Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Wednesday, January 29, 2014
இலங்கைத் தேயிலை ஏற்றுமதி: உண்மையில் சாதனையா- வேதனையா?
இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 2013-ம் ஆண்டில் தான் அதிகளவு தேயிலை ஏற்றுமதி நடந்துள்ளதாக பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தேயிலைச் சபையின் புள்ளிவிபரங்களின்படி, கடந்த ஆண்டில் 1.54 பில்லியன் டாலர்கள் அளவுக்கு தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 2012-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது கிட்டத்தட்ட 22 சதவீத அதிகரிப்பு.
தேயிலை உற்பத்தியும் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக முன்னேறிவருவதாகவும்அமைச்சர் சமரசிங்க கூறியுள்ளார்.
இதேவேளை, தோட்டங்களில் தேயிலைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதால் உரிய நேரத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் வேலையை பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் இருப்பதாகவும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சங்கம் கூறுகிறது.
சர்வதேச சந்தையில் இலங்கைத் தேயிலைக்கு நல்ல விலை கிடைத்துவருகின்ற சந்தர்ப்பத்தில், போதிய தொழிலாளர் பலம் இல்லாத நிலையிலும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காட்டிவருவதாகவும் பெருந்தோட்ட நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.
எனினும் பெருந்தோட்டக் கம்பனிகளின் நிர்வாகத்தின் கீழ் மிகக் குறைவான சம்பளமே கிடைப்பதால், தொழிலாளர்கள் சிறு தோட்ட முதலாளிகளின் தோட்டங்களில் வேலைபார்க்க செல்கின்ற காரணத்தினாலேயே கம்பனி நிர்வாகத் தோட்டங்களில் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாக தொழிற்சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தேயிலைத் தொழிற்துறையின் எதிர்காலம்
நாட்டின் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பை ஈடுகொடுக்க முடியாமலும், தோட்டங்களில் சுகாதாரம், குடிநீர், வீதிகள் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும் தொழிலாளர்கள் சிரமப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் தெரிவித்தார்.
1992-ம் ஆண்டில் பெருந்தோட்டங்களைப் பொறுப்பேற்றதிலிருந்து, தனியார் கம்பனிகள் தொழிலாளர்களுக்கு ஒரு வீட்டைக்கூட கட்டிக் கொடுத்ததில்லை என்றும் மக்கள் தங்களின் அடிப்படை வசதிகளுக்காக இன்னும் அரசியல்வாதிகளையே நம்பியிருக்க வேண்டியிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
இன்னும் 25 ஆண்டுகளில் தேயிலைத் தோட்டங்களில் 40 வீதமான தேயிலைச் செடிகள் அழிந்துவிடும் என்றும் அவற்றின் மீள்நடுகைக்காக கம்பனிகள் போதியளவு முதலீடு செய்வதில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குற்றஞ்சாட்டுகிறார்.எனவே, தொழிலாளர்களையும் பங்குதாரர்களாக மாற்றிக்கொண்டு, தொழிலாளர்களுக்கு தேயிலைக் காணிகளை பகிர்ந்தளித்து மீள்நடுகை நடவடிக்கையை தொடங்கினால் மட்டுமே இலங்கையின் தேயிலைத் தொழிற்துறை பாதுகாக்கப்படும் என்றும் யோகராஜன் பிபிசியிடம் கூறினார்.
இதேவேளை, எதிர்காலத்தில் குறைந்தளவு தேயிலைக் காணிகளில் குறைந்தளவு தொழிலாளர் பலத்துடன் தரமான தேயிலையை தயாரிப்பதே தங்களின் எதிர்பார்ப்பு என்று பெருந்தோட்ட நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.
போட்டி நாடுகள் தேயிலை உற்பத்தியின் அளவை பெருக்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்துவரும் சூழ்நிலையில், தேயிலையின் தரத்தை அதிகரிக்கவே இலங்கை நடவடிக்கை எடுக்கும் என்றும் ரொஷான் ராஜதுரை கூறினார்.
உகண்டா இலங்கையிடம் இராணுவ பயிற்சி பெற்றுக் கொள்ள உள்ளது:-
உகண்டா, இலங்கையிடம் இராணுவப் பயிற்சி பெற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உகண்டா இராணுவம், இலங்கை இராணுவத்திடம் பயிற்சி பெற்றுக்கொள்ள உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
உகண்டாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஒடங்கோ ஜேஜே உள்ளிட்ட பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
உகண்டா பாதுகாப்பு அமைச்சர், இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்னாயக்கவை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்துள்ளார்.
யுத்த கள அனுபவங்களை பகிர்ந்து கொள்ளத் தயார் என தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறும் பாதுகாப்பு கருத்தரங்குகள், செயலமர்வுகளில் பங்கேற்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இரு தரப்பு இராணுவ விவகாரங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடன் சிறந்த உறவுகளை பேண விரும்புவதாக உகண்டா பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் இலங்கையை மீட்குமா யப்பான் - சீனப் பயத்தால் காய் நகர்த்தும் யசூசி அகாசி -
ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்படும் பிரேரணைக்கு எதிராக யப்பான் குரல்கொடுக்க உள்ளதாக கொழும்பில் உள்ள யப்பான் தூதுதரக தகவல்கள் மூலம் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது.
இலங்கை மீது கடுமையான குற்றச் சாட்டுக்கள் மற்றும் சர்வதேச விசாரணை என்று கடும் அழுத்தங்களைக் கொடுத்தால் இலங்கை அரசாங்கம் சீனாவின் பக்கம் சென்று விடும் என யப்பான் அஞ்சுவதாகவும் இதனால் பிரேரணையில் உள்ள கடும் வாசகங்களை குறைப்பது தொடர்பாக யப்பான் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் கொழும்பில் உள்ள யப்பான் தூதரக தகவல்கள் கூறுகின்றன.
பிரேரணை தொடர்பாக அமெரிக்கா, பிரித்தானியா, ஆகிய நாடுகளின் மனித உரிமைச் சபை பிரதிநிதிகளுடன் பேசி வருவதாகவும் யப்பான் தூதுவர் யசூசி அகாசி இது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு நம்பகமான தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் (Ukraine) முதன் மந்திரி ராஜினாமா - அரசியல் மாற்றத்திற்கு வழிவிடுமா?
உக்ரைன் நாட்டின் (Ukraine) முதன் மந்திரி ராஜினாமா செய்து கொண்டமை அந்நாட்டு அரசியல் மாற்றத்திற்கு வழிவிடுமென ஜேர்மன் வெளிவிவகார செயலர் வோல்ரர் வி(F)ராங் ஸ்ரைன்மயர் (Walter Frank Steinmeir) தெரிவித்துள்ளார்.
இருந்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் Kiew நகரத்தில் மட்டுமல்லாது பல மாநிலங்களிலும் பரவித் தொடர்கிறது. அரச அலுவலகங்கள் ஆர்பாட்டக் காரர்களால் முற்றுகையிடப்பட்டு அரச அலுவல்கள் பல மாநிலங்களில் முடக்கப்பட்டுள்ளன. கடை உடைப்புக்களும் நிகழ்ந்த வண்ணமாகவுள்ளது.
சென்ற வெள்ளிக்கிழமை ஜனாதிபதியால் வழங்கப்படத் தயாராக இருந்த, முதல் மந்திரிப் பதவி உட்பட்ட பதவிகளை ஏற்க மறுத்த Vitali Klitschko மந்திரிப் பதவிகளைக் காண்பித்து எதிரணியினரின் நெருக்கத்தைப் பாழ்படுத்திவிட முடியாதென்றும், எதிரணியின் முக்கிய நோக்கம் மந்திரிப் பதவிகளல்ல மாறாக மக்கள் சுதந்திரமும் அவர்களது முழுமையான உரிமைகளுமே என்று உறுதிபடக் கூறியிருந்தார்.
ஏற்கனவே பாராளுமன்றத்தின் அவசரகாலத் தேர்தலில் முடிவெடுக்கப்பட்டதன் பிரகாரம் முதன் மந்திரி நிக்கோலை அசரவ் (Nikolai Asarav) தன் பதவியை ராஜினாமா செய்ததோடு, உக்ரைன் (Ukraine) அரசியற் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காணவல்ல அரசியல் உடன் படிக்கை தோன்ற வழிவிட்டுத் தான் விலகுவதாகவும் தன் இறுதி உரையில் குறிப்பிட்டார். இவர் கடும் போக்கைக்கொண்ட அர்சியல் வாதிகளில் ஒருவரென எதிரணி குற்றஞ்சாட்டிக் கோசமிட்டிருந்தது.
பெரும் திரளான மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி ஊர்வலம் நடாத்த முடியாதெனும் சட்டம், 361 சட்டமன்ற அங்கத்தவர்களின் வாக்குகளால் செல்லுபடியாகாது (Null an Void) போனது. அச்சட்டத்தை ஆதரித்து 51 அங்கத்தவர்கள் வாக்களித்திருந்தனர். நாட்டின் உயர் சட்ட மன்றத்திலும் எதிரணி சார்ந்த கொள்கை வலுவடைந்துள்ளது.
பத்திரிகைச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் போன்றவற்றை நசுக்கி மக்களை அடக்கி ஆட்சிபுரியும் அன்றைய சோவியத்தின் கொள்கைகளை மீண்டும் அறிமுகப்படுத்தல், சர்வாதிகார ஆட்சியை நாட்டில் மறுபடியும் தோற்றுவிக்குமென்றும், செவ்வாய்க் கிழமை வரை உக்ரையினில் நடந்த அரசியல் மாற்றம் எதிரணியினரின் வெற்றிப் பாதையில் ஒரு சிறிய அடியே தவிர வெற்றியல்ல என்றும், ஜனாதிபதி ஜனுகோவிச்சின் (Janukowitsch) ராஜினாமா நோக்கிய எதிர்ப்பார்பாட்டம் தொடருமென்றும் எதிரணி ஒரே குரலில் கூறியுள்ளது
ஐரோப்பிய செய்தியார் மகேந்தி
Subscribe to:
Posts (Atom)