Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, February 28, 2014

இலங்கையில் விஜய் டிவி 'சூப்பர் சிங்கர்': வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலை- வைகோ

சென்னை: விஜய் டிவி சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சியை கொழும்புவில் நடத்துவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் செயல் என்று மதிமுக கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீசன்-4 நிகழ்ச்சியின் மூலம் இறுதிச் சுற்று வரை வந்து பிரபலமானவர்கள் திவாகர், பார்வதி, சயித் சுபாகன், சரத் சந்தோஷ் மற்றும் சோனியா. இதில் திவாகர் என்பவர் சூப்பர் சிங்கர் சீசன்-4 பட்டம் வென்றுள்ளார். இவர்கள் ஐந்து பேரும் வருகிற மார்ச் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் இலங்கை கொழும்புவில் உள்ள செயின்ட் ஜோசெப் கல்லூரியில் நடைபெறவுள்ள இசைக் கச்சேரியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
விஜய் டிவி சூப்பர் சிங்கர் -- ஜெனீவாவில் மனித உரிமைக் கவுன்சிலில் நியாயம் கிடைக்க தாய்த் தமிழகத்திலும், தரணியெங்கும் நீதிக்கான முழக்கம் எழுந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சிங்கள ராஜபக்சே அரசு வஞ்சகமான வேலையைச் செய்கிறது. கொடியவன் கோத்தபய ராஜபக்சே கூட்டம் பின்னணியில் செய்திருக்கிற ஏற்பாட்டில் இலங்கையில் இசை நிகழ்ச்சி என்ற பெயரில் மார்ச் 1-ஆம் தேதியும், 2-ஆம் தேதியும் உலக நாடுகளை ஏமாற்றும் வேலைக்கு ஏற்பாடாகி உள்ளது. ------------------------------------------------------------------- படுகொலையை மறைக்க --ஈழத்தில் நடைபெற்ற படுகொலைகளை மறைப்பதற்காக நரித் தந்திரத்தோடு இந்த இசைவிழாவை நடத்துகிறார்கள். தமிழ்நாட்டிலுள்ள விஜய் தொலைக்காட்சியில் பாடல் இசைக்கும் கலைஞர்கள் இந்த இருநாள் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ------------------------------------------------------------------------- இலங்கையில் கலைவிழா-- விஜய் தொலைக்காட்சி இசைக்குழுவினரும், இலங்கைக் கலைப்படைப்பினரும் இணைந்து இந்த இசைவிழாவை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 1-ஆம் தேதி கொழும்பு மருதாணை, புனித வளனார் கல்லூரியிலும், மார்ச் 2-ஆம் தேதி பம்பலப்பட்டி கதிரேசன் மண்டபத்திலும் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இனப்படுகொலை --- ----------------------------------------------------------------------------------- ஈழத்தில் ஏற்பட்ட தமிழினப் படுகொலையை நினைக்கும்போதே நமது மனம் வேதனையால் துடிக்கிறது. கொல்லப்பட்ட தமிழர்களின் எலும்புக் கூடுகள் மண்ணிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. நெஞ்சைப் பதைபதைக்கச் செய்யும் ஒரு காணொளி வெளிவர இருக்கிறது. ------------------------------------------------------------------------ இசை நிகழ்ச்சி எதற்கு-- இந்நிலையில் கொழும்பில் சிங்களவன் நடத்தும் கேளிக்கைக் கொண்டாட்டங்களில் தமிழ்நாட்டு இசைக் கலைஞர்களைப் பங்கேற்க வைப்பதன்மூலம் தாய்த் தமிழகத்தில் சிங்கள அரசுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று வெளி உலகத்திற்குச் சொல்வதற்காகவே இந்த இசை நிகழ்ச்சி நடக்கிறது. --------------------------------------------------------------------------- நெருப்பு மூட்டும் செயல்---- ரோமாபுரி பற்றி எரிந்தபோது நீரோ பிடில் வாசித்ததுபோல விஜய் தொலைக்காட்சி இசைக் கலைஞர்கள் அங்கு பாடப் போகிறார்களா? ஈழத் தமிழர்கள் எழுப்பிய மரண ஓலம் இன்னும் அங்கு காற்றில் கலந்துதான் இருக்கிறது. காயப்பட்டுப் போன தமிழர்கள் மனங்களில் நெருப்பைப் போடும் வேலையில் விஜய் தொலைக்காட்சி ஈடுபட வேண்டாம். ------------------------------------------------------------------------------ விஜய் டிவிக்கு கண்டனம்---- மார்ச்1 மற்றும் மார்ச் 2 ஆகிய தேதிகளில் சிங்கள அரசின் பின்னணியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிகளில் விஜய் தொலைக்காட்சியில் பாடுகின்ற இசைக்கலைஞர்கள் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். --------------------------------------------------------------------------- கொழும்பு செல்லக்கூடாது --உலகில் இசைக் கலையை முதலில் தந்தவர்களே தமிழர்கள்தான். இசைக்கலைஞர்கள் மீது நான் மிகுந்த மதிப்பு கொண்டிருக்கிறேன். எனவே, அவர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கண்டிப்பாகப் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்துகிறேன் இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

கத்தரில் கேரள தூதரகம்?

இந்தியாவில் அரசு மற்றும் அதிகார வட்டத்தில் கேரள மாநிலத்தவரின் ஆதிக்கம் எவ்வளவு அதிகமோ அதற்குச் சிறிதும் குறைவின்றி, இன்னும் கூறினால் "கேரளா தான் இந்தியா" என்று அரபிகள் நினைக்கும் அளவுக்கான ஆதிக்கம் வளைகுடா நாடுகளில் உண்டு! ----------------------------------------------------------------------------- எந்த ஒரு வியாபார நிறுவனமாக இருந்தாலும் சரி, அரசுப் பணிகளாக இருந்தாலும்சரி அதில் குறைந்தது ஒரு மலையாளியையாவது பார்த்துவிட முடியும்! ----------------------------------------------------------------------------- "நாடு எது? மலபாரியா?", வளைகுடா நாடுகளில் வேலைக்கு வரும் புதியவர்களிடம் பெரும்பாலான அரபிகள் கேட்கும் பொதுவான கேள்விகளுள் ஒன்று இது! "இந்தியா எவ்வளவு பெரிய நாடு; அதில் கேரளா எவ்வளவு சிறிய மாநிலம்; வடகேரளத்தின் ஆறு மாவட்டங்கள் இணைந்த பகுதியே மலபார் என்பது; இவன் மலபார்தான் இந்தியா என்று நினைத்துள்ளானே" எனத் தோன்றும். வளைகுடா நாடுகளின் முன்னேற்றத்தில் வெளிப்படையாகத் தெரியும் கேரள மாநிலத்தவரின் பங்கினைக் குறித்து ஆய்வு செய்தால், அரபிகளின் இந்த எண்ண ஓட்டத்திற்கான காரணம் ஓரளவு புரியும்! ----------------------------------------------------------------------------- ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது, அச்சமூகம் வாழும் பகுதியின் முன்னேற்றத்துக்கு எவ்வகையில் பங்களிப்பு செய்கிறது என்பதைப் பொறுத்து அமையும். பயன்பெறும் சமூகம் என்பதைத் தாண்டி, கொடுக்கும் சமூகமாக மாறுவது மட்டுமே அச்சமூகத்தினை முன்னேற்றப் பாதைக்குச் சீராக வழிநடத்திச் செல்லும். அவ்வகையில் கேரள மாநிலத்தவர்களிடமிருந்து படிக்கவும் தெரிந்து கொள்ளவும் பல விசயங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு உள்ளன! ----------------------------------------------------------------------------- ஆனால், அவர்களின் இம்முன்னேற்றம் இந்தியாவிலுள்ள பிற மாநில மக்களின் உரிமைகளையும் களவாடும் வகையில் தனி ஆதிக்கமாக வளர்வது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல! அதற்கு இந்திய அரசும் துணைபோகுமெனில் அது மிகப்பெரிய அநியாயம்! ----------------------------------------------------------------------------- இப்பதிவின் மூலம் கேரள மாநிலத்தவரின் அத்தகையதொரு அநியாய ஆதிக்கத்தினை இந்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். வளைகுடா நாடுகளுள் ஒன்றான கத்தரிலுள்ள இந்திய தூதரகத்திலும் கேரள மாநிலத்தவரின் ஆதிக்கம் மிகைத்துள்ளதன் அடையாளமாக, தூதரக தினசரி நடவடிக்கைகளில் வாடிக்கையாளரின் புரிதலுக்காக வைத்துள்ள எல் சி டி ஸ்க்ரீன் அறிவிப்பினைக் கூறலாம். ----------------------------------------------------------------------------- அறிவிப்புப் பலகை ஆங்கிலம், அரபி மற்றும் மலையாள மொழிகளில் இங்கு வைக்கப்பட்டுள்ளது. ----------------------------------------------------------------------------- இந்திய நாட்டு மக்கள் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்திய தூதரகத்தில் பயன்பெறுவோராக இருப்பதால் அறிவிப்புப் பலகையில் ஆங்கிலம் இடம்பிடித்துள்ளது சரியானது! ----------------------------------------------------------------------------- கத்தர் நாட்டின் மொழி அரபி என்பதாலும் அரபு நாட்டுக் குடிமகன்களுள் பெரும்பாலோருக்கு அரபியன்றிப் பிற மொழிகள் தெரியாது என்பதாலும் அறிவிப்புப் பலகையில் அரபி இடம்பிடித்துள்ளதும் சரியானது! ----------------------------------------------------------------------------- இந்திய நாட்டின் மிகப் பெரும்பாலான மக்கள் பேசும் மொழியாக இருக்கும் இந்தி எங்கே போனது? ----------------------------------------------------------------------------- ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமே பேசும் மலையாளத்தை மட்டுமே அறிவிப்புப் பலகையில் இந்திய தூதரகம் வைத்திருப்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறது? "இந்தியா என்றால் மலபார்தான்" என்ற அரபிகளின் தவறான எண்ணம் சரியானதுதான் என சொல்ல வருகிறதா? ----------------------------------------------------------------------------- கேரளம் மட்டுமன்றித் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா முதல் வடமாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் என அநேகமாக எல்லா மாநில மக்களுமே கத்தரில் வேலைபார்க்கும் நிலையில், அவர்கள் அனைவருமே ஒன்று ஆங்கிலம் படிக்கவேண்டும்; அல்லது அரபி படிக்கவேண்டும்; அல்லது ஒரேயடியாக எல்லோரும் மலையாளியாக மட்டும்தான் இருக்கவேண்டுமென விரும்புகிறதா? அல்லது மலையாளிகள் மட்டும்தான் இந்தியாவிலிருந்து அங்கே பணிபுரிகின்றனர் என்று நினைக்கிறதா? ----------------------------------------------------------------------------- ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் இந்தியத் தூதரகம் செயல்படுகிறது எனில், அதனைத் தெளிவாக "கேரளா தூதரகம்" என அறிவித்துவிடலாமே? ----------------------------------------------------------------------------- - கத்தரிலிருந்து அப்துல் ரஹ்மான்

திமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: பாஜக

சென்னை: லோக்சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தஞ்சை, திருச்சி அதிமுக வேட்பாளராக அறிமுகமாகும் கே.பரசுராமன் ,மீண்டும் களமிறங்குகிறார் குமார்

தஞ்சையில் எம்.பி வேட்பாளராக அறிமுகமாகும் கே.பரசுராமன்
---------------------------------------------------------------------------------------------------- திருச்சி அதிமுக வேட்பாளராக மீண்டும் களமிறங்குகிறார் குமார்

புதிய வர்த்தக யுக்திகள் வேண்டும்: நரேந்திர மோடி

இந்திய வர்த்தகர்கள் தமது வர்த்தகக் கொள்கையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------- அனைத்து இந்திய வர்த்தகர்கள் அமைப்பின் இரண்டு நாள் தேசிய மாநாட்டில் முதல் நாளான வியாழனன்று அதில் கலந்து கொண்டு பேசிய நரேந்திர மோடி, இந்திய வர்த்தகர்கள் புதிய வியாபார யுத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.உலகளாவிய சவால்கள் அனைத்தையும் வாய்ப்புகளாக மாற்றும் சக்தியைப் பெற புதிய தொழில்நுட்பம் உதவி செய்யும் என்றும், ஆகையால் வணிகர்கள் தங்களது தொழிலில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த தயங்கக்கூடாது எனவும் அவர் பேசினார். --------------------------------------------------------------------------------------- காலமாற்றத்திற்கு தேவையான மாற்றங்களை உணர்ந்து செயல்படவேண்டிய முக்கியத்துவம் குறித்து பேசிய அவர், வணிகர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே உலக அளவில் வணிகத்தை பெருக்கி கொள்ளும் வாய்ப்பு தற்போது பெருகியுள்ளதையும் சுட்டிக்காட்டினார். --------------------------------------------------------------------------------------- இந்தியாவின் இளைஞர்கள் கணினி மென்பொருள் துறையில் உலகளாவிய சாதனை புரிந்து அவற்றை உலகம் முழுக்க பரப்பியுள்ளதாக கூறிய அவர், அவற்றை வர்த்தக துறையினரும் தங்களது வியாபார யுத்திகளுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். --------------------------------------------------------------------------------------- வர்த்தகக் கொள்கை மற்றும் காப்புரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு போன்றவற்றை குறிப்பிட்ட நரேந்திர மோடி, விவசாயிகளும், உற்பத்தியாளர்களும், வணிகர்களும் ஒரே நேரத்தில் ஒரே வேகத்தில் செயல்பட வேண்டியதும் அவசியம் என்றார். --------------------------------------------------------------------------------------- இணைய வர்த்தக நிறுவனங்கள் குறித்து குறிப்பிட்ட மோடி அவற்றை கண்டு இந்திய வணிகர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், அவற்றின் வளர்ச்சி இந்திய வணிகர்களின் தொழில் வளர்ச்சிக்கும், வணிகப் பெருக்கத்திற்கும் பெரிதும் பயனளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். --------------------------------------------------------------------------------------- வணிகர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாம் எப்போதும் ஆதரவு அளிப்பேன் என்றும் நரேந்திர மோடி அப்போது உறுதியளித்தார். --------------------------------------------------------------------------------------- முன்னதாக இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி, வணிகர்களுக்கு மிகவும் அவசியமான சட்டத்திருத்தங்கள் அனைத்துக்கும் அக்கட்சி ஆதரவு அளிக்கும் என வாக்குறுதி அளித்தார். தமிழக வணிகர் சங்கத் தலைவர் கருத்து --------------------------------------------------------------------------------------- இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள தமிழக வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா மோடி ம்ற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் உரை குறித்து பிபிசியிடம் கருத்து தெரிவித்தார். --------------------------------------------------------------------------------------- சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு ரத்து செய்யப்படும் என்ற வர்த்தகர்களின் கோரிக்கையை ஏற்பதாக முரளி மனோகர் ஜோஷி வாக்குறுதி அளித்ததாக விக்கிரமராஜா குறிப்பிட்டார். --------------------------------------------------------------------------------------- உணவுப் பாதுகாப்பு சட்டம் மறு ஆய்வுசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்றுக்கொள்வதாக ஜோஷி குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார். --------------------------------------------------------------------------------------- இணைய வழி வர்த்தகம் நிறுத்தப்பட வேண்டும் என்ற தமது கோரிக்கையை பாரதீய ஜனதா முழுமையாக ஏற்றுக்கொள்வதாக மோடியின் கருத்து அமையவில்லை என தமிழக வணிகர் சங்க தலைவர் கூறினார்.

சக சிப்பாய்கள் 5 பேரை சுட்டுக்கொன்று இந்திய சிப்பாய் தற்கொலை

இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில், இந்திய சிப்பாய் ஒருவர் சக வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் ஐந்து படையினர் பலியானார்கள். -------------------------------------------------------------------------------------------------- தலைநகர் ஸ்ரீநகருக்கு சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள ஒரு ராணுவ முகாமில் புதன் கிழமை இரவு இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கியால் சுட்ட சிப்பாயும் பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக ராணுவம் தெரிவிக்கிறது. -------------------------------------------------------------------------------------------------- இந்தச் சம்பவம் குறித்து விசாரணை ஒன்றுக்கு ராணுவம் உத்தரவிட்டிருக்கிறது. -------------------------------------------------------------------------------------------------- இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே சொந்தம் கொண்டாடும் காஷ்மீர் பகுதி, இந்திய மற்றும் பாகிஸ்தான் பகுதிகளாகப் பிளவுண்டு கிடக்கிறது. இரு நாடுகளும் தத்தம் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரப் பகுதியின் எல்லையில் துருப்புகளை நிலை நிறுத்தியிருப்பதால், அங்கு ஒரு பதற்ற நிலை நிலவுகிறது. -------------------------------------------------------------------------------------------------- இந்திய சிப்பாய்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்றும், மோசமான பணி நிலைமைகள் நிலவுவதாகவும், விடுப்பில் செல்ல எளிதாக அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அடிக்கடி கூறுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

ஜனாதிபதி மஹிந்தவின் தனிப்பட்ட வைத்தியரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு:-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட வைத்தியரான டொக்டர் எலியந்த வைட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை எலியந்த வைட்டின் மோட்டார் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. --------------------------------------------------------------------------------------- தாக்குதல் சம்பவத்தில் மோட்டார் காருக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. --------------------------------------------------------------------------------------- எனினும், சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் டொக்டர் வைட் காரில் பயணம் செய்யவில்லைஎ னவும் அவரது சாரதி மட்டுமே காரில் பயணம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகுpறது, --------------------------------------------------------------------------------------- மிரிஹான எதிரிசிங்க வீதியில் இன்று அதிகாலை 4.30 அளவில் இந்த சம்பவம் இட்மபெற்றுள்ளது. --------------------------------------------------------------------------------------- மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளனர். --------------------------------------------------------------------------------------- ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. --------------------------------------------------------------------------------------- பெல்லன்வில விஹாரையில் நடைபெறவுள்ள பூஜை வழிபாடுகளுக்கு தேவையான சில பொருட்களை டொக்டர் வைட்டின் தாயாரது வீட்டிலிருந்து எடுத்துச் செல்வதற்காக சாரதி காரில் சென்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. --------------------------------------------------------------------------------------- இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கை அவுஸ்திரேலிய கடற்படையினர் கூட்டு பயிற்சி:-

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய கடற்படையினர் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
---------------------------------------------------------------------------------------------- ஹமாஸ் மெல்பர்ன் (HMAS ‘Melbourne’) என்ற அவுஸ்திரேலிய கடற்படைக் கப்பலில் இந்த பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. ---------------------------------------------------------------------------------------------- இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த கப்பல் இலங்கையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ---------------------------------------------------------------------------------------------- இரு நாடுகளினதும் கடற்படையினர் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. ---------------------------------------------------------------------------------------------- சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் மற்றும் கடற் கொள்ளை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா தீர்மானங்களைக் கண்டு அஞ்சப் போவதில்லை – ஜனாதிபதி

ஐக்கிய நாடுகள் அமைப்பின் தீர்மானங்களைக் கண்டு அஞ்சப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
-------------------------------------------------------------------------------------- எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்ழ நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தை நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார். -------------------------------------------------------------------------------------- மொரட்டுவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். -------------------------------------------------------------------------------------- கியூபா போன்ற நாடுகள் இவ்வாறான பல தீர்மானங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். -------------------------------------------------------------------------------------- இலங்கைக்கு எதிராக இரண்டு தீர்மானங்களே இதுவரையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். -------------------------------------------------------------------------------------- ஜெனீவா பிரச்சினை தொடர்ந்தும் ஓர் தலைவலியாக அமைந்துள்ளது எனவும் அதைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். -------------------------------------------------------------------------------------- கியூபாவிற்கு எதிராக இவ்வாறான அறுபது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டள்ளதாகத் தெரிவத்துள்ளார். -------------------------------------------------------------------------------------- கியூபாவிற்கு விஜயம் செய்திருந்த போது இவ்வாறான தீர்மானங்களை பெரிதுபடுத்த வேண்டாம் என கியூப ஜனாதிபதி ராவல் கஸட்ரோ ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். -------------------------------------------------------------------------------------- நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் சில நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்து வருவதாகத் தெரிவத்துள்ளார். -------------------------------------------------------------------------------------- 30 ஆண்டுகளாக போரை எதிர்கொண்ட இலங்கைக்கு இவ்வாறான அழுத்தங்களை வெற்றிகொள்வது சவாலாக அமையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

7 பேர் விடுதலை- பிரச்சினைக்கு ஒரு வாரத்தில் தீர்வு' இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம்:

இந்திய முன்நாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவிப்பதில் தமிழக மத்திய அரசுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள சட்ட முரண்பாடுகள், இருதரப்பு வாதங்கள் தொடர்பாக தலைமை நீதிபதி பி.சதாசிவம் கருத்து வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரனைக்கு எடுக்கப்பட்ட போது கருத்து வெளியிட்ட அவர் 'எங்களது தீர்ப்பில், மூன்று குற்றவாளிகளின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக நாங்கள் எதுவும் கூறவில்லை. சம்பந்தப்பட்ட மாநில அரசு வழக்கமான சட்ட நடை முறைகளை பின்பற்றலாம் என்று தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளோம். ---------------------------------------------------------------------------------------- அந்த நடைமுறைகளின்படி குற்றவாளிகள் முறைப்படி கோரிக்கை மனு அளிக்க வேண்டும். அதன் பின் மாநில அரசு சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்திடம் அறிக்கை கோர வேண்டும். அதன்பின்னரே உரிய முடிவு எடுக்க வேண்டும். ---------------------------------------------------------------------------------------- குற்றவாளிகள் விடுதலை செய்யப்படக்கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல. எல்லாவற்றுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அதைத்தான் பின்பற்ற வேண்டும். குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடைமுறைகளை அனைத்து மாநில அரசுகளும் அறிந்து வைத்திருக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு காரணம் நாங்கள்தான். இதற்கு இன்னும் ஒரு வாரத்தில் தீர்வு காண்போம்' என தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்தார். ---------------------------------------------------------------------------------------- மேலும் மத்திய அரசின் மனு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ---------------------------------------------------------------------------------------- இதனைத் தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை 4 பேரையும் விடுதலை செய்யக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

ஈ.பி.டி.பிக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டு:-

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி கட்சிக்கு எதிராக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. ஈ.பி.டி.பி. கட்சி வடக்கில் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவத்துள்ளது. ------------------------------------------------------------------------------------------- கடத்தல்கள், காணாமல் போதல்கள், கப்பல் கோரல்கள், அடக்குமுறைகள் என பல்வேறு வழிகளில் ஈ.பி.டி.பி குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------- அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் வருடாந்த மனித உரிமை விவகார அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------- ஈ.பி.டி.பி. போன்ற துணை இராணுவக் குழுக்களுக்கும் அரசாங்கப் படையினருக்கும் தொடர்புகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது. ------------------------------------------------------------------------------------------- யுத்தம் இடம்பெற்ற காலத்தில் படையினருடன் இணைந்து செயற்பட்ட துணை இராணுவக் குழுக்கள், யுத்த நிறைவின் பின்னரும் துணை இராணுவக் குழுக்கள் குற்றச் செயல்களில் ஈடுபட ஆரம்பித்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------- வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவும், பிரதேசத்தில் ஆதிக்கத்தை செலுத்தவும் இவ்வாறு துணை இராணுவக் குழுக்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------- வட மாகாணசபைத் தேர்தல் நடைபெற்ற காலத்தில் வேட்பாளர் அனந்த சசிதரனின் வீட்டின் மீது ஈ.பி.டி.பி.யினர் இராணுவ சீருடையில் சென்று தாக்கியிருந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றபடும் - அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி-

இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி அறிவித்துள்ளார்.
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்காத நிலைமை நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். -------------------------------------------------------------------------------------------------- யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கம் மற்றும் யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் போன்றன தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்தி அடையக் கூடிய வகையில் அமையவில்லை என அவா சுட்டிக்காட்டியுள்ளார். -------------------------------------------------------------------------------------------------- எனவே எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். -------------------------------------------------------------------------------------------------- குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய அடிப்படை கோரிக்கைகளுக்கு கூட இன்னமும் இலங்கை அரசாங்கம் தீர்வு வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். -------------------------------------------------------------------------------------------------- துரதிஸ்டவசமாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சிறுபான்மையினர் போன்ற தரப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். -------------------------------------------------------------------------------------------------- இந்தக் காரணிகளை கருத்திற் கொண்டு அமெரிக்கா மற்றுமொரு தீர்மானத்தினை நிறைவேற்ற முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். -------------------------------------------------------------------------------------------------- மனித உரிமைகளை முடக்க முற்படும் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். -------------------------------------------------------------------------------------------------- கடத்தல்கள், காணாமல் போதல்கள், மனித உரிமை மீறல்கள் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. -------------------------------------------------------------------------------------------------- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தார் அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. -------------------------------------------------------------------------------------------------- ஜனாதிபதியின் இரண்டு சகோதரர்கள் மிக முக்கியமான பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய பொறுப்புக்களை வகித்து வருவதுடன் மற்றமொரு சகோதரர் பாராளுமன்றின் சபாநாயகராகக கடமையாற்றி வருவதாக இலங்கை குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -------------------------------------------------------------------------------------------------- ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர்கள் பலர் மிக முக்கியமான பதவிகளை வகித்து வருகின்றனர் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. -------------------------------------------------------------------------------------------------- ஊடகவியலாளர்கள் சுய தணிக்கை வழிமுறைகளை பின்பற்றி தமது கடமைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. -------------------------------------------------------------------------------------------------- ஊடகவியலளார்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் தரப்பினருக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Thursday, February 27, 2014

சிறுநீரகம் அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்படும் தமிழர்கள்! தமிழின அழிப்பின் இன்னொரு வடிவம்!

யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் இயங்கும் மருத்துவனைகள் சிலவற்றில் சிகிச்சைக்காக செல்லும் தமிழர்களின் சிறுநீரகங்கள் அறுக்கப்பட்டு அவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
----------------------------------------------------------------------------------------------- கடந்த சில தினங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 29 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். ----------------------------------------------------------------------------------------------- இவரது உடலை உறவினர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்ற பொழுது, இடுப்பிற்கு மேல் உள்ள பகுதியில் அறுவை சிகிசைக்கு உட்படுத்தப்பட்டமைக்கான தடயங்கள் காணப்பட்டுள்ளன. ----------------------------------------------------------------------------------------------- இதேபோன்று இவ்வாரம் கொழும்பில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தமிழ் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். ----------------------------------------------------------------------------------------------- அப்பெண்ணின் உடலை வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பொழுது அவரது உடலில் இருந்த இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் 2013ம் ஆண்டு துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தால் 500 பேர் கொலை

சிறீலங்காவில் 2013ம் ஆண்டு துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தால் 500 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜயசிறி தெரிவித்துள்ளார் -------------------------------------------------------------------------------------- யாழ். தலைமைப் காவல்துறை நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ----------------------------------------------------------------------------------- 2012ம் ஆண்டு 700 பேரும், 2013ஆம் ஆண்டு 500 பேரும் கொலை துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறீலங்காவில் 2013ம் ஆண்டு துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தால் 500 பேர் கொலை

சிறீலங்காவில் 2013ம் ஆண்டு துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தால் 500 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜயசிறி தெரிவித்துள்ளார் -------------------------------------------------------------------------------------- யாழ். தலைமைப் காவல்துறை நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ----------------------------------------------------------------------------------- 2012ம் ஆண்டு 700 பேரும், 2013ஆம் ஆண்டு 500 பேரும் கொலை துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்து சமுத்திரத்தில் மிதக்கும் கோத்தாபயவின் ஆயுத களஞ்சியம்! – இந்தியக் கடற்படைத்தளபதி அதிருப்தி.

Date 12/9/2013 கடற்கொள்ளையர்களை அடக்கும் நோக்கம் என்று கூறி நாடு ஒன்றின் சட்ட எல்லைக்கு புறம்பாக இந்து சமுத்திரத்தில் மிதக்கும் ஆயுத களஞ்சியம் இயங்கி வருவது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என இந்திய கடற்படைத் தளபதி அத்மிரல் டி.கே. ஜோஷி டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையிடம் கூறியுள்ளார். சர்வதேச கடல்சார் அமைப்பு இந்த மிதக்கும் ஆயுத களஞ்சியம் தொடர்பில் பொருத்தமான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் மிகப் பெரிய சட்டவிரோத நடவடிக்கையாக இது மாறிவிடும். அது மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
------------------------------------------------------------------------------------- அண்மையில் எம்.பீ. சீமன்காட் ஒஹியோ என்ற கப்பல் கைது செய்யப்பட்டது. அதில் நான்கு இனங்களை சேர்ந்த ஆயுதம் தாங்கிய 25 பேர் இருந்தனர். அவர்கள் துப்பாக்கிகளையும் தோட்டக்களையும் சட்டவிரோதமாக தூத்துக்குடிக்கு எடுத்துச் சென்றுக் கொண்டிருந்தனர். இந்த நபர்கள் வர்த்தக கப்பல்களை கடற்கொள்ளையர்களிடம் இது பாதுகாக்கும் நிறுவனம் என்று கூறப்படும் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள். இப்படியான சில நிறுவனங்கள் இந்து சமுத்திரத்தில் இயங்கி வருகின்றன. இவர்கள் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக குறிக்கப்பட்ட கடமை நேரத்தில் கப்பல்களில் ஏறி இறங்குகின்றனர். அவற்றில் அரசு சாரத தனியார் பாதுகாப்பாளர்களும் உள்ளனர். ------------------------------------------------------------------------------------- எந்தொரு நாட்டின் துறைமுகத்திலும் இவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை. இது மும்பாய் மீது தாக்குதல் நடத்தை போன்ற தாக்குதலை நடத்த பயங்கரவாதிகளுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும். இந்து சமுத்திரத்தின் பொருளாதார பிராந்தியத்தில் இப்படியான எத்தனை கப்பல்கள் இருக்கின்றன?. அவற்றில் இருக்கும் ஆயுதங்கள் என்ன?. என்பது பற்றிய சர்வதேச தரங்களுக்கு அமைவான விபரங்கள் தேவை. இந்திய கடற்படை, கேரளா லட்சதீவுகளுக்கு அருகில் கடற்கொள்ளையர்களின் 4 படகுகளை மூழ்கடித்த பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக இந்தியாவில் இருந்து 450 கடல் மைல் தொலைவு வரை கடற்கொள்ளையர்களின் எந்த தாக்குதல்களும் நடக்கவில்லை. இதனால் மிதக்கும் ஆயுத களஞ்சியம் தேவையில்லை என்றார். ------------------------------------------------------------------------------------- சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து வர்த்தக கப்பல்களை பாதுகாப்பதற்காக தெரிவித்து, இலங்கையின் காலிக்கு அப்பால் தொலைவில் உள்ள கடற்பரப்பில் மிதக்கும் ஆயுத களஞ்சியம் இயங்கி வருகிறது. இதனை நடத்தி வரும் முக்கிய நபர்களில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்வும் ஒருவர். அவருக்கு சொந்தமான தனியார் பாதுகாப்பு நிறுவனம் இதன் பணிகளை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் கடற்படைத் தளபதி சோமதிலக திஸநாயக்கவும் இந்த நிறுவனத்தில் தான் சேவையாற்றி வருகிறார். ------------------------------------------------------------------------------------- பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி வகிக்கும் அரச அதிகாரி ஒருவர் தனியார் நிறுவனங்களை நடத்த முடியாது என்ற போதும் பாதுகாப்புச் செயலாளர் சில தனியார் நிறுவனங்களை நடத்தி வருகிறார் என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர இந்திய அரசை வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம்!!!

இன்று தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பாக இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனக்கொலைக் குற்றங்கள் மீதான தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு ஒன்றை நடத்த வேண்டும். ஈழத்தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு காண வேண்டும். என்று மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர இந்திய அரசை வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ------------------------------------------------------------------------------------------------ இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மாணவர் இயக்கத்தின் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் இளையராஜா தலைமை தாங்கினார் தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் தோழர் தங்க தமிழ்வேலன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தோழர் வேல்முருகன், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் தீரவிடர் கழகத்தின் பொது செயலாளர் தோழர் கோவை ராமகிருஷ்ணன் மற்றும் பல்வேறு கட்சிகளின், இயக்கங்களின் தலவர்களும், பல்வேறு மாணவர் இயக்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கோரிக்கையை வழியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு கோரிக்கைகளை வழியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். ஈழம் ரஞ்சன்

மே17 இயக்கத்தின் போராட நிதி பற்றாக்குறை பற்றிய அறிக்கை. தோழர் திருமுருகன் காந்தி!!

தொடர்ச்சியான போராட்டங்களுக்கு கடந்த மாதம் நிதி உதவி கேட்டு கோரிக்கை வைத்திருந்தோம். 3.50 லட்சம் கடன் தொகையிலிருந்து 3.90 லட்சத்திற்கு வளர்ந்திருக்கிறோம். கடந்த மாதம் கிடைத்த உதவி மதுரையில் நிகழ்ந்த கூட்டத்திற்கும் (ரத்துசெய்யப்பட்ட) இதர செலவினங்களுக்கு போதுமானதாய் இருந்து விட்டது. இதற்கு மேல் கடன் கொடுக்க யாரும் முன்வராத காரணத்தினால் , வருகின்ற போராட்டங்களை நடத்த முடியாத நெருக்கடியில் இருக்கிறோம். -------------------------------------------------------------------------------------- வரும் மார்ச்2 ஆம் தேதி நிகழ்வும் இதனால் முடக்கப்படுமோ என்கிற அச்சத்தில் இந்த கோரிக்கையை உங்கள் முன் வைக்கிறோம். இதைத் தவிர, மூன்று புத்தகங்கள் அச்சிடுவது, ஆவணப்படங்கள் இரண்டு, ஆறு பிரச்சாரக் கூட்டங்களை நிறுத்தி வைத்திருக்கிறோம். இவற்றினை செய்து முடிப்பதுவும், கடன் தொகைகளை அடைப்பதுவும் எங்கள் முன் நிற்கும் பெரும் போராட்டம். இதில் எங்களுடன் கைகோர்த்து உதவுவீர்கள் என நம்புகிறோம். கடன் தொகையை அடைக்கவும், வருகின்ற நிகழ்வுகளுக்கு உதவவும் உங்களது தொடர்ச்சியான மாதாந்திர பங்களிப்பினை எதிர்பார்க்கிறோம். -------------------------------------------------------------------------------------- விருப்பமுள்ள தோழர்கள் பின்வரும் வங்கிக்கணக்கில் பங்களிப்பினை செய்யலாம் அல்லது நேரில் தோழர்கள் சந்தித்து பெற்றுக்கொள்வார்கள். உடனடி மற்றும் மாதாந்திர உதவியை எதிர்பார்க்கிறோம். உதவித் தொகை பற்றிய விவரங்களை மின்னஞ்சலுக்கு அனுப்பவும், கணக்கெடுப்பிற்கு உதவியாக இருக்கும். இணைந்து நின்று களம் காணுவோம். உங்களின் பங்கேற்பு இல்லாமல் எப்போராட்டமும் சாத்தியமில்லை.. பங்கேற்பு நிதிஉதவியுடன் நின்றுவிடாது. -------------------------------------------------------------------------------------- அது ஒரு துவக்கப்புள்ளியாக இருக்கலாம்.. இணைந்து நில்லுங்கள்... -------------------------------------------------------------------------------------- பெயர் - P .A . PRAVEEN KUMAR Indian Overseas Bank, Savings Account No. 129601000017929 -------------------------------------------------------------------------------------- Velacherry Branch, Chennai. IFS Code : ioba0001296 SWIFT Code: IOBAINBB001 -------------------------------------------------------------------------------------- உதவி பற்றிய விவரங்களை தவறாமல் contact.may17@gmail.com-- என்னும் மின்னஞ்சலிலும் -Ph- 9600781111, என்னும் எண்ணிலும் தெரிவியுங்கள்.

May 17 Thirumurugan on Ealam Issue

ரஷ்ய ஜனாதிபதி பூட்டீன் மேற்கு ரஷ்யப் பகுதியில் ராணுவத்தைத் தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளார்-

ரஷ்ய ஜனாதிபதி பூட்டீன் மேற்கு ரஷ்யப் பகுதியில் ராணுவத்தைத் தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளார். ரஷ்யாவின் மேற்குப் பகுதியானது, உக்ரைனில் ரஷ்யப் பூர்வீகக் குடியினர் வாழும் கிழக்குப் பகுதியை அண்மித்த பகுதியென்பது குறிப்பிடத்தக்கது. ஆயுத்த நிலையில் கடமையிலிருக்கும் ராணுவத்திற்கு, யுத்த தந்திரங்களைப் பரிசோதித்துப் பயிற்சிக்கும் படி, பூட்டீன் கட்டளையிட்டுள்ளாரென மொஸ்கோ அலுவலகம் தெரிவிக்கிறது. ---------------------------------------------------------------------------------------- உக்ரைனின் கிழக்குப் பகுதிகளிலும் அதன் குடாநாட்டுப் பகுதியான கிறிமிலிலும், ரஷ்ய இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். உக்ரைனில் வருங்காலங்களில் ரஷ்ய மொழியுரிமை பறிக்கப்படுமெனும் வதந்தி மேற்கு உக்ரைனில் பரவி வரும் நிலையானது, ரஷ்யா ராணுவத்தைத் தயார் நிலையில் நிறுத்தி வைத்திருப்பதற்கான தனிக் காரணமாகாது. ---------------------------------------------------------------------------------------- உக்ரைனின் முன்னைய ஜனாதிபதி பதவி விலக்கப்பட்டதும் ரஷ்யா உக்ரைன்மேல் செலுத்திய அதிகாரம் பாதிப்படைந்ததும், உக்ரைனிலிடம் பெற்ற அரசியற் பலப் பரீட்சையில் ரஷ்யாவின் நிலைப்பாட்டிற்கு வெற்றி கிட்டாமையும் கூட ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டமைக்குக் காரணங்களாக அமைந்துள்ளது. ---------------------------------------------------------------------------------------- ஜானுகோவிற்சின் வீழ்ச்சிக்கு முன்னான புரட்சிக்காலத்தில், உக்ரைனில் சட்ட ஒழுங்கும் அரசியல் உறுதி நிலையும் தளராதிருக்கும் வகையில் ஐரோப்பியப் பாதுகாப்பிற்கும் ஒற்றுமைக்குமான அமைப்பு (Organization for security ard Cooperation in Europe) உறுதுணையாக அமைய வேண்டுமென பூட்டீனின் அரசியல் அபிலாஷை, உக்ரைனின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னும் தொடருமென்பது நிச்சயமற்றதாகவுள்ளது. ---------------------------------------------------------------------------------------- உக்ரைனின் அரசியல் விவகாரம் ரஷ்ய, ஐரோப்பிய உறவில் பதட்ட நிலையை ஏற்படுத்தி ரஷ்யாவைப் போர்க்கோலம் பூண வைத்திருக்கும் வேளை, உக்ரைனின் சமாதானத்திற்கும், அமைதியைத் தரும் ஒற்றுமைக்குமாக Nato முழுமையாக உதவத் தயாரென அறிவித்துள்ளது. ---------------------------------------------------------------------------------------- உக்ரைன் Nato வின் நீண்ட கால அங்கத்துவ நாடென்று கூறும் அந்த அமைப்பின் செயலாளர் நாயகம் அன்டெர்ஸ், ரஷ்யாவுடனான தோழமையும் அதன் ஒத்துழைப்பும் தொடர்ந்து பேணிப் பராமரிக்கப் படுவதையே விரும்புவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

வடமாகாணம் வந்த ஜெர்மானிய தூதருடன் விக்னேஸ்வரன் சந்திப்பு

போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சர்வதேச நாடுகள் பலவழிகளிலும் உதவிகள் புரிந்து வருகின்ற போதிலும், இலங்கை அரசாங்கம் அந்த நாடுகளைக் குறைகூறிவருவதாக இலங்கைக்கான ஜெர்மன் தூதுவர் ஜோர்கன் மோஹாட் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார். ------------------------------------------------------------------------------------------ ஜெர்மனியின் நிதி உதவியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்களையும் அபிவிருத்திப் பணிகளையும் பார்வையிடுவதற்காக இரண்டு நாள் விஜயமாக இலங்கையில் உள்ள ஜெர்மன் தூதுவர் ஜோர்கன் மோஹாட் வடபகுதிக்கு விஜயம் செய்தபோது, யாழ்ப்பாணத்தில் தன்னைச் சந்தித்துப் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்ததாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
------------------------------------------------------------------------------------------ ஜெர்மன் அரசின் நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல வேலைத்திட்டங்களைப் பார்வையிட்டு அவற்றில் சிலவற்றை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் அவர் வடமாகாண முதலமைச்சரைச் சந்தித்துப் பேசியிருந்தார். ------------------------------------------------------------------------------------------ இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், சர்வதேச நாடுகளிடமிருந்து கிடைக்கின்ற உதவிகளைப் பலவிதங்களிலும் அரசாங்கம் கட்டுப்படுத்தி வருவதாகவும், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பகுதிகளைப் போன்று ஏனைய பிரதேசங்களுக்கும் உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாடுகளிடம் அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார். ------------------------------------------------------------------------------------------ ஜெர்மன் தூதுவருடனான சந்திப்பின்போது அபிவிருத்தி விடயங்கள் பற்றியே பேசப்பட்டதாகவும், எனினும் அரசியல் ரீதியாக வடமாகாண சபை எந்த அளவில் செயற்பட்டு வருகின்றது என்பதை அவர் கேட்டறிந்து கொண்டதாகவும் அவர் கூறினார். ------------------------------------------------------------------------------------------ வடபகுதிக்கான விஜயம் குறித்து செய்தியாளர்களிடம் விபரம் தெரிவித்த ஜெர்மன் தூதுவர் ஜோர்கன் மோஹாட், இலங்கையில் ஜெர்மனியின் பொருளாதார அபிவிருத்திப்பணிகள் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். ------------------------------------------------------------------------------------------ சமூக அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் பாடசாலைகளுக்கான கட்டிட வசதிகள் என்பவற்றை நாங்கள் ஜெர்மன் நிறுவனமாகிய GIZ நிறுவனத்தின் ஊடாக மேற்கொண்டு வருவதாகவும், கடந்த 60 வருடங்களாக இலங்கையுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி அபிவிருத்திப் பணிகளில் ஜெர்மனி உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சீன மீனவர்களின் வருகையால் வாழ்வாதாரம் பாதிக்கிறது: வட இலங்கை மீனவர்கள்

இலங்கையின் வடகடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில் முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு முடியாதுள்ள நிலையில், சீன தேசத்து மீனவர்களும் தமது கடற் பரப்பில் வந்து தொழில் செய்வதாக வடபகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உள்ளுர் மீனவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது இது குறித்து உரிய அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கின்ற போதிலும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த மீனவர்கள் கூறுகின்றனர். இந்தப் புதிய தொல்லை யாழ் குடாநாட்டின் வடமராட்சி கடற்பகுதியிலேயே ஏற்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியான்பிள்ளை கூறுகின்றார்.
அண்மையில் சீன மீனவர்களுடன் மீன் பிடிப் படகொன்றை இலங்கை கடற்படையினர் பிடித்திருந்தனர். ---------------------------------------------------------------------------------------------------- "முப்பது வருட கால யுத்தத்தின் முடிவில் கடற்பரப்பில் தொழில் செய்ய செல்லும் எமது மீனவர்கள் சீன மீனவர்களின் அத்துமீறல் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். வடமராட்சி கடற்பரப்பின் ஆழ் கடற் பிரதேசத்திலேயே சீன மீனவர்களின் பெரிய கப்பல் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றது. இதனால் கடற்கரையை அண்டிய பகுதிக்குள் மீன்கள் வருவதில்லை. எமது மீனவர்களுக்குத் தொழில் பாதிப்பு ஏற்படுகின்றது." ---------------------------------------------------------------------------------------------------- சீனதேசத்து மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்து தொழில் செய்வது குறித்து நீர்கொழும்பில் இருந்து செயற்படுகின்ற தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் கூட முறையிட்டிருக்கின்றது. ---------------------------------------------------------------------------------------------------- சீன தேசத்து மீனவர்களை இலங்கைக் கடற்பரப்பினுள் அனுமதிக்கக் கூடாது என்று தாங்கள் அரசாங்கத்திடம் கோரியிருப்பதாக அந்த அமைப்பின் தேசிய இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் கூறுகிறார். ---------------------------------------------------------------------------------------------------- இது குறித்து, கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமால் ஹெட்டியாரச்சி அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவ்வாறு சீன தேசத்து மீனவர்கள் இங்கு வந்து தொழில் புரியவில்லை என்று மறுத்துரைத்தார். ---------------------------------------------------------------------------------------------------- "இலங்கையின் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கென, எமது கடற்தொழில் திணைக்களத்தில் எந்தவொரு சீன கம்பனியும் பதிவு செய்யப்பட்டிருக்;கவில்லை. அவ்வாறு எவருக்கும் அனுமதி வழங்கப்படவுமில்லை. ஆனால், கடலுணவு பதனிடுகின்ற சீன கம்பனி ஒன்று சர்வதேச கடற்பரப்பில் தொழில் செய்வதற்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. எமது தேசிய கடற்பரப்பில் இந்தக் கம்பனிக்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கப்படவில்லை. சர்வதேச கடற்பரப்பிலேயே தொழில் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெளிவாகக் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது"

போர் ஆயுதமாக பாலியல் வல்லுறவு: தடுக்க உச்சி மாநாடு

பாலியல் வல்லுறவை போர் ஆயுதமாகப் பயன்படுத்துவதை எப்படித் தடுப்பது என்பது குறித்து விவாதிக்க உலகத் தலைவர்களின் உச்சி மாநாடு ஒன்று லண்டனில் வரும் ஜூன் மாதத்தில் கூட்டப்படும் என்று பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் அறிவித்திருக்கிறார்.
------------------------------------------------------------------------------------------ இந்த மாநாட்டில் 140 உலக நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் , ராணுவ , போலிஸ் மற்றும் சட்ட வல்லுநர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படும் என்று ஹேக் கூறினார். ------------------------------------------------------------------------------------------ இந்த மாநாடு மோதல் நடக்கும் பகுதிகளில் பாலியல் வன்முறை குறித்து கவனம் செலுத்தும் மிகப்பெரும் ஒரு கூட்டமாக இருக்கும் என்று அவர் கூறினார். ---------------------------------------------------------------------------------------------------- பாலியல் வன்முறைக்கு எதிராக வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது இந்த மாநாட்டின் நோக்கம் என்றும், இந்த நெறிமுறைகள் சர்வதேச அமைதி நடவடிக்கைகள் உட்பட, ராணுவத்தினருக்கு வழங்கப்படும் பயிற்சி மற்றும் சித்தாந்தத்தில் பயிற்றுவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். ---------------------------------------------------------------------------------------------------- பாலியல் வன்முறைகள் நடப்பதை ஒழிப்பதை உலக நாடுகள் நீண்ட காலமாகவே தவிர்த்து வந்திருக்கின்றன என்றும் அவர் வாஷிங்டனில் கூறினார்.

யுக்ரெய்னில் விசேட அதிரடி பொலிஸ் படை கலைப்பு

யுக்ரெய்னில் நாட்டின் நிர்வாகத்துக்கு பொறுப்பேற்றுள்ள இடைக்கால அதிகாரிகள் அந்நாட்டின் விசேட கலவரக் கட்டுப்பாட்டு பொலிஸ் படையைக் கலைப்பதாகக் கூறுகின்றனர்.
------------------------------------------------------------------------------------------------ தலைநகர் கியெவ்வில் சென்ற வாரம் நடந்த வீதிக் கலவரங்களில் பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு இந்த பொலிஸ் படையே காரணம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். ------------------------------------------------------------------------------------------------ வீதிக் கலவரங்களில் கிட்டத்தட்ட நூறு பேர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ------------------------------------------------------------------------------------------------ பெர்குட் என்று அழைக்கப்படுகின்ற இந்த விசேட பொலிஸ் பிரிவு இனிமேல் இல்லை என்று தற்காலிக உள்துறை அமைச்சர் ஆர்சென் வகொவ் அறிவித்துள்ளார். ------------------------------------------------------------------------------------------------ புதிய அரசாங்கத்தில் யார் யார் பங்கெடுக்கப்போகிறார்கள் என்று தீர்மானிக்க அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்ததை விட அதிக காலம் பிடிக்கிறது என்றும், அமைச்சரவை உருவாக்கம் தொடர்பான வாக்கெடுப்பை வரும் வியாழக்கிழமைவரை நாடாளுமன்றம் ஒத்திவைத்துள்ளது என்றும் கியெவ்வில் உள்ள பிபிசி முகவர் கூறுகிறார். ------------------------------------------------------------------------------------------------ அந்த வாக்கெடுப்புக்கு முன்பாக புதனன்று பின்னேரம் புதிய அமைச்சர்களாக முன்மொழியப்பட இருப்பவர்கள் மக்களின் ஒப்புதலைப் பெறுவதற்காக கியெவ்வின் சுதந்திர சதுக்கத்தில் கூட்டத்தினர் முன்பு தோன்றவிருக்கின்றனர்.

துபாய் தங்கம் இறக்குமதியாளர் விதிமீறல்

துபாயின் மாபெரும் தங்கம் சுத்திகரிக்கும் நிறுவனமான கலோட்டி, யுத்தம் நடக்கும் பகுதியில் கிடைக்கும் தங்கம் உலக சந்தைக்குள் உட்புகாமல் இருப்பதற்காக உருவாக்கப்பட்ட விதிகளை தீவிரமாக அத்துமீறி இருப்பதாக விஷயம் தெரிந்த உள் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------ கலோட்டி நிறுவனத்தில் தணிக்கையை மேற்கொண்ட எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவன குழு ஒன்றின் தலைவரான அம்ஜத் ரிஹான் என்பவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இவர்கள் மேற்கொண்ட சோதனையில் கலோட்டி நிறுவனம் முறையான சோதனைகளை மேற்கொள்ளவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------------ கலோட்டி நிறுவனத்தில் கண்டறியப்பட்ட தகவலை துபாய் பல்பொருள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவித்த பின்னர், அந்த மையமோ, தணிக்கையில் கண்டறியப்பட்ட தீவிர தாக்கம் உடைய விஷயங்களை மறைக்கும் வகையில் அதனுடைய தணிக்கை முறைகளை மாற்றியமைத்து கொண்டதாக அம்ஜத் ரிஹான் கூறியுள்ளார். அதே போல எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனமோ இவ்விஷயத்தில் கண்ணை மூடி கொண்டு விட்டதாகவும் அவர் கூறுகிறார். ------------------------------------------------------------------------------------------------------ உலக தங்க சந்தையில் துபாய் மிக முக்கியமான மையமாக இருக்கின்றது, உலகில் நடக்கும் ஐந்தில் ஒரு பங்கு தங்க வர்த்தகம் துபாயில் நடைபெறுகிறது. தங்கமானது ஆபரணங்களுக்கு மட்டுமல்லாமல், ஆண்டுக்கு சுமார் 300 டன் தங்கம் மின்னணு பொருட்களை செய்யவும் பயன்படுகிறது. ------------------------------------------------------------------------------------------------------ யுத்தங்களுடன் தொடர்புடைய தங்கம் விற்பனை செய்வதற்கான மிக பெரிய மையமாக துபாய் இருக்கின்றது என குளோபல் விட்னஸ் தன்னார்வ அமைப்பு மற்றும் ஐ.நா வின் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------------ இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள துபாய் பல்பொருள் ஒழுங்குமுறை ஆணையம், எர்னஸ்ட் அண்ட் யங் மற்றும் கலோட்டி நிறுவனம் ஆகியவை தாங்கள் முறையாகவே செயற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளன.

இந்தியக் கடற்படைத் தளபதி ராஜிநாமா

இந்தியக் கடற்படை சமீப காலத்தில் சந்தித்த விபத்துக்களுக்கு தார்மீகப் பொறுப்பேற்று இந்தியக் கடற்படைத் தளபதி டி.கே.ஜோஷி பதவி விலகியிருக்கிறார்.
--------------------------------------------------------------------------------------------- இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலில் இன்று ஏற்பட்ட விபத்தை அடுத்து இந்த பதவி விலகல் வருகிறது. --------------------------------------------------------------------------------------------- அவரது இந்த ராஜிநாமாவை இந்திய அரசு ஏற்றுக்கொண்டுவிட்டதாக, கடற்படையின் பத்திரிக்கைக் குறிப்பொன்று தெரிவிக்கிறது. --------------------------------------------------------------------------------------------- கடற்படையின் துணைத் தளபதி ஆர்.கே.தோவான் தற்காலிகமாக கடற்படைத் தளபதியின் பொறுப்புக்களை கவனிப்பார் என்று அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இலங்கை குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் என்பதில் நம்பிக்கையில்லை – பிரித்தானியா:-

இலங்கை குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் என்பதில் நம்பிக்கை கிடையாது என பிரித்தானியா அறிவித்துள்ளது. -------------------------------------------------------------------------------------------------- உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள், காணாமல் போனதல்கள் தொடர்பான விசாரணைகள் போன்றன தொடர்பில் நம்பிக்கை கொள்ள முடியாது என பிரித்தானியா தெரிவித்துள்ளது. -------------------------------------------------------------------------------------------------- சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் நம்பகமானதும் சுயாதீனமானதுமான விசாரணைக்ள நடத்தப்பட வேண்டும் என்பதே பிரித்தானியாவின் நிலைப்பாடாகும் என சுட்டிக்காட்டியுள்ளது. -------------------------------------------------------------------------------------------------- யுத்த நிறைவின் பின்னர் நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை பிரித்தானியா பல தடவைகள் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. -------------------------------------------------------------------------------------------------- எதிர்வர் மார்ச் மாதமளவில் நம்பகமான விசாரணைகள் ஆரம்பிக்கப்படாவிட்டால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஊடாக விசாரணைகளுக்கு அழுத்தம்; கொடுக்க பிரித்தானியா முனைப்பு காட்டும் என குறிப்பிட்டுள்ளது. -------------------------------------------------------------------------------------------------- சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்பதனை ஏனைய நாடுகளுடன் இணைந்து வலியுறுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளது.

Wednesday, February 26, 2014

நோ பயர் சோன் திரையிட இந்தியா தடை: 'இலங்கை உறவு காரணம்'

நோ பயர் சோன் திரையிட இந்தியா தடை: 'இலங்கை உறவு காரணம்' No Fire Zone veil ban in India: Sri Lanka due to relationship ' YOU CAN SEE THE LINK IN ENGLISH& HINDI http://nofirezone.org/watch

நோ பயர் சோன் திரையிட இந்தியா தடை: 'இலங்கை உறவு காரணம்'

சேனல் 4 - பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் வெளியான ஆவணப்படங்களையும் உள்ளடக்கிய விதத்தில் நோ பயர் சோன் தயாரிக்கப்பட்டது

மக்களவைத் தேர்தலில் மூன்றாவது அணி: அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாமல் இடதுசாரிகள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 11 கட்சிகளை கொண்ட மூன்றாவது அணி வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------- இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே இருப்பதை போன்ற மாயையை அவர்கள் உருவாக்கியுள்ளதாக குற்றம் கூறியுள்ள, இந்த 11 கட்சிகளின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் செவ்வாயன்று புதுடில்லியில் நடைபெற்றது
மூன்றாவது அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவையும் இடம்பெறுகின்றன.-------------------------------------------------------------------------------------------முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் கரத், புதியதாக அமைக்கப்பட்டுள்ள மூன்றாவது அணியில் இடதுசாரிகள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், சமாஜ்வாதி கட்சி, ஐக்கிய ஜனதா தள், மதசார்பற்ற ஜனதா தள், பிஜு ஜனதா தள், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா, அசோம் கானா பரிஷத் போன்ற 11 கட்சிகள் இடம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். "மக்களின் நம்பிக்கைக்குரிய அணி" >------------------------------------------------------------------------------------------- காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத மூன்றாவது கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் தற்போது உருவாகியுள்ளதாக கூறிய பிரகாஷ் கரத், இந்த மூன்றாவது அணி மக்களின் நம்பிக்கைக்குரிய அணியாக செயல்படும் என நம்பிக்கை தெரிவித்தார். >------------------------------------------------------------------------------------------- அசோம் கானா பரிஷத் கட்சியின் தலைவர் பிரப்புல்லா குமார் மகந்தா மற்றும் பிஜு ஜனதா தள் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் ஆகியோர் தவிர்க்க முடியாத காரணத்தால் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார். >------------------------------------------------------------------------------------------- இதனை தொடர்ந்து, அக்கூட்டத்தில் கலந்து கொண்ட சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் செய்தியாளர்களிடம் பேசியபோது, 11 கட்சிகளை கொண்டு உருவாகியுள்ள இந்த மூன்றாவது அணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறினார். >------------------------------------------------------------------------------------------- மதசார்பற்ற மற்றும் ஊழலை எதிர்க்கும் சிந்தனையோடு உருவாகியுள்ள இந்த கூட்டணியில், ஒத்த கருத்துகளை உடைய மற்ற கட்சிகளும் இணைத்து முறையான ஜனநாயக ஆட்சியை உருவாக்க ஒன்றுபட வேண்டும் எனவும் கோரினார். பிரதமர் வேட்பாளர் யார்? >------------------------------------------------------------------------------------------- ஏற்கனவே பிஜேபி தனது பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவித்துள்ளது, அதுபோல காங்கிரஸ் கட்சியும் பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் ராகுல் காந்தியை முன்வைத்து தேர்தல் பிரச்சாரங்களை செய்து வரும் சூழலில், இந்த மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியிடப்படுமா என்று செய்தியாளர் ஒருவர் பிரகாஷ் கரத்திடம் கேள்வி எழுப்பினார். >------------------------------------------------------------------------------------------- அதற்கு பதிலளித்த அவர், தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு எதுவும் அறிவிக்கப்படமாட்டது என்றார். >------------------------------------------------------------------------------------------- தேர்தல் முடிவுக்கு பிறகே பிரதமர் குறித்த முடிவுகள் எட்டப்படும் எனவும் கூறினார். >------------------------------------------------------------------------------------------- தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட இந்த மூன்றாவது அணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் சில தலைவர்களும், தங்களது பிரதமர் கபவை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே இந்த மூன்றாவது அணியில் இணைத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

சீனாவுக்கு புதிய தேசிய விடுமுறை நாட்கள்

ஜப்பானுடன் கடந்த 1930 மற்றும் 40களில் இடம்பெற்ற போரை குறிக்கும் முகமாக சீன அரசாங்கம் இரு புதிய தேசிய விடுமுறை நாட்களை கொண்டு வர உத்தேசித்துள்ளது. ------------------------------------------------------------------------------------------------- சீனாவில் தற்போது ஜப்பானுக்கு எதிரான எண்ணம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. ------------------------------------------------------------------------------------------------- 1945 ஆம் ஆண்டு ஜப்பான் அதிகாரபூர்வமாக சரணடைந்ததையும், நான்ஜிங் படுகொலைகளையும் குறிக்கும் முகமாகவும் இந்த விடுமுறை திட்டம் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------- 1937 ஆம் ஆண்டு ஜப்பான் துருப்புகள் சீனாவை ஆக்கிரமித்த பின்னர், கிட்டத்தட்ட மூன்று லட்சம் பொது மக்களை ஜப்பான் கொன்று விட்டதாக சீனா கூறுகிறது. ------------------------------------------------------------------------------------------------- ஆனால் இவ்வாறு சீனா கூறுவதை ஜப்பான் தேசியவாதிகள் மறுத்து வருகின்றனர்.

ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள் பிறந்தவுடன் இறப்பு'

ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் குழந்தைகள் தாங்கள் பிறந்த முதல் நாளிலேயே இறந்து விடுவதாக ஒரு குழந்தைகள் நல தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ---------------------------------------------------------------------------------------------------- உலகின் அனைத்து பெண்களும் சுகாதார சேவைகளைப் பெற முடிந்தால் , உலகம் முழுவதும் ஏற்படும் இந்த மரணங்களில் பாதிக்கும் அதிகமான மரணங்களை தடுக்க முடியும் என்று ‘சேவ் த சில்ட்ரன்’ எனப்படும் குழந்தைகள் நல தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ---------------------------------------------------------------------------------------------------- குறைப் பிரசவமும், பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களும் முக்கிய அபாயங்களாகக் கருதப்படுகின்றன. ---------------------------------------------------------------------------------------------------- சரியான பயிற்சி பெற்றவர்களின் உதவி இல்லாமல் ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 40 மில்லியன் பெண்கள், பிரசவிக்கும் நிலமையை மாற்ற அரசாங்கங்களை அந்த நிறுவனம் கோரியுள்ளது. ---------------------------------------------------------------------------------------------------- இந்த நிலமையுள்ள மோசமான நாடுகளை சுட்டிக்காட்டிய அந்த அமைப்பு அதில் குறிப்பாக தெற்கு சுடானில் வாழும் 10 மில்லியன் மக்களுக்கு உதவி புரிய வெறும் 300 மருத்துவத் தாதிகளே உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை: தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜெயலலிதா

மக்களவை தேர்தலுக்கான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார். ------------------------------------------------------------------------------------------------- இந்த விஞ்ஞாபனத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------- இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டங்களை மீறியமை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------- தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அதிமுக உறுதிபூண்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------- அத்துடன் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தவும், தமிழக மீனவர்களின் நலன்களைக் காக்கும் வகையில், இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையை நடத்துவதற்குரிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்பபட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------- தமிழக மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவினை திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------- தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று அ.தி.மு.க வலியுறுத்தும் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிக்கத் தேவையான நடவடிக்கைகளை அக்கட்சி எடுக்கும் என்றும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு:-

திருகோணமலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. திருகோணமலை முருகாபுரியின் மூன்றாம் மைல்கல் பகுதியில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று மாலை இராணுவத்தினர் ஆயுதங்களை மீட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். ஐந்து ரி56 ரக துப்பாக்கிகள், ஒரு இயந்திர துப்பாக்கி, மகசீன்கள், துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு மூன்று மாத காலத்திற்குள் தீர்வு வழங்கப்படும் - பஜக

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு மூன்று மாத காலப்பகுதியில் தீர்வு வழங்கப்படும் என பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஆட்சியை அமைத்து மூன்று மாத காலப்பகுதிக்குள் இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்கும், தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான யஸ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தாம் வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றிய போது இலங்கையுடன் சுமூகமான உறவுகளைப் பேணியதாகத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் அரசாங்கம் இலங்கை விவகாரத்தில் உரிய முறையில் நடந்துகொள்ளத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் மத்திய பிரிவுகளுக்கு இடையில் கருத்து முரண்பாடு நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எந்த காரணத்திற்காகவும் வடக்கு படையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட மாட்டாது – கோதபாய

எந்த காரணத்திற்காகவும் வடக்கு படையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட மாட்டாது என பாதுகாப்புச் செயலாளா கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகம் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகித்த போதிலும், வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் குறைக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து சில நாடுகள் இலங்கைக்கு எதிராக ராஜதந்திர ரீதியான முன்நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போதும் மேற்குலக நாடுகள் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரும், பிரித்தானிய உயர்ஸ்தானிகரும் இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன், இந்தியாவிற்கு விஜயம் செய்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளத் தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே சிசன், நியூயோர்க்கில் கடமையாற்றி வரும் ஐக்கிய நாடுக்ள அமைப்பு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த நிறைவின் பின்னர் இராணுவத்தை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பது அரசாங்கத்தின் தீர்மானமாகும் என அவர் தெரிவித்துள்ளார். யுத்த களத்தில் உயிரைப் பணயம் வைத்து போராடிய படைவீரர்களை எந்தவொரு புத்திசாதூரியமான அரசாங்கமும் வீட்டுக்கு அனுப்பி வைக்குமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இராணுவத்தின் எண்ணிக்கை குறைப்பானது பாரியளவில் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை உருவாக்கக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். படைவீரர்களை வீட்டுக்கு அனுப்பி அதன் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படக் கூடிய வகையிலான எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் எடுக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பி;ன்னரான நல்லிணக்கப் பணிகளில் படைவீரர்கள் சிறந்த முறையில் பங்களிப்பினை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைவதனை தடுக்கும் நோக்கில் வடக்கில் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Tuesday, February 25, 2014

Top five fish producing States in order during 2011-12 & 2012-13

(Production in ‘000 tonnes)------- 1)Andhra Pradesh. * 2012-13-->1675.44 ----------------------------------------------------------- 2)West Benga. * 2012-13-->1490.01 ----------------------------------------------------------- 3)Gujarat.* 2012-13-->848.79 ----------------------------------------------------------- 4)Kerala * 2012-13-->677.78 ----------------------------------------------------------- 5)Tamil Nadu * 2012-13-->620.40 -----------------------------------------------------------

அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகள்

செய்தி: அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகள் நிதிக் கொள்கைகளை வகுக்கும்போது, வளரும் நாடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் வலியுறுத்தியுள்ளார். ---------------------------------------------------------------------------------------------------- நீதி: வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகளை கொள்ளையடிப்பதற்கு எப்போதும் கருத்தில் கொண்டிருக்கிறார்கள், கவர்னர் சார்!

கடுமையான பொருளாதார மந்த நிலை

செய்தி: ”கடுமையான பொருளாதார மந்த நிலை, சிக்கலான சூழ்நிலைகள் இருந்த போதிலும், நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்துள்ளோம்,” என மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். ---------------------------------------------------------------------------------------------------- நீதி: வட்டிக் கடை புகழ் சிதம்பரத்தின் அகராதிப்படி பொருளாதார மந்தம் மக்களுக்கும், பொருளாதார வளர்ச்சி முதலாளிகளுக்கும் என்பதறிக. ________

நதியை சுத்தப் படுத்துவதற்காக 6,500 கோடி ரூபாய் செலவிட்டும்

செய்தி: “யமுனை நதியை சுத்தப் படுத்துவதற்காக 6,500 கோடி ரூபாய் செலவிட்டும் மோசமாக உள்ளது”, என பார்லிமென்ட் குழு கவலை தெரிவித்து உள்ளது. ---------------------------------------------------------------------------------------------------- நீதி: யமுனைக் கழிவுகளை அகற்றாவிட்டாலும், ஊழல் நதி பெருக்கெடுத்து ஓடுவதற்கு அந்த நிதி பயன்பட்டிருப்பதால் பாராளுமன்ற முதலைகள் விடுவது கண்ணீரா, பீரா?

தமிழக காங்., வேட்பாளர்களை தேர்வு செய்யும்

செய்தி: லோக்சபா தேர்தலுக்கான, தமிழக காங்., வேட்பாளர்களை தேர்வு செய்யும், ஐவர் குழு கூட்டம், டில்லியில், இன்று இரவு கூடுகிறது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர், ஞானதேசிகன், வேட்பாளர்கள் பட்டியலுடன் பங்கேற்கிறார். ---------------------------------------------------------------------------------------------------- நீதி: தோற்பது நிசமென்றாலும் மேய்வதற்கு கதராடைக் காளைகள் அஞ்சுவதில்லை. ஆதலால் பட்டியலுடன் செல்லும் ஞானதேசிகன் கிழியப் போகும் வேட்டி சட்டைகளுக்காக தி.நகர் ஜவுளிக் கடைகளில் ஆர்டர் கொடுத்து விட்டாரா?

தெலுங்கானா மசோதா நிறைவேறியதால்

செய்தி: தெலுங்கானா மசோதா நிறைவேறியதால்,டி.ஆர்.ஆஸ்., கட்சியை காங்கிரஸ் உடன் இணைக்க அதன் தலைவர் சந்திரசேகர்ராவ் விரும்பி, டில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேற்று சந்தித்தார். ---------------------------------------------------------------------------------------------------- நீதி: டி.ஆர்.எஸ்ஸோ இல்லை காங்கிரசு பெருச்சாளிகளின் ஆட்சிதான் தெலுங்கானாவின் சாதனை என்றால் தெலுங்கானா போராட்டத்தின் தேவை என்ன?

தடுப்பூசி மருந்து தனியாருக்கு – பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வக்கிரம்

கச்சத்தீவு தமிழர்களின் சொத்தா ?

தமிழர்களுக்கு இந்திய ஒன்றியம் இழைத்த துரோகம் ---------------------------------------------------------------------------------------------------- கச்சத்தீவு தமிழர்களின் சொத்தா ? ---------------------------------------------------------------------------------------------------- 1974 இல் ஆரம்பித்து 2010 வரை தொடரும் இந்த பிரச்சனையின் மூலம் தான் என்ன? உண்மையில் நமக்கு கச்சதீவில் உரிமை இருக்கிறதா? அதற்கு என்ன சாட்சி? வரலாற்றின் பக்கங்களில் கச்சதீவு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியா? இது எல்லாவற்றிற்கும் விளக்கம் தரும் வகையில் இந்த இடுகையை சமர்பிக்கிறேன். எல்லோர்க்கும் தெரிந்த விஷயம் தான், தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், அவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ---------------------------------------------------------------------------------------------------- 1480 ம் ஆண்டில் ஏற்ப்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்ப்பட்டு வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டாயின. ----------- 01 ராமேஸ்வரம் ----------- 02 குந்துகால் ----------- 03 புனவாசல் ----------- 04 முயல் தீவு ----------- 05 பூமரிசான் தீவு ----------- 06 முல்லைத் தீவு ----------- 07 மணல் தீவு ----------- 08 வாலித் தீவு (கச்சத் தீவு) ----------- 09 அப்பா தீவு ----------- 10 நல்ல தண்ணீர் தீவு ----------- 11 உப்பு தண்ணீர் தீவு ----------- 12 குடுசடி தீவு ----------- ராமநாதபுரம் மாவட்ட அரசு வரலாற்று குறிப்பு 11891ம் பக்கம் 14ல் இதற்கான ஆதாரம் உள்ளது. 1480 ம் ஆண்டு தோன்றிய இத் தீவுகள் யாவும் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமாக இருந்தன. --------------------------------------------------------------------------------------------------- 1802ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ஜமிந்தாரி நில உரிமைச் சட்டப்படி கச்சத்தீவு ராமநாதபுரம் ராஜாவிற்கு அரசுடமையாக்கப்பட்டது. அதற்கு பிறகு ராமநாதபுரம் ராஜா அவர்கள் அந்த இடத்தை தனி நபர்களுக்கு குத்தகையாக கொடுத்து அவர்கள் மூலமாக பயன் பெற்று இருகின்றனர். --------------------------------------------------------------------------------------------------- 1905ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சீனி கருப்பன் படையாச்சி என்ற மீனவர் புனித அந்தோனியார் கோயிலைக் கட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4ம் நாள் திருவிழா நடக்கும். இதில் தமிழர்கள் யாருடைய அனுமதியும் பெறாமல் செல்லாம். இலங்கை பக்தர்கள் இலங்கை அரசின் அனுமதி பெற்று தான் வரவேண்டும். --------------------------------------------------------------------------------------------------- 1947 ம் ஆண்டு ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம் கொண்டு வரும் வரையில் கச்சதீவு சேதுபதி மன்னர்களின் ஆட்சியில் இருந்தது. --------------------------------------------------------------------------------------------------- இதற்கு 1822 ம் ஆண்டிலிருந்து நிறைய சான்றுகள் உண்டு. கிழக்கிந்திய கம்பெனி 1822ல் இஸ்திமிரர் சனட் என்ற ஒப்பந்தத்தில் ராமநாதபுரம் ராஜாவிடமிருந்து கச்சத்தீவை பயன்படுத்தி கொள்ளும் உரிமை பெற்றது. 69 கடற்கரை ஊர்களும் 8 தீவுகளும் சேதுபதிக்கு உரியது. இந்த 8 தீவுகளில் ஒன்று தான் கச்சத்தீவு. கிழக்கிந்திய கம்பனி இவை யாவற்றையும் பயன்படுத்தி கொள்ள ராஜாவிடம் இருந்து இசைவு பெற்று இருந்தது. --------------------------------------------------------------------------------------------------- இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் காலத்தில் இலங்கை பற்றி வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில் இலங்கையின் எல்லையை பற்றி குறிப்பிடும் போது கச்சத்தீவை குறிக்காமலும், ராமநாதபுரம் அரசை பற்றி குறிப்பிடுகையில் கச்சத்தீவு அவருக்கு உரியதென்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை முந்நாளைய இலங்கை அமைச்சரவை செயலாளர் பி. ஈ. பியரிஸ் உறுதிபடுத்தி உள்ளார். --------------------------------------------------------------------------------------------------- 1947 டிசம்பர் திங்களில் சண்முக ராஜேந்திர சேதுபதியிடமிருந்து வீ. பொன்னுசாமி பிள்ளை, கே.எஸ். மொகம்மது மீர்சா மரைக்காயர் ஆகிய இருவரும் கச்சத்தீவை குத்தகைக்கு எடுத்துள்ளனர். இலங்கையின் பழைய வரலாற்று அவணங்களிலோ, நூல்களிலோ எதிலும் கச்சத் தீவு பற்றிய எந்த விவரமும் இல்லை. இதுவரையில் கச்சத் தீவில் எங்களுக்கு உரிமை உண்டு என்பதற்கான ஆதாரங்களை இலங்கை அரசாங்கம் வெளியிடவும் இல்லை. --------------------------------------------------------------------------------------------------- டச்சுக்காரர்கள், போர்சுகீசியர்கள் என்று யார் தயாரித்த இலங்கை தேசப்படங்களிலும் கச்சத்தீவு இல்லை. 17 ம் நூற்றாண்டில் பர்நோப் எனும் வரலாற்று ஆய்வாளர் இலங்கைக்கு வந்தார் அவர் இலங்கை தேசப்படம் ஒன்றை உருவாக்கினார். அதிலும் கச்சத்தீவு இல்லை. --------------------------------------------------------------------------------------------------- 1857 – 61 ம் ஆண்டுகளில் இலங்கை தேசப்படங்களை வெளியிட்ட ஜே.ஆரோஷ்மிக் மற்றும் டெண்னன்ட் ஆகியோரும் இலங்கை தேசப்படத்தில் கச்சத்தீவை சேர்த்து வெளியிடவில்லை. --------------------------------------------------------------------------------------------------- 1920 ம் ஆண்டில் கச்சத் தீவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று இலங்கை அரசு கூற ஆரம்பித்தது. இந்தியா 1956ம் ஆண்டிற்குப் பின்னால் தன்னுடைய கடல் எல்லை கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல்மைல்களாக விரிவுப்படுத்தியது. அத்துடன் மீன்பிடிக்கும் உரிமையை 100 கடல் மைல்கள் தூரத்திற்கு விரிவுபடுத்தியது. கச்சத்தீவை கைப்பற்ற இந்தியா எடுக்கும் முயற்சி என்று இதனை இலங்கை அரசு கருதி போட்டியாக 1970ல் அதே போன்ற ஒரு அறிவிப்பை இலங்கை வெளியிட்டது. --------------------------------------------------------------------------------------------------- 1973ம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திராகாந்தி இலங்கை சென்றார். 1974ம் ஆண்டு இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயகே இந்தியா வந்தார். இந்திராவும், சிறிமாவோவும் நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழகத்தை கேட்காமலே கச்சத்தீவு கை மாறியது. --------------------------------------------------------------------------------------------------- 1976ம் ஆண்டு ஒப்பந்தம் (இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையே மீன்பிடி உரிமை பற்றிய கடிதப் போக்குவரத்து நடந்தது. அந்த கடிதங்களே 1976 மார்ச் மாதம் ஒப்பந்தமாக அங்கீகரிக்கப்பட்டது) கச்சத் தீவு பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லவும் கூடாது. மீன் பிடிக்கவும் கூடாது. கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழாவிற்கு மக்கள் செல்லகூடாது என்று முற்று புள்ளி வைத்தே விட்டது. --------------------------------------------------------------------------------------------------- 1974ம் ஆண்டு ஆகஸ்ட் 21லிருந்து இன்றுவரை நாம் தீர்மானம் நிறைவேற்றி கொண்டே இருக்கிறோம். சிங்களவன் நம் மீனவர்களை சுட்டுக் கொண்டே இருக்கிறான். தமிழ்நாட்டு எல்லைப் போராட்டமும்?

கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி பாக்கி கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.2.46 லட்சம் கோடி: வரிபாக்கி

புதுடில்லி: கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.2.46 கோடி வரி பாக்கி வைத்துள்ளன. அத்தொகையை வசூலிக்க வருமான வரித்துறை புதிய செயல் திட்டத்தை வகுத்துள்ளது. இத்தகவலை மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஜே.டி.சீலம் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமைத் தெரிவித்தார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது: 2013 டிசம்பர் 31-ஆம் தேதி வரை கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி பாக்கி ரூ.2,46,416 கோடியாகும், அதில் 45 நிறுவனங்கள் தலா ரூ.500 கோடிக்கும் மேல் வரி பாக்கி வைத்துள்ளன. 2013 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 3,139 சோதனைகளை மேற்கொண்ட வருமான வரித்துறை ரூ.5654 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது.2012-13 இடையிலான காலக்கட்டத்தில் 3889 சோதனைகளை மேற்கொண்டு 575.08 கோடி மதிப்பிலான சொத்துக்களையும் வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது.

அணு உலையின் இயக்கமும் அணு மின்சாரம் பெறப்படும் பொறி முறையும்

உலகெங்கும் மின்சாரம் பெறுவதற்கு ஏறக்குறைய நமது மிதி வண்டி(dynamo) டைனமோவில் பயன்படுத்தப்படும் மின் காந்தப் புலம் தொழில் நுட்பமே அடிப்படையாக உள்ளது. இங்கே பெரிய டைனமோக்களை சுற்றுவதன் மூலம் மின்சாரம் உற்பதியாகின்றது. உயர்ந்த நீர்த் தேக்கங்களில் இருந்து நீர் கீழே பாயும் விசையை பயன்படுத்தி டைனமோவைச் சுழலச் செய்து உற்பத்தி செய்வது "நீர் மின்சாரம்" எனவும், காற்றின் மூலம் பெரிய காற்றாட்டிகளை சுற்றச் செய்து டைனமோவைச் சுழலச் செய்து உற்பத்தி செய்வது"காற்றாலை மின்சாரம்" எனவும், நீரைக் கொதிக்க வைத்து, நீராவியின் சக்தியால் டைனமோவைச் சுழலச் செய்து உற்பத்தி செய்வது"அனல் மின்சாரம்" எனவும் அழைக்கப்பெறுகின்றன.
----------------------------------------------------------------------------------------------- அனல் மின்சாரம் உற்பத்தியாக்குவதற்கு நீரைக் கொதிக்க வைத்து ஆவியாக்குவதற்கு நிலக்கரி, டீசல், பெட்ரோல், எரிவாயு போன்றவற்றை எரிபொருளாக பயன்படுதுகின்றார்கள். நீராவியில் விசையால் புகையிரதங்கள், பெரிய கப்பல்கள் இயங்குவதுபோல் பெரிய டைனமோக்களை சுழலச் செய்து மின்சாரம் பெறப்படுகின்றன.இவ்வாறு நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்குவதற்கு நிலக்கரி, டீசல் போன்றவைகள் அதிகமாக தேவைப் படுவதனால் அதற்குப் பதிலாக அணுவின் உட்கருவைப் பிளப்பதால் உருவாகும் வெப்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தியாக்குவதே "அணு மின்சாரம்". ----------------------------------------------------------------------------------------------- ஒரு டன் அணுக்கரு யுரேனியம் உண்டாக்கும் வெப்பசக்தி, (2-3) மில்லியன் டன் இயல்வள எரிபொருள்கள் [நிலக்கரி, எரிவாயு அல்லது எரி ஆயில்] தரும் வெப்பசக்திக்குச் சமம். அதாவது சுண்டக்காய் அளவு யுரேனியம் [7 gram Uranium Pellet] 3.5 பீப்பாய் எரி ஆயில் [Barrels of Oil], 17,000 கியூபிக் அடி எரிவாயு [Natural Gas] அல்லது 1780 பவுண்டு நிலக்கரி தரும் வெப்பத்தை உண்டாக்குகிறது. யுரேனியம் போன்ற சில தனிமங்கள் பிரிக்கப்படும்போது அதிக அளவு வெப்பமும் ஆற்றலும் வெளிவிடப்பெறுகின்றன. அவற்றை முறைப்படுத்தி அதைத் தொடர் நிகழ்வாக மாற்றி நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழல வைத்துப் பெறப்படுவது தான் அணு மின்சாரம். ----------------------------------------------------------------------------------------------- சூரிய ஒளி (Solar) மின்சாரமும் இதே போன்றது தானா? ----------------------------------------------------------------------------------------------- இல்லை. சூரிய ஒளியின் சக்தி மூலம் வெப்ப நிலை தூண்டப்படும் சோலார் கதிர் ஈர்ப்பு தட்டுகளை (Panels) பயன் படுத்தி பெறப்படுவதே சூரிய ஒளி மின்சாரம் எனப்படும். இவை மூலம் பெறப்படும் மின்சாரம் மின்கலன்களை (Batteries) மின்னூட்டம் (Charge) செய்ய முடியும் அல்லது சேமிக்க முடியும். அந்த மின்கலன்கள் மூலம் மின்சாரம் பெறப்படுகிறது. ----------------------------------------------------------------------------------------------- அணு உலையின் தொழில் நுட்பம் என்ன? அதனால் ஏற்படும் நன்மை தீமைகள் யாவை? \----------------------------------------------------------------------------------------------- அணு உலைகளில் 2%-3% செறிவு யுரேனியம் என்ற தனிமம் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. யுரேனியம் அணு, அணுஉலையில் பிரிக்கப்படும்போது சுமார் 2000 oC வரை வெப்பம் உண்டாகின்றது. இவ் வெப்பமானது நீரின் கொதி நிலையான 100 oC ஐ விட பன் மடங்கு அதிகமாகும். இந்த அனணுவை பிரிக்கும் போது உண்டாகும் வெப்பத்தைப் பயன்படுத்தி நீரை கொதிக்கச் செய்து நீராவியாக்கப் பெறப்படுகின்றது. அந்த நீராவி மூலம் டைனமோக்கள் சுழற்றப்பட்டு மின்சாரம் உற்பத்திசெய்யப்பெறுகின்றது. இம் முறையானது பெரிய அளவில் மின் சாரத்தை உற்பதியாக்குவதற்கு மிகவும் லாபகரமானது. ஆனால்; ----------------------------------------------------------------------------------------------- அணுவை பிரிக்கும்போது அதிக வெப்பம் வெளிப்படுவதனால் அணுவைப் பிரிக்க பயபடுத்தும் அணு உலையைக் குளிர்விக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. அதற்காக கடலிலிருந்து அல்லது வற்றாத நீர் நிலைகளில் இருந்து நீர் பெறப்படுகின்றது. கடல் நீரில் உப்பு இருப்பதனால் சுத்திகரிக்கப் பெற்று உப்பு அகற்றி, நன்னீராக மாற்றிய பின் அணு உலையை குளிராக்க பன்படுத்தப்படுத்துகின்றார்கள். யுரேனியம் அணுவைப் அணு உலையில் பிரிக்கும்போது வெப்பத்தை வெளியேறி பிரிவுறும் போது அது, புளுட்டோனியமாக மாறுகிறது. மேலும் அங்கு கடுமையான கதிரியக்கமும் (Radiation) ஏற்படுகிறது. இந்த கதிரியக்கம் பூமியில் வாழும் உயிரினங்களுக்கு பெரும் தீங்க்கினை உண்டாக்கக் கூடியன. மிகமிக அபாயகரமானது. ----------------------------------------------------------------------------------------------- இந்தக் கதிர்வீச்சினால் தைராய்டு பாதிப்பு, காசநோய், நீரிழிவு நோய், மலட்டுத் தன்மை, மூளை வளாச்சிக் குறைவு, புண்கள் என பல்வேறு நோய்கள் மனிதருக்கு ஏற்படுவதுடன் மற்றைய உயிரினங்களையும் அழிக்கும் திறன் கொண்டது. இவற்றில் இருந்து உயிரினங்களை பாதுகாப்பதற்காக தகுந்த பாதுகாப்பு தேவைப்படுகின்றன. அதனால் அணு உலையைச் சுற்றி கொன்கிரீட் சுவர்களும், கதிர் வீச்சை தடுக்ககூடிய பாதுகாப்பு வேலியும், கருவிகளும் அமைக்கப்பெறுகின்றன. ----------------------------------------------------------------------------------------------- இரண்டாவது - இந்த பிரிக்கப்பெற்ற யுரேனியத்தின் கழிவான புளுட்டோனியம் என்பது அணுகுண்டு தயாரிப்பதற்கு பயன்படும் மூலப்பொருளாகும். அணுகுண்டு ஏற்படுத்திய நாசங்களை நாம் ஏற்கனவே ஜப்பான் நாட்டின் கிரோசிமா, நாகசாகி நகரங்களில் பார்த்துவிட்டோம். இந்த அணுக்கழிவுகளை என்ன செய்வது, எப்படிப் பாதுகாப்பது என்பதை உலக விஞ்ஞானிகள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. இந்தக் கழிவுகளின் கதிரியக்கம் கிட்டத்தட்ட 45ஆயிரம் ஆண்டுகளுக்கு வீரியத்துடன் இருக்கும் என அராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ----------------------------------------------------------------------------------------------- மூன்றாவது - இங்க்கு ஏற்படும் விபத்துக்களை மற்றய தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளாக இதைக் கருத முடியாது. அணு உலையில் ஏற்படும் சிறிய விபத்தே மிகப் பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தும். உயிரிழப்பு லட்சக் கணக்கில் இருப்பதுடன் அதன் பாதிப்பு பல தலைமுறைகளுக்கும் தொடரக் கூடியன. நாம் கற்பனை செய்வதை விட இழப்புக்கள் மிகமிக அதிகமானதாகவே இருக்கும். நான்காவது - அணு உலை அமையும் இடம் மிக பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அதனால் அதைச் சுற்றி வாழும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, தங்கள் வாழ்வாதாரங்களை இழக்க நேரிடும். கடலிலிருந்து ஒரு நாளைக்கு 32 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் எடுக்கப்பட்டு, அணு உலையை குளிர்வித்தவுடன் அந்த வெந்நீர் கடலில் மீண்டும் சேர்க்கப்படுகின்றன. இதனால் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடல்வாழ் உயிரினங்கள் அழிக்கப்பட்டு, உயிர்ப் பெருக்கம் பாதிப்படைவதுடன், அதை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிறது. ----------------------------------------------------------------------------------------------- ஐந்தாவது - ஏறக்குறைய ஒவ்வொரு அணு உலையும் ஒரு அணு குண்டுக்குச் சமமானது என கூறப்படுகின்றது. மடியில் அணு குண்டைக் கட்டிக்கொண்டு எப்படி நிம்மதியாக வாழ முடியும். அணு உலையில் தவறுதலாக வெடிப்பு ஏற்பட்டால் அல்லது எதிரிகளால் தாக்கப்பட்டால் அது மிகப் பெரிய பேரழிவுக்கு வழிவகுக்கும். ----------------------------------------------------------------------------------------------- சிலர் அணு உலைகள் பேராபத்து என்கிறார்கள். ஆனால் விஞ்ஞானிகளோ பாதுகாப்பானது என்கிறார்களே ----------------------------------------------------------------------------------------------- இவற்றில் எது உண்மை? அணு உலை பாதுகாப்பாக இருக்குமானால் ஒரு வேளை விபத்தை வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால் அதிலிருந்து தினசரி வரும் கதிரியக்கத்தால் கண்டிப்பாக பாதிப்பு வரும் என விபரமறிந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனால் தான் அணு உலைகள் மக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளில் அமைக்கப்படுகின்றன. ----------------------------------------------------------------------------------------------- பாதுகாப்பான அணு உலை எப்படி அமைய வேண்டும்? முதலில் அணு உலை அமைந்துள்ள இடம் புவியியல் ரீதியாக பாதுகாப்பானதா என்பது உறுதி செய்யப்பட வேண்டும். பொதுவாக அணு உலை அமைந்திருக்கும் தரை கெட்டியான பாறைகளால் உருவானதாக இருக்க வேண்டும். அதாவது பூமியின் மேலோடு கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் தடிமனாக உள்ள இடங்களில்தான் அணு உலை அமைக்கப்பட வேண்டும். அடுத்து இந்த அணு உலைத் தொழில்நுட்பம் வெற்றிகரமானதா என்பதை முன் அனுபவங்கள் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். மூன்றாவதாக இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு வேளை விபத்து ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் உறுதி செய்யப்பட வேண்டும். ----------------------------------------------------------------------------------------------- பூமியின் அடியிலுள்ள மிகச் சூடான மாக்மா என்ற பாறைக் குழம்பு பூமியின் மேலோடு மெலிதாக உள்ள இடங்களில் வெடிப்பை ஏற்படு த்தி எரிமலையாக வெளிக்கிளம்பும். அது மேற்பரப்பையும், அதன் மீதுள்ள கட்டுமானங்களையும் குறிப்பாக அணு உலையையும் நிச்சயம் பாதிக்க வாய்ப்புள்ளது. விமான விபத்துக்களையோ, இரயில் விபத்துக்களையோ, அணு உலை விபத்துடன் ஒப்பிடக் கூடாது. விமானம், இரயில் விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகள் வெறும் நூற்றுக்கணக்கில்தான் இருக்கும். விபத்தின் பாதிப்புகள் தொடராது. ஆனால் அணு உலை விபத்தில் உயிரிழப்பு லட்சக்கணக்கில் ஏற்படும். பல லட்சம் பேர் கதிரியக்கத்தால் நோய்வாய்ப்பட நேரிடும். மேலும் அந்தக் கதிரியக்கப் பாதிப்புகள் பல தலைமுறைகளுக்குத் தொடரும். கண்ணிழந்து, உறுப்புகளை இழந்து குழந்தைகள் பிறக்க நேரிடும். மொத்தத்தில் அணு விபத்து என்பது கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும்.விபத்திற்குப்பின் 77கி.மீ. வரை 20 ஆண்டுகளுக்கும், 115கி.மீ. வரை 5 ஆண்டுகளுக்கும், 140கி.மீ. வரை ஓராண்டு காலத்திற்கும் அங்கு வசித்த மக்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிப் போக முடியாது. 1986ம் ஆண்டில் செர்நோபில் என்ற இடத்தில் ஒரு அணு உலை விபத்து ஏற்பட்டது. ----------------------------------------------------------------------------------------------- இவ்வளவுக்கும் அப்போது அந்த அணுஉலை இயங்கிக் கொண்டிருக்கவில்லை. மூடப்பட்டிருந்தது. ஆனால் அந்த விபத்தின் காரணமாக 2004 வரை கிட்டத்தட்ட 9,85,000 போ புற்றுநோய் கண்டு உயிரிழந்ததாக இரசிய அரசே உறுதி செய்துள்ளது. மேலும் செர்நோபில் உலையிலிருந்து 2700 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இங்கிலாந்தில் அந்த அணுக்கதிர்வீச்சு உணரப்பட்டு 2,26,500 கால்நடைகளை உடனடியாகக் கொன்று புதைக்க இங்கிலாந்து அரசு உத்தரவிட்டது. ----------------------------------------------------------------------------------------------- மீன்கள், மிருகங்கள், மரங்கள் தண்ணீர் என ஒரு நொடிப்பொழுதில் அனைத்தும் நஞ்சாக மாறிப் போயின. சொனோபிலில் நடந்ததை ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடந்த பேரழிவாகக் கொள்ள முடியாது. இது மொத்த உலகத்தையே பாதித்த ஒரு விசயம் என்பதை றசிய அதிபர் கோர்ப்பசேவ் நேர்மையாக ஒத்துக்கொண்டார். இதற்கு முன் 1979ல் அமெரிக்காவில் மூன்றுமைல் தீவு என்னுமிடத்தில் அணுஉலை ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த விபத்திலும் கணிசமான எண்ணிக்கையில் மக்கள் உயிரிழந்ததோடு அந்தப்பகுதி மீண்டும் பயன்படுத்தமுடியாத அளவிற்கு நஞ்சாக மாறியது. ----------------------------------------------------------------------------------------------- சமீபத்தில் ஜப்பானில் புகுசிமாவில் நடந்த அணுஉலை விபத்தில் ஏற்பட்ட சேதங்களை தொலைக்காட்சியில் நாம் நேரடியாகவே பார்த்தோம். இவ்வளவுக்கும் அது அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தின் நேரடி மேற்பார்வையில் இருந்தது. இந்த புகுசிமா அணுஉலையை மூடுவதற்கு கிட்டத்தட்ட 75ஆயிரம் கோடி செலவாகும் என்றும் 45 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மூன்றுமைல் தீவு அணு உலை விபத்துக்குப் பின்னர் அமெரிக்காவும், 1986ல் செர்நோபில் விபத்துக்குப்பின் இரசியாவும் இது நாள் வரை தன் நாட்டில் ஒரு அணுஉலை கூட புதிதாகத் திறக்கவில்லை. எல்லா நாடுகளுக்கும் யுரேனியம் விற்பதில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவில் ஒரு அணுஉலை கூட கட்டப்படவில்லை. ஜப்பானில் புகுசிமா விபத்திற்குப் பின் 28 அணுஉலைகள் உடனடியாக மூடப்பட்டு விட்டன. கட்டப்பட்டுக்கொண்டிருந்த 10 அணு உலைகளின் வேலைகள் நிறுத்தப்பட்டு விட்டன. ஜேர்மனி 2022ம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட உள்ளதாக அறித்துள்ளது. ஆஸ்திரியா, அயர்லாந்து, கிரேக்கம் போன்ற நாடுகள் அணு உலையின் ஆபத்தை உணர்ந்து அதை மூடும் முடிவில் உள்ளன. ----------------------------------------------------------------------------------------------- இந்தியாவில் கல்பாக்கம் அணுஉலை ஒன்றும் பிரமாதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கவில்லை. அதன் திறன் வெறும் 170 மெகாவாட்தான். 1987 மே 4ம் தேதி அதன் உலைத்தண்டு சிதைந்து 2 ஆண்டுகாலம் மூடப்பட்டுக்கிடந்தது. 300 மில்லியன் டாலர் செலவு செய்து அது சீரமைக்கப்பட்டது. 2002ம் ஆண்டு அக்டோபர் 22ல் சோடியம் கதிர்வீச்சு ஏற்பட்டு அதைச் சரிசெய்ய 30 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டது. 1999 மார்ச் 26ல் 40 டன் எடையுள்ள கன நீர் கொட்டி அதைச் சுத்தம் செய்த தொழிலாளி உயிரிழந்தார். 2000 சனவரி 24 அன்று பெரும் கதிரியக்கக் கசிவு ஏற்பட்டு அதை இந்திய விஞ்ஞானிகளால் சரிசெய்ய இயலாமல் வெளிநாட்டிலிருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். கல்பாக்கம் அணு உலைக்கும் ஆபத்துக்கள் எந்த நேரமும் வரலாம். அதன் தென்கிழக்கே 104கி.மீல் 03051 என்ற எண் கொண்ட எரிமலை ஒன்று கடலுக்கடியில் குமுறிக்கொண்டிருக்கிறது. அது வெடிக்கும்போது பெரும் சுனாமி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ----------------------------------------------------------------------------------------------- இவை ஒருபுறம் இருக்க கல்பாக்கம் உலையின் கழிவு நீர் கடலில் கொட்டப்படுவதால் கடல் வெப்பம் 80டிகிரி வரை அதிகரித்து மீன் வளம் குறைந்தது. மீனவர்கள் இடம் பெயர்ந்தனர். அங்கு வசிக்கும் மக்கள் நோயால் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அப்பகுதி மருத்துவர்கள் ஆதாரங்களுடன் விளக்குகிறார்கள். அதே போல் தாராப்பூர் அணு உலை கட்டப்படும் போது அங்கு இருந்த மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை 700. இப்போதோ வெறும் 20 மட்டுமே. அப்பகுதியில் பிடிபடும் மீன்களில் கதிரியக்கம் இருப்பதை மும்பை உயர்நீதிமன்றமே உறுதி செய்துள்ளது. 1989 செப்டம்பர் 10-ல் அங்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 700 மடங்கு கதிர்வீச்சு ஏற்பட்டது. அதை சரிசெய்ய ஆன செலவு 78 மில்லியன் டாலர் . ----------------------------------------------------------------------------------------------- 1995 பிப்ரவரி 3ம் தேதி ராஜஸ்தான் கோட்டா அணு உலையில் ஹீலியம் கன நீர் கசிவு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் உலை மூடப்பட்டது. சரி செய்ய ஆன செலவு 280 மில்லியன் டாலர் . எனவே அணு உலைகளால் பாதிப்புகள் இல்லை என்பது அப்பட்டமான பொய். ----------------------------------------------------------------------------------------------- அணுமின்சாரம்தான் மலிவானது. சுத்தமானது என்று சொல்கிறார்களே? மின்சாரம் தயாரிப்பில் அதற்கான மொத்த செலவுகளையும் கணக்கிட்டால் லாபகரமானது என்று கூற முடியாது. அணுஉலை கட்டுவதற்கான செலவு, அதை இயக்குவதற்கான செலவு, பிறகு அதை மூடுவதற்கான செலவு என எல்லாவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். அத்துடன் இவற்றின் ஆயுள் வெறும் 30 ஆண்டுகள் மட்டுமே. பின் இந்த உலைகளை மூடுவதற்கு பல ஆயிரம் கோடி செலவாகும். அணு மின்சாரம் சுத்தமானது என்று சொல்வது கேலிக்குரியது. கடல்நீரை ஒரு நாளைக்கு 32லட்சம் லிட்டர் வரை உறிஞ்சி அதை உப்பு அகற்றி உலையைக் குளிர்விக்கப் பயன்படுத்துகிறார்கள். அந்த உப்புக் கழிவுகளை மீண்டும் கடலில்தான் கொட்டுவார்கள். குளிர்வித்த நீர் வெந்நீராக திருப்பி கடலில்தான் கொட்டப்படுகிறது. கடலில் கொட்டப்படும் வெந்நீரால் அப்பகுதி மீன்வளம் பாதிக்கப்படும். சுமார் 4 டிகிரி வெப்பம் உயாந்தாலே நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்து மீன்கள் இறக்க நேரிடும். அணு உலையின் கதிரியக்கச் செயல்பாடுகளால் சுற்றுப்புறமும் சீர்கெடும். மக்கள் நோய்க்கு உள்ளாவார்கள். இவை எல்லாவற்றையும் விட மிக ஆபத்தானது அணுக்கழிவுகள். ----------------------------------------------------------------------------------------------- அணுக்கழிவுகளை ஆபத்தில்லாததாக மாற்றுவதற்கு எந்த தொழில்நுட்பமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே உண்மை. அவற்றை பாதுகாப்பான பெட்டிகளில் இட்டு பூமிக்குள் புதைப்பதுதான் இதுவரை நடைமுறையாக உள்ளது.