Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Thursday, December 26, 2013
ஆப்கானிஸ்தானிலுள்ள ஆஸ்திரேலியப் படைகள் வெளியேறுவது
2013-12-16
ஆப்கானிஸ்தானின் ஒருஸ்கான் மாநிலத்திலுள்ள ஆஸ்திரேலியாவின் இரணுவத் தளம் மூடப்பட்டுள்ளது. அங்கிருந்த அனைத்து படைகளும் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பியுள்ளதாக ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர் டோனி அபோட்டும், தேசியப் பாதுகாப்பு அமைச்சர் டேவிட் ஜான்ஸ்டனும் டிசம்பர் 16ஆம் நாள் நடைபெற்ற செய்திக் கூட்டத்தில் அறிவித்தனர். ஆப்கானிஸ்தானிலுள்ள அனைத்து படைகளையும் ஆஸ்திரேலியா வெளியேற்றியுள்ளதை இது காட்டுகிறது.
ஆஸ்திரேலிய அரசின் திட்டப்படி, எதிர்காலத்தில், சுமார் 400 இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலிலும், காந்தகாரிலும் பயிற்சியிலும் ஆதரவுக் கடமைகளிலும் ஈடுபடுவர்.
2013ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசு
2013-10-15
யூஜின் எப். ஃபாமா, லார்ஸ் பீட்டர் ஹான்சன், இராபர்ட் ஜே. ஷில்லர் ஆகிய மூன்று அமெரிக்கப் பொருளியலாளர்கள் 2013ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசைப் பெறுகின்றனர். அவர்கள் மேற்கொண்ட சொத்து விலைகளின் அனுபவப் பகுப்பாய்வைப் பாராட்டி இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. ஸ்வீடன் அரசு அறிவியல் கழகம் 14ஆம் நாள் இதை அறிவித்தது.
இவ்வாண்டுக்கான பொருளியல் நோபல் பரிசுத் தொகை மொத்தம் 12லட்சம் அமெரிக்க டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலிருந்து கறவை மாடுகளை வாங்கும் நேபாளம்
2013-12-18
நேபாள-இந்திய அரசுகளின் செயலாளர் கூட்டம் இந்த வார இறுதியில் நடைபெறும். நேபாளம் இந்தியாவிலிருந்து 10 ஆயிரம் சிறந்த இனக் கறவை மாடுகளை வாங்குவது பற்றி இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று நேபாளத்தின் காரோபார் நாளேட்டின் இணையத் தளத்தில் 17ஆம் நாள் செய்தி வெளியாகியது.
நேபாளத்தில் நாள்தோறும் 5 இலட்சம் லிட்டர் எடையுள்ள பால் பற்றாக்குறை நிலவுகிறது. நேபாளம் இந்தியாவிடமிருந்து கறவை மாடுகளை வாங்குவது தொடர்பாக உடன்படிக்கை எற்பட்டால், நேபாளத்தில் பால் பொருட்களில் தன்னிறைவு முற்றிலும் நனவாக்கப்படும் என்றும் நேபாளத்தின் வணிக வினியோக அமைச்சின் செயலர் மாட்ஃஹப் பிரசாத் ரெக்மி கூறினார்.
இந்தியாவில் சீனச் செய்தி எனும் பத்திரிகையின் வாசகர்கள் சந்திப்பு விழா
2013-12-20
இந்தியாவுக்கான சீனத் தூதரகம் வெளியிடும் சீனச் செய்தி எனும் பத்திரிகையின் முதல் வாசகர்கள் சந்திப்பை அண்மையில் நடத்தியது. இந்திய அரசு, கட்சிகள், வணிகத் துறை, செய்தி ஊடகம், உயர் நிலை பள்ளிக்கூடம், அரசு சாரா அமைப்புகள் முதலிய பல்வேறு துறைகளின் வாசகர் பிரதிநிதிகள் சுமார் 30 பேர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். இந்த வாசகர்கள் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. வாசகர்கள் முன்பு போல எப்போதும் சீனச் செய்தி பத்திரிகையை ஆதரித்து, சீன-இந்திய மக்களுக்கிடையே நட்பு மற்றும் சீன-இந்திய உறவின் வளர்ச்சிக்குப் பங்காற்ற வேண்டும் என்று தூதரகச் செய்தியகத்தின் தலைவர் சியே லி யான் அம்மையார் உரையில் தெரிவித்தார்.
சீனாவின் இயந்திரத் தொழில் நிறுவனங்கள் உலகளவில் பெற்றுள்ள வளர்ச்சி
தற்போது உலகக் கட்டிட இயந்திரத் தொழில் வசதிகளின் சரிபாதி தேவை, சீனாவிலிருந்து வருகிறது. தலைமையகம், சீன ஜியாங் சு மாநிலத்தின் ஷுச்சோவில் அமைந்துள்ள இயந்திரத் தொழில் நிறுவனம், அதாவது ஷு குங் என்பது சுருக்கமாக அழைக்கப்பட்ட குழுமம், 24 ஆண்டுகளாக சீன இயந்திர தொழிலில் முதலிடம் வகித்து வருக்கிறது. தரமுடைய உற்பத்திப் பொருட்களால், அது உலக இயந்திரத் தொழில் துறையில் ஐந்தாவது இடம் வகிக்கிறது. கடந்த ஆண்டில் ஷு குங் குழுமம், 8 ஆயிரம் அகழ்பொறிகளை விற்றுள்ளது. அகழ்பொறி விவகாரப் பிரிவின் பொறுப்பாளர் YuAiJun கூறியதாவது
"சீனாவின் உள்நாட்டு அகழ்பொறி சந்தையில் சர்வதேச போட்டி இருக்கிறது. அனைத்து புகழ் பெற்ற உலக இயந்திரத் தொழில் நிறுவனங்களும், சீனாவில் அகழ்பொறிகளைத் தயாரித்து வருகின்றன. அவற்றை விட, குறைந்த விலையில் சிறந்த தரமுடைய உற்பத்திப் பொருட்கள், எமது மேம்பாடு. நடுத்தர மற்றும் உயர் நிலை அகழ்பொறிகள், எமது இலக்கு. இந்த உற்பத்திப் பொருட்கள், கட்டுமானப் பணியின் பல்வகை கோரிக்கைகளை நிறைவு செய்யலாம்."என்று அவர் கூறினார்.
தோஹா சுற்று பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
உலக வர்த்தக அமைப்பின் 9வது அமைச்சர் நிலை கூட்டம் 7ஆம் நாள் முற்பகல் இந்தோனேசியாவின் பாலி தீவில் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் வெளியான அமைச்சர் அறிக்கையில், பாலி கூட்டு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. 12 ஆண்டுகளாக தேக்க நிலையில் இருந்த தோஹா சுற்று பேச்சுவார்த்தையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.உலக வர்த்தக அமைப்பின் 9வது அமைச்சர் நிலை கூட்டம் 7ஆம் நாள் முற்பகல் இந்தோனேசியாவின் பாலி தீவில் நிறைவுற்றது.
மாலியில் சீனாவின் அமைதி காப்புப் படை
ஆப்பிரிக்காவின் மாலி நாட்டிலுள்ள கௌவிலிருந்து 400 கிலோமீட்டருக்கு மேலான தொலைவில் அமைந்துள்ள கிதல் நகரின் மாலி வளர்ச்சி வங்கியில் டிசம்பர் 14ஆம் நாள் கடும் தற்கொலை தாக்குதல் நிகழ்ந்தது. வங்கி கட்டிடம் நாசமாயிற்று. காவல் கடமை மேற்கொண்ட செனகல் அமைதி காப்புப் படைவீரர்கள் இருவர் உயிரிழந்தனர். 7 பேர் காயமுற்றனர். 15ஆம் நாள் மாலியில் 2வது சுற்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மாலிக்குச் சென்ற சீனாவின் அமைதி காப்புப் படை இதற்காக மிக உயர்வான கறுப்பு எச்சரிக்கை நிலையைத் துவங்கியது.
திபெதின் தொற்று நோய் அவசரத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் குழு
திபெதின் முதலாவது தேசிய நிலை தொற்றுநோய் அவசரத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் குழு டிசம்பர் 13ஆம் நாள் லாசா நகரில் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது. திபெத்தில் பல்வேறு இயற்கை சீற்றங்களுக்கான முன்னெச்சரிக்கை பணிகளையும், பெரிய நடவடிக்கைகளின் சுகாதார உத்தரவாதத்தையும் இக்குழு முக்கியமாகச் சமாளித்து, திபெத் வேளாண் மற்றும் மேய்ச்சல் பிரதேசத்தின் பொது மக்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை மேலும் பேணிக்காக்கும்.
வெளிநாடுகளுக்கு சீனாவின் முன்நிபந்தனையில்லா உதவி
நவ சீனா நிறுவப்பட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக, வெளிநாடுகளுக்கு சீனா அளிக்கும் உதவி, எளிமையான பொருளாதார உதவியிலிருந்து, சமத்துவ கலந்தாய்வு மூலம் ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறும் திசையை நோக்கி வளர்ந்து வருகிறது. வெளிநாடுகளுக்கு உதவியளிக்கும் பணியில், ஆப்பிரிக்காவுக்கு சீனா எப்போதும் முக்கியத்துவம் அளிக்கிறது. இது பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஆப்பிரிக்க விவகாதத்துக்கான மூன்னாள் சிறப்பு தூதர் லியூ குய்ஜின் அறிமுகம் செய்தார்.முதலில், வெளிநாடுகளுக்கு சீனா முன்நிபந்தனையின்றி உதவியளிக்கிறது. இரண்டாவதாக, ஆப்பிரிக்காவுக்கு சீனா அளிக்கும் உதவி, வளரும் நாடுகளுக்கிடை ஒத்துழைப்பு ஆகும். வளர்ந்த நாடுகள் ஆப்பிரிக்காவுக்கு அளிக்கும் உதவியிலிருந்து காணக்கூடிய வேறுபாடுகள் இவைதான் என்று அவர் தெரிவித்தார்.
சீன-பாகிஸ்தான் கூட்டாக ஆராந்து உற்பத்தி செய்த 50வது JF-17 தண்டர் போர் விமானம்
சீன விமானச் சேவை தொழிற்துறை கூட்டு நிறுவனமும், பாகிஸ்தான் வானூர்திக் கோட்டமும், கூட்டாக ஆராய்ந்து உற்பத்தி செய்த JF-17 தண்டர் போர் விமானத்தின் வடிவமைப்பு பணிக்கு சீனா பொறுப்பேற்றது. பாகிஸ்தான் கோரிக்கைக்கிணங்க, சில உற்பத்தி தொழில் நுட்பங்களை சீனா பாகிஸ்தானிடம் ஒப்படைத்துள்ளது. இப்படி இருந்தால், இந்த போர் விமானம் பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் தலைமை அமைச்சர் நவாஸ் ஷேரிப், பாகிஸ்தானில் சீன தூதர் சுன் வெய் துங் உள்ளிட்ட இரு நாட்டு அதிகாரிகளின் பார்வையில், இரு நாட்டு பிரதிநிதிகள், சான்றுகளை பாகிஸ்தான் வான் படை தளபதிகள் குழுவின் தலைவர் தாஹிர் பாட்டிடம் 18ம் நாள், ஒப்படைத்தனர். முதல் தொகுதி JF-17 தண்டர் போர் விமானங்களின் உற்பத்தி பணி முடிவடைந்து, பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டதை இது காட்டுகிறது.
சீன-பாகிஸ்தான் கூட்டாக ஆராந்து உற்பத்தி செய்த 50வது JF-17 தண்டர் போர் விமானம்
50வது JF-17 தண்டர் போர் விமானத்தை படைக்கு ஒப்படைக்கும் விழா, 18ம் நாள், பாகிஸ்தான் வடமேற்கு பகுதியிலுள்ள காம்ரா நகரில் அமைந்துள்ள வானூர்தி கோட்டத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் தலைமை அமைச்சர் நவாஸ் ஷெரிப், முதன்மை விருந்தினராக, இவ்விழாவில் கலந்துகொண்டார். 2வது தொகுதி JF-17 தண்டர் போர் விமானங்களின் உற்பத்தி பணி துவங்குவதை அவர் அறிவித்தார். JF-17 தண்டர் போர் விமானத்தை, சீனாவும் பாகிஸ்தானும் கூட்டாக ஆராய்ந்து உற்பத்தி செய்தன. விலை குறைந்த தரம் அதிகமான இந்த போர் விமானத்தில் பல நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன.
பாகிஸ்தான் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்
பாகிஸ்தான் வடமேற்கு பகுதிலுள்ள வட வஷிரிஸ்தான் பிரதேசத்தில் 25ஆம் நாளிரவு அமெரிக்க படை ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது. இதில், 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமுற்றனர் என்று பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் 26ஆம் நாள் அறிவித்தது.
இவ்வாண்டு பாகிஸ்தானில் நடத்தப்படும் அமெரிக்க படையின் 26வது ஆளில்ல விமானத் தாக்குதல் இதுவாகும். இத்தாக்குதல்களில் மொத்தம் 166 பாகிஸ்தான் மக்கள் உயிரிழந்தனர்.
சீனாவில் வறுமை ஒழிப்புப் பணி
2010 முதல் 2012ஆம் ஆண்டு வரை, சீனக் கிராமப்புறங்களில் வறிய மக்களின் எண்ணிக்கை சுமார் 6கோடியே 70லட்சத்தைக் குறைத்துள்ளது. வறுமை ஒழிப்புப் பணியில் புதிய முன்னேற்றம் காணப்பட்டாலும், இக்கடமை இன்னும் கடினமாகவே உள்ளது. 25ஆம் நாள் சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டிக்கு பணியறிக்கை வழங்கிய போது, சீன அரசவை வறுமை ஒழிப்புப் பணிக்குழு அலுவலகத்தின் இயக்குநர் லியுயூங்பு இதைத் தெரிவித்தார்.
2010 முதல் 2012ஆம் ஆண்டு வரை, சீனக் கிராமப்புறங்களில் நிலவிய வறுமை 17.2இருந்து 10.2விழுக்காட்டாக குறைந்தது. முக்கிய வட்டங்களில் விவசாயிகளின் நபர்வாரி நிகர வருமானம் 3273 யுவானிலிருந்து 4602 யுவானாக அதிகரித்தது. இது ஆண்டுக்கு சராசரியாக 18.6விழுக்காடு அதிகமாகும் என்று அவர் விளக்கினார்.
மாசேதுங் 120வது பிறந்த நாள் --சீனாவில் கொண்டாட்டங்கள்
நவீன சீனாவின் நிறுவனரான, மாசேதுங்கின் 120 பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் சீனாவெங்கும் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஷி ஜின்பிங் உட்பட சீனாவின் உயர் மட்டத் தலைவர்கள் பீஜிங்கில் உள்ள மாவோ உடல் வைக்கப்பட்டிருக்கும் நினைவகத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினர் என்று அதிகார பூர்வ செய்தி நிறுவனமான ஷின்ஹுவா கூறியது.
மாசேதுங்குக்கு சீனர்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய மரியாதை என்பது, அவர் மறைவுக்குப் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட, பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடர்வதுதான் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார பூர்வ நாளேடான சீனா டெய்லி கூறியது.
சீன அரசியல்வாதிகள், அவர்களின் அரசியல் அங்கீகாரத்துக்கு மாசேதுங்கைப் பின்பற்றி, பாராட்ட வேண்டியிருக்கும் அதே நேரத்தில், அவரது கொள்கைகள் தற்போது காலாவதியாகிவிட்டன என்பதையும் அவர்கள் உணர்கிறார்கள் ; இந்த இரு நிலைகளையும் அவர்கள் சமநிலைப்படுத்தியே பார்க்கவேண்டியிருக்கிறது என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
சீனாவில் கம்யூனிஸப் புரட்சிக்குப் பின்னர் நடந்த இரு பெரும் துன்பியல் சம்வங்களான, கலாசாரப் புரட்சியும், 'முன்னோக்கிய பெரும் பாய்ச்சல்' (The Great Leap Forward) என்ற சமுக பொருளாதாரத் திட்டமும், மாசேதுங்கின் கொள்கைகளால் விளைந்தவை.
போர் வழிபாட்டிடத்துக்கு ஜப்பானிய பிரதமர் விஜயம் - சீனா கோபம்
சர்ச்சைக்குரிய யசுகுனி போர் வழிபாட்டிடம்
ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே அவர்கள், சர்ச்சைக்குரிய யசுகுனி போர் வழிபாட்டிடத்துக்கு விஜயம் செய்தது தொடர்பாக, ஜப்பானிய தூதரை அழைத்து சீனா தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
போர் குற்றவாளிகள் உட்பட போரில் இறந்த ஜப்பானியர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அந்த வழிபாட்டிடத்துக்கு கடந்த 7 வருடங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் விஜயம் செய்த முதலாவது ஜப்பானிய பிரதமர் அபே அவர்கள்தான்.
தமது கோபத்தை பொறுத்துக்கொள்ள தம்மால் முடியாது இருப்பதாக தென்கொரியா கூறியுள்ளது.
இரண்டாம் உலகப் போர் காலத்திலும், அதற்கு முன்னதாகவும், சீனாவும், தென்கொரியாவும் ஜப்பானால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.
ஜப்பானின் நடவடிக்கை பிராந்திய பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
கிழக்குச் சீனக் கடலில் உள்ள தீவுகள் தொடர்பில் சீனாவும், ஜப்பானும் முரண்பட்டிருக்கின்றன.
பழிவாங்கும் நடவடிக்கையில் ஆம் ஆத்மி கட்சி ஈடுபட்டால் ஆதரவு வாபஸ்
புதுடெல்லி: தேர்தல் வாக்குறுதிகளை 3 மாத காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் கெடு விதித்துள்ளது. அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற 3 மாதம் தேவை என ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளதை ஏற்று காங்கிரஸ் இந்த அவகாசத்தை அளித்துள்ளது. எந்த வித மானியம் இன்றி மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி குறை கூறியவர்களுக்கு அக்கட்சி ஆதரவு அளிப்பது வேடிக்கையாக உள்ளது பாரதிய ஜனதா கட்சி விமர்சனம் செய்துள்ளது.
பாரதிய ஜனதாவை ஆட்சிக்கு வராமல் தடுக்க இரு கட்சிகளும் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்திருப்பதாக பாரதிய ஜனதா கூறியுள்ளது. இதனிடையே ஊழலை ஒழிக்க போவதாக கூறி கொண்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஆம் ஆத்மி கட்சி ஈடுபட்டால் ஆதரவு வாபஸ் பெறப்படும் என காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
முந்தைய காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆட்சிகளில் பணியாற்றிய ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கூறியதை அடுத்து காங்கிரஸ் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெங்களூர் பெல் நிறுவனத்தில் இன்ஜினியர், சூபர்வைசர்கள்
பெங்களூர் பெல் நிறுவனத்தில் புராஜெக்ட் இன்ஜினியர் மற்றும் சூபர்வைசர்கள் என மொத்தம் காலியாக உள்ள 38 இடங்களுக்கு தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணி:
1. புராஜெக்ட் இன்ஜினியர்: 15 இடங்கள். இவற்றில் சிவில் பிரிவில் 9 இடங்களும், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு, மெக்கானிக்கல் பிரிவில் தலா 3 இடங்களும் உள்ளன.
தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/கம்யூனிகேசன்/இன்ஸ்ட்ருமென்டேசன்/மெக்கானிக்கல்/சிவில் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 60 மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்.
2. சூபர்வைசர்கள்: 23 இடங்கள். இவற்றில் சிவில் பிரிவுக்கு 7 இடங்களும், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் ஸ் பிரிவுக்கு 12 இடங்களும், மெக்கானிக்கல் பிரிவுக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/கம்யூனிகேசன்/ இன்ஸ்ட்ருமென்டேசன்/மெக்கானிக்கல்/சிவில் ஆகிய பாடங்களில் 60 சதவீத தேர்ச்சியுடன் டிப்ளமோ. ஓராண்டு முன்அனுபவம்.
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். http://www.bheledn.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:
The Deputy General Manager (HR),
Bharat Heavy Electricals Limited,
Electronics Division,
P.B.No:2606,
Mysore Road, Bangalore-560026.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.12.2013.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 28.12.2013.
இந்திய விமானப்படையில் மகளிருக்கான பொது நுழைவுத்தேர்வு
நமது தேசத்தின் பெருமைக்குரிய இந்திய விமானப் படை அதன் தொழில் நுட்பம், அர்ப்பணிப்புணர்வு, பலம் ஆகியவற்றால் உலகெங்கும் அறியப்படுகிறது. தனி நபர் முன்னேற்றத்துடன் இந்த நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் புனிதமான பணி என்ற பெருமையும் இதில் பணியாற்றுவோருக்கு உள்ளது. இந்தப் படையில் பெண்களுக்கான குறுகிய கால நிலைப் பணி அடிப்படையில் ஜனவரி 2015 முதல் பிளையிங், டெக்னிகல், கிரவுண்ட் டியூடி பிரிவுகளில் உள்ள பதவிகளை நடத்துவதற்கான பொது நுழைவுத் தேர்வு(Air Force Common Admission Test (AFCAT)01/2014)க்கான அறிவிப்பு வந்துள்ளது.
ப்ளையிங் பிராஞ் 44 எஸ்.எஸ்.சி., பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 19 முதல் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பிளஸ்டூ அளவிலான படிப்பில் இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பட்டப் படிப்பை முடித்தவர்களும், பி.டெக்., படிப்பை 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்களும் இந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம்.
டெக்னிகல் பிராஞ் 58 எஸ்.எஸ்.சி., பிரிவுக்கு 18 முதல் 28 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற போதும், ஏரோனாடிகல் பிரிவில் குறிப்பிட்ட தகுதி உடையவர்கள் மட்டுமே இந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்க முடியும். விபரங்களை இணையதளத்தில் காண்க.
கிரவுண்ட் டியூடி பிராஞ்ச் 46க்கு விண்ணப்பிப்பவர்கள் 20 முதல் 27 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். இதில் அட்மினிஸ்ட்ரேஷன் அண்டு லாஜிஸ்டிக்ஸ், அக்கவுண்ட்ஸ், எஜூகேஷன் என்ற மூன்று உட்பிரிவுகள் உள்ளன. இவற்றிக்கு குறைந்த பட்சம் பட்டப் படிப்பும், வேறு சில சிறப்பு தேவைகளும் உள்ளன. விபரங்களை இணையதளத்தில் காணலாம்.
இந்தப் பதவிகள் பாதுகாப்புப் படை சார்ந்தவை என்பதால் குறைந்த பட்ச உயரம், உயரத்திற்கேற்ற எடை, மார்பளவு, மார்பு விரிவடையும் தன்மை, கண் பார்வை மற்றும் பொது உடல் நலம் போன்ற பல்வேறு உடற் தகுதிகள் தேவைப்படும் என்பதை மனதில் கொள்ளவும்.
எழுத்துத் தேர்வு மையங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை சூலூர், தஞ்சாவூர் ஆகிய மையங்கள். நமக்கு அருகிலுள்ள மா நில மையங்களான பெங்களூரு, மைசூரு, கொச்சி, திருவனந்தபுரம் ஆகியவை.
மாதிரி விண்ணப்பம், தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http://indianairforce.nic.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 12.01.2014
பெரியகுளம் அருகே பச்சிளம் பெண் குழந்தையை வீசிய கொடூரம்
பெரியகுளம், டிச.26–
தேனி மாவட்டம் பெரிய குளம் அருகில் வீரஜக்கம்மாள் புரத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் இன்று அதிகாலை 2 மணி அளவில் பிறந்து 1 மணி நேரமே ஆன பெண் சிசு முள்செடியில் துணிசுற்றப்பட்டு கிடந்தது. அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண் இயற்கை உபாதையை கழிப்பதற்காக எழுந்துவந்து பார்த்தபோது முள்செடிக்குள் குழந்தை அழும் சத்தம் கேட்டது.
கடும் குளிரில் தொப்புள் கொடி அகற்றப்படாமல் எறும்புகள் மொய்த்த நிலையில் அந்த குழந்தை கதறி துடித்தது. இதைப் பார்த்ததும் அந்த பெண் குழந்தையை தூக்கி உடனடியாக தென்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். மேலும் 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்சில் ஒப்படைத்தனர்.
அங்கு ஆம்புலன்சிலேயே குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிசிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தையை ஈவு இரக்கமின்றி கடும் குளிரில் முள்செடியில் வீசிச்சென்ற கொடூர குணம் படைத்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அங்கு இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு வங்காளம்: சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு-சாமியார் கைது
மேற்கு வங்காள மாநிலம் ஷகாபூரில் மடம் நடத்தி வந்த சாமியர் ஒருவர் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட 4 பேர்களில் 3 சிறுவர்கள். அவர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு தருவதாக சிறுவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
‘இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 377–ன் கீழ் ஓரினச் சேர்க்கை கொள்வது கிரிமினல் குற்றம், இந்தக் குற்றத்துக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கலாம்’ என்று சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பு கூறியது. போலீசார், சாமியார் மீது பிரிவு 377ன் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் சாமியாரை போலீசார் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவர்கள் சாமியாரின் மேற்பார்வையில் ஆசிரமத்தில் படித்து வந்துள்ளனர்.
செவ்வாய்ப் பயணத்துக்கு 2 இலட்சம் பேர் விண்ணப்பம்
செவ்வாய்க் கோளுக்கு சென்று அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதற்கான பயணத்துக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மொத்தம் 2 இலட்சத்து 2 ஆயிரத்து 586 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
செவ்வாய்க் கோளில் நிரந்தரமாகத் தங்குவதற்கான ‘ஒரு வழிப் பயணம்` ஒன்றை ‘மார்ஸ் வண் (Mars One)’ என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பயணத்துக்காக 5 மாதத்தில் 140 நாடுகளில் இருந்து சுமார் 2 இலட்சம் விண்ணப்பங்கள் அந்த தனியார் நிறுவனத்தில் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த மொத்த விண்ணப்பத்தில் 24 சதவீதம் அமெரிக்காவில் இருந்தும், 10 சதவீதம் இந்தியாவில் இருந்தும், 6 சதவீதம் சீனாவில் இருந்தும், 5 சதவீதம் பிரேசிலில் இருந்தும், மீதமுள்ள விண்ணப்பங்கள் பிரித்தானியா (4 சதவீதம்), கனடா (4 சதவீதம்), ரஷ்யா (4 சதவீதம்), மெக்சிக்கோ (4 சதவீதம்), பிலிப்பின்ஸ் (2 சதவீதம்), ஸ்பெயின் (2 சதவீதம்), கொலம்பியா (2 சதவீதம்), ஆர்ஜென்ரீனா (2 சதவீதம்), அவுஸ்திரேலியா (2 சதவீதம்), பிரான்ஸ் (1 சதவீதம்), துருக்கி (1 சதவீதம்), சிலி (1 சதவீதம்), உக்ரேன் (1 சதவீதம்), ஜேர்மனி (1 சதவீதம்), பெரு (1 சதவீதம்), போலந்து (1 சதவீதம்), இத்தாலி (1 சதவீதம்) உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் பெறப்பட்டுள்ளன
மார்ஸ் வண்’ நிறுவனத்தின் தேர்வுக் குழு தேர்வு செய்யும் தகுதியுடைய நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் 2023ம் ஆண்டு ஒரு குழுவாக செவ்வாய்க் கோளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். அதற்கு முன்னதாக மனிதர்கள் அங்கு சென்று தங்குவதற்கான வீடுகள் (பார்க்க படம்) 2018ம் ஆண்டிலேயே செவ்வாயில் அமைக்கும் பணிகள் தொடங்கிவிடும். ஒவ்வொரு வீட்டினுள்ளும் சகல வசதிகளும் உள்ளடக்கப்பட்டிருக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களாகப் பதிவு செய்துவிட்டீர்களா..? தாமதிக்க வேண்டாம்...
எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்சில் நடைபெற இருக்கின்ற மாநகர சபைத் தேர்தல், மற்றும் மே மாதம் நடைபெறவிருக்கின்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் பிரான்சுக் குடியுரிமை பெற்ற அனைத்துத் தமிழ் மக்ககளையும் பங்கேற்று தமது வாக்குரிமையினைப் பயன்படுத்தி, உள்நாட்டு அரசியலிலும் சர்வதேச அரசியலிலும் வலுவான பாத்திரத்தை தமிழர்கள் வகிக்க வேண்டும் என பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது.
அத்தேர்தல்களில் தமிழர்களை பங்கேற்கச்செய்வதற்கான தயார்படுத்தல்களில் மக்கள் பேரவை மும்முரமாகச் செயற்பட்டு வருகின்றது. நாம் வாழும் நாடுகளில் குடியுரிமையைப் பெற்று அந்நாடுகளின் பிரசைகளாக இருக்கும் நாம், எமது அரசியல் உரிமையினைப் பாதுகாத்துக் கொள்ள எமது வாக்குரிமையினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் உள்நாட்டு அரசியலில் பங்கேற்பது ஒவ்வொருவரதும் கடமையும் கூட. எமது கோரிக்கைகளை அரசியல் தலைவர்களின் அக்கறைக்குரிய விடயமாக மாற்றுவதற்கு எவ்வளவு துரத்துக்கு மக்கள் தேர்தல்களில் ஆர்வமாகப் பங்கேற்கிறார்களோ அதனைப் பொறுத்தே அது சாத்தியமானது. இன்று கனடாவும் பிரித்தானியாவும் எமக்குச் சார்பாகக் குரல் கொடுப்பதன் பின்னணியல் அங்கு வாழும் நம் உறவுகள் ஒரு வலுவான அரசியல் சக்தியாக இயங்குவதே காரணம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆகிய நாம் இந்நாட்டில் சகல உரிமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நாட்டில் நாம் வாழும் நகரத்தில், அதன் வளர்ச்சிக்காக, கல்வி, தொழில் என்று பல வழிகளிலும் நமது உழைப்பினை வழங்கி நாட்டின் வளர்ச்சியில் பங்காளர்களாக இருக்கிறோம். அவற்றோடு மட்டும் நாம் நின்று விடமுடியாது. இந்நாட்டு அரசியலில் பங்கேற்று தமிழர்களின் பிரச்சனை இந்தத் தேசத்தின் பிரச்சினையின் ஒரு பகுதி என்பதாக மாற்றம்பெறச் செய்ய வேண்டும்.
எமது சொந்த தாயகத்தில் உரிமையை இழந்த நாங்கள், வாழும் தேசங்களிலும் எமது உரிமைகளை இழந்து விடக்கூடாது. இருக்கக்கூடிய உரிமைகளை பயன்படுத்தத் தெரியாமல் இருப்பது கண்ணிருந்தும் குருடர்களாக வாழ்வது போன்றதே! இந்த தேர்தல்களில் பங்கு பற்றுவதன் மூலம், நாமும் எம்மை ஆளப்போகிறவர்களை தெரிவு செய்வதில் எமது கவனத்தை செலுத்த வேண்டும். அதற்காக வாக்காளர்களாக எம்மை நாம் பதிவு செய்து கொள்ளவேண்டியது அவசியமானது.
பிரான்சு நாட்டு பிரசையான நாங்கள் வரும் டிசம்பர் 31ம் திகதிக்கு முன், நாம் வாழும் நகரங்களில் உள்ள மாநகர சபைகளில் எம்மையும் வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம். எமது உரிமைகளை நாம் தான் பாதுகாக்க முடியும்! எமது பிரதிநிதிகளை நாமே தெரிவு செய்வோம்.
நாம் செய்யும் இந்தத் தேசிய கடமை- எமது தாயகத்த்தில் இருக்கும் மக்களுக்கும் உதவும் கடமைகளாக மாறும். வரும் தேர்தல்களின் முக்கியத்துவத்தை தமிழ் மக்களுக்கு விளக்கவும் தமிழர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கும் அதற்குரிய படிவங்களை நிரப்புவதற்கு உதவி செய்வதற்கும், அதற்கும் மேலாக எமது மக்களுக்கு பிரான்சு மொழியில் அவர்களுக்கு தேவையான சகல உதவிகளை செய்யவும் இந்த பணிமனை செயல்படும்.
ஈழத் தமிழ் மக்கள் தாம் பிரான்சில் எல்லா மக்களையும் போல சகல உரிமைகளுடன் வாழுவாதற்கான சகல சட்ட ஆலோசனைகளை வழங்க எம்மாலான உதவிகளையும் நாம் செய்வோம். தமிழர்களாக தலை நிமிர்வோம்! தமிழர்களாக எழுவோம், உரிமை மறுக்கப்பட்டுக் குரல் இழந்த எம்மக்களின் குரலாக நாம் இருப்போம் என்ற எமது அடிப்படை சிந்தனைக்கு அமைய எமது பணிமனை செயல்படும்.
தொடர்புகளுக்கு : 06 52 72 58 67, 06 52 72 58 67 ,
mte.france@gmail.com
தமிழீழ மக்கள் பேரவை - பிரான்சு
பிரான்சின் மருத்துவ சாதனை - உலகில் முதல் முறை செயற்கை இருதயம்
பிரான்ஸ் தலைநகர் பரிசிலுள்ள Georges Pompidou மருத்துவமனை நிபுணர்கள் செயற்கை இருதயத்தை தயாரித்து, அதனை 75 வயது முதியவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளனர்.
கடந்த வாரம் நடந்த சத்திரசிகிச்சையின் பின் இப்போது செயற்கை இருதயம் சிறப்பாக இயங்கி வருகிறது என்று மருத்தவ நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இதற்கு முன்பும் செயற்கை இருதயம் தயாரித்து பொருத்தப்பட்டுள்ளது. அது ஒரு தற்காலிக மாற்றாகத் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உலகில் முதன் முறையாக இப்போது தான் வாழ் நாள் 5 ஆண்டு நீடிக்கும் வகையில் செயற்கை இருதயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மனித உடல் ஏற்க வேண்டும் என்பதால், இந்த செயற்கை இருதயமும், அதற்கு தேவையான திசுக்கள் உட்பட துணை பொருட்களும் கால்நடை உயிரினங்கள் மூலமாக எடுக்கப்பட்ட திசுக்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோவுக்கும் குறைவான நிறையில் செயற்கை இருதயம் உள்ளது. இயற்கை இருதயத்தை விட அதிக நிறைதான். எனினும் உயிரின திசுக்கள் மூலம் தசைகள் உட்பட எல்லாம் பொருத்தப்படுவதால் இருதயத்துக்கு இரத்தம் பாய்வதில் எந்த சிக்கலும் இருக்காது.
அமெரிக்க விண்வெளி வீரர்கள் திருத்த வேலைக்காக விண்வெளியில்
விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இறங்கிநடந்து திருத்த வேலைகளைச் செய்வார்கள்
சர்வதேச விண்வெளி நிலையத்தின் பாதிக்கப்பட்டுள்ள குளிரூட்டல் கட்டமைப்பில் அவசர திருத்தங்களைச் செய்யும் நோக்குடன், ஸ்பேஸ் வால்க்ஸ் (space walks) எனப்படும் விண்வெளியில் இறங்கி நடக்கும் தொடர் பயணங்களின் முதல் நடைபயணத்தை விண்வெளி வீரர்கள் மேற்கொள்கின்றனர்.
சேதமடைந்த வால்வு காணப்படும் குழாய் ஒன்றை துண்டிப்பதற்காக இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்துக்கு வெளியில் சென்றுள்ளனர்.
குறித்த குழாயை அகற்றிவிட்டு புதிய குழாயொன்றை பொருத்துவதற்காக மேலும் இரண்டு ஆய்வுப் பயணங்களை மேற்கொள்ளவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
10 நாட்களுக்கு முன்னர் இந்த பாதிப்பு ஏற்பட்ட நிலையில், விண்வெளி வீரர்கள் மிக அவசியமற்ற கருவிகளை நிறுத்திவைத்துவிட்டனர்.
அதனால் விஞ்ஞான ஆய்வுகளும் கிட்டத்தட்ட நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை பாரதூரமானது என்றாலும் உயிராபத்து ஏற்படுத்தக்கூடியது அல்ல என்று நாசா கூறியுள்ளது.
"தாய்லாந்தில் அரசியல் கட்டமைப்பை மாற்ற புதிய குழு"
தாய்லாந்தில் கடும் எதிர்ப்புகளை சந்தித்துவரும் பிரதமர் யிங்லுக் ஷிணவத், நாட்டின் அரசியல் கட்டமைப்பை மாற்றியமைக்கும் வகையில் சில வழிமுறைகளை முன்வைக்க சுயாதீன சீர்திருத்தக் குழுவொன்றை அமைப்பதற்கான பிரேரணையை முன்வைத்துள்ளார்.
இந்தப் புதிய குழு அடுத்த சில வாரங்களில் அமைக்கப்படும் என தாய் தொலைக்காட்சியில் உரையாற்றியபோது அவர் தெரிவித்தார்.
அந்தக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் எனவும் அந்தத் தொலைக்காட்சி உரையின்போது அவர் உறுதியளித்தார்.
தாய்லாந்தில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் பல வாரங்களாக நடைபெற்ற பிறகு பிரதமரின் இந்த அறிவிப்பு வந்தாலும், எதிர்க்கட்சி போராட்டக்காரர்கள் இந்தப் பிரேரணையை உடனடியாக புறந்தள்ளியுள்ளனர்.
தாமாகவே அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷிண்வத்தின் பினாமியாகவே அவரது சகோதரியும் தற்போதையப் பிரதமருமான யிங்லுக் செயல்படுகிறார் என்று அவரது எதிர்ப்பாளர்கள் வாதிடுகிறார்கள்.
ஏகே 47: உலகை ஆட்டுவித்த ஆயுதம்
சோவியத் ஒன்றியப் படையணியின் முக்கிய துப்பாக்கியாக இருந்த ஏகே 47, பின்னாளில் உலகின் பல பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டது. இன்றும் பயன்படுத்தப்படுகிறது.
20 ஆம் நூற்றாண்டில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட மிக முக்கியமான ஆயுதங்களில் ஒன்றான ஏகே 47 துப்பாக்கியை இராணுவ வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தத் துப்பாக்கியை இயக்குவது எளிதானது என்பதால் தேசிய இராணுவங்களும், கிளர்ச்சிப்படைகளும் அதனை விரும்பிப் பயன்படுத்தினர்.
இந்தத் துப்பாக்கியை வடிவமைத்த மிக்ஹையில் கலாஷ்னிக்கோவ், இரண்டாம் உலகப் போரின்போது சோவியத்தின் டாங்கிப் படைகளில் மெக்கானிக்காக பணியாற்றியவர்.
போரில் காயப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சமயம், சோவியத் படைகளின் தாக்குதல் திறன் குறித்து கவலைப்பட்ட அவர் புதிய துப்பாக்கியை உருவாக்கினார். 1947 இல் அந்த துப்பாக்கி பயன்பாட்டுக்கு வந்ததால் அது ஏகே 47 என்று அழைக்கப்படுகிறது.
இதன் சிறப்பம்சம் குறித்து பிபிசியிடம் பேசிய பிரிட்டனின் இராணுவ தளவாட நிறுவனத்தில் துப்பாக்கி நிபுணராக இருக்கும் ஜானாத்தன் பெர்குசன், "இந்தத் துப்பாக்கி மற்ற துப்பாக்கிகளைவிட சிறப்பாக இருந்தது. போல்ட் ஆக்ஷன் துப்பாக்கியை போல இது சக்திவாய்ந்தது கிடையாது என்றாலும், இது பயன்படுத்த எளிதானது" என்றார்
வருந்தவில்லை
மிக்ஹையில் கலாஷ்னிக்கோவ் ஒரு வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். அவருடன் கூடப் பிறந்தவர்கள் 19 பேர். இந்தக் கண்டுபிடிப்பால் அவருக்கு தனிப்பட்ட முறையில் பணம் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் அதேநேரம் சோவியத் அரசும், பின்னாளில் ரஷ்ய அரசும் அவருக்கு அரச விருதுகளை அளித்து கௌரவித்துள்ளன.
சோவியத் ஒன்றியத்திலும், பிறகு சீனாவில் டி 56 என்ற பெயரிலும், இன்ன பல நாடுகளிலும் ஏகே துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டன. 10 கோடிக்கும் அதிகமான துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட நாடுகளும், பல கிளர்ச்சிக் குழுக்களும் இந்த துப்பாக்கியை ஒரு கட்டத்தில் பயன்படுத்தின.
இன்னமும் இவை ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கின்றன.
ஏராளமான உயிர்சேதத்தை இந்த துப்பாக்கி விளைவித்துள்ளது. இருந்தும் இந்த துப்பாக்கியை கண்டுபிடித்தற்காக தான் வருந்தவில்லை என்றே இறுதிவரை கலாஷ்னிக்கோவ் கூறிவந்தார்.
'நாட்டைக் காக்க நான் தயாரித்த ஆயுதத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதற்கு நான் பொறுப்பேற்க முடியாது' என்றே அவர் தொடர்ந்து கூறிவந்தார்.
ஏகே 47 துப்பாக்கி தற்போது பாகிஸ்தான் போன்ற நாடுகளில் குடிசைத் தொழிற்சாலைகளில் கூட தயாரிக்கப்படுகிறது. தயாரிப்பாளர் இறந்து போனாலும், ஏகே 47-இன் பயன்பாடுகள் இன்னும் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும்.
இராக்கில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் : பலர் பலி
இராக்கில் இப்படியானத் தாக்குதல்கள் தொடருகின்றன.
இராக்கின் தலைநகர் பாக்தாதில் கிறிஸ்த்தவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது இருபது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
முதலாவது குண்டுத் தாக்குதல் கிறிஸ்துமஸ் வழிபாட்டில் கலந்து கொண்டு பக்தர்கள் ஒரு தேவாலயத்தைவிட்டு வெளியே வரும்போது நடைபெற்றது.
அதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
இரண்டாவது குண்டு, பெரும்பாலும் கிறிஸ்த்தவர்கள் வசிக்கும் ஒரு பகுதிக்கு அருகிலுள்ள ஒரு திறந்தவெளிச் சந்தையில் வெடித்
சிதறியது.
இந்த இரண்டுத் தாக்குதல்களிலும் 25 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
எனினும் இதுவரை இந்தத் தாக்குதல்களுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
இராக்கில் சிறுபான்மையினராக இருக்கும் கிறிஸ்தவ சமூகத்தை இலக்கு வைத்து அல் கயீதாவும் இஸ்லாமியத் தீவிரவாதிகளும் கடந்த காலங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
போர்க்கால சேத கணக்கெடுப்பு: ததேகூ-வின் நிராகரிப்பும் அரசின் பதிலும்
இலங்கையில் போர்க்கால இழப்புகள் பற்றிய அரசாங்கத்தின் கணக்கெடுப்பு மீதான விமர்சனங்களையும் சந்தேகங்களையும் இலங்கை புள்ளிவிபர திணைக்களம் நிராகரித்துள்ளது.
கணக்கெடுப்பு நடைமுறை பற்றிய அறிவின்றியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை நிராகரிப்பதாக நேற்று புதன்கிழமை அறிவித்ததாகவும் புள்ளிவிபர திணைக்களத்தின் தலைமை இயக்குநர் டிசிஏ குணவர்தன பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின்படியே, இலங்கையின் போர்க்கால இழப்புகள் குறித்து கடந்த ஒருமாத காலமாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
1982-ம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் மோதல் சூழ்நிலைகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள், வேறு ஆட்சேதங்கள் மற்றும் சொத்து இழப்புகள் தொடர்பில் நாடெங்கிலும் வீடுவீடாகச் சென்று அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர்.
ஆனால் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட விதம் மற்றும் அதன்போது மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களும் சந்தேகங்களும் எழுப்பப்பட்டன. இந்தக் கணக்கெடுப்பில் நம்பகத்தன்மை இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு கூடி முடிவெடுத்துள்ளது.
கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டவர் இந்திய ஊடகவியலாளரா?
இலங்கையின் கிளிநொச்சிப் பகுதியில் சுற்றுலா விசாவில் வந்து பாதுகாப்புப் படையினர் நிலைகொண்டுள்ள இடங்களை படம் பிடித்ததற்காக இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதை உறுதிப்படுத்திய இலங்கை காவல்துறையின் பேச்சாளர் அஜித் ரோஹன, சுற்றுலா விசாவில் வந்த ஒருவர் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடன் இடங்களை புகைப்படம் எடுத்த காரணத்தாலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டங்களை அந்த நபர் மீறினார் என்றும், நாளை மேலதிக நடவடிக்கைக்காக அவரை குடிவரவு அதிகாரிகளிடம் காவல்துறையினர் ஒப்படைப்பார்கள் என்றும் ரோஹன தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும், 24 வயதான அவர் தன்னை ஒரு ஊடகவியலாளர் என்று தெரிவிக்கவில்லை என்றும் கூறும் காவல்துறை பேச்சாளர், சுற்றுலா விசாவில் வருபவர்கள் இவ்வகையான நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்றும் சுட்டிகாட்டினார்.
நண்பர் என்கிறார் சிறீதரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அந்த நபருடன் பயணித்தார் என்றும், அவர்கள் ஏன் வட மாகாணத்தில் அதிமுக்கியமான பாதுகாப்பு தொடர்பான இடங்களை படம் எடுக்க வேண்டியத் தேவை ஏற்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார் அஜித் ரோஹன.ஆனால் பிபிசி தமிழோசையிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் தனது நண்பர் என்றும், வட மாகாண சபையின் உறுப்பினர் பசுபதி பிள்ளை, பிரதேச சபை உறுப்பினர் தயாபரன் உட்பட தமது குழுவினருடன் வேரவில், வலைப்பாடு, கிராஞ்சி, ஜெயபுரம் போன்ற பகுதிகளுக்கு தான் பயணித்தபோது, அவரும் உடன்வந்தார் என்பதையும் உறுதிப்படுத்தினார்.
அந்தப் பகுதியிலுள்ள மக்களைச் சந்திப்பதற்காகவும், அவர்களுடன் சில விஷயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவும் தாம் சென்றிருந்த்தாக சிறீதரன் தெரிவித்தார்.
இராணுவ முகாம்கள் இருக்கும் பகுதிகளுக்கு தாங்கள் செல்லவில்லை என்றும் அவர் கூறினார்.
கைது செய்யப்பட்டுள்ள தனது நண்பர் இதற்கு முன்பும் ஒரு முறை இலங்கைக்கு வந்து சென்றுள்ளார் எனவும் தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)





















