Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Wednesday, February 19, 2014
7 தமிழர் விடுதலை: ஜெ. முடிவுக்கு ராகுல் கடும் எதிர்ப்பு
அமேதி: 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 7 தமிழர் விடுதலை: ஜெ. முடிவுக்கு ராகுல் கடும் எதிர்ப்பு ராகுலின் தந்தையான ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அத்துடன் 23ஆண்டுகாலம் சிறையில் கழித்ததால் அவர்களது விடுதலை குறித்து மாநில அரசு முடிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து இன்று தமிழக அரசு பேரறிவாளன் மற்றும் ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் மொத்தம் 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு எடுத்தது. இந்த முடிவுக்கு ஒப்புதல் தெரிவிக்க 3 நாள் கெடுவை மத்திய அரசுக்கும் தமிழக அரசு விதித்துள்ளது. இது குறித்து அமேதியில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜிவ் மகனும் காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தி, நான் தூக்கு தண்டனைக்கு எதிரானவன். என் தந்தை இந்த நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்தவர். ஒரு முன்னாள் பிரதமரை கொன்றவர்களே விடுதலையானால் இந்த நாட்டில் சாமானியருக்கு எப்படி நீதி கிடைக்கும்? என்றார்.
ஜெனீவா கூட்டத்தொடர் விவகாரம் - ஒரேநாளில் வடக்கு நோக்கிய சர்வதேச படையெடுப்பு:-
ஜெனீவா கூட்டத்தொடர் விவகாரம் உச்ச நிலையினைக் கண்டுள்ள நிலையில் ஒரே நாளில் பிரிட்டன் மற்றும் அமெரிக்க தூதுவராலய உயர்மட்டப்பிரதிநிதிகள் மற்றும் ஜ.நாவின் அரசியல் விவகார பிரதிநிதியென பலரும வடக்கிற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
--------------------------------------------------------------------------------------------------
குறிப்பாக வடக்கில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலையினை கவலையுடன் அவதானித்த இக்குழுக்கள் வடக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுவருவதான இலங்கை அரசின் பிரச்சாரத்தின் உண்மை தன்மையினை கண்டறிய முற்பட்டிருந்தனர்.
--------------------------------------------------------------------------------------------------
இன்று சென்றிருந்த பிரிட்டிஸ் தூதர் குழுவினர் அண்மையில் பிரிட்டிஸ் பிரதமர் கமரூன் சென்று பார்வையிட்ட சபாபதிப்பிள்ளை முகாமினை பார்வையிட்டுள்ளனர். அங்கு மக்களுடன் அவர்கள் கலந்துரையாடியுமுள்ளனர்.
--------------------------------------------------------------------------------------------------
ஆமெரிக்க தூதவராலய அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர். குறிப்பாக அரசு நடத்திய கண்துடைப்பு காணாமல் போனோர் விசாரணைக்குழு அது பற்றிய காணாமல் போனோரது நிலைப்பாடு படையினரது கொலை மிரட்டல் பற்றி குழுவினர் பலரையும் சந்தித்து பதிவுகளை செய்துள்ளதாக தெரியவருகின்றது.
அணுசக்திக்கு உபயோகப்படும் அரியவகை இயாந்தினைட் கனிமவளம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவ்வளம் பெற்ற எட்டு நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இணைந்துள்ளது. அணுசக்திக்கு தேவையான யுரேனியம் வகையை சேர்ந்த இயாந்தினைட் கனிமம் ஆந்திராவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அணுசக்திக்கு உபயோகப்படும் அரியவகை இயாந்தினைட் கனிமவளம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவ்வளம் பெற்ற எட்டு நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இணைந்துள்ளது. அணுசக்திக்கு தேவையான யுரேனியம் வகையை சேர்ந்த இயாந்தினைட் கனிமம் ஆந்திராவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அணுசக்திக்கு தேவையான அரிய வகை கனிமமான யுரேனியம் ஆக்ஸைடின் மற்றொரு வகையான இயாந்தினைட் ஆந்திர மாநிலம் மெகபூப்நகர் மாவட்டம் அச்சம்பேட் மண்டல் பகுதியை சேர்ந்த அக்காவரம் கிராமத்தில் இருப்பதை
ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பக்கா வளங்களுடன் திகழும் ஆந்திராவின் அக்காவரம்…. இதன் மூலம் அரியவகை கனிமங்களை கொண்டுள்ள நாடுகளின் வரிசையி்ல் இந்தியா இணைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி எட்டு நாடுகளில் மட்டுமே இந்த வகையான கனிம வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளின்வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 90 ஆண்டுகளில் இந்தியாவில் இத்தகைய கனிம வளம் இருப்பது கண்டுப்பிடித்திருப்பது இது தான் முதல் முறையாகும். அணுசக்தி இயக்குனரகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டு பிடித்துள்ளனர். இயாந்தினைட் கனிம வளம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய அறிவியல் அகாடமியின் சமீபத்திய இதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஆராய்ச்சியாளர்கள் இப்பகுதியில் அனாடைஸ்,ருட்டில், மைக்ரோலைன், பயோடைட், மற்றும் குவார்ட்ஸ் போன்ற கனிம வகைகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்யும் அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது: வைகோ
சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கிட்டத்தட்ட 23 வருடங்களாக சிறையில் வாழும் சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. மேலும், அவர்களது விடுதலைக் குறித்து மாநில அரசு முடிவு செய்ய வேண்டும் எனவும் அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, அம்மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
-----------------------------------------------------------------------------------------------
அதில், ‘குற்றவியல் சட்டத்தின் பிரிவு 432-ஐ பயன்படுத்தி மாநில அரசு அவர்களை விடுதலை செய்யலாம் என்பதையும் கூட நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டு காட்டியிருக்கிறார்கள். ஆயுள் தண்டனை என்பதால், ஆயுள் முழுதும் அவர்களை வைத்திருக்க தேவையில்லை. இதனை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மூவரையும் வேலூர் சிறையிலிருந்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.
-------------------------------------------------------------------------------------------------
அப்போதுதான் இந்த நிரபராதிகளுக்கு உண்மையான நீதி முழுமையாக கிடைக்கும்' என அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது சிறையில் வாழும் ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வைகோ, ‘அவர்கள் தங்களின் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்து விட்டனர். அரசின் இந்த உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது' என தெரிவித்துள்ளார்.
ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு
இந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பினால் புலனாய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தடா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-ன்படி, தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். எனவே, மத்திய அரசின் கருத்தினைப் பெறும் வகையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.
------------------------------------------------------------------------------------------------
மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐ.நா பாதுகாப்பவையின் கவனம்
எகிப்தில் நிகழ்ந்த சுற்றுலா வாகனம் மீதான வெடிக்குண்டு சம்பவத்தை கண்டித்ததோடு, அதனை நடத்தியோரைக் கைது செய்ய வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பவை 16ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.
------------------------------------------------------------------------------------------------
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பொறுத்தவரை, எந்த வடிவத்திலான பயங்கரவாத நடவடிக்கையும் கடும் அச்சுறுத்தலாக விளங்குகிறது என்று இவ்வறிக்கை தெரிவித்தது.
------------------------------------------------------------------------------------------------
சிநைய் தீபகற்பத்தின் தாபா நுழைவாயிலுக்கு அருகில், சுற்றுலா வானகம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், தென் கொரியாவின் 3 பயணியர்களும், எகிப்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநரும் உயிரிழந்தனர். குறைந்தது 13 பேர் காயமடைந்தனர் என்று எகிப்து சினாய் தீபகற்பப் பாதுகாப்பு வாரியத்தின் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
தாய்லாந்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற்றம்
தாய்லாந்து காவற்துறை 18ஆம் நாள் தொடங்கி, அரசு சார் முக்கிய பணியகங்களின் அருகிலுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றி வருவதோடு, 100க்கு அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்களை கைதும் செய்துள்ளது. இருதரப்புக்குமிடையில் நிகழ்ந்த மோதலில் மூவர் உயிரிழந்தனர். 59 பேர் காயமுற்றனர்.
எத்தியோப்பிய விமானம் கடத்தல்
எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ்அபாபாவிலிருந்து இத்தாலியின் ரோம் நகருக்கு சென்ற எத்தியோப்பியாவின் ஈ.டி.702 விமானம் கடத்தப்பட்டு 17ஆம் நாள் காலை 6 மணிக்கு ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கடத்தியதாக ஐயப்படும் குற்றவாளி, இந்த விமானத்தின் துணை விமானி ஆவர். தற்போது, அவர் ஸ்விஸ் காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளதை இந்த விமான நிலையம் உறுதிச் செய்துள்ளது.விமானத்தில் பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் விமான நிலையம் தெரிவித்தது.
சாந்தனைப் பார்த்து 25 வருஷமாச்சி; அவரைப் பார்க்க ஆசையா இருக்கு"
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ள ஒருவரான சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி தனது மகனை கடந்த 25 ஆண்டுகளாகப் பார்க்கவில்லை என்றும், அவரை உடனடியாக பார்க்க விரும்புவதாகவும் தமிழோசையிடம் தெரிவித்தார்.
-------------------------------------------------------------------------------------------
தமது மகனின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்த நீதிபதிகள் மற்றும் அதற்காக போராடியவர்கள் அனைவருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இப்போது இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மரண தண்டனையிலிருந்து தப்பியுள்ள சாந்தனை தான் கடந்த 25 ஆண்டுகளாகத் தொலைக்காட்சியில் காட்டப்படும் அவரது புகைப்படத்தை மட்டுமே தான் பார்த்து வருவதாகவும் அவர் கூறினார்.

யாழ் மாவட்டம் உடுப்பிட்டியில் தற்போது தனது மற்ற வாரிசுகளுடன் வசித்துவரும் மகேஸ்வரி அம்மையார், சாந்தன் தனது பள்ளிப் படிப்பை முடித்தபிறகு தந்தையுடன் ஆலோசித்து வெளிநாடு செல்ல முயன்றார் என ப தமிழோசையிடம் தெரிவித்தார். தனது கணவர் கடந்த ஆண்டு இறந்துவிட்டதால், சாந்தன் என்ன காரணத்திற்காக தமிழ்நாட்டுக்குச் சென்றார் என்பது குறித்த முழு தகவல்களும் அவருக்கு மட்டுமே தெரியும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரின் மரணத்தில் தனது மகனும் தொடர்பு பட்டிருந்தார் எனும் தகவல் தனக்கு திடீரென்று தெரியவந்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது என்றும் கூறினார்.

ராஜீவ் கொலையுடன் தொடர்பா?

ராஜீவ் காந்தி கொலையுடன் அவர் எப்படி தொடர்புபட்டார் என்பதை இன்னும் தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

கடந்த 25 ஆண்டுகளாக தனது மகனை நினைத்து பிரார்த்தனைகள் மற்றும் உபவாசங்களை கடைபிடித்து ஆலயங்களுக்கு செல்வதை மட்டுமே வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இறைவனின் அருளால் மட்டுமே தனது மகனுக்கு சிறையிலிருந்து விடுதலை கிடைக்க வழி ஏற்படுமென தான் தொடர்ந்து நம்பி வந்ததாகவும் கூறினார் தில்லையம்பலம் மகேஸ்வரி.

பொருளாதார நெருக்கடி காரணமாக தங்களால் இந்தியா சென்று சாந்தனை பாக்கக் கூடிய முடியவில்லை என்றும், சிறையில் இருபது வருடங்களுக்கும் மேலாக இருக்கும் அவருடன் கடிதத் தொடர்புகூட தமக்கோ, தமது குடும்ப உறுப்பினர்களுக்கோ இல்லை என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தான் அறிந்தவரை சாந்தனுக்கு விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு இருந்ததாகத் தெரியவில்லை என்று கூறிய அவர், கடந்த 25 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் உட்பட எவரும் தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் கூறினார்.

அதேபோல் இந்த வழக்கில் மரணதண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டிருக்கும் மற்றொரு இலங்கைத் தமிழரான முருகன் குடும்பத்தாருடன் தமக்கோ தனது குடும்ப உறுப்பினர்களுக்கோ எவ்விதத் தொடர்புகளும் இல்லை எனவும் தில்லையம்பலம் மகேஸ்வரி அம்மையார் தெரிவித்தார்.

வாழ்வில் தனக்கு இருக்கும் ஒரே ஆசை தனது மகன் சாந்தனை நேரில் சந்திக்க வேண்டும் என்பது மட்டுமே என்றும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஐநாவின் தீர்மாணங்களில் இருந்து மீள தென்னாபிரிக்க கயிற்றை பற்றிக்கொண்டது இலங்கை:-
இலங்கையின் நல்லிணக்க செயன்முறை தொடர்பாக இணைந்து செயற்படுவதற்கான விசேட தூதுவராக சிரில் றம்போஷவை தென்னாபிரிக்கா நியமித்துள்ளது
இலங்கையில் நல்லிணக்க செயற்பாட்டை முன்நோக்கி கொண்டு சொல்லும் வகையில் இவரது நியமணம் அமைந்துள்ளதாக அரசாங்கத் தரப்பு கூறுகிறது.
------------------------------------------------------------------------------------------------
வெள்ளையர் அரசாங்கத்துடன் 1991ஆம் ஆண்டு நிறப் பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவந்த பேச்சுவார்த்தையில் ஆபிரிக்க தூதுக்குழுவிற்கு சிரில் றம்போஷ தலைமை தாங்கினார்.
------------------------------------------------------------------------------------------------
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் தென்னாபிரிக்காவிற்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் இலங்கை தூதுக்குழுவினர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை தங்கியிருந்து பல உயர்மட்ட சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இந்த குழுவில் பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா, வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் அருண் தம்பிமுத்து ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
------------------------------------------------------------------------------------------------
இந்த பேச்சுவார்த்தை குறிப்பாக தென் ஆபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பற்றி முக்கிய கவனம் செலுத்தும் என அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.
------------------------------------------------------------------------------------------------
தென் ஆபிரிக்காவின் அனுபவத்தின் அடிப்படையில் இலங்கை தனக்கு பொருத்தமானதொரு நல்லிணக்க செயன்முறையை ஆக்கக் கூடியதாக இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
------------------------------------------------------------------------------------------------
2ஆம் இணைப்பு:- நல்லிணக்கம் பற்றி கற்றுக்கொள்ள இலங்கைப் பிரதிநிதிகள் தென் ஆபிரிக்கா விஜயம்
------------------------------------------------------------------------------------------------
நல்லிணக்கம் தொடர்பில் கற்றுக்கொள்ள இலங்கைப் பிரதிநிதிகள் குழு தென் ஆபிரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------
தென் ஆபிரிக்காவில் அமுல்படுத்தப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பொறிமுறைமையை பின்பற்ற விரும்புவதாக இலங்கை அறிவித்துள்ளது.
------------------------------------------------------------------------------------------------
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பொறிமுறைமை பற்றி தெரிந்துகொள்ளும் நோக்கில் இந்த வாரத்தில் தென் ஆபிரிக்காவிற்கு இலங்கைப் பிரதிநிதிகள் குழுவொன்று விஜயம் செய்ய உள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------------
இந்தப் பிரதிநிதிகள் குழுவிற்கு தாமே தலைமை வகிக்கப் போவதாகவும் 20ம் திகதி தென் ஆபிரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
------------------------------------------------------------------------------------------------
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அணுகுமுறைகள் மற்றும் அனுபவங்களை அறிந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------------
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்பது குறித்து இந்த விஜயத்தின் போது ஆராயப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------------
தென் ஆபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பொறிமுறைமை தொடர்பில் உன்னிப்பாக கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
------------------------------------------------------------------------------------------------
இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து தென் ஆபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
'யுத்த நிறுத்தமொன்றை மேற்கொண்டிருந்தால் பிரபாகரன் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருப்பார்'
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்த நிறுத்தமொன்றிற்கு செல்ல விரும்பியதாக ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
---------------------------------------------------------------------------------------------------
2009ம் ஆண்டின் முதல் நான்கரை மாதக் காலப்பகுதியில் யுத்தம் உச்ச கட்டத்தை அடைந்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
---------------------------------------------------------------------------------------------------
தெல்கொட மாகொல பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
---------------------------------------------------------------------------------------------------
ஐரோப்பிய நாடுகளின் அழுத்தம் காரணமாக நாட்டின் ஆட்சியாளர் யுத்த நிறுத்தமொன்றை செய்ய விரும்பினார் எனவும், தாம் அதற்கு இடமளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
---------------------------------------------------------------------------------------------------
குறித்த காலத்தில் யுத்த நிறுத்தமொன்றை மேற்கொண்டிருந்தால் பிரபாகரன் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருப்பார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
---------------------------------------------------------------------------------------------------
பல்லாயிரக் கணக்கான படைவீரர்களின் அர்ப்பணிப்பும் தியாகமுமே யுத்த வெற்றிக் காரணம் எனவும், திருட்டு அரசியல்வாதிகள் எவரும் யுத்த வெற்றிக்கு பங்களிப்பு வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
---------------------------------------------------------------------------------------------------
அழுத்தங்கள் காரணமாக இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற காலத்தில் படையினர் பின்வாங்க நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுளளார்.
---------------------------------------------------------------------------------------------------
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மேலும் மூன்று கிலோ மீற்றர் தூரம் பின்வாங்கியிருந்தால் பிரபாகரன் தப்பிச் சென்றிருப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.
---------------------------------------------------------------------------------------------------
நாட்டின் ஆட்சியாளர் குடும்பம் ராஜ போகங்களை அனுபவிக்கும் அதேவேளை, சாதாரண மக்கள் சொல்லொனா துயரங்களை அனுபவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
---------------------------------------------------------------------------------------------------
இந்த நாட்டின் 90 வீதமான வளங்களை நாட்டை ஆட்சி செய்யும் ஆட்சியாளரின் குடும்பத்தினர் அனுபவித்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்களின் தகவல்களின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது –
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மற்றும் தமிழ் அமைப்புக்களின் தகவல்களின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் அமைப்புக்கள் போலிப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வலியுறுத்தப்பட மாட்டாது என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------
ஐக்கிய நாடுகள் அமைப்பு சில நாடுகளின் அரசியல் விளையாட்டு மைதானம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------
இறுதி கட்ட யுத்தத்தின் போது 40000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாகவும், இந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------
ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாகச் சாட்சியம் அளித்தவர்களை இலங்கை படைத்தரப்பு அச்சுறுத்துகிறது-
யாழ்.மாவட்டத்தில் மஹிந்தவின் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாகச் சாட்சியமளித்தவர்களை இலங்கை படைத்தரப்பு அச்சுறுத்த தொடங்கியுள்ளது.
---------------------------------------------------------------------------------------------
அத்தகைய வாக்குமூலங்களை அளித்த குடும்பங்களது வீடுகளிற்கு சிவிலுடையில் சென்று வாயை மூடிக் கொண்டிருக்குமாறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
---------------------------------------------------------------------------------------------
உங்கள் பிள்ளைகளோ கணவர்மாரோ உயிரோடில்லை. அர்களது கணக்குகள் முடிந்துவிட்டது. இனியும் அலைந்து திரிந்து நடப்பது எதுவுமில்லை. எஞ்சிய பிள்ளைகளையும் பறிகொடுக்காமல் நீங்களும் காணாமல் போகாமல் வீடுகளுள் இருங்களென மிரட்டப்படுவதாக குடும்பங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
---------------------------------------------------------------------------------------------
படை அதிகாரிகள் மட்;டத்திலேயே இத்தகைய அச்சுறுத்தல்கள் நாசுக்காக விடுக்கப்படுவதாக அக்குடும்பங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
---------------------------------------------------------------------------------------------
இதனிடையே மஹிந்தவின் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாகச் சாட்சியமளித்தவர்களது விவரங்களை கிராம சேவையாளர்களிடம் இராணுவத்தினர் கோரியிருப்பதாகத் தெரிய வருகின்றது. அதிலும் இராணுவத்தினருக்கு எதிராகச் சாட்சியமளித்தவர்களின் விவரங்களை அவர்கள் கேட்டிருப்பதாக அறியமுடிகின்றது.
---------------------------------------------------------------------------------------------
காணமற்போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக் குழுவின் அமர்வுகள் கடந்த 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை இடம்பெற்றது. இதில் 175 பொதுமக்கள் சாட்சியமளித்திருந்தனர். இவ்வாறு சாட்சியமளித்த மக்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத்தினருக்கு எதிராகவே தமது சாட்சியத்தை முன்வைத்திருந்தனர். இவ்வாறானதொரு நிலையில் ஆணைக்குழுவில் சாட்சியமளித்தவர்களின் விவரங்களை இராணுவ அதிகாரிகள் அவ்வப்பகுதி பிரதேச செயலகங்களிடம்; குறித்த விவரங்களைக் கோரியுள்ளதாக அறியமுடிகின்றது.
Subscribe to:
Posts (Atom)