Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, November 19, 2013

இலங்கை தமிழர்கள் அழிவுக்கு காரணம் காங்கிரஸ்: வைகோ பேச்சு

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒன்றிய பகுதியில் ‘‘மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சி பயணம்’’ மேற்கொண்டார். கொடுமுடி அருகே உள்ள நடுப்பாளையத்தில் இருந்து வைகோ தனது பயணத்தை தொடங்கினார். இந்த பயணத்துக்கு ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த பயணத்தின்போது வைகோ வெள்ளோட்டம் பரப்பு, சாணார்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பாசூர், கொம்பனை, ஊஞ்சலூர், கொடுமுடி உள்பட பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:– இலங்கை தமிழர்கள் இப்போது படும் அவதிக்கும் அழிவுக்கும் காரணமே மத்தியில் ஆளும் காங்கிரஸ் தான். இப்படி முக்கிய குற்றவாளியாக காங்கிரஸ் பிரதமர் மன்மோகன்சிங் இருக்கும்போது அவர் எப்படி இலங்கைக்கு செல்ல முடியும்? இலங்கையில் போரை நடத்தியதே இந்தியாதான். இப்படி இருக்கும்போது அவர் இலங்கைக்கு போய் எப்படி தமிழர்களிடம் குறைகளை கேட்பார்? அவர் இலங்கை செல்வதை தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் தடுத்து விட்டன என்று கூறுகிறார்கள். இலங்கை போருக்கு காரணமாகவும், தமிழர்களின் அழிவுக்கு காரணமாகவும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் என்று இருக்கும்போது பிரதமர் மன்மோகன்சிங் இலங்கைக்கு சென்று என்ன பயன்தான் கிடைக்கப் போகிறது? இங்கிலாந்து பிரதமர் கேமரூன் இலங்கையில் மனித உரிமைகள் குறித்து சுதந்திரமான உரிய விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணையை மார்ச் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். இல்லையென்றால் பன்னாட்டு விசாரணை நடத்த இங்கிலாந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறி உள்ளார். ம.தி.மு.க.வும் ஆரம்பத்தில் இருந்தே இதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இலங்கையில் 48 வருடத்துக்குப் பிறகு இங்கிலாந்து பிரதமர் கேமரூன் இலங்கை வந்துள்ளார். 2008–ம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் நான் பேசி உள்ளேன். இதையொட்டி இங்கிலாந்து பிரதமர் கேமரூன் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு உள்ளார். இது நல்ல விஷயம். அவருடன் இந்திய பிரதமரை ஒப்பிட்டு பார்க்க கூடாது. கேமரூனுடன் மன்மோகன் சிங்கை ஒப்பிட்டு பார்க்கவும் முடியாது. வரும் பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் மீண்டும் கணேசமூர்த்திதான் போட்டியிடுவார். அவரை வெற்றிபெற செய்யுங்கள். இவ்வாறு வைகோ பேசினார்.

மன்னிப்பு கேட்டார் வி.கே.சிங்

ஓய்வு பெற்ற தலைமை ராணுவ தளபதி வி.கே.சிங்கின் வயது பிரச்சினை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து அவர் சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை விமர்சித்து சில கருத்துகளை வெளியிட்டார். அது குறித்து அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வி.கே.சிங் நேற்று நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். பேட்டியின்போது தான் தெரிவித்த கருத்துகளுக்கு எந்த வித உள்நோக்கமும் இல்லை என்று குறிப்பிட்ட வி.கே.சிங், நீதிபதிகள் தெய்வத்துக்கு சமமானவர்கள் என்றும், அவர்கள் மீது உயர்ந்த மதிப்பும், மரியாதை யும் வைத்து இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

அப்துல் கலாம் உடல்நிலையில் முன்னேற்றம்

டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென மயங்கி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் டெல்லி ராஜாஜி மார்கில் உள்ள தனது இல்லத்தில் திடீரென மயங்கி விழந்ததையடுத்து, ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மயக்கமடைந்து கீழே விழந்ததில் நெற்றிப் பகுதியில் ஏற்பட்ட லேசான காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பூரண குணமடையும் நிலையில் உள்ள அவர் ஓரிரு நாட்களில் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

பேசும் சக்தியை இழந்தார் நெல்சன் மண்டேலா

தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவுகு 95 வயதாகிவிட்டது. அவர் தீவிர சிகிச்சைக்கு பின்பு ஓய்வெடுத்து வருகிறார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக பேசும் சக்தியை இழந்துவிட்டார். முக அசைவுகள் மூலமே குடும்பத்தினருடன் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார் என்று அவரது மனைவி வின்னி தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் குரலை வெளிக்கொண்டுவரவே சென்றேன்: பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன்

இலங்கைக்கான தனது விஜயம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் நேற்று திங்கட்கிழமை பிரித்தானிய பாராளுமன்றத்தில் விசேட உரை... . .

இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? - உண்மைகளை தொிவிக்கும் மருத்துவர் வரதராஜா

இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், வன்னியில் இடம்பெற்ற பொது மக்களின் மரணங்கள் தொடர்பில் போலியான கணக்குகளை தெரிவிக்குமாறு, தாம் சிறீலங்கா அரசினால் வற்புறுத்தப்பட்டதாக, முல்லைத்தீவில் செயற்பட்ட வைத்தியர் வரதராஜன் தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் உள்ள அவர், இந்திய தொலைகாட்சிக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறீலங்கா அரச படையினரின் தாக்குதலில் பாரிய எண்ணிக்கையிலான பொது மக்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்க, முல்லைத்தீவில் இருந்த வைத்தியசாலையில் போதிய மருந்து பொருட்கள் காணப்படவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் தங்களை சிறீலங்கா அரச படையினர் கைது செய்து, தடுப்பில் வைத்து, சித்திரவதைக்கு உட்படுத்தி, இந்த உண்மைகளை மறைத்து ஊடகங்களுக்கு அரசாங்கத்துக்கு சார்பான தகவலை வெளியிடுமாறு வற்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த காலக்கட்டத்தில் தமது குடும்பத்தை பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு அழைத்து செல்ல வேறு வழி இன்றி, தாம் அரசாங்கத்தின் வற்புறுத்தலுக்கு இணங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் தற்போது தாம் பாதுகாப்பாக இருப்பதாகவும், இந்த நிலையில் திறந்த மனத்துடன் தாம் உண்மைகளை கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.