Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Wednesday, December 4, 2013

டெல்லி பல்கலையில் 312 பணியிடங்கள்

டெல்லி பல்கலை.யில் காலியாக உள்ள 255 ஜூனியர் அசிஸ்டென்ட் உள்ளிட்ட 312 பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி விவரம்: 1. ஜாயிண்ட் டைரக்டர் (டிஎச்எம்ஐ): 2 இடங்கள் 2. சீனியர் சிஸ்டம் அனலிசிஸ்ட்/சீனியர் சிஸ்டம் புரோகிராமர்: 4 இடங்கள் 3. மேனேஜர்( பிரஸ்): 1 இடம் 4. அசிஸ்டென்ட் ரிஜிஸ்டிரார் 1 இடம் 5. புரோகிராமர்: 3 6, மேனேஜர் (சர்வதேச விருந்தினர் மாளிகை) : 1 7. யோகா ஆர்கனைசர்: 1 8. இந்தி அதிகாரி: 1 9. சீனியர் அசிஸ்டென்ட்: 35 10. இந்தி மொழி பெயர்ப்பாளர்: 2 11. புள்ளியியல் உதவியாளர்: 3 12. ஆவணக்காப்பாளர்: 1 13. ஜூனியர் அசிஸ்டென்ட்: 255 மாதிரி விண்ணப்பம், கல்வித்தகுதி, முன்அனுபவம், சம்பளம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.du.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.12.2013.

பி.இ., முதுநிலை பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை

இந்திய ராணுவத்தில் 2014 ஜனவரியில் தொடங்க உள்ள 119வது டெக்னிக்கல் கிராஜூவேட் கோர்சில் (டிஜிசி-119) சேருவ தற்கு பி.இ., தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய/மாநில அரசுகளில் தற்காலிகமாக பணிபுரிபவர்களும் விண்ணப்பிக்கலாம். பணிப்பிரிவு: 119th Technical Graduate Course (TGC 119) (July-2014). பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்: அ. இன்ஜினியரிங் பிரிவு: மொத்தம்: 80 இடங்கள். சிவில்-15, மெக்கானிக்கல்-15, எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்-10, ஆட்டோமொபைல்/வொர்க்ஷாப் டெக்னாலஜி-2, ஏரோநாட் டிக்கல்/ஏவியேஷன்/ஏரோஷேப்/பாலிஸ் டிக்ஸ்/அவியோனிக்ஸ்-2, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்/கம்ப்யூட்டர் டெக்னாலஜி/இன்பர்மேஷன் டெக்னாலஜி/ எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்-6, எலக்ட் ரானிக்ஸ் மற்றும் டெலிகாம்/டெலிகம்யூனிகேஷன்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/சாட்டிலைட் கம்யூனிகேஷன்-10, எலக்ட்ரானிக்ஸ்/ஆப்டோ எலக்ட்ரா னிக்ஸ்/பைபர் ஆப்டிக்ஸ்/ மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மைக்ரோ வேவ்-8, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென் டேஷன்/இன்ஸ்ட்ருமென் டேஷன்-3, ஆர்க்கிடெக்சர்/பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் டெக்னாலஜி-2, புட் டெக்னாலஜி/பயோ டெக்னாலஜி/ பயோ மெடிக்கல் இன்ஜினி யரிங்-2, கெமிக்கல் இன்ஜினியரிங்-2, மெட் டாலர்ஜி மற்றும் எக்ஸ்ப்ளோசிவ்ஸ்/ மெட் டாலர்ஜிக்கல் இன்ஜினியரிங்-1,இன்டஸ்ட் ரியல்/மேனுபேக்சரிங் இன்ஜினியரிங்/இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் மற்றும் எம்ஜிடி/புரொடக் ஷன்-2. தகுதி: சம்பந்தப் பட்ட பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ., அல்லது பி.டெக்., விண்ணப்பதாரர்கள் http://joinindianarmy.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.12.2013.

சிறீலங்கா வெள்ளைவான் படுகொலைகளின் சாட்சியங்கள் - சனல் 4

சிறீலங்கா வெள்ளைவான் படுகொலைகளின் சாட்சியங்கள் - சனல் 4

எமது தொண்டர்களைக் கொலை செய்தது சிறீலங்கா படையினரே - பட்டினிக்கு எதிரான அமைப்பு

பிரெஞ்சு தொண்டு நிறுவனமான, பட்டினிக்கு எதிரான அமைப்பின் இலங்கையின் உள்ளூர் தொண்டர்கள் 17 பேரை 2006ல் சிறீலங்கா படையினர்தான் கொன்றார்கள் என்று அத்தொண்டு நிறுவனம் குற்றம் சாட்டியிருக்கிறது. தனது தொண்டர்கள், முழங்காலிட வைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும், இவர்களைக் கொன்ற கொலையாளிகளை சிறீலங்கா அரசு இது வரை பாதுகாத்து வருகிறது என்றும் கூறுகிறது. இந்தத் தகவல் நேரில் கண்டவர்களிடமிருந்தும், ரகசிய ஆவணங்களிலிருந்தும், அரசு வட்டாரங்களிலிருந்தும் தனக்குக் கிடைத்துள்ளதாக அது கூறுகிறது. இந்தத் தகவலை இது வரை இந்த நிறுவனம் வெளியிடாமல் வைத்திருந்ததன் உள்நோக்கங்களை சிறீலங்கா இராணுவத்துக்காகப் பேசவல்ல அதிகாரி ஒருவர் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார். 17 humanitaires assassinés au Sri Lanka, le rapport qui dénonce

இலங்கை மனித உரிமை நிலைமையில் கனடா மிக அதிருப்தி

பொதுநலவாய மாநாட்டில் கனடிய பிரதிநிதியாக சென்ற வெளிவிவகார அமைச்சின் பாராளுமன்றச் செயலர் தீபக் ஒபரோய் தமிழ் பிரதிநிதிகளுடன் ஒரு பகிர்வு. பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றுவதற்கு கனடியப் பிரதமர் மறுத்துவிட்ட நிலையில், கனடாவில் சார்பில் இலங்கை சென்று திரும்பிய கனடிய வெளியுறவு அமைச்சின் பாராளுமன்றச் செயலாளர் தீபக் ஒபரோய் அவர்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்து தனது இலங்கை பயணம் பற்றிய விடயத்தில் அதிருப்தியை வெளியிட்டார். இச்சந்திப்பின் பின்னர் தமிழ் ஊடகங்களுக்கு ஒரு மாநாட்டை நடாத்தி இலங்கையின் மனித உரிமை நிலை, பொறுப்புக்கூறல், இனங்களுக்கான ஒருமைப்பாட்டில் ஆழ்ந்த அதிருப்தியை வெளியிட்டார். கடந்த சனிக்கிழமை, நவம்பர் 30ஆம் திகதி, ரொறன்ரோ நகரில் இந்த முக்கிய சந்திப்பும், ஊடக மாநாடும் இடம்பெற்றன. பொதுநலவாய மாநாட்டிற்காக இலங்கை சென்றிருந்த தீபக் ஒபரோய் அவர்கள், அங்கு சமூகப் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள், யாழ் கத்தோலிக்க ஆயர், எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், வடமாகாண முதலமைச்சர் உட்பட, பல்வேறு சந்திப்புக்களிலும் கலந்து கொண்டதை, கனடியத் தமிழ் மக்களிடம் விளக்கினார். யாழ்ப்பாணம் செல்வதற்கு தான் விரும்பியபோது, அதற்கான விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், அங்கு செல்வது சிரமம் என்று சிறீலங்கா அரசு மறுத்துரைத்த போதும், தாம் தரைவழியாகப் பயணிக்க அனுமதிபெற்று, 8 மணிநேரம் பயணித்து யாழ் சென்று தமிழ் மக்களின் வாழ்க்கையை நேரில் பார்த்து அறிந்து கொண்டதாகத் தெரிவித்த ஒபரோய் அவர்கள், அங்கு மக்கள் மிகவும் பயம்நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ்வதை தான் அவதானித்ததாகக் கூறினார். மீள்கட்டுமானம், மீள்குடியேற்றம், வாழ்வாதாரத்தில் எழுச்சி போன்ற எதனையும் தான் கண்டுகொள்ள முடியாமை தனக்கு வருத்தம் தருவதாகத் தெரிவித்த அவர், சர்வதேச சமூகம், சிறீலங்காவிடம் இதுகுறித்து போதிய மாற்றங்களைக் கோரும் என்றும் குறிப்பிட்டார். ஏற்கனவே சுதந்திர விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ள கனடா, தொடர்ந்தும் சர்வதேச சுயாதீன விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கும் என்று உறுதியளித்த ஒபரோய், வருகிற வருடம் ஜெனீவாவில் சிறீலங்கா குறித்த விவாதம் எழும்போது, அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் உட்பட, தொடர்ந்தும் மக்களின் வாழ்விடங்கள் மீள வழங்கப்படாமை, ஊடக சுதந்திரமின்மை, தொடரும் படுகொலைகள், பாதுகாப்பற்ற சூழல், மக்கள் அச்சத்துடன் வாழ்கின்ற சூழ்நிலை போன்ற பல்வேறு விடயங்களிலும் முன்னேற்றம் உள்ளதா என்ற கேள்வியை கனடா முன்வைக்கும் என்று தெரிவித்தார். தான் முதலாவது தடவையாக சுனாமி பேரழிவிற்குப் பின்னரும், இரண்டாவது தடவை, 2009ல் போர் முடிவுற்ற சூழ்நிலையிலும், தற்போது பொதுநலவாய மாநாட்டிற்காக மூன்றாவது தடவையாகவும் இலங்கை சென்று வந்துள்ளதை நினைவுகூர்ந்த ஒபரோய், அங்கு சிங்களவர், தமிழர், முஸ்லிம் மக்கள் அனைவரும் இலங்கை அரசில் அதிருப்தி கொண்ட நிலை இருப்பதை தான் அவதானித்ததாகவும், பிரதம நீதியரசர் சிராணியை பதவி நீக்கம் செய்தமை, ஊடகவியலாளர்கள் படுகொலை, ஊடக நிலையங்கள் மீதான தாக்குதல்கள், ஜனநாயக விரோத மற்றும் அச்சுறுத்தல் சூழ்நிலைகள் போன்றவற்றை நேரில் பார்த்தும் கேட்டும் அறிந்து கொண்டதுடன், அது குறித்து கனடா போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் கூறினார். கனடிய வெளியுறவு அமைச்சின் பாராளுமன்றச் செயலாளர் தீபக் ஒபரோய் அவர்கள், தமிழ் மக்கள் பிரதிநிதிகளை ரொறன்ரோவில் சந்தித்தபின் ஊடகவியலாருக்கு வழங்கிய மாநாட்டின் போது, அவர் வழங்கிய உரையையும் நிருபர்களின் வினாக்களுக்கு அவர் வழங்கிய பதில்களையும், இங்கேயுள்ள ஒளிக்காட்சி வடிவங்களில் காணலாம்.

புலம்பெயர் தமிழர்களே விழிப்படையுங்கள் - உங்கள் சொத்துக்களை சிறிலங்கா அபகரிக்கிறது

சிறிலங்கா அரசாங்கம் தனது படைகளை ஏவிவிட்டு கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தியதன் மூலம் வடக்கு கிழக்கு மக்களை வெளிநாடுகளுக்கு துரத்தியடித்துள்ள நிலையில் இன்று அவர்களின் காணிகளையும் சொத்துக்களையும் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. வெளிநாடுகளில் நிரந்தரமாக வசித்து வரும் வடமாகாணத்தை சேர்ந்தவர்களின் சொத்துக்கள் காணிகள் மற்றும் வீடுகள் அரசுடமையாக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் குடிசன மதிப்பீட்டில் வெளிநாட்டில் உள்ளவர்களின் வீடுகள் பற்றிய விபரங்கள் தெரியவரும் என்றும் அந்த தரவுகளின் அடிப்படையில் அவர்களின் காணிகள் அரச உடைமையாக்கப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 1982ம் ஆண்டின் பின்னர் போர் காரணமாக ஏற்பட்ட சொத்து மற்றும் உயிர்ச் சேதங்கள் தொடர்பிலான கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போர் காரணமாக முழுமையாக நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வரும் வடக்கு மக்களின் சொத்துக்களும் இவ்வாறு அரசுடமையாக்கப்பட உள்ளது. முக்கியமாக விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களின் வீடுகள் என இனங்காணப்படும் வீடுகளை உடனடியாக அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வடக்கு கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்த கடும் யுத்தம் காரணமாக வடக்கில் இருந்து சுமார் 10 லட்சம் வரையான தமிழ் மக்கள் வெளியேறி வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களின் காணிகளையும் வீடுகளையும் அரசுடமையாக்கி அவற்றை சிங்களவர்களுக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் மக்களால் தமது அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அபகீர்த்தி ஏற்பட்டு வருவதாக மகிந்த ராஜபக்ச அறிவித்து வருகின்ற நிலையில், அண்மையில் கோத்தபாய ராஜபக்ச கருத்து வெளியிடும் போது புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளை அடக்குவதில் சிறிலங்கா இராஜதந்திர ரீதியில் வெற்றிகளைக் கண்டுள்ளதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், வடக்கு கிழக்கிலுள்ள புலம்பெயர் தமிழ் மக்களின் வீடுகள் காணிகள் அடங்கிய சொத்துக்களை அபகரிக்க முற்படும் போது வேறு வழியின்றி புலம்பெயர் தமிழ் மக்கள் சிறிலங்காவுக்கு திரும்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று மகிந்தவும் கோத்தாவும் கணக்குப் போடுகின்றனர். இந்த கணக்கின் அடிப்படையிலேயே தற்போது அவர்களின் காணிகள் அரசுடமையாக்கப்படவுள்ளதென்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, வெளிநாடுகளில் பெருந்தொகையான சொத்துக்களையும் வீடு வாசல்களையும் வாங்கிக் குவித்துவிட்டு தொடர்ந்தும் சிறிலங்காவில் தங்கியிருந்து பணத்தைச் சுரண்டிக்கொண்டிருக்கின்ற மகிந்த குடும்பம் வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களின் காணிகளை மட்டும் சுவீகரிக்க முற்படுவது எந்த வகையில் நியாயம் என்று யாழ்.குடாநாட்டிலுள்ள புலம்பெயர் தமிழர்களின் உறவினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த மோசடி வேலைத்திட்டங்களை முறியடித்து தமது சொத்துக்களைப் பாதுகாப்பதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் வேண்டுகோள் விடுக்க வேண்டியது அவசிய தேவையாக உள்ளது. குறிப்பாக, தங்கள் வீடுகளையும் சொத்துக்களையும் அரசுடமையாக்க வேண்டாம் என்று சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு தாங்கள் வாழ்கின்ற நாடுகளின் அரசாங்கங்களிடம் புலம்பெயர் தமிழ் மக்கள் கோரிக்கை விடுக்க வேண்டியது தற்போது மிக அவசியாக உள்ளது. வேண்டுமாயின் அந்தந்த நாடுகளில் வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுக்கவும் தமிழ் மக்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.