Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, February 13, 2014

இலங்கை சர்வதேசத்தின் நம்பிக்கையைப் பெற வேண்டும்: இந்தியா

இலங்கை சர்வதேச அரங்கில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என இந்தியா கூறியுள்ளது.எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், அமெரிக்கா இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரவுள்ளத் தீர்மானம் மீது இந்தியா என்ன நிலைப்பாடு எடுக்கும் என்பது இன்னும் தெரியவில்லை.கொழும்பிலிருந்து சென்றிருந்த ஊடகவியலாளர்கள் குழுவொன்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷிதை புதன்கிழமை டில்லியில் சந்தித்து பேசியபோதே சல்மான் குர்ஷித் இலங்கை மனித உரிமைகள் நிலவரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு ஆதரவான ஒரு நிலைப்பாடு சர்வதேச சமூகத்தில் நிலவ வேண்டுமாயின், அதற்கு ஏற்ற வகையில் திருப்திகரமான முன்னேற்றங்களை இலங்கை காண்பிக்க வேண்டியது அவசியம் என்று குர்ஷித் கூறியதாக, கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த பத்திரிகையாளர் என் எம் அமீன் தமிழோசையிடம் தெரிவித்தார்.அதேவேளை சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படுவதற்கு இந்தியா இடமளிக்காது என்று சல்மான் குர்ஷித் கூறியதாக அமீன் தெரிவித்தார். இலங்கையில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தேர்வுக் குழு அனைத்து தரப்பினரின் நம்பிக்கையை பெறும் வகையில் இருக்க வேண்டும் என்றும், அந்தக் குழுவின் நம்பகத்தன்மை குறித்து பிரச்சினைகள் உள்ளன என்றும் இந்திய அமைச்சர் சுட்டிக்காட்டியதாகவும் அமீன் கூறுகிறார். இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்து இறங்கியவுடன் விசாவைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறைகள் இலங்கையர்களுக்கு வழங்குவதில் பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினைகள் இருக்கின்றன என்று சல்மான் குர்ஷித் இலங்கை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் அமீன் தெரிவித்தார். எனினும் இந்தக் கூட்டத்தில் இரு நாட்டு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஏதும் விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

யாழில் விமானப்படைச் சிப்பாய் உட்பட இராணுவத்துடன் தொடர்புடைய டில்லு பாதாள உலகின் நால்வர் கைது

யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வரும் இராணுவத்துடன் தொடர்புடைய பாதாள உலக ஆயுதக் கும்பல்களுள் ஒன்றான டில்லு குழுவினை சேர்ந்தவர்களென அடையாளப்படுத்தப்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்குவில் பகுதியில் வீடொன்றினுள் பதுங்கியிருந்த நிலையில் அவ்hகள் நேற்று (11.02.14) கைதாகினர். இவர்களுள் இலங்கை விமானப்படையினை சேர்ந்த ஒருவரும் அடங்கியிருந்துள்ளார். தெற்கின் ஜாஎல பகுதியனை சேர்ந்த இருவர் மற்றும் கொட்டாவா அங்கொடைப் பகுதிகளை சேர்ந்த ஒவ்வொருவரென இருவரும் உள்ளடங்கியுள்ளனர். முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மூளாய் பகுதியில் நடந்த மோதல் சம்பவமொன்றின் தொடர்ச்சியாக கொக்குவில் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலின் போது ஒன்பது உள்ளுர் இளைஞர்கள் கைதானதுடன் அங்கு ஆயுதங்கள் மற்றும் இராணுவ சீருடைகளும் மீட்கப்பட்டிருந்தன. விசாரணைகளில் கிடைக்கப்பெற்ற தகவல்களினை அடுத்து நேற்று நடத்தப்பட்ட தொடர் தேடுதலில் மேலும் 4 சிங்களவர்கள் கைதாகியுள்ளனர். கைதானவர்களுள் இலங்கை விமானப்படையினை சேர்ந்தவரென அடையாளப்படுத்தப்பட்டவர் தற்போது அதிலிந்து விலகி இப்பாதாள கும்பலில் இருந்ததாக கூறப்படுகின்றது. இதனிடையே ஏற்கனவே இதே போன்று கைதான ஆவா குழுவின் முக்கிய பிரமுகர்கள் பிணயில் வீடு செல்ல விண்ணப்பித்துள்ளனர். நாளை யாழ்.மேல் நீதிமன்றில் இம்மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

சிரியப் பிரச்சனையின் தீர்வை நோக்கிய பயணத்திற்கு, ரஷ்யா சகல வழிகளிலும் தடையாக உள்ளது-

சிரியப் பிரச்சனையின் தீர்வை நோக்கிய பயணத்திற்கு, ரஷ்யா சகல வழிகளிலும் தடையாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மிகவும் தெளிவான வார்த்தைகளில் குற்றம் சாட்டியுள்ளார்.
சிரியாவிலுள்ள சர்வ சாதாரன பிரஜைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முயலும் சகல முயற்சிக்கும் மொஸ்கோ காரணமின்றி இடையூறு விளைவிக்கிறதெனவும் அங்குள்ள மக்களின் பட்டினிச்சாவிற்கு சகல வழிகளிலும் ரஷ்யா பொறுப்பாக வேண்டுமெனவும் பிரான்ஸ் ஜனாதிபதியுடன் இணைந்து பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். 15 நாடுகளின் பிரதி நிதிகள் கலந்து கொண்டு தீர்வு காண முயன்ற சிரியாவின் மனிதாபிமான நடவடிக்கைகள், ரஷ்யாவின் திடமான எதிரிடையான நோக்கத்தால் முறியடிக்கப்பட்ட்து. மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பேச்சு ஐ.நா. பாதுகாப்புச் சபையால் ஆரம்பிக்கப்பட்ட மாத்திரத்தே ரஷ்ய வெளிவிவகாரச் செயலர் செர்ஜேவ் லொரொ, அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். ரஷ்யாவின் வீட்டோ அதிகாரம் சிரிய மக்களைப் போரிலும் பட்டினிச் சாவிலும் இரக்கமற்றுத் தள்ளுகிறது

அமெரிக்காவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோழன் இனத்தை ஐரோப்பாவில் பயிரிடும் உரிமை பற்றிய வாக்கெடுப்பு

அமெரிக்காவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோழன் இனத்தை ஐரோப்பாவில் பயிரிடும் உரிமை பற்றிய வாக்கெடுப்பு ப்ரஸிலில் அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.
இருபத்தியெட்டு ஐரோப்பிய நாடுகளில் பத்தொன்பது நாடுகள் அதனை எதிர்த்து வாக்களித்திருந்தன. ஜேர்மன் விவசாயச் செயலர் (h)கன்ஸ் பீற்றரும் சுற்றுப்புறச் சூழல் செயலரான கென்றிக்ஸ் பாபராவும் இதனைக் கடுமையாக எதிர்த்துள்ளனர். இப் புதிய ரகமானது வயலில் தேவையற்ற புல் பூண்டுகளை அழிக்கும் நாசினியால்ப் பாதிப்படையாத தன்மையையும், பயிரை அழிக்க முயலும் பூச்சிகளைக்கொல்லும், நச்சுத் தன்மையைத் தயாரிக்கும் வன்மையும் கொண்டு அதிக விளைச்சலையும் தர வல்லது. இதனைப் பயிரிடுவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு தேனீக்கள் பட்டாம் பூச்சிகள் போன்றவற்றின் அழிவிற்குக் காரணமாகி, மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தைத் தருமென பசுமைக்கட்சியின் மரபணு மாற்றப் பயிர்ச்செய்கை வல்லுனர் குறிப்பிடுகிறார். வேறு பல இது பற்றிய ஆய்வுகளும், ஏற்கனவே இடம் பெற்றுவரும் இத்தகைய விவசாயமும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட தானிய பயிர்ச் செய்கையால் விரும்பத்தகாத விளைவுகளைத் தரவில்லை. இருந்தும் ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர்ச் செய்கைக்கும், பல சக்தி வாய்ந்த குருத்தணு ஆய்விற்கும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து இயற்கையின் போக்கில் செயற்கை மாற்றம் ஏற்படுவதை மறுக்கின்றன. ஐரோப்பியரால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட Mon g10 ரக சோழன் ஏற்கனவே ஸ்பெயின் நாட்டில் பயிரிடப்பட்டு, அந்நாட்டு சோழன் உற்பத்தியின் 30 சத வீதத்தை விளைச்சலாகத் தருகிறது. இந்த இனம் தம் நாடுகளுக்குள் புக முடியாத வகையில் சட்டப்பாதுகாப்பு ஷரத்தை ஜேர்மனியும் பிரான்ஸும் ஏற்படுத்தியுள்ளது. இதே வகையிலான ஒரு சட்ட அமைப்பையே ஜேர்மனி தன் மக்களை, மரபணு மாற்றம் பெற்ற தானியங்களைப் புசித்து நோய் வாய்ப்படக் கூடிய நிலையிலிருந்து காத்திட வேண்டுமெனப் பசுமை வாதம் செளுமை பேசுகிறது.