Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, January 10, 2014

அமெரிக்காவுக்கு உதவ மாட்டோம்.கூறிவிட்டு செளதி

எங்களுக்கு பாதுகாப்பா சபையில் இடம் வேண்டாம் என்று சில நாட்களுக்கு முன் ஐரோப்பிய நாடுகளின் தூதர்களை சந்தித்த செளதி அரேபிய உளவுப் பிரிவின் தலைவரான பந்தர் பின் சுல்தான் அல்-செளத் ஒரு குண்டைப் போட்டார். ''இனிமேல் சிரியா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு நாங்கள் ஒத்துழைப்பு தர மாட்டோம்'' என்று வெளிப்படையாகவே அறிவிப்பை வெளியிட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மேலும் நாங்கள் ஐ.நா. சபை இடம் வேண்டாம் என்று சொன்னது கூட அமெரிக்காவுக்கு எதிராகத் தான் என்றார்.

டோனி ஹில் விலகல், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அம்பயர் குழுவில் இருந்து

துபை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அம்பயர்கள் உயர்நிலைக் குழுவில் இருந்து டோனி ஹில் விலகியுள்ளார். ஆக்லாந்தை சேர்ந்த டோனி ஹில், 11 ஆண்டுகாலம் சர்வதேச அம்பயர்கள் குழுவில் இடம்பெற்றிருந்தார். பின்னர் 2009ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உயர்நிலைக் குழுவுக்கு தேர்வானார். இந்நிலையில் நியூசிலாந்தின் அம்பயர்களுக்கான பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டதால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உயர்நிலைக் குழுவில் இருந்து டோனி ஹில் தற்போது விலகியுள்ளார். கடந்த 15 ஆண்டுகாலத்தில் 40 டெஸ்ட், 96 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளுக்கும் டோனி ஹில் அம்பயராக இருந்துள்ளார்.

நியூஸிலாந்து அணி அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம்

டெல்லி: நியூஸிலாந்து அணி அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தற்போது இந்திய அணி தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறது. இந்த பயணத்துக்குப் பின்னர் 2014 ஜனவரி- பிப்ரவரியில் நியூஸிலாந்துடன் இந்தியா மோதுகிறது. இதற்காக இந்திய அணி நியூஸிலாந்துக்கு சென்று விளையாடவுள்ளது. அதன் பின்னர் நியூஸிலாந்து அணி அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு வருகை தரும் என்று திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இன்று இஸ்ரேல் செல்லும் ராஜபக்சே!

இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே தனது மனைவியுடன் ஜோர்டான், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் கிளம்பினார். முதலில் ஜோர்டான் சென்ற அவர் பின்னர் பாலஸ்தீனம் சென்றார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று பாலஸ்தீனம் சென்ற ராஜபக்சேவுக்கு அந்நாட்டு பிரதமர் டாக்டர் ராமி ஹம்துல்லா மதிய விருந்து அளித்தார்.இதையடுத்து பாலஸ்தீன அதிகாரிகளை சந்தித்த ராஜபக்சே இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவை மேலும் மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பாலஸ்தீன தொழில் அதிபர்களை தங்கள் நாட்டுக்கு வருமாறு ராஜபக்சே அழைப்பு விடுத்தார். இந்நிலையில் அவர் இன்று பாலஸ்தீனத்தில் இருந்து கிளம்பி இஸ்ரேல் செல்வதாக அவரது ஒருங்கிணைப்பு குழு செயலாளர் விஜயேனந்தா ஹிராத் தெரிவித்துள்ளார்

அதிமுகவில் லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் தயார்

லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. அதிமுகவைப் பொறுத்தவரையில் 40-ம் நமக்கே என்பதுதான் தாரக மந்திரம். அதிமுகவில் லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த பட்டியலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சிலரது பெயரும் இடம்இதனால் அதன் கூட்டணிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதிதான் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எஞ்சிய தொகுதிகளில் அதிமுகவே போட்டியிடலாம் எனத் தெரிகிறது. அதிமுகவின் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் இதுதான் என்கிறது அதிமுக வட்டாரங்கள்:பெற்றிருப்பதாகவும் தெரிகிறது.
வடசென்னை வடசென்னையில் ஓரங்கட்டப்பட்ட வெங்கடேஷ் பாபு அல்லது புதிய வரவு பரிதி இளம்வழுதிதான் வேட்பாளர்களாம்
மத்திய சென்னை மத்திய சென்னையில் வாக்காளர்களுக்கு நன்கு அறிமுகமான பாலகங்கா அல்லது மைத்ரேயன் களமிறக்கப்படுகின்றனர்
மயிலாடுதுறை தொகுதியில் வழக்கம்போல ஓ.எஸ்.மணியன் அல்லது ராமநாதனுக்கு சான்ஸ் கிடைக்கலாம்
தென் சென்னை தென்சென்னை தொகுதியில் வி.என்.ரவி, சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் வேட்பாளர்களாக இருக்கலாம்.

உ.பி. அரசிடம் தெரிவித்த கெஜ்ரிவால். இசட் பிளஸ் பாதுகாப்பு தேவை இல்லை:

லக்னோ: உத்தர பிரதேச அரசு ஆம் ஆத்மி கட்சி தலைவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்துள்ளது. ஆனால் கெஜ்ரிவாலோ தனக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள கௌஷம்பியில் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் இருந்து 1 கிமீ தூரத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் 50 முதல் 60 பேரால் தாக்கப்பட்டது. இந்நிலையில் கெஜ்ரிவாலுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க உத்தர பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் கெஜ்ரிவாலோ தனக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு எல்லாம் தேவையில்லை என்று தெரிவித்துவிட்டார். எனக்கு தேவை பாதுகாப்பு இல்லை கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஆட்கள் தான் தேவை என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லி முதல்வரான கெஜ்ரிவாலுக்கு தற்போது 3 எஸ்.ஐ.க்கள் மற்றும் 17 முதல் 18 போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரண் பேடி திடீர் கருத்து! மோடியால் மத்தியில் நிலையான ஆட்சி தர முடியும்:

டெல்லி: பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியால் மத்தியில் நிலையான ஆட்சியை தர முடியும் என்று முன்னாள் காவல்துறை அதிகாரியும், அன்னா ஹசாரேவின் ஆதரவாளருமான கிரண் பேடி தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். நரேந்திர மோடியை முன்னிறுத்தியே பா.ஜ.க தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. நரேந்திர மோடியின் அலையே நடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க.விற்கு பெரும்பாண்மையை தேடித் தந்ததாக அக்கட்சியினர் உறுதியாக நம்புகின்றனர். இந்த சூழ்நிலையில் அன்னா ஹசாரேவின் முக்கிய உதவியாளரான கிரண் பேடி தனது வலைதளத்தில் , ' என்னை பொறுத்தவரை முதலில் இந்தியாவில் ஒரு நிலையான ஆட்சி வேண்டும். நரேந்திர மோடியால், நிலையான, திறமையான, பொறுப்பான, அனுபவ ரீதியிலான ஒரு பொதுவான அரசை கொடுக்கமுடியும். எனவே எனது வாக்கு நரேந்திர மோடிக்கே. லஞ்சம் இல்லா அரசை வேண்டுபவர்கள் நிச்சயம் காங்கிரசை மீண்டும் ஆதரிக்கமாட்டார்கள்' என்று கூறியுள்ளார். கிரண் பேடி தொடர்ந்து நரேந்திர மோடிக்கு ஆதரவாக கருத்துக்களைன தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரியில் 4 நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நபிகள் நாயகம், திருவள்ளுவர் தினம் உள்ளிட்ட 4 தினங்களில் சென்னை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் எ. சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: நபிகள் நாயகம் பிறந்தநாள் (ஜன. 14), திருவள்ளுவர் தினம் (ஜன 15), வள்ளலார் நினைவு நாள் (ஜன. 17) மற்றும் குடியரசு தினம் (ஜன. 26) ஆகிய நாள்களில் சென்னை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், பார்கள், கிளப்புகள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள பார்கள் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்கவேண்டும். அந்த நாள்களில் சில்லறை மதுமானம் விற்பனை செய்யப்படமாட்டாது என்று அந்த செய்தியில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

போலீஸ் நிலையத்தில் சுடப்பட்ட சிறுவனுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் - வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சென்னை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நீலாங்கரை காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், வெட்டுவாங்கேணி மகாத்மா காந்திநகரில் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டதற்காக, தமிம்அன்சாரி என்ற 16 வயதுச் சிறுவனை, 7–ந் தேதி நள்ளிரவு 2 மணி அளவில், நீலாங்கரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வந்து அடித்துச் சித்ரவதை செய்து விசாரித்து உள்ளார். தனக்கும் திருட்டு சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்று சொல்லியும், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், மனிதாபிமானமற்ற முறையில் தன் கைத்துப்பாக்கியை எடுத்துச் சிறுவனின் வாயில் சொருகி மிரட்டி, சக காவலர்களுக்கு முன்னாலேயே இன்ஸ்பெக்டர் சுட்டுள்ளார். காவல்துறையின் மீதுள்ள நம்பகத்தன்மையைப் பாதுகாக்க வேண்டுமெனில், உடனடியாக நீலாங்கரை காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரைக் கைது செய்து, நீதிமன்றத்தல் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும். சுடப்பட்ட சிறுவன் தமின்அன்சாரிக்கு, தமிழக அரசு சார்பில் உயர் மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

பிப்ரவரி 1–ந்தேதி முதல் தஞ்சை – மயிலாடுதுறை, மானாமதுரை – செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில்கள்

தஞ்சை – மயிலாடுதுறை, மானாமதுரை – செங்கோட்டை இடையே பிப்ரவரி 1–ந்தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் ரெயில்வே நிலைக்குழுத்தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. மன்னார்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:– தஞ்சாவூர்–மயிலாடுதுறை மற்றும் மானாமதுரை–செங்கோட்டை இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னைக்கும்–தஞ்சாவூருக்கும் இடையே அண்மையில் விடப்பட்ட உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயங்கி கொண்டிருக்கின்றது. இது காலை 7.15 மணிக்கு தஞ்சாவூர் சென்றடைகிறது. இதைப்போல் சென்னை–மானாமதுரை இடையே காரைக்குடி வழியாக செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 7.45 மணியளவில் மானாமதுரை வந்து சேருகிறது. இந்த இரு வண்டிகளும் மறு மார்க்கத்தில் திரும்பவும் இரவு சென்னைக்கு புறப்படும் வரை முறையே தஞ்சை மற்றும் மானாமதுரை ரெயில் நிலையங்களில் சுமார் 12 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மயிலாடுதுறை வரை... எனவே, உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை தஞ்சாவூர்–மயிலாடுதுறை வழித்தடத்தில் பகல் வேளையில் புதிய எக்ஸ்பிரஸ் சேவையில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி காலை 9.40 மணிக்கு தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு கும்பகோணம், ஆடுதுறை வழியாக 11 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும், மறுமார்க்கத்தில் மாலை 3.45 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு 5.05 மணிக்கு தஞ்சாவூர் திரும்பும். அதேபோல், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரையில் இருந்து அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் வழியாக செங்கோட்டை வரை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரெயில் காலை 9.15 மணிக்கு மானாமதுரையிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 1.15 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கத்தில் 2.30 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு மாலை 6.30–க்கு மானாமதுரை வந்து சேரும். இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

3 பேரை கொன்ற விலங்கு எது? கும்கி யானை உதவியுடன் தேடும் பணி தீவிரம்!

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள தொட்டபெட்ட வனபப்குதியில் கடந்த 5 நாள்களில் 3 பேரைக் அடித்துக்கொன்ற ஆள்கொல்லி வனவிலங்கைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணியில் 4 கும்கி யானைகளுடன், அதிரடிப்படையினரும், வனத் துறையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஊட்டி அருகே உள்ள சோலாடா கிராமத்தைச் சேர்ந்த கவிதா, அட்டபெட்டு பகுதியைச் சேர்ந்த சின்னப்பன், குந்தசப்பை பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி ஆகிய மூன்று பேரையும் கடந்த 5 நாள்களில் அடையாளம் தெரியாத ஒரு வனவிலங்கால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அவ்விலங்கை நேரில் பார்த்தவர்களில் சிலர் சிறுத்தை என்றும், கால் தடங்களை வைத்து பார்த்ததில் அது புலியெனவும் கூறி வருகின்றனர். இந்நிலையில், அவ்விலங்கை உயிருடன் பிடிக்கவோ, சுட்டுக் கொல்லவோ உத்தரவிடப்பட்டுள்ளதால், அதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து ஜான் என்ற கும்கி யானை வியாழக்கிழமை காலை பட்டர்கம்பை பகுதிக்கு வரவழைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் யானைகள் நலவாழ்வு முகாமிலிருந்து சாடிவயல் பகுதியைச் சேர்ந்த பாரி என்ற கும்கியும், முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து வாசிம், விஜய் ஆகிய கும்கி யானைகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. அடையாளம் தெரியாத வனவிலங்கைப் பிடிப்பதற்காக, பட்டர்கம்பை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமிலிருந்து தலா 11 பேர் கொண்ட மூன்று வேட்டைத்தடுப்பு குழுக்கள் அந்த விலங்கை தேடும் வேட்டையில் ஈடுபடுபட்டுள்ளனர். மேலும், உதகை தெற்கு வனக்கோட்ட அலுவலர் பத்ரசாமி, வடக்கு வனக்கோட்ட அலுவலர் சுகிர்தராஜ் கோயில்பிள்ளை மற்றும் உதவி வனப் பாதுகாவலர் சிவமணி ஆகியோர் தலைமையில் இக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவிலுள்ள அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, சுற்றுச் சூழலியலாளர் நைஜில் ஒட்டேர் தலைமையில், பயிற்சி பெற்ற 6 நாய்களும் கும்கி யானைகளுடன் இணைந்து வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. இக்குழுக்களில் அதிரடிப்படை வீரர்கள், வனத் துறையினருடன் கால்நடை மருத்துவர்கள் மனோகரன், திருமுருகன், விஜயராகவன், கார்த்திக், ராஜேஷ்குமார், பூன் ஆல்வின் ஆகியோருடன், கர்நாடகத்திலிருந்து வந்துள்ள பிரபல கால்நடை மருத்துவர் டாக்டர் அருண்ஷாவும் ஈடுபட்டுள்ளார். இப்பணிகளை தமிழக தலைமை வன உயிரினப் பாதுகாவலர் லட்சுமி நாராயணன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், கோவை மண்டல வனப் பாதுகாவலர் கந்தசாமி ஆகியோர் கண்காணித்து வருகின்றனர். இவர்களுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தோரும், டபிள்யு.டபிள்யு.எஃப். அமைப்பின் சார்பில் பிரபல வனவிலங்கு ஆராய்ச்சியாளர் அஜய் தேசாய், மோகன்ராஜ், சாதிக், இவர்களுடன் வனவிலங்கு உயிரியல் துறை மாணவர்களும், வனவிலங்கு ஆராய்ச்சியாளர்களும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வெள்ளி தகடு மாயம்! கண்டு கொள்ளுமா இந்து அறிநிலைதுறை!

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா ஏற்பாடு மிகவேகமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த சொர்க்கவாசல் அடுத்து நடைபெறும் இராபத்து பகல்பத்து ஆகிய தினங்களில் ஏதேனும் ஒரு நாள் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏவும், தமிழக முதல்வருவான ஜெயலலிதா கலந்து கொள்வார் என்று கோட்டை வாட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியானதால் இந்து அறநிலைத்துறை ஆணையர் தனபால், ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன் ஆகியோர் ஏற்பாடுகளை கடந்த 10 நாட்களுக்கு முன்பு பார்வையிட்டனர். அப்போது ரெங்கநாதர் உறங்கும் மூலவர் இருக்கும் சந்தனமண்டபத்தில் வெள்ளிகதவில் இடது பக்கம் 1அடி நீளம் ¾ அடி அகலத்திற்கும் உள்ள வெள்ளி தகடு கிழிந்து கொண்டு இருந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனே இந்த வெள்ளி கதவை புதுப்பிக்கும்படி ஸ்ரீரங்க கோவில் நிர்வாக அதிகாரி கல்யாணியிடம் உத்தரவிட்டனர். ஆனால் சொர்க்கவாசலை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ரெங்கநாதருக்கு மோகனி அலங்காரம் செய்ய உள்ளே சென்ற போது அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள். தற்போது கிழிந்திருந்த அந்த வெள்ளிக்கேட்டின் தகடு மாயமாகி கருங்கல் பாறை தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோவிலின் பராமரிப்பு பணிக்கு முதல்வர் கோடி கணக்கில் நிதி ஓதுக்கியும் மிகமுக்கியமான மூலவர் இருக்கும் அந்த அறையை கூட சரியாக பராமரிப்பு செய்யாமல் இருக்கிறார்கள். இது தெய்வகுற்றம் இல்லையோ என்று பக்தர்கள் அதிர்ச்சியில் புலம்புகிறார்கள். கண்டு கொள்ளுமா இந்து அறிநிலைதுறை.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டி: தமிழக பொறுப்பாளர் பேட்டி

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று தமிழக பொறுப்பாளர் கிறிஸ்டினா சாமி தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினரும், தமிழக பொறுப்பாளருமான கிறிஸ்டினா சாமி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– டெல்லி தேர்தல் முடிவையடுத்து, ஆம் ஆத்மி கட்சிக்கு நாடு முழுவதும் அரசியல் தாக்கம் மிக வேகமாக, அலையாக பரவி கொண்டிருக்கிறது. ஆத் ஆத்மி கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் கூட்டம் கடந்த 4, 5 ஆகிய தேதிகளில் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இதில் டெல்லி தேர்தல் முடிவு ஏற்படுத்திய மிக பெரிய தாக்கம் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி களம் இறங்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள நிலைப்பாடுகளை கண்டறிந்து, சுமார் 300 தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். கேள்வி:– தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுமா? பதில்:– ஆம் ஆத்மி கட்சி நிச்சயம் போட்டியிடும். எத்தனை தொகுதிகள் என்று இன்னும் முடிவு செய்யவில்லை. கேள்வி:– பாராளுமன்ற தேர்தல் என்பது ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு பிரச்சினைகளை உள்ளடக்கியது. இதை எப்படி ஆம் ஆத்மி கட்சி சமாளிக்கப்போகிறது. ஒவ்வொரு மாநில பிரச்சினைகளுக்கு ஏற்ப தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு விட்டதா? பதில்:– தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கேள்வி:– பாராளுமன்ற தேர்தல் குறித்து தமிழகத்தில் எந்த கட்சியுடனாவது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினீர்களா? பதில்:– எந்த கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. கேள்வி:– ஆம் ஆத்மி கட்சிக்கு தமிழகம் முழுவதும் கிளைகள் உருவாக்கப்படுமா? பதில்:– ஓராண்டு காலமாக 12 மாவட்டங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு குழுக்கள் உள்ளது. மேலும் 10 மாவட்டங்களில் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் 32 மாவட்டங்களிலும் குழுக்களும், கிளைகளும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கேள்வி:– தமிழகத்தில் இதுவரை எத்தனை பேர் ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினர்களாக இணைந்துள்ளார்கள்? பதில்:– 42 ஆயிரம் பேர் இணைந்துள்ளார்கள் என்றார்.

தேவயானி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதியக் காலக்கெடுவை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு

அமெரிக்காவில் இந்திய துணைத்தூதர் தேவயானி கைது செய்யப்பட்ட வழக்கில் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதியப்பட காலக் கெடுவை நீட்டிக்க நீதிமன்றம் மறுத்திருக்கிறது. அவர் மீது விசா மோசடி குற்றச்சாட்டுக்கள் இனி ஜனவரி 13ம்தேதேவயானியின் மீது அமெரிக்க நீதித்துறை , விசா மோசடி மற்றும் தவறான வாக்குமூலம் தந்தது ஆகிய குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை டிசம்பர் 12ம் தேதி கைது செய்தது. இந்தக் குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தில் முறையாக அவர் மீது சுமத்த ஒரு மாதம் காலக்கெடு உண்டு. அந்த காலக்கெடுவின்படி அவர் மீது ஜனவரி 13ம்தேதிக்குள் குற்றச்சாட்டுக்கள் பதியப்படவேண்டும். தேவயானி தரப்பு அமெரிக்க நீதித்துறையுடன் இந்த வழக்கு குறித்து குற்றத்தின் தன்மையை பற்றிய உடன்பாட்டுக்கு வரும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுவருவதால், இதற்கு உதவி செய்ய, காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று, அவரது தரப்பு வழக்கறிஞர் டேனியல் ஆர்ஷாக் மத்திய நீதிமன்றத்தில் வாதாடினார். ஆனால் நீதிபதி சாரா நெட்பர்ன் இந்த வாதத்தை ஏற்க மறுத்து, ஜனவரி 13ம் தேதி அவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதியப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். தேவயானியின் கைது மற்றும் அவர் கைவிலங்கிடப்பட்டது மற்றும் நிர்வாணமாக்கப்பட்டு சோதனையிடப்பட்டது ஆகியவை இந்திய அமெரிக்க உறவுகளில் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றன. சங்கீதா ரிச்சர்ட்ஸ் என்ற தனது இந்திய வேலைக்காரப் பெண்ணை அமெரிக்காவுக்கு தனது இல்லத்தில் வேலை பார்க்க அழைத்து வர, அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, தவறான தகவல்களைத் தந்தார், அமெரிக்காவில் தரப்படும் ஊதியத்துக்குக் குறைவான ஊதியம் தந்தார் என்று தேவயானி கோபர்கடே மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுக்களை தேவயானி மறுக்கிறார்.தி பதியப்படும்.

புதியநீதிபதிகள் நியமன தடை ஜனவரி 21 தேதிவரை நீடிப்பு

சென்னை உயர்நீதிமன்றத்திற்கான நீதிபதிகள் நியமனப்பிரச்சினை தொடர்பில், உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் 12 பேர் அடங்கிய நீதிபதிகளின் பட்டியலின் மீது நேற்று புதன்கிழமையன்று விதிக்கப்பட்ட இடைக்காலத்தடையினை எதிர்வரும் ஜனவரி 21ஆம் நாள்வரை நீட்டித்து நீதிபதிகள் வி தனபாலன் மற்றும் கே கே சசிதரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இன்று வியாழன் உத்திரவிட்டது. பரிந்துரைக்கப்பட்டிருக்கும் பட்டியல் ஒரு சில தரப்பாருக்கு ஆதரவாக இருக்கிறது, வேறு சில பிரிவினர் ஒதுக்கப்பட்டிருக்கின்றனர், இது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல, நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டுமென வலியுறுத்தி வழக்கறிஞர் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. அப்பட்டியல் திரும்பப்பெறப்படவேண்டும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுநெறிகளின்படி அது திருத்தி அமைக்கப்படவேண்டும் எனக் கோரி மூத்த வழக்கறிஞர் காந்தி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இரண்டாவது நாளாக வியாழனன்றும் தொடர்ந்து நடந்தது. மேலும் மூன்று வழக்கறிஞர்கள் பட்டியலுக்கெதிராக மனு தாக்கல் செய்திருக்கின்றனர். ஒருவர் ஆதரித்து மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்நிலையிலேயே இடைக்காலத் தடையை நீட்டித்தும் வழக்கு விசாரணையினை ஒத்திவைத்தும் உத்திரவிடப்பட்டிருக்கிறது. அதேசமயம், இது போல உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் தற்போது கடைப்பிடிக்கப்பட்டுவரும், collegium of judges எனப்படும் நீதிபதிகள் குழு ஒன்று, நீதிபதிகளாக நியமிக்கப்பட பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களை பரிசீலித்து இறுதியாக நியமனத்துக்குப் பரிந்துரைக்கும் நடைமுறை சரியாக இயங்கவில்லை என்று கூறப்படுவதில் ஓரளவு உண்மை இருக்கிறது என்கிறார் இந்திய சட்டக்கமிஷனின் முன்னாள் தலைவரும், இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியுமான, ஏ.ஆர்.லக்ஷ்மணன்.

மலேசியாவில் மனித உரிமைகள் கூட்டமைப்புக்கு தடை

மலேசியாவில் மனித உரிமைகள் மற்றும் இதர மக்கள் சார்ந்த பிரச்சனைகளை முன்னெடுத்துவரும் ‘கொமாங்கோ’ எனப்படும் கூட்டமைப்பை தடை செய்து மலேஷிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன. சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷணல், மலேசிய அரசின் இந்த தடைஉத்தரவு கருத்துச் சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் என்று கூறியுள்ளது.கொமாங்கோ அமைப்பின் செயல்பாடுகள் இஸ்லாமுக்கு எதிரான வகையில் உள்ளன என்றும், முறையாக பதிவு செய்து கொள்ளாத காரணத்தினாலேயே அது தடை செய்யப்பட்டுள்ளது என்று மலேசிய உள்துறை அமைச்சகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. மலேசிய அரசாங்கம் இஸ்லாம் என்கிற போர்வையில் மனித உரிமை அமைப்புகளின் செயல்பாட்டை ஒடுக்கும் ஒரு முயற்சியே இந்த நடவடிக்கை என்று கொமாங்கோ அமைப்பின் ஒரு அங்கமாக இருக்கும் மலேசிய மனித உரிமைகள் இயக்கத்தின் தலைவர் கா. ஆறுமுகம் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார். ஒருபால் உறவுக்காரர்களின் உரிமைகளுக்காகவும் கொமாங்கோ குரல் கொடுத்தது என்றும், அது இஸ்லாமிய கடும்போக்குவாதிகளுக்கு அதிருப்தி ஏற்படுத்திய காரணத்தால் அரசுக்கு அழுத்தம் கொடுத்து இந்தத் தடை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்கள் எனவும் அவர் கூறுகிறார். இந்தத் தடைக்கு எதிராக நீதிமன்றத்துக்கு சர்வதேச மட்டத்துக்கு இதை எடுத்துச் செல்லப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

"திமுக காங்கிரஸ் இடையில் பல்லாண்டு உறவு"-- ஆசாத்

திமுக தலைவர் மு கருணாநிதியை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வியாழனன்று அவரது, சென்னை சி.ஐ.டி. காலனி இல்லத்தில் சந்தித்தார். சந்திப்பு 20 நிமிடம் நீடித்தது. சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், கருணாநிதி தான் மதிக்கும் தலைவர் என்பதால் அவருடனான தமது இன்றைய சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவித்தார். இன்றைய சந்திப்பில் காங்கிரஸ் திமுக இடையில் கூட்டணி அமைப்பதைப்பற்றியெல்லாம் பேசவில்லை என்றும், தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணி பற்றி யோசிக்கலாம் என்றும் ஆசாத் தெரிவித்தார்.அதேசமயம், காங்கிரசிற்கும் திமுகவிற்கும் இடையிலான உறவு பல்லாண்டுகளாக நீடித்துவருவது என்றும் ஆசாத் கூறினார். இனி காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று கருணாநிதி அறிவித்தபிறகு அவரை சந்திக்கும் முதல் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய சந்திப்பின்போது காங்கிரசுடன் கூட்டணி கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகச் சொல்லப்படும் கருணாநிதியின் மகன் மு க ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. அதே நேரம் சந்திப்பின்போது ஆசாத்துடன் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலுவும் இருந்தார். ஆனால் தற்போதைய காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் இந்த சந்திப்பில் இல்லை. கருணாநிதியை தாம் மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக குலாம் நபி ஆசாத் கூறினாலும், முறிந்துபோன திமுக காங்கிரஸ் கூட்டணியை புதுப்பிப்பதற்கான முயற்சியாகவும் இந்த சந்திப்பு இருக்கலாம் என்கிற சந்தேகங்கள் அரசியல் திறனாய்வாளர்கள் மத்தியில் காணப்படுகிறது.

வடக்கிலும் தமிழை இரண்டாம் மொழியாக்க முயற்சி

தமிழர்களின் ஆட்சி மலர்ந்துள்ளதாகக் கூறப்படுகின்ற வடக்கின் ஆட்சி அதிகாரங்கள் உருவாக்கப்படுகின்ற வடக்கு மாகாண சபையில் ஆங்கில மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளமை பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இங்கு ஆட்சி மொழி ஆங்கிலமாக இருக்கின்றதோ என்று எண்ணத் தோன்றுமளவிற்கு மாகாண சபையில் ஆங்கில மொழிக்கு முதன்மையளிக்கப்பட்டிருக்கின்றது. இங்குள்ள கட்டடங்களில் இடங்களையும் முக்கிய பதவியில் உள்ளோரையும் அடையாளப்படுத்தும் இடங்கள் “ஆங்கில மொழியால் மட்டும்” அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
ஆங்கிலேயர் தமிழர் தாயகத்தை விட்டுச் சென்று 66 வருடங்களாகின்றன. ஆனால், இன்றுவரை அவர்களின் மொழி தமிழர் தாயகத்தில் நிலைத்திருக்கின்றதென்றால் அது அவர்களின் மொழிச் சிறப்பையும் மொழி வளர்ச்சியையும் எடுத்துக் காட்டுகின்றது. இந்த மொழியைப் போன்று எமது தமிழ் மொழியையும் வளர்ப்பதற்கு வடக்கு மாகாண சபை வழி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டவேளை மாகாண சபை கட்டடங்களை அடையாளப்படுத்துவதற்கு தனியே ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டுள்ளமையை முதுகெலும்புள்ள தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்காக ஆங்கில மொழி தேவையில்லை என்பது அர்த்தம் அல்ல.வடக்கு மாகாண சபையில் தமிழ் மொழிக்கு முதன்மை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ் மொழிக்கு முதன்மை கொடுக்காத வடக்கு மாகாண சபை எப்படி தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு முதன்மை கொடுக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. தன்னை ஒரு தமிழ்ப் பித்தர் என்றும் சைவப் பழம் என்றும் காட்டிக்கொண்டிருக்கின்ற முதலமைச்சரோ, இவரின் நான்கு அமைச்சர்களோ, உறுப்பினர்களோ இந்த விடயங்களில் எந்தவித அக்கறையும் இல்லாமல் இருக்கின்றமையும் வியப்பாகவுள்ளது. முதலமைச்சராயினும் அமைச்சர்களாயினும் உறுப்பினர்களாயினும் முதலில் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஏனையோரைத் திருத்த முற்பட வேண்டும் என்று கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிரான போராட்டங்கள் ஆளும் கட்சியினால் நடத்தப்படுகின்றது – ஐ.தே.க

பிரதமருக்கு எதிரான போராட்டங்கள் ஆளும் கட்சியினாலேயே நடத்தப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் பலம்பொருந்திய சில நபர்களினால் இந்த பிரதமருக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் தெரிவித்துள்ளார். கொழும்பு 7ல் பிரதமருக்கு எதிராக பௌத்த பிக்குகள் போராட்டம் நடத்தியிருந்தனர். போராட்டம் நடத்தப்பட்ட வீதி அலரி மாளிகைக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏனைய தரப்பினர் இந்தப் பாதையி;ல் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்களின் ஆதரவு குறித்த பௌத்த பிக்குகளுக்கு இருந்திருக்காவிட்டால் மலர் வீதிக்குள் பிரவேசிக்கவே ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு காவல்துறையினர் அனுமதியளித்திருக்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.