Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Saturday, February 22, 2014
கேள்விக் குறியாகியுள்ள விடுதலை -
மரண தண்டனையை ஆயுட்காலச் சிறைத் தண்டனைமயாக மாற்றிய நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்வது தொடர்பில், இவ்வாறு தமிழக அரசை தொடர்புப் படுத்தியதன் மூலம், நீதித்துறையில் இருந்து அரசியல் அரங்கிற்கு இந்தப் பந்து வீசப்பட்டிருந்தது. தனது அரங்கில் வந்து விழுந்த பந்தை பலரும் எதிர்பார்த்திருந்த வகையில் கையாண்டிருந்தார். தூக்குத் தண்டனையில் இருந்து ஆயுட்காலச் சிறைத்தண்டனைக்கு தண்டனை குறைக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு சபையில் முடிவு செய்து, அது தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கு மத்திய அரசாங்கத்திற்கு 3 நாட்கள் அவகாசம் வழங்கியிருந்தார்.
ஆயினும் தூக்குத் தண்டனை குறைப்பு என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு மீதான மீள்சீராய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்திருப்பதனால், அந்த மனு தொடர்பில் முடிவெடுக்கப்படும் வரையில் குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது என்று மத்திய அரசாங்கம் தமிழக அரசின் முடிவை எதிர்த்து, அவசர அவசரமாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அத்துடன், தமிழக அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடையுத்தரவையும் இதன் மூலம் பெற்றுவிட்டது. இந்தத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ள இந்திய நீதிமன்றம் இது தொடர்பில் விளக்கமளிப்பதற்குத் தமிழக அரசுக்கு இரண்டு வாரம் கால அவகாசமும் வழங்கியிருக்கின்றது.
பேரறிவாளனை விடுவிப்பதில் நியாயம் மற்றையோரை விடுவித்தால் நீதித்துறை மீது நம்பிக்கை இல்லாமல் போகும்-
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு ரத்து செய்யப்பட்ட பேரறிவாளனை மட்டும் விடுவிப்பதில் நியாயம் இருக்கிறது என மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கை ஆயுள் உச்சநீதிமன்றம தண்டனையாக்கியது;. இதைத் தொடர்ந்து ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் இந்த மூவர் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஆனால் இதற்கு மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் பேரறிவாளனை மட்டும் விடுதலை செய்யலாம் என மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், மூவரையும் விடுதலை செய்த 'உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகவும் மோசமான தீர்ப்பு. பேரறிவாளன் மட்டும் பெற்றரி வாங்கிக் கொடுத்தார்; மற்றபடி அவருக்கு எதுவும் தெரியாது என்கிறார்கள். அதனை விசாரித்த அதிகாரியே அதைத்தான் இப்போது சொல்லியிருக்கிறார். அதனால், பேரறிவாளனை மட்டும் தண்டனை இல்லாமல் செய்தால், அதில் ஓரளவு நியாயம் இருக்கிறது. அதனை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், முருகன், சாந்தன் இருவரும் ராஜீவ் காந்தி கொலை செயல் நடக்கும் அந்த இடத்தில் இருந்தவர்கள். இவர்களை விடுதலை செய்யப்போகிறார்கள் என்று சொல்வது, நீதித் துறை மீதே நம்பிக்கை இல்லாமல் செய்யக்கூடிய செயல். அவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தால்தான் நீதி நிலைக்கும் என்று கூறியுள்ளார்.
கிளிநொச்சியில் இளம் சமூகத்தினர் ஆபத்தான சூழலை நோக்கி செல்கின்றனர் -சிவில் சமூக பிரதிநிதிகள் கவலை.
கிளிநொச்சி மாவட்டத்தில் இளம் சமூகத்தினர் ஆபத்தான சூழலை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் கவலை தெரிவித்துள்ளனர். இன்று(22-02-2014) முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் சிவில் சமூக பிரதிநிதிகளின் கலந்துரையாடலின் போதே மேற்படி கவலை வெளியிடப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------
இதன்போது கருத்து தெரிவித்த சிவில் சமூக பிரதிநிதிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசலை மாணவர்கள் உள்ளிட்ட இளம் தலைமுறையினர் மதுபானம்,புகைத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் அண்மைக்காலமாக அதிகமாக ஈடுபட்டு வருவதாகவும் இந்த செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் சில தரப்புகளின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கும் அவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பகிரங்கமாகவே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர்.
--------------------------------------------------------------------------------------------------------------------
அத்தோடு எமது கலாச்சாரத்திற்கு புறம்பான செயற்பாடுகளும் அதிகளவில் இளம் சமூத்தினரால் மேற்கொள்ளப்படுவதாகவும் ஆதாவது ஆடைகள் அணிவது முதல் பொது இடங்களில் நடந்துகொள்கின்ற முறைகள்,பழக்கவழக்கங்கள் என்பன கவலையளிக்கும் விடயமாக உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்படது.எனவே இது தொடர்பாக உரிய தரப்புகளுக்கு மாவட்ட சிவில் அமைப்பு சார்பாக கண்டிப்பான நடவடிக்கைகளுக்கு வலியுருத்த வேண்டும் எனவும் தெரிவிக்ப்பட்டது.
--------------------------------------------------------------------------------------------------------------------
வழமை போல் கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகளின் கலந்துரையாடல் இடம்பெற்றது இதில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் இங்கு பல்வேறுபட்ட சமூக மற்றும் பொது பிரச்சினைகள் ஆராயப்பட்டது. அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை உரிய அந்தந்த திணைக்களம் மற்றும் நிறுவனத்தினர் மேற்கொள்வதற்கு மாவட்டசிவில் சமூகங்களின் அமைப்பு சார்பாக அழுத்தம் கொடுக்கும் வகையில் தீர்மானங்களின் பிரதிகளை அனுப்பி வைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் போது பாடசாலைகளின் அதிபர்கள,மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்கள் எனபலர் கலந்துகொண்டனர்
நோ பயர் ஸோன் ஆவணப்படத்திற்கு இந்தியாவில் தடை
நோ பயர் ஸோன் ஆவணப்படத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான சர்ச்சைக்குரிய நோ பயர் ஸோன் மற்றும் கில்லிங் பீல்ட்ஸ் ஆவணப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய திரைப்படச் சபை நாட்டின் திரையறங்குகளில் செனல்4 ஆவணப்படங்களை திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தக் காணொளியை இந்தியாவில் இலவசமாக இணையத்தில் பிரசூரிப்பதற்கு ஆவணப்படத்தின் இயக்குனர் கலம் மக்ரே தெரிவித்துள்ளார். திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்ட இலங்கை, மலேசியா, நேபாளம் போன்ற நாடுகளில் இணையத்தில் இலவசமாக பார்வையிடக் கூடிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடனான உறவுகளில் வரிசல் ஏற்படக் கூடும் என்ற காரணத்தினால் இந்திய அதிகாரிகள் திரைப்படத்தினை தடை செய்துள்ளதாக செனல்4 ஊடகம் தெரிவித்துள்ளது. அநேகமான காட்சிகள் பார்க்கக் கூடிய வகையில் இல்லை என இந்திய திரைப்பட தணிக்கைச் சபை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குறித்த ஆவணப்படத்தை டெல்லியி;ல காட்சி;ப்படுத்தும் நோக்கில் இ;ந்தியாவிற்கு விஜயம் செய்ய முயற்சித்த ஆவணப்படத்தின் இயக்குனர் கலம் மக்ரேவிற்கு வீசா வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கருத்து சுதந்திரத்தை மதிக்கும் இ;ந்தியாவில் இவ்வாறான அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்திய நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என மக்ரே தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் அழுத்தங்கள் காரணமாகவே ஆவணப்படத்தை திரையிடுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது. யுத்த குற்றச் செயல் தொடர்பிலான விசாரணைகளை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக மக்ரே குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)