Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, February 18, 2014
ராஜீவ் கொலையாளிகள் 3-பேரின் தூக்குத்தண்டனை ரத்து : உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இதில் காலதாமதமாக முடிவு எடுத்ததால் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் 3 பேர் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
-----------------------------------------------------------------------------
மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி, யுக்முத் சவுத்திரி ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார் லூத்ரா வாதாடினார். இருதரப்பு வாதமும் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
------------------------------------------------------------------------------------
இந்நிலையில், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், அவர்களின் தூக்குத் தண்டனை ஆயுள்தண்டனையாக குறைத்தும் உத்தரவிட்டது.
காந்திய மக்கள் இயக்கத்தை நடத்தி வந்த நீங்கள், இயக்கமாக இருந்தால் எதையும் சாதிக்க முடியாது என்பதால்தான் அதனை அரசியல் கட்சியாக மாற்றி யிருக்கிறீர்களா?
பெரியாரின் சுயமரியாதைத் திருமணங்கள் சட்ட வடிவம் ஆக்கப்பட வேண்டுமென தொடர்ச்சியாக வீதி களில்
நின்று நீண்டகாலமாக குரல் கொடுத்தன இயக்கங் கள். ஆனால், அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகுதான் அதற்கு சட்ட வடிவம் கொடுக்க முடிந்தது. தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் ஆலயப் பிரவேசம் செய்ய ஆயிரம் தடைகள் இருந்தன. ராஜாஜி ஆட்சியில் அரிஜன ஆலயப் பிரவேச சட்டம் வந்த பிறகுதான் தலித் மக்களின் கோயில் நுழைவை சாதித் திமிர் பிடித்தவர் களால் தடுக்க முடியவில்லை. எனவே அதிகாரத்தின் சாவி அரசியலில் தான் இருக்கிறது. கட்சி அரசியலுக்கு நான் புதியவன் அல்ல. 1967-ல் காமராஜருக்கு அருகில் நின்றது முதல் கடந்த 40 ஆண்டுகாலம் அரசியலில்தான் இருக்கிறேன். காந்திய மக்கள் இயக்கம் ஆரம்பித்த 4 ஆண்டுகளில் 3 லட்சம் இளைஞர்கள் மற்றும் மாணவர் கள் இந்த இயக்கத்தில் இணைந்து பணி செய்திருக் கிறார்கள். ஆம் ஆத்மி வருகைக்குப் பிறகு இளைஞர்களி டம் மன மாற்றம் வந்திருக்கிறது. ஒரு வள்ளலார் மடம் போலவோ சர்வோதய சங்கம் போன்றோ நாம் செயல்படுவதால் பெரிய மாற்றங்களையோ விளைவுகளையோ உருவாக்கிவிட முடியாது. அதனால், இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற வேண்டும் என்று இளைஞர்கள் கேட்டுக் கொண்டதால் மாற்றியிருக்கிறோம்.
---------------------------------------------------------------------------------------------
அப்படியானால் தமிழகத்தின் ஆம் ஆத்மி கட்சியா நீங்கள் ?
---------------------------------------------------------------------------------------------
ஊழல் எதிர்ப்பு என்கிற ஒன்றைத் தவிர வேறு எந்தப் பார்வையும் இல்லாத கட்சி ஆம் ஆத்மி. ஆனால், நம் சமூகத்தில் ஓராயிரம் பிரச்சினைகள் இருக்கிறது.
பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கு ரத்தாகுமா? சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு!
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரிய பேரறிவாளன் உள்பட மூன்று பேரின் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்க உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து 3 பேரின் சார்பில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், தூக்குத்தண்டனையை ரத்து செய்ய கோரி முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட தங்களது கருணை மனுக்கள் மீது நீண்ட காலமாக முடிவு எடுக்காமல் இருப்பதால், தண்டனையை குறைக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. பேரறிவாளன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை ஏற்கனவே உச்ச நீதிமன்ற நீதிபதி ஜி.எஸ்.சிங்வி விசாரித்து வந்தார். அவர் ஓய்வு பெற்ற பிறகு, இந்த வழக்கு முதல் முறையாக தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இவ்வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. முன்னதாக கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் நீண்ட காலதாமதம் செய்யப்படுவது குறித்து அண்மையில் அதிருப்தி வெளியிட்டிருந்த உச்ச நீதிமன்றம், இதுபோன்ற வழக்கில் இந்த காலதாமதம் காரணமாக தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கி இருந்தது. இதன் அடிப்படையில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரது தூக்குத்தண்டனையும் குறைக்கப்படலாம் என தமிழார்வலர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
வட கொரியக் கொடுமைகள்: ஐ.நா அறிக்கை வருகிறது
வட கொரியப் பிரஜைகள் அவர்களின் அரசினால் படும் கொடுமையான , வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத சித்ரவதைகளைப் பற்றியது என்று கூறப்படும் நிலைமகள் பற்றிய ஒரு அறிக்கையை ஐ.நா மன்றம் இன்று வெளியிடவிருக்கிறது.
-------------------------------------------------------------------------------------------------
வட கொரியாவில் நிலவும் நிலைமைகள் குறித்து ஓராண்டு காலமாக விசாரணை ஒன்றை நடத்திய வல்லுநர்கள் , தாங்கள் அங்கு பரவலான மற்றும் அமைப்பு ரீதியாக ஒழுங்குபடுத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் நடப்பதைக் கண்டறிந்திருப்பதாகவும், இவை மிகவும் பாரிய அளவில் மோசமானவை என்றும், இவை குறித்து உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாங்கள் நம்புவதாகவும் கூறியிருக்கின்றனர்.
-------------------------------------------------------------------------------------------------
சிறை முகாமில் இருந்த ஒரு பெண் தனது குழந்தையைத் தானே தண்ணீருக்குள் மூழ்கடித்துக் கொல்ல நிர்ப்பந்திக்கப்பட்டதாகச் சாட்சியம் கூறியிருக்கிறார்.
குழந்தைகள் பிறந்ததிலிருந்தே சிறைவைக்கப்பட்டு, பட்டினி போடப்பட்டதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது.
-------------------------------------------------------------------------------------------------
மக்களை அச்சுறுத்தலின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்பது, ஒரு தேசிய அளவிலான கொள்கையாக இருப்பதைக் காட்டும் ஆதாரங்கள் இருப்பதை இந்த அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பட்ஜெட் தாக்கல், வரிச் சட்டங்களில் நேரடி மாற்றம் இல்லை
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் கடும் அமளிக்கு இடையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெள்ளியன்று 2014-15 ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
------------------------------------------------------------------------------------------
இதை தாக்கல் செய்யும் பொழுது பேசிய மத்திய நிதியமைச்சர், உலகின் மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்றும், கடந்த சில ஆண்டுகளாக சவாலாக இருந்த நடப்புக் கணக்கு பற்றாக்குறை தற்போது கட்டுப்பாட்டில் வந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
------------------------------------------------------------------------------------------
புதிய பட்ஜெட்டில் அரிசியை சேமித்தல், கையாளுதல் போன்ற சேவைகளுக்கான சேவை வரி ரத்து செய்யப்படுவதாக அவர் அறிவித்தார்.
------------------------------------------------------------------------------------------
முன்னதாக, அரசி மீதான சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்தும் வலியுறுத்திவந்தது என்பது குறிப்பிட்தக்கது.
------------------------------------------------------------------------------------------
இந்தியாவில் சிறிய வகை கார்கள் மீதான உற்பத்தி வரி 12 சதவிகிதத்திலிருந்து இருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------
மேலும் வரிச் சட்டங்களில் மாற்றம் இல்லை என்றாலும் மறைமுக வரிகளில் மாற்றம் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ரூ.21,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ரயில்வே துறைக்கான உறுதுணைத் தொகை ஒதுக்கீடு ரூ.29,000 கோடி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------
உணவு மானியத்துக்கு ரூ.1,16,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------
வடகிழக்கு மாநிலங்கள், ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1200 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------
இராணுவத்தினர் ஓய்வூதியம்
------------------------------------------------------------------------------------------
குறிப்பிடத்தக்க ஒரு திட்டமாக 2015-லிருந்து ராணுவத் துறையினருக்கு 'ஒன் ரேங்க் - ஒன் பென்ஷன்' என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பல லட்சக்கணக்கான எண்ணிக்கையிலுள்ள ஓய்வு பெரும் இராணுவ துறையினருக்கு பயனளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
------------------------------------------------------------------------------------------
இதேவேலை இந்த பட்ஜெட் இந்த அரசாங்கத்தின் கடைசி பட்ஜெட் என்றும், தற்போதைய அரசாங்கம் இதில் குறிப்பிடவாறு பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்றும் எதிர்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.
அமெரிக்காவும், சீனாவும் வருங்காலத்தில் காலநிலை மாற்றத்திற்கு எதிராக இணைந்து தொழிற்பட முடிவெடுத்துள்ளது.
அமெரிக்காவும், சீனாவும் வருங்காலத்தில் காலநிலை மாற்றத்திற்கு எதிராக இணைந்து தொழிற்பட முடிவெடுத்துள்ளது.
------------------------------------------------------------------------------------------------
சென்ற வெள்ளிக்கிழமை சீனா சென்றிருந்த அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெரி, சீனா நாட்டு ஆட்சியாளர்களுடன் சுற்றுப்புறச் சூழற் பாதுகாப்புப் பற்றியும், வட கொரியாவின் அணு ஆயுதக் கொள்கை பற்றியும் கலந்துரையாடினார்.
------------------------------------------------------------------------------------------------
வட கொரிய அணு ஆயுதக் கொள்கையில் உலகம் விரும்பத்தக்க மாற்றத்தை வரவழைக்க சீனா முயலுமென உறுதியளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 2020ஆம் ஆண்டிற்குப் பின், இரு நாடுகளும் காபனீர் ஒக்சைட் வெளியேற்றத்தை சகல வழிகளிலும் குறைப்பதற்கான உடன்பாடும் எட்டப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் பரீஸில் இடம் பெறவிருக்கும் உலகக் காலநிலை பற்றிய உச்சி மாநாட்டில் இரு நாடுகளும் தங்கள் ஒத்துழைப்பை முழுமையாகத் தெரிவிக்க முடிவு செய்துள்ளது.
------------------------------------------------------------------------------------------------
1997 இல் கியோட்டோ(Kyoto) வில் முடிவெடுக்கப்பட்ட உலகக் காலநிலை பற்றிய ஒப்பந்தம், வருகின்ற வருடம் உலக நாடுகளால் பாரீஸில் வைத்துக் கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நாடுகள், காபனீர் ஒக்சைடை வெளியேற்றும் வீதத்தை மிகவும் கணிசமாகக் குறைப்பதற்கான வழிமுறைகளை ஒப்பந்தத்தில் கூறப்பட்டதுபோல் கடைப்பிடிக்க முன்வரவேண்டும்.
------------------------------------------------------------------------------------------------
சீனாவும் அமெரிக்காவும் ஒப்பந்தத்தின்மேல் பல விமர்சனங்களை வைத்து, அதனை அலட்சியம் செய்தும் இந்த ஒப்பந்தமானது தங்கள் நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியையும் உற்பத்தியையும் பாதிக்குமென வாதிட்டும் வந்தனர். தற்சமயம் இரு நாடுகளிடமிருந்தும் கியோட்டோ ஒப்பந்தத்திற்கு மிகவும் உற்சாகமான ஆதரவு கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கதென ஜ.நா.வின் இக்காலநிலை ஒப்பந்த அமைப்பாளர் குழு தெரிவிக்கிறது.
2ஆம் இணைப்பு- மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.- குளோபல் தமிழ்ச்செய்தியாளர் :
ஜனாதிபதி ஆணைக்குழுவின் காணாமல் போனோர் தொடர்பிலான சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கையின் போது இராணுவத்தினர் மேற்கொண்ட அடாவடி நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் துணிந்து தமது சாட்சியங்களை முன்வைத்தனர்.
---------------------------------------------------------------------------------------------
அவற்றில் சில சாட்சியங்கள் வருமாறு, யாழ்ப்பாணம் புங்கங்குளம் பகுதியைச் சேர்ந்த தங்கராசா ரணேஸ் என்ற இளைஞரின் தாயார் தனது வாக்குமூலத்தில், வயறிங் வேலை செய்யும் எனது மகன் 1996-08-27 அன்று நாவலர் வீதி ஊடாகச் சென்றுகொண்டிருந்த போது லலித், ராஜபக்ஷ ஆகிய இரண்டு இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டார் என்பதை சம்பவத்தினை நேரடியாகப் பார்த்த மக்கள் எனக்குத் தெரிவித்தனர். அவர் காங்கேசன்துறை இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக தாம் அறிந்ததாகவும் இன்றுவரையில் அவர் குறித்த எந்தத் தகவலும் இல்லை எனத் தெரிவித்தார்.
---------------------------------------------------------------------------------------------
கொழும்புத்துறையைச் சேர்ந்த மரியகொறற்றி என்ற தாய் தனது சாட்சியத்தில், 19-12-2006 அன்று தனது மகன் திலீபன் கல்வி நிலையம் ஒன்றுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது வீதியில் இராணுவத்தினர் மறித்துக் கதைத்தாகவும் அதனை தான் கண்ணுற்றதாகவும் பின்னர் தனது மகனைக் காணவில்லை என்று தெரிவித்தார். தனது மகன் காணாமல் போனமை தொடர்பில் சுண்டிக்குளி இராணுவ முகாமிற்கு சென்று கேட்டபோது அவரை விடுதலைப்புலிகள் கொண்டு சென்றுவிட்டனர் என்று இராணுவத்தினர் தெரிவித்த போது, அருகருகாக 25 முகாம்களில் இருக்கும் நீங்கள் ஏன் விடுதலைப்புலிகளைப் பிடிக்கவில்லை? என்று தான் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்தார்.
---------------------------------------------------------------------------------------------
நேசம்மா என்ற தாய் தனது சாட்சியத்தில், 1996-07-29 அன்று எங்களுடைய வீட்டிற்கு பாசையூர் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் வந்தனர். அப்போது எனது மகன் ஜெஸ்லி (வயது 21) படித்துக்கொண்டிருந்தார். வந்தவர்கள் எங்கள் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனப் பார்க்கப் போவதாகத் தெரிவித்து எங்கள் அனைவரையும் அழைத்து ஒரு அறையில் வைத்து மூடிவிட்டுச் சென்றனர். சிறிது நேரத்தில் திரும்ப வந்து எனது மகன் ஜெஸ்லியை பிடித்துச் சென்றனர். அவர் தொடர்பில் இதுவரையில் எந்தத் தகவலும் இல்லை அவரை கண்டறிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
---------------------------------------------------------------------------------------------
கொழும்புத்துறையைச் சேர்ந்த இராசேந்திரம் நாகேஸ்வரி என்ற தாய் தனது சாட்சியத்தில், 2006-19-12 அன்று நான்கு வாகனங்களில் நள்ளிரவு நேரம் எங்களது வீட்டிற்கு வந்த இராணுவத்தினர் குடும்ப அட்டையைக் காட்டி அதில் உள்ளவர்களைப் பார்க்கப்போவதாகக் கூறிக் கொண்டு அங்கு நின்றிருந்த எனது மகன் தவரூபன் (வயது 23) அவரை பிடித்துச் சென்றனர். ஜனாதிபதி ஆணைக்குழுவில் மக்கள் ஒவ்வொருவரும் தமது முறைப்பாடுகளை உருக்கமாக முன்வைத்த போது அங்கு நின்றிருந்த மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
இலங்கைக்கான உதவிகளை இந்தியா அதிகரித்துள்ளது:-14130 கோடி இந்தியா ரூபா
இலங்கைகான உதவிகளை இந்தியா அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-------------------------------------------------------------------------------------------------
இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த உதவிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
-------------------------------------------------------------------------------------------------
இலங்கைக்கு உதவி வழங்குவதற்காக மேலதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------
இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்காக 500 கோடி இந்திய ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------
கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் கூடுதலான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------
இந்திய வெளிவிவகார அமைச்சின் செலவுகளுக்காக 14130 கோடி இந்தியா ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------
இதில் 8335 கோடி இந்திய ரூபா, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வெளிநாடுகளுடான உறவுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------
இலங்கைக்கு ஆதரவாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது ?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு ஆதரவாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------
இலங்கையின் நட்பு நாடுகளினால் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளன.
------------------------------------------------------------------------------------------
இந்த தீர்மானத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கைக்கு ஆதரவாகவும் தீர்மானமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது,
------------------------------------------------------------------------------------------
இவ்வாறான தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளமை பற்றி தமக்கு தெரியும் எனவும், அது இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------
நட்பு நாடுகளினால் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றும் திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாகவும், இதற்கு அரசாங்கத்தின் தொடர்பு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
------------------------------------------------------------------------------------------
ஏற்கனவே, சீனா, ரஸ்யா, பாகிஸ்தான், இந்தோனேஷிய போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு உயர் மட்ட இலங்கை ராஜதந்திரிகள் குழுவொன்று அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத் தடைகளுக்காக அஞ்சப் போவதில்லை – அரசாங்கம்
பொருளாதாரத் தடை குறித்த எச்சரிக்கைகளுக்கு அஞ்சப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
--------------------------------------------------------------------------------------------------
மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான அழுத்தங்களின் அடிப்படையில் எந்தவொரு நாடும் பொருளாதாரத் தடை விதித்தால் அதற்காக அடி பணியப் போவதில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------
யுத்த நிறைவின் பின்னர் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------
நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும், மீளவும் பயங்கரவாதம் தலைதூக்க அனுமதிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு அழுத்தங்களுக்காக அடிபணிந்து செயற்பட மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------
நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களை எதிர்க்க அனைவரும் அணி திரள வேண்டுமென அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
எம்முடன் பேசும்போது அழகாக பேசுகிறார் - வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறை வேற்றவில்லை:சி.வி விக்னேஸ்வரன்-
வடக்கு மாகாணசபை நிர்வாகம் தொடர்பில் ஜனாதிபதி ஏற்கெனவே அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் தீர்வு கிடைக்காத பட்சத்திலேயே தமிழர்கள் சர்வதேச சமூகத்திடம் தீர்வுகேட்டு நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------------
யாழ்ப்பாணத்தில் பிபிசி செய்தியாளருக்கு அளித்திருந்த செவ்வியொன்றில் கருத்து வெளியிட்ட அவர் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நடந்துள்ளதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லாதபோது, அது தொடர்பில் சர்வதேச விசாரணை கோருவதில் என்ன தவறு என்றும் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
--------------------------------------------------------------------------------------------
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வடக்கு மாகாணசபைக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
--------------------------------------------------------------------------------------------
'எங்களோடு (ஜனாதிபதி) பேச்சுவார்த்தை நடத்துகின்றபோது, எங்களுக்கு பலவற்றைத் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் எங்களுக்கு கடைசியில் எதுவுமே கிடைக்கவில்லை. எங்களோடு, நல்லபடியாக, அழகாக பேசினார். ஆனால் எதனையுமே இதுவரை வழங்கவில்லை' என்றார் விக்னேஸ்வரன்.
--------------------------------------------------------------------------------------------
வடக்கு மாகாணசபையின் நிர்வாகம் தொடர்பில் ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த விக்னேஸ்வரன்,
--------------------------------------------------------------------------------------------
இறுதிக்கட்டப் போரின்போது, என்னென்ன போர்க்குற்றங்கள் நடந்தன என்பதை அறிவதற்காக அரசாங்கம் முயற்சிக்கவில்லை என்றும் வடக்கு முதலமைச்சர் இதன்போது விசனம் தெரிவித்தார்.
--------------------------------------------------------------------------------------------
'வினை விதைத்தவர்கள் வினை அறுப்பர்'
--------------------------------------------------------------------------------------------
'இறுதிக்கட்டப் போர் பிரதேசத்துக்குள் இருந்து வெளியில் வந்த மக்களுக்கு, அங்கு என்னவெல்லாம் நடந்தன என்பது தெரியும். அதுபற்றி முழுமையாக விசாரணை நடத்தி உண்மை என்ன என்று தெரிந்துகொள்ளாமல், எமது அரசாங்கம் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.. எமது இராணுவத்தினர் நல்லவர்கள். என்று சொல்லிவந்தாலும் உண்மை என்பது ஒருபோதும் இல்லை என்று ஆகமுடியாது தானே' என்றார் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன்.
--------------------------------------------------------------------------------------------
தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்வதற்கான உரிமை, வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உள்ளது என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
--------------------------------------------------------------------------------------------
'இறுதிக் கட்டப் போரின் போது என்ன நடந்தது என்பது அங்கிருந்து வந்த மக்களுக்குத் தெரியும்':
'உண்மையை அறிந்துகொள்ள வேண்டும். எவராவது குற்றம் புரிந்திருந்தால் அவர்களுக்குத் தண்டனை கிடைக்கவேண்டும்' என்றும் கூறிய விக்னேஸ்வரன், வினை விதைத்தவன் வினை அறுப்பான்..' என்ற அர்த்தப்பட சிங்களப் பழமொழி ஒன்றையும் கூறிக்காட்டினார்.
--------------------------------------------------------------------------------------------
வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற தமது கோரிக்கையும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறுகின்ற முதலமைச்சர், வடக்கில் உள்ள இராணுவ சிப்பாய்களின் எண்ணிக்கை தொடர்பில் ஜனாதிபதியும் ஜனாதிபதியின் செயலாளரும் ஆளாளுக்கு முரண்பட்டத் தகவல்களைக் கூறுவதாகவும் தெரிவித்தார்.
--------------------------------------------------------------------------------------------
'இங்கு இராணுவத்தினர் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்று நாங்கள் கூறுகின்றோம். ஆனால், எமது ஜனாதிபதியோ இங்கு யாழ்ப்பாணத்துக்கு வந்து 12 ஆயிரம் பேர் தான் இருக்கிறார்கள் என்கிறார். அதற்கு மறுநாளே, ஜனாதிபதியின... ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க 70 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்றார்' என்றும் முதலமைச்சர் கூறினார்.
--------------------------------------------------------------------------------------------
'மக்களின் காணிப் பிரதேசங்களை எல்லாம் இராணுவம் எடுத்துக்கொண்டு காய்கறி பயிர் செய்கிறது. மீன்பிடியிலும் இராணுவத்தினர் தலையிடுகின்றனர். எங்கள் மக்களுக்கு அவர்கள் இடமளிப்பதில்லை. ஏ 9 வீதியில் போய் பார்க்கும்போது, கடைகளை வைத்திருப்பவர்கள் யார் என்றால் இராணுவத்தினர் அல்லது இராணுவத்தின் உறவினர்கள் அல்லது அவர்களின் நண்பர்கள். வடக்கு மாகாணம் முழுமையாக இராணுவத்தின் அதிகாரத்துக்குக் கீழ் இருக்கும்போது, நாங்கள் எப்படி எங்களின் வேலைகளை முன்னெடுத்துச் செல்வது' என்றும் அவர் தெரிவித்தார்.
--------------------------------------------------------------------------------------------
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது செயற்படுகின்ற விதம் குறித்து பெரும்பான்மை சிங்கள மக்கள் சரியாக புரிந்துகொள்ளாமல் இருப்பதாகவும் கூறினார்.
--------------------------------------------------------------------------------------------
'நாட்டை பிரிப்பதற்காக அல்ல, அதிகாரத்தை பகிர்ந்தளிக்குமாறே நாங்கள் கேட்டுவருகின்றோம்' என்றும் அவர் தெரிவித்தார்.
--------------------------------------------------------------------------------------------
அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில், அந்தப் பிரச்சனைகளை சர்வதேச சமூகத்திடம் கொண்டுசென்று தீர்வு காண்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் கூறினார்.
கிழக்கை மையப்படுத்தி நிலத்தை அபகரிப்பது ஏன்? - ஆவணப்படம்:-
இலங்கைத் தமிழர்களுக்கு புலிகளின் காலத்தில் கிடைக்காத வாழ்வு பரிசளிக்கப்பட்டு அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள் என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சொல்லிக் கொண்டிருக்கும் சூழலில்தான் நாளும் பொழுதும் தமிழர் தாயகம் அபகரிக்கப்படுகிறது. ஈழத்து மக்கள் இழந்த உரிமைகளுக்காக போராடினார்கள். இப்பொழுது போராட்டம் நடத்தியமைக்காக எஞ்சிய உரிமைகளும் அபகரிக்கப்படும் கட்டத்தில் இருக்கிறோம். நில அபகரிப்பே இன்றைய ஈழத்தின் மிக முக்கியமான பிரச்சினையாக எழுந்துள்ளது. இலங்கை சுகந்திரம் அடைவதற்கு முன்பாகவே திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்கள் தொடங்கிவிட்டன. தமிழ் மக்கள் தமது உரிமையைக் கோரத் தொடங்கிய காலத்தில் நில அபகரிப்புக்கள் இன்னுமின்னும் விரிவுபடுத்தப்பட்டன. ஏனெனில் உரிமை மறுக்கவும் ஒரு இனத்தை அழிக்கவும் நில அபகரிப்பே தகுந்த வழியெனச் இலங்கையை ஆட்சி செய்யும் அரசுகள் நினைக்கின்றன.
-------------------------------------------------------------------------------------------------------
இலங்கையில் மகிந்த ராஜபக்ச ஆழ்வதானால்தான் ஜனநாயகமும் உரிமைகளும் மறுக்கப்படுவதாக ஒருபோதும் சொல்லிவிட இயலாது. இலங்கையை யார் ஆட்சி செய்தாலும் ஜனநாயகம் மறுக்கப்படுகிறது. உரிமை மறுக்கப்படுகிறது. சிங்கள பௌத்த ஆட்சி ஒன்றை நிறுவுவதிலேயே இலங்கையை ஆட்சி செய்த எல்லா ஆட்சியாளர்களும் அக்கறையாய் இருந்துள்ளனர். யார் ஆட்சி செய்தாலும் தமிழர் நிலத்தை அபகரிப்பதில் குறியாய் இருந்துள்ளனர்.
-------------------------------------------------------------------------------------------------------
ஈழத்தின் கிழக்குப் பகுதி நில அபகரிப்பால் கிட்டத்தட்ட இழக்கப்பட்ட ஒரு மாகாணமாகிவிட்டது. அம்பாறை மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தமிழ் கிராமங்கள் சிங்களக் கிராமங்களாக மாற்றப்பட்டுவிட்டன. இப்பொழுது அந்தக் கிராமங்களுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. அந்தக் கிராமங்களுக்குப் பின்னால் சிங்களக் கதைகளும் பெளுத்தக் கதைகளும் புனையப்படுகின்றன.
-------------------------------------------------------------------------------------------------------
அண்மையில் நான் திருகோணமலைக்குச் சென்றிருந்தேன். அது ஒரு பௌத்த நகரத்தைப் போலக் காட்சி அளிக்கிறது. எல்லாமும் சிங்கள மயமாகவும் பௌத்த மயமாகவும் காட்சி அளிக்கிறது. திருகோணமலை தமிழ் மக்களின் தலைநகராக அறிவிக்கப்பட்ட பகுதி. திருகோணமலை ஈழத் தமிழர்களின் வரலாறு பொதிந்த பூமி. அங்குள்ள திருக்கோணேச்சரர் ஆலயம் பல்லவர் காலத்தில் பாடல் பெற்ற தலம். அதுமட்டுமின்றி அங்கு பல தொன்மங்கள் இருக்கின்றன. கன்னியா வெந்நீருற்று, இராவணண் கல்வெட்டு என்று பல இடங்கள் வலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. திருகோணமலையை சிங்களத்தில் 'திருக்கணாமலே' என்று சிங்களவர்கள் அழைக்கப்படுகின்றனர். திருகோணமலை என்பதைவிடவும் 'திருக்கணாமலே' என்று அழைக்கப்படும் சத்தம்தான் அந்த திருமலை நிலத்தில் அதிகமாகக் கேட்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------
திருகோணமலையில் இருந்த கன்னியா வெந்நீருற்று தமிழ் மக்களின் தொன்மை வாய்ந்த இடங்களில் ஒன்று. அது இன்று சிங்கள பௌத்த அடையாளத்தால் முற்றாக மாறிப் போயிருக்கிறது. அங்கிருந்த தமிழ் பெயர்ப்பலகை நீக்கப்பட்டு தற்பொழுது சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் பெயர்பலகை வைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பெயர்பலகைப் பிரச்சினை அங்கு பெரும் பிர்சினையாக உருவெடுத்தது. ஈற்றில் சிங்கள ஆங்கலத்திலேயே பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது. விடுலைப் புலிகள் அந்தக் கிணற்றை தாக்கினார்கள் எனவும் அக்கிருந்த பௌத்த விகாரையை தாக்கினார்கள் எனவும் அதை புனரமைக்க நிதி உதவி செய்யும்படி சிங்களத்தில் எப்பொழுதும் ஒரு ஒலிபெருக்கி சொல்லிக்கொண்டே இருக்கிறது. அங்கு பௌத்த விகாரை இப்பொழுதே அமைக்கப்படுகிறது. முன்பு அந்தப் பகுதியில் தமிழர்களே வசித்தார்கள். ஆனால் சிங்கள பௌத்த பிக்குகள் புலிகள் எதையோ அழித்தார்கள் என்று சொல்லி நிதி சேகரித்;துக் கொண்டிருக்கிறார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------
கவிஞர் ஈழவாணி திருகோணமலைக்குச் சென்ற அனுபவம் பற்றி தனது பூவரசி இதழில் எழுதியிருந்தார். தான் திருகோணேச்சரர் ஆலயச் சூழலில் நின்றபோது சில சிங்களவர்கள் அந்த ஆலயம் பற்றி பேசிக்கொண்டிருந்ததை தன் குறிப்பில் பதிவு செய்திருக்கிறார். திருகோணேச்சரர் ஆலயம் புத்தர் ஆலயம். தமிழர்கள் அதைக் கைப்பற்றி சிவன் ஆலயமாக மாற்றிவிட்டார்கள் என்று பேசிக் கொண்டிருந்ததாக குறிப்பிடுகிறார். இவ்வாறான புனைவுகள் நாளுக்கு நாள் வாய்க்கு வந்தபடி உருவாக்கப்படுகின்றன. இதுபோலவே சிங்களவர்கள் வரலாற்றில் பல புனைவுகளை உருவாக்குகின்றனர். அந்த வகையில் ஈழத் தலைநகர் திருகோணமலையிலும் இவ்வாறான புனைவுகளை உருவாக்கி அந்த அண்ணை முற்றுமுழுதாக ஆக்கிரமிக்க விரும்புகின்றனர்.
-------------------------------------------------------------------------------------------------------
திருகோணமலையில் நில அபகரிப்பின் உச்சம் அந்த நகரம்தான். திருக்கோணமலை ஆலயம் அமைந்திருக்கும் மலைப்பகுதியில் உள்ள ஈச்சரம்தான் அந்த நகரத்தினது அடையாளம். அது திருகோணமலைக்கு மாத்திரமல்ல கிழக்கு ஈழத்திற்கே பெருமையும் அழகும் தரும் மலையாக இருந்தது. இப்பொழுது அந்த மலையை மறைக்கும் அளவுக்கு புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் இப்பொழுது திருகோணமலை பெத்த சிங்கள நகரத்தைப் போலக் காட்சி அளிக்கிறது. ஈழத்தின் தலைநகரமாக திருமலையை போராளிகள் அறிவித்தார்கள். இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டபோதும் திருகோணமலை தலைநகரமாகவே குறிப்பிடப்பட்டது. இதனால் தமிழர் தாயகத்தை நோக்கி நில அபகரிப்புக்களை பெருமளவில் மேற்கொண்டுவரும் சிங்களப் பேரினவாதிகள் திருகோணமலையை முற்றாக அபகரிக்க முற்றுகையிட்டுள்ளனர்.
-------------------------------------------------------------------------------------------------------
இந்திய அரசின் அனல் மின்னிலையம் அமைப்பதற்காக திருகோணமலையில் சம்பூர் பகுதி மக்கள் தங்கள் கிராமத்தை முற்றாக இழந்தனர். திருமலையில் சிங்களவர்கள் இருக்கக்கூடிய பகுதி ஒன்றில் அனல் மின்னிலையத்தை அமைக்காது தமிழ் மக்களின் நிலத்தில் அமைக்க திட்டமிட்டது அந்தப் பகுதி தமிழர் நிலம் என்பதனாலேயே. ஏனெனில் இலங்கை அரசபை; பொறுத்தவரையில் தமிழ் மக்களின் நிலத்தை அபகரிப்பது அவ்வளவு எளிதானதாக மாறிவிட்டது. எப்படியாவது தமிழர் நிலத்தை அபகரிக்க வேண்டுமென்பதும் சிங்கள அரசின் திட்டம். 2006ஆம் ஆண்டு சம்பூர் பகுதியிலேயே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் யுத்தம் தொடங்கியது. நான்காம் ஈழ யுத்தத்தின் முதல் அகதிகள் சம்;பூர் மக்கள். புலிகளிடமிருந்து சம்பூரையும் யுத்தக் கைதிகளாகவுள்ள மக்களையும் மீட்கவே யுத்தம் தொடங்கப்பட்டது என்று அப்பொழுது இலங்கை அரசு குறிப்பிட்டது.
-------------------------------------------------------------------------------------------------------
ஆனால் இன்று ஏழு வருடங்கள் கடந்த பின்னரும் சம்பூர் மக்கள் தங்கள் நிலத்திற்குத் திரும்பவில்லை. உண்மையில் இலங்கை அரசு புலிகளின் பிடியிலிருந்து நிலத்தை மீட்கிறதா, இல்லை அபகரிக்கிறதா? எனவும் புலிகளிடம் பணயக் கைதிகளாக உளளனர் மக்கள் என்று சொல்லிக்கொண்டு மக்களை மீட்கிறதா அல்லது அகதிகளாக்கிறதா என்பதற்கு சம்பூர் கதையும் நல்லதொரு எடுத்துக்காட்டு. இலங்கை அரசின் கொடிய யுத்தததின் பின்னால் உள்ள அரசியலையும் விடுதலைப் புலிகள்மீது இலங்கை அரசு முன் வைக்கும் குற்றச்சாட்டுகளும் அதற்குப் பின்னால் உள்ள அரசியலையும் சம்பூர் கதையும் அம்பலமாக்குகிறது.
-------------------------------------------------------------------------------------------------------
தமிழ் மக்கள் தெற்கில் வாழ்ந்த இடங்கள் எல்லாம் சிங்களமயமாகிவிட்டது கதிர்காமம் ஆலயம் தமிழ் மக்கள் இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் என்பதற்கு ஆதாரமாக இருக்கிறது. இப்பொழுது கதிர்காம என இக் கோவில் அழைக்கப்படுவதுடன் இந்த ஆலயப் பூசகர் முதல் நிர்வாகம் எல்லாமே சிங்களவர்களிடம் சென்றுவிட்டது. புத்தளத்தில் அழகிய தமிழ்ப் பெயர்களுடன் உள்ள கிராமங்கள் பல இன்னமும் இருக்கின்றன. மதுரங்குளி, பலாவி, உடப்பு என்று பல கிராமங்கள் உள்ளன. புத்தளம், சிலாபம், அனுராதபுரம் எல்லாமே தமிழ்ப் பெயர் கொண்ட கிராமங்கள். இவை எல்லாமே சிங்கள தேசமாகிவிட்டது. பொலநுருவையில் உள்ள சிவன் ஆலயம் அழிந்து எச்சக்காடாக இருக்கிறது. சோழர்கள் இலங்கையைக் கைப்பற்றிய பொழுது அமைக்கப்பட்டது அந்த ஆலயம்.
-------------------------------------------------------------------------------------------------------
தெற்கில் உள்ள பல இந்து ஆலயங்கள் தினந்தேறும் அழிக்கப்பட்டு வருகின்றது. ஆலயங்கள் சேதப்படுத்துவது எதற்காக? கொள்ளை என்ற பெயரில் அந்த ஆலயங்கள் அழிக்கப்படுவதனால் அவற்றின் பூர்வீகம் மட்டுமல்ல அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் பூர்வீகமும் அழிக்கப்படுகிறது. வடக்கில் புத்தர் சிலைகளும் பௌத்த விகாரைகளும் அபிவிருத்தி செய்யப்படுகின்றபோது இலங்கைத்தீவு முழுவதும் உள்ள இந்து ஆயலங்கள் தாக்கப்படுகின்றன. ஈழத் தமிழர்களின் மதத் தொன்மங்களை அழிக்க வேண்டும் என்பது இதைச் செய்பவர்களின் திட்டம். தொன்மங்களை அழிப்பதன் மூலம் ஒரு இனத்தின் அடையாளங்களையும் அந்த இனத்தையும் அழிக்கலாம் என்று இதை மேற்கொள்பவர்கள் கருதுகின்றனர்.
-------------------------------------------------------------------------------------------------------
தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்பதற்கு பல்வேறு வரலாற்றுச்சான்றுகள் உண்டு. சிங்களவர்கள் குடியேறி வசிக்கும் பெரும்பலான இடங்களை நோக்கி தமிழ்மக்கள் செல்லவும் இல்லை. அவற்றை கோரவும் இல்லை. ஆனால் சிங்களவர்கள் தமிழர்கள் காலம் காலமாக பெரும்பான்மையாக வசித்து வந்த ஆட்சி செய்து வந்த, தமிழர்கள் கோரிய வடக்கு கிழக்கு தாயகப் பகுதியை - நோக்கி தொடர்ந்தும் படையெடுத்துக் கொண்டே இருக்கின்றனர். தமிழர்கள் பொலநுருவையையோ அம்பாந்தோட்டையையோ கேட்கவில்லை. அபகரிக்கப்படும் தங்கள் தாயகத்தை அபகரிக்க வேண்டாம் என்பதே தமிழர்களின் கோரிக்கை. ஆனால் தமிழர்களின் ஒட்டுமொத்த தாயகத்தையும் கடந்து வந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வலிகாமம் வடக்குப் பகுதியை இராணுவத்தினர் அபகரித்துள்ளனர்.
-------------------------------------------------------------------------------------------------------
தமிழர் தேசம் முழுவதையும் ஆக்கிரிக்க இலங்கை அரசு நினைக்கின்றது. ஆனாலும் கிழக்கின் பல பகுதிகளை வேகமாக அபகரிப்பது ஏன்? கிழக்கின் பெரும்பகுதி தெற்கை எல்லையாக கொண்டிருக்கிறது. கிழக்கில் ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்ககள் பலவும் முன்னெடுக்கப்பட்டு பல கிராமங்கள் சிங்களக் கிராமங்களாக மாறிவிட்டன. வடக்கு கிழக்கை இணைய முடியாத நிலமையை ஏற்படுத்தவே கிழக்கு மிக வேகமாக அபகரிக்கப்பட்டிருக்கிறது. வடக்கு கிழக்கிற்கு இடையே இடைவெளியை ஏற்படுத்தி வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தேசம் என்ற கோட்பாட்டை உடைக்க அரசு நினைக்கிறது. கிழக்கில் பல இடங்களில் தெற்கு மக்களுக்கு காணிகள் பகரிந்தளிக்கப்பட்டிருக்கின்றன.
அந்தப் பகுதியை சேராத மக்கள் பலருக்கு காணிகள் கொடுக்கப்பட்டிருப்பதால் அவர்கள் அங்கு பெயருக்கு ஒரு குடிசையை போட்டுவிட்டு தங்கள் சொந்த ஊருக்கச் சென்றுவிட்டனர். தமிழர் நிலத்தை அபகரிப்பதற்கு எதிராக போராடத் தொடங்கினோம். ஆனால் அந்தப் போராட்டத்தை ஒடுக்க அதே நில அபகரிப்பையே தீர்வாக இலங்கை அரசு நடைமுறைப்படுத்துகிறது. இது இலங்கை இனப்பிரச்சிiயை மேலும் மேலும் சிக்கலாக்கும் நிலைக்கே கொண்டு செல்லுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------
புலிகள் தொடர்பாகவும் பிரபாகரன் தொடர்பாகவும் பேசிக்கொண்டிருக்கும் பலருக்கு ஈழத்து நிலம் கொள்ளையடிக்கப்படுவது குறித்து ஏன் பேச இயலவில்லை? இன்றைய ஈழச் சூழலில் எது அவசியம்? ஈழத்தில் இன்று நிகழ்வது நிலத்தை அபகரிக்கும் போரல்லவா? இலங்கை ஜனாதிபதி நல்லிணக்கம், ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டு நிலத்தை அபகரித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு புறத்தில் சிலர் ஈழம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கையில் விடுதலைப் புலிகள் குறித்து தமது விமர்சனங்களை வைத்து ஆதாயம் தேடிக்கொண்டிருக்கின்றனர். விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நாட்களில் இந்தளவுக்கு நில அபகரிப்புக்கள் நடைபெறவில்லை. புலிகளின் ஆட்சி இல்லை என்றால் இன்று இருக்கும் பல பகுதிகளை நாம் இழந்திருக்கககூடும்.
-------------------------------------------------------------------------------------------------------
சிங்ளவர்கள் விரும்பி காணிகளை விலைக்கு வாங்கி தமிழ் ஈழத்தில் குடியேறுவதை தமிழர்கள் எதிர்க்கவில்லை. தமிழர்களின் தாயகத்தை அழிக்க வேண்டும் அபகரிக்க வேண்டும் என்று சிங்கள அரசின் திட்டத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட வலிந்த சிங்களக் குடியேற்றங்களையே எதிர்க்கிறார்கள். தமிழ் மக்களின் நிலங்களை பறித்து அவர்களை அகதியாக்கி அவர்களின் நிலத்தில் இராணுவத்தையும் சிங்களவர்களையும் குடியேற்றுவதையே தமிழ் மக்கள் எதிர்க்கிறார்கள். சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் சிங்கள மக்களுக்கு குற்ற உணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளை தமிழ் மக்கள் மத்தியில் இதுவே மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------
ஈழ மக்களைப் பொறுத்தவரையில் நிலம் என்பது மிகப் பெரிய கனவு. அதுவே அவர்களிடம் எஞ்சியுள்ள ஒன்று. அதுவே அவர்கள் இன்னமும் வாழவும் மீளவும் நம்பிக்கையளிக்கும் மூலதனம். எந்த ஒரு மக்கள் கூட்டமும் தாம் காலம் காலமாக பூர்வீகமாக வாழும் நிலத்தை யாரும் பறிக்கும்போது பெரும் துயரத்திற்கும் ஆவேசத்திற்கும் உள்ளாகின்றனர். ஈழத்துக் கிராமங்கள் பலவற்றில் இந்த துயரமும் ஆவேசமும் கிளர்ந்திருக்கின்றன. அறிவிக்கப்பட்ட ஆயுத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இலங்கை அறிவிக்கப்படாத நில அபரிப்பு யுத்தத்தை இன்னமும் நடத்திக்கொண்டே இருக்கிறது. நிலத்தை அபகரித்தல் என்பது இனத்தை அழித்தலுக்கு ஒப்பானது. இலங்கை அரசின் மிகப் பெரும் செயற்பாடு இதுவே.
-------------------------------------------------------------------------------------------------------
இனப்படுகொலை என்பது முடிந்துபோன ஒன்றல்ல. ஈழத்தில் இன்னமும் பல வடிவங்களில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. இனத்தை அழிக்கவே நில அபகரிப்பை சிங்கள அரசு பெருமெடுப்பில் செய்து கொண்டிருக்கிறது. இனக்கொலை எத்தகைய குற்றமோ அவ்வாறே நிலத்தை அபகரிப்பதும் குற்றமே. நடந்த இனப் படுகொலைக்கு தீர்வை கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள். போராடிக்கொண்டிருக்கும் தமிழர்களை ஒடுக்கவும் அழிக்கவும் அவர்களின் நிலத்;தை குறி வைத்து நில அபகரிப்பு யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கிறது இலங்கை அரசு.
-------------------------------------------------------------------------------------------------------
முழு ஈழத்தையும் அபகரித்து போராட முடியாத தனிநாடு கோர முடியாத ஒரு சூழலை உருவாக்குவதே இலங்கை அரசின் நோக்கம். அதுவே ஈழத் தமிழ் மக்களை கொந்தளிப்புக்கு உள்ளாக்குகிறது. இது தமிழ் மக்களை தொடர்ந்து போராட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளுகிறது. அத்துடன் தமிழ் மக்கள் காலம் காலமாக வாழ்ந்த நிலப்பகுதியை பாதுகாக்கும் உறுதியான தீர்வு ஒன்று தேவை என்பதையும் இந்த உலகத்திற்கு எடுத்துரைக்கிறது.
உறுப்பு நாடுகளுக்கு இடையில் மாறுபட்ட நிலைப்பாடு-
எதிர்வரும் மாhச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------
சார்க் பிராந்திய வலயத்தைச் சேர்ந்த மூன்று நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
---------------------------------------------------------------------------------------------
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் இவ்வாறு அங்கம் வகிக்கின்றன.
---------------------------------------------------------------------------------------------
இரண்டு தடவைகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சந்தர்ப்பங்களில் பாகிஸ்தானும், மாலைதீவும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டதடன், இந்தியா எதிராக செயற்பட்டுள்ளது,
---------------------------------------------------------------------------------------------
தற்போது மாலைதீவில் நடைபெற்று வரும் சார்க் பிராந்திய வலய வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் தொடர்பில் உத்தியோகப்பற்றற்ற ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
---------------------------------------------------------------------------------------------
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று மாலைதீவிற்கு விஜயம் செய்துள்ளது.
---------------------------------------------------------------------------------------------
மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் பிராந்திய வலய நாடுகளைப் போன்றே, உறுப்புரிமையற்ற நாடுகளுக்கும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பில் தெளிவுபடுத்தி ஆதரவு திரட்டும் முனைப்புக்களில் இலங்கைப் பிரதிநிதிகள் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
---------------------------------------------------------------------------------------------
இதேவேளை, இம்முறை மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தால், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் பாரியளவில் விரிசல் நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------
எனினும், இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் தீர்மானத்திற்கு ஆதரவாகவே வாக்களிக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)