Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Sunday, February 23, 2014
நதிகள் இணைப்பு பாதயாத்திரை
துவக்கம் :- பிப்ரவரி 09 , 2014 ஞாயிறு காலை 10 மணி
இடம் : ஓசூர் (கர்நாடகா எல்லையிலிருந்து )
நிறைவு :- சென்னை (கோட்டை)
நாள் :- பிப்ரவரி 27 , 2014 வியாழன் பகல் 12 மணி
* இந்திய நதிகளை இணைத்து நீர்வழி சாலை அமைக்க சட்டசபையில் தீர்மானம் / நீராதாரங்களை பாதுகாக்க தனி அமைச்சகம் / விவசாயிக்கு ரூ.3௦௦௦ பென்ஷன் கோரி...
# தமிழக முதல்வரிடம் மனு சமர்பிப்பதற்காக..
ஓசூரில் இருந்து சென்னைக்கு நடைப்பயணம்.
ஷர்மிலாவின் இந்நிலைப்பாடு இரு முக்கிய அம்சங்களை நமக்குக் கவனப்படுத்துகிறது.
இரோம் ஷர்மிலா உள்ளிட்ட, மக்கள் மத்தியில் நேர்மையான மக்கள் போராளிகளாக இடம்பெற்றவர்களை வளைத்துப் போட ஆம் ஆத்மி கட்சியினர் வலை வீசிக் கொண்டிருக்கும் வேளையில் ஷர்மிலா இவ்வாறு வெளிப்படையாக அறிவித்திருப்பது முக்கியமானது.
ஷர்மிலாவின் இந்நிலைப்பாடு இரு முக்கிய அம்சங்களை நமக்குக் கவனப்படுத்துகிறது.
1) 'எனது போராட்டம் 'அஃப்சா' சட்ட நீக்கம் என்பதை முன்வைத்து நடைபெறுகிறது. என்போராட்டபலம், தியாக பலம் ஆகியவற்றை முன்வைத்தே அதை நான் உலகின் முன் கவனப்படுத்த இயலும் என்கிற நம்பிக்க எனக்கிருக்கிறது'.
2) 'எக்காரணம் கொண்டும் எனது தியாகத்தின் மூலம் சம்பாதித்த எனது பிம்பத்தை முன்வைத்து நான் அரசியல் லாபம் சம்பாதிக்க விரும்பவில்லை
மீத்தேன் திட்டத்தின் பெரும் கேடுகள்
மீத்தேன் திட்டத்தின் பெரும் கேடுகள்
---------------------------------------------------
பூமியில் மிக ஆழத்தில் அழுத்தங்கள் மிக அதிகமாக இருக்கும். சில இடங்களில் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட பாறைகளும் இருக்கும் (கிலோ மீட்டர் நீள, அகலம் கொண்ட பாறைகள்) சில இடங்களில் உள்ள மணல் பரப்பானது நீர் கூட புகமுடியாத தன்மை கொண்டதாக மிகுந்த இறுக்கத்தில் இருக்கும். இவை எல்லாமுமே மிக ஆழத்தில் என்று நினைவு கொள்ளுங்கள். (ஏறத்தாழ 8, 000 மீட்டர் முதல் 10, 000 மீட்டர் வரை) இப்படிப்பட்ட இடத்தில உருவாகும் இயற்கை எரிவாயு பாறைகளிலும், மணல் பரப்புகளிலும் ஊடுருவ இயலாமல் வெளிப்பட வழி இல்லாமல் அங்கேயே தங்கி விடுகின்றன. அத்தகைய இயற்கை எரிவாயுவின் சிறிய சிறிய அளவுகளை சேகரித்து முழுமையாக கொண்டுவர இந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் கண்டறிந்ததே இந்த Hydraulic Fracturing என்று அழைக்கப் படும் "நீரியல் விரிசல்" முறை.
Hydraulic Fracturing (Fracking) என்று அழைக்கப் படும் "நீரியல் விரிசல்" முறைப்படி பூமியை 10 கி. மீ வரையிலும் அதற்கு மேலுமான ஆழத்தில் துளையிட்டு அங்கிருந்து பக்கவாட்டில் 2 கி. மீ வரையிலும் அதற்கு மேலும் எல்லா திசைகளிலும் பக்கவாட்டு துளை (bore) போடப்படும். பின்பு பூமிக்கு மேலிருந்து மிகுந்த அழுத்தத்தில் தேர்வு செய்யப்பட்ட வேதி நுண் துகள்களை (Proppants) கலந்த நீர் மிகுந்த அழுத்தத்தில் செலுத்தப் படும். அவ்வாறு செலுத்தும்போது பக்கவாட்டு துளைகளில் செல்லும் நீரானது அந்த துளைகளின் மேலும் கீழும் விரிசல்களை உண்டாக்கும். அந்த விரிசல்கள் வழியே சிறைபட்ட, வழி இல்லாமல் உள்ளேயே அடைபட்டு கிடந்த மீத்தேன் எரிவாயுவின் சிறிய பகுதிகள் ஒன்றோடு ஒன்று கலந்து நீரில் ஒன்றாக கலந்து விடுகின்றன. அவ்வாறு கலந்த நீரை மீண்டும் உறிஞ்சி பூமியின் மேல்பரப்பிற்கு எடுத்து வந்து நீர் தனியாக, வாயு தனியாக சுத்தகரிக்கப்பட்டு எஞ்சிய கழிவு நீர் "நீராவி மூலம் ஆவியாகப்படும் குட்டைகளுக்கு "(Evaporation pond's) எடுத்துசெல்லப்படும். பெரும்பான்மையான இடங்களில் அவை நீர் நிலைகளில் கலந்து விடப்படும். இதுவே பிராக்கிங் என்று அழைக்கப்படும் செயற்கையாக பூமிக்கு கீழே நீரின் மூலம் விரிசல்கள் உண்டாக்கி அதன் மூலமாக மீத்தேன் எரிவாயு சேகரிக்கும் முறை.
ஒரு இடத்தைக் கண்டறிந்து அதன் சுற்றுப்புறங்களில் அருகருகே துளையிட்டு (well bore) எரிவாயு எடுப்பது பழைய முறை. நவீன தொழில் நுட்பத்தில் 10 கிலோ மீட்டர்களுக்கு ஒரே ஒரு மிகப்பெரிய துளையிட்டு அதன் அடிமட்டத்தில் இருந்து அதன் எல்லா கோணங்களிலும் பக்கவாட்டில் ஏராளமான துளைகளை வெவ்வேறு மட்டங்களில் ஏற்ப்படுத்தி அதன் மூலம் மீத்தேன் எரிவாயு எடுப்பது புதிய சர்சைகளுக்கு உள்ளாகும் முறை. இதுவே தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வரப்போகும் ஆபத்து.
ஒரு முறை நீரியல் விரிசல் செயல்முறைக்கு 5,66,33,693 லிட்டர் நீர் தேவைப்படும். இந்த நீரில் மணல் மற்றும் வேதிப் பொருட்களை கலந்து (fracking fluid) நீரியல் விரிசலுக்கென்றே பிரத்தியேகமான கரைசல் திரவத்தை தயாரிப்பார்கள். குறைந்த பட்சம் 40,000 கேலன் அதாவது 1,51,416 லிட்டர் நீர் தேவைப்படும் அந்த வேதி பொருட்கள் கலந்த திரவத்தை ஒரு முறை தயாரிக்க. இந்த பிரத்தியேக வேதிபொருட்கள் கலந்த திரவத்தை தயாரிக்க கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட வேதி பொருட்கள் உபயோகப் படுத்தப்படுகின்றன. ஈயம் (LEAD), பாதரசம் (MERCURY), உரேனியம் (URANIUM), ரேடியம்(RADIUM), மெத்தனால் (METHANOL), ஹைடரோ குளோரிக் அமிலம் (HYDROCHLORIC ACID), பார்மால்டிஹைட் (FORMALDEHYDE) ஆகியவை குறிப்பிட தகுந்தவை. இன்றுவரை எந்தெந்த வேதியியல் தனிமங்கள் மற்றும் பொருட்கள் கலந்துள்ளன என்ற விவரங்களை எரிவாயு நிறுவனங்கள் தந்ததே இல்லை. இந்த திரவத்தில் கதிரியக்கத்தை தூண்டக் கூடிய ரேடியம் 226 என்ற தனிமம் கலக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் எரிவாயு கிணறுகளில் அருகில் ஓடிய நீரோடையில் இதன் தாக்கம் அறியப்பட்டது.
மேலும் இந்த நீர்ம வேதி கரைசலில் அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய, எளிதில் ஆவியாகக்கூடிய மற்றும் விரைவாக வேதிவினை புரியக்கூடிய வேதி பொருட்கள் நிறைந்துள்ளன.
நீரியல் விரிசல் செயல்படுத்திய பின்பு 30% விழுக்காடு வேதி திரவம் மட்டும்தான் அதிகப்படியாக மீண்டும் உரிஞ்சப் படுகின்றன. மீதி விழுக்காடு வேதி பொருட்கள் கலந்த திரவம் அதே கிணற்றிலேயே தேக்கிவைக்கப் படுகின்றன. உயிர்வேதி நொதித்தல் மற்றும் உயிர் வேதியியல் முறையில் அவற்றின் தாக்கத்தை குறைக்க முடியாது. இது மிகப் பெரிய அச்சுறுத்தல்.
அழைப்பு வருமென காத்திருந்த மகிந்த: ஏமாற்றிய மைத்துனர் – மனைவியை பிரிந்தார் ஷிரந்தி ராஜபக்ஷவின் சகோதரர் -
இந்தியாவில் எதிர்வரும் மே மாதம் நடைபெறும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் ஆட்சிக்கு வரும் என நம்பப்படும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் நோக்கில் இந்தியாவுக்கு சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மைத்துனரான கோடிஸ்வர வர்த்தகர் திருகுமார் நடேசன் வெறுங்கையுடன் நாடு திரும்பியதாக கூறப்படுகிறது.
இந்தியப் பயணத்திற்கு முன் ஜனாதிபதியை சந்தித்துள்ள நடேசன், பாஜக தலைவர்களுடன் தனக்கு சிறந்த தொடர்புகள் இருப்பதாக கூறியுள்ளதுடன் அவர்களை சந்தித்த பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொள்வதாக தெரிவித்துள்ளார்.
பாஜகவின் எந்த தலைவர்களை சந்திக்க போகிறீர்கள் என ஜனாதிபதி எழுப்பிய கேள்வி பதிலளித்துள்ள திருகுமார் நடேசன், அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், தென்னிந்தியாவின் நிர்மலா சீத்தாராமன் ஆகியோரை சந்திக்க போவதாக குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக கேரளாவின் கொச்சினுக்கு சென்று நிர்மலா சீத்தாராமன் வீட்டில் தங்கியிருந்து அவருடன் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்திக்க போவதாகவும் அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியையும் சந்திக்க முடியும் எனவும் அவர் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.
நடேசன் இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்ற நாளில் தொலைபேசி அழைப்பு வரும் என ஜனாதிபதி எதிர்பார்த்து காத்திருந்துள்ளார். சில தினங்களின் பின்னர் ஜனாதிபதியே அவருடன் தொடர்பு கொண்டுள்ளார்.
பாஜக தலைவர்கள் சகலரும் பணிகளில் பிஸியாக இருப்பதாகவும் தான் வந்த பின்னர் தகவல்கள் தெரிவிப்பதாகவும் நடேசன் அப்போது ஜனாதிபதியிடம் கூறியுள்ளார். எனினும் சில தினங்களுக்கு பிறகு அவர் இந்தியாவில் இருந்து வெறுங்கையுடன் திரும்பியுள்ளார்.
ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி பாஜக தலைவர்களின் அருகில் கூட நடேசனுக்கு செல்ல கிடைக்கவில்லை என தெரியவருகிறது.
பாஜக தலைவர்கள் அவருடனான சந்திப்பை தவிர்த்து கொண்டதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் ஜனாதிபதி உத்தியோகபூர்வ பிரதிநிதியாக பாஜக தலைவர்களை சந்திக்க சென்ற ஜனாதிபதியின் ஆலோசகர் மிலிந்த மொரகொடவை சந்தித்த நரேந்திர மோடியின் அதிகாரபூர்வ பேச்சாளர் ஒருவர், இலங்கை சம்பந்தமாக அடல் பிஹாரி வாஜ்பாய் கடைபிடித்த கொள்கையையே நரேந்திர மோடியும் கடைப்பிடிப்பார் என கூறியுள்ளார்.
இந்த நிலையில், அடுத்த இந்திய பொதுத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், இலங்கைக்கு வழங்கப்படும் சகல ஆயுதப் பயிற்சிகளும், உதவிகளும் நிறுத்தப்படும் என கூறப்படுகிறது.
மனைவியை பிரிந்தார் ஷிராந்தி ராஜபக்ஷவின் சகோதரர்
ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவின் சகோதரரும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்கவின் மனைவியான திலக்ருக்ஷி விக்ரமசிங்க அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிஷாந்த விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா விமான சேவையில் பணியாற்றும் விமானப் பணிப்பெண் ஒருவருக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானதே இந்த பிரிவுக்கு காரணம் என தெரியவருகிறது.
விக்ரமசிங்கவின் மனைவியும் ஒரு விமானப் பணிப் பெண்ணாக பணியாற்றியவர். இலங்கை அரச விமான சேவையானது எயார் சிலோன் என்ற பெயரில் இயங்கிய காலத்தில் அவர் விமானப் பணிப் பெண்ணாக பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில், அவரது கணவருக்கு விமானப் பணிப்பெண்ணுடன் தொடர்பிருக்கும் செய்தி வெளியானதை தொடர்ந்து தில்ருக்ஷி கணவருடன் கோபித்து கொண்டு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் உள்ள அவரது மகனிடம் சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள இலங்கையர்களை நாடு கடத்துமாறு புதுச்சேரி காங்கிரஸ் கோரிக்கை:-
இந்தியாவில் உள்ள இலங்கையர்களை நாடு கடத்துமாறு புதுச்சேரி காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------
சகல இலங்கையர்களையும் நாடு கடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------
இந்திய ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------
முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான வீ.வைத்திலிங்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவில் வாழ்ந்து வரும் சகல இலங்கையர்களும் நாடு கடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------
ராஜீவ் கொலை வழக்குடன் n;தாடர்புடையவர்களை விடுதலை செய்யப் போவதாக தமிழக அரசாங்கம் விடுத்த அறிவிப்பினைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் பல்வேறு வழகளில் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
-------------------------------------------------------------------------------------------------------------
ஜெயலலிதாவின் தீர்மானத்திற்கு தமிழக மக்கள் ஆதரவு தெரிவித்த போதிலும், இந்தியாவின் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கட்சிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிக்கோபர், அந்தமான் தீவுகளில் புலி உறுப்பினர்கள்:-
இந்தியாவின் நிக்கோபர் மற்றும் அந்தமான் தீவுகளில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இருக்கக் கூடுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
-------------------------------------------------------------------------------------------
இந்திய அதிகாரிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
-------------------------------------------------------------------------------------------
அந்தமான் மற்றும் நி;க்கோபர் தீவுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய போராளிகள் தங்கியிருக்கக் கூடும் என்ற கருத்தை மறுப்பதற்கில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-------------------------------------------------------------------------------------------
மியன்மார், பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் குறித்த தீவுகளுக்கு அடிக்கடி ஊடுருவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-------------------------------------------------------------------------------------------
குறித்த பகுதியில் மொத்தமாக 572 தீவுகள் காணப்படுவதாகவும் இதில் 38 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
-------------------------------------------------------------------------------------------
தீவுகளில் வாழ்ந்து வரும் தமிழ் சனத்தொகை தமிழீழ விடுதலைப் புலிளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதகாத் தெரிவிக்கப்படுகிறது.
-------------------------------------------------------------------------------------------
1960 மற்றும் 1970ம் ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இலங்கைத் தமிழர்கள் குடியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-------------------------------------------------------------------------------------------
சென்னையில் திடீரென தவறி விழுந்து மயங்கிய ராம்ஜெத்மலானி
சென்னை: பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத் மலானிக்கு சென்னையில் தவறி விழுந்து திடீரென மயங்கியதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் சீரடைந்ததை அடுத்து பிற்பகலில் மும்பைக்கு புறப்பட்டுச் சென்றார்.
இந்திய பகுதிகளை பறிக்கும் வல்லமை எந்த நாட்டுக்கும் இல்லை- நரேந்திர மோடி
இடாநகர்: இந்தியாவின் பகுதியை பறித்துக் கொள்ளக் கூடிய வல்லமை உலகில் எந்த ஒரு நாட்டுக்குமே இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)


