Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, October 31, 2013

தமிழகத்தில் ஜந்து முனைகளில் இருந்து மாணவர்கள் சுடர் பணயம்!

தமிழீழ விடுதலைக்கான மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழகத்தில் ஜந்து முனைகளில் இருந்து மாணவர்களின் சுடர்பயணம் எதிர்வரும் நான்காம் நாள்தொடங்கி தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தினை சென்றடையவுள்ளது.இந்த மாணவர் சுடர்பயணத்தின் நோக்கம்தொடர்பில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் அமைப்பினை சார்ந்த கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.இனப்படுகொலை செய்த சிறீலங்காவில் காமன்வெல்த் மாநாடு நடப்படு எமது நெஞ்சம் பொறுக்கவில்லை இந்தியா காமன்வெல் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது இதனை கருத்தில் கொண்டு மாவர்களாகிய நாங்கள் தொடர் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம் . எதிர்வரும் நான்காம் நாள் சென்னை ,விருதுநகர் ,கூடலுர்,தர்மபுரி,கன்னாயாகுமாரி ஆகிய இடங்களில் இருந்து தொடங்கும் சுடர் பயணம் எட்டாம் நாள் தஞ்சாவூர்முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சென்றடையவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மங்கள்யான் செயற்கைக்கோள்:இன்று ஒத்திகை

நவம்பர் 5 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக் கோள் அனுப்பப்படவுள்ள நிலையில் அதற்கான ஒத்திகை, கட்டுப்பாட்டு அறையில் இன்று நடைபெறுகிறது.பூமியைத் தவிர வேறு ஏதேனும் கோள்களில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக செவ்வாய்க் கோளுக்கு இந்தியா செயற்கைக்கோளை அனுப்பவுள்ளது. "செவ்வாய் கிரக சுற்றுக்கலன் திட்டம்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தி்ன் கீழ் மங்கள்யான் -1 என்ற செயற்கைக் கோள் நவம்பர் 5 ஆம் தேதி பிற்பகல் 2.36 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பப்படவுள்ளது. இதற்கான 56 மணி 30 நிமிடத்திற்கான கவுண்டவுன் 3 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் ராக்கெட் ஏவுதள கட்டுப்பாட்டு அறையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கான ஒத்திகை இன்று நடைபெறுகிறது. இதில் ராக்கெட்டை ஏவுவதற்கு முன்பு ராக்கெட்டில் எரிபொருட்களை நிரப்புதல், பருவ நிலையை கண்காணித்தல், ராக்கெட் ஏவப்பட்டவுடன் அது செல்லும் பாதை, வேகம் உள்ளிட்டவற்றை உன்னிப்பாக விஞ்ஞானிகள் கவனிப்பார்கள், அப்போது கட்டுப்பாட்டு அறையில் உள்ள விஞ்ஞானிகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஒத்திகை இன்று காலை 10 மணி முதல் மாலை வரை நடைபெறுகிறது.

டீசல் விலையை உயர்த்த பரிந்துரை

டீசல் விலையை உடனடியாக 5 ரூபாய் உயர்த்த மத்திய அரசுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்கள் விலை நிர்ணயம் குறித்த பரிந்துரை அறிக்கையை மத்திய அரசிடம் கிரித் பாரிக் தலைமையிலான கமிட்டி இன்று சமர்ப்பித்தது. இதில் மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 250 ரூபாயும் உயர்த்த வேண்டும் என இந்தக் கமிட்டி அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது. மானிய விலையில் தரும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 6 ஆக குறைக்கவும் இந்த கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இது தவிர டீசல் லிட்டருக்கு 6 ரூபாய் மானியமாக அரசு நிர்ணயிக்க வேண்டும் என்றும் அந்தக் கமிட்டி கூறியுள்ளது. பெட்ரோலை போல, டீசல் விலை நிர்ணய முடிவையும் எண்ணெய் நிறுவனங்களிடமே அரசு வழங்க வேண்டும் என்றும் இந்தக் கமிட்டி கூறியுள்ளது.

முசாஃபர்நகரில் மீண்டும் கலவரம்:4பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் மீண்டும் வகுப்பு கலவரம் மூண்டுள்ளது. இதில் 4 பேர் பலியாகியுள்ளனர். முசாஃபர் நகர் மாவட்டம் முகமத்புரைசிங், ஹூசைன்பூர் கிராமங்களில் வசிக்கும் இரு சமூகத்தினருக்கு இடையே நேற்றிரவு இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது. இதில், அப்ரோஸ், மெகர்பான், அஜ்மல் ஆகிய மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். இதுதொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகமத்புரைசிங் கிராமத்தில் சிலர் புகுந்து ஹூசைன்பூர் கிராமத்தினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பரப்பிய வதந்தியால் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கடந்த மாதம் முசாஃபர் நகரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வகுப்பு கலவரத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிருக்கு பயந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்தனர்.

சவுத் இந்தியன் வங்கியில் கிளார்க் பணி

கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சவுத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 28 பணி: ப்ரொபேஷனரி கிளார்க் மாநிலங்கள் வாரியான காலியிடங்கள்: மேற்கு வங்காளம் -15, ஒரிசா -04, சத்திஸ்கர் -03, திரிபுரா -02, நாகலாந்து -01 கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 26-க்குள் இருத்தல் வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.11.2013 மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.southindianbank.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

திருச்சி என்ஐடி-யில் பொறியாளர் பணி

திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழிற்நுட்ப கல்லூரியில் (NIT) காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Engineer (Civil, Electrical) காலியிடங்கள்: 04 சம்பளம்: ரூ.35,000 - 45,000 வயதுவரம்பு: 55 முதல் 65-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் அல்லது டிப்பளமோ முடித்து 15 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.(பணி தற்காலிகமானது) விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்கள் முழு விவரங்கள் ஏ4 வெள்ளைத்தாளில் தயார் செய்து தெளிவாக பூர்த்தி செய்து சுயமாக அட்டெஸ்ட் செய்யப்பட்ட சான்றுகளின் நகல்களுடன் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி: The Dean (Planning and Development), National Institute of Technology, Tiruchirappalli - 620015. Tamil Nadu. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.11.2013

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா-வில் Retired Technical Officer பணி

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Retired Technical Officer பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Retired Technical Officer மொத்த காலியிடங்கள்: 30 கல்வித்தகுதி: Mechanical/ Production/ Electrical/ Electronics/ Chemical/ Pharma/ Textile Technology/ Metallurgy போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 02.10.1948 தேதிப்படி 65-க்குள் இருத்தல் வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் dgm.crpd@sbi.co.in என்ற e-mail மூலம் விண்ணப்பிக்க வேண்டும். e-mail மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.11.2013 விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் நகல் சென்று சேர கடைசி தேதி: 23.11.2013 பிரிண்ட் அவுட் நகல் அனுப்புவதற்கான அஞ்சல் முகவரி: The General Manager State Bank of India Central Recruitment & Promotion Department Atlanta Building, 3rd Floor, Plot no. 209, BBR, Block No. III, Nariman Point, Mumbai 400 021(Maharashtra). மேலும் சம்பளம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.sbi.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

டிப்ளமோ தகுதிக்கு ஸ்டீல் ஆலையில் டெக்னீஷியன் டிரெய்னி பணி

இந்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் பெரிய இரும்பு தயாரிப்பு நிறுவனமான செயில் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் டிரெய்னி பணியியங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 330 பணி: டெக்னீஷியன் டிரெய்னி வயதுவரம்பு: 18 - 28-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: மெட்டலர்ஜி, எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மெகட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்ட்டேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இரண்டு ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். அதன்பின்னர், பணியில் அமர்த்தப்படுவர். உதவித்தொகை: பயிற்சின்போது முதல் ஆண்டுக்கு மாதம் ரூ.10,700, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.12.200 வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.50. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.11.2013 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

இந்திய உருக்கு ஆலையில் ஆபரேசன் மற்றும் டெக்னீசியன் டிரெய்னி பணி

மேற்கு வங்க மாநிலம் பர்த்துவானில் செயல்பட்டு வரும் ஸ்டீல் தயாரிப்பில் பெரிய நிறுவனமான செயில் நிறுவனத்தில் ஆபரேசன் மற்றும் டெக்னீசியன் டிரெய்னி பணியில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 264 பணி: ஆபரேசன் மற்றும் டெக்னீசியன் டிரெய்னி கல்வித்தகுதி: மெட்டலர்ஜி, எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மெகட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்ட்டேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 18 - 28-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.11.2013 மேலும் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

+2 முடித்தவர்களுக்கு ரப்பர் போர்டு நிறுவனத்தில் பணி

கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான ரப்பர் போர்டு நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 63 பணி: இயக்குநர் -01 கல்வித்தகுதி: பி.இ/பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் பத்து ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.15,600 - 39.100 + கிரேடு சம்பளம் ரூ.7,600 வயதுவரம்பு: 55-க்குள் இருத்தல் வேண்டும். பணி: உதவி கணக்காளர் -02 சம்பளம்: ரூ.9,300 - 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4600 வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: எம்.காம் முடித்து சம்மந்தப்பட்ட துறையில் 3 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: புள்ளியியல் உதவியாளர் - 01 சம்பளம்: ரூ.9,300 -34,800 + கிரேடு சம்பளம் ரூ.4,200 கல்வித்தகுதி: புள்ளியியல், விவசாய புள்ளியில், பொருளாதாரம் உள்ளிட்ட எதாவதொரு துறையில் பட்டத்தும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Scientific உதவியாளர் - 03 சம்பளம்: ரூ.5200 - 20200 + கிரேடு சம்பளம் ரூ.2,900 வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: தாவரவியல், வேதியியல், விலங்கியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட துறையில் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: ஃபார்ம் உதவியாளர் - 07 சம்பளம்: ரூ.5200-20200 + கிரேடு சம்பளம் ரூ.2400 வயதுவரம்பு: 27-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் விவசாயத்துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பணி: இளநிலை உதவியாளர் - 27 சம்பளம்: ரூ.5200 - 20200 + கிரேடு சம்பளம் ரூ.1900 வயதுவரம்பு: 27-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளுக்கு குறையாமல் தட்டச்சு செய்யும் திறனும், கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் குறையாமலும் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.rubberboard.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.11.2013

வைசாக் ஸ்டீல் நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பணி

மத்திய அரசின் கீழ் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் விசாக் ஸ்டீல் நிறுவனத்தில் காலியாக உள்ள மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: மேனேஜ்மெண்ட் டிரெய்னி கல்வித்தகுதி: மெட்டலர்ஜி, மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ. அல்லது பி.டெக். முடித்திருக்க வேண்டும். மேலும் கேட் 2014 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2014 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.vizagsteel.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

இந்திய ராணுவத் தளவாட தொழிற்சாலையில் பணி

தில்லி ஷாக்குர்பஸ்த்தியில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ராணுவத் தளவாட தொழிற்சாலையில் காலியாக உள்ள லோயர் டிவிசன் கிளார்க், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 44 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: லோயர் டிவிசன் கிளார்க்( எல்.டி.சி) -24, தீயணைப்பு வீரர் -17, ஸ்டோர் கீப்பர் -03 கல்வித்தகுதி: லோயர் டிவிசன் கிளார்க்( எல்.டி.சி) மற்றும் ஸ்டோர் கீப்பர் பணிக்கு +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சும், 30 வார்த்தைகள் கணினியிலும் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். தீயணைப்பு வீரர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தேவையான உடற்தகுதிகளும் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 18-25-க்குள் இருத்தல் வேண்டும். வயதுவரம்பில் அரசு விதிகளின்படி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 வருடமும், பிற்படுத்தப்படோருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் சலுகைகள் அளிக்கப்படும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.11.2013 மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.davp.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக் குழு ஒப்புதல்!

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் புதன்கிழமை மாலை கூடிய அக்கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.இதில், பொதுநலவாய மாநாட்டை பல நாடுகள் தொடர்புடைய சர்வதேச விவகாரமாக அணுகவேண்டும். இதை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பிரச்சினையாக கருதக் கூடாது.சர்வதேச விவகாரங்களில் இந்தியாவுக்கென பிரத்யேக கொள்கை உள்ளது. அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.ஆகவே பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதில் எந்தவித ஆட்சேபமும் இல்லை’ என்று காங்கிரஸ் உயர்நிலைக் குழுவில் முடிவு செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக அரசு மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தநிலையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அரசியல் உயர் தலைவர்களுடன் மந்திராலோசனை நடாத்துவதாக முன்னதாக இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

கனடாவில் பேரெழுச்சியுடன் திரண்ட மக்கள் !

கனடிய அரசிற்கும், குறிப்பாக கனடியப் பிரதமர் மாண்புமிகு ஸ்ரீபன் காப்பர், வெளிவிவகாரத்துறை அமைச்சர் யோன் பெயட், மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், அதன் தலைமைகள், கனடிய ஊடகங்கள், தமது சக கனடிய மக்கள் அனைவருக்கும் கொமன்வெல்த் நாடுகள் மாநாட்டை சிறீலங்காவில் புறக்கணித்தமைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும் ஒட்டாவா கனடிய நாடாளுமன்ற முன்றலில் கனடியத் தமிழர்கள் நூற்றுக்கணக்கில் குளிரையும் பொருட்படுத்தாது பேரெழுச்சியுடன் அணிதிரண்டனர்.