Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, November 8, 2013

12–ந் தேதி நடைபெறும் முழு அடைப்புக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்: வைகோ வேண்டுகோள்

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– லட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்க மின்றி படுகொலை செய்த கொடியவன் ராஜபக்சே அர சோச்சும் இலங்கை நாடு, காமன் வெல்த் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டால்தான், காமன் வெல்த்தின் குறிக்கோள் உயிரோடு இருப்பதாக அர்த்தம். காமன்வெல்த் மாநாட்டை கொழும்பில் ஏற்பாடு செய்ததே சோனியா காந்தி இயக்குகிற இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான். காமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகமாக தற்போது பதவியில் இருக்கும் கமலேஷ் சர்மா என்ற இந்தியரைக் கொண்டுதான் இம்மாநாட்டை நயவஞ்சக நோக்கத்தோடு இந்திய அரசு கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்தது. இந்த மாநாடு எந்த நாட்டில் நடக்கிறதோ, அந்த நாட்டின் அதிபர்தான் அதிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்பின் தலைவராக செயல்படுவார். இலங்கையில் மாநாட்டை நடத்திவிட்டால் தமிழ் இனப் படுகொலை குற்றவாளியான ராஜபக்சேவை, இனக் கொலை குற்றத்திற்கான அனைத்துலக நீதிமன்ற விசாரணை என்ற கூண்டுக்குள் சிக்க விடாமல் தப்ப வைத்துவிடலாம் என்பது தான் இந்திய அரசின் திட்டமாகும். தமிழகத்தில் இளம் தலை முறையினரிடம், குறிப்பாக மாணவர்களிடம் ஏற்பட்டு வரும் தமிழ் ஈழ ஆதரவு உணர்ச்சிக் கனல் இந்திய அரசுக்கு எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால்தான் காமன்வெல்த் மாநாட்டை இந்திய–இலங்கை அரசுகள் நடத்த முற்பட்டுள்ளன. இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளாமல் இருப்பதாலோ அல்லது இந்தியாவிலிருந்து எந்தப் பிரதிநிதியும் பங்கேற்காமல் தவிர்ப்பதாலோ தமிழர்களுக்கு எந்த நீதியும் கிடைக்கப்போவது இல்லை. காமன்வெல்த் அமைப்பு அதிபர் கிரீடம் கொலைகார ராஜபக்சேவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு சூட்டப்பட்டு விடும். எனவே, “காமன் வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கு, மாநாட்டை நடத்தாதே” என்ற கோரிக்கையும் முழக்க மும்தான் ஈழத் தமிழர் விடியல் என்ற இலக்குக்கு வழிகாட்டுவதாக அமையும். இனிமேல் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தவிடாமல் செய்ய வாய்ப்பு இல்லை. இந்திய அரசின் சதித்திட்டம் நிறைவேறிவிடும். இதனால் மானத் தமிழர்கள் மனம் சோர்வடையத் தேவை இல்லை. உலகில் 65 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறோம். நமது இனத்தை படுகொலைக்கு ஆளாக்கிய சிங்களவனின் கொடுமைகளை நிரூபிக்க நம்மிடம் அசைக்க முடியாத சாட்சியங்களும், ஆவணங்களும் உள்ளன. இந்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து அம்பலப்படுத்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் சகோதரர் வெள்ளையன் தமிழகமெங்கும் நவம்பர் 12–ந் தேதி முழு கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதை வரவேற்று ஆதரிக்கிறேன். தந்தை பெரியார் திராவிடர் கழகம் நவம்பர் 7–ந் தேதி நடத்திய பல்வேறு கட்சியினர் பங்கேற்ற கூட்டத்தில், நவம்பர் 12–ந் தேதி தமிழகத்தில் ரெயில் மறியல் நடத்துவது என்றும்; முழு அடைப்பு நடத்துவது என்றும் எடுக்கப்பட்ட முடிவை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்று ஆதரிக்கிறது. தாய்த் தமிழகத்திலே வாழும் மனிதாபிமானமுள்ள மக்கள் அனைவரையும் பணிவோடு வேண்டுகிறேன். 12–ந் தேதி ஏற்படும் பொருள் நட்டத்தையும், சிரமத்தையும் பொருட்படுத்தாது கடைகளை அடைக்குமாறு வேண்டுகிறேன். முழு அடைப்பை வெற்றிபெறச் செய்யும் வகையில், அன்று வாகனங்களை இயக்க வேண்டாம் என வேண்டுகிறேன். 12 ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து ரெயில் தடங்களிலும் ரெயில் மறியல் செய்ய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கண்மணிகளும், தமிழ் உணர்வாளர்களும் அடக்கு முறையை எதிர்த்து முன்வர வேண்டுகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment