Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, February 11, 2014
வடக்கில் அதிகளவான மாணவர்கள் இடைவிலகிச் செல்கின்றனர்:
யுத்தத்தின் பின்னர் வடக்கில்ழ அதிகளவான மாணவ மாணவியர் இடைவிலகிச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொருளாதாரம் உள்ளிட்ட சில காரணிகளினால் இவ்வாறு மாணவ மாணவியர் பாடசாலைக் கல்வியைத் தொடர்வதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமையானது மாகாணத்தின் எதிர்கால அபிவிருத்தியை மோசமாக பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவியரே அதிகளவில் இடைவிலகுகின்றனர்.
மனிதாபிமான உதவிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் வாழ்க்கையை கொண்டு நடாத்த முடியாத பல குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் பாடசாலைக் கல்வியை கைவிட்டு விடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. போதியளவு தொழில் வாய்ப்பு இன்மை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றினால் இவ்வாறு பாடசாலை மாணவ மாணவியர் இடைவிலகிச் செல்வதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிவலிங்கம் சத்தியசீலன் தெரிவித்துள்ளார். பெரும்பாலும் இரண்டாம் நிலைக் கல்வியைத் தொடர்வதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஆரம்பக் கல்வியை சிரமப்பட்டு பூர்த்தி செய்து கொள்ளும் மாணவ மாணவியர் இரண்டாம் நிலைக் கல்வியைத் தொடர முடியாது, தொழில்களைச் தேடிச் சென்றுவிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். போதியளவு வருமானம் இல்லாத காரணத்தினால் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் உடல் ரீதியான உழைப்பை வழங்கி வாழ்க்கையைக் கொண்டு நடாத்த வேண்டிய நிர்ப்பந்தம் வறிய குடும்பங்களுக்குக் காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் 40,000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை பெண்களே வழிநடத்தி வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தின் பொறுப்புக்களை பெண்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் போதியளவு வருமானம் இல்லாத காரணத்தினால் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஏனைய மாகாணங்களை விடவும் யுத்தம் இடம்பெற்ற வடக்கு கிழக்கில் பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மாணவ மாணவியரின் எண்ணிக்கை அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பான்மையை இழந்தது ஆம் ஆத்மி அரசு... ஆதரவை வாபஸ் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.!
டெல்லி: ஆம் ஆத்மி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சுயேட்சை எம்.எல்.ஏ. ராம்பீர் ஷோகீன் வாபஸ் பெற்றுள்ளார். இதன் மூலம் டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி அரசு தனது பெரும்பான்மையை இழந்துள்ளது. நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற பாஜக ஆட்சி அமைக்க மறுத்ததைத் தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் இருந்த ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைத்தது.
--------------------------------------------------------------------------------------------------------------
இந்நிலையில் ஆம் ஆத்மி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக சுயேட்சை எம்.எல்.ஏ.வான ராம்பீர் ஷோகீன் அறிவித்துள்ளார். இன்று மாலை டெல்லி துணைநிலை கவர்னர் நஜீப் ஜங்கை சந்தித்து அவர் தனது ஆதரவை வாபஸ் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, தேர்தல் சமயத்தில் ஆம் ஆத்மி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சியில் அமர்ந்த பின் மறந்து பின்வாங்குகிறது என குற்றம்சாட்டியிருந்தார் ராம்பீர் ஷோகீன். சுயேட்சை எம்.எல்.ஏ. அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி அரசு தனது பெரும்பான்மையை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தின் பிரதமராக சுஷில் கொய்ராலா தேர்வு
நேபாளத்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைவரான சுஷில் குமார் கொய்ராலா அந்நாட்டின் பிரதமராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
---------------------------------------------------------------------------------------------------------
அங்கு தேர்தல்கள் நடைபெற்று மூன்று மாத காலம் இழுபறி இருந்தவந்த நிலையில் தற்போது அங்கு பிரதமர் ஒருவர் தேர்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
---------------------------------------------------------------------------------------------------------
நாடாளுமன்றத்தில் பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பில் நேபாளி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சுஷில் குமார் கொய்ராலா பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றார்.
---------------------------------------------------------------------------------------------------------
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.
---------------------------------------------------------------------------------------------------------
அதன் காரணமாக பிரதமர் பதவிக்கான தேர்வு குறித்து மிக நீண்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
---------------------------------------------------------------------------------------------------------
கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் பெரிய கட்சியாக வந்து ஆட்சி அமைத்திருந்த மாவோயிஸ்டுகளால் நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தல்களில் மூன்றாவது இடத்தையே பெறமுடிந்தது.
---------------------------------------------------------------------------------------------------------
75 வயதாகும் கொய்ராலா அடுத்த ஒராண்டுக்குள் புதிய அரசியல் சாசனத்தின் வரைவு ஒன்று தயாரிக்கப்படும் என்று உறுத்தியளித்துள்ளார்.
உதவ ஆட்கள் இருந்தும் கொல்லப்பட்ட ஒட்டகச்சிவிங்கி
டென்மார்க் நாட்டின் தலைநகர் கோப்பன்ஹேகனிலுள்ள மிருகக்காட்சிசாலையில், ஒட்டகச்சிவிங்கி ஒன்று கொல்லப்பட்டுள்ள சம்பவம் உலகின் பல பகுதிகளில் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------
அதைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், அதிர்ச்சியளிக்கக் கூடிய வகையில் அது சுட்டுக்கொல்லப்பட்டு அதன் இறைச்சி அதே மிருகக்காட்சிசாலையிலுள்ள சிங்கங்களுக்கு உணவாக அளிக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------
தமது குடும்பத்துக்குள்ளேயே அந்த ஒட்டங்கச்சிவிங்கி இனவிருத்தி நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுப்பதற்கும், தேவைக்கு அதிகமாக மிருகங்கள் இருப்பதாலுமே இந்தக் கொலையை தாங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது என அதிகாரிகள் கூறுகிறார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------
ஆனால் வட இங்கிலாந்திலுள்ள ஒரு மிருகக்காட்சிசாலை உட்பட பலர், கொல்லப்பட்ட மரியஸ் எனும் பெயரைக் கொண்ட அந்த விலங்கை ஏற்றுக் கொள்ள முன்வந்தனர்.
---------------------------------------------------------------------------------------------------------
இது தொடர்பிலான காணொளியை இங்கே பார்க்கலாம்.
பேரறிவாளன், முருகன், சாந்தனின் வாதம் எழுத்து பூர்வமாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்:-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாங்கள் சிறையில் மகிழ்ச்சியாக இல்லை என்று பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளனர்.
----------------------------------------------------------------------------------------------------------
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு கடந்த 2000ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை, கடந்த 2011ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் நிராகரித்தார். கருணை மனு நீண்ட காலம் நிலுவையில் வைக்கப்பட்டிருந்த காரணத்தால், அவர்களின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில், மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------------------
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சிவகீர்த்தி சிங் ஆகிய கொண்ட அமர்வு முன்பு விசாரணை நடந்தது. பேரறிவாளன் உள்பட 3 பேரின் தரப்பிலும், மத்திய அரசு தரப்பிலும் கடந்த 4ஆம் தேதி வாதம் முடிவடைந்தது. அப்போது, அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி வாதிடுகையில், கருணை மனு காலதாமதத்தால் மூவரும் மனஅழுத்தத்தில் இருக்கவில்லை என்றும், சிறையில் மூவரும் இயல்பான மனநிலையில் இருந்ததாகவும், மூன்று பேரும் சித்ரவதைக்கோ, மனவேதனைக்கோ ஆளாகவில்லை என்றும், கருணை மனு தாமதத்தை காரணம் காட்டி தூக்குத் தண்டனையை குறைக்க கூடாது என்றும் வாதிட்டார்.
----------------------------------------------------------------------------------------------------------
இரு தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தேதியை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்நிலையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் எழுத்துப்பூர்வமான வாக்குமூலம் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறையில் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்ததாக மத்திய அரசு கூறுவதை ஏற்க கூடாது என்றும், தூக்குத் தண்டனை பெற்றவர்களின் மனநிலை பற்றி அனைவருக்கும் தெரியும் என்றும், மன அழுத்தத்திற்கு ஆளாகக் கூடாது என்பதற்காக கல்வி, இசை கற்றதாகவும் விளக்கம் அளித்துள்ளனர். கருணைமனு 15 ஆண்டுகள் கழித்து நிராகரிக்கப்படுவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
பர்மாவின் பழைய காட்சிகள் புதிய ஜனநாயக அமைப்பிற்குள் பொருந்த வில்லை- ஜேர்மன் ஜனாதிபதி ஜோகாகிம் கவுக்:
ஜேர்மன் ஜனாதிபதி ஜோகாகிம் கவுக் தன் ஆசிய விஜயத்தின் போது, பேர்மா நாட்டின் விடுதலை விக்கிரகமென அவரால் கருதப்படும் சன் சூகி (Aung San Suu Kyi) ஐச் சந்தித்த விநாடியில் எல்லை கடந்த உணர்ச்சி வெள்ளத்தில் தத்தளித்தார்.
ஓரினத்தின் பாரம்பரியங்கள் பற்றியும் அதன் விடுதலை பற்றியும் பேசும் சந்தர்ப்பங்களில் கவுக் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுக் காணப்படுவது வழக்கம். அரசியல் அடிமைகளாக மக்கள் கையாளப்பட்ட கிழக்கு ஜேர்மனின் குடிமகன் இவராவார். அமெரிக்கக் கறுப்பினத்தின் விடுதலைக்காகப் போராடிய மாட்டீன் லூதர் கிங், யூத இன அழிப்பைத் தடுக்க 1933 களில். ஜேர்மன் கிறிஸ்தவர்களுக்கும் கிட்லரின் தேசியப் பொதுவுடமை ஆட்சிக்கும் எதிராகப் போராடிய டீற்றிக் போன்ற பலர் தன் வாழ்க்கைப் பயணத்தின் முன்னோடிகளாக இருக்கிறார்களென்றும், இன்று இன்னொரு முன்னோடியான சுதந்திர விக்கிரகத்தை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டுப் பெரு மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.
தங்களையும் தங்கள் ஜனநாயக விடுதலைப் போராட்டத்தையும் முழுமையாகப் புரிந்து கொண்ட கவுக்கின் பெருந்தன்மைக்குத் தான் தலை வணங்கி நன்றி செலுத்துவதாக, பதினைந்து வருடங்கள் வீட்டுச் சிறை வாசம் அனுபவித்தவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான சன் சூகி தெரிவித்தார்.
--------------------------------------------------------------------------------------------------------------
அதே சமயம் தற்போதைய மியான்மாரில் ஜனநாயக நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுவதாகவும், உலகிற் சகல சீர்திருத்த வழிமுறைகளும் மெதுவாக நகர்வது இயல்பெனப் புரிந்திருந்தும் மிகவும் தாமதமான முன்னேற்றத்தை ஜீரணிப்பது கடினமாகவுள்ளதெனவும் சன் சூகி தெரிவித்தார்.
--------------------------------------------------------------------------------------------------------------
அத்தோடு வருகின்ற வருடத்தில் இடம்பெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் சன் சூகி போட்டியிட உள்ளதாகவும் கூறினார்.
--------------------------------------------------------------------------------------------------------------
அதன் பின் கவுக் மியான்மாரின் ஜனாதிபதியையும் சந்தித்துப் பேசிய போது ஜனநாயகப் பாதையில் அடியெடுத்து வைத்திருக்கும் அரசைப் புகழவும் தவறவில்லை. அதே வேளை பாராளுமன்றத்தில் 25 சத வீத அங்கத்தவர்கள் இன்னும் பழைய இராணுவ அதிகாரிகளாகக் காணப்படுவதையும், பழைய ஆட்சியில் செய்தித் தணிக்கைக் குழுவின் அதிகாரியாக இருந்தவர் இன்று தேசியத் தொலைக்காட்சி நிறுவனத்தின் முதல்வராக இருப்பதையும், பல இராணுவ அதிகாரிகள் தம் சீருடையைக்களைந்து சிவில் உடை அணிந்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளதெனவும் கூறினார்.
--------------------------------------------------------------------------------------------------------------
பழைய காட்சிகள் புதிய ஜனநாயக அமைப்பிற்குள் பொருந்த வில்லையெனவும் சுட்டிக் காட்டிய கவுக், ஜனநாயகப் பாதையிற் பயணிக்கும் மியன்மாரின் முன்னேற்றத்திற்கு ஜேர்மன் நாட்டின் உதவியை சகல வழிகளிலும் எதிர்பார்க்கலாம் எனவும் கூறி ஜேர்மன் அரசின் சார்பில் 50 லட்சம் ஈரோக்களை மியன்மாரின் முன்னேற்றத் திட்டத்திற்கு இலவசமாக வழங்கினார்.
அமெரிக்கத் தென்கொரிய இணைந்த இராணுவ நடவடிக்கை இரு நாட்டு உறவில் விரிசலை அதிகரித்துள்ளது-
கொரிய வளை குடாவில் இம் மாதம் மேற்கொள்ளப்பட இருக்கும் அமெரிக்கத் தென் கொரியத் துருப்புக்களின் இணைந்த பலம் வாய்ந்த வருடாந்த இராணுவ நடவடிக்கையானது வட கொரிய அமெரிக்க உறவில் நிலவி வரும் முறுகல் நிலையை மேலும் அதிகரிக்கும்படி செய்துள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------
வட கொரிய சிறையில் கடும் துன்பத்தை அனுபவித்து வரும் அமெரிக்கப் பிரஜையான கெனித் என்பவரை விடுவிக்கும் முகமாக வட கொரியா வரவிருந்த அமெரிக்க ராஜதந்திரியின் பயனம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------
சென்ற வருடம் மே மாதம் கொரியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்கப் பிரஜை கெனித்பே(B), வடகொரியாவிற்குத் தன் வியாபார நிமித்தம் பயணித்த போது, தாய் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் செயலில் ஈடுபடும் பயணம் அதுவெனக் குற்றஞ்சாட்டப்பட்டுப் பதினைந்து வருடக் கடுங்காவல்த் தண்டணை விதிக்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------------
மோசமடைந்து வரும் கெனித்தின் உடல் நலம் கருதி அவரை விடிவிக்கும் நடவடிக்கைகள் தற்போது இரண்டாம் முறையாகப் பயனளிக்காது போயிற்று. அமெரிக்க ராஜதந்திரியின் வட கொரியப் பயணத்தை அந்த அரசாங்கம் தடுத்தமைக்கான விளக்கங்களேதும் முன் வைக்கப்படவில்லை.
-------------------------------------------------------------------------------------------------------
வட கொரியா தன் அணு ஆயுதக் கொள்கைக்கு அமெரிக்காவைப் பணிய வைக்க, கெனித்தை பயன்படுத்த முயல்வதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது. அத்தோடு அமெரிக்கத் தென்கொரியத் துருப்புக்களால் மேற்கொள்ளப்படவிருக்கும் இராணுவ நடவடிக்கையானது ஏற்கனவே திட்டமிடப்பட்ட மிகவும் வெளிப்படையான பாதுகாப்பு நடவடிக்கையெனவும் அமைச்சின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------
பலப்பரீட்சையின் மத்தியில் வட தென் கொரிய மக்களின் அமைதியும், உலகை அச்சத்தில் ஆழ்த்தும் வட கொரிய அணு ஆயுதக் கொள்கையும் தீர்வுகளின்றி அரசியல் மேடையில் ஆட்டம் காண்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------
வடக்கில் யுத்ததினால் நாதியற்றுள்ள இளம் பெண்களை யார் காப்பர்? தியாகராஜா நிரோஷ்
வடக்கில் வறுமையின் பிடிக்குள் அகப்பட்டுள்ள பெண்களின் அவல நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக விபரிக்கப்பட்டு வருகின்றது. எனினும் பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனமும் செயற்பாடும் ஒருங்கே பெண்தலைமையுள்ள குடும்பங்களினதும் விதவைகளினதும் பாதுகாப்பில் குவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
-------------------------------------------------------------------------------------------------------------------
இந் நிலையில் வடக்கில் நாதியற்ற பெண்கள் விபசார விடுதிகள் நோக்கிக் கொண்டுசெல்லப்படுகின்றனர் என தாக்கம் மிக்கதும் கவலைக்குரியதுமான ஒர் கருத்தினை இவ்வாரம் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசரும் வட மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஷ்வரன் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். போரின் பின்பான நிலையில் அவரால் தெரிவிக்கப்பட்ட இக் கருத்து தீவிரமாக ஆராயப்படவேண்டியது ஒன்றாகும்.
-------------------------------------------------------------------------------------------------------------------
உள்நாட்டில் ஆயுத மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக ஐந்தாண்டுகள் கடந்து செல்லவுள்ளன. இத் தருணத்தில், யுத்தகாலத்தில் ஏற்பட்ட இழப்புக்கள் பற்றியும் அதன் அவலங்களில் இருந்து மீள்வது பற்றியும் உள்நாட்டில் ஓர் காத்திரமான கொள்கை ஒன்று வகுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது நடைபெறவில்லை. இனப்பிரச்சினைத் தீர்வு குறித்த தேவையை இதயசுத்தியுடன் கண்டு கொள்ளாத அரசாங்கத்தின் போக்கு, எரிகின்ற மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கான தீர்வையும் உரிய வகையில் முன்வைப்பதற்கான சந்தர்ப்பங்களையும் நழுவவிட்டு விட்டது. போரின் பின் இனப்பிரச்சினைத் தீர்வு பற்றி ஆராயும் அதேசமயம் மக்களின் மனிதாபிமானப் பிரச்சினை பற்றியும் சமாந்தரமாக அரசாங்கத்துடன் தமிழ்த் தலைமைகள் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தன. எனினும் அரசாங்கம் பேச்சுக்களில் மட்டும் அதற்கான ஆமோதிப்பினைத் தெரிவித்து விட்டு செயலில் எதையுமே காட்டவில்லை. இந்த இடத்தில் மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு அரசியலற்ற பெறிமுறையொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்த முன்வந்திருக்குமாயின் போரின் பின்பாக ஐந்தாண்டுகளை அடைகையில் முதலமைச்சர் எடுத்துக்கூறியது போன்று நாதியற்ற பெண்கள் விபசாரத்திற்குள் தள்ளப்படும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டிருக்காது.
-------------------------------------------------------------------------------------------------------------------
யுத்தமும் அதன் பின்னர் நிலவிய சூழ்நிலைகளும் நாட்டில் அதிகளவான விதவைகளை பிறப்பித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டின் இறுதியில் வடக்குக் கிழக்கில் 89 ஆயிரம் விதவைகள் உள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் கிஸ்புல்லா, அரசாங்கத்தின் சார்பாக ஏற்றுக்கொண்டுள்ளார். அத் தொகையானது பல்வேறுபட்ட கோணங்களில் புறட்டிப் பார்க்கப்பட்டு வடக்குக் கிழக்கின் நிஜத்தினை விளங்கிக்கொள்ள பயன்பட வேண்டும். அதாவது வடக்கில் 40 ஆயிரம் யுத்த விதவைகளும் கிழக்கில் 49 ஆயிரம் யுத்த விதவைகளும் உள்ளனர். மேற்குறிப்பிட்ட தொகையினுள் 12 ஆயிரம் பேர் 40 வயதுக்குக் குறைந்த இளம் விதவைகளாவர். மிகுதியில் எட்டாயிரம் பேர் சராசரியாக மூன்று பிள்ளைகளுடன் கணவர் இன்றி வாழ்வாதாரத்தினைக் காப்பாற்ற முடியாதவர்களாக உள்ளவர்களாவர். இத் தொகையிகை மாத்திரம் வைத்து யுத்தத்தினால் விதவைகளானோர் என்ற எண்ணிக்கையினை நாம் மட்டுப்படுத்திவிட முடியாது. காரணம், யுத்தத்தினால் பிரகடனப்படுத்தப்படாத விதவைகளாக கணிசமானோர் ஆக்கப்பட்டுள்ளனர். இவ்வாறாக வாழ்வோர் தமது கணவர்மார் தடுப்புக்களிலோ அல்லது சிறைகளிலோ அரசியல் காரணங்களுக்காக தடுத்துவைக்கப்பட்டிருக்கலாம், அவர்கள் என்றாவது ஒரு நாள் வீடு திரும்புவர் என்ற ஏக்கத்தில் தான் வாழ்கின்றனர்.
-------------------------------------------------------------------------------------------------------------------
விதவைகள் மற்றும் அரசியல் காரணங்களுக்காக கணவன் பற்றிய தகவல்கள் அறியாதுள்ளோர் சமூகத்தில் பரவி கைவிடப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் பராமரிப்புக்கள் அவர்களை உரிய வகையில் சென்றடையவில்லை. போரின்போது கணவனை இழந்த ஓர் பெண்ணுக்கு அதுவும் மரண சான்றிதழைச் சமர்ப்பித்தால் இழப்பீடாக குறிப்பிட்ட சில ஆயிரங்களே பெறமுடியும் என்ற நிலையுள்ளது. இதற்கு மேலாக அரச சார்பற்ற நிறுவனங்கள் சில அவர்களால் முடிந்த சிறு திட்டங்களை மேற்கொள்கின்றன. அது எதுவும் பாதிக்கப்பட்ட பெண்களை குறைந்த மட்ட இயல்பு நிலை நோக்கிக் கொண்டு வர ஏனும் போதுமானதாக இல்லை.
-------------------------------------------------------------------------------------------------------------------
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 6 ஆயிரத்து 170 விதவைகளுக்கும் உதவிகளைச் செய்வதற்கு நலன்விரும்பிகள் முன்வரவேண்டும் என்று அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வருடம் இடம்பெற்ற பெண்கள் மற்றும் சிறுவர்கள் உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான மாநாட்டிலேயே அவர் இவ் அழைப்பை விடுத்துள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
அதேபோன்றே யாழ்ப்பாண மாவட்டத்தில் 26 ஆயிரத்திற்கு மேல்;, வவுனியாவில் 4 ஆயிரத்திற்கு மேல், மன்னாரிலும் 4 ஆயிரம் வரையானோரும் கணவனை இழந்தோராகவுள்ளனர். இதனை பெண்கள் தொடர்பாக ஆய்வில் ஈடுபடும் அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுகின்றன.
அந் நிறுவனங்கள் தமது அய்வில் இந்த விதவைகளில் யாழில் 40 வயதிற்கு உட்பட்ட 3,118 விதவைகள் உள்ளதாகவும் 20 வயதுக்குட்பட்ட விதவைகளும் 38 பேர் உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளன. இவற்றுக்கு மேலாக போர்காலத்தில் 1042 பேர் தற்கொலை செய்துகொண்டதனால் அவர்களின் மனைவிமார் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர். விதவைகளின் இப் பெருந் தொகைகள் எண்ணிக்கைகள், அரசாங்கத்தினையும் மக்கள் அமைப்புக்களையும் தமிழ் அரசியல் தலைமைகளையும் செய்ற்பாடு நோக்கி தட்டியெழுப்ப வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------------------------
கடந்த வருடம் நவம்பர் 22 அம் திகதி மட்டக்களப்பில் விதவைகள் தொடர்பான மாநாடு ஒன்று அரச சார்பற்ற நிறுவனமான விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களின் மூவினத்தையும் சேர்ந்த பெண்தலைமையுள்ள குடுமபத்தவ்hகள் கலந்து கொண்டனர். இவர்கள் அரசாங்கத்தின் கவனத்திற்காக தமது கஷ்டங்களை வெளிப்படுத்தி பிரகடனம் ஒன்றையும் முன்வைத்தனர். அதில், தமது பிரதேசங்கள் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதனாலும் இராணுவ நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதனாலும் பாலியல் வன்முறைகளுக்கும் தெந்தரவுகளுக்கும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது என பெண்தலைமையுள்ளோர் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட்டு தமது பாதுகாப்பிற்கு பொலிசார் சரிவர கடமைகளைச் செய்ய முன்வரவேண்டும் எனவும் அப் பிரகடனத்தில் அவர்களால் கோரப்பட்டது. மேலும், தமக்கு எதிராக சமூக ஒதுக்கல்கள் தொடர்வதாகவும் சில சமயங்களில் தமது ஆடைகளும் நடத்தைகளும் கூட விமர்சிக்கப்படுவதாகவும் அம் மாநாட்டில் பங்கேற்ற பெண்களால் கவலை தெரிவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
-------------------------------------------------------------------------------------------------------------------
எனவே இந்த இடத்தில் அரசாங்கம் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் நலன்கள் தொடர்பாக உரிய திட்டங்களை வகுக்கவேண்டும். அதேகாலப்பகுதியில் தமிழ்ச் சமூகமும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாக தனக்கென சில முற்போக்கான விடயங்களில் தன்னை வடிவமைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------
போரினால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பொருத்தளவில் அவர்கள் வருமானத்திற்காக பாடுபடும் நிலையுள்ளது. வடக்கில் போரின் பின்பான நிலையில் தொழில்களுக்கான சந்தர்ப்பங்கள் கட்டியமைக்கப்படவில்லை. மாறாக விரிந்த நுகர்வுக் கலாசாரம் ஒன்றே பாதிக்கப்பட்டவர்களின் முன்தென்படுகின்றது. இந்த இடத்தில் பெண்தலைமையுள்ள குடும்பங்கள் வருமானமீட்டத்திற்காக எங்கே போவது? என்ற நிலையுள்ளது. சுயதொழில் முயற்சிகளை நோக்காகக் கொண்டு வங்கிகளாலும் இதர நிறுவனங்களினாலும் பெண்தலைமையுள்ளவர்களுக்கு கடந்த காலத்தில் கடன்கள் வழங்கப்பட்டன. எனினும் பாதிக்கப்பட்ட பெண்களிடத்தில் தொழில் முயற்சிகளைக் கொண்டு நடத்துவதற்கான அறிவூட்டல்கள் வழங்கப்படவில்லை. எனவே இம் முயற்சிகளும் பெண்தலைமையுள்ளவர்களுக்கு வருவாயைக் கொடுக்கவில்லை. முதல் இழப்புக்களையே கொடுத்தன. கடன்களை அளித்த நிறுவனங்களின் அறவீட்டாளர்கள் கடன்களை செலுத்த முடியாத பெண்களிடம் பாலியல் லஞ்சம் கோரியதாகவும் கிழக்கில் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. எனவே போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வறுமை அவர்களை பாலியல் புறள்வுகளையும் விபசாரத்ததையே அல்லது தற்கொலையையே நோக்கி விரும்பியோ விரும்பாமலோ தள்ளுகின்றது என்பது யதார்த்தமாகும். குடந்த வருட இறுதியில் வவுனியாவில் தாயும் சேய்களும் வறுமையின் பாதிப்புக்கள் உளவியல் தாக்கத்தினால் தற்கொலை செய்து கொண்டனர். அதற்கு முன்னர் யாழ் பல்கலைக்கழக மாணவியொருவர் வவுனியாவில் தற்கொலை வறுமையால் தற்கொலை செய்து கொண்டார். முன்னர் யாழ். வரணியிலும் தாயொருவர் கணவன் கடத்தப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இவைகள் கூட பொறுப்புவாய்தவர்களின் கவனத்தினை உரியதாக்கவில்லை.
-------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கையில் நல்லிணக்கத்திற்காக முன்வைக்கப்பட்ட பல சாசனங்கள்; போரினால் பாதிக்கப்பட்ட பெண்களினை மீள்விப்பது பற்றி எழுத்தளவில் எடுத்துக் கூறுகின்றது. நடைமுறையில் தான் எதுவும் இல்லை என்பது விசனத்திற்கு உரியது.
-------------------------------------------------------------------------------------------------------------------
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது பரிந்துரை 9.86 இல் மோதலின் பின்னர் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் அதிகரித்துள்ளமையினால் அரசாங்கமும் ஏனைய அக்கறை கொண்டவர்களும் நல்லிணக்கத்தின் கூட்டு முயற்சியாக இப் பிரச்சினையையைக் கையாளவேண்டும் என்றுள்ளது. பெண்தலைமையுள்ள குடும்பங்களின் நிலைமையினை இவ் ஆணைக்குழு முக்கிய பிரச்சினையாக அடையாளப்படுத்தி இதனை சவாலாகவும் அங்கீகரித்துள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------
மேலும,; கணவனை இழந்த பெண்கள், கணவன் இருக்குமிடம் அறியாதுள்ள பெண்கள், தடுப்பில் கணவர் உள்ள பெண்கள் போன்றவர்களின் உடனடித் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் அதேவேளை அவர்களது ஜீவனோபாயம் மற்றும் ஏனைய வருமான மூலங்களுக்கான பொருளாதார உதவிகளையும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க அணைக்குழு பரிந்துரைத்திருந்தது(9.87). எனினும் நடைமுறையில் இவ்விடயங்கள் பெரிதளவில் கொண்டுவரப்படவில்லை. இதுவே இன்றைய பிரச்சினையாகவுள்ளது. ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களுக்கான உதவிகள் நல்கப் பட்டிருந்தால் ஏனும் வடக்கிலோ கிழக்கிலோ கணவனை இழந்த பெண்களின் அவலங்கள் தணிந்திருக்க வாய்ப்புக்கள் கிட்டியிருக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------------
யுத்தத்திற்குப் பின்னர் கணவனை இழந்து நிற்கும் பெண்களது பாதுகாப்பு, வாழ்வாதாரம், சமூக அந்தஸ்து, இதர நலன்நோன்பு நடவடிக்கைகள் என எல்லாமே பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்லது காணாமல் போயுள்ள தமது குடும்பத் தலைவனையோ உறவுகளையோ தேடும் அசாதாரண பொறுப்பு பெண்களின் தலைகளியே அதிகமாகக் காணப்படுகின்றது. உண்மையில் வருமானத்திற்கான மார்க்கமின்றி உள்ள இந்தப் பெண்கள் மேற்குறிப்பிட்ட பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு பணத்திற்காக எங்கே செல்வது எனத் திண்டாடுகின்றனர். இவ்வாறான பிரச்சினைகளின் இறுதியே அவர்களை விபசாரத்தினை நோக்கித் தள்ளப்பட நிர்ப்பந்திக்கின்றது.
-------------------------------------------------------------------------------------------------------------------
உண்மையில் மக்களிடத்தில் நிலவும் வறுமையைத் தணிப்பதற்கு அரசாங்கம் திட்டங்களை முன்வைக்கவேண்டும். அவற்றின் வெற்றியளிப்புக்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதைவிடுத்து பிரச்சினைகள் எதுவும் இல்லை என மேதாவித்தனம் பேசுவது சரியான முன்னேற்றத்திற்கான வழிவகை ஆகப்போவதில்லை. அரசாங்கத்தின் பொறுப்புணர்வு தட்டியெழுப்பப்படவேண்டும். அதேவேளை தமிழர்களிடத்திலும் பாரிய பொருளாதார சக்தியாக புலம்பெயர் சமூகம் உள்ளது. எனவே புலம்பெயர் சமூகம் நேரடியாகவே வடக்கில் உள்ள பாதிக்கப்பட்ட தமது குடும்பங்களை இனங்கண்டு உதவியளிக்க முடியும். இது தமிழ் இனத்தின் எதிர்காலத்தினை பாதுகாக்கும் முயற்சியாகும்.
-------------------------------------------------------------------------------------------------------------------
அரசார்பற்ற நிறுவனங்களின் நடத்தையில் வடக்கில் பலதரப்பட்ட மட்டுப்பாடுகள் நிலவுகின்றன. இம் மட்டுப்பாடுகளில் சரியான அணுமுறையொன்றை அரசாங்கம் கடைப்பிடித்தால் சமூகத்தில் நலிவுற்ற தரப்புக்களின் உடனடி மீள்வாழ்விற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும்.
Subscribe to:
Posts (Atom)