Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, March 7, 2014
மனைவி, மகளுக்கு சீட்: லல்லு மீது மூத்த தலைவர்கள் அதிருப்தி
பாட்னா,மார்ச்.07 (டி.என்.எஸ்) பாராளுமன்ற தேர்தலில் மனைவி, மகளை லல்லு பிரசாத் யாதவ் வேட்பாளராக அறிவித்துள்ளதால் மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
--------------------------------------------------------------------------------------
பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் லல்லுபிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. நேற்று லல்லு பிரசாத் யாதவ் தனது கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
--------------------------------------------------------------------------------------
லல்லு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் அவர் தனது சரன் தொகுதியில் மனைவியும், முன்னாள் முதல்–மந்திரியுமான ராப்ரிதேவியை வேட்பாளராக நிறுத்தியுள்ளார்.
--------------------------------------------------------------------------------------
இதேபோல் லல்லுபிரசாத் தனது இளைய மகள் மிசா பார்தியை பாடலிபுத்திரா தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------
லல்லுபிரசாத் சிறை சென்றபோது அவரது மனைவி மற்றும் மகன்கள்தான் கட்சி பணிகளை கவனித்து வந்தனர். ஆனால் மகளுக்கு சீட் கொடுத்து இருப்பது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
--------------------------------------------------------------------------------------
பாடலிபுத்திரா தொகுதியை லல்லுபிரசாத் யாதவின் நெருங்கிய ஆதரவாள ரான ராம்கிரிபால் யாதவ் கேட்டு இருந்தார். இவர் ஏற்கனவே பாட்னா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளார்.
--------------------------------------------------------------------------------------
தற்போது டெல்லி மேல்– சபை எம்.பி.யாக இருக்கும் ராம்கிரிபால் யாதவ்- பாடலிபுத்ரா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் அவருக்கு தொகுதி ஒதுக்கப்படாததால் ராம்கிரிபால் யாதவ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார்.
--------------------------------------------------------------------------------------
கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் லல்லு பிரசாத் யாதவ் பாடலிபுத்ரா, சரன் ஆகிய 2 தொகுதியில் போட்டியிட்டார். இதில் பாடலிபுத்ராவில் தோல்வி அடைந்தார். சரன் தொகுதியில் வெற்றி பெற்றார்.
--------------------------------------------------------------------------------------
இப்போது இந்த தொகுதியையும் மற்றவர்களுக்கு கொடுக்காமல் மனைவி– மகளையே வேட்பாளர்களாக நிறுத்தி இருப்பது கட்சியில் மூத்த தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
--------------------------------------------------------------------------------------
லல்லு பிரசாத் யாதவ் முன்பு இந்திரா ஆட்சியில் மிசா சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி கைதானார். இதனால் தனது மகளுக்கு மிசாபார்தி என்று பெயர் சூட்டினார்
இலங்கை ராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சி: கோத்தாபயவிடம் மேனன் உறுதியளித்தார்:-
இலங்கை ராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சி: இந்தியா உறுதி!
இலங்கை ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தொடர்ந்து பயிற்சி அளிக்கும் என இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் உறுதி அளித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------------
இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய 3 நாடுகள் இடையேயான கடல் வழி பாதுகாப்பு தொடர்பான மாநாடு டெல்லியில் இன்று நடைபெற்றது.
------------------------------------------------------------------------------------------------
இதில் பங்கேற்ற இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ச, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனை சந்தித்துப் பேசினார்.
------------------------------------------------------------------------------------------------
அப்போது இலங்கை ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தொடர்ந்து பயிற்சி அளிக்கும் என்ற உறுதியை அவர் கோத்தபய ராஜபக்சேவிடம் அளித்ததாக வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
------------------------------------------------------------------------------------------------
தமிழக மீனவர்கள் நேற்றும், இன்றும் கூட இலங்கை கடற்படையினரால தாக்கப்பட்டு சிறை பிடித்து செல்லப்பட்டுள்ள நிலையில், தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலை காணப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------
இந்நிலையில் கோத்தபய ராஜபக்சவின் இந்திய வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு, அவருடன் சிவசங்கர மேனன் தனியாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைப் பேரவை விசாரணை நடத்த வேண்டும் - நவனீதம்பிள்ளை
இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை நடாத்த வேண்டும் என பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை தொடர்பில் தனியான விசாரணை நடாத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். யுத்தம் நிறைவடைந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்காமை வருத்தமளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகமானதும் சுயாதீனமானதுமான விசாரணை நடத்துமாறு மனித உரிமைப் பேரவை விடுத்து வரும் கோரிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்தும் உதாசீனம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தனது சொந்த விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்க வேண்டிய தருணம் உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைக் குழு ஒன்றை நிறுவி சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)