Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Thursday, November 28, 2013
புதிய மெட்ரோ ரயில்கள்: 3 நாளில் கோயம்பேடு வரும்'
பிரேசிலில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்ட 2 மெட்ரோ ரயில்கள் துறைமுகத்தில் இருந்து 3 நாள்களில் கோயம்பேடு பணிமனைக்கு கொண்டு செல்லப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரேசிலில் உள்ள சாபாலா நகரில் சென்னை மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் முதல் மெட்ரோ ரயில் கடந்த மே மாதம் சென்னை வந்தடைந்தது. மேலும் 2 ரயில்கள் 2 வாரத்துக்கு முன்பாக சான்டோஸ் துறைமுகத்தில் இருந்து கப்பலில் ஏற்றப்பட்டன. அந்தக் கப்பல் புதன்கிழமை காலை சென்னை துறைமுகம் வந்தடைந்தது. மெட்ரோ ரயில் பெட்டிகள் ராட்சத கிரேன்களின் உதவியுடன் கப்பலில் இருந்து இறக்கி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த ரயில் பெட்டிகள், கனகரக உபகரணங்களை சுமந்து செல்லும் பிரத்யேக டிரய்லர் லாரி மூலம் 3 நாள்களில் துறைமுகத்தில் இருந்து கோயம்பேடு பணிமனைக்கு கொண்டு செல்லப்படும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை துறைமுகத்தில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக 10 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில் பெட்டிகள் கொண்டு செல்லப்படும். இதற்காக சாலையில் நள்ளிரவு போக்குவரத்து ஒழுங்குப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயில் நிறுவனத்தில் டெக்னீசியன் பணி
செயில் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னீசியன்
மொத்த காலியிடங்கள்: 185 டிப்ளமோவுக்கு - 124, ஐடிஐ - 61
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மெட்டலர்ஜி, சிவில், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது வெல்டர், பிட்டர், எலக்ட்ரீசியன், பிளம்பர் போன்ற எதாவதொரு துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.sail.shine.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.12.2013
கர்நாடகாவில் கிராம கணக்காளர் பணி
கர்நாடகா மாநிலம் மாண்டி மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம கணக்காளர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது கர்நாடக வருவாய்த்துறை அலுவலகம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 90
பணி: கிராம கணக்காளர் அதிகாரி(Village Accountant Officer)
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயுதுவரம்பு: பொது பிரிவினருக்கு 35 வயதும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 38 வயதும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.200,
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.125. இதனை கணக்கு எண். 64050199087 SBM ADB Branch MANDYA-வில் மாற்றத் தக்கவகையில் செலுத்த வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 21000
விண்ணப்பிக்கும் முறை: www.mandyava.kar.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.12.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mandyava.kar.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பணி
தமிழகத்தின் தலைமையிடமான சென்னையில் செயல்பட்டு வரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
பணிவாரியான காலியிடங்கள் விவரம்:
மொத்த காலியிடங்கள் 268
01. Personal Assistant to the Hon’ble Judge - 57
02. Personal Assistant - 07
03. Assistant - 37
04. Computer Operator - 28
05. Typist - 139
வயதுவரம்பு: 22.11.2013 தேதிப்படி 30-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: எதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை:
01. Personal Asst பணிக்கு Written Examination, Skill test and Oral Test.
02. Asst & Computer operator பணிக்கு Written Examination and Oral test.
03. Typist பணிக்கு Written Examination & Skill test மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்:
பணி 1 க்கு ரூ. 15,600 - 39,100 + Grade Pay ரூ. 5400
பணி 2 க்கு ரூ. 9,300 - 34,800 + Grade Pay ரூ. 4,600
பணி 3 க்கு ரூ. 5,200 - 20,200 + Grade Pay ரூ. 2600
பணி 4 க்கு ரூ. 5,200 - 20,200 + Grade Pay ரூ. 2800
பணி 5 க்கு ரூ. 5200 - 20,200 + Grade Pay ரூ. 2400
தேர்வுக் கட்டணம்: ரூ.150
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2013
வங்கிகள் மூலம் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 24.12.2013
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 23.02.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
குரூப் 4: 222 காலி பணியிடங்களுக்கு டிசம்பர் 6-இல் கலந்தாய்வு
குரூப் 4 தொகுதியில் காலியாகவுள்ள 222 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.
அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்தில் இந்தக் கலந்தாய்வு நடைபெறும் என்று தேர்வாணையச் செயலாளர் விஜயகுமார் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.
குரூப் 4 தொகுதியின் கீழ் உள்ள இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் பதவிகளுக்குக் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை 7 ஆம் தேதியன்று தேர்வு நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களில் இதுவரை காலியாகவுள்ள 222 இடங்களுக்கான ஐந்தாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தற்போது நடத்தப்படவுள்ளது.
இந்தக் கலந்தாய்வுக்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் அழைக்கப்படுவர். அதுகுறித்த விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை கலந்தாய்வுக்கு வரும் போது எடுத்து வர வேண்டும் என்று செயலர் விஜயகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
ஐடிஐ தகுதி பாண்டிச்சேரி் பல்கலைக்கழகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கம்ப்யூட்டர் மையம் நடத்தும் PASAA டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறுகிறது. நல்ல
முறையில் இந்த பயிற்சியை முடிப்பவர்கள் அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சகத்தினால் நடத்தப்படும் அகில இந்திய டிரேடு தேர்வில் கலந்து
கொள்ளலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி: PASAA Trade Apprenticeship Tranining Programme
பயிற்சி காலம்: 1 வருடம்
ஊக்கத்தொகை: மாதம் ரூ.3000
தகுதி: +2 தேர்ச்சியுடன் COPA(Computer Operator & Programming Assistant) டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.pondiuni.edu.in என்றஇணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அல்லது இணையத்தின் மூலம்
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் படிவத்தினை பிரிண்ட் அவுட் செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் சான்று பெற்று அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
ஆன்லானில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் நகல் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, Pondicherry University, R.V.Nagar, Kalapet, Puducherry - 605014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.pondiuni.edu.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.12.2013
பொறியியல் பட்டதாரிகளுக்கு BEL நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி
பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (BEL) அளிக்கப்பட உள்ள ஒரு வருட கிராஜூவேட் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு தகுதியான
பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கிராஜூவேட் அப்ரண்டிஸ்
பயிற்சி காலம்: 1 வருடம்
வயதுவரம்பு: 12.12.2013 தேதிப்படி 25-க்குள் இருத்த வேண்டும்.
மாத உதவித்தொகை: ரூ.3,560
கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன், மெக்கானிக்கல்,
இண்டஸ்ட்ரியல் புரடக்சன், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், சிவில், என்விரான்மென்டல் போன்ற பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக்
முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://bghrrecruitment.com/Default.aspx?recid=73 என்ற முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பொறியியல் பிரிவில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். 01.01.2012-க்குப் பிறகு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்
மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bel-india.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ஐடிஐ முடித்தவர்களுக்கு ராணுவ வாகன தயாரிப்பு தொழிற்சாலையில் டெக்னீசியன் பணி
இந்திய ஆயுத தொழிற்சாலையின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள ராணுவ வாகன தயாரிப்பு தொழிற்சாலையில் குரூப் 'C' பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 342
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: Examiner Engg -13, Fitter Automobile - 41, Fitter Genl - 53, Fitter Electric - 02, Fitter Investment - 01, Fitter T & G - 01, Grinder - 10, Machinist - 137,
Mason - 01, Miller -15, Millwright - 11, painter - 06, Turner - 39, Welder -12
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + குரேடு சம்பளம் ரூ.1,800
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் vfj.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.12.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய vfj.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ரிசர்வ் வங்கியில் உதவி மேலாளர் பணி
இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) Assistant Manager (Security) 'A' பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Manager (Security) 'A'
மொத்த காலியிடங்கள்: 34
வயதுவரம்பு: 01.11.2013 தேதிப்படி 25 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.17,100 - 33,200 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: இராணும், கப்பல் படை, விமானப்படைகளில் அதிகாரி அந்தஸ்தில் 5 வருடம் பணியாற்றிருக்க வேண்டும் அல்லது துணை ராணுவ படைகளான BSF,
CRPF,ITB,CISF,SSB, RPF, SPF, Defence Security Force, Special Frontier Force and Home Guards-ல் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் அந்தஸ்தில் ஐந்து வருடம் பணியாற்றிய அனுபவம்
பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் கோடுகளும்: பெங்களூர் -12, கொல்கத்தா - 15, சென்னை - 17, குவஹாத்தி - 18, ஹைதராபாத் - 19, ஜம்மு - 21, மும்பை - 25,
புதுதில்லி - 27.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.12.2013
ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 21.12.2013
விண்ணப்ப பிரிண்ட அவுட் மற்றும் சான்றிதழ் நகல்கள் சாதாரண அஞ்சலில் அனுப்புவதற்கான கடைசி தேதி: 24.12.2013
விண்ணப்ப பிரிண்ட் அவுட் மற்றும் சான்றிதழ் நகல்கள் அஞ்சலில் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Thr General Manager, Reserve Bank of India Services Board, Post Bag
No.4618, Mumbai Central Post Office, Mumbai - 400008.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rbi.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
தில்லி AIIMS-ல் பல்வேறு பணி
தில்லி செயல்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிலையத்தில் (All India Institute of Medical Sciences) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Security Officer
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4,200
தகுதி: பட்டப்படிப்பு முடித்து துணை ராணுவம் அல்லது ராணுவத்தின் சுபேதார் அல்லது Inspector of Police-ல் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Yoga Instructor
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4,600
தகுதி: பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அத்துடன் யோகா படிப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கற்பித்தல் மற்றும் பயிற்சி அளிப்பதில் 10 வருட அனுபவம்
பெற்றிருக்க வேண்டும். Yoga in Orthopaedics-ல் அனுபவம் பெற்றிருத்தல் விரும்பத்தக்கது.
பணி: Programmer
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4,600
தகுதி: கணினி அறிவியல் பிரிவில் பி.இ. அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். அல்லது அறிவியில், கணித பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
பணி: Librarian (Grade III)
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4,200
தகுதி: பிஎஸ்சி பட்டத்துடன் நூலக அறிவியலில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில்
25 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பதும், மெடிக்கல் லைப்ரரியில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருப்பதும் விரும்பத்தக்கது.
பணி: Dental Technician (Grade II)
காலியிடங்கள்: 08
வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.2,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன்Dental Hygiene/ Dental Mechanic/Maxillo - Facial Prosthesis and Orthodentic Appliances பிரிவுகளில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
Dental கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். அதே துறையில் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.100. இதனை AIIMS என்ற பெயரில் Delhi/New Delhi
மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.aiims.edu என்ற இணையதளத்தின் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன்
தேவையான சான்றிதழ் நகல் அட்டெஸ்ட் பெறப்பட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Sr.Administrative Officer (Recruitment), All India Institute of Medical Science, Ansari Nagar, New Delhi -
110608.
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.12.2013
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்களைக்கழகத்தில் இணை பேராசிரியர் பணி
சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்களைக் கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இணை பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Associate Professor
மொத்த காலியிடங்கள்: 12
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. PEDAGOGICAL SCIENCES - 02
02. VALUE EDUCATION - 02
03. EDUCATIONAL PSYCHOLOGY - 02
04. EDUCATIONAL TECHNOLOGY - 02
05. CURRICULUM PLANNING AND EVALUATION - 02
06. EDUCATIONAL PALANNING AND ADMINISTRATION - 02
மேலும் கல்வித்தகுதி மற்றும் பொதுவான தகவல்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.tnteu.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.12.2013
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: TAMILNADU TEACHERS EDUCATION UNIVERSITY, Lady Willingdon College Campus, Kamarajar Salai,
Chennai - 600005.
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் கிளார்க் பணி
தமிழகத்தின் தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கிளார்க்
வயதுவரம்பு 31.10.2013 தேதிப்படி பட்டதாரிகிளுக்கு 24-க்குள்ளும், முதுகலை பட்டதாரிகளுக்கு 26-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் கலை, அறிவியல், வணிகவியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருடம் புரபேஷனரி காலமா கருதப்படும். அப்போது மாதம் ரூ.16,006 வழங்கப்படும். அதன்பிறகு ரூ.7,200 - 20,100 என்ற விகிதத்தில் சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.150. இதனை Tamilnadu Mercasntile Bank Ltd என்ற பெயருக்கு Toothukudi/Tuticorin அல்லது
Tirunelveli-ல் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையாக எடுக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் முறையில் நடைபெறும் தேர்வில் தேர்ச்சி மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.tmb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதன் இரண்டு பிரிண்ட்
அவுட் எடுத்து அதில் ஒன்றில் கலர் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி கையெழுத்திட வேண்டும். மற்றொன்றை கைவசம் வைத்துக்கொள்ளவும்.
பிரிண்ட் அவுட்டுடன் டி.டி, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், +2 மதிப்பெண் சான்றிதழ் நகலில் சுயமாக அட்டெஸ்ட் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Human Resourcse Development, Tamilnadu Mercantile Bank Ltd., Head Office, 52, V.E.Road, Thoothukudi-628002.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tmb.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.12.2013
ஆன்லைன் விண்ணப்ப படிவத்தின் பிரிண்ட் அவுட் மற்றும் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அனுப்புவதற்கான கடைசி தேதி: 09.12.2013
மூளைக்காய்ச்சல் - 2,830 பேர் பலி
உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளில், குழந்தைகளுக்கு, மூளைக்காய்ச்சல், மூளை வீக்கம் நோய் பாதிப்பு உள்ளது. தினமும், ஏராளமான குழந்தைகள் இந்த கொடிய நோய்க்கு பலியாகி வருகின்றன.
கோரக்பூரின், அரசு மருத்துவமனையில் நேற்று நான்கு குழந்தைகள் இறந்ததை அடுத்து, இந்த ஆண்டில், இந்த நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை, 2,830 ஆக உயர்ந்துள்ளது. 300 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றன. இத்தனை குழந்தைகள் இறந்த பிறகும், ஆளும், முதல்வர், அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி அரசு, எவ்வித சிறப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அடுத்தகட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்கும் : பழ.நெடுமாறன் பேச்சு - படங்கள்
நவம்பர் 27 மாவீரர் தினம். உலகம் முழுவதும் உள்ள உணர்வாளர்கள் அனுசரிக்கும் நாள். இந்த நாளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர் தின அரங்க கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து கலந்து கொண்டனர். சின்னாளப்பட்டி தனியார் பள்ளி மாணவர்கள் 60 பேர் வந்து முற்றத்தை பார்த்தனர்.
விழாவில் நெடுமாறன் பேசும்போது.. முற்றத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். இது தமிழினத்தின் அவலத்தின் துயர சின்னம். இந்த முற்றம் இனி போராளிகளை உருவாக்கும் பயிற்சி களமாக பாசறையாக செயல்படும்.
அடுக்கட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்க இருக்கிறது. அந்த போருக்கு இந்த பாசறையில் இருக்கும் போராளிகளும் பங்கேற்க வேண்டும் என்று பேசினார்.
- இரா.பகத்சிங்
புதுக்கோட்டை தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள்; முகாமில் மாவீரர் தினம்

புதுக்கோட்டை தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள்; முகாமில் இலங்கையில் தனி ஈழம் மீட்க தன்னு டைய உயிர்களை போரில் நீத்தவர்களுக்காக மாவீரர் தினம் புதன்கிழமை மாலை அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு முகாம் தலைவர் ச.கமலநாதன். தலைமைதாங்கினார். மாவீரர் இளங்குயில் ஆ.ஜெயசுதா (இரண்டாம் லெப்டினன்) அவரின் பெற்றோர் ஆ,பாப்பா முன்னிலையில் 5 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு. ஈழம்பாடல்கள் ஒலிக்க மிகப்பிரமாண்டமாக மெழுகுவர்த்தி தீபம் ஏற்றப்பட்டது. நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை கணேசன்.வ.கோபி மற்றும் முகாம் பொதுமக்கள் ஆகியோர் செய்தனர்.
படங்கள் : பகத்சிங்
பேய் பிடித்துவிட்டதாக சொல்லி நிர்வாணமாக ஓடவிட்டு எரிக்கப்படுகிறார்கள் பெண்கள்
நாகரிகமான சமுதாயத்திலும், பேய் பிடித்ததாகக் கூறி பெண்களை உயிருடன் எரிக்கும் சம்பவங்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிகரித்து உள்ளன.
மிகவும் பின்தங்கிய ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேய் பிடித்ததாகக் கூறப்படும் பெண்களை நிர்வாணமாக ஓட விடுவதும் தண்டிப்பதுமாக உள்ளனர். சில பெண்கள், தீ வைத்தும் எரிக்கப்படுகின்றனர். இத்தகைய செயல்களை தடுத்து நிறுத்த, எவ்வித முயற்சிகளும் போலீசார் மேற்கொள்வதில்லை.
இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு எதிராக, எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பெண் களுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைய தடுத்து நிறுத்தும் பணியை அரசு ஊழியர்கள் சிலர் செய்து வருகின்றனர். இந்த மாநிலத்தில், 1991 முதல், 2013 வரை, 1,312 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில், ராஞ்சி அருகில் உள்ள, சிமடேகா மாவட்டம், முதலிடத்தில் உள்ளது. இங்கு, 10 மாதங்களில், 10 பெண்கள், பேய் பிடித்துள்ளது என்ற பெயரில் கொலை செய்யப்பட்டுள்ளதாக, போலீசார் கூறியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநில அரசு அனைத்து நிலைகளிலும் தோல்வி : மோடி குற்றச்சாட்டு
சிகார்: ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு அனத்து நிலைகளிலும் படுதோல்வி அடைந்துள்ளதாக குஜராத் மாநில முதல்வரும், பாஜ பிரதமர் வேட்பாளருமான மோடி குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் அரசுக்கு தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார். ராஜஸ்தான் மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியில், முதல்வர் கெலாட் அரசு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார் கூறினார்.
Subscribe to:
Posts (Atom)

