Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Saturday, December 14, 2013
கடலோர காவல்படையில் அசிஸ்டென்ட் கமாண்ட்டென்ட் பணி
இந்திய கடலோர காவல் படையில் அசிஸ்டென்ட் கமாண்ட்டென்ட் பிரிவில் தகுதியானவர்களுக்கு பயிற்சிக்கு பின் பணி அமர்த்தப்பட்டு வருகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Commandant - 2/2014 Batch
பிரிவு: Branch: General Duty
கல்வித்தகுதி: ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.1987 - 30.06.1993-க்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும். இப்பணிக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பிரிவு: General Duty
a. Pilot
b. Navigator or Observer
மேற்கண்ட இரு பணிகளுக்கும் திருமணமாகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் கணிதம், இயற்பியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.1987 - 30.06.1995-க்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும்.
பிரிவு: General Duty (Women)
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.1987 - 30.06.1993-க்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும். இப்பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பிரிவு: Pilots (Helicopter and Fixed Wing) Commercial Pilot License Holders.
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் விமானம் ஒட்டுவதற்கான Commercial Pilot License (CPL) பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.1987 - 30.06.1995-க்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும். இப்பணிக்கு ஆண்கள் மற்றும் திருமணமாகாத பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
பிரிவு: Technical Branch (Mechanical and Electrical)
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் Mechanical, Naval Architecture, Marine, Industrial and Production, Metallurgy, Mechatronics, Aeronautical, Aerospace போன்ற ஏதாவதொரு துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு ஆண்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் Recruitment of Assistant Commandant (2/2014 Batch) என்ற பகுதியை கிளிக் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்
அணு ஆராய்ச்சி மையத்தில் திட்ட உதவியாளர் பணி
மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Project Fellow/ Project Assistant பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
01. Project Fellow
02. Project Assistant
கல்வித்தகுதி: கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், ஐடி உள்ளிட்ட ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.12,000 - 16,000 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Homi Bhabha Centre for Science Education, T.I.F.R, V.N.Purav Marg, Mankhurd, Mumbai - 400088.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 16.12.2013 அன்று காலை 9 மணி முதல் மாலை 1 மணி வரை.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mathedu.hbcse.tifr.res.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
கோவா கப்பல் கட்டும் தொழிற்சாலையில் டிரெய்னி பணி
கோவாவில் செயல்பட்டு வரும் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் காலியாக உள்ள மேனேஜ்மென்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Management Traninee (Grade -E1)
காலியிடங்கள்: 08
சம்பளம்: ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 30.11.2013 தேதிப்படி 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் Mechanical, Electrical, Electronics போன்ற துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். HR பணிக்கு 60 சதவிகித மதிப்பெண்களுடன் HR/IR/Personnel Management/Labour Studies/Social Welfare போன்ற துறைகளில் முதுகலை பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது MSW/MBA முடித்திருக்க வேண்டும்.
Finance பணிக்கு 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று CA/ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை Goa Shipyard Limited, Goa என்ற முகவரிக்கு வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.career .goashipyard.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2013
ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 26.12.2013
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்புவதற்கான அஞ்சல் முகவரி: The Chief General Manager (HR&A), Dr.B.R.Ambedkar Bhavan, Goa Shipyard Limited, Vasco -Da-Gama, Goa - 403802.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.career .goashipyard.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் லேப் டெக்னீசியன் பணி
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வரும் பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் "சி" பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technician - C
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.2,800
கல்வித்தகுதி: அறிவியல் பிரிவுகளில் +2 தேர்ச்சி பெற்று, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் DMLT முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 26.12.2013 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Director, RMRC, Bhubaneswar என்ற பெயரில் குறுக்கு கோடிட்ட போஸ்டல் ஆர்டராக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களைப்பற்றிய முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பம் தயார் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் (அட்டெஸ்ட்) பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.12.2013
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Regional Medical Research Centre, Bhubaneswar-23.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.icmr.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் டெக்னீசியன் பணி
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Fabrication Assistant
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Sheet Metal Worker - 141
02. Welder - 45
பணி: Outfit Assistants
01. Fitter Pipe (plumber) - 111
02. Diesel Mechanic - 29
03. Instrument Mechanic - 11
04. Electrician - 27
05. Electronic Mechanic - 06
06. Shipwright Wood (Carpenter) - 04
07. Painter - 24
பணி: Crane Operator
கல்வித்தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்து அப்ரண்டிஸ் முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்: இன்ஜினியரிங் கம்பெனியில் இரண்டு அல்லது மூன்று ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.14,000
வயதுவரம்பு: 30.11.2013 தேதிப்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு நடைபெறும் தேதி: 16.12.2013 முதல் 21.12.2013 வரையிலான நாட்களில் காலை 9 மணி முதல் 1 மணி வரை நடைபெறும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Cochin Shipyard Indoor Court, Thevara, Kochi - 15
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.cochinshipyard.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.12.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cochinshipyard.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
தில்லி உயர்நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தர் பணி
புதுதில்லியில் செயல்பட்டு வரும் தில்லி உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள சுருக்கெழுத்தர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Stenographers
காலியிடங்கள்: 10
தொகுப்பூதியம்: மாதம் ரூ.25,000.
கல்வித்தகுதி: எதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதவும், கணினியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 20.12.2013 தேதிப்படி 32க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சுருக்கெழுத்து, தட்டச்சு தேர்வு போன்றவையை உள்ளடக்கிய திறன் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணிக்காலம்: ஆறு மாதங்கள். இவை பின்னர் நீட்டிக்கப்படலாம்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களைப்பற்றிய முழு விவரங்களான விண்ணப்பதாரரின் பெயர், தகப்பானர் பெயர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் கூடிய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, நிரந்தர முகவரி, பிறந்த தேதி, கல்வி மற்றும் தொழில் நுட்ப தகுதி, சம்பந்தப்பட்ட பணி அனுபவம், தற்போது பணிபுரியும் இடம் மற்றும் பணியின் தன்மை போன்றவை அடங்கிய விண்ணப்பத்தினை வெள்ளத்தாளில் தயார் செய்து கொள்ளவும். விண்ணபத்துடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சான்றிதழ் நகல்கள் அனைத்தும் கெஜட்டெட் அதிகாரியால் அட்டெஸ்ட் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.12.2013
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Joint Registrar (Estt.-1), 2nd Floor, Administrative Block, Delhi High Court Compound, New Delhi.
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் ஒட்டுநர் பணி
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் தீயணைப்பு பிரிவில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கான ஒட்டுநர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Constable/ Driver-cum-Pump Operator
காலியிடங்கள்: 70
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.2,000
வயதுவரம்பு: 21.12.2013 தேதிப்படி 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கனரக மோட்டார் வாகனம், இலகுரக மோட்டார் வாகனம், கியருடன் கூடிய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை ஒட்டுவதற்கான ஒட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
DIG, CISF (South Zone), Rajaji Bhawan, "D" Block, Besant Nagar, Chennai - 600090.
மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.cisf.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.12.2013
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்களைக்கழகத்தில் இணை பேராசிரியர் பணி
சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்களைக் கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இணை பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Associate Professor
மொத்த காலியிடங்கள்: 12
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. PEDAGOGICAL SCIENCES - 02
02. VALUE EDUCATION - 02
03. EDUCATIONAL PSYCHOLOGY - 02
04. EDUCATIONAL TECHNOLOGY - 02
05. CURRICULUM PLANNING AND EVALUATION - 02
06. EDUCATIONAL PALANNING AND ADMINISTRATION - 02
மேலும் கல்வித்தகுதி மற்றும் பொதுவான தகவல்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.tnteu.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.12.2013
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: TAMILNADU TEACHERS EDUCATION UNIVERSITY, Lady Willingdon College Campus, Kamarajar Salai, Chennai - 600005.
10, +2 முடித்தவர்களுக்கு கோவை கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் பணி
தமிழகத்தின் கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் கரும்பு ஆராய்ச்சி மையத்தில் (ICAR) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Lower Division Clerk
காலியிடம்: 01
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.1.900 மற்றும் இதர சலுகைகள்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளுக்கு குறையாமல் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்தியில் கணினியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
பணி: Skilled Support Staff
காலியிடங்கள்: 02
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.1,800 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
பணியிடம்: SBIRC, Kannur (Kerala)
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ICAR Unit SBI) என்ற பெயரில் கோயம்புத்தூரில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.sugarcane.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை பதிவிறக்கம் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.12.2013
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Sugarcane Breeding Institute, Coimbatore - 641007. Tamilnadu.
மேற்கு ரயில்வேயில் குரூப் "டி" பணி
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள குரூப் டி பணியிடங்களை நிரப்ப தகுதியானவ்ரகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: குரூப் டி பணிகள்
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2014 தேதிப்படி 18 முதல் 33க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.1,800
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Assistant Personnel Officer (Recruitment), RRC-WR என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்க வகையில் குறுக்கு கோடிட்ட போஸ்டல் ஆர்டராக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rrc-wr.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தினை ஏ4 வெள்ளைத்தாளில் தயார் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.01.2014
மேலும் துறைவாரியான காலி இடங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.rrc-wr.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பி.இ தகுதிக்கு இந்திய தர நிர்ணய நிறுவனத்தில் பொறியாளர் பணி
மத்திய அரசின் நுகர்வோர் நலன் உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய தர நிர்ணய நிறுவனத்தில் காலியாக உள்ள கிரேடு "பி" சயின்டிஸ்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பொறியாளர்
மொத்த காலியிடங்கள்:115
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: மெக்கானிக்கல் - 31, எலக்ட்ரிக்கல் - 31, சிவில் - 24, மெட்டலர்ஜிக்கல் - 09, கெமிக்கல் - 08, கம்ப்யூட்டர் சயின்ஸ் - 10, டெக்ஸ்டைல் - 02.
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி,டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.52,280
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.750. இதனை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு: தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் அனைவருக்கும் வருகின்றன ஜனவரி மாதம் 19 ஆம் தேதி இந்தியாவில் முக்கிய 45 நகரங்களில் ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு நடைபெறும். தமிழகத்தில் சென்னையில் நடைபெறும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bis.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பொருளாதார உலகமயமாக்கல் என்பதில் ஆறு முக்கிய பொருளாதார நடைமுறைகள் உள்ளடங்கியுள்ளன
மான்டெக் சிங் அலுவாலியா
பொருளாதார உலகமயமாக்கல் என்பதில் ஆறு முக்கிய பொருளாதார நடைமுறைகள் உள்ளடங்கியுள்ளன. அவை:
1. பொருட்கள் மற்றம் சேவைகளில் சர்வதேச வர்த்தகத்தைப் பெருக்குதல்.
2. தொழில்நுட்பம் தடையின்றி கிடைக்கச் செய்தல்.
3. வெளிநாட்டு நேரடி முதலீட்டை விரிவுபடுத்துதல்.
4. இதர மூலதனங்கள் எளிதாக தடையின்றி கிடைக்கச் செய்தல்.
5. தேச எல்லைகளைத் தாண்டி மக்கள் சுதந்திரமாகச் சென்று வருதல்.
6. உலகமயமான புவியை நிர்வகிக்க உகந்த சர்வதேச நிறுவன அமைப்புகளை உருவாக்குதல்.
உலகமயமாக்கல் குறித்த மக்களின் உணர்வுகள் மற்றும் அதன் பலன்கள் கடந்த 10 ஆண்டுகளில் வேகமாக மாறிவருகின்றன. 1995-ஆம் ஆண்டு வாக்கில் இந்த அபிப்ராய சுழற்சியில் உச்ச கட்டம் ஏற்பட்டது எனலாம். அரசியல் ரீதியாக பார்த்தால் கிழக்கு ஐரோப்பாவிலும், ரஷ்யாவிலும் கம்யூனிச வீழ்ச்சியும் இந்த நாடுகளில் ஜனநாயக அமைப்பு முறைகளும் மற்றும் சந்தை அடிப்படை கொள்கைகளும் உலகமயமாக்கல் வெற்றிபெற உதவின. இதே சமயத்தில் அமெரிக்காவில் பொருளாதார வளர்ச்சி ஆரம்பமாகி, புதிய தொழில்நுட்ப மேம்பாடு, குறிப்பாக தகவல் தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக விரைந்து வளரத் தொடங்கியது. உலகமயமாக்கல் வளரும் நாடுகளுக்கு தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் தொடர்ந்த சந்தை வசதிகளையும், பொருளாதாரரீதியில் நன்கு நிர்வகிக்கப்படும் நாடுகளுக்கு தட்டுப்பாடில்லா மூலதனத்தையும் கிடைக்கச் செய்யும் என எதிர் பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த வெற்றிப் பெருமித நம்பிக்கை நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. 1997-ஆம் ஆண்டில் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது. அதற்கு அடுத்த ஆண்டு ரஷ்யாவின் பணம் பெரிய அளவில் மதிப்புக் குறைந்து சீரழிந்தது. அதே நிலை 1999-இல் பிரேசிலுக்கு அடுத்து துருக்கி அர்ஜென்டினா நாடுகளுக்கும் ஏற்பட்டது.
இந்த நிகழ்வுகள் உருவாகி வளர்ந்துவரும் சந்தை அடிப்படை பொருளாதார நாடுகளின் எளிதில் பாதிப்படையும் தன்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டின. மேலும் உலகமயமாக்கலின் அபாயத்தையும் உலகுக்கு உணர்த்தின. இத்தகைய அபாயங்களை உணரத் தவறியதாலும், அபாயநிலை ஏற்பட்ட பின்னர் அதிலிருந்து மீளும் வழிகளையும் நடைமுறைகளையும் பயன்படுத்த தவறியதாலும் சர்வதேச நிதி நிறுவனங்கள் தங்கள் நம்பகத் தன்மையை இழக்கத் தொடங்கின.
தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளின் சில நிகழ்வுகளும் உலகமயமாக்கல் மீது முன்பு ஏற்பட்டிருந்த நம்பிக்கை தளர்ந்துபோகக் காரணமாயின. அமெரிக்க பொருளாதார வளர்ச்சி வேகம் 2000- ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. தொழில்நுட்ப அடிப்படையிலான பங்குகள் வீழ்ச்சியடைந்தன. பொருளாதார நடவடிக்கை எதிர்த்திசையில் மாறியது. வேலை இழப்புகள் தொடர்ந்து பெருகவே வளர்ச்சியடைந்த நாடுகளில் உலகமயமாக்கல் பின்னுக்குத் தள்ளப்பட்டது. 1990 தொடங்கி 10 ஆண்டுகளாக வெற்றிக்களிப்பு மாறி பயங்கரவாதம் பற்றிய கவலை வளர்ந்து அரசியல் சிந்தனையில் மாறுதல் தோன்றியது.
கொள்கைகள் வகுப்பு
உலகமயமாக்கல் முற்றிலும் மாறான வெளிச் சூழலை உருவாக்கியது என்ற நிலையில் அதிகபட்ச நன்மையடைய உதவும் கொள்கைகளை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். எனினும் உலகச் சூழலைக் கையாளும் திறனே நமது மேம்பாட்டுக் கொள்கையின் முக்கிய நோக்கம் என்று அர்த்தம் கொள்ள முடியாது. வெளிச் சூழலின் நன்மைகளைப் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாத அதேசமயம் உயர் முன்னுரிமை பெறக்கூடிய உள்நாட்டுக் கொள்கை அம்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இத்தகைய மூன்று அம்சங்களாவன: அத்தியாவசியமான சமுதாய சேவைகளை வழங்குவது, வேளாண் முறைகளில் உத்வேகத்தை மீண்டும் உருவாக்குதல் மற்றும் அடிப்படை வசதி மேம்பாடு. இன்று முன்னேறுவது அத்தியாவசியம் என்றாலும் அடிப்படை வசதி மேம்பாடு இன்றியமையாதது. மேலும் உலக மயமாக்கலின் முழுப்பயனை கிடைக்கச் செய்வது.
நமது பொருளாதாரத்தின் முன் உள்ள பிரச்சினைகளில் மிக முக்கியமானது கல்வி மற்றும் சுகாதார வசதிகளின் குறைபாடு. நம் நாட்டு எழுத்தறிவு நிலைமை, 25 ஆண்டுகளுக்கு முன்பு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்த நிலையை விடவும் குறைவு என்பது நம்மை விழிப்படையச் செய்யவேண்டும். சுகாதாரத்துறையில் நமது நிலைமை மோசமாகவே உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் கல்வி, சுகாதார வசதிக்குறைவு கணிசமாகக் காணக்கிடக்கிறது. அனைவரும் ஆரோக்கியமான, எழுத்தறிவு பெற்ற மக்கள் என்ற நிலையே, சிறந்த குறிக்கோள்தான். எனினும் அத்தகைய மக்கள்தான் உற்பத்தி பெருக்கத்திற்கும், வருவாய் பெருக்கத்திற்கும் தேவையான முதல் நிபந்தனை என்பதையும் மறந்துவிடக்கூடாது.
கல்வி, சுகாதார வளர்ச்சிக்கு அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது என்பது உண்மை. என்றாலும் நிதிப்பற்றாக்குறை என்பது இந்தப் பிரச்சினைகளின் ஒரு சிறு அம்சம் மட்டுமே. இவற்றை வழங்குவதற்கான அமைப்புகளை மேம்படுத்தி திறம்படச் செயல்படச் செய் வது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. செலவிடும் நிதியின் அதிகப்பட்ச நன்மைகளை நிறுவன மேம்பாடுதான் உறுதி செய்ய முடியும். இந்த துறைகளில் திட்டங்களை வடிவமைத்து, செயல்படுத்தி, கண்காணிக்கும் அதிகாரத்தை பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு வழங்குவது இதில் பெரிதும் உதவும்.
அதிக கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு முன்னுரிமைத் துறை வேளாண்துறையாகும். இத்துறையின் 4 சதவீத ஆண்டு வளர்ச்சியை அடையலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உருவானதுதான் 10-வது ஐந்தாண்டுத் திட்ட இலக்கான 10 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம். ஆனால் சமீபத்திய ஆய்வுகளில் வேளாண்துறை வளர்ச்சி 4 சதவீத இலக்கை அடைய இயலவில்லை என்றே தெரிவிக்கின்றன. 1980 முதல் 1990 வரை 3. 4 சதவீதமாக இருந்த வேளாண் வளர்ச்சி பின்னர் 2 சதவீதமாக தேய்ந்து போனது. கிராமப் பகுதிகளில் வளர்ச்சி வேகம் குறைந்துவிட்டது என்ற அதிருப்தி நிலைக்கு வேளாண் வளர்ச்சி வீதக் குறைவே அடிப்படை.
வேளாண் வளர்ச்சியில் உத்வேகம்
திட்ட இடைக்கால மதிப்பீட்டில் இந்திய வேளாண் துறையை மீண்டும் உத்வேகம் அடையச் செய்வதற்கு உயர் முன்னுரிமை வழங்கப்படும். கிராமப்புற அடிப்படை வசதித்துறையில் குறைந்துவரும் முதலீட்டுப் போக்கினை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பாசனத் திட்டங்கள், கிராமப்புற சாலைகள், நில நீர்பிடிப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றில் கூடுதல் முதலீடுகள் அவசியம். கிராம மக்களுக்கு கடன் வழங்கும் முறைகள் எளிதாக்கப்பட்டு விரைவுபடுத்தப்படுவதும், வளர்ச்சி சேவைகளை வலுப்படுத்துவதும், கவனம் செலுத்த வேண்டிய இதர அம்சங்கள்.
உணவு தானிய உற்பத்தியை மட்டுமே நம்பியுள்ள நமது வேளாண் நடைமுறைகள், மதிப்புக் கூட்டப்பட்ட தோட்டப்பொருள் உற்பத்தியை நோக்கியதாக அமைய புதிய அணுகுமுறைகள் உருவாக வேண்டும். பண்ணை முதல், வேளாண்பொருள் பதப்படுத்துதல் நுகர்வோருக்கு நேரடியான விற்பனை போன்றவை வரையிலான சுழற்சி முறைகள் உபயோகத்துக்கு வரவேண்டும். இதற்கு அறுவடைக்கு பிந்திய தொழில்நுட்பம், குளிர்சாதன வசதியுடனான வேளாண்பொருள் போக்குவரத்து, தரப்பிரிப்பு, நவீன சந்தை யுக்திகள் ஆகியன அவசியம். இந்தத் துறைகளில் வர்த்தக நிறுவனங்கள் பெரிய அளவில் ஈடுபட முன்வரவேண்டும்.
பொருளாதாரத்தை திறந்ததாகச் செய்வதில் உள்ள அபாயங்களை அறிந்திருப்பது அவசியம். அப்போதுதான் இந்த அபாயங்களைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.
நமது வளர்ச்சியை தடைப்படுத்தும் முக்கிய அம்சம் தரமான அடிப்படை வசதிகளின் குறைபாடுதான். பொதுவாக வளர்ச்சிக்கும் குறிப்பாக உலகச் சந்தைகளில் போட்டியிடுந் தன்மையை பெருக்கவும் தரமான அடிப்படை வசதிகளை உருவாக்கிப் பராமரிக்க வேண்டியது அவசியம்.
நம் நாட்டின் மின்சக்தித் துறையில் பயன்படும் அனைத்துக் கருவிகளும், உற்பத்திக்கு பயன்படுத்தும் தொகையில் 80 சதவீத அளவுக்கு மட்டுமே சக்தியை உற்பத்தி செய்கின்றன என்பதால் அவை கட்டுபடியாகாதவையாகவே உள்ளன. அதாவது சிலவகை நுகர்வோரிடம் மின்கட்டணம் மிகக் குறைவாகவே வசூலிக்கப்படுவதும், பெரிய அளவில் நடைபெறும் மின்திருட்டுமே இந்த நிலைக்கு காரணம். மின் உற்பத்தியிலும், மின்விநியோகத்திலும் போதுமான முதலீடுகள் இல்லாததும் கட்டுபடியாகத் தன்மைக்கு காரணங்கள். மின்துறையை சீரமைப்பது இன்றைய அத்யாவசியத் தேவை. 2000- ஆம் ஆண்டு மின்சாரச் சட்டம் இத்தகைய சீரமைப்பு குறித்து விளக்குகிறது. இச்சட்டம் கட்டுபடியாகும் மின் உற்பத்தி அமைப்புகளை உருவாக்குவதற்கான ஒரு திட்டம் என்றே சொல்லலாம்.
நமது சாலை, ரயில்வே வசதிகளில் போதுமானவை அல்ல. நமது துறைமுகங்கள் மணல்மூடி, நெரிசல் நிறைந்தனவாக உள்ளன. நமது விமான நிலையங்கள் பெருகிவரும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணி, சரக்கு போக்குவரத்துக்கு ஈடு கொடுக்க இயலாதவை. இவற்றை சரி செய்தாலன்றி நமது வளர்ச்சி வீதம் ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கும்.
நகர்ப்புற அடிப்படை வசதித்துறையும் உதாசீனப் படுத்தப்பட்டதாகவே உள்ளது. நமது இலக்கான 7.8 சதவீத ஆண்டு வளர்ச்சியை அடைவதற்கு உரிய நடைமுறைகள் நாட்டின் பெரிய நகரங்களின் அடிப்படை கட்டமைப்புகளை வலுவிழக்கச் செய்யக்கூடியவை. பெருகிவரும் நகர கட்டமைப்பு வசதித் தேவைகளைச் சமாளிக்க எந்தப் பெரிய நகரமும் தயார் நிலையில் இல்லை. இந்தப் பிரச்சினைக்கு காரணம் நகர நிர்வாகம் போதுமான ஆற்றல் மேம்பாடு அடிப்படையில் அமையாமலும் போதிய நிதி ஆதாரங்கள் இல்லாமலும் இருப்பதேயாகும்.
அடிப்படை வசதி தொடர்பான பிரச்சினைகளுக்கு உயர்நிலை கவனம் செலுத்துவதற்கென பிரதமர் தமது தலைமையில் அடிப்படை வசதிக்கான அமைச்சரவைக் குழுவை ஏற்படுத்தியுள்ளார். இந்தக் குழு முக்கியத்துவம் மிகுந்த இத்துறையில், முடிவுகள் மேற்கொள்ளப்படுவதை விரைவுபடுத்தும்.
நாட்டின் அடிப்படை வசதிப் பற்றாக்குறையைப் போக்க நிதி மிகப்பெரிய அளவில் தேவைப்படும். இதனை சமாளிக்கத்தான் இத்துறையில் தனியார் துறையினரிட மிருந்து வரக்கூடிய முதலீடு குறித்து கற்பனைகளுக்கு இடம்கொடாமல், உண்மை நிலவரத்தை உணர்ந்து செயல் பட வேண்டும். தொலைதொடர்பு, விமான நிலையம், துறைமுகம் போன்றவற்றில் தனியார் முதலீடு உயருவது சாத்தியமே. சாலை அமைப்பிலும் இத்தகைய முதலீடுகள் இருக்கும். எனினும் இத்துறைகளிலும் பொதுத்துறையின் பெருமளவு ஆதரவு இருந்தே ஆகவேண்டும்.
பெருகிவரும் ஏற்றுமதிகள்
உலகமயமாக்கலின் முக்கிய அம்சம் அது ஏற்றுமதி உயர்வுக்கு அளிக்கும் அபரிமிதமான சந்தர்ப்பங்களே ஆகும். தகவல் தொழில்நுட்பத்திலும் அது சார்ந்த சேவை களிலும் நமது ஏற்றுமதி பெருகியுள்ளதுபோல, உற்பத்தி பொருட்கள் துறைகள் உயரவில்லை. சிறந்த ஏற்றுமதியாளராகி, உலகமயமாக்கல் பலன்களைப் பெற முதலில் துடிப்பான அரசுக் கொள்கைகள் தேவை என்கின்றனர் அனுபவமிக்க ஏற்றுமதியாளர்கள்.
நமது உள்நாட்டு உற்பத்தி அமைப்பு உலகப் போட்டிகளைச் சமாளிக்கும் வகையில் அமையவேண்டும். சிறு தொழில்துறைக்கு என ஒதுக்கீட்டுப் பட்டியல் வைக்கும் நமது கொள்கை உலக சந்தை வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்வதைத் தடுப்பதாக உள்ளது. வேலைவாய்ப்புகளை பெருக்க இத்தகைய கொள்கை தேவை எனக் கருதப்பட்டது. ஆனால் ஏற்றுமதிகள் பெருகினால், உலக சந்தைகளைப் பயன்படுத்தினால், பெரிய அளவில் உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்பு பெருகும் என்பதை மறந்துவிடக்கூடாது. அடுத்தடுத்து வந்தம அரசுகள் ஏற்றுமதி திறனற்ற பொருட்களை அப்பட்டியலில் இருந்து நீக்கி வந்துள்ளன. இந்த நடைமுறை தொடர வேண்டியது அவசியம்.
உலகெங்கும் வளரும் நாடுகளில் வர்த்தக தாராளமயமாக்கல் நடைபெற்று வந்தாலும் இந்தியாவில் அதன் வேகம் குறைவுதான். நமது வரிகளை கிழக்காசிய நாடுகளில் உள்ளதுபோலக் குறைக்க அடுத்தடுத்து வரும் நிதியமைச்சர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனையடைய நமது தற்போதைய வரி வீதங்கள் மூன்றில் ஒரு பங்காக குறைத்தாக வேண்டும். வரிக் குறைப்பு நடவடிக்கையிலும் நமது தகவல் தொழில் நுட்பத்துறை முன்னிலையில் உள்ளது. இதில் இடுபொருட்கள் மற்றும் மூலதனப் பொருட்களின் மீதான வரி மிகவும் குறைவாகவே உள்ளது.
அன்னிய நேரடி முதலீட்டுத்துறை சார்ந்த கொள்கைகளும் நமது போட்டியிடும் தன்மை மேம்பாட்டுக்கு அவசியம். சீனாவில் 50 சதவீத ஏற்றுமதிகள் அந்நிய நேரடி முதலீடு சார்ந்தவை என்பது நமக்கு பாடம் புகட்டுவதாக இருக்க வேண்டும். அந்நாடு சுமார் 6000 கோடி டாலர் நேரடி அன்னிய முதலீட்டைப் பெறுகிறது. ஆனால் இந்தியா பெறும் நேரடி அன்னிய முதலீடு வெறும் 500 கோடி டாலர்தான்.
நிதியமைச்சகத்தில் முதலீடு ஆணையம் ஒன்றை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஆணையம் நம் நாட்டிற்கு தேவையான, ஏற்புடைய அந்நிய நேரடி முதலீட்டைப் பெறும் வழிவகைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை கூறும்.
எதிர்வரும் அபாயங்கள்
உலகமயமாக்கலும், பொருளாதாரத்தை திறந்ததாக மாற்றுவதும் ஆபத்து மிக்கவையா? என்றால் ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆபத்துகள் என்ன எவ்வளவு என்று உணர்ந்து அவற்றைக் குறைக்க நாம் முயற்சி மேற்கொண்டாக வேண்டும்.
இன்றைய நிலையில் உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதில் சந்தை மற்றும் தொழில்நுட்ப ஆபத்துகள் உள்ளன. தொழில்நுட்பம் மாறுவது, மக்கள் விருப்பம் மாறுவது, புதிய மலிவான தொழில்நுட்பம் உருவாவது போன்றவை நமது ஏற்றுமதிகளை பாதிக்கும்தான்.
வர்த்தகம் உலகமயமாவதில் அபாயம் உண்டுதான். ஆனால் நன்மைகளின் அளவு கருதி அபாயத்தை எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஆபத்தை எதிர்கொண்டு பலனை அனுபவிக்கும் கூட்டணியில் நாம் இருக்க வேண்டுமா இல்லையா என நாம்தான் முடிவு செய்ய வேண்டும். உயர் அனுகூலங்கள் ஆபத்துடன் இணைந்தே உள்ளன. இந்தச் சூழலில் நிறுவனங்கள் வளைந்து கொடுக்கக்கூடியவையாக விரைந்து செயல்படக் கூடியவையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நிலைமையை சமாளித்து வெல்ல இயலும். எனவேதான் தொழிலாளர் சட்டங்களும் வளைந்து கொடுக்கக் கூடியனவானவாக இருக்க வேண்டும்.
திட்ட இடைக்கால மதிப்பீட்டின்போது இந்தப் பிரச்சினைகளை ஆராய மத்திய திட்டக்குழு திட்ட மிட்டுள்ளது. இந்தியாவின் பலம், பலவீனம், அதற்குக் கிட்டியுள்ள சந்தர்ப்பங்கள், அது எதிர்நோக்கும் அபாயங்கள் ஆகியன குறித்தும் திட்டக்குழு ஆராயும். இதன் விளைவாக நமது மேம்பாட்டு அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம்.
செவ்வாய் கிரகம் ஓர் பார்வை
இந்தியா தனது விண்வெளித் திட்ட வரலாற்றில் முதன் முதலாக செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை நவம்பர் 5 -ஆம் தேதியன்று இந்திய நேரப்படி பிற்பகல் 02:38 மணிக்கு வெற்றிகரமாக ஏவியது. இது மங்கள்யான் என நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது. இந்த செவ்வாய் சுற்று கலன் திட்டம் (MOM-Mars Orbiter Mission) இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் முனைய துணைக்கோள் ஏவுகலம் (PSLV-Polar Satellite Launch Vehicle) மூலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிலிருந்து செலுத்தப்பட்ட ஆளில்லாத விண்கலம் ஆகும். இந்தத் திட்டம் வெற்றி அடைந்தால், செவ்வாய் கோளுக்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பிய நாடுகளின் பட்டியலிலில் (அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான்) நான்காவது நாடாக இந்தியா இணையும்.
கடந்த 22-10-2008 ஆண்டு நிலவுக்கு சந்திராயன்-1 விண்கலத்தை (PSLV-C11 ராக்கெட் மூலம்) வெற்றிகரமாக அனுப்பி உலக நாடுகளை ஆச்சர்யப்படவைத்தது இஸ்ரோ. இந்த முறை மங்களயானை அனுப்பி வியக்க வைத்துள்ளது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை மட்டுமே செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியிருக்கின்றன. சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் திட்டம் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், இந்தியாவின் பார்வையும் செவ்வாய் கிரகம் மீது திரும்பியது. இதைத் தொடர்ந்து, ரூ.450 கோடி செலவில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் (மங்கள்யான்) அனுப்பும் திட்டத்தை இஸ்ரோ உருவாக்கியது.
செவ்வாய் கிரகம் ஓர் பார்வை
நான்காம் நூற்றாண்டில் இத்தாலிலிய வானியல் ஆராய்ச்சியாளர் கலிலிலியோ கலிலிலிலி தொலைநோக்கி வழியாக செவ்வாய் கிரகத்தை உற்றுநோக்கி ஆராய்ந்தார். அந்த காலக்கட்டத்தில் மெல்ல மெல்ல செவ்வாய் கிரகத்தின் மீது மனிதனின் கவனம் திரும்பியது. அதை பற்றி தெரிந்துகொள்ளும் ஈடுபாடும் அதிகமானது.
ஆராய்ச்சிகள் தொடர்ந்தன 21-ஆம் நூற்றாண்டில் விண்வெளி ஆய்வு களில் பெரும் புரட்சி ஏற்பட்டன. அவற்றில் முக்கியமான நாடுகள் அமெரிக்காவும் ரஷ்யாவும். இவற்றில் செவ்வாய் கிரகத்திற்கு தொடர்ந்து விண்கலங்களை அனுப்பி ஆய்வு செய்துவரும் முக்கிய நாடு அமரிக்கா. இந்நாட்டை தொடர்ந்து ரஷ்யாவும் ஜப்பானும் விண்கலன்களை அனுப்பி ஆய்வு செய்து வருகின்றன. ஆனால் குறிப்பிட்டு கூறும்படியான எவ்வித வெற்றியும் பெறவில்லை. இருந்தாலும் செவ்வாய் மீதான மனிதனின் ஈர்ப்பு குறையவில்லை. அதற்கு முக்கிய காரணம், பூமிக்கும் செவ்வாய்க்கும் காணப்படும் ஒற்றுமைதான்.
இரண்டு கிரகங்களின் திட மேற்பரப்பு, பருவக்காலம், நாளின் கால அளவு, அச்சு, துருவ பனிக்கட்டி அமைப்பு, ஒருமுறை சூரியனை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் நாட்கள் என பல்வேறு ஒற்றுமைகள் நிலவுகின்றன. இதற் கிடையில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீரும் உயிரினங்களும் இருக்கலாம் என நம்பப்படுவது இன்னும் செவ்வாய் மீது மனிதனுக்கான ஆர்வம் அதிகரித்தவண்ணம் உள்ளது.
செவ்வாய் கோள் வெள்ளி கோளுக்கு அடுத்து பூமிக்கு நெருக்கமான கோள் ஆகும். பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையேயான அண்மை தூரம் 55 மில்லிலியன் கிலோ மீட்டர். இரண்டு கோள்களுக்கும் இடையே உள்ள தொலைவு இடைவெளி 400 மில்லிலியன் கிலோ மீட்டர்.
நமது சூரியக் குடும்பத்தில் எட்டு மிகப்பெரிய கோள்கள் உள்ளன. அவை புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், பூமி, யுரேனஸ், நெப்டியூன். புளூட்டோ ஒரு நிழல் கிரகமாக 2006- இல் சர்வதேச வானியல் கூட்டமைப்பினால் (International Astronomical Union -IAU) உறுதிப்படுத்தப் பட்டதால் கோளுக்கான தகுதியை இழந்துவிட்டது. மொத்தமுள்ள எட்டு கோள்களில் செவ்வாய் மட்டுமே பூமியுடன் நெருங்கிய ஒற்றுமை கொண்டது.
புதனை எடுத்துக்கொள்வோம். புதனுக்கு வானம் கிடையாது. இக்கிரகத்தில் பகல் நேர வெப்பநிலை 425 டிகிரி செல்சியஸ். இரவு நேர வெப்பநிலை 180 டிகிரி செல்சியஸாக குறைந்துவிடுகிறது.
வெள்ளி கோள் பூமியை போல ஒரேமாதிரியான அளவு கொண்டிருந்தாலும் அதன் பகல் நேர வெப்பநிலை 450 டிகிரி செல்சியஸை விட அதிகம். இதன் மேற்பரப்பு அழுத்தமானது பூமியைவிட 90 முறை அதிகம். கார்பன்-டை ஆக்ஸைடால் ஆனது. வியாழன், யுரேனஸ், நெப்டியூன், சனி வாயு கோள்களாகும். இந்த கோள்களுக்கு திடமான மேற்பரப்பு கிடையாது. மனிதனால் இந்த மேற்பரப்பில் நடக்க முடியாது. அதனால் மனிதனால் இந்த கோள்களில் தரை இறங்க முடியாது. ஆனால் செவ்வாய் கோள் திடமான மேற்பரப்பை கொண்டது. பூமியை போன்றது. ஒருவர் செவ்வாய் கோளில் நின்று சுற்றி பார்த்தால் அவர் ஒரு பெரிய பாலைவனத்தில் நிற்பதை போன்று இருக்கும். ஆனால் ஒரு வித்தியாசம் செவ்வாயில் குளிர் பாலை வனம். இதன் வெப்பநிலை அண்டார்டிகாவை விட சிறிது குறைவானது.
பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம். செவ்வாயில் 24 மணி 39 நிமிடங்கள். புதனில் நமது 59 நாட்கள்தான் ஒரு நாள் ஆகும். வெள்ளியில் 243 நாட்களே அங்கு ஒரு நாள். அதேபோல வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் கோள்கள் அதன் அச்சில் வேகமான சுழற்சியை கொண்டவை. அதனால் அவற்றின் ஒரு நாள் 24 மணி நேரத்தை விட குறைவானவை. வியாழன், சனி, கோள்கள் அதனுடைய அச்சில் சுற்றிவர 10 மணி நேரம் எடுத்துக்கொள்கின்றன. அதேபோல யுரேனஸ், நெப்டியூன் சுற்றிவர 16 மணியிலிலிருந்து 18 மணி நேரம் எடுத்துக்கொள்கின்றன.
செவ்வாயின் வளிமண்டலமானது மொத்தமானது. இதன் வளிமண்டல அழுத்தம் பூமியின் வளிமண்டல அழுத்தத்தைவிட 1 சதவீதம் அதிகம். பூமி சூரியனை சுற்றிவர 365 நாட்கள் எடுத்துக் கொள்கின்றது. செவ்வாய் 687 நாட்கள் எடுத்துக்கொள்கின்றது. அதாவது இரண்டு மடங்கு காலத்தை செவ்வாய் எடுத்துக்கொள்கிறது. மேலும் பூமியானது அதன் அச்சிலிலிருந்து 230 பாகை சாய்வாக அமைந்துள்ளது. செவ்வாய் 250 பாகை சாய்வாக அமைந்துள்ளது. செவ்வாயிலும் பருவக்காலங்கள் உண்டு. இந்த காலங்கள் பூமியைகாட்டிலும் இரண்டு மடங்கு நீளமான காலங்கள். அதேபோல செவ்வாயில் தண்ணீர் உள்ளதாக நம்பப்படுகிறது. செவ்வாயில் நடத்தப்பட்ட மண் பரி சோதனைப்படி, செவ்வாய் மண்ணில் 2 சதவீதம் நீர்ம துகள் கொண்ட எடை காணப்படுவதாக தெரியவந்துள்ளது. முக்கிய வாயுக்களான கார்பன்-டை ஆக்ஸைட், ஆக்ஸி ஜன், சல்பர்டை ஆக்ஸைடு ஆகியவை நீர்ம துகள் களை வெளியிடுகின்றன. என்றாலும் நீர்மமான தண்ணீர் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய விண்வெளி ஆய்வு மையம்
1963-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (Indian Space Research Organization - ISRO). இஸ்ரோ, இந்தியாவில் செயற்கைக் கோள்களையும் ராக்கெட்டுகளையும் வடிவமைத்து தயாரித்து விண்ணில் வெற்றிகரமாக ஏவி வருகிறது. உள்நாட்டுக்கு மட்டுமின்றி அவ்வப்போது வெளிநாடு களுக்குத் தேவையான செயற்கைக்கோள்களை தயாரித்து கொடுப்பதுடன் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை இங்கு தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகள் மூலம் ஏவும் பணியையும் மேற்கொண்டு வருகிறது.
வளர்ந்த நாடுகளே வியக்கும் வண்ணம் விண்வெளித் துறையில் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது இந்தியா. கடந்த 1975-ம் ஆண்டு விண்வெளி தொழில்நுட்பத்தில் கால்பதிக்க ஆரம்பித்த இந்தியா, ஆர்யப்பட்டா, பாஸ்கரா தொடங்கி அனுசாட், ஸ்டுட்சாட், ஜுக்னு என மாணவர் செயற்கைக்கோள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட (நூறாவது செயற்கைக்கோள் 9-9-2012 அன்று பி.எஸ்.எல்.வி- சி21 ஏவப்பட்டதன் மூலம் சாதனை படைக்கப்பட்டது) செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியிருக்கிறது. எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை பயன்படுத்தி அவை விண்ணில் செலுத்தப்பட்டன.
நோக்கம்
* இந்தியாவின் முதல் செவ்வாய் விண்வெளித் திட்டத்தின் முக்கிய நோக்கமானது, தொழில்நுட்ப ரீதியிலான கட்டமைப்பு, திட்டமிடல், மேலாண்மை, மற்றும் கோள்களுக்கிடையிலான விண்வெளித் திட்டங்களை செயல்படுத்திப் பார்ப்பது.
* மங்கள்யான் விண்கலத்தை திறமையாக வடிமைத்து 300 நாட்கள் பயணம் செய்து செவ்வாய் சுற்றுப் பாதையில் செலுத்தி திறமையாக சுற்றவிடுவது.
* ஆழமான விண்வெளித் தொடர்பு, வழிசெலுத்துதல், விண்வெளித்திட்டம், மேலாண்மை மேற்கொள்வது
* செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆராய்வது, தாவர மற்றும் விலங்கு ஆகியவற்றின் அமைப்பு பற்றிய இயல், தரையமைப்பு, கனிமவியல்,மற்றும் செவ்வாய் பருவக் காலநிலை போன்றவற்றை அறிவியல் கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்வது.
* செவ்வாயை சென்றடையும் அளவுக்கு தொழில்நுட்பத் திறன் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும், செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் இருக்கிறதா என்பன உள்ளிட்ட ஆய்வுகளை நடத்துவது.
* விண்வெளிப் பயணங்களுக்குத் தூக்கிச் செல்லும் ராக்கெட் திறனை உறுதிப்படுத்துவது
* விண்ணுளவி அமைப்பு, இயக்க நெறிகளைச் செயலாக்க முற்படுவது; அண்டவெளித் தேடல் பணி களைத் திட்டமிட்டு நிறைவேற்றுவது.
* விண்வெளித் தொடர்பு முறைகளை விருத்தி செய்வது.
* செவ்வாய்க் கோள் சுற்றுளவியை அமைப்பது. அதை நெடுந்தூரப் பயணத்துக்குத் தயார் செய்வது. அது செவ்வாய்க் கோளில் இறங்கச் செய்வது.
* செவ்வாய்க் கோளைச் சுற்றி வந்து படமெடுப்பது.
* செவ்வாய்க் கோளில் ஒரு காலத்தில் இருந்த சூழ் வெளி வாயு மண்டல இழப்பை ஆராய்வது
எதிர்பார்க்கப்படும் பயன்கள்
* தன்னிறைவு: விண்வெளித் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு, இன்றையக் காலகட்டத்தில் தொலைத் தொடர்பு, தொலைக்காட்சி, பருவநிலை அறிதல், உட்பட பல்வேறு தேவைகளுக்கு ஒவ்வொரு நாடும் செயற்கை கோள்களை பயன்படுத்துகின்றன. இந்தியா போன்ற விரிந்து பரந்த பெரிய நாடு இந்தத் தேவைகளுக்காக வெளிநாட்டுச் செயற்கைக்கோள்களை நம்பியிருந்ததால் அதன் இறையாண்மையும் வளர்ச்சியும் கேள்விக் குறியாகிவிடும். அதை மாற்றி விண்வெளித் தொழில் நுட்பத்தில் தன்னிறைவடையவும், அடுத்தக் கட்டங்களுக்கு முன்னேறவும் இது போன்ற முயற்சிகள் உதவும்.
* அறிவியல்: குறிப்பாக நமது செவ்வாய் பயணம் கோளில் இணைத்து எடுத்துச் செல்லும் ஐந்து கருவிகளும் ஒவ்வொரு அறிவியல் நோக்கத்திற்காக செயல்படும் திறன் கொண்டவை, அதாவது, செவ்வாயில் "மீத்தேன்' வாயு உள்ளதா? என ஆராயும் கருவி, வாயு மண்டலத்தை ஆராயும் கருவி, செவ்வாயை பல கோணங் களில் படம் பிடிக்கும் கருவி, ஆகியவற்றை சொல்லலாம். இந்தக் கருவிகள் செவ்வாய்க் கிரகத்தை ஆராய்ந்து, விஞ்ஞானிகளுக்குத் தேவையான செய்திகளைச் சேகரித்து பூமிக்கு அனுப்பும் திறன் கொண்டவை. அந்தச் செய்திகள் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுக்கும்.
* வர்த்தகம்: இந்தியாவில் வெற்றிகரமான நிலவு மற்றும் செவ்வாய்ப் பயணங்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்திற்கு புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும். வளர்ந்து வரும் நாடுகள் தங்களுக்குரிய செயற்கைகோள்களை தயாரிக்கவும், அவற்றை விண்ணில் செலுத்தவும் வர்த்தக ரீதியில் நம்மை அணுகும் வாய்ப்புகள் கிடைக்கும். அதன் மூலம் அன்னியச் செலாவணியைச் சம்பாதிக்கவும், கூடுதல் விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப வேலைகளை இந்தியாவில் உருவாக்கவும் முடியும்.
* மனித வளம் பேணல்: செவ்வாய்க் கிரக ஆய்வுகள் மூலம் அறிவியல் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களை நம்மால் உருவாக்க முடியும். அதையும் தாண்டி, நமது விஞ்ஞானிகளுக்கு இடையே மிக உயர்ந்த குழு மனப்பான்மையை வளர்க்கவும் இத்தகைய விண்வெளி ஆய்வுகள் கைகொடுக்கின்றன.
ராக்கெட் விவரம்
* இந்த PSLV ராக்கெட் PSLV-C25 என 25-வது டநகய ராக்கெட் ஆகும். அதேபோல லக வரிசையில் 5-வது ஆகும். இது செவ்வாய் சுற்றளவி செயற்கைக்கோள் (MOM-Mars Orbiter Mission) இதன் 1337 கிலோ நிறையை சுமந்துகொண்டு 250 கி.மீ. பு 23500 கி.மீ. நீள்வட்டப்பாதையில் பயணம் செய்துகொண்டுள்ளது.
* PSLV- C25 ராக்கெட் உயரம் 44.4 மீட்டர்; துணைக்கருவிகளின் நிறை 1337 கிலோ. மங்கள்யான் விண்கலம் முதலில் புவி மைய நிலையிலிருந்து (Earth - Centerd Phase) சூரிய மைய நிலைக்கு (Heliocentic Phase) சென்று செவ்வாய் நிலையில் (Martian Phase) நிறுத்தப்படும். அங்கிருந்தபடியே செவ்வாய் சுற்றுப் பாதையில் சுற்றி வந்து செவ்வாய் கிரகத்தை பற்றிய தகவல்கள் சேகரித்து அனுப்பி வைக்கும்.
திட்டசெலவு
மங்கள்யான் ஏவுத் திட்டத்துக்கு ஆன நிதிச் செலவு 450 கோடி ரூபாய். 5 ஆய்வுக் கருவி இதனுள் அடக்கம். இத்திட்டம் வெற்றி பெற்றால் உலகில் குறைந்த செலவில் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட செயற்கைகோள் திட்டம் என இது புகழ்பெறும்.
பி.எஸ்.எல்.வி ராக்கெட் தயாரிக்க 110 கோடியும்; மங்கள்யான் விண்கலம் தயாரிக்க 150 கோடியும்; ராக்கெட், விண்கலம் இணைக்க, கொண்டுச்செல்ல, கையாள, நிலைநிறுத்த, ஏவிடவும் 90 கோடியும் செலவிடப்பட்டது. ஏனைய செலவினங்கள் பின்னர் தெரியவரும்.
மங்கள்யான் செயல்பாடு
பூமி, செவ்வாய் இரண்டுமே சூரியனைச் சுற்றி வரும் கோள்கள். ஆனால் இவை இரண்டும் வெவ்வேறு வேகத்தில், சூரியனை விட்டு வெவ்வேறு தூரங்களில் தங்களுக்குரிய நீள்வட்டப் பாதைகளில் சுற்றி வருகின்றன.
பூமி சூரியனிலிலிருந்து அதிகபட்சம் 15,20,98,232 கி.மீ., குறைந்தபட்சம் 14,70,98,290 கி.மீ என்ற நீள் வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. இதற்கு 365 நாட்களை எடுத்துக் கொள்கிறது. அதாவது சராசரியாக விநாடிக்கு 29.78 கி.மீ. வேகத்தில் தினமும் சஞ்சரிக்கிறது.
அதேமாதிரி செவ்வாய் சூரியனிலிலிருந்து அதிகபட்சம் 24,92,09,300 கி.மீ. குறைந்தபட்சம் 20,66,69,000 கி.மீ என்ற நீள் வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வர 687 நாட்களை எடுத்துக் கொள்கிறது. அதாவது சராசரியாக விநாடிக்கு 24 கி.மீ. வேகத்தில் தினமும் சஞ்சரிக்கிறது.
இப்படிப்பட்ட பூமியும் செவ்வாயும் சூரியனைச் சுற்றி வரும் ஓட்டப்பந்தயத்தில், கிட்டதட்ட இரண்டரை வருடங் களுக்கு ஒருமுறை அவற்றிற்கு இடையே உள்ள இடைப் பட்ட தூரம் குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட சந்தர்ப்பங் களைப் பயன்படுத்தி, அந்த நேரத்தில் செல்லும் செவ்வாய்ப் பயணங்களுக்குக் குறைந்த எரிபொருள் போதும். இந்த உத்தேசத்தில் தான் 5-11-2013 அன்று, 250 கி.மீ 23,540 கி.மீ என்ற நீள்வட்டப் பாதையில் மங்கள்யான் ஏவப்பட்டுள்ளது. நவம்பர் 5-ம் தேதி மங்கள்யான் ஏவப்பட்டாலும் சிறிது சிறிதாக நீள்வட்டப் பாதை உயர்த்தப்படும். டிசம்பர் 1-ம் தேதி செயற்கைகோளில் உள்ள மோட்டாரை இயக்கி செவ்வாய்க் கிரகத்தை நோக்கி அது உந்தப்படும். பின்னர் மங்கள்யான் செயற்கைகோள் விண்வெளியில் மிதந்தபடி கிட்டத்தட்ட 9 மாதங்கள் பயணம் செய்து 11-9 -2014-ம் தேதி வாக்கில் செவ்வாயின் அருகில் செல்லும்.
அப்போது செயற்கைகோளில் உள்ள மோட்டாரை மீண்டும் ஒருமுறை இயக்கி அதன் வேகத்தை குறைக்க வேண்டும். அப்போது தான் செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றிய நீள்வட்டப் பாதையில் செயற்கைகோளை நிலை நிறுத்த முடியும்.
மங்கள்யான் பணி 10 மாதங்கள் ஆகும். மங்கல்யான் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு மண்டலத்தில் இறங்கி, வெற்றிகரமாகச் சுற்ற ஆரம்பித்தால், அது ஓர் அசுர விண்வெளிச் சாதனையாகப் போற்றப்படும். அப்போது செவ்வாய்க் கோளைச் சுற்றிய நான்காவது தேசமாக இந்திய ஓர் உயர்ந்த இடத்தைப் பெறும். ஆசிய பேராற்றல் நாடுகளான ஜப்பான், சீனா ஆகிய இரண்டும் முயன்று, அவற்றின் சுற்றுளவிகள் செவ்வாய் கோளைச் சுற்ற முடியாமல் தோல்வி அடைந்தன. இதுவரை உலக நாடு களில் நிகழ்ந்த 51 செவ்வாய்க் கோள் பயண முயற்சி களில் 21 பயணங்கள்தான் வெற்றி அடைந்துள்ளன.
எதிர்காலத் திட்டங்கள்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் அடுத்த திட்டமானது, இரண்டாவது சந்திராயன் (Chandrayaan -2) விண்கலத்தை அனுப்புவது. இப்போது இந்த திட்டம் 2015-க்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. சந்திராயன்-2 வானது சந்திராயன்-1 விட பல முறைகளில் வேறுபட்டது. முதன் முதலில் சந்திராயன்-2 அணுக்கரு எரிசக்தியைப் பயன்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த வின்கலம் தன்னுடன் ஒரு தளவுளவியையும், வாகனத் தையும் (A Lander & Rover) சுமந்து சென்று பாதுகாப்பாகச் சந்திர மேற்பரப்பில் தரை இறக்கும். விண்கலம் நிலவின் தளத்தை ஆராயும் போது வாகனம் நிலவின் பரப்பில் ஊர்ந்து சென்று தகவல் தயாரிக்கும். தளவுளவி, வாகன (Lunar Lander & Rover) அமைப்புகளுக்கு இந்தியா ரஷ்யாவின் கூட்டுறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. அதற்காகும் நிதித்தொகை 4.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2015 ஆண்டுக்குள் இந்திய விண்வெளி ஆய்வுக் குழு இரண்டு அல்லது மூவர் இயக்கும் மனித விண்வெளிக் கப்பலைத் தயார் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஆகும் செலவு 242 மில்லிலியன் டாலர் (1240 கோடி ரூபாய்).
மூவர் இயக்கும் அந்த மனித விண்கப்பல் பூமியை 250 மைல் தணிந்த உயரத்தில் 7 நாட்கள் சுற்றி வரும். இந்திய அரசு மனிதப் பயணத் திட்டத்துக்கு 95 கோடி ரூபாய் நிதித் தொகையை அளித்துள்ளது. விண்வெளிப் பயண மனிதப் பயிற்சிக்கு 1000 கோடி ரூபாய்ச் செலவில் பெங்களூரில் பயிற்சிக் கூடம் ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது.
சிறையில் உள்ள நடிகர் சஞ்சய்தத்துக்கு போலீஸ் உதவியுடன் பீர், ரம் கொடுக்கிறார்கள்: பாஜக குற்றச்சாட்டு
பா.ஜ.க. முன்னணி தலைவரும், மராட்டிய மாநில எதிர்க்கட்சி தலைவருமான வினோத் தவேதி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார். மராட்டிய மாநில சட்டசபை கூட்டத்தில் அவர் இதை தெரிவித்தார். அவர் கூறியதாவது:–
மராட்டிய மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதாக சொல்கிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் வேறு மாதிரி உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் மட்டும் மராட்டியத்தில் 216 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
ஏரவாடா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய்தத் கேட்டதையெல்லாம் கொடுக்கிறார்கள். அவருக்கு இரவு நேரங்களில் பீர், ரம் போன்ற மதுபானங்கள் கூட கொடுக்கப்படுகிறது. போலீஸ் அதிகாரிகளே இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள்.
இதுபற்றி உள்துறை மந்திரி ஆர்.ஆர்.பாட்டீல், மகளிர் மேம்பாட்டு மந்திரி வர்ஷா கெய்க்வாட் ஆய்வு நடத்தினால் உண்மை தெரியும். ஏராளமான கிரிமினல் வழக்குகளில் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்பட வில்லை.
அரசின் பல்வேறு திட்டங்களில் ஊழல் நடந்துள்ளது. குற்றவாளிகளிடம் அரசு மென்மையாக நடந்து கொள்வதால் 93 சதவீத குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியில் நடமாடுகிறார்கள். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் வினோத் தவேதி கூறினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு திங்கட்கிழமை பதில் அளிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் 1993–ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக நடிகர் சஞ்சய்தத்துக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் புனேயில் உள்ள ஏரவாடா ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இடத்தை காலி செய்யுங்கள்! ‘ஆம் ஆத்மி’ கட்சியினரை வெளியேற சொன்ன அன்னாஹசாரே!
ஜன லோக்பால் கொண்டுவர வலியுறுத்தி அன்னா ஹசாரே வெள்ளிக்கிழமை 4–வது நாளாக தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
அவர் அன்னா ஹசாரே முன்னிலையில் மேடையில் பேசினார். அப்போது அவர் ‘ஆம் ஆத்மி’ கட்சியினரை மறைமுகமாக விமர்சித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:–
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே போராட்டம் தொடங்கியபோது, அவருக்கு பின்னால் நிறைய பேர் இருந்தார்கள். பின்னர் அவர்கள் அனைவரும் ஹசாரேயை விட்டு சென்றுவிட்டார்கள்.
அவர்கள் ஒன்று மட்டும் நினைவில் வைத்து கொள்ளவேண்டும். அன்னா ஹசாரே இல்லை என்றால் அவர்கள் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்க முடியாது. இவ்வாறு வி.கே.சிங் பேசினார்.
வி.கே.சிங்கின் இந்த கருத்து மேடை அருகே அமர்ந்திருந்த ‘ஆம் ஆத்மி’ கட்சி தலைவர்களில் ஒருவரான கோவிந்த் ராய்க்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனே குறுக்கிட்ட அவர், வி.கே.சிங்குக்கு எதிராக கோஷம் எழுப்பினார்.
அவரது செயல் மேடையில் அமர்ந்திருந்த அன்னா ஹசாரேக்கு கோபமூட்டியது. உடனடியாக மைக்கை வாங்கிய அவர், ‘‘ஒருவர் பேசும்போது இடையூறு ஏற்படுத்துவது சரியல்ல. உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள நான் உங்களை அழைக்கவில்லை. நீங்கள் சலசலப்பு ஏற்படுத்த விரும்பினால் இங்கு இருக்க வேண்டாம். உடனடியாக இந்த இடத்தை காலி செய்யுங்கள்’’ என்று ஆவேசத்துடன் கூறினார். இதை தொடர்ந்து கோவிந்த் ராய் உள்ளிட்ட ‘ஆம் ஆத்மி’ கட்சியினர் அங்கிருந்து புறப்பட்டனர்.
காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் கூட்டணி சேர விரும்பவில்லை! ஆம் ஆத்மி கட்சி!
டெல்லியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி அளித்துள்ள நிபந்தனையற்ற ஆதரவை ஆம் ஆத்மி கட்சி நிராகத்துவிட்டது. இதனால் டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியாகி ஒரு வாரம் ஆகியும் ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நீடித்து வருகிறது. ஆட்சி அமைக்க 36 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், 32 எம்எல்ஏக்களை பெற்றுள்ள பாஜக கூட்டணி பெரும்பாண்மை இல்லாததால் ஆட்சி அமைக்க போவதில்லை என்று அறிவித்துவிட்டது.
இதையடுத்து 28 எம்எல்ஏக்களை கொண்ட ஆம் ஆத்மி கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சனிக்கிழமை காலை டெல்லி துணைநிலை ஆளுநரை சந்திக்க அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவை தருவதாக காங்கிரஸ் கட்சி துணை நிலை ஆளுநரிடம் கடிதம் வழங்கியுள்ளது.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெற ஆம் ஆத்மி கட்சி மறுத்துவிட்டது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் குமார் விஸ்வாஷ் கூறுகையில்,
எங்களுடைய நிலையில் நாங்கள் தெளிவாக உள்ளோம். காங்கிரஸ் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர விரும்பவில்லை. இருப்பினும் தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எங்கள் கட்சி நிர்வாகிகள் ஒன்றுகூடி ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்றார்.
ஆட்சி அமைக்க இரண்டு கட்சிகளும் முன்வராத நிலையில், டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு, துணை நிலை ஆளுநர் பரிந்துரை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் முன்பு தனது முகத்தைக் காட்டுவதற்கு அஞ்சும் ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
Subscribe to:
Posts (Atom)







