Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, March 6, 2014

இலங்கைக்கு தொடர்ந்து ராணுவப் பயிற்சி: இந்தியா உறுதி

கடலோர பாதுகாப்பு தொடர்பாக இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய மூன்று நாடுகளின் பாதுகாப்பு செயலாளர்கள் மட்டத்திலான கூட்டம் டெல்லியில் நடந்து வருகிறது. ------------------------------------------------------------------------------- சுனாமி எச்சரிக்கை குறித்தும், கடல் வழி போக்குவரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டாலும் நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சிசங்கர் மேனனை கோத்தபய ராஜபக்சே ரகசியமாக சந்தித்தபோது அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு தொடர்ந்து பயிற்சியளிக்கப்படும் என அவரிடம் உறுதியளித்தார். ----------------------------------------------------------------------------------- தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை ராணுவம் அடித்து துன்புறுத்தி, சிறை பிடித்து செல்லும் நிலையில் அந்நாட்டுக்கு ராணுவ பயிற்சி அளிப்பது தொடரும் என மேனன் கூறியது தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ----------------------------------------------------------------------------------------- தமிழகத்தை சேர்ந்தவர்கள் இந்திய மக்களாக கருதப்படுகிறார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மீனவ அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் - டெஸ்மன் டுடு

இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென மனித உரிமை செயற்பாட்டாளரும் தென் ஆபிரிக்காவின் பேராயருமான டெஸ்மன் டுடு தெரிவித்துள்ளார். பிரஜைகளின் உரிமைகள் முடக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக சிறுபான்மை பிரஜைகளின் உரிமைகள் முடக்கப்பட்டு வருவதாக பேராயர் டுடு கடிதம் ஊடாக குற்றம் சுமத்தியுள்ளார். --------------------------------------------------------------------------------- ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாத அமர்வுகளைப் பயன்படுத்தி உலக நாடுகள் இலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்த வேண்டுமென அவர் கோரியுள்ளார். சர்வதேச சுயாதீன விசாரணைகளை வலியுறுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
2009ம ஆண்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் நிரந்தர சமாதானம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் தென்படும் தூரத்தில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை மக்கள், அரசியல்வாதிகள் மட்டுமன்றி சாதாரண மக்களும் பீதியுடன் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். --------------------------------------------------------------------------------- யுத்;தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களுக்கு கால அவகாசம் தேவைப்படும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என்ற போதிலும் நல்லிணக்கத்தை நோக்கிய பயணம் சரியான திசையில் நகர்கின்றதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.மக்களின் உரிமைகளுக்கு உரிய முறையில் மதிப்பு அளிக்கப்படாத காரணத்தினால் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத கலாச்சாரம் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். --------------------------------------------------------------------------------- குற்றச்செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் இலங்கை உரிய முனைப்பு காட்டவில்லை எனவும் இதனால் சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகின்றது எனவும் பேராயர் டுடு தெரிவித்துள்ளார்.

திருக்கேதீஸ்வர மனித புதைகுழி அகழ்வுப்பணிகள் நிறைவுக்கு வந்துள்ளது. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இது வரை மேற்கொள்ளப்பட்டு வந்த மனிதப் புதைகுழி அகழும் பணிகள் இன்று புதன் கிழமையுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ------------------------------------------------------------------------------- மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி (20-12-2013) நீர் இணைப்பிற்காக பள்ளம் தோண்டிய போது மனித எச்சங்கள் உள்ளமை தெரிய வந்துள்ளது. ------------------------------------------------------------------------------- இந்த நிலையில் மன்னார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் (23-12-2013) கடந்த 3 ஆம் திகதி திங்கட்கிழமை வரை(3-3-2014) 32 தடவைகள் குறித்த மனித புதைகுழி மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்டது. ------------------------------------------------------------------------------- இதன் போது சுமார் 80 மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------- கண்டு பிடிக்கப்பட்ட உலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக குறித்த எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் 80 பெட்டிகளில் தனித்தனியாக பொதி செய்யப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------- இந்த நிலையில் இன்று புதன் கிழமை 33 ஆவது தடவையாக மனித புதைகுழி தோண்டும் முகமாக திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி உள்ள இடத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. ------------------------------------------------------------------------------- மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் இடம் பெற்ற விசேட கலந்துரையாடலின் போது குறித்த அகழ்வுப்பணியில் ஈடுபட்டு வந்த அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ண,கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகர் விக்கிரம சேகர ஆகியோருக்கு இடையில் நீண்ட நேரம் கருத்து பகிர்வு இடம் பெற்றது. ------------------------------------------------------------------------------- இந்த கருத்து பகிர்வின் இருதியாக குறித்த மனித புதை குழியின் அகழ்வுப்பணிகள் இன்று புதன்கிழமையுடன் (5) முடிவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். ------------------------------------------------------------------------------- இந்த நிலையில் பெட்டிகளில் அடைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 80 மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்களை ஆய்வுக்கு அனுப்பும் வகையில் அவற்றை எங்கு கொண்டு செல்வது தொடர்பில் எதிர் வரும் மே மாதம் 9 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் படி மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.