Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, February 3, 2014

ஸ்டாப் செலக்சன் கமிஷனின் பட்டதாரிகளுக்கான பொது எழுத்துத் தேர்வு

நமது நாட்டின் மத்திய அரசு தொடர்புடைய காலி இடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலமாக நிரப்பி வருவது நாம் அனைவரும் அறிந்ததுதான். இந்த அமைப்பின் சார்பாக 2014ஆம் ஆண்டிற்கான கம்பைண்டு கிராஜூவேட் லெவல் தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள பொது எழுத்துத் தேர்வின் மூலம் சென்ட்ரல் செக்ரடேரியட் சர்வீஸ், சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன், இண்டலிஜென்ஸ் பீரோ, மினிஸ்ட்ரி ஆப் ரெயில்வே, வெளியுறவுத்துறை அமைச்சகம், சி.பி.டி.டி., சி.பி.இ.சி., டைரக்டரேட் ஆப் என்போர்ஸ்மெண்ட் அண்டு ரெவின்யூ, அஞ்சல் துறை, சென்ட்ரல் பீரோ ஆப் நர்காடிக்ஸ் உள்ளிட்ட மத்திய அரசுத் துறை பலவற்றில் உள்ள அப்பர் டிவிஷன் கிளார்க், இன்ஸ்பெக்டர், ஆடிட்டர் மற்றும் அஸிஸ்டெண்ட் உள்ளிட்ட பல்வேறு காலியிடங்களுக்காக இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. வயது : மேற்கண்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்ச வயது 18ஆகவும், அதிகபட்ச வயது விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து 26 அல்லது 27 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதி : விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து தகுதி மாறுபடுகிறது. இருந்த போதும் குறைந்த பட்ச தகுதி பட்டப் படிப்பு ஆகும். பொருளாதாரம், புள்ளியியல், கணிதம் போன்றவற்றைப் படித்தவர்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. முழுமையான விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும். விண்ணப்பிக்கும் முறை : ரூ.100/-ஐ சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் பீஸ் ஸ்டாம்ப் வாயிலாக செலுத்த வேண்டும். ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் உரிய மண்டல அலுவலக்த்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டியிருக்கும். தமிழ் நாட்டிலிருந்து விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். Regional Director (SR), Staff Selection Commission, EVK Sampath Building, 2nd Floor, College Road, Chennai, Tamil Nadu-600006. விண்ணப்பிக்க இறுதி நாள்: 12.02.2014 இணையதள முகவரி : http://ssc.nic.in/notice/examnotice/CGLE-2014%20Notice.pdf

ராணுவத்தில் டெக்னிகல் பிரிவில் பணியிடங்கள்

இந்திய ராணுவத்தில் டெக்னிகல் பிரிவில் குறுகிய கால நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: பல்வேறு பிரிவுகளைக் கொண்ட இந்த இடங்களில் ஆண்களுக்கு மொத்தம் 100ம், பெண்களுக்கு மொத்தம் 19ம் உள்ளன. சிவில், ஆர்க்கிடெக்சர், மெக்கானிகல், இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல், ஏரோனாடிக்ஸ், ஏவியேஷன், மெட்டலர்ஜி, எக்ஸ்ப்ளோசிவ்ஸ், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்யூனிகேஷன், புட் டெக்னாலஜி, ஐ.டி., என்ற இன்ஜினியரிங் பிரிவுகளில் இந்த இடங்கள் உள்ளன. தற்போது இந்தப் படிப்புகளில் இறுதியாண்டை மேற்கொள்பவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். வயது: 20 முதல் 27 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். அதாவது 02.10.1987 முதல் 01.10.1994க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: தேர்ந்தெடுக்கும் பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். இதர தகுதி: ஆண்கள் உயரம் குறைந்த பட்ச உயரம் 157.5 செ.மீ.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் உயரம் குறைந்தபட்சம் 152 செ.மீ.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். தேர்ச்சி முறை: எஸ்.எஸ்.பி., நேர்காணல் மற்றும் குரூப் டெஸ்ட் விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இறுதி நாள்: 03.03.2014 இணையதள முகவரி: http://joinindianarmy.nic.in/

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை

பெங்களூருவில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனம் அங்குள்ள டெக்னிகல் பிரிவு காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: பெங்களூரு மெட்ரோ ரயிலில் பிட்டர் பிரிவில் 12, மெக்கானிக் - ரெப்ரிஜிரேஷன் அண்டு ஏ.சி., பிரிவில் 5, எலக்ட்ரீசியன் பிரிவில் 8, எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் பிரிவில் 8 டிரெய்னி இடங்களை நிரப்ப உள்ளது. வயது வரம்பு: பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேற்கண்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.10.2014 அடிப்படையில் 20 முதல் 21 வயது உடையவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் முழுமையாக நிரப்பப்பட்ட தங்கள் விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 15.02.2014க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். Principal BMR Training institute , S.V.Road Baiyappanhalli Depot, Bangalore 560038 இணையதள முகவரி: http://bmrc.co.in/pdf/careers/TRADE%20APPRENTICES.pdf

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பதவி

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு மெக்கானிகல் பிரிவில் இன்ஜினியர்களைப் பணி நியமனம் செய்வதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது: 01.01.2014 அடிப்படையில் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை முதல் வகுப்பில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலி கம்யூனிகேஷன், மெக்கானிகல் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். ஏற்கெனவே பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ்ஷிப் முடித்தவர்களும், இத்துறையில் 6 மாத பணியனுபவம் கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும். விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இறுதி நாள்: 05.02.2014 இணையதள முகவரி: http://www.bel-india.com/sites/default/files/Advertisement-ContractEngineer-Mil.Com.SBU.pdf