Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, November 8, 2013

இராஜதந்திர அழுத்தங்களுக்குள் அகப்படாத நில அபகரிப்பு விவகாரம்

கடந்த திங்களன்று, தென்னிலங்கையிலுள்ள பெலியத்த என்கிற நகரில் விசேட நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றது. 272 மில்லியன் டொலர் சீன நிதிஉதவியில், பாரிய தொடரூந்து பாதை நிர்மாணிக்கும் திட்டம் ,சபாநாயகர் சமல் ராஜபக்சவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் உட்கட்டுமான அபிவிருத்திப்பணிக்கு பெருத்த மனதோடு உதவிவரும் சீனாவிற்கு, அங்கு புகழாரம் சூட்டப்பட்டது. ஏற்கனவே, 292 மில்லியன் டொலர் சீனக்கடனில் நிர்மாணிக்கப்பட்ட நெடுஞ்சாலையை அண்மையில்தான் சனாதிபதி திறந்து வைத்தார். பொதுநலவாய மாநாட்டிற்கு வருகை தரும் பிரமுகர்கள் இந்தப் பாதையை பயன்படுத்துவார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் பெருமை கொள்கிறது. ஆனால், பாதையை நிர்மாணிக்க சீனாவிடம் வாங்கிய கடனிற்கு மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் வட்டி செலுத்தப்படும் என்பதனை மறந்து விடக்கூடாது. இதில் பெரும் சோகம் என்னவென்றால், அடுத்த ஆண்டிற்கான உத்தேச வரவு- செலவுத்திட்டத்தில் வடமாகாணத்திற்கு வெறும் 17 பில்லியன் ரூபாவும், கிழக்கு மாகாணசபைக்கு 15 பில்லியன் ரூபாவுமே அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைவிட , ஏறத்தாள 10 மடங்கு நிதி பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 2009 இல் $1.2 பில்லியனையும், 2010 இல் $ 821 மில்லியனையும், 2011இல் $ 784.7 மில்லியனையும் கடனாக இலங்கைக்கு வழங்கியிருக்கும் மக்கள் சீனக் குடியரசிற்கு , வட- கிழக்கு மாகாண சபைகளுக்கு இவ்வளவு குறைவான தொகையை அரசு ஏன் ஒதுக்கியுள்ளது என்பது குறித்தெல்லாம் கவலை கிடையாது. ஆனால் யுத்தம் நடைபெற்ற காலத்தில் மட்டும், வட-கிழக்கில் வீசப்படும் எறிகணைகளை யார் விநியோகிப்பது என்பதில், ஏனைய வல்லரசுகளோடு போட்டி போட்டது. யுத்தத்திற்கு மட்டுமல்ல, நாட்டின் உட்கட்டுமான அபிவிருத்திக்கும் சீனாவின் நிதி உபயம் மிகப் பெரியது. இருப்பினும் பாரிய $1.3 பில்லியன் சீனக் கடனில் கட்டி முடிக்கப்பட்ட நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையம், கடந்த செவ்வாயன்று மீண்டும் தற்காலிகமாக தனது இயக்கத்தை நிறுத்தி விட்டதாக அமைச்சின் உத்தியோகபூர்வ செய்திகள் கூறின. இதனைக் குறிப்பிடுவதன் நோக்கம் என்னவென்றால், அனேகமாக அடுத்த கட்டப்பணி ஆரம்பிக்க முன்பாக, சீன நிறுவனமொன்று இதன் முழுமையான நிர்வாகத்தினை கையேற்கும் சம்பவம் நிகழ வாய்ப்புண்டு என்பதைச் சுட்டிக்காட்டவே. சீன மூலோபாய நகர்வின் அடுத்த கட்டமே அதுதான். தான் பெரியளவில் முதலீடு செய்த நிறுவனங்களை, அந்த நாடுகள் கையாள முடியாமல் தவிக்கும் போது, அதனை கையகப்படுத்துவதுதான் சீனாவின் மறைமுக நிகழ்ச்சி நிரலாகுமென எண்ணுகிறேன். ஏனெனில் இது ஆரம்பித்த நாளில் இருந்து இற்றைவரை, பழுது பார்க்கவென்று மூடப்பட்ட நாட்கள்தான் அதிகம். இலங்கை மின்சாரசபையின் நட்டக்கணக்கில், (அமெரிக்காவுக்குத் தெரியாமல் !)இறக்குமதியாகும் ஈரான் எண்ணெய்க்கு அடுத்தபடியாக இருப்பது, இந்த ‘லக்விஜய’ வால் வரும் நட்டந்தான். இதனையும் தாண்டி, 2015 இல் தலைக்குரிய வருமானத்தை $4000 ஆக உயர்த்த வேண்டுமாயின் இன்னும் பல படிகளை கடக்க வேண்டும் இலங்கை அரசு. அதேவேளை, வரவு- செலவுத்திட்டத்தின் 47 சதவீதத்தை மூன்று சகோதரர்களின் அமைச்சுக்களும் பங்கு போட்டுக்கொண்டால் நாடு எப்படி முன்னேறும் என்று ஐக்கிய தேசியக் கட்சியினர் விமர்சிப்பது மக்களின் செவிகளில் விழுகிறது.

No comments:

Post a Comment