Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Tuesday, December 10, 2013
ஆளுநரின் அழைப்பை ஏற்று பாஜக ஆட்சி அமைக்க வேண்டும்
டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களை கைபற்றிய பாஜக ஆட்சி அமைக்க முன்வர வேண்டும் என ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஆம்ஆத்மி கட்சியின் சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆம்ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிக இடங்களை மக்கள் அளித்துள்ள நிலையில் பொறுப்புகளை தட்டி கழித்து பாஜக ஓடிவிக் கூடாது என்று கூறினார்.
அதே நேரத்தில் மறுதேர்தலையும் சந்திக்கவும் தயாராக இருப்பதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதியில் 31 இடங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றுள்ளது. ஆம்ஆத்மி கட்சி 28 இடங்களில் வென்று 2-வது இடத்தை பெற்றுள்ளது.
காங்கிரசு 8 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. ஐக்கிய ஜனதா தளம், அகாலி தளம், மற்றும் ஒரு சுயேட்சை ஆகியோர் ஒரு இடங்களில் வென்றுள்ளனர். இதனால் அதிக இடங்களை கைபற்றியுள்ள பாஜக-வை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்று கூறப்படுகிறது.
இதனை பாஜக நிராகரிக்கும் பட்சத்தில் ஆம்ஆத்மி கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பர் எனத் தெரிகிறது. எந்த கட்சியும் ஆட்சி அமைக்க விட்டால் சட்டப்பேரவையை சஸ்பெண்ட் செய்து ஆளுநர் உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளிப்பார் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Anna Hazare begins indefinite fast, says it will be a 'do-or-die' agitation
Ralegan Sidhi: Anna Hazare has begun what he today called a "do or die agitation" in Ralegan Sidhi, his village in Maharashtra, to demand that Parliament urgently clear the anti-corruption Lokpal Bill.
The 76-year-old Gandhian activist is again on an indefinite fast and has demanded that the Rajya Sabha pass that bill in the ongoing 12-day winter session, which ends on December 20.
அன்னா ஹசாரே இன்று உண்ணாவிரதம்
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே முழுமையான ஜன்லோக்பால் மசோதா அமைக்க வலியுறுத்தி இன்று முதல் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். நடப்பு கூட்டத்தொடரிலே லோக்பால் மசோதா நிரைவேற்றிட வேண்டி டில்லியில் உண்ணாவிரதம் இருக்கிறார்
நடிகர் மயில்சாமியிடம் 50 ஆயிரம் கேட்டு மிரட்டல்
நடிகர் மயில்சாமி, ஞாயிற்றுக்கிழமை மாலை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்ததாம். அதில் பேசிய நபர், தான் போலீஸ் என்றும், அண்மையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஒரு கும்பலைப் பிடித்தபோது, அந்த கும்பலைச் சேர்ந்த சில பெண்கள் மயில்சாமியின் பெயரை கூறியதாகவும், மேலும் அவர்களிடம் மயில்சாமியின் செல்போன் எண் இருந்ததாகவும் தெரிவித்தாராம்.
மேலும் அந்த நபர், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களிடம் மயில்சாமிக்கு இருக்கும் தொடர்பை வெளியே சொல்லாமல் இருப்பதற்கு ரூ. 50 ஆயிரம் வேண்டும் என கேட்டு மிரட்டினாராம்.
இதைக் கேட்டு அதிர்ச்சியைடந்த மயில்சாமி, அந்த நபரிடம் மறுத்து பேசியதாகத் தெரிகிறது. அப்போது அந்த நபரின் அருகே இருந்த ஒரு பெண்ணும், மயில்சாமியை மிரட்டும் வகையில் செல்போனில் பேசினாராம். பின்னர் இருவரும் செல்போன் இணைப்பை தூண்டித்துவிட்டனராம்.
இதனால் அதிர்ச்சியடைந்த மயில்சாமி, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவுக்கு மீண்டும் பஸ்கள் இயக்கம்
ஆந்திரத்தில் பதற்றம் தணிந்ததைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழகத்திலிருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தெலங்கானா தனி மாநிலம் பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆந்திரத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கிடையே, தெலங்கானா புதிய மாநிலம் அமைப்பது தொடர்பான வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 5) ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து, எதிர்ப்பாளர்கள் ஆந்திரத்தில் மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
அங்கு பதற்றம் நிலவியதால், தமிழகத்திலிருந்து ஆந்திரத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் 150 பஸ்களும் வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டன.
கடந்த சனிக்கிழமை மதியம் முதல் அங்கு பதற்றம் தணிந்துள்ளது. எனவே, அன்று மாலை முதல் ஆந்திரத்தில் ஒருசில பகுதிகளுக்கு மட்டும் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்கமான பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் புதன்கிழமை (டிசம்பர் 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
திருமுல்லைவாயல் பகுதி: லட்சுமிபுரம், கோணிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லம்மன்பேட்டை, காந்தி நகர், டி.எச்.ரோடு, பொத்தூர், அரிக்கம்பேடு, வெள்ளானூர், கொள்ளுமேடு, சிட்கோ, திருமுல்லைவாயல், உமன்ஸ் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், கன்னடபாளையம், எடப்பாளையம், டி.எச்.சாலை, செங்குன்றம்.
புழல் பகுதி: ஜி.என்.டி.சாலை, சண்முகபுரம், சூரப்பட்டு, எழில்நகர், நாகப்பா எஸ்டேட், புழல், கிராண்ட்லைன், காவாங்கரை, இந்திரா நகர், பாடியநல்லூர், கதிர்வேடு, கண்ணப்பசாமி நகர், பாரதிதாசன் நகர், செங்குன்றம், மொண்டியம்மன் நகர், மதனம்குப்பம், சைக்கிள் ஷாப்.
எண்ணூர் பகுதி: எண்ணூர், கத்திவாக்கம், எர்ணாவூர், உயர்மின் அழுத்த தொழிற்சாலைகள்.
பெருங்களத்தூர் பகுதி: புது மற்றும் பழைய பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை, முடிச்சூர், இரும்புலியூர் ஒரு பகுதி, மேற்கு தாம்பரம், வண்டலூர் ஒரு பகுதி, கொளப்பாக்கம்.
ராஜகீழ்ப்பாக்கம் பகுதி : காமராஜபுரம், ராஜகீழ்ப்பாக்கம், சிட்லப்பாக்கம், செம்பாக்கம், கோமதி நகர்.
மாடம்பாக்கம் பகுதி: மாடம்பாக்கம், சேலையூர், கேம்ப் ரோடு, திருவஞ்சேரி, மதுரப்பாக்கம், அகரம்தென், கோவிலாஞ்சேரி, வேளச்சேரி மெயின் ரோடு, காமராஜபுரம், வேங்கைவாசல்.
அண்ணா சாலை பகுதி: பூத பெருமாள் கோயில் தெரு, பெருமாள் முதலி தெரு, ஈ.பி.லிங்க் ரோடு, கல்யாணி கன்ஸ்ட்ரக்ஷன், காஸ்மோபாலிடன் கிளப், தேவி தியேட்டர் காம்ப்ளக்ஸ், ஜீ.ஜீ.காம்ப்ளக்ஸ், கஸ்தூரி பில்டிங், சாந்தி தியேட்டர் காம்ப்ளக்ஸ், ஸ்ரீலேகா, ஆர்.எம்.ஜி.காம்ப்ளக்ஸ், டின்ரோஸ் எஸ்டேட் காம்ப்ளக்ஸ், 69 அண்ணா சாலை ஒரு பகுதி, எஸ்.வி.எஸ்.கிளப் பில்டிங், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, ஜம்மு காஷ்மீர் பாங்க், 787 அண்ணா சாலை, ராயல் டவர்ஸ் பில்டிங் காம்ப்ள்க்ஸ், அண்ணா சாலை ஒரு பகுதி, ஜி.பி. ரோடு ஒரு பகுதி, எல்.ஜி.என். ரோடு, மோகன்தாஸ் ரோடு, பார்டர் தோட்டம், அடிசன் (ஆர்.எம்.ஜி.) கம்பெனி, பச்சையப்பா டிரஸ்ட் பில்டிங், எல்.ஐ.சி.பில்டிங் காம்ப்ளக்ஸ், ராஜ்யோக் கன்ஸ்டிரக்ஷன், பிரின்ஸ் குஷால் டவர் காம்ப்ளக்ஸ், கெüதம் டவர்ஸ், வெலிங்டன் பிளாசா காம்ப்ளக்ஸ், பேகம் சாகிப் தெரு, ஜி.பி.சந்து, கோபால் தாஸ் ரோடு, வி.என்.தாஸ் ரோடு, சுப்பராயன் தெரு, சுபத்ரால் முதல் தெரு, சையது அப்துல்லா தெரு, சாமி ஆச்சாரி தெரு, நைனியப்பன் தெரு, பங்காரு நாயக்கன் தெரு, குப்பு முத்து தெரு, வாலர்ஸ் சாலை, கரீம் முகைதீன் தெரு (1வது சந்து முதல் 5வது சந்து), தாராப்பூர் டவர்ஸ், தன் பில்டிங், சாரதாஸ் சில்க்ஸ் மற்றும் எம்போரியம், தலைமை தபால் நிலையம் (சாந்தி தியேட்டர் எதிரில்), அண்ணா ரோடு எச்.பி.ஓ. ஆபிஸ், பிளாக்கர்ஸ் ரோடு, பாட்டா ஷோரூம், டேம்ஸ் சாலை மற்றும் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், ஸ்டேட் பாங்க் தெரு, ஆறுமுகம் தெரு, வெல்டர்ஸ் தெரு மற்றும் பைரங் ஜங் பகதூர் 1வது மற்றும் 2வது தெரு
தமிழக அமைச்சரவை மாற்றம்!
தமிழக விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.வி.ராமலிங்கம் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக விளையாட்டு இளைஞர் நலத்துறை அமைச்சராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான பதவியேற்பு நிகழ்ச்சி 11.12.2013 புதன்கிழமை ஆளுநர் மாளிகையில் காலை 9.45 மணிக்கு நடைபெறும்.
தமிழக அமைச்சரவையில் மூன்று பேருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பி.வி.ரமணாவுக்கு வருவாய்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.சி.சம்பத்துக்கு வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தோப்பு என்.டி.வெங்கடாசலத்துக்கு சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
வாக்களித்த டெல்லி தமிழர்களுக்கு நன்றி: தேமுதிக தலைமைக் கழகம்
தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் இருந்து டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட முதல் கட்சி என்பதை தேமுதிக நிரூபித்துள்ளது. டெல்லி வாழ்தமிழர்களுக்கு குரல் கொடுக்கவும் அவர்கள் வாழ்வாதாரத்திற்கும் உத்திரவாதம் ஏற்படுத்திடவும் தேமுதிக இத்தேர்தலில் களம் இறங்கியது.
இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளும் தங்களது பணபலம், ஆட்சி அதிகார பலம் மூலம் எத்தனையோ அச்சுறுத்தல்களை தந்தாலும் எதற்கும் அஞ்சாமல் உறுதியோடு இந்த தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் தேமுதிக தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.
இத்தனை ஆண்டுகளும் பெரும் செல்வந்தர்கள் வேட்பாளர்களாக வலம் வரும்போது தூரத்தில் இருந்து வேடிக்கை பார்ப்பதும் தேர்தல் அன்று வாக்குச்சாவடிக்கும் சென்று ஓட்டுப்போடுவதையும் தவிர எதையும் அறியாமல் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்த நம் தமிழர்களுக்கு அவர்களும் தேர்தலில் போட்டி போடலாம். மற்றவர்களுக்கு இணையாக தாங்களம் வேட்பாளர்களாக ஆக முடியும் என்பதை தேமுதிக நிரூபித்ததோடு டெல்லி வாழ் ஏழை தமிழர்களிடையே நம்பிக்கையும், உறுதியையும் அசைக்க முடியாத தைரியத்தையும் தேமுதிக ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.
கேப்டனோடு இணைந்து தேர்தல் பணிக்கு வந்திருந்து அத்தனை பணிகளையும் எந்த சிரமமும் பாராமல் உழைத்த அனைத்து நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் டெல்லி வாழ் தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்து சமவாய்ப்பை ஏற்படுத்தி தந்ததன் மூலம் உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் தைரியும், நம்பிக்கை நம்மாலும் முடியும் என்ற உறுதியை தேமுதிக விதையாக விதைத்து இருக்கிறது.
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் என்பதற்கு இணங்க இந்த நம்பிக்கையே நாளை வெற்றியாக மாறி நல்ல எதிர்காலத்தை நம் மக்களுக்கு உருவாக்க முடியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை கருத்தில் கொண்டு தேமுதிக என்று தன் ஜனநாயக கடமையை ஆற்றும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
மிசோரம் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்தது காங்கிரஸ்
40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற்றது.
காங்கிரஸ் 28 தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. மிசோ தேசிய முன்னணி கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிசோரம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல் அமைச்சர் வேட்பாளர் லால்தான்ஹாவ்லா தனது சொந்தமாவட்டமான செர்ச் சிப்பிலுள்ள, செர்ச்சிப் மற்றும் ஹராங்டுர்ஹோ ஆகிய இரு தொகுதிகளில் போட்டி வெற்றி பெற்றார்,
ஆட்சி அமைக்க 21 இடங்கள் போதுமான நிலையில் 28 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது,
பஸ் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் பலி! கலவரமான சிங்கப்பூர்! தமிழர்கள் கைது!
சிங்கப்பூரில் இந்தியா, பங்களாதேஸ், இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலைக்காக சென்றுள்ளனர். ஞாயிற்றுக் கிழமைகளில் தேக்கா என்ற இடத்தில் தமிழர்கள் ஒன்று கூடுவார்கள். அந்த இடம் பெரிய சந்தைப் பகுதியாகவும் உள்ளது. ஒரு வாரத்திற்கு வேண்டிய பொருட்களை நாடெங்கும் பரவியுள்ளவர்கள் வந்து பொருட்கள் வாங்கிச் செல்வதுடன் சொந்த நாட்டில் இருந்து அங்கு வேலைக்கு வந்துள்ள நண்பர்களைச் சந்திக்கவும் கூடுவார்கள்.
வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமையும் தேக்காவில் அதிகமானோர் கூடினார்கள். அந்த நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு 40 வயதுள்ளவர் ஒரு தனியார் பேருந்தில் ஏறியபோது அதில் இருந்த பெண் ஓட்டுநர் அந்த பயணியை தள்ளிவிட்டதாக தெரிகிறது. அதனால் கீழே விழுந்த அந்த தமிழ் பயணி அதே இடத்தில் பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதைப் பார்த்த அப்பகுதியில் நின்ற தமிழர்கள் அந்த பேருந்தை உடைக்க முயன்றனர். இதையடுத்து அங்கு வந்த சிங்கப்பூர் போலீசாருக்கும் தமிழர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அதனால் அங்கு நின்ற இரண்டு போலீஸ் வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் அங்கு வந்த ஒரு ஆம்புலன்ஸ் உடைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போலீஸ் தமிழர்கள் மீது தடியடி நடத்தி களைத்தனர். இந்த சம்பவம் கலவரம் போல் காட்சியளித்தது,
அதனைத் தொடர்ந்து இதுவரை 40க்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள விடுதிகளில் போலீசார் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சிங்கப்பூரில் இதுபோன்ற சம்பவம் இதுவரை நடந்ததில்லை என்பதால் நாடே பரபரப்பாக உள்ளது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி சொந்த நாடுகளுக்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காக சிங்கப்பூர் - இந்தியா விமானம் ரத்து செய்யும் நடவடிக்கையும் நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் தமிழர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அறைகளிலேயே தவித்து வருகின்றனர்.
Subscribe to:
Posts (Atom)



