Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, January 7, 2014

ஆம் ஆத்மி முடிவு உ.பி.யில் 80 இடங்களில் போட்டியிட திட்டம்

லக்னோ : வரவிருக்கும் மக்களவை தேர்தலில் 20 மாநிலங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது ஆம்ஆத்மி கட்சி. அமேதியில் ராகுலுக்கு எதிராக தனது கட்சியின் குமார் விஸ்வாஸை நிறுத்த முடிவு செய்துள்ளது.இதுகுறித்து செய்தியாளர்களிடம் அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங் கூறியதாவது: ஆம்ஆத்மியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. 20 மாநிலங்களில் போட்டியிட உள்ளோம். இதற்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் தங்கள் விபரங்களை எங்களுக்கு ஜனவரி 15 க்குள் அனுப்பவேண்டும். அந்த தொகுதியில் குறைந்தது 100 பேராவது வேட்பாளரை சிபாரிசு செய்யவேண்டும்.உ.பி.யில் உள்ள 80 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அமேதியில் ராகுல் காந்தியை எதிர்த்து குமார் விஸ்வாஸ் போட்டியிடுவார். எம்.பி., எம்.எல்.ஏ,க்களின் தொகுதி நிதிகளை கிராம சபைகளுக்கு பிரித்து தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் எங்கு, எப்படி செலவிடப்படுகிறது என்பது தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

ராணுவ ஆராய்ச்சி நிலையத்தில் வேலை எம்.எஸ்சி. படித்தவர்களுக்கு வாய்ப்பு

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் கீழ் செயல்படும் Defence Institute of Physiology and Allied Sciences என்ற நிலையத்தில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணி விவரம்: 1. Junior Research Fellow: 5 இடங்கள். தகுதி: Bio Technology/Bio chemistry/Bio medical sciences/Physiology/Life sciences/Electronics ஆகிய பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி., வயது: 9.1.2014 தேதியின்படி 28க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதியானவர்கள் 21.1.2014 அன்று நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். DIPAS, Lucknow Road, Timarpur, Delhi-110 054 என்ற இடத்தில் நேர்முகத்தேர்வு நடைபெறும். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://drdo.gov.in என்ற இணைய தளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: HRD Co-ordinator, Defence Institute of Physiology and Allied Sciences (DIPAS), Lucknow Road, Timarpur, Delhi- 110 054. விண்ணப்பிக்க கடைசி நாள்: 9.1.2014

ரிட்ஸ் நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலை

மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான RITES நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பி.இ., சிவில் இன்ஜினியரிங் படித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பணி விவரம்: இன்ஜினியர் (சிவில்). மொத்த இடங்கள்:110. தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் முதல் வகுப்பில் பி.இ., தேர்ச்சி. எஸ்சி.,எஸ்டி.,ஓபிசியினர் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதும். வயது: 1.12.2013ன்படி 35க்குள். சம்பளம்: ரூ.13,000 மற்றும் இதர படிகள். தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். குர்கான், அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, புவனேஸ்வர், நாக்பூர் ஆகிய இடங்களில் நேர்முகத் தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர்கள் http://new.rites.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி: The Assistant Manager (P), Rectt.,RITES Ltd., RITES BHAWAN, Plot No:1, Sector29, GURGAON 122001. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 6.1.2014. பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 17.1.2014.

மினிரத்னா பொதுத்துறை நிறுவனத்தில் 158 இடங்கள்

மினிரத்னா பொதுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள 158 இடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1. மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ்: மொத்த இடங்கள்: 17 தகுதி: பெர்சனல் மேனேஜ்மென்ட் பாடத்துடன் எம்பிஏவில் முதல் தர தேர்ச்சி அல்லது மனிதவளம் அல்லது தொழில் உறவுகள் அல்லது மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட். 2. மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ்: மொத்த இடங்கள்: 7 தகுதி: பட்டப்படிப்புடன் நிதி பாடத்தில் எம்பிஏ. அல்லது சிஏ அல்லது ஐசிடபிள்யூஏ அல்லது ஏசிஎஸ். 3. அக்கவுன்டென்ட்: 17 இடங்கள் தகுதி: பி.காம் அல்லது பி.ஏ., அல்லது சிஏ அல்லது ஐசிடபிள்யூஏ அல்லது இந்தியன் தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் எஸ்ஏஎஸ் அக்கவுன்டென்ட்ஸ் மற்றும் 3 ஆண்டுகள் முன்அனுபவம். 4. ஜூனியர் டெக்னிக் கல் அசிஸ்டென்ட்: 107 இடங்கள் தகுதி: விலங்கியலுடன் வேளாண்மை அல்லது வேதியியல் பாடத்தில் பட்டம் அல்லது உயிர் வேதியியல் பாடத்தில் பட்டப்படிப்பு. 5. அசிஸ்டென்ட் இன்ஜினியர்: 10 இடங்கள் தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., அனைத்து பணிகளுக்கும் கம்ப்யூட்டர் அறிவு விரும்பத்தக்கது. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும். விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசியினருக்கு ரூ.300/- இதை All India Management Association, NewDelhi என்ற பெயருக்கு டிடி எடுக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். https://jobapply.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி: Post Box No.4334, Kalkaji Head Post Office, NEWDELHI- 110019. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.1.2014. பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 18.1.2014.

வேலை பிளஸ் 2/ஐடிஐ/ டிப்ளமோ/ பட்டப்படிப்பு தகுதி

இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் (என்பிசிஐஎல்) காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அணு மின்நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் பயிற்சியளிக்கப்பட்டு அதன்பின் பணியில் அமர்த்தப்படுவதற்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பிரிவு: 1.Stipendiary Trainees (Scientific Assistant/B). மொத்த இடம்: 12 அ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்: 6 இடங்கள். தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ. ஆ. இயற்பியல்: 6. தகுதி: இயற்பியலை முக்கிய பாடமாகவும், வேதியியல் மற்றும் கணிதத்தை துணைப் பாடங்களாகவும் கொண்டு 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி., பிளஸ் 2விலும் கணிதத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். பயிற்சி காலம்: ஒன்றரை ஆண்டுகள். பயிற்சியின் போது ரூ.9,300 ஊக்கத் தொகை வழங்கப்படும். பிரிவு: 2.Stipendiary Trainees (Technician/B). மொத்த இடங்கள்: 26. அ. பிளான்ட் ஆபரேட்டர்: 6 இடங்கள். தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களில் தலா 50 சதவீத மதிப்பெண் களுடன் பிளஸ் 2 தேர்ச்சி. 10ம் வகுப்பில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். ஆ. எலக்ட்ரீசியன்: 2 இடங்கள். எலக்ட்ரானிக் மெக்கானிக் மற்றும் இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்-4 இடங்கள். இ. பிட்டர்- 14 இடங்கள். தகுதி: அறிவியல் மற்றும் கணித பாடங்களில் தலா 50 சதவீத மதிப்பெண் களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின் சம்பந்தப்பட்ட டிரேடில் 2 வருட ஐடிஐ. 10ம் வகுப்பில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். பயிற்சி காலம்: 2 ஆண்டுகள். பயிற்சியின் போது முதல் ஆண்டில் மாதம் ரூ.6,200 வீதமும், இரண்டாம் ஆண்டில் ரூ.7,200 வீதமும் ஊக்கத் தொகை அளிக் கப்படும். விண்ணப்பதாரர்கள் ஓஎம்ஆர் விண்ணப்ப படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தபால் மூலம் ஓஎம்ஆர் விண்ணப்பத்தை பெற வேண்டிய முகவரி: Assistant Manager (HRM), Madras Atomic Power Station, Kalpakkam- 603102. விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.1.2014.

உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை செலுத்தியது இந்தியா

சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து முழுவதுமாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள அதி நவீன க்ரையோஜினிக் என்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி-டி5 ஏவுவாகனத்திலிருந்து ஒரு செயற்கைக்கோள் ஞாயிறு மாலை 4.18 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்டு 17 நிமிடங்களுக்குப் பின்னர் ஜி-சாட்-14 தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை டி5 விண்ணில் செலுத்தியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோவின் தலைவர் கே இராதாகிருஷ்ணன், தங்கள் குழுவின் அர்ப்பணிப்பிற்கு மேலுமொரு வெற்றி இது என்றார்.இஸ்ரோவின் வரலாற்றில் இது இன்னுமொரு மைல்கல் என்று கருதப்படுகிறது. கடந்த 2010ல், முதலில் ஏப்ரலிலும் பின்னர் டிசம்பரிலும் இருமுறை க்ரையோஜினிக் ஏவுகணைகளை செலுத்துவதில் தொழில்நுட்பக்கோளாறுகள் காரணமாக இஸ்ரோ தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்த அளவில் இன்றைய வெற்றி மிக இனிமையானது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். 356 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட டி-5 ராக்கெட் பயணம் வெற்றிகரமாக அமைந்துவிட்டால் இன்னும் கனமான ஏவுகணைகளை இந்தியாவால் ஏவமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது

ஜிஎஸ்எல்வி மூலம் இந்தியா சாதித்தது என்ன?

மிகவும் குறைந்த வெப்ப நிலையில் உள்ள எரிபொருளைப் பயன்படுத்தி, இந்தியா உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்த ஜி எஸ் எல் வி ராக்கெட்டின் உதவியுடன் ஒரு செயற்கைக் கோளை விண்ணில் ஏவியுள்ளது ஒரு பெரிய சாதனையாகக் கூறப்படுகிறது. சிக்கல் மற்றும் சவால்கள் நிறைந்த இந்தத் தொழில்நுட்பம் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் (ஐரோப்பிய ஒன்றியக் அறிவியல் கூட்டமைப்பின் சார்பில்) ஆகிய நாடுகளிடம் மட்டுமே இருந்தது. இப்போது ஆறாவதாக இந்தியாவும் இந்தத் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளமை, சர்வதேச அளவில் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மற்றும் வல்லமையில் மீதுள்ள நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என்று பெங்களூருவிலுள்ள அறிவியல் எழுத்தாளர் மோகன் சுந்தரராஜன் தெரிவித்தார். ஆக்ஸிஜென் மற்றும் ஹைட்ரஜன் ஆகிய வாயுக்களை பூச்சியம் பாகைக்கு கீழே மிகவும் குறைந்த வெப்ப நிலையில் திரவ நிலைக்கு கொண்டுவந்து பின்னர் அதை எரியூட்டி மிகவும் உயர்ந்த வெப்பநிலையின் மூலம் உந்துசக்தியை ஏற்படுத்தி ஒரு ராக்கெட் மூலம் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானதும் சவாலானதுமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றியின் மூலம் இனிவரும் காலங்களில் வர்த்தக ரீதியில் பல நாடுகளின் மேலும் பல செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி தொழில்நுட்பத்தின் மூலம் விண்ணில் செலுத்தும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் மோகன் சுந்தரராஜன் கூறுகிறார்.

ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுதாரி என்று சிறுமி கைது

தாலிபான் போராளிகள்
ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குரிய அங்கியை அணிந்திருந்தார் என்று கூறி ஒரு சிறுமியை காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர். எட்டு வயதே இருக்கக் கூடும் என்று கருதப்படுகின்ற அந்தச் சிறுமி, ஹெல்மண்ட் மாகாணத்தில் ஒரு காவல்துறை சோதனைச் சாவடியைத் தாக்க முயன்றபோது பிடிபட்டார் என்று உள்துறை அமைச்சகத்தின் பேச்சாளார் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.அந்தச் சிறுமி அதிர்ச்சியிலும் ஒரு குழப்ப நிலையிலும் உள்ளார் என்று கூறப்படுகிறது.தாலிபான் தளபதியின் சகோதரி'அவர் அணிந்திருந்த தற்கொலைத் தாக்குதல் அங்கியில், வெடிக்கச் செய்யவதற்குரிய விசையை அவரால் கையாள முடியவில்லை என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். இந்தத் தாக்குதலை மேற்கொள்ளும்படி, தாலிபான்களின் ஒரு முக்கியமான தளபதி என்று கருதப்படும் அந்தச் சிறுமியின் சகோதரரே அவரை ஊக்குவித்தார் என்று காவல்துறையினர் கூறுகிறார்கள். காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்தச் சிறுமி இப்போது மாகாணத் தலைநகரான லஷ்கர் காஹ்வுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

வங்கதேசத்தில் புதிய அரசாங்கம் அமையும்- இழுபறியும் தொடரும்

பிரதமர் ஷேக் ஹஸீனா, பிஎன்பி தலைவி காலிதா ஸியா (வலது பக்கம் இருப்பவர்) ஆகிய இரண்டு பெரிய தலைவர்களின் முடிவிலேயே மக்களின் தலைவிதி தீர்மானிக்கப்படும்: ட்ரான்ஸ்பேரஸி இண்டர்நேஷனல்
வங்கதேசத்தில் நடந்துமுடிந்த பொதுத்தேர்தலில் ஆளும் அவாமி லீக் கட்சி வென்றுள்ளது. எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருந்த நிலையில், வன்முறைகளுக்கு மத்தியில் நடந்த இந்தத் தேர்தலின் முடிவு சந்தேகமின்றி எதிர்பார்க்கப்பட்டது தான்.மொத்தமாக உள்ள 300 நாடாளுமன்ற ஆசனங்களின் அரைவாசிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியே இருக்கவில்லை. அதன்படி அவாமி லீக் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியை பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு நாள் நடந்த வன்முறைகளில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர். இன்று திங்கட்கிழமை மேலும் மூவர் கொல்லப்பட்டனர். 20- வீதத்துக்கும் சற்று அதிகளவுதான் வாக்குப்பதிவு நடந்துள்ளது. 2008-ம் ஆண்டுத் தேர்தலில் வாக்குப்பதிவு வீதம் 70 வரை இருந்தது. வன்முறைகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு காரணமாக பெரும்பாலான மக்கள் வாக்களிக்க வரவில்லை என்று அவதானிகள் கூறுகின்றனர். தேர்தல் முடிவுகள் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று எதிரணி- வங்கதேச தேசியவாதக் கட்சியான பிஎன்பி கோரியுள்ளது. ஆனால், இந்தத் தேர்தல் வெற்றி நியாயமானது, சட்டப்படி செல்லும் என்கிறார் பிரதமர் ஷேக் ஹஸீனா.'மக்கள் ஜனநாயக விழுமியங்களை மதித்து, பயங்கரவாதத்தை புறந்தள்ளி வாக்களித்துள்ளார்கள். நாங்கள் எங்கள் அரசாங்கத்தை அமைப்போம்' என்று செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் ஷேக் ஹஸீனா தெரிவித்தார். ஆனால் இதனை ஒரு தேர்தலாகவே கருதமுடியாது என்று ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் என்ற செயற்பாட்டு அமைப்பு கூறுகிறது. 'இதனை ஒரு தேர்தல் என்று கூறவே எனக்குத் தயக்கமாக இருக்கிறது. இரண்டு தரப்பினருக்கும் இடையிலான ஒரு அதிகாரத்துக்கான விளையாட்டாகத்தான் நாங்கள் இதனைப் பார்க்கிறோம். மிகவும் மோசமான சகித்துக்கொள்ள முடியாத, வன்முறைத்தனமான ஒரு அரசியல் விளையாட்டாக இது இருக்கிறது' என்றார் ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் வங்கதேச இயக்குநர் இஃப்திகார் ஸமான். 'இந்தத் தேர்தலை முன்னிட்டு ஏற்பட்ட அரசியல் முடக்கநிலைமையை பார்க்கின்றபோது, இந்தத் தேர்தல் எந்தவகையிலும் பிரச்சனைக்குத் தீர்வுகாணவில்லை என்றே தெரிகிறது. இந்த அரசாங்கம் தொடர்ந்தும் புதிய அரசாங்கத்தை அமைத்து, புதிய நாடாளுமன்றத்தையும் அமைத்துக்கொண்டு அடுத்த கட்டத்துக்குச் சென்றாலும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்தும் அந்தப் புதிய அரசாங்கத்தையும் பதவிவிலகக் கோரி போராட்டங்களை நடத்தத்தான் போகின்றனர்' என்றும் ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் வங்கதேச இயக்குநர் கூறினார். இரண்டு பெரிய தலைவர்களின் போட்டியில் வங்கதேச மக்களின் தலைவிதி பணையம் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மன்னார் மனிதப் புதைகுழி - சர்வதேச விசாரணையைக் கோரும் மன்னார் மாவட்ட மக்கள்

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழி தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை முழுமையான விசாரணை நடத்த வேண்டுமென்று மன்னார் மாவட்ட மக்கள் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த விசாரணையில் சிறிலங்கா காவல்துறையிரோ சிறிலங்கா படையினரோ சம்பந்தப்படக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதிக்காக காத்திருக்காமல் இந்த நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட வேண்டும். ஐ.நா வன்னியில் நடைபெற்ற மனிதப் பேரழிவைத் தடுக்க முடியாத கையறுநிலையில் இருந்த பாவத்தைக் கழுவ வேண்டுமென்றால் இந்தப் புதைகுழி தொடர்பில் உரிய விசாரணை மேற்கொண்டு தமிழ் மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் மன்னார் மக்கள் கோரியிருக்கின்றனர். காலத்தை இழுத்தடிக்காமல் உடனடியாக விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழி தொடர்பாக தகவல் அறிவதற்காக கடந்த சனிக்கிழமை மன்னாருக்குச் சென்று திரும்பிய சங்கதி24 இன் கொழும்புச் செய்தியாளரூடாகவே மன்னார் மக்கள் இந்த அவசர கோரிக்கையை விடுத்துள்ளனர். எமது கொழும்புச் செய்தியாளர் கா.இனியவன் மன்னாரின் பல இடங்களுக்கும் சென்று பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடியுள்ளார்.

அரசாங்கத்தை கவிழ்க்கும் முனைப்புக்களில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது – விமல் வீரவன்ச

அரசாங்கத்தை கவிழ்க்கும் முனைப்புக்களில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் செய்யும் வகையில் அமெரிக்கா செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில், அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் என்பது தெளிவாகத் தெரிகின்றது என அவர் தெரிவித்துள்ளார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை பயன்படுத்தி இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா முயற்சிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு அதிகளவு சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ஏனெனில், அமெரிக்கா ஏனைய உறுப்பு நாடுகள் மீது அழுத்தம் செலுத்தக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பமாக சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து அமெரிக்கா செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டின் நிறைவில் அமெரிக்காவின் உள்நோக்கம் என்னவென்பது தெளிவாக புலனாகும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எங்கள் மொழிபெயர்ப்புலகத்தில்” நூல்வெளியீடு எதிர்வரும் பங்குனியில் கனடாவில்…

அண்மையில் கனடா TSAR வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்ட “எங்கள் மொழிபெயர்ப்புலகத்தில்” என்னும் மொழிபெயர்ப்புக் கவிதைத்தொகுப்பு நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் பங்குனி மாதம் கனடாவில் நிகழவுள்ளது. இலங்கை இந்தியா சிங்கப்புர் மலேசியா மற்றும் புலம் பெயர்ந்த தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய இத் தொகுப்பு கடந்த மூன்று தசாப்த காலக்கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. தமிழ் கவிதைகளுக்குச் சமாந்தரமாக அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புக்களையும் கொண்டதாக இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மொழி பெயர்ப்பாளர்கள் மற்றும் கவிதைகளை வழங்கிய கவிஞர்கள் பற்றிய, அவர்களின் படங்களுடன் கூடிய சிறிய அறிமுகக்குறிப்பும் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் அங்கத்தவர்களினதும் ஆதரவாளர்களினதும் முயற்சியினாலும் ஒன்ராறியோ திரிலியம் பவுண்டேசனின் நிதியுதவியினாலும் திறமையான மொழிபெயர்பாளர்களின் கடும் உழைப்பினானாலும் திரு செல்வா கனகநாயகம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு இத்தொகுப்பு உருவானதாக இத் தொகுப்பின் நன்றியுரையில் தமிழ் இலக்கியத்தோட்டத்தின் செயலாளர் திரு முத்துலிங்கம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

பலஸ்தீனில் மகிந்தவிற்கு அதியுயர் விருது!

மத்திய கிழக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று பலஸ்தீனை சென்றடைந்துள்ளார். ஜோர்தானுக்கான இரண்டுநாள் பயணத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி பலஸ்தீனத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர், பலஸ்தீன் பிரதமர் ராமி ஹம்டில்லா உள்ளிட்டவர்களால் வரவேற்கப்பட்டுள்ளார். பலஸ்தீனின் மறைந்த முன்னாள் தலைவர் யசீர் அரபாத்தின் சமாதிக்கு ஜனாதிபதி மலரஞ்சலி செலுத்தியுள்ளார். இதேவேளை, பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அத்துடன் பலஸ்தீனத்தின் அதியுயர் விருதான ஸ்ரர்ஆப் பாலஸ்தீன விருது மகிந்தவிற்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.