Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Thursday, March 13, 2014
மரபணு மாற்று விதைகளும்... மாய்மால விஞ்ஞானிகளும்!
இந்தியா போன்ற பெரிய நாடுகளில் உணவு தானியத்துக்கான தேவை அதிகம். ஆகையால், மரபணு மாற்றுப்பயிர் தொழில்நுட்பத்தை முற்றிலும் புறம்தள்ளக் கூடாது. அதில் உள்ள நன்மைகளைக் கணக்கில்கொள்ள வேண்டும்.
--------------------------------------------------------------------------------
பன்னாட்டு நிறுவனங்கள் கண்டுபிடித்த மரபணு மாற்றுப் பயிர் தொழில்நுட்பம் வேண்டாம் என்றால்... இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி நிலையத்திலேயே, இந்திய விஞ்ஞானிகளைக் கொண்டு மரபணு மாற்றுப் பயிர் ஆய்வைச் செய்யலாமே! இப்போது நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவுப் பயிர்கள், ஒரு காலத்தில் காடுகளில் இயற்கையாக விளைந்து கிடந்தன.
--------------------------------------------------------------------------------
அதில் நல்லவற்றை தனிப்பயிர்களாக சேகரித்து, பெரிய அளவில் உற்பத்தி செய்து கொண்டோம். அதேபோல, மரபணு மாற்று தொழில்நுட்பத்திலும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வோம்...."
----------------------------------------------------------------------------------
-இப்படி ‘விலையில்லா’ ஆலோசனைகளை அள்ளி வீசியிருக்கிறார், வெளிநாட்டில் குடியேறி, அங்குள்ள கம்பெனிகளின் பணத்தில் பலவிதமான ஆராய்ச்சிகளை செய்து, அதற்காக நோபல் பரிசையும் பெற்றிருக்கும்... இந்தியாவைச் (சிதம்பரம்) சேர்ந்தவரான விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்!
--------------------------------------------------------------------------------
இது, சில மாதங்களுக்கு முன் இந்தியா வந்தபோது இவர் பேசிச் சென்றது.
--------------------------------------------------------------------------------
''அறிவியல்பூர்வமற்ற விமர்சனங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. மரபணு மாற்று விதைகள் மூலமே தானிய உற்பத்தியைப் பெருக்க முடியும்... இந்தியாவின் பஞ்சத்தைப் போக்க முடியும்"
--------------------------------------------------------------------------------
-கடந்த சில வாரங்களுக்கு முன் காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தேசிய அறிவியல் மாநாட்டில், நம்முடைய இந்தியாவின் மேன்மைமிகு பிரதமரும், அமெரிக்காவின் கெழுதகை நண்பருமான திருவாளர் மன்மோகன் சிங் ஆற்றிய வீர உரை இது.
--------------------------------------------------------------------------------
இப்படிப்பட்ட அறிவுரைகள் எல்லாம், சமீபகாலமாக எதற்காக வேகமெடுக்கின்றன என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில், இதோ 'பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது' என்பதுபோல, நேற்றைய தினம் (பிப்ரவரி 27) அரிசி உள்பட பலவகை தானியங்கள் மற்றும் காய்கறிகளில் மரபணு மாற்று பரிசோதனைக்கான கதவைத் திறந்துவிட்டிருக்கிறார் இந்தியாவின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி!
--------------------------------------------------------------------------------
நம்முடைய வேளாண் விஞ்ஞானிகளும், அறிவியல் அறிஞர்களும் ஒப்புதலும் அறிவுரைகளும் கொடுத்துவிட்ட பிறகு, எதற்காக யோசிக் வேண்டும் என்று அதிரடியாக இப்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மொய்லி.
--------------------------------------------------------------------------------
அறிவுரைகள் சொல்வது என்றால், யாருக்குமே கசப்பதில்லை. அதிலும், ‘அறிவியல் அறிஞர்’ என்கிற பட்டம் ஒட்டிக் கொண்டுவிட்டால் போதும், ‘நாம் எதைச் சொன்னாலும் ஆட்டுமந்தை மாதிரி அனைவரும் தலையசைத்துக் கேட்பார்கள்' என்றொரு நம்பிக்கை ‘அறிவாளி’களுக்கு வந்துவிடுகிறது. இஷ்டம்போல அள்ளிக் கொட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மக்களுக்கா... கம்பெனிகளுக்கா?
இவர்கள் எத்தனை அறிவாளிகளாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்... எத்தனை எத்தனை நோபல் பரிசுகளை வேண்டுமானாலும் அள்ளிக் குவித்துக் கொள்ளட்டும். ஆனால், இயற்கையிடம் இருந்து இவர்கள் எந்த அளவுக்குப் பாடம் படித்தார்கள் என்பதில்தான் இருக்கிறது... இவர்களின் கண்டுபிடிப்புகள், அறிவுரைகள் எல்லாம் மக்களுக்கு நன்மை செய்வதற்காகவா... அல்லது மக்களின் பெயரால் தங்களை வளர்த்துக் கொள்ளும் கம்பெனிகளை வாழவைப்பதற்காகவா என்பது!
---------------------------------------------------------------------------------------
விவசாயம் சார்ந்து எந்த கண்டுபிடிப்பு வந்தாலும், ‘இந்தியா போன்ற நாடுகளில், அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க வேண்டியிருக்கிறது. அதனால், விவசாயத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள் அவசியம். குறிப்பாக மரபணு மாற்றுப்பயிர் ஒன்றுதான் நூற்றி இருபது கோடி மக்களுக்கும் சோறு போட முடியும்‘ என்றே இந்த ‘அறிவாளி’களும் சரி... பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஜால்ரா தட்டும் நம்மூர் அரசியல்வாதிகளும் சரி... பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.
---------------------------------------------------------------------------------------
தேவை, பரந்த மனது!
---------------------------------------------------------------------------------------
இந்தியா போன்ற நாட்டிலிருக்கும் மக்களுக்கு உணவளிக்க... எந்த அறிவியலும் தேவையில்லை. உண்மையான அறிவு மட்டுமே தேவை. அதாவது... பகுத்தறிவு மட்டுமே தேவை. ஆம், இங்கே தேவைக்கு மேலேயேதான் உற்பத்தியாகிறது. ஆனால், தேவையில்லாமல் வீணடிக்கப்படுவதுதான் அதிகமாக இருக்கிறது.
----------------------------------------------------------------------------------------------
அரசாங்கத்தின் குடோன்களில் சேமிக்கப்படும் கோதுமை, அரிசி போன்ற உணவு தானியங்கள் ஆண்டுதோறும் பல ஆயிரம் டன்கள் பூச்சிப் பிடித்து வீணாகிக் கொண்டிருக்கின்றன. ‘இப்படி வீணடிப்பதற்கு பதிலாக, ஏழைகளுக்கு அதையெல்லாம் பகிர்ந்தளிக்கலாமே’ என்று கடந்த ஆண்டுகளில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சாட்டையை சுழற்றியது ஒன்றே போதும், இங்கே எந்த அளவுக்கு உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதுமட்டுமா... ஆடம்பர திருமணங்கள், பலவிதமான ஆர்ப்பாட்டமான நிகழ்வுகள் என்றெல்லாம் தினம் தினம் டன் டன்னாக இங்கே வீணடிக்கப்படும் உணவுகளை அளவிட்டால்... அதையெல்லாம் எழுதி வைக்க பூமியின் சுற்றளவுக்கும் மேலாக காகிதம் தேவைப்படும். நட்சத்திர விடுதிகள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் என்று பல இடங்களிலும் சாப்பிடுபவர்களின் வாயில் இருப்பதைவிட, தட்டில் மிச்சமாக வைக்கப்படுவதுதான் அதிகமாக இருக்கிறது.
தட்டு நிறைய வைக்கப்படும் உணவிலிருந்து, ‘ஸ்டைல்’, ‘பந்தா’ என்று பலவிதங்களிலும் துளியூண்டு மட்டுமே கிள்ளி சாப்பிடுகிறார்கள். மீதி, வீணே குப்பைக்குத்தான் போய்ச் சேருகிறது. உணவுக்குக் கூட இங்கே திருவிழா எடுத்து, பசிக்காக சாப்பிடுவது என்பதை மறக்கடித்து... பந்தாவுக்காகவும்... கையில் பணமிருக்கிறது என்பதற்காகவும், தங்களுடைய பெருமையை பறைசாற்றிக் கொள்வதற்காகவும் உணவைப் பயன்படுத்துவது தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகிறது. இப்படி வீணடிக்கப்படும் உணவுப் பொருட்களை அளவெடுத்தால்... இன்னும் இரண்டு, மூன்று இந்தியாவுக்குகூட சோறு போட முடியும். அதற்கு தேவை... பரந்த மனதுதான்.
-----------------------------------------------------------------------------
0----------------------------------------------------------------------------------
விஞ்ஞானிகளே, இதை ஏன் செய்ய மறுக்கிறீர்கள்?
-------------------------------------------------------------------------------
‘இப்படி உணவை வீணாக்குகிறோமே...’ என்கிற எண்ணம், இந்த பகட்டு ஆசாமிகளின் மனதில் வரவேண்டும். அத்தகைய எண்ணங்களை உருவாக்கும் வேலைகளை இந்த விஞ்ஞான ‘அறிவாளி’களும், விதண்டாவாத அரசியல்வாதிகளும் செய்தால்... அது இந்த நாட்டுக்கு... ஏன், இந்த பூமிக்கே பயன்தருவதாக இருக்கும்.
-------------------------------------------------------------------------------
அதைவிடுத்து, திரும்பத் திரும்ப அறிவியல் ஆராய்ச்சி என்கிற பெயரில், உண்ணும் உணவுக்காக பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையே நமக்காக உருவாக்கி வைத்திருக்கும் உணவுப் பொருட்களின் விதைகளில் விளையாடத் தேவையில்லை. புதிதாக விதைகளை உருவாக்குகிறேன் என்கிற பெயரில் ஆய்வுக்கூடங்களை அமைத்து, தேவையில்லாமல் இந்த வகையிலும் சுற்றுச்சூழலுக்கு கேடான வேலைகளைச் செய்யத் தேவையில்லை.
-------------------------------------------------------------------------------
இவர்கள் சொல்லும், ‘மரபணு மாற்றுப்பயிர்’ பற்றி சிலர் கேள்விப்பட்டிருப்பீர்கள்.. பலர் கேள்விப் பட்டிருக்க மாட்டீர்கள். அது வேறொன்றும் இல்லை, இங்கே பயிர் செய்யப்படும் உணவு தானியங்களை பூச்சிகளும், பறவைகளும் கொஞ்சம் காலி செய்கின்றன. இதைத் தடுப்பதற்காக, காலகாலமாக வேப்பிலை போன்ற கசப்பான பொருட்களில் இருந்து திரவங்களைத் தயாரித்து தெளித்து, இயற்கையான முறையில் கட்டுப்படுத்தி வந்தார்கள் நம் முன்னோர்கள்.
-------------------------------------------------------------------------------
பின்னர், பூச்சிக்கொல்லி என்கிற பெயரில் வீரிய விஷ மருந்துகளை உற்பத்தி செய்த வெள்ளைக்காரர்கள், அதை நம் தலையில் கட்டினார்கள். அதைத் தெளித்த மாத்திரத்தில் புழு, பூச்சிகள் எல்லாம் சுருண்டு விழுந்து சாக, பறவைகள் எல்லாம் தலைதெறிக்க ஓட... ‘ஆகா, வராது வந்த மாமணியே!’ என்று முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்... அந்த எமனுக்கு வரவேற்பு வளைவு கட்டி வரவேற்று, இங்கே நிரந்தரமாக குடியேற்றி விட்டோம்.
-------------------------------------------------------------------------------
காலங்கள் உருண்டோட... பூச்சிகளை ஒரே நாளில் கொன்ற அந்த விஷம், நம்மை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருக்கிறது என்கிற உண்மையை உணர ஆரம்பித்தபோது... உலகமே அதிர்ந்து எழுந்தது. ஆம், இன்றைக்கு இங்கே புதிது புதிதாகப் பரவிக் கிடக்கும் பலவிதமான நோய்களுக்கு மூலகாரணியே... வேளாண்மையில் தாறுமாறாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளின் எச்சங்களால் வந்தவையே!
-------------------------------------------------------------------------------
விளைவு... பல நாடுகளில் பூச்சிக்கொல்லி விஷங்களுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில்கூட எண்டோசல்பான் எனும் விஷத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்ப, உச்ச நீதிமன்றமே அதற்கு தடை விதித்துள்ளது.
------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------
மில்லியன் டாலர் பிஸினஸ்!
இத்தகைய வரலாற்றுப் பின்னணியில் பிறந்திருப்பதுதான் இந்த மரபணு மாற்றுப்பயிர்கள். பூச்சிக்கொல்லி விஷங்களைத் தயாரித்து, பல மில்லயன் டாலர்கள் என்று பணம் பார்த்துக் கொண்டிருந்த பன்னாட்டு நிறுவனங்கள், அந்த வருமானத்தை இழக்க விரும்பவில்லை. அதற்காக கண்டுபிடித்ததுதான்... மரபணு மாற்றுப்பயிர். அதாவது, மண்ணில் இருக்கும் நுண்ணுயிரி ஒன்றின் மரபணுவை எடுத்து, பயிரின் விதைக்குள் செலுத்தி, அந்தப் பயிரிலேயே பூச்சிகளுக்கு எதிரான விஷத் தன்மையை உருவாக்கும் தொழில்நுட்பம்தான் இந்த மரபணு மாற்றுத் தொழில்நுட்பம். ஏற்கெனவே பயிரின் மீதுதான் விஷத்தைத் தெளித்தார்கள். தற்போது, பயிருக்குள்ளேயே ‘டெக்னாலஜி’ கொண்டு விஷத்தைத் திணித்துள்ளனர்.
மரபணு மாற்றப்பட்ட பயிரை, புழு மற்றும் பூச்சிகள் சாப்பிடாது என்பதுதான் நம் முன்பாக வைக்கப்படும் மிகமுக்கியமான பிரசாரம்! இதனால் பூசிகொல்லி தெளிக்கும் செலவு குறையும் என்றும் வலை வீசுகிறார்கள். புழு, பூச்சிகளே சாப்பிடாது என்றால், அந்தப் பயிரில் நிச்சயமாக அவற்றுக்கு எதிரான விஷம் இருக்கும்தானே! மனிதர்கள் மட்டும் எப்படி சாப்பிட முடியும்? இதைக் கேட்டால், ஆளாளுக்கு ‘விஞ்ஞானி’ என்கிற பெயரில், மற்றவர்களையெல்லாம் ‘முட்டாள்’ ஆக்குவதற்காக பாய்ந்தோடி வருகிறார்கள்.
ஐயா... அனைத்தும் அறிந்த புத்திசாலிகளே..! நாங்கள் முட்டாள்கள்தான். இந்த பூமியில் தாவரங்களைப் படைத்த இயற்கை, இது... புழு மற்றும் பூச்சிகளுக்கு, இது பறவைகளுக்கு, இது மனிதர்களுக்கு என்று பிரித்துப் பிரித்துப் படைக்கவில்லை. நாம் சாப்பிடும் அனைத்தையுமே புழு, பூச்சிகளும் பறவைகளும் சாப்பிடவே செய்கின்றன. அப்படியென்றால், அந்த உயிரினங்களே சாப்பிடாத உணவுப் பயிர்களை, நாம் எப்படி சாப்பிட முடியும்? என்றுதான் கேட்கிறோம். முட்டாள் தனமான எங்கள் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.
-------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------
ஐரோப்பாவில் கடை திறக்க வேண்டியதுதானே?
-------------------------------------------------------------------------------
‘மரபணு மாற்றப்பட்ட பயிரை ஏற்றுக்கொள்ளவே முடியாது’ என்று கறாராகச் சொல்லிக் கொண்டிருக்கின்றனவே ஐரோப்பிய யூனியன் நாடுகள். அங்கே போய் கடை திறக்க வேண்டியதுதானே... இந்த விஞ்ஞானிகள்...? அங்கு இவர்களின் பிரசாரத்தைச் செய்ய வேண்டியதுதானே...? முடியாது; அங்கெல்லாம் போனால், முட்டியைப் பெயர்த்துவிடுவார்கள். காரணம், அவர்களெல்லாம் உங்களுக்கு மேல் அறிவாளிகளாயிற்றே! அதனால்தான் இளிச்சவாய இந்தியாவுக்குள் எப்படியாவது திணிக்கப்பார்க்கிறீர்கள். எங்கள் ‘கைகளை’ பயன்படுத்தி, எங்கள் கண்களை குருடாக்கப் பார்க்கிறீர்கள்
-------------------------------------------------------------------------------
இது ஒரு பக்கம் இருக்கட்டும்... மரபணு மாற்றுப் பயிர்களில் உட்காரும், தேனீ, வண்ணத்துப்பூச்சிகள்... அவற்றிலிருக்கும் மகரந்தங்களுடன் அக்கம், பக்கத்து வயல்களுக்கும் சென்று.. அனைத்து வயல்களுக்கும் பரவிவிடும் என்று இதை உருவாக்கி உலவவிட்டிருக்கும் மான்சான்டோ நிறுவனமே கூறிக் கொண்டிருக்கிறது. இப்படி பரவியதால், அக்கம் பக்கத்து வயல் விவசாயிகளிடம், ‘என் தொழில்நுட்பத்தை திருடிவிட்டாய்’ என்று சொல்லி இந்த நிறுவனம் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வம்பிழுப்பது கூட நடந்திருக்கிறது. அப்படியென்றால், நாளைக்கு மரபணு மாற்றுப்பயிர் விளையும் காட்டுக்கு பக்கத்து காட்டு ராமசாமி, கோவிந்தசாமிகளின் நிலை என்னாவது.
-------------------------------------------------------------------------------
ஒரு கட்டத்தில் இங்கே இருக்கும் அத்தனை விதைகளும் இந்த மரபணு மாற்று மலட்டு விதைகளாக மாற்றப்பட்டுவிட்டால், இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் புழு, பூச்சி, பறவைகள் எல்லாம்... உணவுக்காக எங்கே போவது. இதற்கெல்லாம் பதில் சொல்லுங்கள் நோபல் பரிசு எனும் உலகமகா பரிசைப் பெற்றிருக்கும் விஞ்ஞானி திருவாளர் ராமகிருஷ்ணன் அவர்களே!
-------------------------------------------------------------------------------
‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ என்று இந்த பூமி, இங்கே வாழும் அனைத்துயிர்களுக்கும் சொந்தம். பகுத்துண்டு வாழும்போதுதான், இயற்கை சமநிலை தொடரும் என்பதை இவ்வளவு அழகாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லிச் சென்றிருக்கிறானே எங்களின் பாட்டன் வள்ளுவன், அவன் எந்த நோபல் பரிசையும் வாங்கவில்லை. ஒருவேளை, அதனால்தான் இப்படி சொல்ல முடிந்ததோ... என்னவோ?!
-------------------------------------------------------------------------------
விஞ்ஞானிகள் அல்ல... விவசாயிகள்!
‘காடுகளில் விளைந்து கிடைந்த தானிய வகைகளை தரம் பிரித்தது பயிரிட்டுதான் இந்த அளவுக்கு வளர்த்தெடுத்துள்ளோம்‘ என்றும் கூறியிருக்கிறார் இந்த விஞ்ஞானி ராமகிருஷ்ணன். அதையெல்லாம் செய்தது... மெத்தப்படித்த விஞ்ஞானிகள் கூட்டம் அல்ல. உங்கள் தாத்தன்... எங்கள் தாத்தன் என்று காலகாலமாக இங்கே வாழ்ந்த விவசாயிகள்தான். அவர்கள் ஒருபோதும் இயற்கைக்கு மாறாக எதையும் செய்யவில்லை. காடுகளில் கிடந்த பயிர்களைக் கண்டெடுத்து, நிலத்தை சீரமைத்து, அந்த இயற்கைக்கு எந்த இடைஞ்சலும் வராமல், பயிரிட்டு வளர்த்தெடுத்தார்கள். இதற்காக அரசாங்க சம்பளம், கம்பெனிகள் தரும்பணத்தில் வெளிநாட்டு உல்லாச சுற்றுலா... எதையும் அனுபவிக்கவில்லை. நாளைய தலைமுறை நஞ்சில்லா உணவை உண்ண வேண்டும்... பற்றாக்குறை இல்லாமல் விதைத்து, காலகாலத்துக்கும் உணவிட வேண்டும் என்கிற ஒற்றை நோக்கமே அவர்களிடம் இருந்தது. அப்படி அந்த விவசாயிகள் சேகரித்து வைத்த விதைகளுக்கு பெயரையும், நம்பரையும் கொடுக்கும் வேலையைத்தான் உங்களைப் போன்ற விஞ்ஞானிகள் செய்திருக்கிறீர்கள்.
-------------------------------------------------------------------------------
இயற்கையை கெடுக்காமல்... இயற்கை வேளாண்மை மூலமே... இன்னும் மூன்று உலகத்துக்கு வயிறு நிறைய சோறு போடமுடியும். ஆனால், இத்தகைய இயற்கை வேளாண்மை மூலமாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு பணம் கிடைக்காது... விஞ்ஞானிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கமிஷன் கிடைக்காது. அதனால்தான்... இயற்கைக்கு வேட்டு வைக்கும் விஷயங்களை மட்டுமே பரிந்துரை செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அதையேதான் இப்போதும் செய்திருக்கிறார்... வீரப்ப மொய்லி.
-------------------------------------------------------------------------------
இது நாற்பது, ஐம்பது ஆண்டுகளாகவே இங்கே தொடரத்தான் செய்கிறது. ‘வேடிக்கை பார்ப்பதைத் தவிர நாமென்ன செய்வது? என்றேதான் இருக்கப் போகிறோமோ?!
மரபணு மாற்றுப்பயிர்... களப் பரிசோதனைக்கு அனுமதி...!
march.3.2014
இந்தியாவில் சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் என்று மரபணு மாற்ற பயிர்களை களப் பரிசோதனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி, கோதுமை உள்ளிட்ட பயிர்களை களப் பரிசோதனை செய்வதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அமைச்சர் வீரப்ப மொய்லி அனுமதி வழங்கி வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார்.
இது முன்னேற்றத்துக்கு உதவும் என்றும் விவசாயத் துறை இதனால் மறுமலர்ச்சி அடையும் என்றும் ஏபிஎல்ஈ-ஏஜி என்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களின் சங்கம் கூறியுள்ளது.
---------------------------------------------------------------------------------
மான்சான்டோ, பேயர் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களும் ராசி சீட்ஸ், மஹிகோ உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களும் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. பன்னாட்டு நிறுவனங்களின் நலன் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இது குறித்த பல கவலைகளை கருத்தில் கொள்ளாமல் அவசர கதியில் அனுமதி தரப்பட்டுள்ளதாகவும் மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
வீரப்ப மொய்லி... ஒரு கார்ப்பரேட் கைக்கூலி!
வீரப்ப மொய்லி...
ஒரு கார்ப்பரேட் கைக்கூலி!
-------------------------------------------------------------------------------
மரபணு மாற்றபட்ட விதைகளின் களப்பரிசோதனைக்கு இந்தியாவில் இருந்து வந்த தடையை திடீர் என்று நீக்கி, கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருக்கிறார், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி. இதையடுத்து, 200 விதமான பயிர்களின் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கான பரிசோதனை களமாக இந்தியா மாறியிருக்கிறது.
-------------------------------------------------------------------------------
இந்த விஷயம் நாடுமுழுக்க இருக்கும் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவேசத்தின் உச்சத்தில் நின்றபடி, ''வீரப்ப மொய்லி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி'' என்று சீறியிருக்கிறார்... இயற்கை ஆர்வலர்களில் ஒருவரான பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் மகேஷ் பட்!
-------------------------------------------------------------------------------
''மரபணு மாற்றப்பட்ட விதைகள் என்பவை, இயற்கைச் சூழலை சிதைப்பவை. பாரம்பரியமாக இருக்கும் விதைகளையெல்லாம் ஒழித்துவிட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் விதைகளை மட்டுமே விவசாயிகள் வாங்க வேண்டும் என்கிற கட்டாயத்தை ஏற்படுத்துவதற்காகவே... மரபணு மாற்றப்பட்ட விதைகள் இங்கே திணிக்கப்படுகின்றன.
-------------------------------------------------------------------------------
ஏற்கெனவே 260 மில்லியன் டன் உணவு உற்பத்தி இங்கே நடக்கிறது. இதுவே இந்தியாவின் தேவைக்கு போதுமானதாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், உற்பத்தியை பெருக்குவதற்காகத்தான் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு அனுமதி என்று சொல்வது... கேலிக்குரியது.
-------------------------------------------------------------------------------
மரபணு மாற்றப்பட்ட விதைகள், மனித உயிர்களுக்கு கேடு விளைவிப்பவை. எனவே இவற்றை இந்தியாவில் அனுமதிப்பது என்பது, இந்தியர்களின் உயிருக்கு உலை வைப்பதற்கு சமம்.
-------------------------------------------------------------------------------
ஆனால், இது எதையும் கவனத்தில் கொள்ளாமல், அனுமதி கொடுத்திருக்கும் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கூலியாகவே எனக்குத் தோன்றுகிறார்'' என்று கடுமையாக விமர்ச்சித்துள்ளார் மகேஷ் பட்!
” நம்மாழ்வார் நினைவு இயற்கை வழி விவசாயப் பயிற்சி “
” நம்மாழ்வார் நினைவு இயற்கை வழி விவசாயப் பயிற்சி “
-------------------------------------------------------------------------------
வானகம், விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு நடத்தும்
-------------------------------------------------------------------------------
இயற்கை வேளாண்ஞானி
” நம்மாழ்வார் நினைவு இயற்கை வழி விவசாயப் பயிற்சி “
-------------------------------------------------------------------------------
பயிற்சியில் எளிய முறையில், தண்ணீர் பற்றாக்குறையை சமாளித்து இயற்கை வேளாண்மையில் சாதிப்பது எப்படி ? என்பதை பயிற்சி அளிக்க உள்ளோம். மேலும் கலப்பு முறையில் மரங்கள் வளர்ப்பது பற்றியும், ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் பல சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்படும்.
-------------------------------------------------------------------------------
பயிற்சியை மூடாக்கு இயற்கை விவசாயி ” அய்யம்பெருமாள் ” அவர்களும்,
வானகம் கல்விக்குழுவினர்களும் வழி நடத்துகிறார்கள்.
-------------------------------------------------------------------------------
நிகழ்ச்சியில் நம்மாழ்வார் ஐயாவின் ஒளித்தொகுப்பு திரையிடப்படும்.
-------------------------------------------------------------------------------
குறிப்பு :
-------------------------------------------------------------------------------
நம்மாழ்வார் ஐயாவின் புத்தகங்களும், DVD ( குறுந்தகடுகளும் ) கிடைக்கும்.
-------------------------------------------------------------------------------
அனுமதி இலவசம். மதிய உணவு வழங்கப்படும்.
-------------------------------------------------------------------------------
அனுமதி இலவசம். மதிய உணவு வழங்கப்படும்.
-------------------------------------------------------------------------------
நாள் : மார்ச் 16 ஞாயிற்றுக்கிழமை,
-------------------------------------------------------------------------------
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
-------------------------------------------------------------------------------
இடம் : பால அபிராமி திருமண மண்டபம், கிருஷ்ணாபுரம்,
இராஜபாளையம், விருதுநகர் மாவட்டம். ( தென்காசி செல்லும் வழி )
-------------------------------------------------------------------------------
மேலும் விபரங்கள் மற்றும் முன்பதிவிற்கு :
90472 73009, 97876 48002வானகம்,
விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு : 98431 27804
மீத்தேன் அரக்கன்! காவிரி டெல்டா பாலைவனமாகும் பயங்கரம்
பிரதமர் மன்மோகன்சிங் கடந்த ஆண்டு, 'விவசாயிகள், விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு வேறு வேலைகளுக்குச் செல்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்’ என்று சொன்னார். பொருளாதார மேதையின் அந்த வார்த்தைகளுக்கு ஆழமான பொருள் இருக்கிறது என்பது இப்போதுதான் புரிகிறது. மீத்தேன் வாயுத் திட்டம் என்ற பெயரில், வளம் மிகுந்த காவிரி டெல்டா படுகையை நரபலி கொடுத்து, சுமார் 50 லட்சம் உழவர்களை காவிரிப் படுகையில் இருந்து துரத்தியடித்து, தெற்கே ஒரு தார் பாலைவனத்தை உருவாக்கத் துடிக்கிறது மத்திய அரசு.
கற்பனைக்கு அப்பாற்பட்ட பிரமாண்ட பரப்பளவில் அறிவிக்கப்பட்டுள்ள மீத்தேன் வாயுத் திட்டம், தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைக் காவு வாங்கக் காத்திருக்கிறது. தாழடி, குருவை, சம்பா என்று பட்டம் பார்த்து வெள்ளாமை செய்த உழவர்கள், இன்று இருக்கும் நிலம் பறிபோகுமோ, ஊரைவிட்டுத் துரத்தி அடிப்பார்களோ என்று பதைபதைத்துக் கிடக்கிறார்கள். திட்டத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா பகுதி அடுத்த சில ஆண்டுகளுக்கான போராட்டக் களமாக மாறுவதற்கான அனைத்து அறிகுறிகளும் இப்போதே தென்படுகின்றன.
மீத்தேன் வாயுத் திட்டம் என்பது என்ன?
மீத்தேன் வாயு என்பது எரிவாயு மற்றும் மின் உற்பத்திக்குப் பயன்படுகிறது. இது பல்வேறு வடிவங்களில் நமக்குக் கிடைக்கிறது. சாண எரிவாயுகூட மீத்தேன்தான். பூமிக்கு மேலே கழிவுப்பொருள்களில் இருந்து மீத்தேன் கிடைக்கிறது. பூமிக்கு அடியில் பாறைப் பரப்பில் மீத்தேன் இருக்கிறது. அப்படி நாகை, திருவாரூர், தஞ்சாவூர்... ஆகிய மாவட்டங்களின் நிலப்பகுதியின் கீழ் ஏராளமான மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின் உற்பத்தி செய்யப்போவதாகவும் சொல்கிறது மத்திய அரசு. இதற்கான ஒப்பந்தம், ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great eastern energy corporation Ltd.) என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் என்றால் ஓரிரு ஆண்டுகளுக்கு அல்ல... அடுத்த 100ஆண்டுகளுக்கு!
பாகூர் தொடங்கி ராஜமன்னார்குடி வரையிலும் உள்ள 1,64,819 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிய இருக்கும் திட்டம் இது. இந்த நிலப்பரப்பின் கீழே சுமார் 6.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீத்தேன் வாயு இருப்பதாக தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம். இந்தத் தொகைக்காக இவ்வளவு பிரமாண்டமான நிலப்பரப்பைப் பலிகொடுக்கத் துணிவார்களா? இல்லை. அவர்களுக்கு வேறுவிதமான பிரமாண்ட நோக்கங்கள் இருக்கின்றன.
காவிரிப் படுகையின் கீழே மாபெரும் நிலக்கரிச் சுரங்கத்தைக் கண்டறிந்துள்ளனர். முதல் 35 ஆண்டுகளுக்கு மட்டும்தான் மீத்தேன் வாயு. அதைத் தொடர்ந்து மீதம் உள்ள ஆண்டுகளுக்கு நிலக்கரியைத்தான் அகழ்ந்து எடுக்க இருக்கிறார்கள். இவை அனைத்தும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் இணையதளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், செய்திகளில் மீத்தேன் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. இது ஏன் என்பதை விளக்குகிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த கும்பகோணம் இரணியன்.
''நிலக்கரிச் சுரங்கத்தின் பாறை இடுக்குகளில் உள்ள மீத்தேன் எரிவாயுவை எடுக்கவில்லை என்றால், தீ விபத்து ஏற்படுகிறது. இது நிலக்கரி அகழ்வைத் தாமதப்படுத்தி லாபத்தைக் குறைக்கிறது. இதை நிறுவனங்கள், தங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து உணர்ந்துள்ளன. ஆகவே, உள்ளே இருக்கும் மீத்தேன் எரிவாயுவை எடுத்தால்தான் தங்கு தடையின்றி நிலக்கரியை எடுக்க முடியும்.
இதில் என்ன பிரச்னையெனில், நாம் வயல்களில் போர்வெல் அமைப்பது போல மீத்தேன் எடுத்துவிட முடியாது. அதற்கு பூமிக்கும் கீழ் உள்ள பாறைப் பரப்பை உடைக்க வேண்டும். பூமியின் உள்ளே கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக் கரைசல்களை உயர் அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை உடைக்க வேண்டும். இதற்கு 'நீரியல் விரிசல் முறை’ (Hydraulic fracturing) என்று பெயர். இதற்கு முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் திட்டத்தையே செயல்படுத்த முடியும்.
நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டால், அப்புறம் என்ன இருக்கிறது? 35 ஆண்டுகள் இவர்கள் மீத்தேன் எடுத்து முடிப்பதற்குள் இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் நாசமாக்கப்பட்டு பூமியின் கீழ் ரசாயனக் கழிவுகள் செலுத்தப்பட்டு, பூமியின் மேலே நிலம் நஞ்சாகிவிடும். மக்கள் வேறு வழியே இல்லாமல் நிலங்களைப் பாதி விலைக்கு விற்றுவிட்டு வெளியேறுவார்கள். பிறகு, பெரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லாமல் நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவார்கள். இதுதான் அவர்களின் திட்டம்!
உடனடித் திட்டம் மீத்தேன் என்பதால், அதன் பெயரை மட்டும் வெளியில் சொல்கின்றனர். நமக்கும் இதை நிறுத்தினாலே அதையும் நிறுத்தியது போலதான் என்பதால் மீத்தேன் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்கிறோம். ஆனால், இந்த அரசும் நிறுவனங்களும் பிணந்தின்னி கழுகுகளைப் போல காவிரிப் பாசனப் பகுதியில் இருக்கும் மதிப்பிட முடியாத பணமதிப்புக்கொண்ட நிலக்கரிக்காக வலம்வந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் நயவஞ்சகத்தையும், இந்தத் திட்டத்தின் பிரமாண்டத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்!'' என்று ஆவேசமும் ஆற்றாமையுமாகப் பேசுகிறார் இரணியன்.
வெளிநாடுகளில் என்ன நடக்கிறது?
மீத்தேன் வாயு எடுக்கப்படும் உலகின் ஏனையப் பகுதிகளில் நிலவரம் என்ன என்று தேடிப்பார்த்தால், அதிர்ச்சியே மிஞ்சுகிறது!
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா... உள்ளிட்ட சில நாடுகளில் மீத்தேன் வாயு எடுக்கின்றனர். ஆனால், இந்த நாடுகள் அனைத்திலுமே மக்கள் அடர்த்தி குறைவு. மக்கள் வசிக்காத நிலப்பரப்பு அதிகம். ஆகவே, அப்படிப்பட்ட இடங்களில் அவர்கள் மீத்தேன் வாயுவை எடுக்கின்றனர். ஆனால், காவிரி டெல்டாவில் ஊரும் வயல்வெளியும் இணைந்தே இருக்கின்றன. தற்போது ஒப்பந்தம் பெற்றுள்ள கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம், காவிரிப் படுகையை அமெரிக்காவின் பவுடர் ரிவர் பேசின் (Powder River Basin) என்ற பகுதியின் மீத்தேன் படுகையுடன் ஒப்பிட்டுள்ளது.
அங்கு என்ன நிலை என்று பார்த்தால், மீத்தேன் வாயுத் திட்டம் வந்த பிறகு நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. நிலப்பகுதி, கடுமையான சூழல் கேடுகளுக்கு ஆளாகியுள்ளது. புதிய நோய்கள் மக்களைத் தாக்குகின்றன. வீட்டின் தண்ணீர்க் குழாயில் மீத்தேன் வாயுவும் சேர்ந்து வருகிறது. தண்ணீரைப் பற்றவைத்தால் எரிகிறது. ஏராளமான திடீர் தீ விபத்துகள் நடைபெற்றுள்ளன. இந்தத் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் போராடிவருகின்றனர்.
நம் ஊரைப் பொருத்தவரை ஏற்கெனவே நிலத்தரகர்கள் மூலமாக வேறு, வேறு பெயர்களில் வாங்கிய நிலங்களில் திடீர், திடீர் என வந்து குழாய் பதிக்கிறார்கள். 3 அடி விட்டம் உள்ள குழாயை 60 அடி ஆழத்துக்கும் சில இடங்களில் 500 அடி ஆழத்துக்கும் பதிக்கிறார்கள். வேதாரண்யம் அருகே 1,000 அடிக்கும் மேல் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதில் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எதுவும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு செய்யப்படுவது இல்லை என்பதால், அனைத்தும் மர்மம்தான். அதே நேரம் இந்தத் திட்டத்தின் அபாயம் குறித்த விழிப்பு உணர்வும் மக்களிடையே வேகவேகமாகப் பரவி வருகிறது.
குறிப்பாக, 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் உயிருடன் இருந்தபோது,
தனது கடைசி நாட்களை மீத்தேன் திட்ட எதிர்ப்பில்தான் செலவிட்டார். பல ஊர்களில் அவரது தலைமையில், மக்கள் குழாய்களைப் பிடுங்கி எறிந்தனர். இப்போதும் அது தொடர்கிறது. ஆனால் அரசாங்கமோ, மிகவும் கள்ளத்தனமாக ஒ.என்.ஜி.சி-யின் (Oil and Natural Gas Corporation) பெயரால் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்கிறது!
மீத்தேன் எதிர்ப்புத் திட்டக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயிலாடுதுறை பேராசிரியர் ஜெயராமனிடன் பேசியபோது...
''நாகை மாவட்டம் நரிமணம் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பெட்ரோலியம் எடுப்பது அனைவருக்கும் தெரியும். இப்போது பல இடங்களில் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கான குழாய் பதிப்பு வேலைகள், ஓ.என்.ஜி.சி-யின் பெயரில் நடைபெறுகின்றன. நரசிங்கம்பேட்டை, திருநகரி என்று பல இடங்களில் இப்படிச் செய்கிறார்கள். இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை ஓ.என்.ஜி.சி-யும், கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனமும் இணை செயற்பாட்டாளர்கள் (co-operators). ஆகவே, அவர்களுக்காக இவர்கள் ஆரம்பகட்டப் பணிகளைச் செய்து தருகின்றனர். அதனால் ஓ.என்.ஜி.சி. பெயரில் நடந்தாலும் அது மீத்தேன் திட்டத்துக்குத்தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார்.
ஏற்கெனவே மேற்கு வங்க மாநிலம் ராணிகஞ்ச் என்ற இடத்தில் நடைபெற்றுவரும் நிலக்கரி மற்றும் எரிவாயு அகழ்வுப் பணிகளில் ஓ.என்.ஜி.சி-யுடன், கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனமும் இணைந்துதான் செயல்பட்டு வருகிறது. அங்கு, மொத்தப் பணிகளில் 25 சதவிகிதத்தை கிரேட் ஈஸ்டர்ன் செய்கிறது. ஆனால், டெல்டா பகுதியில் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. செயல்பட்டு வருகிறது என்றபோதிலும், முழு திட்டமும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் இந்தத் திட்டத்தை தற்போதைய நிலையில் 'மன்னார்குடி பிளாக்’ என்று அழைக்கிறது.
காவிரிக்கும் மீத்தேனுக்கும் என்ன தொடர்பு?
இந்தத் திட்டத்தின் வேறொரு கோணத்தை விவரிக்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு.
''35 ஆண்டுகளில், 6.25 லட்சம் கோடி மதிப்புள்ள மீத்தேன் வாயுவை எடுக்க முடியும் என்கிறார்கள். ஆனால், ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பகுதியில் விளையும் நெல், உளுந்து, எள், பாசிப்பயறு, கடலை, கரும்பு, வாழை, கம்பு, சோளம் போன்ற பயிர்களின் பண மதிப்பைக் கணக்கிட்டால், அது எங்கேயோ இருக்கும். விவசாயத்தை நம்பி நடைபெறும் இதரத் தொழில்களையும், கால்நடைகளின் மதிப்பையும் சேர்த்துக் கணக்கிட்டால், 35 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 35 லட்சம் கோடி மதிப்புக்கு இங்கே விவசாயம் நடைபெறும். ஆகவே, லாபம் என்ற அடிப்படையில் பார்த்தாலும் இது மிகவும் முட்டாள்தனமான திட்டம்.
மேலும், இவர்கள் நிலத்தை சுமார் 6,000 மீட்டர் ஆழத்துக்கு அகழ்வு செய்ய அனுமதி பெற்றுள்ளனர். அதாவது பூமிக்கும் கீழே ஆறு கிலோமீட்டர் தூரத்துக்குத் துளை தோண்டி பாறைகளை உடைத்து, நிலத்தடி நீரை வெளியேற்றி மீத்தேன் எடுக்கப்போகின்றனர். அதன் பாதிப்பு யூகிக்க முடியாததாக இருக்கும். நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தின் பாதிப்பு சேர்வராயன் மலை வரையிலும் இருப்பதாகச் சொல்கின்றனர். எனில், இவர்களின் அகழ்வுப் பணியால் தஞ்சாவூர் பெரிய கோயிலும், கங்கைகொண்ட சோழபுரமும் சரிந்துவிழும் வாய்ப்பு இருப்பதை முற்றிலும் மறுக்க முடியாது'' என்று அதிரவைக்கிறார்.
திருநாவுக்கரசு குறிப்பிடும் மற்றொரு கோணம் மிகவும் முக்கியமானது. இந்தியாவின் வெவ்வேறு பிராந்தியங்களின் நதிநீர் சிக்கல்கள் சட்டபூர்வமாகவோ, பேச்சுவார்த்தைகள் மூலமோ, வளர்ச்சித் திட்டங்கள் மூலமோ தீர்த்துவைக்கப்படுகின்றன. ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி நீர் பிரச்னை மட்டும் ஏன் தீராத சிக்கலாகப் 'பராமரிக்கப்படுகிறது’? காவிரிப் படுகையில் பெட்ரோலியப் பொருள்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதற்கும், காவிரி நீர் கடைமடை வந்து சேராததற்கும் உள்ள இணைப்பு என்ன? 'இனிமேலும் விவசாயம் செய்து பிழைக்க முடியாது’ என இன்று உருவாகியுள்ள மனநிலை இயல்பானதா? விவசாயிகள் தாங்களாகவே விவசாயத்தைக் கைவிட்டு விலகிச் செல்லும் முடிவை எடுப்பதற்குப் பின்னால் அரசின் பாத்திரம் உண்டா, இல்லையா? இந்தக் கேள்விகள் முக்கியமானவை. இன்றைய சிக்கல்களை, ஒரு விரிந்த கோணத்தில் புரிந்துகொள்ள உதவுபவை. இப்போதைய நிலையில்கூட, நல்ல விலை கொடுத்தால் நிலத்தை விற்றுவிட பலர் தயாராக இருப்பதுதான் அவர்களின் பலம்!
தேர்தலுக்குப் பிறகு என்னவாகும்?
இந்தத் திட்டத்துக்காக, மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் 2,000 இடங்களில் கிணறுகள் அமைத்து அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். அதாவது, எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் மட்டுமே நிறைந்திருக்கும். மீத்தேன் வாயுக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாக வயல்வெளிகளில் பாய்ந்தோடும். இதற்காக ஒவ்வோர் இடத்திலும் ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர், ஐந்து ஏக்கர் என்று இடத்துக்குத் தகுந்தாற்போல நிலங்களை வாங்கியுள்ளனர். திட்டத்தின் செயல்பாடு தற்போது சற்றே மெதுவாக நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த மிதவேகம் தேர்தலுக்கானது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசின் அசுர பலத்துடன் திட்டம் செயல்படுத்தப்படும் வாய்ப்புகளே அதிகம்!
''அப்படித்தான் நாங்களும் யூகிக்கிறோம்'' என்ற பேராசிரியர் ஜெயராமன் இதன் அரசியல்
---------------------------------------------------------------------------
கோணத்தை விளக்கினார்.--
''இந்த மீத்தேன் வாயுத் திட்டத்துக்காக 2010-ல் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. 2011-ல் அப்போதைய மாநில தி.மு.க. அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 'மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி உள்பட அனைத்து அனுமதிகளையும் பெற்று நாங்களே திட்டம் செயல்படுத்துவதை உறுதி செய்வோம்’ என்றது அந்த ஒப்பந்தம். அதன் பிறகு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். திட்டத்துக்கு எதிர்ப்பு இருப்பதைப் பார்த்ததும் கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஒரு நிபுணர் குழுவை அமைத்து ஆராய்ந்து மூன்று மாதங்களில் அறிக்கை அளிப்பார்கள் என்று சொன்னார். அவர்கள் ஆராய்ந்தார்களா... இல்லையா? என்று தெரியாது. இன்னமும் அறிக்கை வரவில்லை. ஆனால், அந்த நிபுணர் குழுவில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையும் இருக்கிறது. அமெரிக்கா, நைட்ரஜன் குண்டு தயாரிக்க வைத்திருந்த வேதிப்பொருள்களை நைட்ரேட் உப்பாக்கி இங்கு கொண்டுவந்து பசுமைப் புரட்சி என்ற பெயரில் மண்ணை மலடாக்கியவர் சுவாமிநாதன். ஆகவே, அறிக்கையின் முடிவு எப்படி இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடிகிறது.
---------------------------------------------------------------------------
எங்களைப் பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சிகளுமே மக்களுக்கு விரோதிகளாகத்தான் செயல்படுகின்றன. நீதிமன்றங்கள்கூட அரசின் கொள்கை முடிவுகளை எதிர்ப்பது இல்லை. இப்போது நாங்கள் நம்பியிருப்பது மாபெரும் மக்கள் சக்தியை மட்டும்தான். குழாய் அமைக்கப்படும் ஒவ்வோர் ஊரிலும் 2,000 பேர் திரண்டு அதைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே எங்கள் திட்டம். ஏனெனில், அரசாங்கமும் சட்டமும் அதிகாரபூர்வமாக எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கின்றன. அதைத் தட்டிக்கேட்பது எங்கள் கடமை!'' என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார் அவர்.
---------------------------------------------------------------------------
கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் அலுவலகம் எதுவும் தமிழ்நாட்டில் இல்லாத நிலையில் அவர்கள் தரப்பின் விளக்கம் பெறுவதற்காக மின்னஞ்சல் வழியே தொடர்புகொண்டோம். 'விரைவில் உங்களைத் தொடர்புகொள்கிறோம்’ என பதில் வந்த நிலையில், இந்த இதழ் அச்சுக்குச் செல்லும் வரையிலும் எந்தப் பதிலும் வரவில்லை.
---------------------------------------------------------------------------
கருணாநிதி, திருவாரூர்க்காரர். அ.தி.மு.க-வில் மன்னார்குடிக்காரர்களின் ஆதிக்கம்தான் இன்னும் இருக்கிறது. இருந்தாலும் என்ன... பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாகத் தங்கள் சொந்த ஊர்களைக்கூட திறந்துவிடுவதில் இவர்களுக்கு சிறு தயக்கமும் இல்லை. ஆனால், உழவர்களைப் பொறுத்தவரை இது 'வாழ்வா, சாவா?’ போராட்டம். இதில் விட்டுக்கொடுத்தால் அநாதைகளாகப் பஞ்சம் பிழைக்க ஊர், ஊராகத் திரியவேண்டி இருக்கும். வண்டல் மண்ணின் வாசம் நிறைந்த மருத நிலத்தின் உழவர்கள், தங்களின் பல்லாயிரம் ஆண்டு கால விவசாயப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியைத் தக்கவைக்க நடத்தப்போகும் இறுதிப் போர் இது!
---------------------------------------------------------------------------
கூடங்குளம் தரும் படிப்பினை!
---------------------------------------------------------------------------
சமகாலத்தில் இதே மின்சாரத்தை முன்வைத்து நாம் எதிர்கொள்ளும் பெரும் போராட்டங்களில் ஒன்று கூடங்குளம். ஆனால், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக உண்ணாவிரதம் தொடர்ந்தாலும்கூட நோக்கத்தில் வெற்றி அடைய முடியவில்லை. மின் உற்பத்தியும் பகுதி அளவில் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் கூடங்குளம் போராட்டத்தில் இருந்து மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவினரும், டெல்டா பகுதி மக்களும் சில படிப்பினைகளைப் பெறவேண்டியது அவசியம்.
---------------------------------------------------------------------------
இதைப் பற்றி பேசிய பேராசிரியர் ஜெயராமன், ''மீத்தேன் திட்டத்தைப் பொறுத்தவரை, பரவலாக ஆயிரக்கணக்கான இடங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியாக வேண்டும். அந்தந்தப் பகுதி மக்களின் எழுச்சி இல்லாமல் இதை முறியடிக்க முடியாது. அதனால் மக்களிடம் இதுகுறித்த விழிப்பு உணர்வையும், இதன் அரசியல் நியாயத்தையும் எடுத்துச் செல்கிறோம். மேலும், போராட்டத்தை லாபகரமாக மாற்றவும் மக்கள் ஒற்றுமையைச் சிதைக்கவும் முயலும் என்.ஜி.ஓ. குழுக்களைத் தடுத்து நிறுத்துவதிலும் உறுதியாக இருக்கிறோம்!'' என்றார்.
---------------------------------------------------------------------------
கிராம மக்கள் செய்ய வேண்டியது என்ன?
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு மற்றும் மேலும் பல அமைப்புகள் சார்பில் டெல்டா பகுதிக் கிராமங்களில் தொடர்ச்சியான விழிப்பு உணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்கள்... கிராம மக்கள் செய்யவேண்டிய சில விஷயங்களைக் குறிப்பிடுகின்றனர்.
கிராமத்தினர் உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அவர்கள் உள்ளூரின் நில விற்பனையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
---------------------------------------------------------------------------
கனரக இயந்திரங்கள் குழாய் அமைக்க வரும்போது, 'அவர்கள் யார்?’, 'நோக்கம் என்ன?’ என்று விசாரிக்க வேண்டும். ஒருவேளை, சரியான தகவல் தெரிவிக்காமல் குழாய் அமைத்தால், மக்களைத் திரட்டி முடக்க வேண்டும்.
கிராமசபா கூட்டத்தில், 'எங்கள் கிராம எல்லைக்குள் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்’ என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
---------------------------------------------------------------------------
இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்பதை ஒரு வாக்குறுதியாகக் கொடுத்து, ஓட்டு வாங்க நினைக்கும் அரசியல்வாதிகளைப் புறக்கணிக்க வேண்டும்!
---------------------------------------------------------------------------
-பாரதி தம்பி
ஓவியங்கள்: ஹாசிப்கான், படங்கள்:கே.குணசீலன்
வங்கதேச ஆயத்த ஆடை நிறுவனங்களில் சோதனை
வங்கதேசத்தின் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனங்களில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்காவை சேர்ந்த துணி வாங்கும் நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில், ஒரு சில ஆலைகளில் தீ, பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு தொடர்பான பிரச்சனைகள் இருப்பதை கண்டறிந்துள்ளது.
'அக்கார்ட்' என்ற குடையின் கீழ் இந்த நிறுவனங்கள் கடந்த ஆண்டு முதல் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. வங்கதேசத்தில் கிட்டதட்ட ஐந்தாயிரம் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன.
-------------------------------------------------------------------------------------------------
78 ஆலைகள் 'அக்கார்ட்' அமைப்பின் சோதனைக்கு கீழே வருகின்றன். இவற்றில் 10 ஆலைகள் மீதான முதற்கட்ட அறிக்கையில், பாதுகாப்பு குறைப்பாடுகள் தொடர்பான பல்வேறு விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அதிகமாக பளு ஏற்றப்பட்ட கூரைப்பகுதிகள், வெளிப்படையாக தெரியும் ஒயர்கள், அடைக்கப்பட்ட அவசர கால வழிகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.
-------------------------------------------------------------------------------------------------
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரானா பிளாசாவில் ஏற்பட்ட விபத்தில் 1000 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர், பலர் தங்களது கைகால்களை இழந்திருந்தனர். இதனை தொடர்ந்து கிட்டதட்ட 22 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஆயத்த ஆடை தொழிற்துறையின் செயல்பாடுகள் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளன.
-------------------------------------------------------------------------------------------------
இதே போன்று 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மற்றுமொரு ஆலையில் இடம்பெற்ற தீ விபத்தில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.
-------------------------------------------------------------------------------------------------
உலகத்தின் மாபெரும் ஆடை பிராண்ட்களான ஹெச் அண்ட் எம், இண்டிடெக்ஸ் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 'அக்கார்ட்' அமைப்பில் சேர்ந்துள்ளன. இதன் மூலம் வங்கதேசத்தில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனங்களில் தீ மற்றும் கட்டிட பாதுகாப்பு வசதிகளை மேற்பார்வையிட இவை முடிவு செய்து கடந்தாண்டு மே மாதம் ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டன.
-------------------------------------------------------------------------------------------------
2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பாக கிட்டதட்ட 1500 ஆலைகளில் சோதனை மேற்கொள்ள இவர்கள் உத்தேசித்துள்ளனர். ஆலைகளில் தீவிரமான பாதுகாப்பு குறைப்பாடுகள் காணப்பட்டால், அவற்றை மூட இவர்கள் வங்கதேச அரசுக்கு பரிந்துரைக்க முடியும்.
சிகரங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட நேபாளம் திட்டம்
இமயமலைத் தொடரில், நேபாளத்திலுள்ள சில ஏறப்படாத மற்றும் தொலைதூரமான மலைச் சிகரங்களை, கட்டணம் வாங்கிக்கொண்டு தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவது என்ற புதுமையான திட்டம் பற்றி பரிசீலித்துவருவதாக நேபாள அரசு கூறுகிறது.
-------------------------------------------------------------------------
அறியப்படாத சில மலைச் சிகரங்கள் மீது மலையேறுவோருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வேலையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு வழிவகுக்ககூடிய இத்திட்டம் தற்போது விவாதிக்கப்பட்டு வருவதாக பேசிய நேபாள சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
-----------------------------------------------------------------------------------
உலகெங்கும் இருந்தும் ஆயிரக்கணக்கான மலையேற்ற ஆர்வலர்கள் ஒவ்வொரு ஆண்டும் நேபாளம் வருகிறார்கள்.
-------------------------------------------------------------------------------------------
அவர்களில் பெரும்பான்மையானோர், அதிகம் அறியப்பட்ட எவரெஸ்ட் போன்ற சிகரங்களிலேயே ஏறுவதால், குறிப்பிட்ட சில மலைகளில் கூட்டமும், குப்பைக்கூலமும் வாக்குவாதங்களும் சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டனுக்கு சீனாவில் இருந்து கணித ஆசிரியர்கள்
பிரிட்டிஷ் பள்ளிக்கூடங்களில் கணித தரத்தை வளர்ப்பதற்கான சிறப்புக் கல்வியை வழங்குவதற்காக சீனாவில் இருந்து ஆசிரியர்கள் கொண்டுவரப்படுகிறார்கள்.
---------------------------------------------------------------------------------------
பிரிட்டனின் கல்வி நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்படும் ஒரு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ஆங்கிலம் பேசக்கூடிய 60 ஆசிரியர்கள்வரை ஷங்காயில் இருந்து கொண்டுவரப்படுகிறார்கள்.
--------------------------------------------------------------------------------
இந்தத் திட்டத்தின் கீழ் சீனாவில் உள்ள பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியர்கள், கணிதம் கற்றுக்கொடுக்கும் நுணுக்கங்களை மேலும் அறிந்துகொள்வதற்கும் வழி செய்யப்படும்.
--------------------------------------------------------------------------------------------
சர்வதேச மட்டத்திலான கணிதப் பரீட்சைகளில் ஷாங்காய் மாணவர்கள் மிகவும் அதிகமான பேறுகளைப் பெறும் அதேவேளையில், பிரிட்டன் மாணவர்கள் மிகவும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மலேசிய விமான மர்மம் தொடர்கிறது
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போய் 5 நாட்கள் ஆகிய பின்னரும்கூட அதனைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், தேடுதல் குழுக்கள் மலே வளைகுடாவின் இரு பக்கத்திலும், அவற்றின் தேடுதல் பரப்பை அதிகரித்துள்ளன.
-------------------------------------------------------------------------------------------
வியட்நாமுக்கு தென்கிழக்கே 300 கிலோமீட்டர்கள் தொலைவில் வானில் ஒரு எரியும் பொருளை தான் பார்த்ததாக பெட்ரோல் அகழ்வுப் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------
ஆனால், அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்ட வியட்நாமிய விமானங்களால் எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
-------------------------------------------------------------------------------------------------
கோலாலம்பூரில் இருந்து பீஜிங்குகுக்கு சென்று கொண்டிருந்த தனது பாதையில் இருந்து அந்த விமானம் திரும்பி வர முயற்சித்ததா என்பதை உறுதி செய்ய முடியாது இருக்கும் நிலையில், மலே வளைகுடாவின் மேற்குப் பகுதிக்கு தமது தேடுதல் முயற்சிகளை மாற்றி உள்ளதாக மலேசிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முக்கியமான தருணத்தில் இந்த காணொளியை வெளியிடுவது பத்திரிகையாளரின் கடமை: கெலம் மக்ரே
முக்கியமான தருணத்தில் இந்த காணொளியை வெளியிடுவது பத்திரிகையாளரின் கடமை என்று சனல்4 ஊடகவியலாளர் கெலம் மக்ரே தெரிவித்துள்ளார். இந்திய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-------------------------------------------------------------------------------------------------
அண்மையில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ உண்மையானதுதான் என்பதில் சந்தேகம் இல்லை. வீடியோவை கொடுத்தவரையும் சந்தேகப்பட முடியாது. வீடியோவில் உள்ள படங்களை வீடியோ நிபுணர்களிடம் கொடுத்து சுயேச்சையான வழியில் ஆய்வு செய்து நம்பகத்தன்மையை உறுதி செய்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
-------------------------------------------------------------------------------------------------
இந்த வீடியோ வெளியான நேரமும் அமெரிக்க கொண்டு வந்துள்ள தீர்மானம் மீது வாக்களிக்க உள்ள நாடுகளில் வீடியோ வெளியானதும் தற்செயல் நிகழ் வாகும். அண்மையில்தான் வீடியோ கிடைத்தது. அதன் நம்பகத்தன்மையை பரிசோதிக்க சில காலம் பிடித்ததாகவும் மக்ரே தெரிவித்தார்.
-------------------------------------------------------------------------------------------------
ஐநா மனித உரிமை பேரவைக் கூட்டத்தின் போது இதை வெளியிடுவதை தலைகுனிவான செயலாக நான் பார்க்கவில்லை. முக்கியமான தருணத்தில் இதை வெளியிடுவது பத்திரிகையாளரின் கடமை என்றார் மெக்ரே.
-------------------------------------------------------------------------------------------------
சீருடை அணிந்த நபர்கள் சடலங்கள் மீது ஏறி சிங்களத்தில் பேசியபடி கொண்டாடுவது பதிவாகி இருக்கிறது. பெண் விடுதலைப்புலிகளின் சடலங்கள் இவை என விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் சிறுவர்கள் மீதான பாலியல் துஸ் பிரயோகங்களுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்:-
வடமாகாணத்தில் அண்மை காலமாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பெண்கள் சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு எதிராக நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நெல்லியடி நகர பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டமும் கவனயீர்ப்பு போராட்டமும் நடைபெறவுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------
தமிழர் பிரதேசத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பாலியல் துஸ்பிரயோகங்கள் தற்கொலைகள் மதுபோதை பாவனைகள் சட்டவிரோத பணக்கொடுங்கல் வாங்கல் வன்முறைகள் போன்றவற்றுக்கு எதிராக விழிப்பூட்டும் இக்கவனயீர்ப்பு போராட்டம் அரசியலுக்கு அப்பால் பொதுநோக்கத்தை அடிப்படையாக கொண்டு நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
-------------------------------------------------------------------------------------------------
வடமாராட்சி பொதுமக்களின் ஏற்பாட்டில் நடைபெறும் இக்கண்டன ஆர்பாட்டம் வடமாகணசபை உறுப்பினர் எஸ்.சுகீர்தன் தலைமையில் நெல்லியடி நகரில் ஆரம்பித்து கரவெட்டி பிரதேச செயலகத்தில் நிறைவடையவுள்ளது. அங்கு கரவெட்டி பிரதேச செயலாளர் எஸ். சிவசிறி மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் இ.த.ஜெயசீலன் ஆகியோர் ஊடாக மாவட்ட அரச அதிபரிற்கு மகஜர்கள் கையளிக்கபடவுள்ளது. அத்துடன் வடமாகண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடமாகண பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு மகஜர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------
இக் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வடமராட்சி பிரதேச செயலகங்கள். பிரதேச சபைகள் மற்று மற்றும் வர்த்தக சங்கங்கள் மற்றும் மகளிர் அமைப்புக்கள் மற்றும் அரச,அரச சார்பற்ற நிறுவனங்கள்.பொது அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
-------------------------------------------------------------------------------------------------
அண்மையில் வீதியால் ஒட்டோவில் பயணித்துக் கொண்டிருந்த யுவதியொருவர் கடத்தி செல்லப்பட்டு மூவரால் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் இதுவரை பொலிஸாரால் கைதாகியிருக்கவில்லை. இதன் தொடர்ச்சியாகவே இவ்வார்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனந்தி சசிதரன் ஜெனீவாவில் கூட்டங்களை நடத்தி வருகின்றார்
வட மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஆனந்தி சசிதரன் ஜெனீவாவில் கூட்டங்களை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு சமாந்தரமாக இந்த சந்திப்புக்கள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
கடந்த மாதத்திலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக இவ்வாறான சந்திப்புக்களை ஆனந்தி சசிதரன் நடத்தியுள்ளார். இறுதிக் கட்ட யுத்தம் மற்றும் வடக்கு மக்கள் பற்றி விடயங்கள் தொடர்பில் அவர் ராஜதந்திரகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். குறிப்பாக வடக்கு பெண்களின் நிலைமை குறித்து இராஜதந்திரிகளுடன் சந்திப்பு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் எச்சரிக்கைக்கு அடி பணிந்ததாக இலங்கை?
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் எச்சரிக்கைக்கு அடி பணியும் வகையில் இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்யாவிட்டால், கொழும்பில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளை தொடர முடியாது ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்திருந்தார்.
------------------------------------------------------------------------------------------------
இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு சில மணி நேரங்களில் இலங்கை அரசாங்கம் 116 இந்திய மீனவர்களை விடுதலை செய்துள்ளது.
------------------------------------------------------------------------------------------------
ஊர்காவற்துறை நீதவான் லெனின் குமார் இன்றைய தினம் 116 இந்திய மீனவர்களையும், 27 படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.
------------------------------------------------------------------------------------------------
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 177 மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
------------------------------------------------------------------------------------------------
இவர்களில் 116 மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
------------------------------------------------------------------------------------------------
கடந்த சில மாதங்களாக இலங்கைக்குள் அத்து மீறி பிரவேசித்து மீன்பிடித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த அரசாங்கத்தை நானே காப்பாற்றினேன் - ரணில்
இந்த அரசாங்கத்தை தாமே காப்பாற்றியதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதனை தாம் தவிர்த்ததாகத் தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நடைபெற்ற கட்சி கொள்கைப் பிரகடன வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனத்தில் கையொப்பமிட்டிருந்தால் இன்று இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச ரீதியாக வழக்குத் தொடரப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.தாம் பிரதமராக பதவி வகித்த காலத்தில் குறித்த பிரகடனத்தில் கைச்சாத்திடுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்ட போதிலும் தாம் அதiனை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-----------------------------------------------------------------------------------------------
படையினரை மட்டுமன்றில் படையினரின் கௌரவமான தொழிலையும் தாம் பாதுகாத்து கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய ஆற்றல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுமே காணப்படுகின்றது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரபாகரனுக்கு நேர்ந்ததே ஹக்கீமிற்கும் நேரும் மேர்வின் எச்சரிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நேர்ந்ததே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் நேரும் என பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டுக்கு எதிராக துரோகம் இழைப்பவர்களுக்கு பிரபாகரனின் தலைவிதியே காத்திருக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். களனில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போத அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.பொருத்தமில்லாத உரைகளை ஆற்றி மக்களிடையே இன முரண்பாடுகளை உருவாக்க வேண்டாம் என கோரிக்கை விடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
----------------------------------------------------------------------------------------------
வாயை மூடிக்கொண்டு அமைச்சுப் பதவியை காப்பாற்றிக்கொள்வதே ஹக்கீம் செய்ய வேண்டிய புத்திசாதூரியமான காரியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சந்திரிக்கா அரசாங்கத்தை கவிழ்ததனைப் போன்று இந்த ஆட்சியையும் கவிழ்க்க முடியும் என அமைச்சர் ஹக்கீம் அண்மையில் குறிப்பிட்டிருந்தாகவும், அவ்வாறான சாத்தியங்கள் எதுவும் கிடையாது எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
----------------------------------------------------------------------------------------------
ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே தேவை என்ற போதிலும், ஜனாதிபதிக்கு 160 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகள் மற்றும் இனத்தவர்களையும் ஜனாதிபதி ஒரே விதமாக நடாத்தி வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
----------------------------------------------------------------------------------------------
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் எவரேனும் ஆதரவினை விலக்கிக் கொண்டால் அது அரசாங்கத்தை பாதிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு எதிராக செயற்பட்டால் பிரபாகரனுக்கு நேர்ந்த கதியே நேரும் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)















