Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, April 18, 2014

கனடா நிதி வழங்காத வருத்தத்தில் – கமலேஷ் சர்மா…

கனடாவின் தீர்மானம் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு தன்னார்வ அடிப்படையில் வழங்கி வந்த உதவிகளை நிறுத்திக்கொள்வதாக கனடா அறிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு நிதி உதவிகளை வழங்கப் போவதி;ல்லை என கனடா குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை காரணம் காட்டியே இந்த நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளது. 20 மில்லியன் டொலர் பெறுமதியான உதவிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ---------------------------------------------------------------------------------------------------- உதவிகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டமை வருத்தமளிப்பதாக கமலேஷ் சர்மா குறிப்பிட்டுள்ளார். எனினும் விரைவில் மீண்டும் நிதி உதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு கனடா தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். -

யு.எஸ்.- போட்லன்ட் நீரத்தேக்கம் ஒன்றில் இளஞன் ஒருவன் சிறுநீர் கழித்ததால் 144-மில்லியன் லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டது -

PORTLAND, Ore. 144-மில்லியன் லிட்டர்கள் சுத்தப்படுத்தப் பட்ட தண்ணீரில் இளவயதினன் ஒருவரின் சிறுநீர் கலந்ததால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதென நிரூபித்த போட்லன்ட் அதிகாரிகள் தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி உள்ளனர்.
3-வருட காலத்தில் இச்செயல் இரண்டாவது தடவையாக இடம்பெற்றுள்ளதால் நகரம் தண்ணீரை சுத்தமாக வைத்திருப்பதற்காக இவ்வளவு தூரம் சென்றுள்ளது. ------------------------------------------------------------------------------------------------- 2011-யூன் மாதம் போட்லன்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மவுன் ராபரில் நீர் விநியோக நீர்த்தேக்கத்தில் ஒரு மனிதன் சிறுநீர் கழித்ததால் 28-மில்லியன் லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------- இம்முறை அதே இடத்தில் வேறு நீர்த்தேக்கத்தில் 19-வயதுடைய ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது வீடியோவில் பதிவானதால் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------- துப்பரவான, குளிரான மற்றம் நிலையான தண்ணீரை பாவனையாளர்களுக்கு வழங்கவேண்டும் என்பது நீர் பணியகத்தினரின் அடிப்படை கட்டளை என பணியக நிர்வாகி டேவிட் ஷாவ் தெரிவித்துள்ளார். ------------------------------------------------------------------------------------------------- இந்த திறந்த நீர்த்தேக்கங்களிலிருந்து ஏற்கனவே சுத்திகரிக்கப் பட்ட தண்ணீர் நேரடியாக பாவனையாளர்களுக்கு செல்கின்றதென கூறப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------- இந்த சம்பவத்தில் 3 ஆண்கள் இரும்பு வேலியினால் அடைக்கப்பட்ட குறிப்பிட்ட நீர்த்தேக்கத்தின் அருகில் காணப்பட்டதாகவும் அவர்களில் ஒருவர் வேலிக்கூடாக சிறுநீர் கழித்ததும் மற்றய இருவரும் வேலியை அளந்து கொண்டிருந்ததும் நீர்த்தேக்கத்தில் பொருத்தப் பட்டிருந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. ------------------------------------------------------------------------------------------------- மூவரின் விபரங்களும் வெளியிடப்படவில்லை. ------------------------------------------------------------------------------------------------- 2011-ல் சிறுநீர் கழித்த மனிதன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவருக்கு சமூக சேவை செய்யும்படி தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. - See more at: http://www.canadamirror.com/canada/24801.html#sthash.uml7RMI8.dpuf

இலங்கை ராணுவத்தினரின் குடும்பப்படங்கள் வெளியிடப்பட்டதால் சர்ச்சை

இலங்கைப் போரின் போது பொதுமக்களைக் கொன்று போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இலங்கை ராணுவத்தினர் மற்றும் அதிகாரிகள் பலரின் புகைப்படங்கள் மற்றும் பிற தரவுகள் அடங்கிய விவரங்களை பிரித்தானிய தமிழ் ஒன்றியம் என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது. ------------------------------------------------------------------------------------------ இந்த அமைப்பு வெளியிட்ட விவரங்களில் இலங்கை ராணுவத்தினர் பலரது புகைப்படங்கள் மட்டுமல்லாமல், அவர்களது மனைவிகள் மற்றும் குழந்தைகள் குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ------------------------------------------------------------------------------------------ இந்த விவரங்களில் காணப்படுவோர் உண்மையில் இந்தக் குற்றங்களை இழைத்தார்களா என்பது குறித்த ஆதாரம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டதற்கு பதிலளித்த இந்த அமைப்பைச் சேர்ந்த ஆழியன் , இது குறித்த ஆதாரங்களை தாங்கள் ஐநா போன்ற அமைப்புகளுக்குத் தரவிருப்பதாக கூறினார். ------------------------------------------------------------------------------------------ ஆனால் போரில் ஈடுபடாத ராணுவத்தினரின் குடும்பத்தினர் குறித்த தரவுகளை பிரசுரித்தது குறித்து கேட்டதற்கு பதிலளித்த ஆழியன், ராணுவத்தினர் போர்முனைக்கு அனுப்பப்படும்போது, அரசு, அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினரை அழைத்து கௌரவித்து அனுப்பியது என்ற பின்னணியில் இந்தப் படையினர் போர்முனையில் என்ன குற்றங்களை இழைத்தார்கள் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள் என்றே கூறமுடியும், எனவே அந்தப் படங்களைப் பிரசுரித்த்தில் தவறில்லை என்றார். ------------------------------------------------------------------------------------------ அது போல, அவர்களது அந்தரங்க உரிமைகளும் இதனால் மீறப்பட்டதாகக் கூறுவது தவறு, ஏனென்றால் சிங்கள படையினர் வன்னியில் போர் நடந்த போது இழைத்த மனித உரிமை மீறல்களை புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டிருக்கின்றனர் என்றார் அவர். ------------------------------------------------------------------------------------------ தமிழ் அமைப்புக்களை தடை செய்ததற்கு இது பதிலடி" ------------------------------------------------------------------------------------------ அண்மையில் இலங்கை அரசாங்கம் சில தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்களை பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவை என்று கூறி தடை செய்து அறிவித்திருந்தது. அதற்கான எதிர்வினை அல்லது பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தப் படங்களை வெளிநாட்டில் இருக்கும் சில தமிழ் அமைப்புக்கள் மற்றும் அதைச் சார்ந்தவர்கள், இலங்கை ராணுவத்தினர் தொடர்பான தகவல்கள் மற்றும் புகைப்படங்களை இலங்கை பாதுபாப்புத் துறையின் இணையதளங்களில் இருந்து எடுத்து வெளியிட்டுள்ளார்கள் என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய. ------------------------------------------------------------------------------------------ இது குறித்து தாங்கள் கவலைப்படவில்லை என்றும் இதை ஒரு நகைச்சுவையாகவே தாங்கள் கருதுவதாகவும் கூறினா அவர். இலங்கை அரசின் பாதுகாப்புத்துறையின் இணையதளத்திலுள்ள எந்தத் தகவலும் இரகசியமானது அல்ல என்றும் பொதுமக்களின் பார்வைக்காகவே அவை வெளிப்படையாக வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த ருவான் வணிகசூரிய, "விளம்பரத்துக்காகத்தான் நாங்கள் எங்கள் படையினரின் படங்களை இணையதளத்தில் வெளியிடுகிறோம். எனவே எமது விளம்பர நடவடிக்கைகளுக்கு வேறு யாராவது உதவ முன்வந்தால் அது எங்களுக்கு மகிழ்ச்சிதானே. அதைப்பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? இனிமேல் அவர்களுக்கு எம்மைக் குறித்துப் பேச வேறு விஷயங்கள் எதுவும் இல்லை என்னும் அவர்களின் சிந்தனை வறட்சியைத்தான் இந்த செயல் காட்டுகிறது" என்றும் கூறினார்.

இலங்கை ராணுவத்தவரின் குடும்பப் படங்களை வெளியிட்டது சரியே”

இலங்கைப் போரின் போது பொதுமக்களைக் கொன்று போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று கூறி இலங்கை ராணுவ அதிகாரிகளின் குடும்ப புகைப்படங்கள் உள்ளிட்ட விவரங்களை இணையத்தில் வெளியிட்டது சரியே என்கிறார் இவற்றை வெளியிட்ட பிரித்தானிய தமிழ் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆழியன்

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் நில அபகரிப்பால் வீட்டுத்திட்ட நடவடிக்கைகள் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டு திட்ட நடவடிக்கை பாதிக் கட்டத்தையும் தாண்டவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் அலுவலகத்தில் இன்று நடந்த கலந்துரையாடலில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டது. ------------------------------------------------------------------------------------------------- கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஏழாயிரம் வீடுகள் இந்திய வீட்டுத்திட்டுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டன. அவற்றில் இதுவரையில் மூவாயிரம் வீடுகளே கட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் அவற்றில் பல வீடுகள் இன்னமும் கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ள என்றும் குறிப்பிட்டார். ------------------------------------------------------------------------------------------------- வீட்டுத்திட்ட நடவடிக்கையில் பல்வேறு அரசியல்கள் காணப்படுவதினால் தொடர்ந்தும் இடையூறுகளைத் தாண்டியே நடவடிக்கைகள் தொடர்வதாக கிராம அலுவலர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக இலங்கை அரச படைகள் முன்னெடுக்கும் நில அபகரிப்பின் காரணமாகவே வீட்டுத்திட்ட நடவடிக்கைகள் தாமதமாவதாக தெரிவிக்கப்படுகிறது. ------------------------------------------------------------------------------------------------- இராணுவத்தினர் வீட்டுத்திட்ட காலத்தில் காணிகளை அபகரிக்கும் நோக்குடன் மக்களை பிரச்சினைகளுக்கு உள்ளாக்கி வருவதாக கூறப்படுகிறது. சில அரச அதிகாரிகள் இராணுவத்தினரதும் அரசியல்வாதிகளினதும் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைத்து மக்களை நெருக்கடிக்குள் தள்ளுவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அரச அதிகாரி ஒருவர் குளோபலுக்குத் தெரிவித்தார். ------------------------------------------------------------------------------------------------- இராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களையும் நகரத்தை அண்டிய சில கிராமங்களின் சில பகுதிகளையும் தமக்கு வழங்க வேண்டும் என்று அரச அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். இதனால் குறித்த காணிகளை இராணுவத்திற்காக அபகரிக்க அரச அதிகாரிகள் சில காரணங்களை சொல்லி வருகின்றனர். ------------------------------------------------------------------------------------------------- சலசலப்புக்களைத் தாண்டியே வீட்டுத்திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சிப் பகுதியில் மிள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு நான்கு வருடங்கள் ஆகின்றமை குறிப்பிடத்தக்கது. நகரை அண்டிய சில இடங்களிலும்கூட இன்னமும் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவில்லை. ------------------------------------------------------------------------------------------------- தொடர்ந்தும் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகின்றனர். இந்த கூடாரங்கள் மக்கள் வசிக்க ஒகந்ததலல்ல என்றும் அதனால் நோய்கள் ஏற்படும் என்றும் குறித்த வீடுகளை அமைத்த தொண்டு நிறுவனங்கள் தெரிவித்திருந்தமையை அண்மையில் குளோபல் தமிழ் செய்திகள் வெளியிட்டிருந்தது. ------------------------------------------------------------------------------------------------- வீட்டுத்திட்ட பிரச்சினைகளை தீர்த்து விரைவில் வீடுகளை அமைத்து முடிக்க வேண்டும் என்று இன்றைய கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது. திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் சிக்கனமாகவும் விரைவாகவும் வீடுகள் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார். ------------------------------------------------------------------------------------------------- அத்துடன் விரைவில் அடுத்த கட்ட பயனாளிகளுக்கான வீட்டுத்திட்டம் தொடங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.