Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, April 18, 2014
கனடா நிதி வழங்காத வருத்தத்தில் – கமலேஷ் சர்மா…
கனடாவின் தீர்மானம் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு தன்னார்வ அடிப்படையில் வழங்கி வந்த உதவிகளை நிறுத்திக்கொள்வதாக கனடா அறிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு நிதி உதவிகளை வழங்கப் போவதி;ல்லை என கனடா குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை காரணம் காட்டியே இந்த நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளது. 20 மில்லியன் டொலர் பெறுமதியான உதவிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
----------------------------------------------------------------------------------------------------
உதவிகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டமை வருத்தமளிப்பதாக கமலேஷ் சர்மா குறிப்பிட்டுள்ளார். எனினும் விரைவில் மீண்டும் நிதி உதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு கனடா தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
-
யு.எஸ்.- போட்லன்ட் நீரத்தேக்கம் ஒன்றில் இளஞன் ஒருவன் சிறுநீர் கழித்ததால் 144-மில்லியன் லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டது -
PORTLAND, Ore. 144-மில்லியன் லிட்டர்கள் சுத்தப்படுத்தப் பட்ட தண்ணீரில் இளவயதினன் ஒருவரின் சிறுநீர் கலந்ததால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதென நிரூபித்த போட்லன்ட் அதிகாரிகள் தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி உள்ளனர்.
3-வருட காலத்தில் இச்செயல் இரண்டாவது தடவையாக இடம்பெற்றுள்ளதால் நகரம் தண்ணீரை சுத்தமாக வைத்திருப்பதற்காக இவ்வளவு தூரம் சென்றுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------
2011-யூன் மாதம் போட்லன்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மவுன் ராபரில் நீர் விநியோக நீர்த்தேக்கத்தில் ஒரு மனிதன் சிறுநீர் கழித்ததால் 28-மில்லியன் லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------
இம்முறை அதே இடத்தில் வேறு நீர்த்தேக்கத்தில் 19-வயதுடைய ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது வீடியோவில் பதிவானதால் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------
துப்பரவான, குளிரான மற்றம் நிலையான தண்ணீரை பாவனையாளர்களுக்கு வழங்கவேண்டும் என்பது நீர் பணியகத்தினரின் அடிப்படை கட்டளை என பணியக நிர்வாகி டேவிட் ஷாவ் தெரிவித்துள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------
இந்த திறந்த நீர்த்தேக்கங்களிலிருந்து ஏற்கனவே சுத்திகரிக்கப் பட்ட தண்ணீர் நேரடியாக பாவனையாளர்களுக்கு செல்கின்றதென கூறப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------
இந்த சம்பவத்தில் 3 ஆண்கள் இரும்பு வேலியினால் அடைக்கப்பட்ட குறிப்பிட்ட நீர்த்தேக்கத்தின் அருகில் காணப்பட்டதாகவும் அவர்களில் ஒருவர் வேலிக்கூடாக சிறுநீர் கழித்ததும் மற்றய இருவரும் வேலியை அளந்து கொண்டிருந்ததும் நீர்த்தேக்கத்தில் பொருத்தப் பட்டிருந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------
மூவரின் விபரங்களும் வெளியிடப்படவில்லை.
-------------------------------------------------------------------------------------------------
2011-ல் சிறுநீர் கழித்த மனிதன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவருக்கு சமூக சேவை செய்யும்படி தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
- See more at: http://www.canadamirror.com/canada/24801.html#sthash.uml7RMI8.dpuf
இலங்கை ராணுவத்தினரின் குடும்பப்படங்கள் வெளியிடப்பட்டதால் சர்ச்சை
இலங்கைப் போரின் போது பொதுமக்களைக் கொன்று போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இலங்கை ராணுவத்தினர் மற்றும் அதிகாரிகள் பலரின் புகைப்படங்கள் மற்றும் பிற தரவுகள் அடங்கிய விவரங்களை பிரித்தானிய தமிழ் ஒன்றியம் என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது.
------------------------------------------------------------------------------------------
இந்த அமைப்பு வெளியிட்ட விவரங்களில் இலங்கை ராணுவத்தினர் பலரது புகைப்படங்கள் மட்டுமல்லாமல், அவர்களது மனைவிகள் மற்றும் குழந்தைகள் குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
------------------------------------------------------------------------------------------
இந்த விவரங்களில் காணப்படுவோர் உண்மையில் இந்தக் குற்றங்களை இழைத்தார்களா என்பது குறித்த ஆதாரம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டதற்கு பதிலளித்த இந்த அமைப்பைச் சேர்ந்த ஆழியன் , இது குறித்த ஆதாரங்களை தாங்கள் ஐநா போன்ற அமைப்புகளுக்குத் தரவிருப்பதாக கூறினார்.
------------------------------------------------------------------------------------------
ஆனால் போரில் ஈடுபடாத ராணுவத்தினரின் குடும்பத்தினர் குறித்த தரவுகளை பிரசுரித்தது குறித்து கேட்டதற்கு பதிலளித்த ஆழியன், ராணுவத்தினர் போர்முனைக்கு அனுப்பப்படும்போது, அரசு, அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினரை அழைத்து கௌரவித்து அனுப்பியது என்ற பின்னணியில் இந்தப் படையினர் போர்முனையில் என்ன குற்றங்களை இழைத்தார்கள் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள் என்றே கூறமுடியும், எனவே அந்தப் படங்களைப் பிரசுரித்த்தில் தவறில்லை என்றார்.
------------------------------------------------------------------------------------------
அது போல, அவர்களது அந்தரங்க உரிமைகளும் இதனால் மீறப்பட்டதாகக் கூறுவது தவறு, ஏனென்றால் சிங்கள படையினர் வன்னியில் போர் நடந்த போது இழைத்த மனித உரிமை மீறல்களை புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டிருக்கின்றனர் என்றார் அவர்.
------------------------------------------------------------------------------------------
தமிழ் அமைப்புக்களை தடை செய்ததற்கு இது பதிலடி"
------------------------------------------------------------------------------------------
அண்மையில் இலங்கை அரசாங்கம் சில தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்களை பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவை என்று கூறி தடை செய்து அறிவித்திருந்தது. அதற்கான எதிர்வினை அல்லது பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தப் படங்களை வெளிநாட்டில் இருக்கும் சில தமிழ் அமைப்புக்கள் மற்றும் அதைச் சார்ந்தவர்கள், இலங்கை ராணுவத்தினர் தொடர்பான தகவல்கள் மற்றும் புகைப்படங்களை இலங்கை பாதுபாப்புத் துறையின் இணையதளங்களில் இருந்து எடுத்து வெளியிட்டுள்ளார்கள் என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய.
------------------------------------------------------------------------------------------
இது குறித்து தாங்கள் கவலைப்படவில்லை என்றும் இதை ஒரு நகைச்சுவையாகவே தாங்கள் கருதுவதாகவும் கூறினா அவர். இலங்கை அரசின் பாதுகாப்புத்துறையின் இணையதளத்திலுள்ள எந்தத் தகவலும் இரகசியமானது அல்ல என்றும் பொதுமக்களின் பார்வைக்காகவே அவை வெளிப்படையாக வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த ருவான் வணிகசூரிய, "விளம்பரத்துக்காகத்தான் நாங்கள் எங்கள் படையினரின் படங்களை இணையதளத்தில் வெளியிடுகிறோம். எனவே எமது விளம்பர நடவடிக்கைகளுக்கு வேறு யாராவது உதவ முன்வந்தால் அது எங்களுக்கு மகிழ்ச்சிதானே. அதைப்பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? இனிமேல் அவர்களுக்கு எம்மைக் குறித்துப் பேச வேறு விஷயங்கள் எதுவும் இல்லை என்னும் அவர்களின் சிந்தனை வறட்சியைத்தான் இந்த செயல் காட்டுகிறது" என்றும் கூறினார்.
இலங்கை ராணுவத்தவரின் குடும்பப் படங்களை வெளியிட்டது சரியே”
இலங்கைப் போரின் போது பொதுமக்களைக் கொன்று போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று கூறி இலங்கை ராணுவ அதிகாரிகளின் குடும்ப புகைப்படங்கள் உள்ளிட்ட விவரங்களை இணையத்தில் வெளியிட்டது சரியே என்கிறார் இவற்றை வெளியிட்ட பிரித்தானிய தமிழ் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆழியன்
கிளிநொச்சியில் இராணுவத்தினரின் நில அபகரிப்பால் வீட்டுத்திட்ட நடவடிக்கைகள் பாதிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டு திட்ட நடவடிக்கை பாதிக் கட்டத்தையும் தாண்டவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் அலுவலகத்தில் இன்று நடந்த கலந்துரையாடலில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஏழாயிரம் வீடுகள் இந்திய வீட்டுத்திட்டுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டன. அவற்றில் இதுவரையில் மூவாயிரம் வீடுகளே கட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் அவற்றில் பல வீடுகள் இன்னமும் கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ள என்றும் குறிப்பிட்டார்.
-------------------------------------------------------------------------------------------------
வீட்டுத்திட்ட நடவடிக்கையில் பல்வேறு அரசியல்கள் காணப்படுவதினால் தொடர்ந்தும் இடையூறுகளைத் தாண்டியே நடவடிக்கைகள் தொடர்வதாக கிராம அலுவலர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக இலங்கை அரச படைகள் முன்னெடுக்கும் நில அபகரிப்பின் காரணமாகவே வீட்டுத்திட்ட நடவடிக்கைகள் தாமதமாவதாக தெரிவிக்கப்படுகிறது.
-------------------------------------------------------------------------------------------------
இராணுவத்தினர் வீட்டுத்திட்ட காலத்தில் காணிகளை அபகரிக்கும் நோக்குடன் மக்களை பிரச்சினைகளுக்கு உள்ளாக்கி வருவதாக கூறப்படுகிறது. சில அரச அதிகாரிகள் இராணுவத்தினரதும் அரசியல்வாதிகளினதும் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைத்து மக்களை நெருக்கடிக்குள் தள்ளுவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அரச அதிகாரி ஒருவர் குளோபலுக்குத் தெரிவித்தார்.
-------------------------------------------------------------------------------------------------
இராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களையும் நகரத்தை அண்டிய சில கிராமங்களின் சில பகுதிகளையும் தமக்கு வழங்க வேண்டும் என்று அரச அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். இதனால் குறித்த காணிகளை இராணுவத்திற்காக அபகரிக்க அரச அதிகாரிகள் சில காரணங்களை சொல்லி வருகின்றனர்.
-------------------------------------------------------------------------------------------------
சலசலப்புக்களைத் தாண்டியே வீட்டுத்திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சிப் பகுதியில் மிள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு நான்கு வருடங்கள் ஆகின்றமை குறிப்பிடத்தக்கது. நகரை அண்டிய சில இடங்களிலும்கூட இன்னமும் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவில்லை.
-------------------------------------------------------------------------------------------------
தொடர்ந்தும் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகின்றனர். இந்த கூடாரங்கள் மக்கள் வசிக்க ஒகந்ததலல்ல என்றும் அதனால் நோய்கள் ஏற்படும் என்றும் குறித்த வீடுகளை அமைத்த தொண்டு நிறுவனங்கள் தெரிவித்திருந்தமையை அண்மையில் குளோபல் தமிழ் செய்திகள் வெளியிட்டிருந்தது.
-------------------------------------------------------------------------------------------------
வீட்டுத்திட்ட பிரச்சினைகளை தீர்த்து விரைவில் வீடுகளை அமைத்து முடிக்க வேண்டும் என்று இன்றைய கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது. திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் சிக்கனமாகவும் விரைவாகவும் வீடுகள் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.
-------------------------------------------------------------------------------------------------
அத்துடன் விரைவில் அடுத்த கட்ட பயனாளிகளுக்கான வீட்டுத்திட்டம் தொடங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Friday, April 11, 2014
புலிகள் உருவாகின்றனர்! 65 பேர் இரண்டு மாதங்களில்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப உதவி செய்ததாகக் கூறப்படும் 65 பேர் கடந்த 2 மாதங்களில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
வடக்கு கிழக்குப் பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அதில் ஐவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
10 பெண்களில் எண்மர் பூஸா முகாமிலும் இருவர் வவுனியா தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு பணம் இவர்களிடம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கோபியின் மனைவிக்கு நான்காம் மாடியில் கருச்சிதைவு
இலங்கை இராணுவத்தால் தேடபப்ட்டுவரும் கோபி மற்றும் கஜதிபனின் துணைவியர்கள் மற்றும் தாயார் ஆகியோர்கள் நான்காம் மாடியில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்படுகின்றனர்.
இந்த சித்திரவதைகளின்போது கோபியின் துணைவியார் கருச்சிதைவிற்குள்ளாகியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை மீளிணைக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டுடன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்டு வரும் கோபியின் மனைவி கடந்த மாதம் திருகோணமலையில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கர்ப்பிணியான அவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். இந்தநிலையிலேயே அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீளுருவாகின்றனர் என்றும், அவர்களை மீளிணைக்கும் முயற்சிகளில் கோபி என்று அழைக்கப்படும் கஜீபன் என்பவர் ஈடுபட்டார் என்றும் தெரிவித்து அவரைத் தேடப்படுபவராக அறிவித்தது பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் பிரிவு. அதைத் தொடர்ந்து வடபகுதி முழுவதும் இராணுவத்தின் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டதுடன், கோபியுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்று கூறியும், சந்தேகத்தின் பேரிலும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
---------------------------------------------------------------------------------------------------------
அந்த வரிசையில் கடந்த மாதம் 11ஆம் திகதி கோபி என்று கூறப்படும் கஜீபனின் மனைவி சர்மிளா (வயது 26) பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். தேடப்படுவரான கோபியின் இருப்பிடத்தைக் கண்டறிவதற்காகவே அவர் கைது செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது. கர்ப்பிணிப் பெண்ணான அவர் மறுநாள் 12ஆம் திகதி ரயில் மூலமாகக் கொழும்பில் உள்ள குற்றப் தடுப்புப் பிரிவுக்கு (நாலாம் மாடி) கொண்டு செல்லப்பட்டார்.
-----------------------------------------------------------------------------------------
இந்தக் கைது நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் காரணமாக மூன்று மாதங்களான சர்மிளாவின் கர்ப்பம் 14 ஆம் திகதி காலை கலைந்தது என்று கூறப்படுகின்றது. எனினும் அப்போது அவருக்கு சாதாரணமாக வழங்கப்பட வேண்டிய மருத்துவ உதவிகள் கூட வழங்கப்படவில்லை. மாறாக அதன் பின்னரும் அவர் கொழும்பில் இருந்து பூஸாவுக்கு ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, இந்தக் குற்றச்சாட்டை அடியோடு மறுத்துள்ளார் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண.
வவுனியாவில் புலிகளின் முக்கியஸ்தர்கள் சுட்டுக்கொலை
இராணுவத்தினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பதில் துப்பாக்கிப் பிரயோகத்திலேயே கோபி, அப்பன், தேவியன் ஆகிய மூவரும் கொல்லப்பட்டனர் என்று இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டார்.
மோடி ஏன் மனைவியை பிரிந்தார் துலக்குகிறார் சகோதரர்
எங்களின் பெற்றோர் போதிய கல்வியறிவு இல்லாதவர்கள். நாங்கள் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அப்போது இருந்த சமூக வழக்கத்தின்படி மிகவும் சிறிய வயதிலேயே நரேந்திர மோடிக்கும், யசோதா பென்னுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டனர்.
கோபியுடனான மோதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இராணுவ வீரரை, இராணுவத்தினரே சுட்டுக்கொன்றனர்!
விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என அரசாங்கம் கூறும் கோபி என்பவருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இராணுவ வீரர், இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டிலேயே இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
----------------------------------------------------------------------------------------------
அத்துடன் அவர் இராணுவ வீரர் அல்ல எனவும் இராணுவத்தினர் பயன்படுத்தி வந்த உளவாளி எனவும் தெரியவந்துள்ளது.
----------------------------------------------------------------------------------------------
இந்த உளவாளி கொக்காவில் இராணுவ முகாமில் பணியாற்றிய செல்வராஜா கமலராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
----------------------------------------------------------------------------------------------
எவ்வாறாயினும் இந்த உளவாளியின் கொலையை பயன்படுத்தி வேறு காரணம் ஒன்றை பிரசித்தப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பேசப்படுகிறது.
----------------------------------------------------------------------------------------------
இதற்கு முன்னர் கிளிநொச்சியில் கோபி என்பவரின் துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தாக கூறப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் பற்றிய தகவல்களை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை.
----------------------------------------------------------------------------------------------
கோபி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
----------------------------------------------------------------------------------------------
இந்த நிலையில், இன்று காலை இடம்பெற்றதாக கூறப்படும் மோதல் சம்பவம் குறித்த செய்தி பெரும் சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் மோதல்! கோபி உட்பட மூவரும் சுட்டுக் கொலை?
நெடுங்கேணி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் இரண்டு தரப்பினருக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------
தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், ஒரு இராணுவ படைவீரர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------------
எனினும் இந்த தகவல்கள் இன்னமும் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
----------------------------------------------------------------------------------------------
இந்த மோதல் சம்பவத்தில் பிரதான தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களில் ஒருவரான பொன்னையா செல்வநாயகம் எனப்படும் கோபி என்பவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
----------------------------------------------------------------------------------------------------
நேற்றிரவு நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவத்தினர் தீவிர தேடுதல் நடத்தியுள்ளனர்.
இதன் போது இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சம்பவம் தொடர்பிலான தகவல்களை திரட்டி வருவதாகவும் தற்போதைக்கு எதனையும் குறிப்பிட முடியாது எனவும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
---------------------------------------------------------------------------------
இரண்டாம் இணைப்பு
வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் நேற்றிரவு விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் சிலருடன் மோதல் ஏற்பட்டுள்ளது.
Wednesday, April 9, 2014
தஞ்சை பெரிய கோவிலின் மர்ம சக்தி...! முன் கதையும், இன்றையக் கதையும்!-நேற்றைய பதிப்பின் தொடர்ச்சியும் முடிவும்.
தஞ்சை பெரிய கோவிலின் மர்ம சக்தி...! முன் கதையும், இன்றையக் கதையும்!-நேற்றைய பதிப்பின் தொடர்ச்சியும் முடிவும்.
---------------------------------------------------------------------------------
தி.மு.க., ஆட்சி பறிபோன பரிதாபம் : தஞ்சை பெரிய கோவில் சென்டிமென்ட்
(தினமலர் செய்தி)
---------------------------------------------------------------------------------
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலுக்குள் பதவியில் இருப்பவர்கள் வந்து சென்றால், பதவி பறிபோகும் என்பது, இந்த தேர்தல் மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது.
"தஞ்சை பெரிய கோவிலுக்கு வி.ஐ.பி.,க்கள் வந்து சென்றால், அவர்கள் பதவி பறிபோகும்; உயிர் போகும்' என, பல கருத்துக்கள் நிலவுகின்றன. இதனால், இங்கு வரும் பெரும்பாலான வி.ஐ.பி.,க்கள், பெரிய கோவிலுக்குள் செல்வதை தவிர்ப்பர்.இதற்கு, பிரதமராக இருந்த இந்திரா, முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., போன்றோரை உதாரணமாகக் கூறுவர். தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில், 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.இச்சம்பவம் அறிந்து அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி, கோவிலின் நேர் வழியாக வராமல் பக்கவாட்டு வாசல் வழியாக வந்து, கோவிலுக்குள் செல்லாமல், சம்பவ இடத்தை மட்டும் பார்வையிட்டுச் சென்றார். இதுபோல, பல உதாரணங்களை கூறலாம்.
---------------------------------------------------------------------------------
கடந்த செப்., 22 முதல் 26ம் தேதி வரை, தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரமாவது ஆண்டு விழா நடந்தது. 25ம் தேதியன்று கோவிலுக்குள் பத்மா சுப்பிரமணியம் தலைமையில் ஆயிரம் நடனக் கலைஞர்கள் நடனமாடினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பட்டு வேட்டி, சட்டை சகிதமாக வந்த கருணாநிதி, பிரதான வாயில் வழியாக வராமல், சிவகங்கை பூங்கா வழியாக, தெற்குப்புற வாயில் வழியாக வந்து, மூலஸ்தானத்துக்கு பக்கவாட்டில் அமர்ந்து நிகழ்ச்சியை கண்டுகளித்தார். பெரிய கோவிலுக்குள் முதல்வர் வந்து சென்றதால், பெரிய கோவில் சென்டிமென்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக பலரும் கருதினர். அடுத்த நாள் நிறைவு விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா பேசுகையில், "இந்த நாள் கணக்கு பார்க்கும் நாள்; கணக்கு தீர்க்கும் நாள். ராஜராஜன் காலத்தில் சதுர்வேதி மங்கலங்களை உருவாக்கினார். ஆனால், தி.மு.க., தலைவர் கருணாநிதி சமத்துவபுரத்தை உருவாக்கி, அவர் காலத்தைச் சேர்ந்த ஆதிக்க கணக்கை கருணாநிதி தீர்த்துள்ளார்' என பேசிச் சென்றார்.
---------------------------------------------------------------------------------
கடந்த நவம்பரில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் சிக்கிய ராஜா, பதவி இழந்து, கைதாகி இன்று வரை வெளியே வர இயலாத வகையில் டில்லி திகார் சிறையில் சிக்கித் தவிக்கிறார். "2ஜி' ஸ்பெக்ட்ரம் பிரச்னையால், காங்., - தி.மு.க., உறவும் பல கட்ட பிரச்னைகளை சந்தித்து, கனிமொழி, தயாளு போன்றோரிடம் சி.பி.ஐ., விசாரணை, கலைஞர் "டிவி' அலுவலகத்தில் ரெய்டு, குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர், தொடர் விசாரணை, எந்த நேரமும் கைதாகலாம் என்ற நிலை, தேர்தல் கூட்டணியில் இழுபறி என தொடர்ந்த சிக்கல், பெரிய கோவில் சென்டிமென்டை மீண்டும் நிரூபித்துள்ளது.
---------------------------------------------------------------------------------
தேர்தல் துவங்கியது முதல், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியை வைத்து கணித்த அனைவரும், இரு கட்சிகளும் சம பலத்தில் வருவர், கூட்டணி ஆட்சி நடக்கும் என, பல யூகங்களை தெரிவித்தனர்.இதனால், தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றாவிட்டாலும், மத்தியில் அங்கம் வகிப்பதால் தங்களை அ.தி.மு.க.,விடம் இருந்து காத்துக் கொள்ளலாம் என எண்ணிய தி.மு.க.,வுக்கு, தேர்தல் ரிசல்ட் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
---------------------------------------------------------------------------------
எதிர்க்கட்சியாகக் கூட அமர இயலாத அளவுக்கு, தஞ்சை பெரிய கோவில், "சென்டிமென்ட்' தன் வேலையை காட்டியுள்ளது என்பது, இந்த சென்டிமென்ட் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களை மீண்டும் முணுமுணுக்க வைத்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்க முக்கிய உறுப்பினர் கைது
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் செயல்பட்டதாகக் கூறப்படும் முக்கிய உறுப்பினர் சுப்ரமணியம் கபிலன் என்பவரை இலங்கைப் போலிசார் கைது செய்திருக்கிறார்கள்.
இது குறித்து இலங்கைப் போலிஸ் துறைக்காகப் பேசவல்ல அஜித் ரோஹன பேசுகையில், நந்தகோபன் என்று விடுதலைப்புலிகளால் அழைக்கப்பட்ட, சுப்ரமணியம் கபிலன் , யாழ்ப்பாணம் ஏழாலை கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றார்.
ரே பரேலியின் ஆம் ஆத்மி வேட்பாளராக எதிர்பார்க்கப்பட்ட பக்ருதீன் விலகல்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் ரே பரேலி தொகுதியில் அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர் பக்ருதீன் இந்த தேர்தலில் போடியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------
மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியான பக்ருதீன் ரே பரேலி தொகுதியில் போட்டியிடுவார் என்று ஆம் ஆத்மி முன்னர் கூறியிருந்தது.
------------------------------------------------------------------------
ஆனால் தான் போட்டியிடப்பொவதில்லை என்று பக்ருதீன் கூறியதை அடுத்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் யார் போட்டியிடுவார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மிசோரம் வாக்குப்பதிவு ஒத்திவைப்பு
------------------------------------------------------------------------
இதற்கிடையில் மிசோரம் மாநிலத்தில் 9ஆம் தேதி புதன்கிழமை நடைபெறவதாக இருந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் ஏப்ரல் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
------------------------------------------------------------------------
பிரிவினை பிரச்சனை காரணமாக மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ப்ரூ பழங்குடியினர் ஆயிரக்கணக்கானோர் திரிபுராவில் அகதி முகாம்களில் தங்கியுள்ளனர்.
------------------------------------------------------------------------
இந்த தேர்தலில் அவர்கள் மிசோரம் மாநிலத்தில் தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம அனுமதி வழங்கியுள்ளதை எதிர்த்து மிசோரம் மாநிலத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
------------------------------------------------------------------------
தன்னார்வ அமைப்புகளும், மாணவர்கள் கூட்டமைப்புகள் என்று பல்வேறு அமைப்புகள் நேற்று துவங்கி 3 நாட்கள் ‘பந்த்’ அறிவித்திருந்தது. எனவே வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பில் 20 பேர் பலி
பாகிஸ்தானிய தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் ஒரு பழ மற்றும் காய்கறிச் சந்தையில் இடபெற்ற ஒரு வெடிப்பில் குறைந்தபட்சம் 20 பேராவது கொல்லப்பட்டனர்.
மேலும் 100 பேர் அதில் காயமடைந்தனர்.
----------------------------------------------------------------------------
குண்டு ஒரு பழக் கூடையில் மறைத்து வைக்கப்படிருந்திருக்கிறது.
கடந்த 6 வருடங்களில் இஸ்லாமாபாத்தில் நடந்த மிகவும் கோரமான தாக்குதல் இதுவாகும்.
அரசாங்கத்துடன் தற்போது மோதல் நிறுத்தத்தில் இருக்கும் பாகிஸ்தானிய தலிபான்கள், தமக்கும் இந்தத் தாக்குதலுக்கும் தொடர்பு கிடையாது என்றும், பொதுமக்களை இலக்கு வைத்துத் தாக்குவது இஸ்லாமிய சட்டங்களுக்கு முரணானவை என்றும் கூறியுள்ளனர்.
நாட்டை ஸ்திரமிழக்கச் செய்வதற்கான பாகிஸ்தானின் எதிரிகளின் நடவடிக்கை இது என்று அந்த நாட்டின் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
சாரயதொழில் சாலையை கொண்டுவரும் TR.பாலு
வடசேரி மக்கள் தங்களுடைய வாழ்வாதாரம்
பாதிக்கிறது வகையில் சாரயதொழில் சாலையை
கொண்டுவரும் TR.பாலுமுயற்சியை முறியடிக்க முயற்ற கிராம மக்களை தடியடி நடந்த நாளான இன்று கிராம மக்களின் சார்பாக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அந்த பேரணியில். நமது வெற்றி
வேட்பாளர். கருப்பு அவர்கள்
நாளைய தஞ்சை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் மாவீரன் கருப்பு(எ)முருகானந்தம் அவர்கள்
நாளைய தஞ்சை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் மாவீரன் கருப்பு(எ)முருகானந்தம் அவர்கள்
தீவிர வாக்கு வேட்டையில் உள்ளார்.
மாற்றத்தை எதிர் பார்க்கும் மாற்றுத்திறனாலிகள்,
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பயன் பெறுபவர்கள்,
விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், இஸ்லாமியர்கள் என
பல்வேறு தரப்பினரும் அண்ணன் Karuppu Muruganadham
அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
அண்ணனின் வெற்றி உறுதி செய்யப்பட்டது என்றாலும்
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும்
என்பதே தஞ்சை மக்களின் எதிர்பார்ப்பு.
வாக்கு செலுத்தும் அந்த நிமிடம் இந்த விடியோவை மனதில் நினைத்துகொள்ளவும்
வாக்கு செலுத்தும் அந்த நிமிடம் இந்த விடியோவை மனதில் நினைத்துகொள்ளவும்... எதிரியை விட துரோகிதான் முதலில் அழிக்கப்பட வேண்டியவர்கள்...
Tuesday, April 8, 2014
தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு எப்போதும் ஆதரவளிப்போம்...
தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு எப்போதும் ஆதரவளிப்போம்...
**********************************************************************************************
!டெல்லி ,---------------------------------
2.தெலங்கானா,,------------------------
3.அசாம்,,---------------------------------
4.மணிப்பூர்,,-----------------------------
5.பஞ்சாப்,,--------------------------------
6.மகாராஷ்டிரா,,------------------------
7.கர்நாடகம்,,-------------------------------
8.கேரளா்,,-----------------------------------
9.கோவா,்,,--------------------------------
10.ஜார்க்கண்ட்,----------------------------
11.குஜராத் ,்,,------------------------------
12.மேற்கு வங்காளம்்,,---------------------
13.புதுச்சேரி்,,--------------------------------------
14.உத்திரபிரதேசம்்,,----------------------------
15.பீகார்்,,------------------------------------------போன்ற பல்வேறு மாநில மாணவர் பிரதிநிதிகளும் இளைஞர்களும் ,இனப்படுகொலை தினமான மே /18/2014 அன்று, தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஒன்றுகூடி
"தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு எப்போதும் ஆதரவளிப்போம்... " என உறுதி அளித்து தமிழ்நாடு மாணவர் போராட்டத்திற்கு வலு சேர்க்க உள்ளனர்.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்களும்,உணர்வாளர்களும் பெருந்திரளாக ஒன்று கூட உள்ளோம்.உலகம் தஞ்சை தரணியை மீண்டும் திரும்பிப் பார்க்கும் விதத்தில் விண் அதிர முழங்க உள்ளோம். ்,,-----மனித நேயம் படைத்த அனைவரும் மாணவர்களோடு கைகோர்க்க வாருங்கள் ! நீதி கேட்போம்!
VOICE FOR THE VOICELESS . ஒருங்கிணைப்பு: *மாற்றம்- மாணவர் இளையோர் இயக்கம். (9080655521,9500085810)

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாயாரை பார்வையிட விபூசிகா செல்லவுள்ளார்:-
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாயாரை பார்வையிட விபூசிகா செல்லவுள்ளார். சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள விபூசிகா அவரது உடமைகள் எடுப்பதற்காக பாதுகாப்புடன் அவர்களது வீட்டுக்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட உடமைகளை எடுத்து வருவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை அடுத்தே அவர் தர்மபுரத்திலுள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
-------------------------------------------------------------------------------------------
கிளிநொச்சி சிறுவர் நன்னடத்தை அதிகாரி மற்றும் மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தலைவர்; ஆகியோர் பொலிஸார் சகிதம் சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மேலும் தாயாரை தடுப்பு முகாமுக்கு சென்று பார்த்து வருவதற்கு தேவையான ஆவணங்களை கிராம சேவகரிடம் இருந்தும் விபூசிகா பெற்றுக்கொண்டார்.
-------------------------------------------------------------------------------------------------
பொலிஸாரால் தேடப்படும் குற்றவாளியான கோபி என்பவருக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் வீட்டில் வெடிபொருட்களை வைத்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு விபூசிகா அவரது தாயார் ஜெயக்குமாரி ஆகியோர் கடந்த மாதம் 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Monday, April 7, 2014
சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பெயரும் தடைப் பட்டியலில்'
இலங்கை அரசு சில அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீது தடை விதித்து வெளியிட்டுள்ள பட்டியலில் பல குளறுபடிகளும் பிழைகளும் இருப்பதாக விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை விடுதலைப் புலிகள் உட்பட 16 அமைப்புகள் மற்றும் 400 க்கும் அதிமான தனி நபர்களுக்கு தடை விதித்து வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களும் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா அரியநேத்திரன் தமிழோசையிடம் தெவித்தார்.
நாட்டை ஆளும் கூட்டணிக்கு தலைமையேற்றுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு அமைப்பாளர் என்று கூறப்படுபவரின் பெயரும் அதில் உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
---------------------------------------------------------------------------------------------
மட்டக்களப்பு மாவட்டத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வருபவர்களின் பெயர்கள் மற்றும் ஆலய பரிபாலன சபையின் நிர்வாகப் பொறுப்பிலுள்ளவர்களின் பெயர்களும் அதில் உள்ளன எனக் கூறும் அரியநேத்திரன், அதன் காரணமாக உள்ளூர் மக்கள் பெரும் கவலையும் கலக்கமும் அடைந்துள்ளதாகவும் கூறுகிறார்.
---------------------------------------------------------------------------------------------
அரசின் பட்டியல் வெளியானதை அடுத்து தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு மீண்டும் எற்பட்டுள்ளது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
---------------------------------------------------------------------------------------------
உள்ளூர் மக்களின் பெயர்களும் அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் இருப்பது தொடர்பில் பலர் தொடர்ச்சியாகத் தன்னிடம் வந்து முறைப்பாடு செய்துள்ளனர் என்றும் இதன் காரணமாக சமூகப் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன எனறும் அவர் மேலும் தெரிவித்தார்.
---------------------------------------------------------------------------------------------
இவை மட்டுமல்லாமல் கனடாவிலிருந்து இயங்குவதாக கூறி தடை விதிக்கப்பட்டுள்ள சில அமைப்புகள் தற்போது இயங்கவில்லை என்றும் அவை இயங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ள விலாசங்கள் தவறானவை என்று ஊடகச் செய்திகள் வந்துள்ளன.
வறட்சியால் இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் விவசாயம் பாதிப்பு
இலங்கையின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்திருக்கின்றது.
-----------------------------------------------------------------------------------------------
வட மாகாணத்தில் வவுனியாவில் அதிகூடிய வெப்ப நிலைமையாக 40 டிகிரி வெப்பம் பதிவாகியிருப்பதாக காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் எஸ்.ஆர்.ஜயசேகர கூறியிருக்கிறார்.
-----------------------------------------------------------------------------------------------
இந்த வருடம் பல விவசாய மாவட்டங்கள் கூடுதலான வறட்சியை எதிர்நோக்கியிருப்பாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
-----------------------------------------------------------------------------------------------
வவுனியா, மன்னார், அனுராதபுரம், பொலன்னறுவை, குருணாகலை, புத்தளம், மொனராகலை ஆகிய மாவட்டங்கள் வறட்சியினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------
இதேவேளை, இலங்கையின் வடக்கு கிழக்கு உட்பட பல இடங்களில் இம்மாதம் 5ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையில் சூரியன் கடும் வெப்பத்துடன் உச்சம் கொண்டிருக்கும் என்று காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் ஜயசேகர தெரிவித்திருக்கின்றார்.
-----------------------------------------------------------------------------------------------
தற்போதைய வறட்சி காரணமாக வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் விவசாயம் ஸ்தம்பித நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக கொழும்பு பல்கலைக்கழக பூகோள பிரிவு பேராசிரியர் எஸ்.அன்ரனி நோபர்ட் அவர்கள் கூறியிருக்கின்றார்.
-----------------------------------------------------------------------------------------------
பூகோளம் வெப்பமடைவதாலும், சூரியனில் இருந்து திடீரென வெப்ப ஒளிவட்டம் தோன்றி வெப்பத்தை அதிக அளவில் வெளியிட்டிருப்பதனாலும், கூடிய வெப்ப நிலைமை அடுத்த சில வருடங்களுக்குத் தொடர்ந்து நிலவும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
-----------------------------------------------------------------------------------------------
வடபகுதி நிலைமை குறித்து கருத்து வெளியிட்ட வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வட மாகாணம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்ற வகையில், உட்கட்டமைப்புக்கள் சிதைவடைந்துள்ளதுடன், நிதியூட்டம் குறைந்த பிரதேசமாகவும் திகழும் நிலையில் இயற்கையின் பாதிப்பாக கடும் வறட்சியையும் எதிர் நேக்கியிருப்பதாகக் குறிப்பிட்டார்.
-----------------------------------------------------------------------------------------------
"இம்முறை வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் 91 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், வறட்சி காரணமாக 64 ஆயிரம் ஹெக்டேரில் மாத்திரமே நெல் பயிரிடப்பட்டது. அதிலும் வறட்சியினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அரைவாசியிலேயே நெல் உற்பத்தியைப் பெற முடிந்தது. இரணைமடு குளத்தின் கீழ் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சிறுபோகம் செய்வதுண்டு. ஆனால் குறத்தில் நீர் இல்லாத காரணத்தினால் அதன் பத்தில் ஒரு பங்காகிய 800 ஏக்கரில் மாத்திரமே சிறுபோகத்தில் நெற்செய்கைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. அடுத்த கால போகத்திற்குத் தேவையான விதைநெல் உற்பத்திக்காகவே இந்த முயற்சி முக்கியமாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது" என்று அவர் தெரிவித்தார்.
-----------------------------------------------------------------------------------------------
வறட்சியினால் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதற்கென அரசாங்கம் மாவட்டம் ஒன்றிற்கு ஒரு மில்லியன் ரூபா நிதியை அரசு ஒதுக்கியிருப்பதாகவும், இந்த நிதியைப் பயன்படுத்தி வினைத்திறன் மிக்க வகையில் குடிநீர் விநியோகத்தை முன்னெடுப்பதற்கு மாகாண சபையை அதிகாரிகள் கலந்து ஆலோசிக்கவோ இணைந்து செயற்படவோ இதுவரையில் முன்வரவில்லை என்றும் மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் கூறினார்.
Friday, April 4, 2014
ஜெனீவா தீர்மானத்தை அரசு ஏற்க வேண்டும்: முஸ்லிம் காங்கிரஸ்
ஜெனீவா தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஆளும் கூட்டணியின் ஒரு அங்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது.
அந்தத் தீர்மானத்திக்கு முகம்கொடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை நிரபராதிகள் என்று நிரூபிப்பதால் மட்டுமே அபாண்டமான குற்றஞ்சாட்டுபவர்களை மண்ணைக் கவ்வவைக்க முடியும் என அக்கட்சியின் பொதுச் செயலர் ஹஸன் அலி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
---------------------------------------------------------------------------------------------------
அவ்வாறு செய்யாமல், விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் எனக் கூறுவது குற்றம்சாட்டுபவர்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் எனும் தோற்றப்பாட்டை ஏற்படுத்தக் கூடும் எனவும் ஹஸன் அலி கூறுகிறார்.
---------------------------------------------------------------------------------------------------
வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தைரியமாக எதிர்கொண்டு அந்தக் குற்றச்சாட்டுகள் தவறு என நிரூபிப்பதே சாலச் சிறந்ததாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
---------------------------------------------------------------------------------------------------
ஜெனீவாவில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானமும் நாட்டுக்கு எதிரானது அல்ல, அவை இறுதிகட்ட போரின்போது குற்றமிழைத்ததாகக் கூறப்படும் தனிநபர்களுக்கு எதிரானவையே என அவர் கூறினார்.
---------------------------------------------------------------------------------------------------
நாட்டிலுள்ள அனைவரையும் குற்றவாளிகளாக ஜெனீவா தீர்மானம் காணவில்லை என்றும், போர் நிறுத்த காலமான 22.2.2002 முதல் போர் முடிவடைந்த 19.5.2009 வரையிலான பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்தான் இதற்கான பதிலைச் சொல்ல வேண்டும் எனவும் ஹஸன் அலி கூறுகிறார்.
---------------------------------------------------------------------------------------------------
இலங்கை அரசுடன் தமது கட்சிக்கு பல விஷயங்களில் முரண்பாடு இருந்தாலும், ஆட்சியிலிருந்து வெளியே வருவது சரியான நிலைப்பாடு இல்லை எனவும் அவர் கூறுகிறார்.
---------------------------------------------------------------------------------------------------
அரசாங்கத்தின் அணுகுமுறையையே தாங்கள் குறை கூறுவதாகவும் அரசின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தவில்லை எனவும் ஹஸன் அலி மேலும் தெரிவித்தார்.
ஐ.நா தீர்மானம் காரணமாக இலங்கையில் இன சமூகங்களுக்கு இடையில் பிளவு ஏற்படவில்லை – அமெரிக்கா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக இலங்கையில் இன சமூகங்களுக்கு இடையில் பிளவு ஏற்படவில்லை என அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜே சிசன் தெரிவித்துள்ளார். துரதிஷ்டவசமாக இலங்கையில் மிக நீண்ட காலமாகவே இன சமூகங்களுக்கு இடையில் பிரிவினை நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------
அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக இலங்கையில் இனங்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------
தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே இலங்கையில் இன சமூகங்களுக்கு இடையில் பிளவு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பௌதீக ஒருமைப்பாடு மற்றும் நாட்டின் ஐக்கியத்தை வலியுறுத்தியே இலங்கை தொடர்பான தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதனை சுட்டிக்காட்ட விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மிகவும் ஸ்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை பொறிமுறைமையின் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------
நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் ஆகியன தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் போதுமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு எதிராக மட்டும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், சிரியா, பர்மா, லிபியா, மாலி, ஹெய்டி, தென் சூடான் உள்ளிட்ட பல நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து கேள்வி எழுப்பபட்டிருந்தது என சிசன் குறிப்பிட்டுள்ளார்.
Wednesday, April 2, 2014
தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 131 பேர் வேட்புமனு தாக்கல்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஒரே நாளில் தமிழகத்தில் 131 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 29ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நேற்று மதியம் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக வேட்பாளர்களில் பலர் தங்கள் மனைவி, மகன் மற்றும் மகளை
மாற்று வேட்பாளராக குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து அவர்களின் பெயர்களில் மாற்று வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 131 பேர் வேட்புமனு தாக்கல் அதிமுகவினரை தவிர்த்து விருதுநகரில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஈரோட்டில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி, குமரியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், தென் சென்னையில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், திருச்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மு. அன்பழகன், ஆரணியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆர். சிவானந்தம் ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் துவங்கிய நாளான மார்ச் 29ம் தேதி 67 பேரும், நேற்று 131 பேரும் என இரண்டு நாட்களில் 198 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை(உகாதி) ஆகிய தினங்கள் விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்கை ரத்து செய்தது சரியே - சுப்ரீம் கோர்ட்
டெல்லி: பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது சரியே என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து விட்டது. பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்கை ரத்து செய்தது சரியே - சுப்ரீம் கோர்ட் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அறிவு என்கிற பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தாக்கல் செய்த கருணை
மனுவை காரணமே இல்லாமல் 11 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போட்டு வைத்திருந்த மத்திய அரசின் தாமதத்தைக் காரணம் காட்டி அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றி பிப்ரவரி 18ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் அதிரடி தீர்ப்பளித்தது. மேலும் இவர்களின் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் கூறியிருந்தது. இதையடுத்து அடுத்த நாளே முதல்வர் ஜெயலலிதா இவர்கள் உள்பட முருகனின் மனைவி நளினி, ராபர் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரையும் சேர்த்து விடுதலை செய்யப் போவதாக அறிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு இந்த முடிவுக்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தை நாடியது. மேலும், 3 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் முடிவை மறு பரிசீலனை செய்யக் கோரி சீராய்வு மனுவையும் தாக்கல் செய்தது. தமிழக அரசின் முடிவுக்குத் தடை கோரிய மத்திய அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்து வந்தது. இன்று அந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்த உத்தரவு சரியே என்றும் கூறி விட்டது. இந்தத் தீர்ப்பு பேரறிவாளன், முருகன், சாந்தன் உயிருக்காக போராடி வரும் தமிழ் ஆர்வலர்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும் பெரும் உவகையை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Posts (Atom)