிகள் அதிகம் இருக்கும் வண்ணம் அன்னை சக்தி அருள் புரிய பிரார்த்திக்கிறேன்’’என்று கூறியுள்ளார்.
சிம்பு திரைப்படத்துக்கு தடை கேட்டு வழக்கு
சென்னை வடபழனியை சேர்ந்தவர் ரமேஷ். இவர், சென்னை உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ’’சென்னை நந்தனத்தை சேர்ந்த நீலகண்டன் என்ற கணேஷ் என்னிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கினார். இந்த தொகையை காசோலை மூலம் திருப்பிக் கொடுத்தார். அந்த காசோலையில், வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லை என்று திரும்பி வந்தது.
இதுகுறித்து நீலகண்டனிடம் கேட்டபோது, வழக்கு எதுவும் தொடர வேண்டாம். பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று கூறினார். இந்த நிலையில், எனக்கு பணம் தராமல், நடிகர்கள் சிம்பு, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘இங்க என்ன சொல்லுது’ என்ற படம் நீலகண்டன் தயாரித்துள்ளார்.
இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. எனவே எனக்கு தரவேண்டிய பணத்தை கொடுக்காமல், இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’’என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனு குறித்து படதயாரிப்பாளர் நீலகண்டன் 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நோட்டீசு அனுப்புவதற்கு உத்தரவிட்டார்.
உருகுவேயில் கஞ்சாவுக்கு சட்டப்பூர்வ அனுமதி
கஞ்சாச்செடியை வளர்க்கவும், கஞ்சாவை விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் எந்தவொரு நாட்டிலும் சட்டப்பூர்வ அனுமதி இல்லை. இந்த நிலையில் தென் அமெரிக்க நாடான உருகுவேயில் கஞ்சாவுக்கு சட்டப் பூர்வ அனுமதி அளிப்பதற்கான மசோதா, பாராளுமன்றத்தில் கடந்த ஆகஸ்டு மாதமே நிறைவேறியது. செனட் சபையில் இந்த மசோதா நிறைவேற வேண்டி இருந்தது.
இப்போது செனட் சபையிலும் மசோதா நிறைவேறி விட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 16 வாக்குகளும், எதிராக 13 ஓட்டுக்களும் விழுந்தன.
கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்பட்டிருப்பதால், 18–வயதான கஞ்சா உபயோகிக்கிறவர்கள் மாதம் ஒன்றுக்கு 40 கிராம் கஞ்சா வாங்கிக்கொள்ளலாம். கஞ்சா விற்பனை அதற்கான உரிமம் பெற்ற மருந்துக்கடைகளில் மட்டுமே நடைபெறும். கஞ்சா பயன்படுத்துகிறவர்கள் தங்கள் பெயரை அரசிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். மாதம் ஒன்றுக்கு அவர்கள் எவ்வளவு கஞ்சா வாங்குகிறார்கள் என்பது கண்காணிக்கப்படும். 120 நாளில் (ஏப்ரல் மாதம்) இந்த சட்டம் அமலுக்கு வரும்.
இந்த சட்டம் அமலுக்கு வந்த பின்னர், ஒருவர் தனது வீட்டில் ஆண்டுக்கு 6 கஞ்சா செடி வளர்க்க முடியும். அதாவது 480 கஞ்சா உற்பத்தி செய்ய முடியும். கஞ்சா புகை பிடிப்போர் விடுதிகளில் ஆண்டுக்கு 99 கஞ்சா செடிகள் வளர்க்கலாம்.
கஞ்சாவுக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறித்து உருகுவே செனட் சபையின் பெண் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ‘‘ஏப்ரல் மாதம் முதல் புதிய அனுபவத்தைப் பெறப்போகிறோம். இது பெரிய கலாசார மாற்றத்துக்கு வித்திடும். இதன் மூலம் போதைப்பொருட்கள் கடத்தல் முடிவுக்கு வரும்’’ என்றார்.
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் மின்வாரிய பராமரிப்புப் பணியின் காரணமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
சேப்பாக்கம் பகுதி: தொலைகாட்சி நிலையம், ராயப்பேட்டை பகுதி, திருவல்லிக்கேணி, பொதுப்பணிதுறை வளாகம், மாநிலக் கல்லூரி, பெரிய தெரு, சைடோஜி தெரு மற்றும் சந்து, கூ.ழ. சாலை, அய்யாபிள்ளை தெரு, அக்பர்சாகிப் தெரு, ரங்கநாதன் தெரு, லால் முகமது தெரு சந்து மற்றும் குறுக்கு தெரு, கெனால் சாலை, எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், டி.வி.நாயுடு தெரு, கானாபாக் தெரு மற்றும் சந்து, புச்சிபாபு தெரு, லால்பேகம் தெரு, பெல்ஸ் சாலை, சி.என்.கே.சாலை மற்றும் சந்து, முகமது அப்துல்லா தெரு மற்றும் சந்து, வெங்கடேசன் தெரு, ஆறுமுகம் தெரு, எழிலகம் வளாகம், சென்னை பல்கலைக்கழகம் வளாகம், வாலாஜா சாலை, மியான் சாகிப் தெரு, முருகப்பா தெரு, சுப்ரமணி செட்டி தெரு மற்றும் சந்து, அருணாசல ஆச்சாரி தெரு, தைபூன் அலிகான் தெரு, யூசுப் லப்பை தெரு மற்றும் சந்து, அப்துல் கரீம் தெரு மற்றும் சந்து மற்றும் குறுக்கு தெரு, அபிபுல்லா தெரு, பக்கிரி சாகிப் தெரு, செல்லப்பிள்ளையார் கோவில் தெரு, குப்பமுத்து தெரு, வல்லப அக்ரஹாரம், மேயர் சிட்டிபாபு தெரு, சின்னதம்பி தெரு, நாகப்பையர் தெரு.
பூந்தமல்லி பகுதி: அபிராமி நகர், வி.ஜி.என். நகர், காடுவெட்டி, பை-பாஸ் சாலை, பூந்தமல்லி, சென்னீர்குப்பம், குமணன்சாவடி, கோரிமேடு, மாங்காடு, பத்ரிமேடு, இரகுநாதபுரம், திருமால் நகர், மாறன் நகர்.
கும்மிடிப்பூண்டி பகுதி: கும்மிடிபூண்டி சிப்காட் ஐ தொழில் கூடவளாகம் பகுதி, கும்மிடிபூண்டி பஜார், எலாவூர், ரெட்டாம்பேடு, பெத்திகுப்பம், சோலையம்பாக்கம், சாமிரெட்டி கண்டிகை.
மதுரவாயல் வடக்கு பகுதி: எம்.எம்.டி.ஏ. 1 முதல் 7வது பிளாக்குகள், வரலட்சுமி நகர், வடக்கு மாட வீதி, பூவை நெடுஞ்சாலை, மேட்டுகுப்பம் சாலை, கார்த்திகேயன் நகர், வேல் நகர், கண்ணன் நகர், ஆலப்பாக்கம் பிரதான சாலை, பல்லவன் நகர், சீமாத்தம்மன் நகர், லட்சுமி நகர், கங்கை அம்மன் நகர், கற்பகம் சேம்பர், சுந்தர் நகர், போரூர் கார்டன், மெட்ரோ நகர், பாரதிதாசன் நகர், கணபதி நகர், கிருஷ்ணா நகர், அஷ்டலட்சுமி நகர், பாக்யலட்சுமி நகர், நூம்பல், வானகரம், சிவபூதம், ராஜீவ் நகர், கணேஷ் நகர், கிருஷ்ணா தொழிற்பேட்டை பல்லவன் நகர், ரெட்டி தெரு, வி.ஜி.பி. அமுதா நகர், எம்.எஸ்.பி.நகர், பாலாஜி நகர், செட்டியார் அகரம் ரோடு, வானகரம், மேட்டுக்குப்பம் சாலை, அண்ணா தொழிற்பேட்டை, கிருஷ்ணா தொழிற்பேட்டை.
வள்ளுவர் கோட்டம் பகுதி: கதீட்ரல் கார்டன் சாலை, ஜி.என்.செட்டி சாலை, ஜி.கே.புரம், வித்யோதயா 1, 2-ஆவது குறுக்கு தெரு, கிரி ரோடு, நியூ கிரி ரோடு, ஹபிபுல்லா சாலை, திருமூர்த்தி நகர் 1 முதல் 6-ஆவது தெரு, வைத்தியநாதன் தெரு, வீரபத்ரன் தெரு, புதுக்குளத் தெரு, ஜோசியர் தெரு, நாகேஸ்வரா சாலை, மகாலிங்கபுரம், மகாலிங்புரம் பிரதான சாலை, புஷ்பா பிரதான சாலை, புஷ்பா நகர், நுங்கம்பாக்கம் லேக் ஏரியா, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, டேங்க்பந்த் சாலை, காமராஜபுரம், கக்கன் காலனி, காம்தார் நகர், திருமலைப்பிள்ளை சாலை, குப்புசாமி தெரு, ஹபிபுல்லா சாலை, சிவசைலம் தெரு, சோலையப்பன் தெரு, பெரியார் ரோடு, தர்மாபுரம் 1 முதல் 12-ஆவது தெரு, பாலாஜி அவென்யு 1, 2-ஆவது தெரு, சாரதாம்பாள் தெரு, தங்கவேல் தெரு, கிருஷ்ணாபாய் தெரு, பாகீரதியம்மாள் தெரு, திருமூர்த்தி நகர், பாரதி நகர் 1 முதல் 4-ஆவது தெரு, வடக்கு உஸ்மான் சாலையின் ஒரு பகுதி, ராமகந்தபுரம், மாம்பலம் சாலை, திலக் தெரு, ராமகிருஷ்ணபுரம், சாரங்கபாணி தெரு, அருளாம்பாள் தெரு, நார்த்போக் ரோடு 1,2,3-ஆவது தெரு, வி.ஆர்.சி.ரோடு ஒரு பகுதி, போலீஸ் குவார்டர்ஸ், சுந்தர்ராவ் தெரு, சேவியர் தெரு, ஏகாலி 1, 2, 3-ஆவது தெரு, அண்ணாசாலை ஒரு பகுதி, காங்கிரஸ் பில்டிங், கோடம்பாக்கம் ஹை சாலை, போரூர் சோமசுந்தரம் தெரு, பத்மநாபன் தெரு, கண்ணையா தெரு.
துரைப்பாக்கம் பகுதி:துரைப்பாக்கம், கண்ணகி நகர், வெட்டுவாங்கனி, காரப்பாக்கம், வி.பி.ஜி.அவென்யு, ஒக்கியம்பேட்டை, குமரன்குடில், பார்த்தசாரதி நகர், மேட்டுகுப்பம், மூட்டகாரன்சாவடி, ஓ.எம்.ஆர். ஒரு பகுதி, சந்திரசேகர் அவென்யு, பல்லவன் குடியிருப்பு.
திருவல்லிக்கேணி பகுதி: காமராஜ் சாலை, டாக்டர் பெசன்ட் ரோடு, எச்.ஆர்.கோயில் தெரு, அயோத்தி நகர், சிங்கராச்சாரி தெரு, சுங்குவார் தெரு, வெங்கடரங்கன் தெரு, தெற்கு மாடவீதி, துளசிங்க பெருமாள் கோயில் தெரு, பந்தாளவேனுகோபால் நாயுடு தெரு, தேரடி தெரு, நல்லதம்பி தெரு, நடுக்குப்பம், கஜபதி லாலா தெரு, இருசப்ப தெரு, ரோட்டரி நகர், துவாரகா நகர், கோகுலம் காலனி, ராகவநாய்க்கர் தோட்டம், மாயண்டி காலனி, ராதாகிருஷ்னா சாலை 9-ஆவது தெரு, பி.எம். தர்கா, துளுக்கானம் தோட்டம், டாக்டர் நடேசன் சாலை, பி.வி.கோயில் தெரு, வி.எஸ்.வி.கோயில் தெரு, ராக்கியப்பன் தெரு, காரனேஸ்வரர் தெரு, ஜி.என்.செட்டி தெரு.
நோபல் பரிசு விழா - மண்டேலா மறைவால் பிரபலங்கள் பங்கேற்கவில்லை
சுவீடன் நாட்டில் ஸ்டாக்ஹோம் நகரில் ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு விழா மிகவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நேற்று இரவு நடந்த இந்த ஆண்டின் விழா அதற்கு நேர்மாறாக களை இழந்து காணப்பட்டது.
இந்த விழாவில் சுவீடன் பிரதமர் பிரெடரிக் ரெய்ன்பெல்ட், இளவரசி விக்டோரியா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் நெல்சன் மண்டேலாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்கா சென்று விட்டனர். இதேபோன்று நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட கனடா எழுத்தாளர் ஆலிஸ் முன்ரோ உடல் நலக்குறைவால் கலந்து கொள்ள வில்லை.
1300 பேர் மட்டுமே விழாவில் கலந்து கொண்டனர். இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் பீட்டர் ஹிக்ஸ், பிராங்கோயிஸ் இங்க்லெர்ட் விழாவில் பங்கேற்று பேசியது பார்வையாளர்களுக்கு ஆறுதலாக அமைந்தது
ராகுல்காந்திக்கு எதிரான ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் தயார்: அரவிந்த கெஜ்ரிவால் பேச்சு
டெல்லி சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து அக்கட்சியின் சார்பில் பிரமாண்டமான பேரணி டெல்லியில் புதன்கிழமை நடைபெற்றது.
பேரணியின் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில்,
ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த வெற்றி சாமானிய மக்களுக்கு கிடைத்த வெற்றி. பிற கட்சிகளில் உள்ள நேர்மையான தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சியில் சேரவேண்டும். டெல்லியில் ஆட்சி அமைக்க வேண்டியது பாஜகவின் கடமை. ஆனால் வேண்டுமென்றே வீம்பாக ஆட்சியமைக்காமல் இழுத்தடிக்கிறது. பாஜகவிற்கு மக்கள் அளித்த வாக்குகள் வீணாகப்போகிறது. இனி பாஜகவுக்கு வாக்களித்து வாக்குகளை வீணாக்காமல் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்திக்கு எதிராக குமார் பிஸ்வாஸ் என்ற வேட்பாளரை அமேதி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி களம் இறக்க உள்ளது என்றார்,
Subscribe to:
Posts (Atom)