Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, January 30, 2014

இந்திய ராணுவத்தில் டெக்னிக்கல் துறையில் பணி

இந்திய ராணுவத்தில் டெக்னிகல் பிரிவில் குறுகிய கால நிலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான ஆண் மற்றும் பெண் என்ற இரு பிரிவினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 119 (ஆண்கள் -100, பெண்கள் -19) பணியிடங்களுக்கான துறைகள்: சிவில், ஆர்க்கிடெக்சர், மெக்கானிகல், இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல், ஏரோனாடிக்ஸ், ஏவியேஷன், மெட்டலர்ஜி, எக்ஸ்ப்ளோசிவ்ஸ், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்யூனிகேஷன், புட் டெக்னாலஜி, ஐ.டி., வயது: 20 - 27க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.10.1987 முதல் 01.10.1994க்குள் பிறந்திருக்க வேண்டும். கல்வித் தகுதி: தேர்ந்தெடுக்கும் பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். உடற்தகுதி: உயரம் ஆண்கள் குறைந்த பட்ச உயரம் 157.5 செ.மீ.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் குறைந்தபட்சம் 152 செ.மீ.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எஸ்.எஸ்.பி., நேர்காணல் மற்றும் குரூப் டெஸ்ட் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.03.2014 மேலும் முழைமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பெங்களூர் மெட்ரோ ரயில்வேயில் டிரெய்னி பணி

பெங்களூரில் செயல்பட்டு மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிகல் பிரிவுக்கான டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 01. பிட்டர் - 12 02. மெக்கானிக் - ரெப்ரிஜிரேஷன் அண்டு ஏ.சி - 05 03. எலக்ட்ரீசியன் - 08. 04. எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - 08 வயது வரம்பு: 01.10.2014 தேதியின்படி 20 முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: விண்ணப்பிப்பவர்கள் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.02.2014 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Principal BMR Training institute , S.V.Road Baiyappanhalli Depot, Bangalore 560038 மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://bmrc.co.in/pdf/careers/TRADE%20APPRENTICES.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பெல் நிறுவனத்தில் பொறியியாளர் பணி

நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கான எலக்ட்ரானிக்ஸ் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்து வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்., எனப்படும் பெல் நிறுவனத்தில் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு மெக்கானிக்கல் பிரிவில் காலியாக உள்ள பொறியாளர்களை பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலி கம்யூனிகேஷன், மெக்கானிகல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முதல் வகுப்பில் பி.இ., அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். ஏற்கெனவே பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ்ஷிப் முடித்தவர்களும், இத்துறையில் 6 மாத பணியனுபவம் கொண்டவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.02.2014 மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://www.bel-india.com/sites/default/files/Advertisement-ContractEngineer-Mil.Com.SBU.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பட்டதாரிகளுக்கான எஸ்.எஸ்.சி பொது எழுத்துத் தேர்வு

மத்திய அரசு தொடர்புடைய நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி. எனற அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலமாக நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக 2014ஆம் ஆண்டிற்கான கம்பைண்டு கிராஜூவேட் லெவல் தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதுகுறித்து விவரங்கள் கீழ்கண்டவாறு: சென்ட்ரல் செக்ரடேரியட் சர்வீஸ், சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன், இண்டலிஜென்ஸ் பீரோ, மினிஸ்ட்ரி ஆப் ரெயில்வே, வெளியுறவுத்துறை அமைச்சகம், சி.பி.டி.டி., சி.பி.இ.சி., டைரக்டரேட் ஆப் என்போர்ஸ்மெண்ட் அண்டு ரெவின்யூ, அஞ்சல் துறை, சென்ட்ரல் பீரோ ஆப் நர்காடிக்ஸ் உள்ளிட்ட மத்திய அரசுத் துறை பலவற்றில் உள்ள அப்பர் டிவிஷன் கிளார்க், இன்ஸ்பெக்டர், ஆடிட்டர் மற்றும் அஸிஸ்டெண்ட் உள்ளிட்ட பல்வேறு காலியிடங்களுக்கான தேர்வை எஸ்.எஸ்.சி அறிவித்துள்ளது. வயது வரம்பு: குறைந்தபட்சம் 18ஆகவும், அதிகபட்ச வயது விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து 26 அல்லது 27 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: ஒவ்வொரு பணிக்கும் வெவ்வோறான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறைந்த பட்ச கல்வித்தகுதி பட்டப் படிப்பு ஆகும். முழுமையான விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும். விண்ணப்பிக்கும் முறை: http://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் உரிய மண்டல அலுவலக்த்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் பீஸ் ஸ்டாம்ப் வாயிலாக செலுத்த வேண்டும். தமிழகத்திலிருந்து விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட அவுட் அனுப்பவ வேண்டிய அஞ்சல் முகவரி: Regional Director (SR), Staff Selection Commission, EVK Sampath Building, 2nd Floor, College Road, Chennai, Tamil Nadu-600006 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2014 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ssc.nic.in/notice/examnotice/CGLE-2014%20Notice.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள்….

ஏழு கோடிக்கும் அதிக மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் கிட்டதட்ட ஒருகோடி பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டக் கூடிய புள்ளி விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு அரசு வேலையை எதிர்பார்த்து இவ்வளவு பேர் காத்திருப்பதற்கு காரணங்கள் என்ன? காத்திருக்கும் அவ்வளவு பேருக்கும் அரசால் வேலையை உருவாக்கித் தர முடியுமா? ஏன் இவர்கள் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ? அரசு வேலைக்காக ஓரிரு ஆண்டுகள் காத்திருக்கலாம். ஆனால் ஓரேயடியாக 52 வயது வரையெல்லாம் காத்திருக்கிறார்கள். திருவில்லிபுத்தூரை சேர்ந்த ராஜகோபால் என்பவர் தனது 52ஆது வயது வயதில், சென்னை மாநகராட்சியில் காலியாக இருந்த வார்டு உதவி பொறியாளர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 1992-ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த இவரின் கனவு நனவாகி இருக்கிறது. இவரைப்போல ஒன்றல்ல. இரண்டல்ல. 90 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். இவர்களில் 45 லட்சம் பேர் பெண்கள். இது தவிர, பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் 31 லட்சம் பேர். பிளஸ் 2 முடித்தவர்கள் 22 லட்சத்து 66 ஆயிரம் பேர். இளநிலை கலை முடித்தவர்கள் 3 லட்சத்து 38 ஆயிரம். இளநிலை அறிவியல் முடித்தவர்கள் 4 லட்சத்து 42 ஆயிரம் பேர். பொறியியல் பட்டதாரிகள் 2 லட்சத்து 83 ஆயிரம் பேர். பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 70 ஆயிரம் பேர். இதில், பொறியியல் பிரிவில் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் முடித்தோருக்கு ஜூன் 2001ம் ஆண்டு வரையும், சிவில் என்ஜினியரிங் முடித்தோருக்கு மே 2004 வரையும், மெக்கானிக்கல் என்ஜினியரிங் முடித்தோருக்கு 1999 வரையும் வேலை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் மாவட்ட வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை இன்றைக்கும் அதிகரித்து வருகிறது. இவர்கள் அனைவருக்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அரசு வேலை கிடைக்க சாத்தியமில்லை என்றே தெரிகிறது. பல்வேறு அரசுத் துறைகள் தங்களுக்குத் தேவையானவர்களை தேர்வாணைய போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்கின்றன. அதனால் வேலைவாய்ப்பகத்தின் பணி முன்பைவிட தற்போது குறைந்தே இருக்கிறது. இதனால் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் பலர், அந்தப் பணிக்கு கூடுதலான கல்வித் தகுதியோடு இருக்கின்றனர். காவல்துறை, தீயணைப்புத்துறை போன்றவற்றுக்கான சீருடைப் பணியாளர் தேர்வு, ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் போன்றவற்றிலும் இளைஞர்கள் கூட்டம் அதிகம் இருக்கிறது. இவர்களில் பொறியியல் பட்டதாரிகளும் அடக்கம். வேலைவாய்ப்பு உள்ளதா..? 12ம் வகுப்புக்கு பிறகு மாணவர்கள் பலரும் பொறியியல் படிப்புக்கு சென்றுவிடுவதால், பிற துறைகளில் திறமையுள்ளவர்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்ஜினியரிங் தவிர, அனிமேஷன், பிசியோதெரபி, கடல் சார் படிப்புகள், சட்டம், ஹோட்டல் மேனேஜ்மென்ட், மீடியா, சுற்றுலா மற்றும் பி.ஏ. பொருளியல், பி.எஸ்சி., பி.காம்., போன்ற பல்வேறு கலை அறிவியல் படிப்புகளுக்கான வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்கின்றனர் கல்வியாளர்கள். ஆனாலும் அரசுப்பணி மீதான விருப்பமும், உறுதியும் பலருக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவ்வளவு பேருக்கும் வேலை என்ற வாய்ப்பை உருவாக்க முடியாத நிலையும் இருக்கிறது.
ஆண்டு தோறும் பொறியியல் படிப்பை படித்து முடிப்பவர்கள் மட்டுமே 2 லட்சத்திற்கும் அதிகமானவர்களாக இருக்கிறார்கள். இத்தனை லட்சம் பேருக்கும் அரசால் ஆண்டுதோறும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது சாத்தியமா? இவர்களில் எத்தனை சதவிகிதம் பேருக்கு படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்கிறது? 1997ம் ஆண்டு தமிழகத்தில் 90ஆக இருந்த, பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை, கடந்தாண்டு நிலவரப்படி 535 ஆக உயர்ந்திருக்கிறது. 2007ம் ஆண்டில், 277 பொறியியல் கல்லூரிகள் இருந்தன. நான்கு ஆண்டுகளில் இது இருமடங்காக உயர்ந்துள்ளது. மாணவர் சேர்க்கை இடங்களும் இரண்டரை லட்சமாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ஆண்டுதோறும் 15 லட்சம் மாணவர்கள் பொறியியல் படித்து வெளிவரும் நிலையில், இதன் எண்ணிக்கை தமிழகத்தில் இரண்டேகால் லட்சமாக உள்ளது. இதில்10 சதவீதம் பொறியியல் பட்டதாரிகள் தான் உண்மையான வேலைத் திறன் பெற்றுள்ளனர் என்கிறது ஆய்வு. மிகச் சிறந்த கல்லூரிகளில் வேலைவாய்ப்பு விகிதம் 95 ஆகவும், மூன்றாம் மற்றும் நான்காம் தர கல்லூரிகளில் வேலைவாய்ப்பு விகிதம், 30 முதல் 50 சதவீதமாகவும் இருக்கிறது. எனினும், 30 சதவீதம் பேர் தான் படிப்பிற்கேற்ற துறையில் வேலை பெறுகின்றனர்.20 சதவீதம் பேர் உயர்கல்விக்கும், 30 சதவீதம் பேர் சம்பந்தமே இல்லாத வேலைக்கும் சென்று விடுகின்றனர். ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையில் தனியார் நிறுவனங்கள் வேலைக்கான நேர்காணலை, வேலைவாய்ப்பகத்தில் நடத்ததுகின்றன. அப்போது 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 1,500 பணியிடங்கள் வரை நிரப்பப்புகின்றன. இதே போல் கலை மற்றும் அறிவியல் துறையில் பட்டம் முடித்து வெளிவரும் லட்சக்கணக்கானோரும் வேலைக்காக காத்திருக்கின்றனர். இந்தப்பட்டியலை சேர்த்தால் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டும்.

2002 கலவரங்கள் குறித்து ராகுல் தெரிவித்த கருத்து தவறானது: பாஜக கண்டனம்

டெல்லி: 1984 மற்றும் 2002ம் ஆண்டுகளில் நடந்த கலவரங்கள் பற்றி ராகுல் தெரிவித்த கருத்துக்கு பாஜக தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ‘1984ம் ஆண்டில் நடந்த கலவரத்தில் அரசு சம்பந்தப்படவில்லை. ஆனால், குஜராத் தில் 2002ல் நடந்த படுகொலையில் அரசே ஈடுபட்டது' எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், ராகுலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக ‘விவரம் தெரியாமல் ராகுல் பேசுகிறார். 2002ல் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த குஜாரத் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. ஆனால், 1984ல் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த காங்கிரஸ் அரசு முயற்சிக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து பாஜக தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜெட்லி, டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘1984ஆம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதியன்று இந்திரவின் உடல் வைக்கப்பட்டிருந்த எய்எம்ஸ் மருத்துவமனையில் இருந்து தான் வன்முறை வெடித்தது. காங்கிரஸ் தலைவர்களே வன்முறைக்கு தலைமை தாங்கினர். ஆயிரக்கணக்கான இடங்களில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். எந்த ஒரு இடத்திலும் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. எவர் மீதும் வழக்குப் பதிவு செய்யவில்லை. ஆனால் 2002 குஜராத் கலவரத்தின் போது ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். கலவரக்காரர்கள் 300க்கும் மேற்பட்டோர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக் கணக்கானோருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதனால்,1984ஆம் ஆண்டு சீக்கியர் கொலையில் ராஜிவ் அரசு பங்கெடுக்கவில்லை என்று எப்படித்தான் ராகுல் காந்தி சொல்கிறாரோ என தெரியவில்லை '' எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாஜக தகவல் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘காங்கிரசில் உள்ள அதிகார மையத்தின் காரணமாக, அக்கட்சியின் துணைத் தலைவராக ராகுல் நியமிக்கப்பட்டார். இப்போது, அவர்தான் பிரதமர் வேட்பாளர் என்று துதி பாடப்படுகிறது. ஆனால், மோடியின் வளர்ச்சி அதற்கு நேர்மாறானது. ஏழ்மையில் பிறந்து வளர்ந்த அவர், தனது கடின உழைப்பு, நிர்வாகத் திறமை போன்றவற்றால் பிரதமர் வேட்பாளர் அளவுக்கு உயர்ந்து வந்துள்ளார்'' என்றார்.

நரேந்திர மோடிக்கு ஆதரவாக பேசும் மத்திய அமைச்சர் பிரபுல் படேல்

டெல்லி: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பிரபுல் படேல் கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டியில், குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிதான் 2002ஆம் ஆண்டு குஜராத் வன்முறைக்கு பொறுப்பு எனக் கூறியிருந்தார்.
நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி டைம்ஸ் நவ் செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி கேள்வி கேட்டபோதும், மோடிதான் குஜராத் கலவரத்துக்குப் பொறுப்பு என மீண்டும் மீண்டும் ராகுல் கூறினார். ராகுலின் இந்த கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பிரபுல் படேல், யாருடைய பேட்டி குறித்தும் நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. எந்த ஒரு பிரச்சனைக்குமே இறுதித் தீர்வாக இருப்பது நீதித்துறைதான். அரசியலுக்கும் மேலானது நீதித்துறைதான். அப்படிப்பட்ட நீதித்துறை அளிக்கும் ஒரு தீர்ப்பை நாம் மதித்தாக வேண்டும். அதை கேள்விக்குள்ளாக்கக் கூடாது என்று கூறியுள்ளார். காங்கிரஸின் கூட்டணி கட்சியான தேசியவாத கட்சியின் மூத்த தலைவரான பிரபுல்படேல், குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கல்வி குறித்து யுனெஸ்கோ எச்சரிக்கை

ஐநாவின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ, உலகில் அனைத்து சிறார்களும் ஆரம்பப் பள்ளிக் கல்வியை பெறுவதற்கு இன்னமும் 70 ஆண்டுகளுக்கும் அதிகம் ஆகும் என்று கூறியுள்ளது. ஆனால், 2015 ஆம் ஆண்டுக்கு முன்னதாக இதனை எட்டிவிட முடியும் என்று உலகத் தலைவர்கள் உறுதி எடுத்திருந்தனர். 5 கோடி 70 லட்சம் பிள்ளைகள் இன்னமும் பள்ளிக்கூடத்துக்கான வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். வறியவர்களும், ஆப்பிரிக்க பெண் பிள்ளைகளும் கல்வி வசதியைப் பெற 2086 ஆம் ஆண்டாகிவிடும் என்றும் அது கூறியுள்ளது. இது மிகவும் அதிர்ச்சிக்குரிய ஒரு தகவல் என்று இந்த அறிக்கையை எழுதிய பௌலின் ரோஸ் கூறியுள்ளார். ஆசிரியர்களுக்கு சரியான பயிற்சி இல்லாததால், குறைந்தது 25 கோடி சிறார்களுக்கு அடிப்படை வாசித்தல் மற்றும் கணக்குப் போடும் திறன் கிடைக்கவில்லை என்று யுனெஸ்கோவின் அறிக்கை கூறுகிறது. மூன்றில் ஒரு பங்கு நாடுகளில், கால் பங்குக்கும் மேலான ஆசிரியர்களுக்கு தேசிய அளவிலான தரத்தில் பயிற்சி தரப்படுவதில்லை என்றும் அது கூறியது. மிகவும் மோசமான நிலைமை நீடிக்கும் நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில், குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினருக்கு மட்டுமே படித்தல் மற்றும் கணிதம் ஆகிய இரு விஷயங்களின் அடிப்படையான அம்சங்கள் தெரிந்திருக்கின்றன என்று இஸ்லாமாபாதில் இருக்கும் அதேவேளை இந்தியா, வியட்நாம், எத்தியோப்பியா மற்றும் தன்சானியா போன்ற நாடுகள் ஒப்பீட்டளவில், கல்வியை அடைவதில் முன்னேற்றத்தைக் கண்டிருப்பதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. சஹாராவுக்கு தெற்கே உள்ள நாடுகள் மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் ஆகியவை இந்த விடயத்தில் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது. 35 வருடமாக போரைச் சந்தித்து வருகின்ற ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை அங்கு பள்ளிக்கூடங்களை ஒருவாறாகத் திறக்கத் தொடங்கியுள்ளது. வறிய நாடுகளைப் பொறுத்தவரை அங்குள்ள கால்வாசி இளையவர்கள் கல்வி கிடைக்காமலேயே இருக்கிறார்கள்.

சீன நிலா உலாவி வாகனத்தில் கோளாறு

சீனா, கடந்த மாதம், நிலாவில் இறக்கிய உலாவி வாகனமான " ஜேட் ரேபிட்"டில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது என்று அரச ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. நிலவின் சிக்கலான மேற்பரப்புச் சூழல் காரணமாக ஜேட் ரேபிட் பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பதாக ஷின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியது. 1976க்குப் பின் நிலவில் இறங்கிய முதல் விண்கலனான ஜேட் ரேபிட், சுமார் மூன்று மாதங்கள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த மாதம் முன்னதாக, சீனாவின் பீஜிங் வான் கட்டுப்பாட்டு மையம், இந்த விண்கலன் அதன் இயந்திரக் கையைக் கொண்டு, நிலவின் மேற்பரப்பை வெற்றிகரமாக ஆராய்ந்ததாகத் தெரிவித்திருந்தது. இந்த கலனை சரி செய்யும் முயற்சிகளை விஞ்ஞானிகள் எடுத்து வருவதாக ஷின்ஹுவா நிறுவனம் தெரிவித்தது. நிலா சூரியனின் ஒளியைப் பெறாத 14 நாட்களில் நிலவில் இரவு நீடிக்கும் வேளையில், சூரிய ஒளித் தகடுகளின் மூலம் மின்சக்தியை உருவாக்கி இயங்கும் ஜேட் ரேபிட் கலன், இயங்காமல் போகும் என்று அந்தச் செய்திகள் கூறின.

சர்ச்சையில் சிக்கிய சாப்பாட்டுக்கடை

பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாதில் ஒரு உணவகத்தை திறந்தார் பிரான்ஸைச் சேர்ந்த ஒரு சமயல் கலைஞர். வியாபாரம் நடந்ததோ இல்லையோ பிரச்சினைகள் மட்டும் உடனடியாக எழுந்தன. முஸ்லிம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகக் கூறி, பாகிஸ்தானிய முஸ்லிம்களுக்கு உணவு வழங்க ‘ல மெசோ(ன்)’ உணவகத்தில் சமயலுக்கு பொறுப்பானவர் மறுத்துவிட்டார்.
அந்த உணவகத்தில் மதுவும், ஹலால் முறைப்படி தயாரிக்கப்படாத உணவும் அங்கு விற்கப்படுவதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த உணவகம் கூறுகிறது. ஆனால் ஆச்சரியமளிக்காத வகையில், பல பாகிஸ்தானியர்கள் இது குறித்து கோபமடைந்தனர். உடனடியாக டிவிட்டரில் பெரிய கருத்து மோதல், கூச்சல் குழப்பங்கள் கண்டனங்கள் ஆகியவை மேலோங்கின.முடிவில் மாற்றமில்லை"இஸ்லாமாபாதில் திறக்கப்பட்டுள்ள ஒரு உணவகத்தில் பாகிஸ்தானியர்களுக்கு அனுமதியில்லை என்று கூறுவது சரியல்ல என்று கூறி உள்ளூர் பத்திரிக்கையாளர் டிவிட்டரில் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தார். நிறவெறிக் கொள்கையை அந்த உணவகம் முன்னெடுக்கிறது என்று அந்தச் செய்தியாளர் டிவிட்டரில் கூற பிரச்சினை மேலும் சிக்கலானது. அந்த உணவகத்தின் முடிவானது நகைப்புக்குரிய, முட்டாள்தனமான, நடைமுறைக்கு ஒத்துவராத விஷயம் என்று அல்மைடா எனும் அந்தச் செய்தியாளர் தெரிவித்தார். ஆனாலும் அந்த உணவகத்தின் உரிமையாளரோ தமது கருத்தில் எந்த மாறுதல் இல்லை என்றும், அந்த உணவகம் ஒரு கிளப்பாக மாற்றப்படும் என்றும் அறிவித்துள்ளார். முஸ்லிம் மக்களின் உணவு வழக்கங்களுக்கு ஏற்ற வகையில், தமது சாப்பாட்டுக்கடையில் உணவு இல்லை என்பதாலேயே அந்த முடிவுக்கு வந்ததாக அவர் கூறுகிறார். அடுத்த சில நாட்களில் இந்த உணவகம் உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி என்று கூறும் ஒரு கிளப்பாக மாறவுள்ள நிலையில் அது பிரச்சினைகளைக் கடந்து வெற்றிகரமாக நடக்குமா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்விக்குறி.

"சமத்துவக் கல்வி இலங்கையில் வழங்கப்படவில்லை"

யுனெஸ்கோ அமைப்பு உலகளவில் பல நாடுகளில் தொடக்கக் கல்வியின் நிலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்காசியாவில், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளது. தெற்காசியாவில் ஒப்பீட்டளவில் இலங்கையில் கல்வியின் நிலை மேம்பட்டுள்ளது என்று அரசு அவ்வப்போது தெரிவித்து வரும் சூழலில், மலையகப் பகுதிகளில் தொடக்கப்பள்ளிகள் மற்றும் தொடக்கக் கல்வியின் நிலை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது என்று பல்தரப்பினர் கூறுகின்றனர். நாட்டின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, பெருந்தோட்டத்துறையைச் சார்ந்த மக்கள் வசிக்க்கும் மலையகப் பகுதிகளில் கல்வியின் தரம் ஐம்பது, அறுபது வருடங்கள் பின்தங்கியுள்ளது என்று கூறுகிறார், மலையகத்தின் சமூக விஷயங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருபவரும் ஓய்வுபெற்ற உயரதிகாரியுமான தர்மலிங்கம் மனோகரன்.
பள்ளிகள் உண்டு ஆனால் தரமில்லை'மலையகப் பகுதிகளில் 800க்கும் மேலான பள்ளிக்கூடங்கள் இருந்தாலும், ஐந்து அல்லது ஆறு பள்ளிக்கூடங்களே தரம் வாய்ந்ததாக உள்ளன என்றும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். தேசிய மட்டத்தில் சமத்துவக் கல்வி இலங்கையில் வழங்கப்படவில்லை என்றும், குறிப்பாக மலையகப்பகுதியில் இது முற்றாக இல்லை எனும் சூழலே பல தசாப்தங்களாக தொடர்ந்து வருகிறது என்றும் அவர் கூறுகிறார்.மலையகப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு பல வளங்கள் வழங்கப்படுவது இல்லை என்றும் சுட்டிக்காட்டும் அவர், தோட்டப்பகுதிகளில் ஆசிரியர் நியமனங்கள் தொழிலுக்காக வழங்கப்படுகிறதே தவிர, பிள்ளைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக கொடுக்கப்படவில்லை என்பதே யதார்த்தம் என்றும் மேலும் கூறுகிறார். பெருந்தோட்டத்துறையைச் சார்ந்திருக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் கட்சிகள் கூட இதில் கவனம் செலுத்துவது இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

கருணா மற்றும் பிள்ளையானை விசாரிக்கக் கோரிக்கை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு, துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரிடமும் விசாரணைகளை நடத்த வேண்டும் என்று நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கூறகின்றது. காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு குறித்த பிரேரணையொன்றை காத்தான்குடி நகரசபையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்களான எம். எச். ஏ . நசீர் மற்றும் ஏ.எல்.ஏ.எம்.சபில் நழீமி ஆகியோர் முன்வைத்தனர். காத்தான்குடி பிரதேசத்திலிருந்து காணாமல் போன முஸ்லிம்களை மையப்படுத்தி, அவரால் முன் வைக்கப்பட்ட அந்த பிரேரணையில், கடத்தப்பட்டோர் புதைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் இடங்களை அடையாளங்கண்டு, புதை குழிகளை தோண்டுதல், மனித எச்சங்கள் அங்கு காணப்பட்டால் அவற்றை அடையாளம் கண்டு, சமய ஆசாரங்களின் அடிப்படையில் மரண சடங்குகளை மேற்கொள்ளல், கடத்தப்பட்டு கொல்லப்பட்டோர் மற்றும் காணாமற்போனோரின் குடும்பங்களுக்கு உரிய நஷ்ட ஈடுகளை வழங்குதல் மற்றும் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படுவோரை அடையாளங்கண்டு, விசாரணைக்கு உட்படுத்தவும், உரிய தண்டனைகளை வழங்கவும் கோருதல் போன்ற விடயங்கள் இடம்பெற்றுள்ளன. தங்களால் நகர சபையில் முன் வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பாக ஏ. எல். எம் . சபில் நழீமி குறிப்பிடுகையில், ''முஸ்லிம்கள் காணாமல் போன சம்பவங்களுடன் விடுதலைப்புலிகளே தொடர்புபட்டிருந்தார்கள். அவ்வேளை இவர்கள் இருவரும் அந்த அமைப்பில் இருந்துள்ளார்கள். இந்நிலையில் அது பற்றிய தகவல்களை ஆணைக்குழுவினால் அவர்களிடமிருந்து அறிந்து கொள்ள முடியும் என முஸ்லிம்கள் நம்புகின்றார்கள்'' எனக் கூறினார். தங்களால் முன் வைக்கப்பட்ட இந்த பிரேரணை சபையில் நிராகரிக்கப்பட்டாலும் ஆணைக்குழுவிடம் தங்களின் யோசனைகளும் கருத்துக்களும் நேரடியாக முன்வைக்கப்படும் என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ். எச். அஸ்பர், தமிழோசையுடன் பேசுகையில், குறித்த அரசியல்வாதிகளின் பெயரை, சக உறுப்பினர் தனது பிரேரணையில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்றும் உரையாற்றும் போது மாத்திரந்தான் குறிப்பிட்டுப் பேசினார் என்றும் கூறுகின்றார். தமது பிரதேசத்திலிருந்து காணாமல் போன முஸ்லிம்கள் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் ஆணைக்குழுவுடன் தொடர்பு கொண்டு தேவையான நடிவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில் இவர்களால் முன் வைக்கப்பட்ட பிரேரணை அரசியல் நோக்கம் கொண்டது எனக் கருதி சபையால் நிராகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார். இவை குறித்து துணை அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரின் கருத்தை எம்மால் உடனடியாகப் பெறமுடியவில்லை.

பன்குவியில் இடம் பெறும் இனக் கலவரத்தைக் கட்டுப்படுத்த ஜேர்மன் முனைய வேண்டும்-

மத்திய ஆபிரிக்கக் குடியரசின் தலை நகரான பன்குவியில் (Banqui) இடம் பெறும் இனக்கலவரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜேர்மன் நாடும் அங்குள்ள துருப்பினரைப் பலப்படுத்தும் வகையில் நேரடியாகச் செயற்பட வேண்டுமென, ஜேர்மனின் பெண் பாதுகாப்புச் செயலர், உர்சுலா (Ursula) கூறியுள்ளார். தினமும் இடம்பெறும் கொலைகளையும், வன்முறைகளையும் தொடர்ந்து சகித்த வண்ணம் இருப்பது தவறு என்றும், மனிதாபிமான அடிப்படையில் அவற்றைத் தடுக்க நேரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார். மத்திய ஆபிரிக்காவில் கடமையிலிருக்கும் பிரெஞ்சுப் படையினருக்குப் பக்கபலமாக ஜேர்மன் துருப்பினர் தரையிறக்கப்பட வேண்டுமென்கிறார். ஏற்கனவே நூறு ஜேர்மன் துருப்பினர் மாலி (Mali) தேசப்படையினருக்குப் பயிற்சி அளிக்குமுகமாக அங்கு செயலில் அமர்த்தப்பட்டுள்ளனரென்றும், அவர்களைப் பலப்படுத்த வேண்டிய தேவை பற்றித் தற்போது பேசப்படுவதாகவும் கூறினார். ஜரோப்பிய ஒன்றியம் அங்கு வருகின்ற February மாதத்தில் 600 துருப்பினரை அனுப்ப இருப்பதாகவும், பிரெஞ்சு (French) அரசாங்கம் கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் ஜேர்மன் துருப்பினரையும் அங்கு அனுப்புவதற்கான நிலையை ஏற்படுத்துதல் அவசியமென்றும் கூறியுள்ளார். இரண்டாம் உலக மகாயுத்த முடிவிற்குப் பின்னான காலப்பகுதிகளில், ஜேர்மன் அரசு உலகில் எங்கும் எக்காரணம் கொண்டும் துருப்பினரைப் போருக்குப் பயன்படுத்தக் கூடாதெனும் அமுலில் இருந்த சட்டம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன் சக்தியிழக்கச் செய்யப்பட்டிருந்த போதிலும், ஜேர்மன் போரில் கலந்துகொள்ளாத கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தமையைக் கருத்திற் கொண்ட ஒரு சில ஆளும் கட்சிப் பாராளுமன்ற அங்கத்தவர்களும், தற்போதைய கூட்டாட்சியில் இடம் பெறும் SPD கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் பலம் வாய்ந்த ஜரோப்பாவைக் கட்டியெழுப்பப் படையினரின் கூட்டு உழைப்பு முக்கியமெனத் தான் கருதுவதாகப் பாதுகாப்பு செயலர் கூறியுள்ளார். ஜேர்மன் படையினர் தரை இறக்கப் போவதில்லை என ஏற்கனவே கூறிய முதல் மந்திரி அங்கலா மேக்கல் மெளனமாக உள்ளார். அம்மெளனத்தின் அதிகார அர்த்தம் புரியவில்லையெனப் பத்திரிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய செய்தியாளர் - மகேந்தி-

ஜோன் கெரியின் பேர்ளின் விஜயம் ஜேர்மனின் கோபாவேசத்தை தணிக்குமா?

வருகின்ற வெள்ளிக்கிழமை அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரி (John Kerry) பேர்லின் செல்கிறார். இவர் அமெரிக்க ஜரோப்பிய வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதோடு, 31.01 லிருந்து 2 February வரை முன்ஷனில் (München) இடம் பெறவுள்ள பாதுகாப்பு உச்சி மாநாட்டிலும் (Security Conference) கலந்து கொள்வார்.
ஜேர்மன் முதல் மந்திரியின் தொலை பேசி உரையாடல் ஒட்டுக்கேட்ட சம்பவத்தில் குழப்பம் அடைந்திருக்கும் இரு நாட்டு உறவையும் மீண்டும் பலப் படுத்த முயல்வாரென அரசியல் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவால் இழைக்கப்பட்ட தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்ட செயல், நம்பிக்கைத் துரோகம் வாய்ந்ததெனவும், உளவு பார்ப்பதில்லையெனும் ஒப்பந்தம் ((No-Spy-Agreement) கைச்சாத்திடப்படும் வரையில் சமாதானப்படுத்தும் எச்செயலும் விரும்பும் விளைவைத் தராதெனவும் ஜேர்மன் பாராளுமன்றப் பேச்சாளரான ஸ்ரெவெ(F)ன் சைபேட் (Steffen Seibert) கூறுகிறார். John Kerry பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் வேளை, மத்திய ஆபிரிக்கக் குடியரசில் இடம் பெறும் கலவரம் பற்றியும், அமெரிக்க, ஜரோப்பிய நாடுகளின் பங்களிப்பினது முக்கியத்துவம் பற்றியும் கலந்துரையாடப்படும். இந்த வேளையில் ஜேர்மன் பாதுகாப்புச் செயலர், துருப்புக்களை மத்திய கிழக்கு ஆபிரிக்காவில் தரையிறக்க எடுக்கும் எத்தனிப்பு, நேர் எதிர் வாதங்களால் உச்ச சுரம் பெறுமெனவும் நம்பப்படுகிறது. ஐரோப்பிய செய்தியாளர் - மகேந்தி-

மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்:-

தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தலை நடத்த 1200 மில்லியன் ரூபா தேவை:-
மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகpன்றது. இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கட்டுப் பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் 5 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. இதேவேளை பதாதைகள், சுவரொட்டிகள் மற்றும் கட்டவுட்களை அகற்றும் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனைத்து பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளையும் அண்மித்து விசேட பொலிஸ் நடவடிக்கைப் பிரிவு ஒன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பெரும்பாலான முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்ட சொத்துக்கள் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை என்று ஃபெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தலை நடத்த 1200 மில்லியன் ரூபா தேவை:- தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தலை நடத்த 1200 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் இம்முறை வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அழைக்கப் போவதில்லை எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (29.01.14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் ´இம்முறை மாகாண சபைத் தேர்தலை ஒரு சனிக்கிழமையில் நடத்த தீர்மானித்துள்ளோம். 14.7 மில்லியன் வாக்காளர்கள் நாடு முழுவதும் உள்ளனர். அதில் மேல், தென் மாகாண தேர்தலில் கிட்டத்தட்ட 60 லட்சம் பேர்வரை இம்முறை வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தேர்தல்கள் செயலகத்தால் எந்த வேட்பாளரினதும் வேட்பு மனு அநாவசியமாக நிராகரிக்கப்பட மாட்டாது. வேட்பு மனு முறையாக பூர்த்தி செய்யப்படாதிருப்பின் மாத்திரமே நிராகரிக்கப்படும். கொழும்பில் 1400 வாக்களிப்பு மத்திய நிலையங்களும் கம்பஹாவில் 1315 வாக்களிப்பு மத்திய நிலையங்களும் களுத்துறையில் 615 வாக்களிப்பு மத்திய நிலையங்களும் காலியில் 704 வாக்களிப்பு மத்திய நிலையங்களும் ஹம்பாந்தோட்டையில் 405 வாக்களிப்பு மத்திய நிலையங்களும் மாத்தறையில் 440 வாக்களிப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்படும். ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் 7 - 17 வரையான உத்தியோகத்தர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு 55 ஆயிரம் உத்தியோகத்தர்களை கடமைக்கு அனுப்ப எதிர்பார்த்துள்ளோம். கடந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகள் இம்முறையும் பயன்படுத்தப்படும். வேட்பு மனுவில் போலி பெயர்கள் இடம்பெறாதிருக்க தேசிய அடையாள அட்டை அல்லது பிறப்புச் சான்றிதழை சமர்பிப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது´ என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் காலம் பெப்ரவரி 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். முன்னர் விண்ணப்பங்களை ஏற்பதற்கான கடைசி நாள் பெப்ரவரி 7ஆம் திகதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இந்த மாகாண சபை தேர்தலில் பிளாஸ்ரிக் வாக்குப் பெட்டிகளையும் சில இடங்களில் அறிமுகம் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 'மரத்தாலான வாக்குப் பெட்டிகள் செலவு கூடியவை. இதனால் மீள்சூழற்சிக்குள்ளான பிளாஸ்ரிக் கழிவை பயன்படுத்தி செய்யப்பட்ட பெட்டிகளை பயன்படுத்துவோம். இது செலவு குறைந்தாக இருக்கும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

தனி மனித சுதந்திரம் சீரழியாத வகையில் வளர்ச்சியை நோக்கிய செயற்பாடுகள் துரிதப்படுத்தப்படும்-

நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தவும், நடுத்தர மனிதர்களைப் பலப்படுத்தவும், சமூக வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தவும் வல்ல இலகுவான சில வழிகளை எடுத்துரைக்கக் கடமைப்பட்டுள்ளதாக தேசத்தின் நிலமை பற்றிப் (State of the Nation Address) பேச ஆரம்பிக்கையில் பராக் ஒபாமா மிகவும் நிதானமாகக் குறிப்பிட்டார்.
தான் எல்லோருடனும் சேர்ந்து கடைமையாற்ற ஆவலோடும் ஆயுத்தமாகவும் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தேவைப்படும் இடமெல்லாம் எதிர்கட்சியினரைப் புகழத் தவறவில்லை. தேவைப்படின் சட்டத்தின் அனுசரனையின்றி செயல் புரிய உள்ளதாகவும் கூறினார். தனி மனித சுதந்திரம் சீரழியாத வகையில், இவ் வருடமானது முழுமையான வளர்ச்சியை நோக்கிய செயற்பாடுகளை உள்ளடக்கிய தாகவிருக்குமென்றும் குறிப்பிட்டார். அதிகுறைந்த மணித்தியால சம்பளம் தற்போதுள்ள 7.25 US $ இலிருந்து 10.10, US. Dollar ஆக உயர்த்தப்படுமென்றும், சகல மாநிலங்களின் உதவியிடனும் காபனீர் ஒக்சைட் கட்டுப் பாட்டிற்கான புதிய திட்டம் கொண்டு வரப்படுமென்றும், உடல் நல சுகாதாரத்திட்டங்களுக் கெதிராகக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எவ்வித நல்ல விளைவுகளையும் தர முடியாத எதிர்ப்புக்களைக் காண்பிப்பதை நிறுத்த வேண்டுமென்றும், ஈரான் நாட்டோடு இடம் பெறும் அணு ஒப்பந்தத்தில் வருங்காலங்களில் பொருளாதாரத் தடை விதிப்பதைத் தான் வீட்டோ (Veto) அதிகாரம் கொண்டு தடுக்க விருப்பதாகவும், தேசிய அலுவலகத்தின் உளவு பார்க்கும் அலுவலகக் கடைமைகள் புனரமைப்புச் செய்யப்படுமென்றும், தற்சமயம் 26 கிழமைகளுக்குத் தரப்படும் வேலை இல்லாதோருக்கான உதவிப் பணம் (Unemployement Benifit) குறிப்பிட்ட கால எல்லையைக் கொண்டு நீடிக்கப்படு மென்றும் கூறினார். இப் பேச்சு இளஞர்களால் விரும்பி வரவேற்க்கப் பட்டதாக Wall Street Journal குறிப்பிடுகிறது. ஐரோப்பிய செய்தியாளர் - மகேந்தி-
வட மாகாண சபை முல்லைத்தீவு, மாங்குளத்தில் இருப்பதுவே எமது விருப்பமாகும். வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கும், மாங்குளம் பிரதேசமே மத்தியில் அமைந்துள்ளது. ஆயினும் அந்தப் பகுதியில் நிலத்திற்கு கீழ் பாரிய கற்கள் இருப்பதால் அங்கு நீர்ப்பற்றாக்குறை காணப்படுவதாக கூறப்படுகிறது. மாங்குளத்தில் நீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்குமானால் வட மாகாண சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய திணைக்களங்களையும் யாழப்பாணத்தில் இருந்து மாங்குளத்திற்கு கொண்டு வர முடியும். கொரிய நிபுணர்கள் மாங்குளத்தில் நீர் மற்றும் கட்டட நிர்மாணங்கள் பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமது அய்வினை பூர்த்தி செய்ததும் அது பற்றிய முழுமையான அறிக்கையை இன்னும் ஓரிரு மாதங்களில் என்னிடம் கையளிப்பார்கள். அவ்வாறு தென் கொரிய நிபுணர்களினால் கையளிக்கப்படும் அறிக்கையில் மாங்குளத்தில் வட மாகாண சபையை நிர்மாணிப்பதற்குரிய சாதகமான விடயங்கள் தெரிவிக்கப்பட்டால் வட மாகாண சபையை மாங்குளத்திற்கு இடமாற்ற நடவடிக்கையை மேற்கொள்வோம். அத்துடன் முல்லைத்தீவு மாவட்டம் யுத்தத்தினால் கூடுதலான இழப்புக்களை சந்தித்த மாவட்டமாகும். இந்த மாவட்டத்திற்கு மாகாண அமைச்சர் ஒருவரை நியமிக்காவிட்டாலும் பிரதி தவிசாளர் பதவியை இந்த மாவட்டத்திற்கே வழங்கியுள்ளோம்.
வட மாகாண சபை ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்" என முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட சிலாவத்தை றோமன் தமிழ் கலவன் பாடசாலையில் அவுஸ்திரேலிய நிறுவனத்தினால் புதிதாக நிருமாணிக்கப்பட்ட இருமாடி பாடசாலைக் கட்டடத் திறப்பு விழா நேற்று (29.01.14) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஊடகவியளாளரின் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாடசாலையின் அதிபர் அருட் சகோதரி ஏ.எம்.ஜே.நீற்றாவின் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் அவுஸ்ரேதிலியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் றொபின் மூடி, யுனிசெபின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மக்கூலி, மாகாண சபையின் அதிகாரிகள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Wednesday, January 29, 2014

இலங்கைத் தேயிலை ஏற்றுமதி: உண்மையில் சாதனையா- வேதனையா?

இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 2013-ம் ஆண்டில் தான் அதிகளவு தேயிலை ஏற்றுமதி நடந்துள்ளதாக பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைத் தேயிலைச் சபையின் புள்ளிவிபரங்களின்படி, கடந்த ஆண்டில் 1.54 பில்லியன் டாலர்கள் அளவுக்கு தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 2012-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது கிட்டத்தட்ட 22 சதவீத அதிகரிப்பு. தேயிலை உற்பத்தியும் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக முன்னேறிவருவதாகவும்அமைச்சர் சமரசிங்க கூறியுள்ளார். இதேவேளை, தோட்டங்களில் தேயிலைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதால் உரிய நேரத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் வேலையை பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் இருப்பதாகவும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சங்கம் கூறுகிறது. சர்வதேச சந்தையில் இலங்கைத் தேயிலைக்கு நல்ல விலை கிடைத்துவருகின்ற சந்தர்ப்பத்தில், போதிய தொழிலாளர் பலம் இல்லாத நிலையிலும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காட்டிவருவதாகவும் பெருந்தோட்ட நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார். எனினும் பெருந்தோட்டக் கம்பனிகளின் நிர்வாகத்தின் கீழ் மிகக் குறைவான சம்பளமே கிடைப்பதால், தொழிலாளர்கள் சிறு தோட்ட முதலாளிகளின் தோட்டங்களில் வேலைபார்க்க செல்கின்ற காரணத்தினாலேயே கம்பனி நிர்வாகத் தோட்டங்களில் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாக தொழிற்சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தேயிலைத் தொழிற்துறையின் எதிர்காலம் நாட்டின் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பை ஈடுகொடுக்க முடியாமலும், தோட்டங்களில் சுகாதாரம், குடிநீர், வீதிகள் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும் தொழிலாளர்கள் சிரமப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் தெரிவித்தார். 1992-ம் ஆண்டில் பெருந்தோட்டங்களைப் பொறுப்பேற்றதிலிருந்து, தனியார் கம்பனிகள் தொழிலாளர்களுக்கு ஒரு வீட்டைக்கூட கட்டிக் கொடுத்ததில்லை என்றும் மக்கள் தங்களின் அடிப்படை வசதிகளுக்காக இன்னும் அரசியல்வாதிகளையே நம்பியிருக்க வேண்டியிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார். இன்னும் 25 ஆண்டுகளில் தேயிலைத் தோட்டங்களில் 40 வீதமான தேயிலைச் செடிகள் அழிந்துவிடும் என்றும் அவற்றின் மீள்நடுகைக்காக கம்பனிகள் போதியளவு முதலீடு செய்வதில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குற்றஞ்சாட்டுகிறார்.எனவே, தொழிலாளர்களையும் பங்குதாரர்களாக மாற்றிக்கொண்டு, தொழிலாளர்களுக்கு தேயிலைக் காணிகளை பகிர்ந்தளித்து மீள்நடுகை நடவடிக்கையை தொடங்கினால் மட்டுமே இலங்கையின் தேயிலைத் தொழிற்துறை பாதுகாக்கப்படும் என்றும் யோகராஜன் பிபிசியிடம் கூறினார். இதேவேளை, எதிர்காலத்தில் குறைந்தளவு தேயிலைக் காணிகளில் குறைந்தளவு தொழிலாளர் பலத்துடன் தரமான தேயிலையை தயாரிப்பதே தங்களின் எதிர்பார்ப்பு என்று பெருந்தோட்ட நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார். போட்டி நாடுகள் தேயிலை உற்பத்தியின் அளவை பெருக்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்துவரும் சூழ்நிலையில், தேயிலையின் தரத்தை அதிகரிக்கவே இலங்கை நடவடிக்கை எடுக்கும் என்றும் ரொஷான் ராஜதுரை கூறினார்.

உகண்டா இலங்கையிடம் இராணுவ பயிற்சி பெற்றுக் கொள்ள உள்ளது:-

உகண்டா, இலங்கையிடம் இராணுவப் பயிற்சி பெற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உகண்டா இராணுவம், இலங்கை இராணுவத்திடம் பயிற்சி பெற்றுக்கொள்ள உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. உகண்டாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஒடங்கோ ஜேஜே உள்ளிட்ட பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். உகண்டா பாதுகாப்பு அமைச்சர், இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்னாயக்கவை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்துள்ளார். யுத்த கள அனுபவங்களை பகிர்ந்து கொள்ளத் தயார் என தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறும் பாதுகாப்பு கருத்தரங்குகள், செயலமர்வுகளில் பங்கேற்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இரு தரப்பு இராணுவ விவகாரங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. இலங்கையுடன் சிறந்த உறவுகளை பேண விரும்புவதாக உகண்டா பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் இலங்கையை மீட்குமா யப்பான் - சீனப் பயத்தால் காய் நகர்த்தும் யசூசி அகாசி -

ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்படும் பிரேரணைக்கு எதிராக யப்பான் குரல்கொடுக்க உள்ளதாக கொழும்பில் உள்ள யப்பான் தூதுதரக தகவல்கள் மூலம் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது. இலங்கை மீது கடுமையான குற்றச் சாட்டுக்கள் மற்றும் சர்வதேச விசாரணை என்று கடும் அழுத்தங்களைக் கொடுத்தால் இலங்கை அரசாங்கம் சீனாவின் பக்கம் சென்று விடும் என யப்பான் அஞ்சுவதாகவும் இதனால் பிரேரணையில் உள்ள கடும் வாசகங்களை குறைப்பது தொடர்பாக யப்பான் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் கொழும்பில் உள்ள யப்பான் தூதரக தகவல்கள் கூறுகின்றன. பிரேரணை தொடர்பாக அமெரிக்கா, பிரித்தானியா, ஆகிய நாடுகளின் மனித உரிமைச் சபை பிரதிநிதிகளுடன் பேசி வருவதாகவும் யப்பான் தூதுவர் யசூசி அகாசி இது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு நம்பகமான தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் (Ukraine) முதன் மந்திரி ராஜினாமா - அரசியல் மாற்றத்திற்கு வழிவிடுமா?

உக்ரைன் நாட்டின் (Ukraine) முதன் மந்திரி ராஜினாமா செய்து கொண்டமை அந்நாட்டு அரசியல் மாற்றத்திற்கு வழிவிடுமென ஜேர்மன் வெளிவிவகார செயலர் வோல்ரர் வி(F)ராங் ஸ்ரைன்மயர் (Walter Frank Steinmeir) தெரிவித்துள்ளார். இருந்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் Kiew நகரத்தில் மட்டுமல்லாது பல மாநிலங்களிலும் பரவித் தொடர்கிறது. அரச அலுவலகங்கள் ஆர்பாட்டக் காரர்களால் முற்றுகையிடப்பட்டு அரச அலுவல்கள் பல மாநிலங்களில் முடக்கப்பட்டுள்ளன. கடை உடைப்புக்களும் நிகழ்ந்த வண்ணமாகவுள்ளது. சென்ற வெள்ளிக்கிழமை ஜனாதிபதியால் வழங்கப்படத் தயாராக இருந்த, முதல் மந்திரிப் பதவி உட்பட்ட பதவிகளை ஏற்க மறுத்த Vitali Klitschko மந்திரிப் பதவிகளைக் காண்பித்து எதிரணியினரின் நெருக்கத்தைப் பாழ்படுத்திவிட முடியாதென்றும், எதிரணியின் முக்கிய நோக்கம் மந்திரிப் பதவிகளல்ல மாறாக மக்கள் சுதந்திரமும் அவர்களது முழுமையான உரிமைகளுமே என்று உறுதிபடக் கூறியிருந்தார். ஏற்கனவே பாராளுமன்றத்தின் அவசரகாலத் தேர்தலில் முடிவெடுக்கப்பட்டதன் பிரகாரம் முதன் மந்திரி நிக்கோலை அசரவ் (Nikolai Asarav) தன் பதவியை ராஜினாமா செய்ததோடு, உக்ரைன் (Ukraine) அரசியற் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காணவல்ல அரசியல் உடன் படிக்கை தோன்ற வழிவிட்டுத் தான் விலகுவதாகவும் தன் இறுதி உரையில் குறிப்பிட்டார். இவர் கடும் போக்கைக்கொண்ட அர்சியல் வாதிகளில் ஒருவரென எதிரணி குற்றஞ்சாட்டிக் கோசமிட்டிருந்தது. பெரும் திரளான மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி ஊர்வலம் நடாத்த முடியாதெனும் சட்டம், 361 சட்டமன்ற அங்கத்தவர்களின் வாக்குகளால் செல்லுபடியாகாது (Null an Void) போனது. அச்சட்டத்தை ஆதரித்து 51 அங்கத்தவர்கள் வாக்களித்திருந்தனர். நாட்டின் உயர் சட்ட மன்றத்திலும் எதிரணி சார்ந்த கொள்கை வலுவடைந்துள்ளது. பத்திரிகைச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் போன்றவற்றை நசுக்கி மக்களை அடக்கி ஆட்சிபுரியும் அன்றைய சோவியத்தின் கொள்கைகளை மீண்டும் அறிமுகப்படுத்தல், சர்வாதிகார ஆட்சியை நாட்டில் மறுபடியும் தோற்றுவிக்குமென்றும், செவ்வாய்க் கிழமை வரை உக்ரையினில் நடந்த அரசியல் மாற்றம் எதிரணியினரின் வெற்றிப் பாதையில் ஒரு சிறிய அடியே தவிர வெற்றியல்ல என்றும், ஜனாதிபதி ஜனுகோவிச்சின் (Janukowitsch) ராஜினாமா நோக்கிய எதிர்ப்பார்பாட்டம் தொடருமென்றும் எதிரணி ஒரே குரலில் கூறியுள்ளது ஐரோப்பிய செய்தியார் மகேந்தி

Monday, January 27, 2014

மீத்தேன் உரிஞ்சலால் ஏற்படும் தீங்குளை மேலும் அறிய பிரெய்ன் மெக்மேகனின் இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு தாலுகாக்களிலும், திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம், குடவாசல், வலங்கைமான் தாலுகாக்களிலும் மீத்தேன் வாயுவும் பழுப்பு நிலக்கரியும் எடுக்கப்பட உள்ளன. சுமார் 691 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது இத்திட்டம். மன்னார்குடியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கவிருக்கிறது. கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிட்.இது தஞ்சையின் பிரச்சினை அல்ல தமிழகத்தின் பிரச்சனை. ----------------------------------------------------------------------------------------------------------------------- தந்தி டிவி நிகழ்ச்சியில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த “ சுந்தராஜன் அவர்கள் “ கூறிய ஆழமான கருத்து என்னவெனில் அசாம், பீகார் போன்ற வடக்கு மாநிலங்களில் மத்திய அரசின் இது போன்ற தவறான திட்டங்களால் தான் இன்று தமிழகத்தில் அம்மக்கள் அகதிகளாக குறைந்த கூலிக்கு வேலை பார்க்கு அவலநிலை. தற்போது தமிழகத்திலும் அணு உலை, கெயில், மீத்தேன், நீயூட்ரினோ....... போன்ற திட்டங்கள் செயல்பட்டால், நம் தமிழக மக்களும் வேறு மாநிலங்களுக்கு அகதிகளாக செல்லும் நிலை ஏற்படும் என கூறினார். ---------------------------------------------------------------------------------------------------------------------------- இளைஞர்களே இணைவோம். இத்திட்டத்தை தடுப்போம். மீத்தேன் அபாயம்! சோத்துக்கும் வருகிறது வேட்டு! உபயம் மத்திய அரசு! தமிழகத்தை பாலைவனமாக்க , கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர முனைப்பு காட்டுகிறது மத்திய அரசு. தஞ்சை - திருவாரூர் மாவட்டப் பகுதிகளில் மீத்தேன் வாயு மற்றும் பழுப்பு நிலக்கரி எடுத்துக்கொள்ள, ‘கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிட்(GEECL)’ என்ற வெளிநாட்டு நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. காவிரிப் பாசனப் பகுதியின் விவசாயக் கருவூலங்கள், தஞ்சை - திருவாரூர் - நாகை மாவட்டப் பிரதேசங்கள். பசுமையான இந்த மருத நிலப் பகுதிகளை ஒட்டுமொத்த பாலைவனமாக மாற்ற வந்திருப்பதே இத்திட்டம் எனக் குமுறுகின்றனர் காவிரி விவசாயிகள். ============================================================================================================================ தமிழ்நாடு - பாண்டிச்சேரி கடலோரப் பகுதியில் அமைந்துள்ள காவிரி பெருங்குழிப் படுகையில் உள்ள பழுப்பு நிலக்கரிப் படிவத்தின் ஒரு பகுதியாக இருப்பதே மன்னார்குடி படுகைப் பகுதியில் மீத்தேன் தொகுதி. இந்த நீள்வடிவ பழுப்பு நிலக்கரி மண்டலம் பாண்டிச்சேரியின் பாகூரில் தொடங்கி, நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் முதல் ஸ்ரீமுஷ்ணம், ஜெயங்கொண்ட சோழபுரம், மன்னார்குடி மற்றும் தெற்குப் பகுதி வரை பரந்துள்ளது" என்கிறது கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவன ஆய்வறிக்கை. ---------------------------------------------------------------------------------------------------------------------------- தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு தாலுகாக்களிலும், திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம், குடவாசல், வலங்கைமான் தாலுகாக்களிலும் மீத்தேன் வாயுவும் பழுப்பு நிலக்கரியும் எடுக்கப்பட உள்ளன. சுமார் 691 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது இத்திட்டம். மன்னார்குடியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கவிருக்கிறது. கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிட். ============================================================================================================================== இந்திய மாநிலங்கள் பலவற்றில் மின் உற்பத்தி கட்டமைப்புக்காகப் பணியாற்றி வருபவர் பொறியாளர் கோ.திருநாவுக்கரசு. இவர் ‘பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின், ஒருங்கிணைப்பாளர். இத்திட்டம் குறித்து இவரிடம் பேசினோம். திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டப் பகுதிகள் அடங்கிய மன்னார்குடி மண்டல நிலப்பகுதிகளில் தரைமட்டத்திலிருந்து 150 மீட்டர் முதல் 600 மீட்டர் ஆழத்துக்கு, சுமார் 760 சதுர கி.மீ.க்கும் அதிக பரப்பளவில் பழுப்பு நிலக்கரிப் படிமங்கள் இருக்கின்றன என்கிறது ஜி.இ.இ.சி. ஆய்வறிக்கை. ஆசியாவிலேயே மிக அதிக அளவு பழுப்பு நிலக்கரி இங்கே இருக்கின்றனவாம். ------------------------------------------------------------------------------------------------------------------------------- மன்னார்குடியை மையமாகக் கொண்டு திருவாரூர் - தஞ்சை மாவட்டப் பகுதிகளில் சுமார் 690 சதுர கி.மீ. பரப்புக்கு மீத்தேன் வாயு மற்றும் பழுப்பு நிலக்கரி எடுத்திட வரைவுத் திட்டம் தயாரித்துள்ளது அந்த நிறுவனம்" என்றவரிடம், மீத்தேன் வாயு எரிபொருளுக்கும் பழுப்பு நிலக்கரி மின் உற்பத்திக்கும் பக்கபலமாக இருக்ககும். இரண்டுமே நமக்கு ‘இப்ப’ தேவைதானே?" எனக் கேட்டோம். இந்தப் பழுப்பு நிலக்கரிப் படிமங்கள் அதிக நுண் துளைகள் கொண்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அந்த நுண்துளைகளுக்குள் அடைபட்டிருக்கும் மீத்தேன் வாயுவை வெளியேற்றிய பின்னரே, பழுப்பு நிலக்கரிப் படிமங்களை வெட்டியெடுக்க முடியும். அப்போது தரைமட்டத்துக்குக் கீழே பூமிக்கடியில் பெருமளவு தண்ணீரை முதலில் வெளியேற்றியாக வேண்டும். இயற்கையின் கொடையான நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றி விட்டால், தஞ்சை - திருவாரூர் - நாகை மாவட்டங்களின் வயல்வெளிகள் அனைத்துமே கருகிப் போய்விடும். விவசாய விளை நிலங்களுக்கும், பொதுமக்களுக்கும் ஜீவாதார பாசன நீரும், குடிநீரும் கிட்டாது போய்விடும். வளமான நிலப்பரப்புப் பாலைவனமாக்கி விடும்!" என்கிறார் இவர்! ------------------------------------------------------------------------------------------------------------------------------ ‘மேற்கு வங்கத்தின் பர்த்வான் மாவட்ட தாமோதர் பள்ளத்தாக்கில் ராணிகஞ்ச் பகுதியில் சுமார் 210 சதுர கி.மீ. பரப்பளவில் மீத்தேன் வாயு மற்றும் நிலக்கரியை எடுத்து வருவதாகச் சொல்கிறதே கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனம்’ என்று பேரழிவுக்கு எதிரான இயக்கத்தின் தலைவர் அத்திவெட்டி லெனினிடம் கேட்டோம். அங்கு விளைநிலங்களும், பொதுமக்கள் வசிப்பிடங்களும் மிகமிகக் குறைவு. இங்கு அப்படி அல்ல. ஆசியாவிலேயே இதுபோன்றதொரு மிகப்பெரிய பரப்பளவுக்கு சமவெளி வேளாண் பிரதேசம் வேறெங்குமே இல்லை என்பதுதான், தஞ்சை - திருவாரூர் - நாகை மாவட்டங்களின் காவிரி டெல்டாவின் மாபெரும் தொன்மை!" என்கிறார் லெனின். ================================================================================================================================ தரைமட்டத்துக்குக் கீழே (core drilling) உள்ளீட்டுத் துரப்பணத் துளைகள் மூலமாக, துரப்பணக் குழாய் கிணறுகள் அமைத்து, நிலத்தடி நீரை அருகருகே இருக்கும் பாசன வாய்க்கால்கள் மூலமாக வெளியேற்ற உள்ளனர். மீத்தேன் வாயு மற்றும் நிலக்கரிப் படிமங்களிலிருந்து வெளியேற்றப்படும் நீர், கடல்நீரைவிட ஐந்து மடங்கு உப்புத்தன்மை கொண்டது. அது வாய்க்கால் வழியாகச் செல்லும் போது விளைநிலங்களின் படிந்திருக்கும் அற்புதமான நுண்ணுயிர்களும், பயிர்களும் மடிந்து போகும். அப்புறம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் பாலைவனமாவதைத் தவிர வேறு வழியில்லை." திருவாரூர் மாவட்டத்தில் 38 இடங்களிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 12 இடங்களிலும் உள்ளீட்டுக் குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. கடந்த நான்கைந்து மாதங்களாகவே இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டங்களும், பொதுக் கூட்டங்களும் மன்னார்குடி மற்றும் தஞ்சாவூரில் நடைபெற்று வருகின்றன. காவிரி பாசனப் பகுதிக்குள் இத்திட்டத்தை முற்றிலுமாகக் கைவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டத் துணைச் செயலாளர் பி.ஆர். பாண்டியன். ================================================================================================================================= ஏற்கெனவே காவிரி பொய்த்துப் போச்சு. இப்போது இதுவேற எங்களை வதைக்குது! விளைநிலங்களும், பொதுமக்களும் அடர்த்தியாக உள்ள பகுதியில் இத்திட்டத்துக்கு முன்னுரிமை அளித்துள்ளது முதல் குற்றம். பொதுமக்களுக்கு மருந்தில்லா நோய்கள் பரவக்கூடிய அபாயம் ஏற்படும். வெளியேற்றப்படும் நீரில் உள்ள மிக அதிகளவு உப்பு, கதிரியக்கக் கழிவுகள் மற்றும் ரசாயனக் கழிவுகளால் சுமார் இருபது லட்ச ஏக்கர் வயல்வெளிகளிலும் பூண்டுச் செடிகள் முளைக்கக் கூட லாயக்கற்றதாகப் போய்விடும். எங்கள் மூன்று மாவட்ட மக்களின் ஒரே வாழ்வாதாரமே விவசாயம் தான். அதுலயும் மண்ணை அள்ளிப் போட்டா நாங்க எங்கே போவோம்" என்கிறார் பி.ஆர். பாண்டியன். ================================================================================================================================= மீத்தேன் உரிஞ்சலால் ஏற்படும் தீங்குளை மேலும் அறிய பிரெய்ன் மெக்மேகனின் இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

மீத்தேன் திட்டத்தை நம் மண்ணில் அனுமதித்தால் இப்படிதான்

மீத்தேன் திட்டத்தை நம் மண்ணில் அனுமதித்தால் இப்படிதான் எங்கும் துளையிடும் கருவிகளும்,கொதிநீர் குளமுமாக நம் மண் மாற்றிவிடும்.விளையும் நிலத்தில் வேதிக்கழிவா? விடமாட்டோம் விடமாட்டோம் எம் மண்ணை மலடாக்கா விடமாட்டோம்.

வளைதளதிருந்து எடுக்கப்பட்ட தகவல் இது

மீத்தேன் வாயு எடுக்க GREAT EASTERN ENERGY CORPORATION LTD. என்ற நிறுவனம் ஒப்பந்திக்க பட்டுள்ளது . அதன் வளைதளதிருந்து எடுக்கப்பட்ட தகவல் இது. இதன் வலைதள முகவரியை இங்கே கொடுத்துள்ளேன்.அந்த நிறுவனத்தின் திட்ட வரைபடம் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது http://www.geecl.com/mannargudi-block.php
The Company received its second CBM block in 2010 in CBM IV round conducted by Ministry of Petroleum and Natural Gas (MoPNG). The block is situated in the state of Tamil Nadu located in the southern region of India. Area of 667 sq. km; 0.98 TCF Gas-in-Place as per the Directorate General of Hydrocarbons; Single seam of up to 80 m; High permeability expected; Existing external pipeline infrastructure in place; Petroleum Exploration Licence (PEL) signed with Tamil Nadu Government; Plan to drill 50 core wells and 30 pilot production wells as per the minimum work program; Environmental clearance received; consent to establish in progress.

என் சாமியை (மண்ணை) காக்க யாரு இருக்க இங்க ??

நாங்க விரட்டி அடிச்ச வெள்ளையனோ வேறு ரூபத்தில் எங்களை அழிக்க வந்து நிற்கிறான் ! எங்க கிட்ட மிச்சமுள்ள பூமியிலே #மீத்தேன் எடுத்துப்புட்டா சத்து இல்லாத மண்ணை வச்சி நாங்க என்ன பண்ணுவோமுய்யா ? காப்பாத்தவேண்டியவனோ எங்களை காவுக்குடுக்க பார்க்கிறான் !! எதிர்க்க வேண்டியவனோ ஏதோ ஒரு போதைக்கு அடிமையாகி நிற்கிறான் !! எங்களை காப்பாத்த யாரு இருக்கா?
படிச்சவனோ எங்களை காப்பாத்த நினைக்கல படிப்பை பாதியில விட்டவனுக்கோ நாங்க எதுக்காக போராடுறோமுனு விளங்கள! என் சாதிசனம் வாழ என் சாமியை (மண்ணை) காக்க யாரு இருக்க இங்க ?? விவசாயம் மட்டுமே செஞ்சிக்கிட்டு வெள்ளந்திய வாழ்ந்த சனத்தை விவரம் சொல்லி புரிய வைக்க யாரு இருக்க இங்க ??

சிரியா பேச்சுவார்த்தை : ஒரே அறையில் இருதரப்பும்

ஜெனிவாவில் நடக்கும் சிரியா சமாதானப் பேச்சுக்களில் போரில் ஈடுபடும் இரு தரப்பும் முதல் தடவையாக ஒரே அறையில் சிறிது நேரம் நேருக்கு நேர் அமர்ந்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் நேரடியாக ஏதும் பேசிக்கொள்ளவில்லை. இந்த முதல் கூட்டம் சுமார் அரை மணிநேரம் நடந்ததாக செய்திகள் கூறுகின்றன. இதற்கு முன்னதாக இரு தரப்பும் தாம் ஐநாவின் மத்தியஸ்தரான லக்தர் பிரஹமி அவர்களுடன் மாத்திரந்தான் பேசுவோம் என்று கூறிவந்தன. தமது முக்கியமான கவனம் மனித நேய உதவிகள் மற்றும் கைதிகளை விடுதலை செய்தல் ஆகியவை குறித்தே இருக்கும் என்று ஐநாவுக்கான சிரியாவின் தூதுவர் பிபிசியிடம் கூறினார். அதிபர் அசாத்தின் எதிர்காலம் போன்ற முக்கிய விடயங்களை கையாள்வதற்கு முன்னதாக மத்தியஸ்தர்கள் இரு தரப்புக்கும் இடையே ஒரு பொதுத்தளத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக சுவிட்ஸர்லாந்தில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

சிரியா செல்லும் இளம் முஸ்லிம்கள் பிரிட்டனையும் தாக்கலாம்'

சிரியாவில் போராடுவதற்காக பிரிட்டனிலிருந்து செல்லும் முஸ்லிம் இளைஞர்கள் மீண்டும் நாடு திரும்பியதும் பிரிட்டனிலும் தாக்குதல்களை நடத்த முயற்சிக்கக் கூடும் என்று முன்னணி பிரிட்டிஷ் முஸ்லிம் விவகார அவதானி ஒருவர் கூறியுள்ளார். கடுமையான வன்முறைகளுக்குப் பழகிப் போனவர்களை மீண்டும் பிரிட்டிஷ் சமூகத்தில் இணைப்பது என்பது மிகக்கடினமாக இருக்கும் என்று மொஹமட் அன்சார் தெரிவித்தார். சிரியாவின் மோதலுடன் தொடர்புடைய பயங்கரவாதக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரிட்டனில் கைதாவோரின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக பிரிட்டிஷ் காவல்துறை எச்சரித்துள்ள நிலையில், இந்தக் கருத்து வெளியாகியுள்ளது. சிரியாவில் பயங்கரவாத உதவி நடவடிக்கைகளுக்காக லண்டனில் பணம் ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் இந்த வாரத்தின் ஆரம்பத்தில் பெண்கள் இருவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சிரியாவிலிருந்து பிரிட்டனுக்கு வரும் பிரிட்டிஷ் பிரஜைகள் நாட்டின் குடிவரவு எல்லைகளிலேயே தடுக்கப்பட்டு கைதுசெய்யப்படுவார்கள் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

தாய்லாந்து எதிர்ப்பு இயக்கத் தலைவர் சுட்டுக் கொலை

தாய்லாந்தில் தலைநகர் பாங்காக்கில் அரசாங்க ஆதரவாளர்களுடனான மோதல் ஒன்றின் போது அரச எதிர்ப்பு போராட்ட இயக்கத்தின் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது சுதின் டரட்டின் அவர்கள், துப்பாக்கியால் சுடப்பட்டார். அடுத்த வாரம் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலுக்காக, வாக்காளர்கள் முன்கூட்டிய வாக்களிப்பில் கலந்துகொள்வதை தடுக்கும் நோக்கில் தலைநகரிலும், ஏனைய நகரங்களிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கான வழியை தடுக்க முயன்றபோது வன்செயல்கள் வெடித்தன. பாங்காக்கில் உள்ள 50 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு முற்றாக தடுக்கப்பட்டது அல்லது நிறுத்தப்பட்டது. தற்போதைய அரசியல் முறை மாற்றஞ்செய்யப்படும் வரை எந்தவொரு தேர்தல் நடப்பதையும் எதிர்ப்பு இயக்கம் நிராகரிக்கிறது.

இ-சிகரெட்டை 18 வயதுக்கு கீழ் தடைசெய்ய பிரிட்டன் சட்டம்

இங்கிலாந்தில் இலக்ட்ரோனிக் சிகரெட்டுகளை (மின்னணு மூலம் புகை போன்ற வாயுவை உருவாக்கும் நவீன சிகரெட்) 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விற்பனை செய்வதை தடைசெய்து பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய சட்டத்தைக் கொண்டுவரவுள்ளது.
இ- சிகரெட் மூலம், இளம் பராயத்தினர் நிக்கோட்டின் சுவைக்கு பழகிவிடக்கூடும் என்று மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால், அதிகளவான இளம் பராயத்தினர் உண்மையான சிகரெட்டுகளை புகைக்கப் பழகிவிடுவார்கள் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். புகையிலை சிகரெட்டுகளை விட இ- சிகரெட்டுகள் சுகாதார ரீதியில் பாதுகாப்பானவை என்று கருதப்படுகிறது. ஆனால் அவற்றால் பாதிப்பு இல்லாமல் இல்லை. நீண்டகாலத்தில் என்ன வகையான பாதிப்புகளை இந்த இ-சிகரெட்டுகள் ஏற்படுத்தும் என்பது பற்றியும் எவருக்கும் தெரியாது. இதேவேளை, இங்கு இங்கிலாந்தில் சிறார்களுக்காக பெரியவர்கள் உண்மையான சிகரெட்டை வாங்குவதும் சட்டவிரோதம் என்று அறிவிக்கும் சட்டமும் கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தமான் படகு விபத்தில் 21 பேர் பலி

இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தபட்சம் 21 பேராவது பலியாகியுள்ளனர். அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தின் தலைநகரான போர்ட் பிளயருக்கு அருகே படகு, நீரில் மூழ்கிய போது அதில் 40க்கும் அதிகமானோர் இருந்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள். காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் 3 குழந்தைகள் அடங்கலாக 32 பேர் இருந்திருக்கிறார்கள். 13 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் சிலர் நீரில் மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. திடீரென இந்தப் படகு ஏன் மூழ்கியது என்று தெரியவில்லை. புலன்விசாரணைகள் நடக்கின்றன பெரும்பாலும் படகுகள் மோசமாக நிர்மாணிக்கப்பட்டிருப்பதாலும், அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் செல்வதாலும், இந்தியாவில் படகு விபத்துக்கள் அதிகமாக நடப்பது வழக்கம்.

வடக்கு மாகாணசபையை இயங்க வைப்பது அரசின் நோக்கமல்ல': சம்பந்தன்

வடக்கு மாகாணசபையை முறையாக இயங்க வைப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டுகிறது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் திருகோணமலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஜனாதிபதியிடம் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேரடியாக பல தடவைகள் கேட்டுக்கொண்டும் வடக்கு மாகாணசபையின் நிர்வாகத்தில் இருக்கின்ற முட்டுக்கட்டைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்று கூறினார். வடக்கில் மக்களால் தெளிவாக அளிக்கப்பட்ட ஜனநாயக ஆணையை அரசாங்கம் நிராகரித்துவருவதாகவும் சம்பந்தன் தெரிவித்தார். அரசியல் கைதிகளை விடுவிப்பதில் அரசுக்கு என்ன பிரச்சனைநாட்டின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, அண்மையில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயரை சந்தித்துப் பேசியிருந்தார். அதன்போது, சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் பற்றி ஆயர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தப் பிரச்சனை பற்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடமும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடமும் பேசியிருப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ கூறியதாக ஆயர் கூறியிருந்தார். அதுபற்றி கேட்டபோது பதிலளித்த சம்பந்தன், 'அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் விரும்பினால், அதனை அவர்கள் தாராளமாகச் செய்யமுடியும், அதற்கு எங்களின் சம்மதத்தைக் கேட்க வேண்டியதில்லை' என்றார். குற்றச்சாட்டுக்களின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மீது வழக்கு இல்லாவிட்டால், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறினார்.

சீன நீதிமன்றம் மனித உரிமை ஆர்வலர் ஒருவரிற்கு நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சீனாவின் நீதிமன்றம் முக்கிய மனித உரிமை ஆர்வலர் ஒருவரிற்கு நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மனித உரிமை ஆர்வலரான சூ ஷியாங் (Xu Zhiyong) ஏழைக் குழந்தைகளின் கல்வி உரிமைக்கும், ஆட்சியாளரின் ஊழலிற்கு எதிராகவும், மதிக்கப்பட வேண்டிய மக்கள் உரிமைக்காகவும் குரல் கொடுத்திருந்தார். மக்களின் அமைதியையும், நாட்டின் சட்ட திட்டங்களையும் சீர்குலைக்கும் வகையில் மக்களைத்திரட்டிக் குழப்பம் விளைவிப்பதாக் குற்றம் சாட்டப்பட்டு இவர்மேல் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது . சட்ட வல்லுனர்களில் ஒருவரான இவர், சீனாவின் முக்கிய மனித உரிமை ஆர்வலர்களில் ஒருவரும், 2010ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசைத் தற்சமயம் சிறையைலிருக்கும் மற்றொரு மனித உரிமை ஆர்வலரான லூ ஷியாபோ(b) (Liu Xiabo) வுடன் கூட்டாகப் பெற்றிருந்தார். சாட்சிகளேதும் விசாரிக்கப்படாமலும் பத்திரிகையாளர் எவரும் நீதிமன்ற வளாகத்தினுள் அனுமதிக்கப்படாமலும் தீர்ப்பு வழங்கப்பட்டமை, மனித உரிமை சீனாவில் அடியோடு அழிந்து கிடக்கும் நிலைக்கு ஒப்பற்ற உதாரணமென Human Rights Watch தெரிவிக்கிறது. சர்வதேசத்தின் கடும் விமர்சனங்களின் மத்தியில். கைதாகியிருக்கும் சகல மனித உரிமை ஆர்வலர்களையும் விடுதலை செய்யுமாறு ஜரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 135 கோடி மக்களைக் கொண்ட சீனாவின் வர்த்தக சந்தையை இழக்க விரும்பாத உலகப் பொருளாதார அரசியல், சீனாவில் மனித உரிமை மீறல் பற்றி வேதனைப்படுவதில் அர்த்தமில்லை என உலக மனிதாபிமானிகள் மத்தியில் கருத்து எழுந்துள்ளது.

Sunday, January 26, 2014

டெல்டாவின் "தண்ணீர்" காக்க டெல்டாவின் மண்ணை காக்க

மீதேன் எமனை விட மாட்டோம்!

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீதேன் வாயு எடுக்கும் வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளது மத்திய அரசு. இதன் காரணமாக தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா பகுதி முழுமையுமே பாலைவனமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்து 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார் துவக்கி வைத்த மக்கள் போராட்டம், அவருடைய மறைவுக்குப் பிறகு, மேலும் வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. நேற்று (ஜனவரி 25-2014) திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆயிரக்கணக்கில் திரண்ட விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள்... மீதேன் எமனுக்கு தங்களின் ஆவேச எதிர்ப்பைப் பதிவு செய்தனர்!

Saturday, January 25, 2014

இந்திய வரலாறு - ஒரு குறிப்பு

---------------------------------------------- கிமு 3500-1500 - சிந்து வெளி நாகரிகம் கிமு 1000 - கங்கை நதிக்கரையில் ஆரியர்கள் குடியேறுதல் கிமு 900 - மகாபாரதப் போர் கிமு 800 - இராயமாயனத்தின் முதல் பகுதி துவக்கம். மகாபாரதத்தின் முதல் பகுதி வங்காளத்திற்கு ஆரியர்கள் இடம் பெயர்தல் கிமு 550 - உபநிஷங்கள் தொகுப்பு கிமு 554 - புத்தரின் நிர்வாணம் கிமு 518 - பாரசீகர்களின் ஆதிக்கத்தில் இந்தியா கிமு 326 - அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுப்பு கிமு 321 - பாடலிபுரத்தில் சந்திரகுப்தர் மெளரிய வம்சத்தை நிறுவுதல் கிமு 272-232 - அசோகர் ஆட்சி கிமு 185 - புருஷ்யமித்திரன் சங்க சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தல் கிமு 58 - விக்கரம் ஆண்டு கிமு 30 - தெற்கில் பாண்டியர் சாம்ராஜ்யம் கிபி 40 - சாகர்கள் சிந்து பகுதியில் ஆட்சி கிபி 52 - புனித தாமஸ் இந்தியா வருகை கிபி 78 - சகா சகாப்தம் ஆரம்பம் கிபி 98-117 - கனிஷ்கரின் காலம் கிபி 320 - குப்த சாம்ராஜ்யம் உருவாதல் கிபி 380-143 - சந்திரகுப்த விக்கிரமாதித்தன் காலம், காளிதாசர் காலம், இந்து மதம் உயர்வடைந்தது கிபி 405-411 - பாகியான் வருகை கிபி 606 - ஹர்ஷவர்த்தனர் ஆட்சி கிபி 609 - சாளுக்கிய வம்சம் தோற்றம் கிபி 622 - ஹீஜிரா வருடம் துவக்கம் கிபி 629-645 - யுவான் சுவாங் வருகை கிபி 712 - முகமது பின் காசிம் படையெடுப்பு கிபி 985 - ராஜராஜன் சோழன் காலம் கிபி 1001-1026 - முகமது கஜினி இந்திய படையெடுப்பு சோமநாதர் ஆலயம் அழிப்பு கிபி 1191 - முதலாம் தரைன் யுத்தம் கிபி 1192 - இரண்டாம் தரைன் யுத்தம் கிபி 1206 - டில்லியில் அடிமை வம்சத்தை உருவாக்குதல் கிபி 1221 - ஜென்கின்கான் படையெடுப்பு கிபி1232 - குதும்பினார் கட்டப்பட்டது கிபி1298 - மார்க்கபோலோ இந்தியா வருகை கிபி1333 - இப்னுபத்துக் இந்தியா வருகை கிபி1336 - தென்னிந்தியாவில் விஜய நகரப் பேரரசு உதயம் கிபி1347 - பாமினி அரசு துவக்கம் கிபி1398 - தைமூரின் இந்திய படையெடுப்பு கிபி1424 - டில்லியில் பாமினி வம்சம் கிபி1451 - லோடி வம்சம் கிபி1496 - குருநானக் பிறப்பு கிபி1498 - வாஸ்கோடகாமா கடல் வழியாக இந்தியா (கோழிக் கோடு வருகை) கிபி1516 - போர்த்துக்கீசியர் கோவாவை கைப்பற்றுதல் கிபி1526 - முதலாம் பானிபட் யுத்தம் கிபி1539 - குருநானக் இறப்பு கிபி1556 - ஆக்கப் பதவி ஏற்பு - இரண்டாம் பானிபட் யுத்தம் கிபி1564-65 - கானிகோட்டா யுத்தம் கிபி1576 - ஹால்டி காந்தி யுத்தம் கிபி1600 - கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வருகை கிபி1604 - சீக்கியரின் ஆதிகிரந்தம் வெளியிடப்பட்டது கிபி1631 - தாஜ்மகால் கட்டப்பட்டது கிபி1639 - சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது கிபி1658 - டெல்லி சக்கரவர்த்தி ஒளரங்கசீப் கிபி1739 - நாதர்ஷா இந்தியாவில் ஊடுருவல், ஈரானுக்கு 6 விலாசனத்தை கொண்டு செல்லுதல் கிபி1748 - முதல் ஆங்கிலேய - பிரஞ்சுப் போர் கிபி1757 - பிளாசிப் போர் கிபி1761 - மூன்றாம் பானிபட் போர் கிபி1764 - பாக்ஸர் போர் கிபி1790-92 - மைசூர் போர் கிபி1799 - நான்காம் மைசூர் போர் கிபி1803 - ஆங்கிலேய மராத்திய போர் கிபி1805 - மராத்தியர் தோல்வி கிபி1835 - ஆங்கிலேய கல்வி முறை ஆரம்பம் கிபி1845 -1846 - ஆங்கிலேயர் - சீக்கியர் போர் கிபி1853 - முதல் இந்திய ரயில் பாதை (பம்பாய் - தானே) கிபி1857 - முதல் இந்திய சுதந்திரப் போர் (தென் இந்தியாவில் நெல்லை சீமையில் முதலில் ஆரம்பமானது) கிபி1858 - கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவு கிபி1885 - இந்திய தேசிய காங்கிரஸ் உதயம் கிபி1906 - முஸ்லீம் லீக் உதயம் கிபி1909 - மின்டோ - மார்லி சீர்திருத்தம் கிபி 1914-18 - முதலாம் உலகப் போர் கிபி1919 - மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம் கிபி1920 - காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம் கிபி1921 - பிரின்ஸ் ஆக்கப் வேல்ஸ் இந்திய வருகை கிபி1922 - சட்ட மறுப்பு இயக்கம் கிபி1928 - சைமன் கமிஷன் வருகை கிபி1931 - காந்தி - இர்வின் ஒப்பந்தம் கிபி1934 - சட்டமறுப்பு இயக்கம் வாபஸ் வாங்கப்பட்டது கிபி1938 - காங்கிரஸ் அமைச்சரவை ராஜினமா கிபி1942 - வெள்ளையனே வெளியேறு போராட்டம் கிபி1945 - ஜப்பான் துணையுடன் நேதாஜியின் இந்தியன் நேஷனல் ஆர்மி பிரிட்டிஷாரிடம் தோல்வி கிபி1947 - இந்தியா விடுதலையானது (சுதந்திரம் பெற்றது)

200கோடி மது விற்பனை

31/12/2013 அன்று 200கோடி மது விற்பனை, 01/01/2014 அன்று 270கோடி மது விற்பனை மொத்தம் 470கோடி.... தமிழகத்தில் மொத்தம் *ஓரு கோடியே எண்பத்தி நான்கு லட்சம்(18400000) குடும்ப அட்டைகள் உள்ளன, *பொங்கலுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 100ரூபாய் இனாம் மொத்தம் *நூற்று எண்பத்தி நான்கு கோடி (18400000><100= 1840000000)ரூபாய், மற்றும் ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை தோராயமாக *நூறு கோடி(1000000000), மொத்தம் இருநூற்று எண்பத்தி நான்கு கோடி (2840000000)தோராயமாக .. வருட பிறப்பு அன்று சாராயம் விற்று சம்பாதித்தது நானூற்று எழுபது கோடி இதில் பொங்கல் பரிசு கொள்ளையடிப்பது நூற்று எண்பத்தி ஆறு கோடி... (4700000000-2840000000=1860000000) .... தமிழக மக்களே சிந்தித்து செயல்படுங்கள் .

குடிபோதையில் கார் ஓட்டிய பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் கைது

அதிவேகமாக.... பொதுவாக மக்கள் குடியிருப்பு பகுதிகளில் அங்கு மணிக்கு 30 கி.மீட்டர் வேகத்தில் மட்டுமே கார் ஓட்ட வேண்டும் என்ற சட்டம் அமெரிக்காவில் உள்ளது. ஆனால், பீபர் மணிக்கு 55 முதல் 60 கி.மீட்டர் வேகத்தில் கார் ஓட்டியுள்ளார்.
கார் பந்தயம்.... போலீசாரின் விசாரணையில், பீபர் தனது நண்பரும், சகபாடகருமான கலீல் ஷெரீயப்புடன் பந்தயம் கட்டி போட்டியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மதுபோதையில்... மேலும், காரோட்டிய போது அவர் மது அருந்தியதும், மறிஞ்சுனா என்ற போதை சிகரெட் புகைத்திருந்ததும் உறுதியானதைத் தொடர்ந்து ஜஸ்டின் பீபர் மற்றும் அவரது நண்பர் கலீல் ஷெரீயப்பை போலீசார் கைது செய்தனர். நிபந்தனை ஜாமீன்.... அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்ட பீபரும், அவரது நண்பரும் நிபந்தனையின் பேரில் ஜாமீனில் விடுவிக்கப் பட்டனர்.

சிரியாவின் நேரடி சமாதானப் பேச்சு வார்த்தை தடைப்பட்டது:-

வெள்ளிக் கிழமை ஆரம்பமாக இருந்த சிரியா சமாதானப் பேச்சு வார்த்தை எதிரணியினரின் கடும் போக்கால் தடைப்பட்டுள்ளது. Genf 1 மகாநாட்டில் முடிவெடுக்கப்பட்டதன் பிரகாரம், அதன் ஒப்பந்தத்தில் Assad அரசு கைச்சாத்திடாது போகின் தாம் மகாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லையென எதிரணியின் பிரதிநிதி அக்மட் அல் ஜர்பா திடமாகக் கூறியுள்ளார். Genf 1 ஒப்பந்தத்தில் இடைக்கால அரசாங்க அமைப்புப் பற்றிய ஒப்பந்த சரத்து ( Clause ) இடம் பெறுகிறது. இதனை ஏற்றுக் கொள்ள அசாத் (Assad) அரசு கண்டிப்போடு மறுக்கிறது. Assad இன் பிரதிநிதிகள் சிரியாவில் இடம்பெறும் பயங்கரவாதத்தை நிறுத்தவே Genf மகாநாட்டில் கலந்து கொள்ள வந்ததாக அசாத் அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். இரு பகுதியினருக்கும் இடையில் நடைபெறவிருந்த நேரடிப் பேச்சு வார்த்தை, வடிவம் மாற்றப்பட்ட்டு மத்தியஸ்தர் (Negotiator) ஒருவரின் துணையுடன் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம் இரு பகுதியினரையும் நேரடிப் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளவைக்க முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. நாற்பது வெளிநாட்டு மந்திரிகளும், பிரதிநிதிகளும் கலந்து கொள்ளக் காத்திருக்கும் மகாநாடு திட்டமிடப்பட்ட இசையும் திசையுமின்றி மாற்றுப் பாதை தேடி அலைவதாக் கூறப்படுகிறது. ஐரோப்பிய செய்தியாளர் - மகேந்தி:-

நல்லிணக்க முனைப்புக்களுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் - வியட்நாம்

இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என வியட்நாம் அறிவித்துள்ளது. அமைச்சர் டியூ குணசேகர வியட்நாமிக்க விஜயம் செய்துள்ளார். அமைச்சர் டியூ, வியட்நாம் ஜனாதிபதி ட்ரொன் டான் சான்கீனை சந்தித்து பேச்சுவார்த்தைந நடத்தியுள்ளார். தேசிய அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க முனைப்புக்களுக்கு முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படு;ம் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். வியட்நாமிற்கும் இலங்கைக்கும் இடையில் ராஜதந்திர மற்றும் பொருளாதார ரீதியில் நல்ல உறவு நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, வியட்நாம் இலங்கைக்கு அளித்து வரும் உதவிகள் பாராட்டுக்குரியது என அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.

எகிப்து : குண்டுத் தாக்குதல்களில் 5 பேர் பலி

எகிப்தில் பொலிஸ் படையை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகத் தென்படும் குண்டுத் தாக்குதல்களில் 5 பேர் கொல்லப்பட்டதுடன், 70 பேர் காயமடைந்துள்ளனர். கெய்ரோவில் உள்ள பொலிஸ் தலைமையகத்துக்கு வெளியே நடந்த கார் குண்டுத் தாக்குதலுடன் இந்தத் தாக்குதல்கள் ஆரம்பித்தன. முதல் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதுடன், 51 பேர் காயமடைந்தனர். அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் ஏனைய இடங்களில் மேலும் இரு குண்டுகள் வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 15 பேர்வரை காயமடைந்தனர். 2011 கிளர்ச்சியின் மூன்றாவது ஆண்டு நிகழ்வை ஒட்டி இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. அல்கைதாவால் கவரப்பட்ட ஒரு தீவிரவாதக் குழுவான அன்சார் பெய்ட் அல்-மக்டிஸ் இதற்கு உருமை கோரியுள்ளது.

றொஹிங்கா முஸ்லிம்கள் படுகொலை' : பர்மிய அரசு மறுப்பு

பர்மாவின் தூர மேற்குப் பகுதியில் கடந்த வாரம் நடந்த கலவரத்தில் குறைந்தபட்சம் 30 றொஹிங்கா முஸ்லிம்களாவது கொல்லப்பட்டதாக வந்த செய்திகளை பர்மிய அரசாங்கம் மறுத்துள்ளது. மனிதப் படுகொலை எதுவும் நடக்கவில்லை என்றும், அந்தச் செய்திகளுக்கு ஆதாரம் எதுவும் கிடையாது என்றும், பர்மாவின் பெயரைக் கெடுக்கும் நோக்கில் அவை வந்துள்ளதாகவும் ஒரு அறிக்கையில் அரசாங்கம் கூறியுள்ளது.
ஒரு பொலிஸ்காரர் இறந்த சம்பவத்தை அடுத்து ரக்கைன் மாநிலத்தில், றொஹிங்கா முஸ்லிம்களை பாதுகாப்புப் படையினரும், உள்ளூர் பௌத்தர்களும் தாக்கியதாக சர்வதேச தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பிபிசியிடம் கூறியிருந்தனர். அங்குள்ள அதிகாரிகளை அதனை விசாரணை செய்யுமாறு ஐநா கேட்டுள்ளது.

நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜா மரண அச்சுறுத்தலுக்கு நடுவில் நீதி வழங்கினார்'

இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜா நேற்று வியாழக்கிழமை மாலை திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்தார். அவரது இறுதிக் கிரியைகள் வரும் 26-ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பொரளை கனத்தை மயானத்தில் நடைபெறும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதனிடையே, நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜா பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் இடையூறுகளுக்கும் நடுவே நீதி வழங்கிவந்ததாக சட்டத்தரணிகள் கூட்டமைப்பு (Sri Lanka Lawyers Collective) கூறியுள்ளது. குறிப்பாக, தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவி நீக்கத் தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளித்திருந்த நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாக சட்டத்தரணிகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளரான மூத்த சட்டத்தரணி ஜே.சி. வெலியமுன கூறினார். நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கு தகுதிகளும் அனுபவமும் இருந்தும், நீதித்துறை அனுபவம் குறைந்தவர்களும் நீதிமன்ற கட்டமைப்புக்கு வெளியில் இருந்தவர்களும் ஜனாதிபதியால் உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப் பட்டதாகவும் வெலியமுன சுட்டிக்காட்டினார்.
எனவே, அரசாங்கம் நீதிபதிகளின் நியமனத்திலும் பதவிநீக்க வழிமுறைகளிலும் வெளிப்படைத் தன்மையான, நீதியான நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளரும் ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் அமைப்பின் முன்னாள் தலைமை இயக்குநருமான ஜே.சி. வெலியமுன கோரிக்கை விடுத்தார். 'இறுதி அரசியலமைப்புத் திருத்தங்களின்படி, ஜனாதிபதி எந்தவிதமான நடைமுறையும் என்றி எவரை வேண்டுமானாலும் இந்தப் பதவிகளுக்கு நியமிக்க முடியுமாக உள்ளது' என்று வெலியமுன கூறினார். 'இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜாவின் பெயரைக் குறிப்பிட்டு, நீதிபதிகளின் பதவி உயர்வில் நிலவும் இந்த அநீதியான நடைமுறைக்குப் பதிலாக வெளிப்படையான பொறிமுறை ஒன்று அவசியம் என்று சுட்டிக்காட்டியிருந்தார்' என்றும் கூறினார் ஜே.சி. வெலியமுன. நாட்டின் நீதித்துறை உட்பட சகல துறைகளிலும் சட்டம் ஒழுங்கு குலைந்துபோயுள்ளதாகவும் நீதித்துறையின் சுதந்திரம் வீழ்ச்சியடைந்துவிட்டதாகவும் வெலியமுன கூறினார். 'ஜனாதிபதி உள்ளிட்ட ஒருசிலரிடம் மட்டும் அதிகாரம் குவிந்துகிடக்கிறது' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தர்ணா போராட்டத்தில் தேசிய கொடிக்கு அவமதிப்பு

புதுடெல்லி: ரயில் பவன் முன் கெஜ்ரிவால் நடத்திய தர்ணா போராட்டத்தின் போது, தேசிய கொடி அவமானப்படுத்தப்பட்டதாக தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் புகார் செய்துள்ளது. தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் கிஷோர் வர்ஷனி கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: அமைச்சர் உத்தரவை மதிக்காத போலீசாரை சஸ்பெண்ட் செய்ய கோரி ரயில் பவன் முன் முதல்வர் கெஜ்ரிவாலும், அவரது அமைச்சர்களும், கட்சியினரும் 30 மணி நேரம் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது ஆம் ஆத்மி கட்சியினர்., தேசிய கொடியை கையில் பிடித்தபடி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
தேசிய கொடியை எந்தப் போராட்டத்துக்காகவும் யாரும் பயன்படுத்த கூடாது. ஆம் ஆத்மி கட்சி, இதுவரை தேசிய கொடியைதான் எப்போதும் பயன்படுத்தி வருகிறது. இது தேசிய கொடியை அவமதிக்கும் செயல். இது பற்றி தேர்தல் கமிஷன் விசாரித்து, இனி தேசிய கொடியை ஆம் ஆத்மி கட்சியினர் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். தொடர்ந்து தேசிய கொடியை பயன்படுத்தினால், அந்த கட்சியை தடை செய்ய வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார். பின்னர் நிருபர்களிடம் வர்ஷனி கூறுகையில்,‘தேசிய கொடியை அவமதிப்பதை பொறுத்து கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லாவிடில் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி மீதும் முதல்வர் கெஜ்ரிவால் மீது பொது நல வழக்கு தொடர்வேன். கட்சியை தொடங்கியவர்கள், கொடியையும் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். தேசிய கொடியை கட்சி கொடியாக்க யாருக்கும் உரிமையில்லை’ என்றார்.

பா.ஜ. கூட்டணி குறித்து பிப்.8க்குள் இறுதி முடிவு

குலசேகரம்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜவினர் எவ்வாறு இயங்க வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக பாஜ கேந்திர தலைவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் நேற்று திற்பரப்பில் இந்த பயிற்சி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக பாஜ மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் திற்பரப்பு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மதிமுகவுடன் கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது. எந்தெந்த தொகுதிகள் என்பது விரைவில் அறிவிக்கப்படும். ஊழல் மலிந்த காங்கிரசுடன் தேமுதிக கூட்டணி வைக்க முடியாது. விஜயகாந்த் தமிழ் உணர்வு உடையவர். இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு வலது கரமாக செயல்பட்ட காங்கிரசுடன் அவர் கூட்டணி அமைக்க மாட்டார். இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்க வேண்டும். இல்லை என்றால் வரும் காலத்தில் பாகிஸ்தானிடம் இருந்து பிரிந்து வங்காள தேசம் உருவான போன்று இலங்கையில் உருவாகும். இந்தியா அதை உருவாக்கும். தமிழகத்தில் தேர்தல் கூட்டணி அடுத்த மாதம் 8ம் தேதிக்கு பிறகு இறுதி செய்யப்பட்டு விடும். கன்னியாகுமரியில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும். போட்டியிட்டால் கன்னியாகுமரியில்தான் போட்டியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

திமுகவில் இருந்து மு.க.அழகிரி தற்காலிக நீக்கம் : அன்பழகன் அறிவிப்பு

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக தி.மு.க.வின் தென்மண்டல அமைப்புச்செயலாளர் மு.க.அழகிரி, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. குடும்ப அரசியல் நடத்துகிறது என்ற பழி இதன்மூலம் துடைக்கப்பட்டுள்ளது என்று கருத்து தெரிவித்தார். தனது நீக்கம் பற்றி கருத்து தெரிவித்த மு.க. அழகிரி, தி.மு.க. அழிவுக்கு கி.வீரமணி தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். “கருணாநிதி கைதானபோது, நாட்டுக்கு விடுதலை கிடைத்தது என்றவர் கி.வீரமணி. அவரைப் பற்றி தி.மு.க.வினர் நன்கு அறிவார்கள். அவர் ஒரு அரசியல் வியாபாரி. எனது ஆதரவாளர்கள் நீக்கத்தை பற்றி பேசியதற்கு கிடைத்த பரிசு தான் என்மீதான நடவடிக்கை” என்றும் அழகிரி கூறினார்

Friday, January 24, 2014

வண்டலூரில் மோடி கூட்டத்தில் கலந்து கொள்வேன்: வைகோ அறிவிப்பு

பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ம.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. இதில் பா.ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், கே.என். லெட்சுமணன், மோகன் ராஜுலு, மாநில செயலாளர் வானதிசீனிவாசன், சரவண பெருமாள், சக்ரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க. சார்பில் வைகோ, கணேசமூர்த்தி எம்.பி., சதன்திருமலைக்குமார், மாசிலாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது வண்டலூரில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 8–ந்தேதி நடைபெறும் நரேந்திரமோடி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி வைகோவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார். அழைப்பை ஏற்றுக் கொண்ட வைகோ நரேந்திர மோடி பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, எங்களது ஒரே இலக்கு 578 தமிழக மீனவர்களை கொன்று குவித்தபோதும் பாராமுகமாய் இருந்த காங்கிரசை, இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரசை மத்திய ஆட்சியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்பதுதான். காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்கும் வலிமை பெற்று இருப்பது பா.ஜனதா. நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. நிச்சயமாக இந்த கூட்டணி வெற்றி பெறும். வருகிற தேர்தல் இந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

புதுவை பாராளுமன்ற தேர்தல் கூட்டணி: ரங்கசாமியுடன் பா.ஜனதா தலைவர்கள் பேச்சுவார்த்தை

புதுவை மாநிலத்தில் ஆளுங்கட்சியான என்.ஆர். காங்கிரசுடன் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது. பாரதிய ஜனதா – என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை ஏற்கனவே ஒரு சுற்று நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை பாரதிய ஜனதா மேலிட பொறுப்பாளர் லட்சுமணன், தேசிய செயலாளரும் தமிழக அமைப்பு செயலாளருமான மோகன்ராஜுலு ஆகியோர் புதுவை வந்தனர். ஓட்டல் அண்ணாமலையில் தங்கி இருந்த பாரதிய ஜனதா தலைவர்களுடன் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும் புதுவை முதல்–அமைச்சருமான ரங்கசாமி பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது என்.ஆர். காங்கிரஸ் பொது செயலாளர் பாலன், செயலாளர்கள் ஜெயபால், ஞானம், வக்கீல் பக்தவச்சலம், பாரதிய ஜனதா மாநில தலைவர் விஸ்வேஸ்வரன் ஆகியோர் இருந்தனர்

பழங்குடி சமூகத்திற்கு வெளியே காதலித்த பெண்ணுக்கு பாலியல் வல்லுறவு தண்டனை

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் தான் பிறந்த பழங்குடி சமூகம் சாராத ஆணை காதலித்த பழங்குடி பெண்ணை, கிராம பஞ்சாயத்தின் உத்தரவின்படி ஒரு கும்பல் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியது தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் பழங்குடியினத்தை சாராத ஆணுடன் அந்த பெண்ணிற்கு இருந்த உறவை ஏற்றுக்கொள்ளாத கிராமத்தினர் இந்த தண்டனையை அளித்துள்ளனர். 20 வயதான அந்தப் பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இழந்த மரியாதையை மீட்பதாக கூறி தவறிழைக்கும் ஜோடிகளை கொலை செய்ய இந்தியாவின் கிராமப்புறங்களில் நடக்கும் கட்டப்பஞ்சாயத்துக்கள் அனுமதி அளிப்பது அடிக்கடி நடக்கும் ஒரு செயலாக நீடிக்கிறது. 2012 ஆம் ஆண்டு டெல்லியில் ஒரு பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவில் பாலியல் வன்முறை மீதான கவனம் அதிகரித்துள்ளது. அந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களை தொடர்ந்து, இந்திய அரசாங்கம் பாலியல் வன்முறை மீதான சட்டங்களை கடுமையாக்கியுள்ள பின்னணியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. பழங்குடியினத்தைச் சேர்ந்த இந்தப் பெண், பிர்பம் என்ற பக்கத்து கிராமத்தில் பழங்குடியினத்தை சாராத ஒரு ஆணுடன் உறவு வைத்துகொண்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தச் சம்பவம் திங்கட்கிழமை இரவு நடந்ததாக காவல் துறையினர் கூறுகின்றனர். காதல் செய்த குற்றம்’ ‘'கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர்களுக்கு இடையில் இந்தக் காதல் தொடர்பு இருந்தது. திங்கட்கிழமையன்று இந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள சம்மதம் கேட்க அந்த பெண்ணின் இல்லத்திற்கு அந்த நபர் வந்ததை கண்டதும் கிராமத்தினர் தங்களின் கட்டப்பஞ்சாயத்தைக் கூட்டினார்கள். அதில் விசாரணை நடக்கும் பொழுது இருவரும் கைகள் கட்டி வைக்கப்பட்டிருந்தனர்'', என்று பிபிசியிடம் கூறினார் பிர்பம் காவல்துறை உயர் அதிகாரி சி.சுதாகர். காதல் புரிந்த குற்றத்திற்காக அவர்களுக்கு இந்திய பணம் 25000ரூபாய் அபராதத்தை கிராமத்தின் தலைவர் விதித்ததாகவும் காவல்துறை அதிகாரி கூறினார். அந்த ஆண் அபராதப் பணத்தை கட்டிவிட்டதாவும், ஆனால் பெண்ணின் குடும்பத்தால் அந்த அபராதத்தொகை கட்ட முடியவில்லை என்றும் கூறப்படுகின்றது. பின் அந்த பெண்ணின் தூரத்து உறவினரான அந்த கிராமத்தின் தலைவர் அந்த பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ய உத்தரவிட்டார் என்றும் காவல் துறை அதிகாரி கூறினார். அவளது குடும்பத்தினால் பணம் கட்ட இயலவில்லை, அதனால் அந்த பெண்ணை அனுபவித்து மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று அந்த தலைவர் கூறியதாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளது. அந்த கட்டப்பஞ்சாயத்து தலைவர் உட்பட இதுவரை 13 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் திங்கட்கிழமையன்று நடந்தாலும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் புதன்கிழமை மாலைதான் காவல் துறையை அணுகினர். புதன்கிழமையன்று அந்தப் பெண்ணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2010ஆம் ஆண்டில் பிர்பம் என்ற இந்த கிராமத்தில் குறைந்தது 3 பெண்களையாவது நிர்வாணமாக கிராமத்தினர் முன்னர் நடக்க கிராம பெரியவர்கள் உத்தரவிட்டதாக, காவல் துறையினர் கூறுகின்றனர். அந்த பெண்கள் அவர்கள் பிறந்த பழங்குடி இனத்தை சாராத ஆண்களுடன் உறவு வைத்து கொண்டதற்காக அவர்களுக்கு அந்த தண்டனை வழங்கப்பட்டது. பாலியல் வல்லுறவு என்பது இந்தியாவில் பொதுவான ஒரு செயல் என்றும், அதில் பல சம்பவங்கள் புகார் செய்யப்படாமல் சென்றுவிடுகின்றன என்றும் பெண்ணிய செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்களை அரசாங்கம் கடுமையாக்கினாலும், சமூகம் இந்தச் சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக விவாதித்தாலும், இந்தியாவில் உள்ள பல பெண்கள் பாலியல் தொந்தரவிற்கு பயந்து வாழ்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் இன்னமும் காவல்துறையின் அக்கறையின்மை காரணமாக பெரும் அவதிப்படுகின்றனர்.

அமெரிக்க பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகளை

வாஷிங்டன்: அமெரிக்க பெண்களில் ஐந்தில் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறார் என்று சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பல நாடுகளை சேர்ந்த பல்வேறு இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகளை தடுக்கும் பொருட்டு பாதிப்புகள் குறித்த பதிவுகளை அரசின் ஆய்வு அமைப்புகள் ஆராய்ந்தது. பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த கூட்டம் அதிபர் ஒபாமா மற்றும் துணை அதிபர் ஜோ பிடன் தலைமையில் நடக்கவுள்ள நிலைமையில் தற்போது இந்த அதிர்ச்சி தரும் ஆய்வு ஆறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இளம் பெண்கள் பலாத்காரம் அமெரிக்க பெண்களில் ஐந்தில் ஒருவர் தங்களது வாழ்நாளில் கற்பழிக்கப்படுகிறார்கள். இதில் பாதிக்கப்பட்டவர்களில் பாதிபேர் கிட்டத்தட்ட 18 வயதிற்கு குறைவான இளம் பெண்களாகவே உள்ளனர். அமெரிக்க பெண்கள் பாதிப்பு அனைத்து இனத்தை சேர்ந்த பெண்களும் இந்த தாக்குதலுக்கு ஆளாகிறபோது குறிப்பிட்ட சில பெண்கள் மட்டும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 27 அமெரிக்க இந்திய பெண்கள் 33.5 சதவிகிதம்பேர் கலப்பு இனத்தை சேர்ந்த பெண்கள் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர். 27 சதவிகித அமெரிக்க இந்திய பெண்களும், ஹிஸ்பேனிக் இன பெண்கள் 15 சதவிகிதம், கருப்பு இனத்தவர்கள் 22 சதவிகிதம், வெள்ளை இனப்பெண்கள் 19 சதவிகிதத்தினரும் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இந்த பலாத்கார சம்பவங்கள் அனைத்தும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடக்கிறது.

என்னை பிரதமராக தேர்வு செய்தால் ஏற்றுக் கொள்வேன்: ராகுல்காந்தி

காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட மாட்டார் என அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி கடந்த வாரம் அறிவித்தார். ஆனாலும், கட்சியினர் மத்தியில் ராகுல் பிரதமார் வேட்பாளராக முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் அமேதி தொகுதியில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தேர்தலுக்கு முன்னர் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்து அறிவிப்பது ஜனநாயக நடைமுறை ஆகாது, மாறாக அது வெறும், தனி நபரை பிரபலப்படுத்தும் முயற்சியாகும். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், அதன் பின்னர் காங்கிரஸ் எம்.பி.க்கள் என்னை பிரதமராக தேர்வு செய்தால் அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள தான் தயாராக இருக்கிறேன். கட்சிக்குள், பிரதமராவது யார் என தேர்வு செய்வது எம்.பி.க்கள் உரிமை. அதை அவர்களுக்கு அளிக்க வேண்டும். மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்.பி.க்களால் தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அதே போல் என்னையும் தேர்வு செய்தால் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்" என்றார்.

விஜயகாந்த், பிரேமலதா சென்னையில் போட்டியிட விருப்ப மனு

டெல்லி: ‘‘நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் சென்னை தொகுதிகளில் போட்டியிட ஏராளமானோர் விருப்பமனு அளித்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் தே.மு.தி.க. வினர் 23.01.2014 வியாழக்கிழமை முதல் விருப்ப மனு கொடுக்கலாம்'' என்று அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்து இருந்தார். பொதுத் தொகுதிக்கு ரூ.20 ஆயிரம், தனித் தொகுதிக்கு ரூ.10 ஆயிரம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை பிப்ரவரி 1-ம் தேதி மாலை 6 மணிக்குள் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
அதன்படி, சென்னை கோயம்பேடு தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் 23ம் தேதி காலை 11 மணிக்கு விருப்ப மனு வினியோகம் தொடங்கியது. தே.மு.தி.க. இளைஞர் அணி தலைவர் சுதீஷ் இதை தொடங்கி வைத்தார். விருப்ப மனுக்களை வாங்குவதற்காக காலையில் இருந்தே ஏராளமான தே.மு.தி.க.வினர் கட்சி அலுவலகத்தில் குவிந்தனர். விண்ணப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தவர்கள் பொது தொகுதிக்கு ரூ.20 ஆயிரமும், தனி தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும் செலுத்தினார்கள். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள், செந்தாமரை கண்ணன், வி.என்.ராஜன், யுவராஜ், ஏ.எம்.காமராஜ் ஆகியோர் மனு கொடுத்தனர். பிரேமலதா தென் சென்னையில் போட்டியிட வேண்டும் என தென் சென்னை மாவட்ட அவைத்தலைவர் கே.எஸ்.மலர்மன்னன் மனு கொடுத்தார்.

அதிகாரத்தைத் தம்வசப்படுத்தும் ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அவரைச் சர்வாதிகாரியாக இனம் காட்டுகிறது-

ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவின் நடவடிக்கைகள் அவருக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றன. மேலும் மேலும் அதிகாரத்தைத் தம்வசப்படுத்தும் ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அவரைச் சர்வாதிகாரி என்று அடையாளங்காட்ட அனுசரணையாக இருந்து வருகின்றன. அண்மைக்காலங்களில் அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்றே சகல நாடுகளிலும் குரல் எழும்பி வருகின்றன என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா மனித உரிமை; கூட்டத் தொடருக்கு முன்னர் ஜனாதிபதி கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாடுவார் :

ஜெனீவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடருக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாடுவார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஜனாதிபதியின் செயலாளர் லலித்வீரதுங்க கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனுடன் தொலைபேசியில் சந்திப்பு தொடர்பாக உரையாடியதாக அரசாங்க தகவல்கள் கூறின. இனப்பிரச்சினை தீர்வுக்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தால் மாத்திரமே தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்படும் என அரசாங்கம் கூறிய நிலையில் தற்போது ஜெனீவா மாநாட்டை முன்னிட்டு சந்திப்பதற்கான எற்பாடுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை – காவல்துறை

மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுவரையில் சுமார் 42 பேரின் உடல் எச்சங்கள் மன்னார் மனித புதை குழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் தொடர்ந்தும் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்

உக்ரெயின் அரசாங்கம் பதவி விலகாவிடில் ரத்த ஆறு ஓடுவதை தவிர்க்க முடியாது - எதிரணி எச்சரிக்கை:-

Ukraine இன் முன்னாள் ஜனாதிபதி ரி (T)மோஷெங்கோ (Timoschenko), அரசாங்கம் ராஜினிமா செய்வதற்காக இறுதிச் சந்தர்பமாக இன்று மாலை வரை நேரம் குறித்துள்ளார். தரப்பட்ட காலக்கெடுவிற்குள் அரசாங்கம் ராஜினாமா செய்து கொள்ளத்தவறின் இரத்தாறு Kiew நகரில் பெருகுவதைத் தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார். ருஷ்ய நாட்டின் உடைவிற்குப் பின் இதுவரையில் காணாத சனத்திரள் வீதிகளில் இறங்குமென்றும், சுதந்திரத்திற்கான உத்வேகம் ( Janukowitsch ) ஜனுக்கோவிற்ச் இன் ஆயுத மிரட்டலைவிடப் பலம் பொருந்தியதென உணரவைக்கப்படும் என விற்றலி கிலிற்ஷ்கோ தெரிவித்துள்ளார் சுதந்திர சதுர்க்கத்தில் குழுமி உள்ள மக்கள் தங்களைச் சுற்றி வெண்பனியால் நிரப்பப்பட்ட கோணிகள், தகரப்பீப்பாக்கள், வேறு பல தளபாடங்கள் கொண்டு தற்காலியப் பாதுகாபுத்தடைகளை ஏற்படுத்தியுள்ளனர், மைதானத்தைச் சுற்றி tyre கள் எரிக்கப்படுவதால் விளையும் கரும் புகை, சுதந்திர சதுர்க்கத்தை நிரப்பியும், விரும்பத்தகாத மணத்திப் பரப்பியும் நிற்கும் நிலையில் மைதானம் ஒரே பரபரப்பாகக் காணப்படுகிறது. முன்னைய அரசாங்கத்தின் வெளிவிவகார செயலரும், கிலிற்ஷ்கோ போன்ற எதிர்கட்சி அரசியல் பிரமுகர்களும் மூன்று மணி நேரமாக, ஜனுக்கோவிற்ச்சுடன் நடாத்திய பேச்சு வார்த்தை எவ்வித பயனும் அளிக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதியும் தற்சமயம் சிறையில் இருக்கும் பெண் ஜனாதிபதியுமான Timoschenkao, எதிரணிக்கு சகலரும் ஒத்தாசையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டதோடு, பாதுகாப்புப் படையினரை எதிரணிக்கு சார்பாக அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதங்களைத் திருப்பி இப்புரட்சியின் வெற்றிக்கு உதவி புரியுமாறும் அறை கூவல் விடுத்துள்ளார். இறுதியாகக் கிடைக்கப்பெற்ற செய்திகளின் பிரகாரம் புரட்சி ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள், பாதுகாப்புப் படையினரால் துன்புறுத்தலுக்கு ஆளாவது தெரியவந்துள்ளது. அத்தோடு பல இளம் யுவதிகளும் இளம் வாலிபர்களும் படையினரால் கடத்தப்பட்டு இரகசியமான சிறைகளில் அடைக்கப்பட்டும் வருகின்றனர்.
உக்ரேனின் பிரதமர் நிக்கோலை அஷரவ் ராஜினாமா செய்யக்கோரி, உக்ரேன் பாராளுமன்றத்தின் அவசரகாலக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, கீயிலுள்ள ( Kiew ) ஜனாதிபதி விக்ரர் ஜானுகோவிற்ச்சிற்கு அறியத்தரவும் பட்டுள்ளது. ஐரோப்பிய செய்தியாளர் - மகேந்தி:-

சிரியாவின் சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வியும் ஒமாமாவின் மௌனமும் - அவர் மீதான விமர்சனங்களும்:-

அமெரிக்க ஜனாதிபதி Barack Obama இன் அரசியல் நிலை பலதரப்பட்ட விமர்சனங்கள் மத்தியில் மிகவும் இக்கட்டான கட்டத்தை அடைந்துள்ளது. சிரியா யுத்தத்தை ஒரு முடிவிற்குக் கொண்டு வர நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை எவ்விதத்திலும் வெற்றி அளிக்காததும், Barack Obama தன் அதிகாரத்தை உபயோகிக்காது மெளனம் சாதித்ததும் விமர்சனங்களுக்கு முக்கிய கருவாக அமைந்துள்ளது. வெளிவிவகாரச் செயலராக முன்னைய அமெரிக்க அரசாங்கத்திற் கடமையாற்றிய Hillary Clinton, சர்வதேச விடயங்களில் அமெரிக்கா சற்று தீவிர ஊக்கத்தோடு செயற்பட வேண்டிய காலகட்டமிது எனக் குறிப்பிட்டுள்ளார். இரசாயன ஆயுதங்களைத் தன் சொந்த மக்கள் மேல் உபயோகித்துக் கொல்லும் நாட்டு அரசாங்க விடயங்களில் தலையிடுவதற்கும், அச் செயலை உடனடியாக நிறுத்தாது போகின் ஆயுதத் தாக்குதலை நிச்சயம் நட்ததப் போவதாக மிரட்டுவதற்குமான சரியான நியாயம் அமெரிக்கா பக்கம் இருப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டில் Barack Obama ஆல் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் மிகவும் கவர்ச்சிகரமாக அமைந்திருந்தது. மத்திய கிழக்கு அரசியற் பிரச்சனைகளில் அமெரிக்கா தீவிரமாக இயங்குமென்றும், அணு ஆலைப் பிரச்சனை சம்பந்தமாக ஈரானுடன் நெருங்கிய பேச்சு வார்த்தையை நடத்துமென்றும் Irak - Afghanistan நாடுகளிலிருந்து அமெரிக்கத் துருப்புக்களை அமெரிக்கா திரும்பப் பெற்றுக் கொள்ளுமென்றும் கூறிய விடயங்களை, அந்த விஞ்ஞாபனத்தில் சுட்டிக் காட்டியதுபோல் நடந்து கொண்டமையும் எவ்வித எதிர்வாதமுமில்லாத Obama வின் வெற்றிகளாகும்.
சுதந்திரத்திற்கான Noble பரிசு பெற்ற போது பேசிய பேச்சிலும் Obama வின் அரசியல் சித்தாந்தம் தெளிவாக அமைந்திருந்தது. அப் பேச்சின் போது ஆயுதம் தரியாத சொந்த மக்களைக் கொல்லும் அரசாங்கத்தின் கொடூரத்தை அல்லது உள்நாட்டுக் கலகத்தை ( Civil War ) நிறுத்துவதற்கு மனிதாபிமான முறையிலான பிற நாட்டின் இரானுவ நடவடிக்கை தேவைப்படுகிறது என்று அழுத்தமாகக் கூறியிருந்தார். மேற் கூறிய போர்ச் செயலிற்கெதிராக எவ்வித நடவடிக்கைகளையம் கையாளாது இருந்தால் நம் அறிவிற்கு உகந்த்தாக அமையாது,. அல்லாமலும் அது மிகவும் மோசமான இழப்புக்கள் மலிந்த நேரம் தாமதித்த தலையீட்டிற்கும் வழி வகுக்கும் என்றும் கூறியிருந்தார். மத்திய கிழக்கில் குறிப்பாக ஈராக் யுத்தத்திலும், Afghanistan இலும் நடாத்திய அர்த்தமற்ற போர்களினால் பெற்ற கசப்பான அனுபவத்தால், சொந்த தேசத்தைக் கட்டியெழுப்பி, அதில் சகலருக்கும் தொழில் வாய்ப்புக்களையும், கல்வி மருத்துவ வசதிகளையும், சம உரிமையையும் பெற்றுத்தரும் வேலைத்திட்டத்தில் Obama அரசாங்கம் அதிக ஊக்கமெடுப்பது நியாயமாகப் படினும், அமெரிக்கா தன் அரசியல் இரானுவப் பலத்தை முறையாகப் பாவிப்பின் சிரியா யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வரலாமெனும் உண்மையை அலட்சியம் செய்வது மனிதாபிமானமில்லை என்கிறது மேற்கத்தேய சார்பு விமர்சகர்களின் பார்வை.