Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, June 30, 2014

சிங்கள மனித உரிமை அமைப்பினால் புறக்கணிக்கப்பட்ட பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட தமிழ் தமிழ்பெண்கள்

அமெரிக்காவின் பிரபல நடிகையான அன்யலினா ஜொலி அவர்கள் இரண்டு வாரத்திற்கு முன்னர் இலண்டனில் யுத்தத்தின் போது பாலியல் வன்புணர்வை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தடை செய்யவதற்கு ஒரு மாநாட்டினை நடத்தியிருந்தார்.
இம்மாநாடானது 2009ம் இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் பெருமளவு பெண்கள் இராணுவத்தினால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுதிய சம்பவங்களின் பின்னர் தான் இப்படியான ஒரு மாநாடு நடத்துவதற்கு காரணமாய் அமைந்தது. ------------------------------------------------------------------------------- இம்மாநாட்டில் இலங்கையில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டோரை பார்வையிட அன்யலினா ஜொலி அவர்கள் விரும்பி இருந்தார். இதனை இலங்கையில் உள்ள சிங்கள மனித உரிமை அமைப்பின் செயற்பாட்டாளர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ----------------------------------------------------------------------------------- ஆனால் அவர்கள் ஒரு தமிழரைக்கூட அன்யலினா ஜொலி அவர்களை சந்திக்க விடவில்லை. சிங்களவர்களை மட்டுமே கூட்டிச்சென்றார். இது புகைப்படம் மூலம் உறுதியாகின்றது. இப்படத்தில் அன்யலினா ஜொலி அவர்களுடன் சிங்கள மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெனான்டோ அவர்களும் இரண்டு சிங்கள பெண்கள் மட்டுமே இருக்கின்றனர். இது தமிழ் சமூகத்தினர் மத்தியில் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியிருந்தது. -------------------------------------------------------------------------- இத்தகவலை ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது.

பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் தமிழர் தேசிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள தமிழர் தேசிய இயக்கங்களை ஒன்றிணைக்கும் செயற்பாட்டின் முதற்கட்டமாக தமிழ்தேசிய முன்னணி என்ற பெயருடன் தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற மண்டபத்தில் ஒன்று திரண்ட தமிழ்தேசிய இயக்கங்களை சார்ந்தவர்கள் பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் தமிழர் தேசிய முன்னணி என்ற இயக்கத்தினை உருவாக்கியுள்ளார்கள். இது தொடர்பாக பழ.நெடுமாறன் அவர்கள் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியை மேற்கொள்வதற்குரிய காலம் கனிந்துள்ளது. தனித் தனியாக இயங்கும் தமிழ்த் தேசிய அமைப்புகளையும் ,தமிழ்த் தேசிய உணர்வாளர்களையும் ஒருங்கிணைப்பது காலத்தின் கட்டாயமாகும். தமிழீழத் தமிழர்களுக்கு நேரிட்ட அழிவும் அவலமும் உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது . தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் வலிமையாகவும் செயல்பட்டால்தான். உலகத் தமிழர்களை காக்க முடியும் அதற்கு தமிழ் தேசியர்கள் தம்முள் இணைந்து வலிமையான ஒரு அமைப்பாக உருவாக வேண்டும்.
தமிழ்நாட்டின் இயற்க்கை வளங்கள் வந்தேரிகளாலும் , பன்னாட்டு நிறுவனங்களாலும் சூரையாடபடுகின்றன. இந்த நிலை தொடருமானால் நமது எதிர் காலத் தலைமுறை வளங்குன்றிப்போன தமிழகத்தில் தான் வாழ நேரிடும் காவேரி , முல்லை பெரியாறு , மீனவர் பிரசனை போன்றவற்றை தமிழகத் தேசியப் பிரச்னைகளில் முக்கியமானவையாகும் . உச்சநீதிமன்றம் நமக்கு நியாயம் வழங்கியப் பிறகும் நம்மால் அதன் பயனை பெறமுடியவில்லை. மத்திய அரசு நம்மை அலட்சியம் செய்கிறது.தமிழ் நாட்டில் கல்வி , ஆட்சி , வாழிபாடு ஆகியவற்றில் தமிழுக்கே இடமில்லை ஆங்கிலமே இன்னும் அரசால்கிறது. கோவில்களில் வடமொழி ஆதிக்கம் செலுத்துகிறது.
ஆதித் தமிழர்கள் இழிவிற்கும் வன்கொடுமைக்கும் தொடர்ந்து ஆளாகி வருகிறார்கள். ஆதித் தமிழர்களின் விடிவு இல்லாமல் தமிழ்த் தேசிய இனம் விடிவு வராது.இன்னும் பல துறைகளில் நாம் புறக்கணிக்கபடுவது தொடர்கிறது இவற்றையெல்லாம் அகற்றி தமிழுக்கும் தமிழருக்கும் போடப்பட்டிருக்கும் விலங்கைத் தகர்க்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ்த் தேசியர்களுக்கே உண்டு. --------------------------------------------------------------------------- எனவே தமிழ்த் தேசியர்கள் தமக்குள் நிலவும் சிறுசிறு வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அகற்றிவிட்டு ஒன்றுபடவேண்டும். இந்த உரிய நோக்கத்துடன் தஞ்சையில் கூட்டம் நடை பெற்றது. என்று அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, June 28, 2014

சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்குகிறது அமெரிக்கா!

சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி உதவியை அமெரிக்கா வழங்குகிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது. தற்போது அது உள்நாட்டு போர் ஆக மாறிவிட்டது. போராடும் புரட்சி படையினர், படையினருடன் சண்டையிட்டு வருகின்றனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். ------------------------------------------------------------------------------------ பொது மக்களின் புரட்சி படைக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. தங்களது சொந்த மக்களையே கொன்று குவிக்கும் அதிபர் பஷர் அல்– ஆசாத் அரசுக்கு ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார். ------------------------------------------------------------------------------------ இந்த நிலையில், கிளர்ச்சியாளர்களின் புரட்சி படைக்கு ரூ. 3 ஆயிரம் கோடியை அமெரிக்கா வழங்குகிறது. அதன் மூலம் அவர்கள் அதிநவீன போர்க்கருவிகள் வழங்கவும், அவர்களுக்கு போர் பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------ அதற்கான ஒப்புதலை அமெரிக்க பாராளுமன்றத்தில் பெற அதிபர் ஒபாமா அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக அல்கொய்தா ஆதரவு பெற்ற ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் உள்ளனர். ------------------------------------------------------------------------------------ அவர்கள் ஈராக்கில் முன்னேறி வருகின்றனர். புரட்சி படையை பலப்படுத்துவதன் மூலம் அவர்களின் முன்னேற்றத்தையும், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் மீதான தீவிரவாதிகளின் அச்சுறுத்தலையும் முறியடிக்க முடியும் என அமெரிக்கா கருதுகிறது.

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகளை தடுக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகளை தடுக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ----------------------------------------------------------------- பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஒன்றிணைந்த செயலாளர் ரன்கே சிங் இதனைத் தெரிவித்துள்ளார்

சிறிலங்கா செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாலியல் தேவைக்கு சிறுவர்கள் விநியோகம்

சிறிலங்காவிற்கு செல்கின்ற சுற்றுலாப் பயணிகளின் பாலியல் தேவைகளுக்காக சிறுவர்களை விநியோகித்து வந்துள்ளமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளதுடன் இவ்வியாபாரத்துடன் தொடர்புபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து நடைபெற்ற விசாரணைக்கமைய இரண்டரை வருடத்திற்கு முன்பிருந்தே இவர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் அனோமா திசாநாயக்க தெரிவித்தார். ------------------------------------------------------------------------- சிறுவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த பிரான்ஸ் நாட்டவரொருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதற்கு அமைய சிறிலங்கா சிறுவர்களையும் இதற்காக பயன்படுத்தியுள்ளமை தொடர்பில் அந்நாட்டு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் அவரிடமிருந்து சிறிலங்கா சிறுவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நிர்வாணப் புகைப்படங்களையும் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து பிரான்ஸ் காவல்துறையினரால் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------- அத்தகவலுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்துள்ள அதிகார சபையின் விசேட பொலிஸ் பிரிவினர் இந்த வியாபாரத்துடன் தொடர்புபட்டுள்ள ஹிக்கடுவை பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர். அத்துடன் இதுவரை 5 பிள்ளைகளிடம் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளைத் தேடி சாட்சியங்களை பதிவு செய்ய முயற்சித்து வருகின்றனர். ------------------------------------------------------------------------- அப்பிள்ளைகளைத் தேடி கண்டு பிடித்து அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். பிரான்ஸ் பொலிஸாரும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் இணைந்து தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Thursday, June 26, 2014

இலங்கை மீதான ஐ நா விசாரணை: வல்லுநர்கள் பெயர்கள் அறிவிப்பு

இலங்கையில் இடம் பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையான விசாரணைகளுக்கு ஆலோசனை வழங்கவுள்ள மூன்று வல்லுநர்களின் பெயர்களை ஐ நா அறிவித்துள்ளது. சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளவரும், ஃபின்லாந்து அரசின் முன்னாள் அதிபருமான மார்ட்டி அத்திசாரி, நியூசிலாந்தின் முன்னாள் கவர்னர் ஜெனரல் சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கீர் ஆகியோரே அந்த மூன்று வல்லுநர்கள்.
மார்ட்டி அத்திசாரி
சில்வியா கார்ட்ரைட்
அஸ்மா ஜெஹாங்கீர் ----------------------------------------------------------------------------------- இந்த ஆண்டு மார்ச் மாதம், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அதன் ஆணையர் நவி பிள்ளை இந்த அறிவிப்பை இன்று, புதன்கிழமை வெளியிட்டுள்ளார். இந்த மூவரும், இலங்கையின் உள்நாட்டுப் போரின் கடைசி சில ஆண்டுகளில் இடம் பெற்றதாக கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கவுள்ள ஐ நா மனித உரிமை குழுவுக்கு, ஆலோசனை வழங்கவும், ஒத்துழைப்பு அளிக்கவும் உடன்பட்டுள்ளனர் என்று ஐ நா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது. --------------------------------------------------------------------------------- ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு இலங்கை அரசு இழைக்கப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை நடத்தும் என்று ஏற்கெனவே ஐ நா அறிவித்துள்ளது. இலங்கை அரசு மற்றும் மக்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்காவிட்டாலும், தடைகளை மீறி இந்த விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் இன்று வெளியிடப்பட்டுள்ள ஐ நா மனித உரிமைகள் ஆணைய செய்திக் குறிப்பு கூறுகிறது.

Tuesday, June 24, 2014

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பழ.நெடுமாறன் கைது

மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுக்கடைகளை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட உலகத்தமிழர் பேரவை கூட்டமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன், சட்டக்கல்லூரி மாணவி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ------------------------------------------------------------------------------- தமிழகத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மதுரை சட்டக்கல்லூரி மாணவியான சுகந்தி என்பவர் சில மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார். -------------------------------------------------------------------------- திங்கட்கிழமை தந்தை ஆனந்த் உள்ளிட்ட சிலருடன் சுகந்தி மதுக்கடைகளை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். அவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உலகத்தமிழர் பேரவை கூட்டமைப்புத் தலைவர் பழ.நெடுமாறனும் வந்தார். இவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ------------------------------------------------------------------------- அவர்களை கலைந்து போகுமாறு காவல்துறையினர் கூற, ஏற்க மறுத்து மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு பழ.நெடுமாறன், மாணவி சுகந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து பழ.நெடுமாறன், மாணவி சுகந்தி உள்ளிட்ட 9 பேரை போலீஸார் கைது செய்தனர். இப்போராட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.

இலங்கையில் ஜனாதிபதியை அவசரமாகச் சந்தித்த முஸ்லிம் அமைச்சர்கள்

இலங்கையில் அண்மைக் காலங்களாக நடந்துவரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தொடர்ந்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் பலரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை பதுளையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
----------------------------------------------------------------------- தலைநகர் கொழும்பை அண்டிய பாணந்துறை பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான நோ லிமிட் என்ற உடுதுணிக் கடை தீக்கிரையான சம்பவத்தை அடுத்து முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியை தொடர்புகொண்டு பேசியுள்ளனர். ----------------------------------------------------------------------- அவ்வேளையில், கொழும்பிலிருந்து தொலைவில் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள பதுளை நகரில் இருந்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முஸ்லிம் அமைச்சர்களை சந்தித்துப் பேசுவதற்கு ஹெலிகாப்டர் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். ----------------------------------------------------------------------- இதனையடுத்து ஹெலிகாப்டரில் உடனடியாக விரைந்த ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், ஏஎச்எம் பௌசி உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்கள் பலரும் ஜனாதிபதியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். ----------------------------------------------------------------------- இந்த சந்திப்பில் பசில் ராஜபக்ஷ, அனுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் ஸ்ரீபால டி சில்வா, டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களுடன் பொலிஸ் மா அதிபர் என்.பி. இலங்ககோன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். ----------------------------------------------------------------------- முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைய காலங்களில் தொடர்ச்சியாக நடந்துவரும் வன்முறைகள் காரணமாக முஸ்லிம் மக்கள் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் வாழ்வதாக இதன்போது முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தமிழோசையிடம் தெரிவித்தார். ----------------------------------------------------------------------- '(ஜனாதிபதி) பொலிஸ்மா அதிபருக்கு எங்களுக்கு முன்னால் மிகக்கடுமையான உத்தரவை பணித்தார்... அதாவது சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்க முடியாது, அவர்கள் எந்த மதத்தையோ தரத்தையோ சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறினார்' என்றார் அமைச்சர் ரிசாத் பதியுதீன். ----------------------------------------------------------------------- இதனிடையே, அண்மைக்கால அசம்பாவிதங்கள் தொடர்பில் உயர்மட்டக் குழுவொன்றை அமைக்கவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர் குறுந்தகவல் தளத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.