Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, December 24, 2013

இசையமைப்பாளர் இளையராஜா மருத்துவமனையில் அனுமதி

இளையராஜா பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தில் பாடல் இசையமைப்பில் ஈடுபட்டிருந்தபோது, இன்று 23 ஆம் தேதி அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்ப்பட்டதால் அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவருக்கு மிதமான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ‘இசைஞானி’ என்ற பெயரில் அழைக்கப்படும் 70 வயதான இளையராஜா, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி அகிய மொழிகளில் பல ஆயிரம் திரைப்படப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் 28ஆம் தேதி, மலேசியாவில் நடைபெறவிருக்கும் ஒரு கலை நிகழ்ச்சியில் அவர் பங்குபெறுவதாக எதிர்ப்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தெற்கு சூடான்: போலீஸ் நிலையத்துக்குள் 200 பொதுமக்கள் சுட்டுக்கொலை

ஐநா வளாகங்களில் சுமார் 45 ஆயிரம் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளனர் தெற்கு சூடானில் மோசமான கொடூரங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன. ஒருவாரத்துக்கு முன்னர் அங்கு வெடித்த இன வன்முறைகளில் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இருநூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்றை நேரில் பார்த்த மூன்று சாட்சிகள் தன்னிடம் பேசியுள்ளதாக ஜூபாவில் உள்ள செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார். இவர்களில் பெரும்பாலானவர்கள் நியூர் இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். அனைவரையும் போலீஸ் நிலையம் ஒன்றுக்குள் தள்ளிவிட்டு, அவர்களை அரசபடையினர் சுட்டுக்கொன்றதாக நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர். அண்டையிலுள்ள கிராமங்களுக்குள் நுழைந்த ஆயுததாரிகள், வீடு வீடாகச் சென்று டின்கா இனக்குழுவைச் சேராதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடித் தேடி சுட்டுக்கொன்றதாக இன்னொருவர் கூறினார். இதுதவிர, நாடெங்கிலும் உள்ள ஐநா அலுவலக வளாகங்களில் சுமார் 45 ஆயிரம் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளனர். தெற்கு சூடானில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர். அதிகாரபூர்வமான கணக்குகளின்படி, 500 பேர் வரை உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், உயிரிழப்பு எண்ணிக்கை அதனைவிட அதிகம் என்று தொண்டுநிறுவனங்கள் கூறுகின்றன.

இராமேசுவரம் கடற்தொழிலாளர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் தாக்குதல்!

கடலில் வீழ்ந்த சிறீலங்கா படையினை காப்பாற்றவில்லை என கூறி சிறீலங்கா கடற்படையினர் தமிழக கடற் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். சிறீலங்கா கடற்படையினர் வழக்கம் போல கடல் எல்லையில் நேற்று ரோந்து சுற்றி சென்று கொண்டிருந்தனர். அப்போது, கப்பற்படைக்கு சொந்தமான படகில் இருந்த படையினன் வீரர் தவறி கடலில் விழுந்து விட்டார். அப்போது அந்த பகுதியில் மீன்பிடிக்க வந்த ராமேசுவரம் மீனவர்கள் படையினனை காப்பாற்ற முயற்சி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மீனவர்கள் 4 பேர் மீது சிறீலங்கா கடற்படையினர் திடீரென்று தாக்குதல் நடத்தினர். அப்போது, மீனவர்களின் படகை சேதப்படுத்தியும், அவர்கள் வைத்திருந்த வலையை கிழித்தும், மீனவர்களின் மீது கற்களை எறிந்தும் தாக்குதல் நடத்தினர். இதில் 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் தற்போது, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சி டெல்லி முதல்வராகிறார் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகார குழு நேற்று காலை கூடியது. இதில் மக்களின் விருப்பத்தை ஏற்று காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியின் பேரவை தலைவராக கெஜ்ரிவால் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவரது தலைமையிலேயே ஆட்சி அமைக்கவும் அரசியல் விவகார குழு முடிவு செய்தது.இதையடுத்து, கவர்னர் நஜீப் ஜங்கை நேற்று பிற்பகல் 12.30மணிக்கு கெஜ்ரிவால் சந்தித்தார். அப்போது, அவரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார். அதை பெற்று கொண்ட் கவர்னர், ‘அரசு அமைப்பது பற்றிய பரிந்துரையை ஜனாதிபதிக்கு அனுப்புவதாகவும், ஜனாதிபதியிடமிருந்து அனுமதி வந்தவுடன், ஆட்சி அமைக்கலாம் என்றும் கெஜ்ரிவாலிடம் கவர்னர் தெரிவித்தார். பின்னர், கவர்னர் மாளிகையிலிருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மக்களின் கருத்தை கேட்ட டெல்லி முழுவதும் 280 பொது கூட்டங்கள் நடத்தினோம். 257 தெருமனை கூட்டங்கள் நடத்தினோம். இதில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் தெரிவித்தனர். கட்சியின் அரசியல் விவகார குழுவும் ஆட்சியமைக்க முடிவு செய்தது. இதையேற்று கவர்னரை சந்தித்து ஆட்சிஅமைக்க உரிமை கோரியுள்ளோம். நாங்கள் நடத்தும் ஆட்சி, மக்களின் ஆட்சியாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். நாங்கள் யாரிடமும் ஆதரவு கேட்கவில்லை. ஆதரவை வாபஸ் பெற்றால் தேர்தலை சந்திக்க எப்போதும் நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார். கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க ஜனாதிபதி இன்று அனுமதியளிப்பார் என்று தெரிகிறது. இதையடுத்து, 26ம் தேதியன்று முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்பார் என்று தெரிகிறது. ராம்லீலா மைதானத்தில் மக்கள் முன்னிலையில் பதவியேற்பு விழாவை நடத்த கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.

முத்திரைத்தாள் அச்சகத்தில் பல்வேறு பணியிடங்கள்

கொல்கத்தா அருகே அலிப்பூரில் உள்ள மத்திய அரசின் முத்திரைத்தாள் அச்சகத்தில் முத்திரைத்தாள், ரூபாய் நோட்டுகள், பாஸ்போர்ட்கள், ஸ்டாம்ப் பேப்பர்கள், தபால் தலைகள், நாணயங்கள் ஆகியவை அச்சிடப்படுகின்றன. இந்த அச்சகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். 1. ஜூனியர் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்: 18 இடங்கள். தகுதி: 55 சதவீத மதிப்பெண் களுடன் ஏதேனும் ஒரு பட்டம். ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 40 வார்த்தை கள் கம்ப்யூட்டரில் டைப் செய்யும் திறன். 2. சீனியர் பெர்சனல் அசிஸ்டென்ட்: 1 இடம் தகுதி: முதல் வகுப்பு தேர்ச்சியில் ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும், ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப் செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். 3. ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர்: 1 இடம் தகுதி: இந்தி அல்லது ஆங்கிலத்தில் முதுநிலை பட்டம். இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கும் அதுபோல் ஆங்கிலத்திலிருந்து இந்திக்கும் ஓராண்டு மொழி பெயர்ப்பு செய்த முன்அனுபவம் இருக்க வேண்டும். 4.பாதுகாப்பு அதிகாரி: 1 தகுதி: ஏதேனும் ஒரு டிரேடில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சி அல்லது தொழில் பாதுகாப்பு பாடத்தில் டிகிரி/டிப்ளமோ/ சான்றிதழ் படிப்பு மற்றும் ஏதேனும் ஒரு தொழிற்சாலையில் உற்பத்தி/ மேலாண்மை பிரிவில் 3 ஆண்டுகள் முன்அனுபவம். 5. சூபர்வைசர்: (டெக்னிக்கல்). (மெக் கானிக்கல்&2, எலக்ட்ரிக்கல்&1, எலக்ட்ரானிக்ஸ்&1). 4 இடங்கள். தகுதி: சம்பந்தப் பட்ட டிரேடில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சி. 6. உதவி கண்காணிப் பாளர்: 3 இடங்கள். தகுதி: முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் இன்ஆர்கானிக் பாடத்தில் முதுநிலை பட்டம் மற்றும் சம்பந்தப் பட்ட துறையில் 2 ஆண்டு முன்அனுபவம். 7. சூபர்வைசர் (டிசைனிங் மற்றும் என்கிரேவிங்). 10 இடங்கள். தகுதி: பைன் ஆர்ட்ஸ்/விஷூவல் ஆர்ட்ஸ்/அப்ளைடு ஆர்ட்ஸ்/ கமர்ஷியல் ஆர்ட்ஸ் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதல் வகுப்பு தேர்ச்சியில் 3 ஆண்டு டிப்ளமோ. கொல்கத்தா, புதுடெல்லி, மும்பை, ஐதராபாத் ஆகிய இடங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர்கள் https://jobapply.in/igmkolkata என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி: Post Box.No: 3076, Lodi Road, NEW DELHI- 110 003. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.12.2013. பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 26.12.2013.

பொக்காரோ மின்உற்பத்தி நிறுவனத்தில் வேலை

ஜார்கண்ட், பொக்காரோ ஸ்டீல் நகரத்தில் உள்ள பொக்காரோ நீர் மின் உற்பத்தி நிறுவனத் தில் ஆபரேட்டர் மற்றும் டெக்னீசியன், அட்டென்ட் கம் டெக்னீசியன் ஆகிய பணிகளுக்கு தகுதியானவர்களிட மிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி விவரம்: 1. ஆபரேட்டர் கம் டெக்னீசியன் (டிரெய்னி): மொத்த இடங்கள்: 42 2. அட்டெண்டென்ட் கம் டெக்னீசியன் (டிரெய்னி): மொத்த இடங்கள்: 12 ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://www.bpscl.in/ இணையதளத்தை பார்க்கவும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.01.2014.

நியூசிலாந்து தொடர்: 20 ஓவர் போட்டியில் கெய்ல்

வெஸ்ட்இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல். கடந்த மாதம் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இவர் காயம் அடைந்தார். இதன் காரணமாக எஞ்சிய போட்டி மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடவில்லை. 26-ந்தேதி தொடங்க இருக்கும் 5 ஒருநாள் தொடரிலும் ஆடவில்லை. இதற்கிடையே நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் கிறிஸ்கெய்ல் விளையாட வாய்ப்பு இருப்பதாக அணியின் பயிற்சியாளர் கிப்சன் தெரிவித்துள்ளார். இரண்டு 20 ஓவர் போட்டி ஜனவரி 11 மற்றும் 15-ந்தேதி நடக்கிறது.

பிப்ரவரி 12-13ல் ஐ.பி.எல். ஏலம்: ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்க வைக்கலாம்

அடுத்த வருடம் நடைபெற உள்ள 7-வது ஐபிஎல் போட்டிக்கான ஏற்பாடுகளில் ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு சுறுசுறுப்பாக இறங்கியுள்ளது. அடுத்த ஆண்டுக்கு அணிகளின் சம்பள உச்சவரம்பு 60 கோடியாக ஆக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியும் தங்களின் பழைய வீரர்களில் ஐந்து பேரை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற புதிய விதிமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அணிகளின் செலவு உச்சவரம்பு 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளுக்கு 5 சதவீதம் உயர்த்தப்படும். வீரர்கள் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்கள். அதேசமயம் மேலும் ஒரு ஆண்டோ அல்லது இரண்டு ஆண்டுகளோ ஒப்பந்தத்தை நீட்டித்துக்கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 15-ம் தேதிக்கு முன்னதாக இந்த ஒப்பந்த நீட்டிப்பு செய்யப்படவேண்டும். முதல் 5 வீரர்கள் தவிர மற்ற வீரர்களை ஏலத்தின் மூலம் அணியினர் தீர்மானித்துக் கொள்ளலாம். இந்த ஐந்து வீரர்களின் சம்பளம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிலையாகத் தீர்மானிக்கப்படும். இதன்படி இந்த ஐவரில் முதல் நிலையில் இருக்கும் வீரர் மூன்று ஆண்டுகளுக்கு 12.5 கோடி சம்பளம் பெறுவார். இரண்டாவதாக வருபவர் 10.5 கோடியும், மூன்றாவது வீரர் 7 கோடியும், நான்காவது வீரர் 5 கோடியும், ஐந்தாவது வீரர் 4 கோடியும் பெறுவார்கள். அணிகளின் சம்பள உச்சவரம்பு 60 கோடியாக நியமிக்கப்பட்டுள்ளதால் இந்த ஐந்து பேருக்கும் 39 கோடி கொடுத்தது போக மீதமிருக்கும் 21 கோடியில்தான் அவர்கள் மற்ற வீரர்களுக்கு ஏலத்தொகையை நிர்ணயிக்க வேண்டும். இதனால் ஒரு அணியினால் ஐந்து முதல் நிலை வீரர்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியாது. தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகு மேற்கண்ட விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஐபிஎல் வீரர்கள் ஏலம் பிப்வரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஏலம் நடைபெறும் இடம் விரைவில் அறிவிக்கப்படும். ஒவ்வொரு அணியும் 16 வீரர்களுக்கு குறையாமலும், 27 வீரர்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்றும், வெளிநாட்டு வீரர்கள் 9 பேர் வரை இருக்கலாம் என்றும் ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெங்களூர் பெல் நிறுவனத்தில் இன்ஜினியர், சூபர்வைசர்கள்

விஜயவாடாவில் உள்ள திட்ட மற்றும் கட்டிடக்கலை கல்வி மையத்தில் கல்வி மற்றும் நிர்வாகத் துறை பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி விவரம்: கல்வி பணி: 1. திட்டம்: பேராசிரியர்&1, இணை பேராசிரியர்&2, உதவி பேராசிரியர்&4. 2. கட்டிடக்கலை: பேராசிரி யர்&4, இணை பேராசிரி யர்&8, உதவி பேராசிரியர்&11. ஆ. நிர்வாக பணி: துணை பதிவாளர்&1, உதவி பதிவாளர்&2, பிரிவு அலுவலர்&4, உதவி நூல கர்&1, தனி செயலாளர்&1, கிராபிக் டிசைனர்/சீனியர் டெக்னிக்கல் அசிஸ் டென்ட்&1, அக்கவுன்டென்ட் &1, பெர்சனல் அசிஸ் டென்ட்&1. மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, முன்அனுபவம் உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.spav.ac.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.01.2014.

இனஅழிப்பின் இன்னொரு வடிவம் கட்டாயக் கருக்கலைப்பு

சிறீலங்கா அரசாங்கம் தமிழர் தாயகத்தில் மேற்கொண்டு வருகின்ற இன அழிப்பின் உச்சக்கட்டம் தற்போது அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. அதுதான் தமிழ்ப் பெண்களுக்கான திட்டமிட்ட, கட்டாயப்படுத்தப்பட்ட கருத்தடை முறைமையாகும். தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த காரணத்தாலேயே அவர்கள் தங்களுக்கு எதிராக போராடினார்கள் என்று நம்புகின்ற சிங்களம், தமிழ் மக்களின் எண்ணிக்கையில் பாரிய மாற்றங்களைச் செய்தால் அவர்களின் பலத்தைக் குறைக்கலாம் என்று கருதுகின்றது. அந்தக் கருத்தியலின் அடிப்படையிலேயே சிங்களம் இன்று தமிழ் மக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு மிகவும் தீவிரமாகவும் இரகசியமாகவும் நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆனால், அந்த இரகசியம் தற்போது பரகசியமாகியிருக்கின்றது. தமிழ் மக்களின் எண்ணிக்கையைக் குறைக்கின்ற திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைக்கு என்றே சிங்கள அரசாங்கம் குறிப்பிட்டளவான மருத்துவர்களைத் தெரிவுசெய்து களமிறக்கியிருக்கின்றது என்று கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னரே ஈழமுரசு சுட்டிக்காட்டியிருந்தது. ஆனால், அது குறித்து எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இந்த விடயத்தில் வாய்மூடி மௌனியாக இருந்தனர். அதன் பின்னரே கிளிநொச்சி மாவட்டம் மலையாளபுரத்தில் 50 வரையான பெண்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. அந்தக் கருத்தடைக்குப் பின்னர்தான் இந்த விடயம் சிறிது பேசப்படும் பொருளாக மாறியிருக்கின்றது. இது விரைவில் மறக்கப்படவும் கூடும். தமிழர் தாயகப் பிரதேசத்தில் திட்டமிட்ட கருத்தடையை மேற்கொள்வதற்கு என்று குறிப்பிட்டளவான மருத்துவ குழாம் ஒன்று வடக்கில் களமிறக்கப்பட்டுள்ளது. சிங்கள மருத்துவர்கள் மட்டுமன்றி தமிழ் மருத்துவ அதிகாரிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இந்த மருத்துவர் குழாம் உண்மையிலேயே இராணுவப் புலனாய்வுத்துறை போன்றது. ஏன், அவர்களைவிட ஆபத்தானவர்கள் என்றுகூடச் சொல்லாம். இவர்கள் தமது செயற்பாடுகள் முழுவதையும் மிகவும் இரகசியமாக வைத்திருக்கின்றனர். ஏனைய மருத்துவர்களுடன் சாதாரணமான மருத்துவர்கள் போன்று பழகுகின்ற இந்த கருத்தடை மருத்துவக் குழுவானது, தமிழ் மக்களுக்கு நன்மை செய்வது போன்று நடித்து தமது கைங்கர்யத்தை நிறைவேற்றுகின்றது. அதாவது, மிகவும் கஸ்டப்பட்ட கிராமங்களில் குடும்பத் திட்டமிடல் என்ற பெயரிலேயே இந்தக் கருத்தடை முறைமை அமுல்படுத்தப்படுகின்றது. ஒரு குடும்பத்தில் இரண்டு, மூன்று குழந்தைகள் இருந்தால் அவர்களை வளர்ப்பதில் கஷ்டம் என்பதைக் காரணம் காட்டி நீங்கள் குழந்தைகளைப் பிற்போட முடியும் தானே. ஏன் கஸ்டப்படுகின்றீர்கள் என்று தாய்மாருக்கும் தந்தையர்களுக்கும் ஆலோசனை என்ற பெயரில் அவர்களின் மனங்களில் நஞ்சூட்டப்படுகின்றது. மருத்துவர்கள் தானே அவர்கள் எங்களுக்கு நன்மைக்கு தானே சொல்கிறார்கள் என்று நம்புகின்ற அப்பாவி மக்கள், கருத்தடைக்கு உடன்படுகின்றார்கள். இப்படியாக அந்தக் கிராமத்தில் பல தாய்மார்களை ஒன்று திரட்டி ஒரேயடியாக கருத்தடை செய்யப்படுகின்றது. இந்த நடைமுறைகளே அண்மையில் வன்னியில் பூநகரி, மலையாளபுரம் மற்றும் யாழ்ப்பாணத்தில் கோப்பாய், உரும்பிராய் ஆகிய இடங்களில் நடைபெற்றிருக்கின்றது. கிளிநொச்சி மலையாளபுரத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் சுமார் 50 பெண்களுக்கு அவர்களுடைய கணவர்மாரின் அனுமதிகள் பெறப்படாமல் கட்டாய கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இதில் சதீஸ்குமார் மஞ்சுளா (வயது 26) என்ற ஒரு பிள்ளையின் தாயார் உயிரிழந்துள்ளார். இவர் கர்ப்பமடைந்திருந்த நிலையிலும் அதனை துளியளவேனும் கணக்கெடுக்காத சிங்களக் கைக்கூலி மருத்துவர்கள், அந்தப் பெண்ணுக்கு கருத்தடை செய்து பின்னர் அவரைக் கொலை செய்துள்ளனர். இதற்கு முன்னதாக பூநகரியிலும் கட்டாய கருத்தடை இடம்பெற்றிருக்கின்றது. இதனை விட யாழ்ப்பாணத்தில் கோப்பாய், உரும்பிராய், மருதங்கேணி ஆகிய இடங்களிலும் கட்டாய கருத்தடை இடம்பெற்றுள்ளது. இவையனைத்தும் காதுக்கு எட்டிய செய்திகள். ஆனால், தெரியாமல் இன்னும் பல இடங்களில் ஏராளமான தமிழ்ப் பெண்களுக்கு கட்டாய கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியமான அதேவேளை கவலைக்குரிய விடயம் என்னவென்றால், ஒரேயரு குழந்தையுடைய இளம் தாய்மார்கள் பலரும் இந்தக் கருத்தடைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். 23 தொடக்கம் 28 வயதுடைய இளம் தாய்மாருக்கு ஏற்கனவே ஒன்றோ இரண்டோ குழந்தைகள் இருக்கின்ற நிலையில் அவர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு குழந்தைகள் பிறக்காதவாறான கருத்தடை முறைகள் செய்யப்படுகின்றன. இது தற்காலிக கருத்தடையே என்றும் ஐந்து வருடங்களுக்கு பின்னர் குழந்தைகள் பிறக்கும் என்றும் கூறியே இந்தக் கருத்தடைகள் இடம்பெறுகின்றன. ஆனால், 28 வயதில் உள்ள ஒரு தாய்க்கு ஏற்கனவே ஒரு குழந்தைதான் உண்டு என்ற நிலையில் அவருக்கு கருத்தடை செய்யப்பட்டால் அவர் மற்றைய குழந்தையை 33 வயதில்தான் பெறவேண்டும். இது சாத்தியப்படுமா? அப்படி சாத்தியப்படுத்தினால்கூட அவர் ஒரு குழந்தையை மட்டுமே பெற்றுக்கொள்வார். இதனைவிட சாதாரண தாய் ஒருவர் என்றால் அவர் ஏறத்தாழ ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுப்பார். ஆனால், கருத்தடை செய்யப்பட்டால் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுடன் நிறுத்த வேண்டிய நிலையே ஏற்படும். தமிழர் பிரதேசத்தை எடுத்துக்கொண்டால் நகரப்புறத்தில் வாழ்கின்றவர்கள் அரச உத்தியோகம் மற்றும் பல வேலைகளின் நிமித்தம் இரண்டு அல்லது மூன்று குழந்தைகளை மட்டுமே பெற்றெடுப்பர். ஆனால், கிராமங்களில் உள்ள தாய்மாரே ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வர். கிராமங்கள்தான் தமிழ் மக்களின் சனத்தொகையை மேல்நிலைப்படுத்துகின்றன. இதனால்தான் தற்போது சிங்களத்தின் இராஜதந்திரம் மூலமாக கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு கருத்தடைகள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக, வன்னியின் சில இடங்களில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் மூலம் திடுக்கிடும் உண்மைத் தகவல்கள் தெரியவந்துள்ளன. அதாவது, ஆய்வுக்குப்படுத்தப்பட்ட அந்தக் கிராமங்களில் கடந்த 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் முன்பள்ளி அல்லது தரம் 1 வகுப்பில் படிக்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை 38 ஆக இருந்தது. ஆனால், அதாவது, 2012 மற்றும் 2013 ஆகிய காலப்பகுதிகளில் அதே தரம் ஒன்று வகுப்பிற்கு 15 தொடக்கம் 18 வரையான பிள்ளைகளே இணைந்திருக்கின்றனர். இதிலிருந்தே தமிழ் மக்களின் பிறப்பு வீதம் எப்படி குறைக்கின்றது, எப்படிக் குறைக்கப்பட்டிருக்கின்றது என்ற உண்மை தெரியவருகின்றது. இவையனைத்தும் திட்டமிட்ட கருத்தடை மூலம் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களேயாகும். இந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் சத்தியலிங்கம் சிறிலங்கா அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற போர்வையில் செயற்பட்டுவருகின்றார். மலையாளபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்தடைச் செயற்பாடு கட்டாயப்படுத்தி இடம்பெறவில்லையென்றும் தாய்மாரின் ஒப்புதலுடனேயே இடம்பெற்றது என்றும் கருத்துக் கூறியிருக்கின்றார். ஆனால், குறித்த கருத்தடைப் பிரச்சினை பெரிதாகியதைத் தொடர்ந்து அதனை விசாரிப்பதற்கென்று இவரால் நியமிக்கப்பட்ட குழுவானது, மலையாளபுரத்தில் கருத்தடை செய்யப்பட்ட 50 பேரிடமும் இவரின் ஆலோசனையின் பேரில் கடிதங்களைப் பெற்றுக்கொண்டிக்கின்றது. குறித்த கருத்தடையானது கட்டாயத்தின் பேரில் இடம்பெறவில்லையென்று எழுதப்பட்ட கடிதங்களில் தாய்மாரின் ஒப்பம் பெறப்பட்டிருக்கின்றது. ஆனால், இந்தக் கடிதத்தையே அந்தக் குழு தங்களைக் கட்டாயப்படுத்தியே பெற்றுக்கொண்டதாக தாய்மார் தெரிவிக்கின்றனர். ஆக, வடமாகாண சுகாதார அமைசர் மருத்துவர் சத்தியலிங்கம் சிறிலங்கா அரசுக்கு துணைபோய்விட்டார் என்பது துலாம்பரமாகத் தெரிகின்றது. இதையே வடக்கு மாகாண மக்களும் கூறுகின்றனர். தமிழ் மக்களைக் களையெடுப்பதற்காக காலத்திற்கு காலம் தமிழ் அடிவருடிகளில் சிலரை கோடரிக்காம்புகளாகப் பயன்படுத்துவதில் சிங்கள தேசம் வெற்றி கண்டு வருகின்றது. அந்த வகையில் இன்று சத்தியலிங்கத்தை சிங்களம் தனது வலைக்குள் விழுத்தியிருக்கின்றது. எனவே, நாங்கள் அனைவரும் இந்த விடயத்தில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். எமது தமிழ் மக்களின் செயற்பாடுகளில் 95 வீதத்திற்கு மேலானவை புலம்பெயர் தேசத்தில் இருந்தே நடைமுறைப்படுத்தப்படுவதாக மகிந்த ராஜபக்ச கூறுவது போன்று புலம்பெயர் தேசத்து மக்கள் தான் எமது மக்களைத் தயார்படுத்த வேண்டும். நீங்கள் இங்கே தாயகத்திலிருக்கின்ற உங்கள் உறவுகளுடன் உரையாடுகின்றபோது சிறிலங்கா அரசின் இந்த கபடத்தனத்திற்கு துணைபோக வேண்டாம் என்று எடுத்துக்கூறுங்கள். எங்கள் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் வெற்றி பெறுகின்ற நிலை வரும் என்பதில் அனைவரும் உறுதியாக இருக்கின்றோம். அப்படி விடுதலை கிடைக்கின்ற போது நாங்கள் பலமானவர்களாக இருக்க வேண்டும். இல்லையேல் சிங்கள தேசம் மீண்டும் எமது இறைமையில் கைவைக்க எத்தனிக்கும். இதனை முறியடிப்பதற்கு நாங்கள் எங்கள் உறவுகளைத் தயார்படுத்துவோம். அத்துடன் நாங்களும் இந்த விடயத்தில் மிக விழிப்பாக இருப்போம். - தாயகத்தில் இருந்து வீரமணி

ராஜபக்ஷவை சர்வதேச போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் – பழ.நெடுமாறன்

ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமானவர்களை வரும் மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கேட்டுக் கொண்டார். மதுரை புதூர் அருகே மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற மனித உரிமை மாநாட்டில், “இலங்கையில் மனித உரிமை மீறலும், ஐக்கிய நாடுகள் சபை செயல்பாடும்´ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை: இலங்கையில் போர் முடிந்த நிலையிலும், வடக்கு மாகாணம் தொடர்ந்து ராணுவக் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக கருத்துத் தெரிவிக்க அச்சப்படுகின்றனர். புதிதாக தேர்வான இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவே பயிற்சி அளிக்கிறது. இலங்கை வடக்கு மாகாண புதிய முதல்வர் விக்னேஷ்வரனை அங்குள்ள இலங்கை ராணுவ ஆளுநர் முடக்கி வைக்கிறார். இதனால், பதவியை ராஜிநாமா செய்யவும் விக்னேஷ்வரன் முடிவு செய்துள்ளார். அதனால், தனக்கு சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்படும் என அஞ்சியுள்ள இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ, வடக்கு மாகாண முதல்வரை சமரசம் செய்து வருகிறார். முதல் உலகப் போரில் ஹிட்லரின் நாஜிப்படைகள் செய்த படுகொலையை சர்வதேச சங்கம் கண்டுகொள்ளவில்லை. இதனால் அது பின்னர் கலைக்கப்பட்டது. ஆகவே, ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக்க சர்வதேச சமூகம் முன்வராவிட்டால், ஐக்கிய நாடுகள் சபைக்கும் சர்வதேச சங்கத்தின் கதியே ஏற்படும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ராஜபக்ஷவைக் கண்டிக்கும் நிலையில், காமன்வெல்த் மாநாட்டுக்குச் சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரோ ராஜபக்ஷவை குனிந்து வணங்கியது சரியல்ல. வரும் மார்ச்சில் ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவை சர்வதேசப் போர்க் குற்றவாளியாக அறிவித்து தீர்மானம் கொண்டுவர வேண்டும். ஆனால், இந்தியாவை மிகப் பெரும் சந்தையாக கருதுவதால், மேலை நாடுகள் இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட தயங்குகின்றன. ஆகவே, ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமானவர்களை வரும் மக்களவைத் தேர்தலில் தோற்கடிப்பது அவசியம். அப்போதுதான் எதிர்காலத்தில் உலகத் தமிழர்களைப் பாதுகாக்க முடியும் என்றார். இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மன்னார் திருக்கேதிஸ்வரத்தில் 10 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்பு!

மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் இது வரை 10 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் இரண்டாவது நாளாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை மனித புதை குழி தோண்டப்பட்டு மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்து குறித்த பகுதியில் நேற்று சனிக்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் மனித புதைகுழிகள் தோண்டும்; பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை தோண்டப்பட்ட போது மூன்று மனித மண்டையோடுகளும்,ஏனைய பாகங்களும் மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மன்னார் காவல்துறையினர் குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின் மன்னார் நீதவான் மற்றும்; சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட புதை குழி தோண்டப்பட்டது.இதன் போது மேலும் சிதைவடைந்த நிலையில் துண்டு துண்டுகளாக மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை மேலும் இரண்டு மண்டையோடுகளும்,மனித எச்சங்களும் மீட்கப்பட்டது.இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாவது நாளகவும் மன்னார் நீதவான் முன்னிலையில் மனித புதைகுழி தோண்டப்பட்டது. இதன் போது மேலும் பல மண்டையோடுகளும் மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளது.இது வரை 10 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.மேலும் பல மனித எச்சங்கள் அப்பகுதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் பல மனித எச்சங்கள் மீட்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகினறது. இன்று காலை 10 மணிமுதல் 12 மணிவரை மனித புதை குழி தோண்டப்பட்ட நிலையில் தற்போது குறித்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.குறித்த மனித புதை குழி தோண்டும் பணிகள் நாளை திங்கட்கிழமை மீண்டும் மன்னார் நீதவான் முன்னிலையில் இடம் பெறவுள்ளது.தற்போது குறித்த பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை பெரியகோவிலில் ராஜராஜன் நுழைவு வாயில் கோபுர விரிசல் சீரமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ராஜராஜன் நுழைவுவாயில் கோபுரத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைப்பது தொடர்பாக தொல்லியல் துறை அதிகாரிகள் நேற்றும் ஆய்வு செய்தனர். தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், உள்ளூர் பக்தர்களும் வந்து பார்வையிட்ட வண்ணம் உள்ளனர். இந்த கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் வழியில் கேரளாந்தகன் கோபுரம், ராஜராஜன் நுழைவு வாயில் கோபுரம் உள்ளது. இதில் ராஜராஜன் நுழைவு வாயில் கோபுரத்தின் உட்புற மேல்பகுதியில் உள்ள தூணில் விரிசல் காணப்பட்டது. மேலும் கோபுரத்தின் விரிசல் பகுதியில் இருந்து மழைநீரும் ஒழுகியது. இது குறித்து தொல்லியல் துறை தஞ்சை பெரியகோவில் பராமரிப்பு உதவியாளர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொல்லியல் துறை உயர் அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். மேலும் இந்த பணி ரூ.1 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் தொல்லியல் துறை அதிகாரிகள் பணிகள் மேற்கொள்ள வேண்டிய விரிசல் பகுதி, நீர் ஒழுகும் இடத்தையும் வரைபடம் தயாரிப்பது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் ராஜராஜன் நுழைவு வாயில் கோபுரத்தில் ஏறி ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் பணி மேற்கொள்ளவேண்டிய இடத்தை வரைபடமாக வரைந்தனர். உயர் அதிகாரிகளுக்கு அனுப்புவதற்காக இந்த வரைபடம் தயாரிக்கும் பணி நடைபெற்றது. மேலும் இந்த பணிகள் மேற்கொள்வதற்காக சாரம் அமைப்பது தொடர்பாகவும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரையில் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரில் போலி பிறப்பு சான்று வெளியானது எப்படி?: அதிகாரிகள் விசாரணை

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. அதில் வக்கீல்கள் சிலர், கலெக்டரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் மாநகராட்சி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும், அதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். மேலும் டெல்லி முதல் மந்திரியாக பொறுப்பேற்க இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் மதுரையில் பிறந்ததாக மாநகராட்சி போலி பிறப்பு சான்றிதழ் வழங்கி உள்ளதாகவும் குற்றம் சாட்டினர். அந்த போலி பிறப்பு சான்றிதழையும் கலெக்டரிடம் வழங்கினர். இது குறித்து வக்கீல்கள் கூறும் போது, கோர்ட்டில் உள்ள எங்களது அறையில் இந்த போலி பிறப்பு சான்றிதழை யாரோ போட்டு விட்டுச் சென்று விட்டனர். எனவே இதனை நாங்கள் கலெக்டரிடம் வழங்கினோம் என்று கூறினர். அந்த போலி பிறப்பு சான்றிதழில் உள்ள தகவல்கள் விவரம் வருமாறு:– அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 27.12.1970–ல் பிறந்ததாகவும், அவருடைய தந்தை பெயர் ராம்ஜி ராவ் கெய்க்வாட், தாயார் கீதா தேவி என்றும், அவர் பிறப்பின் போது பெற்றோர் இருந்த வீட்டு முகவரி நம்பர் 27, கற்பக நகர், கோ.புதூர் - 625007 என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. நிரந்தர முகவரி என்று ராம்வர்மா நகர், புதுடெல்லி என்று உள்ளது. இந்த சான்றிதழ் 07.03.2012 அன்று பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த போலி பிறப்பு சான்றிதழில் எந்த அதிகாரியின் கையெழுத்தும் இல்லை. அதே போல் பிறப்பு சான்றிதழுக்கு மாநகராட்சி பயன்படுத்தும் முத்திரை அல்லாமல், போலியான வேறொரு முத்திரை உள்ளது. இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து அறிந்த மாநகராட்சி கமிஷனர் கிரண்குராலா உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விசாரணை நடந்தது. விசாரணையின் போது, அந்த சான்றிதழ் மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு நடந்தது. ஆனால் இந்த பெயரில் மாநகராட்சியில் எந்த பதிவும் இல்லை என தெரியவந்தது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘அரவிந்த் கெஜ்ரிவால் மதுரையில் பிறந்ததாக மாநகராட்சியில் எந்த பதிவும் இல்லை. ஆனால் மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே சிலர் இந்த போலி சான்றிதழை தயாரித்து உள்ளனர்’’ என்றார்.

ஏலம் போனது அரிய ஒலிம்பிக் பதக்கம்

மிகவும் சர்ச்சைக்குரிய பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க தடகள வீரர் ஜெஸ்ஸி ஓவன்ஸ் வென்ற ஒரு தங்கப் பதக்கம் சுமார் ஒன்றரை மில்லியன் டாலருக்கு ஏலம் போயுள்ளது. 1936 ஆம் ஆண்டு, ஜெர்மனி, ஹிட்லரின் ஆட்சியின் கீழ் இருந்தபோது, நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கறுப்பின அமெரிக்கரான ஜெஸ்ஸி ஓவன்ஸ் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார்.
ஏலத்தில் போன பதக்கம். மிகவும் சர்ச்சைக்குரிய பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க தடகள வீரர் ஜெஸ்ஸி ஓவன்ஸ் வென்ற ஒரு தங்கப் பதக்கம் சுமார் ஒன்றரை மில்லியன் டாலருக்கு ஏலம் போயுள்ளது. 1936 ஆம் ஆண்டு, ஜெர்மனி, ஹிட்லரின் ஆட்சியின் கீழ் இருந்தபோது, நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கறுப்பின அமெரிக்கரான ஜெஸ்ஸி ஓவன்ஸ் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார்.
சாதனையாளர் ஜெஸ்ஸி ஓவன்ஸ் அந்த ஒலிம்பிக் போட்டியில் அவர் ஆடவருக்கான 100,200 மீட்டர் ஓட்டங்களில் மட்டுமல்லாமல், 400 மீட்டர் தொடரோட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகியவற்றிலும் தங்கப் பதக்கம் வென்றார். அந்தப் பிரிவுகளில் ஜெர்மன் வீரர்கள் வெள்ளிப் பதக்கமே பெற முடிந்தது. ஒரு தனி மனிதராக, ஆரிய மேலாதிக்கதை அவர் தகர்த்தெறிந்தது ஹிட்லரை பெரிதும் கோபாவேசத்துக்கு உள்ளாக்கியது. தனிப்பெரும் சாதனை பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் ஓவன்ஸ் நான்கு தங்கப் பதக்கங்களை வெல்வதற்கு முன்னர், வேறு எவரும் அப்படியொரு சாதனையை படைத்தது இல்லை. அவ்வகையில் அந்தச் சாதனை 1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டியில் கார்ல் லீவிஸ் சமன் செய்யும் வரை தனிப்பெரும் ஒரு சாதனையாக திகழ்ந்தது. இணையதளத்தின் மூலம் விறபனையான இந்தப் பதக்கம் மட்டுமே அவர் பெற்ற நான்கில் இப்போது இருக்கும் ஒன்றே ஒன்று. எனினும் இப்போது விற்பனையாகியுள்ள அந்தப் பதக்கம் அவர் எந்தப் போட்டியில் வென்றது என்பது தெரியவில்லை. நிலக்குத்தகைதாரரின் மகனும், ஒரு அடிமையின் பேரனுமான அவர் 1936 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப் பதக்கத்தை வென்ற பிறகு நாடு திரும்பிய பிறகும், நிறவெறிக் கொள்கை காரணமாக புறக்கணிக்கப்படுவதும், வேலைக்காக சிரமப்படும் நிலையும் ஏற்பட்டது. அந்த ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று நாடு திரும்பினாலும், அடுத்த மூன்றாண்டுகளில் திவாலாகிவிட்டதாக அவர் அறிவிக்கும் நிலை ஏற்பட்டது. அவர் மிகுந்த சிரமத்தில் இருந்தபோது அவரை ஆதரித்த தனது நெருங்கிய நண்பரும் நடனக் கலைஞருமான பில் போஜாங்கில்ஸ் ராபின்சனுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அந்தப் பதக்கமே இப்போது கலிஃபோர்னியாவில் ஏலம் போயுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான ஒரு நினைவுப் பொருள் இந்த அளவுக்கு அதிக தொகைக்கு இதுவரை ஏலத்தில் சென்றதில்லை.
பெர்லினில் அளிக்கப்பட்ட தங்கப் பதக்கங்கள்

கிரிக்கெட் வீரர் ஸ்வான் 'திடீர் ஓய்வு'

உலகின் ஒரு முன்னணி சுழற்பந்து வீச்சாளரான இங்கிலாந்தின் கிரேம் ஸ்வான் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சர்வதேசப் போட்டிகள் மற்றும் முதல்தரக் கிரிக்கெட் போட்டிகள் அனைத்திலிருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக ஸ்வான் கூறியுள்ளார்.
கிரேம் ஸ்வான் ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடிவரும் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள ஸ்வானின் இந்த அறிவிப்பு பல்தரப்பில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடரில் இங்கிலாந்து முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்து, ஆஷஸ் பட்டத்தையும் இழந்துள்ளது. ஐந்து போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் மேலும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ளன. ஸ்வான் இதுவரை விளையாடியுள்ள 60 டெஸ்ட் போட்டிகளில் 255 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த பந்துவீச்சாளர்கள் எடுத்துள்ள விக்கெட்டுகளின் அடிப்படையில் ஸ்வான் ஆறாவது இடத்தில் இருக்கிறார். கடந்த 2010 ஆம் ஆண்டு, 20 ஓவர்களைக் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெல்வதற்கு ஸ்வானின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அதேபோல இங்கிலாந்து அணியை டெஸ்ட் தரப்பட்டியலில் முதலிடத்துக்குக் கொண்டு செல்வதிலும் கிரேம் ஸ்வான் முக்கிய பங்காற்றியிருந்தார்.

கறுப்பின விளையாட்டு வீரர்களின் முன்னோடி ஜாக் ஜான்சன்

உலகளவில் கறுப்பின மக்களுக்கு விளையாட்டுத் துறையில் ஒரு பெரிய ஏற்றத்தையும் கௌரவத்தையும் பெற்றுத்தந்த ஜாக் ஜான்ஸன் நிறவெறிக் கொள்கை காரணமாக ஒரு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு நூறாண்டுகள் ஆகின்றன
ஜாக் ஜாக்சன் அமெரிக்காவைச் சேர்ந்த ஜாக் ஜான்சன் 1908 ஆம் ஆண்டு உலகளவில் ஹெவி வெயிட் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் கறுப்பினத்தவர் என்கிற பெருமையை பெற்றார். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 1913 ஆண்டு, அந்தக் காலகட்டத்தில் நிறவெறிக் கொள்கை காரணமாக, வெள்ளையின மக்களும் கறுப்பின மக்களும் தனித்தனிப் பகுதிகளில் வாழ்ந்து வந்தபோது, ஜாக் ஜான்சன் ஒரு வெள்ளையினப் பெண்ணுடன் எல்லையக் கடந்து சென்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்டார். ஒருதலைப்பட்ச தண்டனை வெள்ளையின மக்கள் மட்டுமே ஜூரிகளாக இருந்த அந்த வழக்கு விசாரணையில், அவர் தார்மீகமில்லாத வழிகளுக்காக வெள்ளையினப் பெண் ஒருவருடன் அவர்கள் வாழும் பகுதிக்கு சென்றார் என்று கூறி, அவருக்கு ஓரண்டும் ஒரு நாளும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நடைபெற்று நூறாண்டுகளாகியுள்ள நிலையில், அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் சம உரிமைகள் பெற்று, விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளில் பெரும் சாதனைகளைப் படைத்துள்ளனர். சிறு வயது முதலே குத்துச் சண்டையில் ஆர்வம் கொண்டிருந்த ஜாக் ஜான்சன் தனது இருபதாவது வயதிலேயே தொழில்முறை குத்துச் சண்டை வீரராக மாறினார். ஆனாலும் நிறவெறிக் கொள்கை காரணமாக, உலக ஹெவி வெயிட் பட்டத்துக்கான போட்டியில் பங்குபெற அவர் பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்தப் போட்டியை நிறவெறிக் கொள்கை காரணமாக சிட்னியில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போட்டியில் நடப்பு சாம்பியனாக இருந்த கனடாவின் டாமி பர்ண்ஸை அவர் எதிர்கொண்டார். 1908 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில், அவர் பர்ண்சை துவம்சம் செய்துவிட்டார். காவல்துறையினர் வந்து போட்டியை தடுத்து நிறுத்தும் அளவுக்கு ஜாக்சன் வெள்ளையினத்தவரான பர்ண்ஸை தனது குத்துக்களால் வீழ்த்தியிருந்தார். கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள் உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் தரம் குறைந்தவர்கள் என்று வெள்ளையின மக்களால் ஏற்படுத்தப்பட்டிந்த மாயையை இந்த வெற்றி தகர்த்தெரிந்தது. பின்னாளில் முகமது அலி உட்பட பல கறுப்பின மக்கள் குத்துச் சண்டை விளையாட்டில் ஈடுபடுவதற்கு ஜாக் ஜான்சன் பெரிய உந்து சக்தியாக இருந்தார். 1946 ஆம் ஆண்டு ஒரு வாகன விபத்தில் அவர் காலமானாலும், அவர் விட்டுச் சென்ற பாரம்பரியம் இன்றும் உலகளவில் ஆளுமை செலுத்துகிறது

கனடாவில் மோசமான வானிலை காரணமாக கடும் பாதிப்புகள்

கனடாவின் க்யூபெக் மாகாணத்தில் கடும் பனிபொழிவைக் காட்டும் படம் கனடாவின் கிழக்குப் பகுதி மற்றும் அமெரிக்காவின் பல பகுதிகளில் உறையவைக்கும் கடும் பனிப்பொழிவு மற்றும் கடும் மழையின் காரணமாக லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதிகளில் சுமார் ஒன்பது லட்சம் வீடுகளிலும் வர்த்தக நிறுவனங்களிலும் மின்சாரம் தடைபட்டுள்ளது. கனடாவின் மிகப்பெரும் நகரான டொரண்டோவில் உள்ள சுமார் பத்து லட்சம் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில், கால்வாசி அளவிலான இடங்களில் மின்சாரம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிப்புப்புகள் அந்த இடங்களுக்கு மீண்டும் மின்விநியோகத்தை ஏற்படுத்த 72-மணிநேரம் வரை ஆகும் என்று கருதப்படுகிறது. அந்நகரின் ட்ராம் சேவைகளும், பகுதியளவில் பாதாள ரயில் சேவைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த கடும் பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக டொரண்டோ, ஒட்டாவா மற்றும் மொண்டிரியோல் நகரங்களிலுள்ள விமான நிலையங்களில் பிரயாணிகள் வெளியேற முடியாமல் மாட்டிக்கொண்டுள்ளனர். அந்த விமான நிலையங்களில் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாக புறப்பட்டுச் செல்கின்றன

கலாஷ்னிக்கோவ் துப்பாக்கியை உருவாக்கியவர் காலமானார்.

தனது கண்டுபிடிப்புடன் கலாஷ்னிகோவ் கலாஷ்னிக்கோவ் துப்பாக்கியை கண்டுபிடித்தவரான மிகெயில் கலாஷ்னிக்கோவ் மரணமடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் கூறுகின்றன. அந்தத் தாக்குதல் துப்பாகியை உருவாக்கிய அவருக்கு வயது 94. மிகவும் வறிய ஒரு குடும்பத்தில், 17 பேர்களில் ஒருவராக ரஷ்யாவின் அல்டாய் மலைப் பகுதியில் 1919 ஆண்டு கலாஷ்னிக்கோவ் பிறந்தார். எனினும் அவரது துப்பாக்கி முன்னாள் சோவியத் யூனியனில் மட்டுமல்லாமல், வார்சா உடன்படிக்கை நாடுகள் மற்றும் ரஷ்யாவின் மிக முக்கியமான ஆயுதமாகத் திகழ்ந்தது. கலாஷ்னிக்கோவ் அவர்களின் வடிவமைப்பை ஒட்டி தயாரிக்கப்பட்ட, பல லட்சக் கணக்கான துப்பாக்கிகள் உலகம் முழுவதும் தயாரித்து விற்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.

தெற்கு சூடான் மக்களை கைவிட மாட்டோம்: ஐநா அதிகாரிகள்

ஐநா வளாகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ளனர் தெற்கு சூடான் மக்களை கைவிட்டு விடப்போவதில்லை என அங்குள்ள ஐநா அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கடந்த ஒருவார காலமாக நடந்துவரும் இன வன்முறைகளின் தொடர்ச்சியாக, அங்கு சிவில் யுத்தமொன்று ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. ஐநா வளாகத்துக்குள் தஞ்சமடைந்துள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இப்போதைக்கு பாதுகாப்பாக இருப்பதாக ஜூபா நகரில் உள்ள ஐநா பேச்சாளர் ஜோசப் கோண்டராஸ் கூறுகிறார். ஜூபாவை அண்டியுள்ள பல பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேறிவிட்டனர். மக்கள் உகாண்டாவின் எல்லையை நோக்கி இடம்பெயர்ந்துவருகின்றனர். அதிபர் சல்வா கீயரின் படையினருக்கும் அவரது எதிர்ப்பாளர் ரீக் மஷாருக்கு விசுவாசமான படையினரும் மோதி வருகின்றனர். தெற்கு சூடானின் எல்லாப் பகுதிகளுக்கும் இந்த மோதல் பரவியுள்ளமை குறிப்பிட்டதக்கது.