Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, March 14, 2014
மனிதன், பாம்பு, தேள், பூரான், நாய் கடி விஷம் நீங்க
மனிதன், பாம்பு, தேள், பூரான், நாய் கடி விஷம் நீங்க
பெரும்பாலும் மனிதர்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ விசா வாங்காமலே மரணத்தை வாங்கித்தரும் பாம்பு ,நாய் , போன்ற நச்சு விடங்களை நீக்குவது பற்றி நாம் கதைப்போம் .
பொரும்பாலும் இந்த நச்சு விடங்களினால் உயிருக்கே கேட்டை தந்து விடுவது உண்டு , பல எலி போன்ற விடங்கள் நாள்பட்ட நிலையில் அதன் குணத்தைக் காட்டும் . எலிக்கடியினால் பின்னாளில்
-------------------------------------------------------------------------
மூச்சிறைப்பு என்ற நோய் தாக்குவதாக கண்டறியப்பட்டு உள்ளது . எனவே எந்த விடமனாலும் . அவைற்றை முறைப்படி நீக்கி கொள்ள வேண்டும் .
-------------------------------------------------------------------------
நாய்க்கடி
-------------------------------------------------------------------------
நாய் கடித்த உடனே ஊமைத்தைவேர் 10 கிராம் எடுத்து வூமத்தன் விதை 10 கிராம் சேர்த்து பசுவின் பால்விட்டு அரைத்து நாள்தோறும் மூன்று நாள் கொடுக்கவும் .(அ )சிறியாநங்கை இலை 5 அ 10 எடுத்து உடனே மென்று தின்னவும் விடம் நீங்கும் . இரண்டு மூன்று நாட்களுக்கு கண்டதை எல்லாம் தின்னாமல் வெறுமனே கஞ்சி மட்டுமே உண்டுவர விடம் நீங்கும் .
-------------------------------------------------------------------------
சீத மண்டலி
-------------------------------------------------------------------------
சீத மண்டலி கடித்தால் உடல் குளிரும் வியர்வை உண்டாகும் . உடலில் நடுக்கம் உண்டாகும்
குப்பை மேனி மூலிகை கொண்டுவந்து அரைத்து எலுமிச்சை விட்டரைத்து கடித்த இடத்தில் பூச வேண்டும் . சிறியாநங்கை மூலிகை பொடி கால் தேக்கரண்டி தேன் / தண்ணீர் கலந்து மூன்று நாள் காலை , மாலை உண்டுவர விடம் முறியும் .
-------------------------------------------------------------------------
வண்டுகடி
-------------------------------------------------------------------------
ஆடு தீண்டா பலை வேர் நூறு கிராம் , பொடித்து ஐந்து கிராம் அளவு நாளும் இரண்டுவேளை எட்டுநாள் உண்ண விடம் நீங்கும்.
-------------------------------------------------------------------------
செய்யான் விடம்
-------------------------------------------------------------------------
தேங்காய் துருவி சாறு எடுத்து நூறு மிலி அருந்த விடம் நீங்கும் .
எட்டி கொட்டை எடுத்து பால்விட்டரைத்து பாலில் அருந்த விடம் முறியும்.
-------------------------------------------------------------------------
பூரான்
-------------------------------------------------------------------------
இது கடித்தால் தோலில் தினவு எடுக்கும் . பூரான்போல் தடிப்பு உண்டாகும் .
குப்பை மேனி சாறு பத்து மிலி கொடுத்து சுட்ட உப்பு சுட்டபுளி உடன் உணவு எடுக்க விடம் நீங்கும் .{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் } சிரியாநங்கை மூலிகையின் சாறு அருந்தலாம் விடம் முறியும் .
-------------------------------------------------------------------------
விரியன் பாம்பு
-------------------------------------------------------------------------
இதில் பல வகை உண்டு கருவிரியபாம்பு கடித்தால் சிவப்பு நிறமாக பொன்னிறமாக நீர் வடியும் . கடுப்பு உண்டாகும் . இதற்க்கு பழைய வரகு அரிசி இருநூருகிரம் கொண்டுவந்து பிரய்மரப்பட்டை இருநூருகிரம் ததித்தனியே இடித்து வெள்ளாட்டுப்பால் கலந்து மூன்று நாள் உப்பு புலி தள்ளி உண்ண விடம் நீங்கும் .
-------------------------------------------------------------------------
நல்ல பாம்பு
-------------------------------------------------------------------------
நேர்வாளம் பருப்பை சுண்ணம் செய்து வெற்றிலை பாக்கு போல் மென்று விழுங்க கக்கல் (வாந்தி)கழிச்சல் உண்டாகி விடம் வெளியேறும் .
தும்பை சாறு 25 மிலி எடுத்து மிளகு பத்து கிராம் அரைத்து கொடுக்க விடம் நீங்கும்
வெள்ளருகு கொண்டுவந்து மென்று தின்ன விடம் முறியும் .
-------------------------------------------------------------------------
தேள்
-------------------------------------------------------------------------
தேள் கொட்டிய வுடன் தேங்காய் துருவி பால் எடுத்து இருநூறு மிலி அருந்த விடம் முறியும் .
நிலாவரை தூள் ஐந்து கிராம் குப்பை மேனி சாற்றில் மூன்று வேலை அருந்த விடம் முறியும் .
-------------------------------------------------------------------------
எலிக்கடி
-------------------------------------------------------------------------
அமுக்ரா தூள் அரைத்தேக்கரண்டி இரண்டு வேலை நாற்பத்தெட்டு நாள் எடுக்க விடம் முறியும் .
-------------------------------------------------------------------------
அவுரி மூலிகை பத்துகிரம் வெந்நீரில் கலக்கி ஒருவேளை மூன்று நாள் அருந்த விடம் முறியும் .-------------------------------------------------------------------------
மனிதன் கடித்தால் (அருள் கூர்ந்து சிரிக்க வேண்டாம் மனிதர்கள் மனிதனையே கடிக்கிறார்கள் )
சிருகுரிஞ்சன் ஒருகிராம் இரண்டு வேலை மூன்று நாள் எடுக்க விடம் நீங்கும். சிவனார் வேம்பு ஒருகிராம் ஒருவேளை மூன்று நாள் எடுக்க விடம் நீங்கும் சிரியா நங்கை அரைதேக்கரண்டி வீதம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க விடம் நீங்கும். பொன்னாவிரை கால் தேக்கரண்டி உணவுக்கு பின் ஒருவேளை வேதம் மூன்று நாள் எடுக்க விடம் நீங்கும் இப்படி முறைப்படி மருந்துகளை எடுத்துகொண்டு எதிர் காலத்தில் தோன்றும் நோய்களை வென்று வாழ்வோம்.
-------------------------------------------------------------------------
சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்
சேப்பங்கிழங்கு
சேப்பங்கிழங்கு
கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்
தக்காளி விதைகள்
தக்காளி விதைகள்
சருமத்தை அழகாக்க பயன்படும் பொருட்களில் தக்காளியும் ஒன்று. இத்தகைய தக்காளியின் உள்ளே இருக்கும் விதைகளை சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் இவை உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும். அதுமட்டுமல்லாமல் இந்த தக்காளியின் விதையில் உள்ள ஆன்டி-க்ளாட்டிங் என்னும் பொருள், இதயத்தில் எந்த அடைப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும். இப்போது சொல்வதை நம்புவீர்களோ, இல்லையோ, தக்காளியின் விதைகளை சாப்பிட்டால், விரைவில் செரிமானம் ஆகாது. ஆனால் மலச்சிக்கலை சரிசெய்யும். மேலும் செரிமானம் நடைபெற்று வெளியேறும் செரிமானப் பாதையை சுத்தம் செய்யும்.
இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்
இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்
--------------------------------------------------------------------------------
துளசி:-
1. ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது.
--------------------------------------------------------------------------------
2. இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கின்றது.
--------------------------------------------------------------------------------
வில்வம்:-
1. காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது.
--------------------------------------------------------------------------------
2. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது. சிவன் கோயில்களில் வில்வ இலை கிடைக்கும்.
--------------------------------------------------------------------------------
அருகம்புல்:-
1. எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் 9.00 மணிக்கு பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு.
--------------------------------------------------------------------------------
2. அருகம்புல் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதியச் சாப்பாடுதான்.இந்த மாதி¡¢ செய்தால் எல்லா நோய்களும் குணமடையும்.
--------------------------------------------------------------------------------
3. உடல் எடை குறைய, கொலாஸ்டிரல் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, இரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு உலகப் புகழ்வாய்ந்த டானிக்.
--------------------------------------------------------------------------------
4. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகா¢க்கச் செய்வதில் சிறந்தது அருகம் புல்தான்.
--------------------------------------------------------------------------------
5. தோல் வியாதிகள் அனைத்தும் அருகம்புல்லில் நீங்கும்.
--------------------------------------------------------------------------------
6. இரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளை வெளியேற்றுவதில் திறமையானது.
--------------------------------------------------------------------------------
அரச இலை:-
1. ஏழைகளின் டானிக் அரச இலைச்சாறு, நல்ல மலமிளக்கி, உடலை குளிர்ச்சியடையச் செய்கிறது.
--------------------------------------------------------------------------------
2. காம உணர்ச்சிகளைத் தூண்டும்; கர்ப்பப்பைக் கோளாறுகள் மறையும். காய்ச்சலுக்கும் நல்லது.
--------------------------------------------------------------------------------
3. அரசமரத்தின் பழங்கள் மலட்டுத் தன்மையை நீக்கவல்லது.
--------------------------------------------------------------------------------
பூவரசு:-
1. நல்ல டானிக், தீக்காயங்கள், புண்கள், தோல் வியாதிகள், தொழுநோய் எல்லாவற்றிற்கும் இந்த இலையை அரைத்துப் பூசலாம்.
--------------------------------------------------------------------------------
2. சாறும் குடிக்க வேண்டும். பேதி, சீதபேதிக்கு சாறு மிகவும் சிறந்தது.
--------------------------------------------------------------------------------
கல்யாணமுருங்கை (முள் முருங்கை):-
1. அதிகமான பித்தத்தை நீக்கும். முடி நரைக்காமலிருக்க உதவுகிறது. காய்ச்சலைக் குறைக்கும்.
--------------------------------------------------------------------------------
2. நீர் பிடிப்பும், மலமிளக்கி, மாத விடாய்த் தொல்லையை நீக்கும் கிருமிகளை வெளியேற்றும். வீக்கங்களை குறைக்கும்.
--------------------------------------------------------------------------------
3. நீரிழிவு, சீதபேதி, வாதம் குணமடையும், 17 வயது வரை வயதுக்கு வராத பெண்களுக்கு இதன் சாறு நல்ல பலன் தருகின்றது.
--------------------------------------------------------------------------------
வாழைத்தண்டு:-
1. சிறுநீரகக்கல் (Kidney stone) ஆபரேசன் செய்யாமலேயே குணமடைய பச்சை வாழைத்தண்டு சாறு உதவுகிறது.
--------------------------------------------------------------------------------
2. 100gm தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மிக்ஸியில் சட்னிபோல் அரைத்து சாறு பிழிந்தால் ஒரு நபருக்கு ஒரு நேரத்திற்குப் போதுமானது.
--------------------------------------------------------------------------------
3. பாம்புக்கடி போன்ற விஷத்தை வெளியேற்ற உதவுகிறது. (Very effecitve in kidney disorders).
--------------------------------------------------------------------------------
4. சிறுநீர் தொல்லைகள் வராமல், சிறுநீரகத்தைக் கழுவி சுத்தம் செய்வதற்காக ஆரோக்கியமாக வாழ்பவர்கள் கூட வாரம் இரண்டுநாள் வாழைத்தண்டு சாறு குடிக்க வேண்டும்.
--------------------------------------------------------------------------------
கொத்தமல்லி:-
1. இதுவும் நல்ல டானிக் பசியைத் தூண்டும், பித்தம் குறையும்.
--------------------------------------------------------------------------------
2. காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
--------------------------------------------------------------------------------
கறிவேப்பிலை:-
நல்ல டானிக், பேதி, சீதபேதி, காய்ச்சல், எ¡¢ச்சல், ஈரல் கோளாறுகள் மறையும்.
--------------------------------------------------------------------------------
புதினா:-
நல்ல டானிக் சிறுநீர் பிரச்சினை, ஜீரணக் கோளாறு, உஷ்ண நோய்கள் மறையும். சிறந்த மலமிளக்கி.
--------------------------------------------------------------------------------
கற்பூர வல்லி (ஓமவல்லி):-
1. மிகச் சிறந்த இருமல் மருந்து.
--------------------------------------------------------------------------------
2. 5 இலைகளை அப்படியே சாப்பிட்டால் உடனே மூக்கடைப்பு, தொண்டை வறட்சி, இருமல் மறையும்.
--------------------------------------------------------------------------------
3. புகழ்பெற்ற இருமல் மருந்துகளைப் போல் விரைவாக செயல் பு¡¢யும்.
--------------------------------------------------------------------------------
வல்லாரை:-
1. நல்ல டானிக், எல்லா நோய்களையும் நீக்கும். மஞ்சள் காமாலை, அல்சர், தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது.
--------------------------------------------------------------------------------
2. ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.
கண்டங்கத்தி¡¢:-
காசநோய், ஆஸ்துமா, மார்சளி, காய்ச்சல், தொழுநோய், இரத்த அழுத்தம், பக்கவாதம், கல்லீரல் நோய்கள் முதலியவற்றிற்கு மிகவும் சிறந்தது. ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.
--------------------------------------------------------------------------------
தூது வேளை:-
1. நரம்புத்தளர்ச்சி மறையும், மார்புச்சளி அகற்றும், தோல் வியாதிக்கும் நல்லது.
--------------------------------------------------------------------------------
2. குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கும், ஞாபகசக்தியை வளர்ப்பதற்கும் இது சிறந்த டானிக் ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.
--------------------------------------------------------------------------------
3. காது மந்தம், நமைச்சல், உடல் இளைப்பு முதலியவற்றிற்கும் தூது வேளை நல்லது.
--------------------------------------------------------------------------------
மஞ்சள் கா¢சாலங்கண்ணி:-
காமாலை, கண்கோளாறு, கல்லீரல் கோளாறு முதலியவற்றிற்கு சிறந்தது.
--------------------------------------------------------------------------------
செம்பருத்தி:-
1. மாதவிடாய்த் தொல்லைகளையும், சிறுநீர் பிரச்சனைகளையும் குணப்படுத்தும், உடலின் உள்ளே வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், முக்கியமான உடலுறுப்புகளின் மேலுள்ள பாதுகாப்பான சவ்வுகளை (mucus membranes) பாதுகாக்கிறது.
--------------------------------------------------------------------------------
2. காமத்தை வளர்க்கும். சர்க்கரை வியாதிக்கும் நல்லது.
--------------------------------------------------------------------------------
3. இதன் பூக்களையும் சாப்பிடலாம் அதில் தங்கச் சத்து நிரம்பியுள்ளது. பூவிலுள்ள மகரந்தத்தை நீக்கிவிடவும்.
--------------------------------------------------------------------------------
மணத்தக்காளி கீரை:-
1. இதுவும் ஒரு டானிக் சீரணக் கோளாறுகள், வாய்வுத் தொல்லைகள், புற்றுநோய், அல்சர், ஈரல் கோளாறுகள், இருமல், அனீமியா, தோல் வியாதிகள் முதலியவற்றிற்கு நல்லது.
--------------------------------------------------------------------------------
2. உடலுக்கு உள்ளே, வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், குளிர் தாங்கும் சக்தியை அதிகா¢க்கிறது.
--------------------------------------------------------------------------------
3.காயங்களுக்கும், புண்களுக்கும் இலைச்சாறு தடவலாம். அரைத்தும் கட்டலாம். World best ointment.
--------------------------------------------------------------------------------
தும்பை:-
1. பக்கவாதம், சளி, இருமல், தலைவலி, மார்சளி, மூட்டு வாதம் முதலியவற்றைக் குணப்படுத்த சிறந்தது.
--------------------------------------------------------------------------------
2. பாம்புக்கடிக்கு தும்பை இலைச்சாறு பாதியும் வாழைத் தண்டு சாறு பாதியும் கலந்து கொடுக்க வேண்டும்.
--------------------------------------------------------------------------------
3. தும்பை இலை ஒரு தடவைக்கு பத்து இலை போதும்.
--------------------------------------------------------------------------------
வெங்காயமும் பூண்டும்:-
1. கிறுமிகளை வெளியேற்றும் டானிக், சொறி, சிரங்கு, யானைக்கால் வியாதி, சைனஸ், டான்ஸில், இரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், காமாலை முதலியனகுணமாகும்.
--------------------------------------------------------------------------------
2. கொலாஸ்ட்ரால் குறையும். பச்சைப் பூண்டுகளை அதிகமாக சாப்பிடக் கூடாது.
குப்பைமேனி:-
--------------------------------------------------------------------------------
1. ஒரு நேரத்தில் ஐந்து இலை சாப்பிட்டால் போதுமானது. கிருமிகளை வெளியேற்றும். பாம்புக் கடிக்கும் நல்லது.
--------------------------------------------------------------------------------
2. மூட்டுவாதம், சொறி, சிரங்கு, தோல் வியாதி, மூலம் முதலிய நோய்கள் குணமடையும்.
--------------------------------------------------------------------------------
3. எந்தப் புண்ணுக்கும் இலையை அரைத்து பஊச்சலாம்.
--------------------------------------------------------------------------------
4. சொறி சிரங்குக்கு கட்டாயம் இலையை அரைத்தும் பூச வேண்டும்.
--------------------------------------------------------------------------------
5. வெகு நாட்களுக்கு சிரங்கைக் குணப்படுத்தாவிட்டால் அது சிறு நீரகத்தைப் பாதிக்கும்.
ஒரு சிறிய பரிசோதனை மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
ஒரு சிறிய பரிசோதனை மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
கீழே இருக்கும் படங்களை பாருங்கள் மரங்களின் அருமையை உணருங்கள் செடிகள் நிறைந்த தொட்டியின் வழியே கீழே இறங்கும் தண்ணீர் வெளியே வரும்போது தெளிவாக இருக்கிறது. அதே வெறும் மண், அல்லது காய்ந்த இலையுடன் கூடிய மண் வழியே வரும் தண்ணீர் கலங்கலாக இருக்கிறது.
-------------------------------------------------------------------------
நாம் காடுகளையும், மரங்களையும் அழித்துவிட்டு ஆற்று நீர் ஏன் கலங்கலாக உள்ளது என்று கவலைபடுகிறோம்.
-----------------------------------------------------------------------
நிறைய மரங்களை வளர்ப்போம், காடுகளைக் காப்போம் தூய்மையான தண்ணீரைப் பெறுவோம்.
பித்தவெடிப்பு குணமாக
பித்தவெடிப்பு குணமாக:
பித்தவெடிப்பு வந்தால்... கால் அசிங்கமாகத் தெரியும். வலி வேறஒரு வழி பண்ணிரும். இதுக்கும் வைத்தியம் இருக்கு பயப்படாதீங்க. நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துக்கோங்க, அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரை டம்ளரா குறுகினதும் வடிகட்டி வச்சிக்கோங்க. அதுல பனங்கல்கண்டு சேர்த்து குடிச்சிட்டு வந்தா... பித்தவெடிப்பு மறைஞ்சிரும். ஒரு தடவை பயன்படுத்தின நன்னாரிவேரை 3, 4 தடவைகூட பயன்படுத்தலாம்.
பித்தவெடிப்பு உள்ள இடத்துல மருதாணி இலையை அரைச்சு பத்து போட்டாலும் குணம் கிடைக்கும். வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும்...
1938 ஆம் ஆண்டு பால் முல்லர் என்ற ஜெர்மானிய விஞ்ஞானி
1938 ஆம் ஆண்டு பால் முல்லர் என்ற ஜெர்மானிய விஞ்ஞானி டீ. டீ. டீ என்ற உயிர்க்கொல்லி நஞ்சைக் கண்டுபிடித்தான்.போரின் போது இந்த நஞ்சை நீர் நிலைகளில் தூவினால் எதிரிகளின் முன்னேற்றத்தைத் தடுக்கலாம் என்பது திட்டம்.இந்தக் கண்டுபிடிப்பிற்காக 1948 ஆம் ஆண்டு பால் முல்லருக்கு நோபல் பரிசு வழங்கினார்கள்.போர் முடிந்த பிறகு ஆள் கொல்லும் நஞ்சான டீ.டீ.டீ.பூச்சி மருந்து என்ற பெயரில் விற்பனை செய்தார்கள்.
10 ஆண்டுகள் கழித்து 1958 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சாலையோர மரங்களின் மீது இதைத் தெளித்தபோது பறவைகள் எல்லாம் இறந்து போயின.மீன்கள் எல்லாம் நஞ்சாகிப் போயின.மீன்களை உண்ட மனிதர்கள் நோய்வாய்ப்பட்டார்கள்.அமெரிக்கர்களுக்கு வசந்தம் வருவதைக் கட்டியம் கூறும் ராபின் பறவை மலடாகிப் போனது.அமெரிக்கர்களின் தேசியப்பறவை "வழுக்கைத் தலை கழுகு "மலடாகிப் போய் இனப்பெருக்கம் நின்று போனது...
நம் தமிழ்புத்தாண்டு சித்திரை மாதம் .நமது முன்னோர்கள் எது செய்தாலும் ஒரு காரணத்தோடுதான் செய்வார்கள்.அவர்கள் முட்டாள்கள் அல்ல.
நம் தமிழ்புத்தாண்டு சித்திரை மாதம் .நமது முன்னோர்கள் எது செய்தாலும் ஒரு காரணத்தோடுதான் செய்வார்கள்.அவர்கள் முட்டாள்கள் அல்ல.
தமிழ்நாட்டில் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் தை, சித்திரை என்று இருவேறு பிரிவினர்களால் வகைப்படுத்தப்படுகிறது. இதில் எது உண்மையாக இருக்கும்?
------------------------------------------------------------------------
தமிழர்கள் இந்தத் தமிழ்நாட்டில் மட்டுமா இருக்கின்றனர்? இந்தியா தவிர, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், பிஜூ தீவுகள் மற்றும் தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு எனக் கொண்டாடி வருகின்றனர்.
------------------------------------------------------------------------
தமிழ்நாட்டில் இருக்கும் நாம் பன்னெடுங்காலமாக சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறோம். உலகம் முழுவதும் கதிரவனை (ஞாயிறு) அடிப்படையாகக் கொண்டு காலத்தை வரையறுத்திருக்கிறார்கள். இந்தக் காலத்தின் அளவை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து நம் முன்னேர்கள் முன்பே தெரிவித்திருக்கிறார்கள். இதைத் தமிழில் “தெறிப்பளவு” என்பார்கள். ஆங்கிலத்தில் “Time Measure ” என்பார்கள். அதாவது,
------------------------------------------------------------------------
2 கண்ணிமை = 1 நொடி-----------------
2 கைநொடி = 1 மாத்திரை----------------
2 மாத்திரை = 1 குரு-----------------
2 குரு = 1 உயிர்--------------------
2 உயிர் = 1 சணிகம்----------------
12 சணிகம் = 1 விநாடி---------------------
60 விநாடி = 1 நாடி – நாழிகை----------------
2½ நாழிகை = 1 முகூர்த்தம்---------------
2 முகூர்த்தம் = 1 சாமம்--------------------
4 சாமம் = 1 பொழுது--------------------
2 பொழுது = 1 நாள்---------------------
15 நாள் = 1 பக்கம்---------------
2 பக்கம் = 1 மாதம்--------------------
6 மாதம் = 1 அயனம்----------------
2 அயனம் = 1 ஆண்டு---------------
60 ஆண்டு = 1 வட்டம்------------------
360 ஆண்டு = 1 தேவ ஆண்டு----------------
12 ஆயிரம் தேவ ஆண்டு = 1 சதுர்யுகம்---------------
------------------------------------------------------------------------
இந்த சதுர்யுகத்தில் பார்த்தம், பரமம் போன்றவைகளைக் கடந்து யுகம் இருக்கிறது. இந்த யுகங்களில் கிருதயுகம், திரேதாயுகம் மற்றும் துவாபரயுகம் போன்றவை முடிந்து போய் விட்டன. தற்போது கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி பல லட்சம் ஆண்டுகளுக்குக்கும் மேலான காலக் கணக்குகளை நம் முன்னோர்கள் சிறப்பாக வகுத்து வைத்திருந்திருக்கிறார்கள்.
------------------------------------------------------------------------
இக்காலச் சுழற்சியில் தமிழர்கள் நாள் மற்றும் ஆண்டைப் பொழுதுகளாகப் பிரித்துள்ளனர்.
------------------------------------------------------------------------
"பெரும்பொழுதென்றா சிறுபொழுதென்றா
இரண்டு கூற்றத் தியம்பிய பொழுதே"
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்று நம்பியகப்பொருள் நூற்பா மொழிகிறது
ஒவ்வொரு நாளையும் நான்கு மணிகளாகக் கொண்டு பகுத்து, ஆறு பொழுதுகளாகப் பிரித்துள்ளனர். அந்தப் பொழுதுக்கு தனித்தனியாகப் பெயரையும் வைத்திருந்தார்கள். அவை;
------------------------------------------------------------------------
2 முதல் 6 மணி வரை – இராப்பொழுதின் பிற்கூறு - வைகறை-----------
6 முதல் 10 மணி வரை – பகற்பொழுதின் முற்கூறு – விடியல் (காலை)-----
10 முதல் 2 மணி வரை – பகற்பொழுதின் நடுக்கூறு - நண்பகல்-----------
2 முதல் 6 மணி வரை – பகற்பொழுதின் பிற்கூறு - ஏற்பாடு-----------------
6 முதல் 10 மணி வரை – இராப்பொழுதின் முற்கூறு - மாலை-----------
10 முதல் 2 மணி வரை – இராப்பொழுதின் நடுக்கூறு - யாமம்---------
------------------------------------------------------------------------
இந்த ஆறு பொழுதுகளும் சேர்ந்தது சிறு பொழுது என்கிறார்கள்.
------------------------------------------------------------------------
இதுபோல் ஒவ்வொரு ஆண்டையும் இரு மாதங்களாகப் பகுத்து, ஆறு பொழுதுகளாகப் பிரித்துள்ளனர். அந்தப் பொழுதுக்கு தனித்தனியாகப் பெயரையும் வைத்திருந்தார்கள். அவை;
------------------------------------------------------------------------
சித்திரை & வைகாசி மாதங்கள் – இளவேனில் காலம்---------
ஆனி & ஆடி மாதங்கள் – முதுவேனில் காலம்0------------
ஆவணி & புரட்டாசி மாதங்கள் – கார் காலம்--------------
ஐப்பசி & கார்த்திகை மாதங்கள் – கூதிர்க் காலம்-------------
மார்கழி & தை மாதங்கள் – முன்பனிக் காலம்----------------
மாசி & பங்குனி மாதங்கள் – பின்பனிக் காலம்----------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்று இந்த ஆறு காலங்களும் சேர்ந்து பெரும் பொழுது என்கிறார்கள்.
இந்தப் பெரும் பொழுதின் தொடக்கம் இளவேனில் காலம்தான். இந்தக் காலத்தின் முதல் மாதம் சித்திரை மாதம். இம்மாதம் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாக இருப்பதுதான் சரி.
------------------------------------------------------------------------
தை மாதம் ஆண்டிற்கான பெரும் பொழுதுகளில் முன்பனிக் காலத்தில் வருகிறது. இந்த முன்பனிக் காலமே ஆண்டின் முதல் தொடக்கமாக வைத்துக் கொண்டாலும் மார்கழி மாதம் ஆண்டின் தொடக்கமாக இருக்குமே தவிர, அதில் இரண்டாவதாக உள்ள தை மாதம் எப்படி ஆண்டின் தொடக்கமாகும்?
------------------------------------------------------------------------
தமிழ் மாதங்கள் கதிரவனை அடிப்படையாகக் கொண்ட மாதங்களாகும். அதாவது பூமிக்குச் சார்பாகக் கதிரவனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே காலங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து பார்க்கும் போது பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றும். கதிரவன் அவ்வாறு ஒருமுறை சுற்ற எடுத்துக் கொள்ளும் காலம் ஒரு ஆண்டாகும். இந்தச் சுற்றுப்பாதையின் தளம் பூமியை மையமாகக் கொண்டு ஒவ்வொன்றும் 30 பாகை (degrees) எனும் அளவுள்ள 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் இராசிகள் எனப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் கதிரவன் 12 இராசிகள் வழியாகப் பயணம் செய்கிறது. அந்தப் 12 இராசிகளை;
------------------------------------------------------------------------
1. மேடம் (ேமஷம்)-------------
2. இடபம் (ரிஷபம்)-----------
3. மிதுனம்------------------
4. கர்க்கடகம் (கடகம்)----------
5. சிங்கம் (சிம்மம்)--------------
6. கன்னி-------------
7. துலாம்------------------
8. விருச்சிகம்--------------
9. தனுசு---------------
10. மகரம்-------------
11. கும்பம்--------------
12. மீனம்--------------
என்று குறிப்பிடுகின்றனர்.
------------------------------------------------------------------------
கதிரவன் இந்த பன்னிரண்டு இராசிக்குள் நுழைந்து அதை விட்டு வெளியேறும் வரையான காலமே ஒரு மாதம் ஆகும்.
------------------------------------------------------------------------
கதிரவன் மேட இராசியில் பயணம் செய்யும் போது நடைபெறும் மாதம் சித்திரை. இவ்வாறே அடுத்துள்ள ஒவ்வொரு இராசியிலும் கதிரவன் பயணிக்கும் காலத்தை மாதங்களாகக் கொண்டு மொத்தம் 12 மாதங்கள் என கணக்கிட்டுள்ளனர்.
------------------------------------------------------------------------
அவை முறையே சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என 12 மாதங்களாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
------------------------------------------------------------------------
இம்மாதங்களை நல்ல தமிழில் சொன்னால்,
------------------------------------------------------------------------
1. மேழம்----------------
2. விடை----------------
3. ஆடவை-------------
4. கடகம்--------------
5. மடங்கல்--------------
6. கன்னி--------------
7. துலை-------------
8. நளி-----------------
9. சிலை---------------
10. சுறவம்---------------
11. கும்பம்---------------
12. மீனம்--------------
------------------------------------------------------------------------
என்று சொல்லலாம்.
------------------------------------------------------------------------
இப்படி காலக்கணக்கை கணிக்கும் நிலையைத் தமிழில் காலந்தேர் (காலம் + தேர்) என்று சொல்கிறோம். இதைத்தான் ஆங்கிலத்தில் Calendar என்கின்றனர்.
------------------------------------------------------------------------
தமிழ்க் காலந்தேரில் இருக்கும் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்திற்கென்று சில சிறப்புகள் உண்டு. சித்திரை மாதம் ஆண்டுக்கான பெரும் பொழுதில் இளவேனில் காலத்தில் இருக்கிறது. இந்தக் காலத்தை வசந்த காலம் என்றும் சொல்வார்கள். இந்த வசந்த காலத்தில்தான் இந்து சமயக் கோயில்கள் பல விழாக்கோலம் காண்கின்றன.
------------------------------------------------------------------------
1. சித்திரை மாதத்தின் முதல்நாளில் நான்முகன் (பிரம்மா) இப்புவியைத் தோற்றுவித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
------------------------------------------------------------------------
2. சித்திரை மாதத்தின் சித்திரை நட்சத்திரத்தில் சிவபெருமான் சித்திரம் ஒன்று வரைய அதிலிருந்து சித்திரகுப்தன் தோன்றியதாக புராணக்கதைகள் சொல்கின்றன.
------------------------------------------------------------------------
3. சித்திரை மாத திருதியை திதியில் மகா விஷ்ணு மச்ச அவதாரம் (மீன் உருவம்) எடுத்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன.
------------------------------------------------------------------------
4. சித்திரை மாதம் சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது.
------------------------------------------------------------------------
5. ஸ்ரீ ராமன் சித்திரை மாதத்தில்தான் அவதரித்தார். இருப்பினும் இந்தியாவில் பங்குனி மாத வளர்பிறையில் நவமி திதியிலேயே ராம நவமி கொண்டாடப்படுகிறது.
------------------------------------------------------------------------
இறைவன் அவதாரக் காலமே (பிறப்புக் காலமே) சித்திரையில் பிறக்கும் போது சித்திரை தமிழ்ப் புத்தாண்டாய்ப் பிறப்பதில் என்ன தவறு இருக்கிறது?
------------------------------------------------------------------------
சித்திரை 1 ஆம் தேதியில்தான் இந்து சமயக் கோயில்களில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்வுகள் நடத்தப் பெறுகின்றன. திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் இந்நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெறும்.
------------------------------------------------------------------------
இதே சித்திரை 1 ஆம் தேதியன்று தமிழ் முனிவர் அகத்தியருக்கு ரிஷப வாகனத்தில் சிவபெருமான் – உமாமகேசுவரி திருமணக் காட்சியைக் காட்டி அருளினர். இவ்விழா ஆண்டுதோறும் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் சித்திரை விசுத் திருவிழாவின் போது நடைபெற்று வருகிறது. வேறு சில சிவத்தலங்களிலும் இவ்விழா நடத்தப் பெறுகிறது.
------------------------------------------------------------------------
சித்திரை மாதத்திற்கென்று மேலும் பல சிறப்புகளும் இருக்கின்றன. சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாம் பிறை தோன்றும் நாள் அக்சய திருதியை என அழைக்கப்படுகிறது. இந்நாளில் வாங்கும் பொருள்கள் பன்மடங்காகப் பெருகும் என்கிற நம்பிக்கை நம் தமிழ்நாட்டு மக்களிடம் இன்றும் இருக்கிறது.
------------------------------------------------------------------------
இந்த வசந்தக் காலத்தில்தான் இந்துக் கோயில்களில் பிரமோற்சவம் எனும் பெருவிழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் வரும் பௌர்ணமி அன்று
------------------------------------------------------------------------
1. மதுரை மாநகரில் சொக்கநாதர் – மீனாட்சி திருமண நிகழ்வுகள் சித்திரை விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
------------------------------------------------------------------------
2. மதுரை மாநகரில் இதே நாளில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
------------------------------------------------------------------------
3. திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது சிறப்பு என என்கின்றனர்.
4. விழுப்புரம் அருகிலுள்ள கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் விழா கொண்டாடுகின்றனர்.
------------------------------------------------------------------------
5. தேனி மாவட்டத்திலுள்ள மக்கள் கூடலூர் அருகிலுள்ள மலைப்பகுதியில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் ஒருநாள் மட்டும் சிறப்பு விழாவாகக் கொண்டாடுகின்றனர்.
------------------------------------------------------------------------
இதுபோல், சித்திரை மாதம் கோடைகாலமாக இருப்பதால் கோடைகாலத் தெய்வமாக வணங்கப்படும் மாரியம்மன் கோயில்கள் அனைத்தும் விழாக் கோலம் காண்கிறது. நாட்டுப்புறத் தெய்வங்கள் அல்லது சிறுதெய்வ வழிபாடு இக்காலத்தில்தான அதிகமாக நடத்தப் பெறுகின்றன.
------------------------------------------------------------------------
தமிழகத்தின் தென்பகுதி மக்கள் சிறுதெய்வ வழிபாடு நிகழ்வுகளை கொடை விழா என்று அழைக்கின்றனர். இது முன்பு கோடை விழாவாக இருந்து பின்னர் கொடை விழாவாக மருவியிருக்க வேண்டும்.இன்றும் கொடை விழாக்கள் சித்திரை வைகாசி மாதங்களிலேயே நடத்தப் பெறுகின்றன.
------------------------------------------------------------------------
இப்படி சித்திரை மாதத்திற்கு பெருமை சேர்க்கும் எத்தனையோ சிறப்புகள் இருக்கின்றன. சித்திரை மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று மூதாதையர்களுக்குத் திதி எனும் புண்ணியாதானம் செய்யும் நிகழ்வுகளும் கூட நடத்தப் பெறுகின்றன.
------------------------------------------------------------------------
மன்னர்கள் ஆட்சிக் காலத்தில், மதுரை மாநகரில், மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் மூன்று தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டு இருக்கின்றன. மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு (தெருக்களுக்கு) ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதீகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள், அதையும் தாண்டி வெளியில் வந்தால் வெளி வீதிகள் என கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு என நான்கு திசைகளிலும் கோயிலைச் சுற்றி மதுரை மாநகரின் தெருக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இன்றும் அப்படியே இருக்கின்றன.
------------------------------------------------------------------------
இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்தந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும் என்பதுதான் இதன் சிறப்பு. இதில் சித்திரைத் திருவிழாதான் மிகச்சிறப்பு.
------------------------------------------------------------------------
இத்தகவல்களெல்லாம் மூடநம்பிக்கை சார்ந்தவை என்று சிலர் குற்றம் சாட்டக் கூடும். இவை சிலருக்கு மூடநம்பிக்கையாகத் தோன்றினாலும் தமிழ்நாட்டிலிருக்கும் மக்களுக்கு மன ஆறுதலளிக்கும் தகவல்கள். அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் தகவல்கள்.
------------------------------------------------------------------------
சித்திரை மாதம் கோடைகாலம்தான். வயல்கள், தோட்டங்களெல்லாம் உற்பத்தியைத் தொடங்காத காலம்தான். காய்ந்து கிடக்கும் நிலங்கள், தண்ணீர்ப் பற்றாக்குறையுள்ள காலங்கள். இக்காலத்தில் மழை பெய்ய வேண்டி கோயில்களில் விழாக்கள் நடத்தி வழிபடுகின்றனர். அவர்கள் வேண்டுதலினாலோ அல்லது இயற்கையாகவோ சிறிதளவு பருவ மழை பெய்யத் தொடங்குகிறது.
------------------------------------------------------------------------
இதைத் தொடர்ந்து ஆனி, ஆடி மாதங்களில் விவசாயப் பெருமக்கள் தங்கள் நிலங்களில் உற்பத்தியைத் தொடங்குகின்றனர். இவை தொடக்கக் காலங்கள்.
------------------------------------------------------------------------
தை மாதம் முதல்நாள் தமிழர் திருநாளாக விவசாயப் பெருமக்கள் விழா கொண்டாடுகின்றனர். எப்படி? விவசாயத்திற்குத் தேவையான மழை, வெப்பம் போன்ற வசதிகளை வழங்கி அறுவடை செய்தவை வீடு வந்து சேர உதவியமைக்காக, கதிரவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நன்றித் திருநாளாகக் கொண்டாடுகின்றனர். இவை முடிவுக் காலங்கள்.
------------------------------------------------------------------------
இதிலேயே தொடக்கம் எது? முடிவு எது? என்பது தெரியவில்லையா?
------------------------------------------------------------------------
சித்திரைதான் ஆண்டின் தொடக்கம். சிறப்பின் தொடக்கம் என்று நம் தமிழ் இலக்கியங்களும் நமக்குச் சொல்கின்றன. நம் அண்டை மாநிலமான ஆந்திராவில் கூட தெலுங்கு வருடப் பிறப்பு மார்ச் இறுதியில்தான் வருகிறது. வட இந்தியாவிலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில்தான் வருடப் பிறப்பு தொடங்குகின்றன. இப்படி சித்திரைதான் ஆண்டின் தொடக்கம் என்று காட்டும் பல எடுத்துக்காட்டுகளை நாம் காண முடிகிறது.
------------------------------------------------------------------------
தமிழ்ப் புத்தாண்டு மாற்றத்தைக் கோருபவர்கள் வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழியை எதிர்க்கும் நோக்குடன் தமிழுக்கென தனி புத்தாண்டு தேடுகிறார்களே தவிர, அவர்கள் தமிழுக்காக எதையும் தேடவில்லை. இந்து சமயக் காலக் கணிப்பு முறை வடமொழி எனும் சமஸ்கிருத மொழியில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. இக்கணிப்பிலான பன்னிரண்டு மாதங்களுக்கான பகுப்பும் வடமொழிப் பெயர்களாகவே பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
------------------------------------------------------------------------
தமிழக மக்கள் கி.பி. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து அதை ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.
------------------------------------------------------------------------
இப்படி பிற மொழியின் ஆக்கங்களையும், கலைச் சொற்களையும் நாம் ஏற்றுக் கொள்வதால் தமிழ் மொழியின் வளர்ச்சி அதிகரிக்கவே செய்யும். இன்று உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஆங்கில மொழி, பல பிற மொழிச் சொற்களை உள் வாங்கிக் கொண்டு வளர்ந்திருக்கிறது. ஆங்கில மொழியில் எத்தனையோ பிற மொழிச் சொற்கள் கலந்திருக்கின்றன. அவையெல்லாம் இன்று ஆங்கிலச் சொற்களாகவே ஆகிப் போய் விட்டன.
------------------------------------------------------------------------
ஆக்ஸ்போர்டு பேராசிரியர் ஜேம்ஸ் முரே அகராதியைத் (Dictionary) தொகுத்துக் கொண்டு இருந்த போது டாக்டர் மைனர்ஸ் என்பவரிடமிருந்து பயனுள்ள ஆலோசனைகளும், புதிய சொற்களும், அதற்கான விளக்கங்களைப் பற்றியும் தொடர்ந்து கடிதங்கள் வந்து கொண்டிருந்தன.
------------------------------------------------------------------------
அவருக்கு நேரில் சென்று நன்றி தெரிவிப்பதற்காக டாக்டர் மைனர்ஸ் குறிப்பிட்டிருந்த முகவரிக்குச் சென்ற பேராசிரியர் ஜேம்ஸ் முரேக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
------------------------------------------------------------------------
ஏனென்றால் அவர் சென்ற இடம் ஒரு பைத்தியக்காரர்கள் இல்லம். அவர் அங்கிருந்த அலுவலரைக் கண்டு பேசினார்.
------------------------------------------------------------------------
டாக்டர் மைனர்ஸ் புத்தி பிசகி ஒருவரைக் கொன்று விட்டதாகவும், அதற்காக அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த பைத்தியக்கார இல்லத்தின் அலுவலர் தெரிவித்தார்.
------------------------------------------------------------------------
அந்த இல்லத்தில் ஏதாவது படித்துக் கொண்டிருந்த டாக்டர் மைனர்ஸ் தமக்குத் தோன்றிய சொற்களை ஜேம்ஸ் முரேக்கு எழுதியனுப்பியதும் தெரிய வந்தது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் டாக்டர் மைனர்ஸ் கண்டுபிடித்து அனுப்பிய ஆயிரத்துக்கும் அதிகமான சொற்கள் ஆக்ஸ்போர்டு அகராதியில் இடம் பெற்று விட்டன. இன்றும் அச்சொற்கள் ஆங்கிலப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
------------------------------------------------------------------------
சிலர் ஆங்கிலப் புத்தாண்டு 2012 என்று அடையாளப்படுத்த முடிகிறது. தமிழ்ப் புத்தாண்டுக்கு ஒரு அடையாளம் வேண்டுமே என்கிறார்கள்...
------------------------------------------------------------------------
உண்மையைச் சொல்லப் போனால் ஆங்கிலப் புத்தாண்டும் முன்பு ஏப்ரல் 1 ஆம் தேதியில்தான் தொடங்கியது.
------------------------------------------------------------------------
அன்றைய ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1ம்தேதி பொழுது புலர்ந்து பூபாளம் பாடுகிற வேளை தான் வசந்தம் துவங்குகிற பொன்னாள் என்று புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.
------------------------------------------------------------------------
இந் நாளில் கடவுளுக்கு பலி செலுத்தும் பழக்கமும் காணிக்கைகளைச் செலுத்தும் வழக்கத்தையும் அவர்கள் கொண்டிருந்தனர். ஆடல், பாடல், நடனம் என்று கலை நிகழ்ச்சிகளில் மூழ்கி தங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டனர். இது எதிர் வரும் புத்தாண்டைச் சிறப்பாக வரவேற்கும் வகையான நிகழ்வின் வெளிப்பாடாகக் கருதப்பட்டது. மகிழ்ச்சி பொங்கும் வாழ்க்கை நிலவிட வழிபாடுகளை மேற்கொண்டனர்.
------------------------------------------------------------------------
ஹார்வி என்னும் வரலாற்றாய்வாளர் தனது குறிப்பில், "பிரான்சு தேசத்தின் அரசன் ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் மாதம் 25ம்தேதியிலிருந்து ஒருவார கால புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார்.
------------------------------------------------------------------------
திருவிழாவைப் போல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களின் போது ஒருவருக்கொருவர் பரிசுப் பொருள்களையும், அன்பளிப்புகளையும் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டதாக குறிப்பிடுகிறார். இந்த ஒரு வாரக் கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஏப்ரல் ஒன்றாம் தேதி பெரு விருந்துடன் புத்தாண்டு விழா நிறைவெய்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
------------------------------------------------------------------------
1562ம் ஆண்டில் பதின்மூன்றாம் போப் ஆண்டவராக இருந்த போப் கிரகோரி ஏசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தை அடிப்படையாகக் கொண்டு “கிரகோரியன் நாள்காட்டி” உருவாக்கப்பட்டு புதிய ஆண்டுத் துவக்கத்தை நடைமுறைப் படுத்தும்படி அறிவித்தார்.
------------------------------------------------------------------------
ஆண்டுத் துவக்க நாளாக சனவரி 1ம்தேதியை அறிமுகம் செய்து வைத்தார். இனி மேல் பிரான்சு தேசம் முழுமையும் இந்த நாட்காட்டிதான் என்று ஊர்தோறும் அறிவிக்கப்படது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1ம் தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர்.
------------------------------------------------------------------------
ஏப்ரல் 1ம்தேதியைக் கொண்டாடியவர்களை கேலியும் கிண்டலும் செய்ததோடு அவர்களை நூதனமாக ஏமாற்றி "ஏப்ரல் முட்டாள்கள்" (April Fool) என்றழைக்கவும் செய்தனர். நள்ளிரவு தாண்டியும் நாட்டிய நடனங்களில் ஈடுபட்டு மிகுந்த மகிழ்ச்சிகரமாக இருந்திருக்கின்றனர்.
ரோமாபுரியில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்த போது, நடைமுறைகளை மாற்றினார்கள். தற்போதுள்ள ஈஸ்ட்டர் பண்டிகையினையும் மாற்றி அறிவித்தார்கள். பழமையான கொண்டாட்டங்களை மாற்றியதோடு அவற்றில் ஒரு சிலவற்றை வேடிக்கை வினோத கொண்டாட்டங்களுக்குரிய நாளாக மாற்றினர். இந்த மாற்றங்களில் நம்பிக்கை இல்லாமலிருந்த இவர்களை கேலியும் கிண்டலும் செய்து விளையாட்டாக முட்டாளாக்கி ஏமாற்றும் போக்கில் ஈடுபட்டனர். இதுவே நாம் இன்றைக்கு வேடிக்கையாய் முட்டாள்களாக்கி மகிழ்கிற நாளாக தொடர்ந்திடுகிறது எனலாம்.
சனவரி மாதம் 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர். பெரிய பரிசுக் கூடைகள் போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை என்று நிரப்பிக் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர். இதை நம்பும்படியான ஆனால் நகைக்கும்படியான செயலாக செய்து மகிழ்ந்தனர்.
இப்படி ஏப்ரல் 1 ஆம் நாள் புத்தாண்டு மறைக்கப்பட்டதற்கும் அந்நாள் முட்டாள் நாளாக்கப்பட்டதற்கும் சமயம் சார்ந்த தகவல்களே முன்னிலையாக இருக்கின்றன.
உலகம் முழுக்க மார்ச், ஏப்ரல் மாதங்களே புத்தாண்டு தொடக்கங்களாக இருந்திருக்கின்றன...
உலகின் மூத்த குடிமக்கள் என்கிற பெருமையுடன் இருக்கும் நாம் குறிப்பிட்ட எல்லைக்குள் தமிழர் ஆண்டு என அடையாளப்படுத்திக் கொள்வதற்காக காலங்காலமாகத் தொடர்ந்து வரும் சித்திரையை ஆண்டின் தொடக்கமாகக் கொள்வோம். தொடர்ந்து சித்திரையே தமிழ்ப் புத்தாண்டு எனக் கொண்டாடுவோம்... நம் நம்பிக்கையைத் தொடர்வோம்... வாருங்கள்!
மண்பானை சமையலும், இன்றைய சமையலும்
மண்பானை சமையலும், இன்றைய சமையலும்
40 வருடங்களுக்கு முன், இயற்கை விவசாய முறைப்படி கெமிக்கல் பூச்சிக்கொல்லி, பூஞ்சான் கொல்லி போன்றவைகளின் உபயோகம் குறைந்திருந்தது.
------------------------------------------------------------------------------
பேருந்து வசதியில்லாத காலகட்டத்தில் ஒரு கிராமத்தில் விளையும் காய்கறிகளை அந்தந்த கிராமத்திலேயே விற்று விடுவதால் கீரை மற்றும் காய்கறிகளின் உபயோகம் அதிகமாக இருந்தது. மலிவு விலையில் கிடைத்ததால் மக்கள் அதிகமாக உபயோகப்படுத்தினர்.
------------------------------------------------------------------------------
வீட்டு தோட்டத்தின் மூலமும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை எந்தவித கெமிக்கலும் இல்லாமல் வீணாகும் தண்ணீரை வைத்து பயிரிட்டனர் மற்றும் சாப்பிட்டு வந்தனர்.எந்த ஒரு திருவிழா மற்றும் விஷேங்களில் காய்கறிகளை மதியம் சாப்பாடிற்கு பயன்படுத்துவார்கள். விஷேங்கள் 3 முதல் 1 வாரம் வரை நடப்பதால், உணவுகளில் கூட்டு, பொறியல், மசியல், மற்றும் அவியல் என காய்கறிகளின் உபயோகம் அதிகமாக இருக்கும்.
------------------------------------------------------------------------------
கொய்யா,வாழைப்பழம், வாழைத்தண்டு, வாழைப்பூ மற்றும் கீரை வகைகளின் உபயோகம் அதிகமாக இருப்பதற்கு காரணம் பெண்கள் பெரும்பாலும் 80% வேலைக்கு செல்வதில்லை எனவே அவர்களுக்கு நிறைய நேரம் கிடைப்பதால், இந்த மாதிரியான காய்கறிகளை சுத்தப்படுத்துவது எளிதாக இருந்தது. இதன் மூலம் அவர்களுக்கு வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் மற்றும் நார்ச்சத்தும் கிடைத்தன.
------------------------------------------------------------------------------
மண்பானை சமையலில், கீரைகளை, திறந்த நிலையில் வேகவைக்கும் போது, அதிலுள்ள வேண்டாத மூலக்கூறுகள் வெளியேறுவதால், கீரையில் வாசனையும், ருசியும் கூடியது.விருந்தினருக்கு காய்கறிகள் மூலமாக தயாரிக்கப்பட்ட சூப்பை கொடுப்பது பழக்கத்திலிருந்ததால், ஒரளவு உயிர்ச்சத்துக்களும், தாதுப் பொருட்களும் கிடைத்தன.
------------------------------------------------------------------------------
தற்போது கீரைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் உபயோகம்.
------------------------------------------------------------------------------
தற்போது காய்கறிகள் மற்றும் பழங்களின் உபயோகம் அதிகமாக இருந்தாலும், அவை விளைவிக்கப்பட் இடங்கள் பெரும்பாலும் செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மற்றும் கெமிக்கல் மருந்துகள் உபயோகப்படுத்தப்பட்டவையேயாகும். ஏன்? சாக்கடைகளில் கூட உற்பத்தி செய்யப்படுகின்றன.
------------------------------------------------------------------------------
ஆண் மற்றும் பெண்கள், இருவருமே வேலைக்குச் செல்வதால், கீரை வகைகளை சமைப்பது, வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமேயாகும். சிலர் வீடுகளில் கீரையை மாதத்திற்கு ஒரு முறைதான் சமைக்கின்றனர்.
------------------------------------------------------------------------------
//பச்சைக் காய்கறிகளை சாப்பிடும் போது, வைட்டமின் சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன என எண்ணி உண்கின்றனர். ஆனால் கொழுப்பால் கரையும் உயிர்ச்சத்துக்கான ஏ.டி,ஈ, மற்றும் கே சத்துக்கள் கொழுப்புச்சத்து சிறிதேனும் உணவில் இருந்தால் தான், இந்த சத்துக்களை கிரகிக்க முடியும் என்பதை அறியாமல் உள்ளனர். எனவே காரட், மற்ற முளைகட்டிய பருப்பு வகைகளை சிறிது தயிர் சேர்த்து சேலட் ஆக சாப்பிடும் போது உயிர்ச்சத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. என்பதை அறிய வேண்டும்.//
------------------------------------------------------------------------------
விஷேங்கள் மற்றும் திருவிழாக்காலங்களில், தற்போது, ரிசப்சன் என்ற பெயரில், ஒரு நேரத்திற்கு சாப்பாடு, டிபனாக போடுவதால், காய்கறிகளின் உபயோகம் குறைகின்றது.பழங்கள், கீரைவகைகள் மற்றும் காய்கறிகளின் உபயோகம் குறைந்து, பாஸ்ட் புட் என்ற வகையில் தானியங்கள் மற்றும் கொழுப்பு சத்துக்களின் உபயோகம் அதிகரித்துள்ளது.
------------------------------------------------------------------------------
கீரைகளின் தண்டுகளை முன்னோர்கள் மாதிரி உபயோகப்படுத்தாமல், வெறுமனே கீரைத் தழைகளை மட்டுமே உபயோகப்படுத்துவதால் நார்ச்சத்து கிடைப்பது குறைகின்றது.
வைரஸ் காய்ச்சலால் தொழுநோய்
வைரஸ் காய்ச்சலால் தொழுநோய், சிறுநீர் சம்பந்தமான நோய்களுக்கு வேப்பங்காய் நல்ல பலன் தருகின்றது.
வேப்பங்காய் இரத்த மூலத்தையும், குடற் பூச்சிகளையும், சிறுநீரகத் தொல்லைகளையும் போக்கும். எல்லா நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
-----------------------------------------------------------------------
வேப்பிலை உருண்டையைத் தேய்த்துக் குளித்தால் புண்கள் குணமாகும். வேப்பம் குச்சியால் தொடர்ந்து பல துலக்கி வந்தால் வாய் துர்நாற்றம் போகும், பற்கள் உறுதியாகும்.
-----------------------------------------------------------------------
வேப்பம் பழத்தை அரைத்து சாற்றை எடுத்து தோல் புண், சொறி, சிரங்குகளில் பூச அவை குணம் பெறும்.
-----------------------------------------------------------------------
வேப்பங் கொட்டையை உடலில் உள்ள புண்களில் அரைத்து பூசினால் தொற்று நோய்க்கிருமிகள் தாக்காது
உணவில் சேர்க்கும் இந்திய மசாலாப் பொருட்களின் நன்மைகள்!!!
------------------------------------------------------------------------------
இந்தியாவில் உணவுகளின் சுவைக்காக சேர்க்கப்படும் மசாலாப் பொருட்களில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இத்தகைய பொருட்களை உப்பிற்கு பதிலாகவும் சேர்க்கலாம். பொதுவாக இந்த பொருட்கள் பிரியாணிகளின் அதிகம் சேர்க்கப்படும். பெரும்பாலானோர், இவற்றை வெறும் வாசனைப் பொருளாகவும், காரத்திற்கு சேர்க்கும் மசாலாப் பொருளாகவும் மட்டும் தான் பார்க்கின்றனர்.
------------------------------------------------------------------------------
ஆனால் இத்தகைய மசாலாப் பொருட்களை அளவாக உணவில் அவ்வப்போது சேர்த்து வந்தால், நிறைய நன்மைகளைப் பெறலாம். அதுவே நன்மை அதிகம் உள்ளது என்று அளவுக்கு அதிகம் சாப்பிட்டால், பின் செரிமானப் பிரச்சனை அல்லது சில சமயங்களில் அல்சர் போன்றவை கூட ஏற்படும்.
------------------------------------------------------------------------------
சரி, இப்போது உணவில் வாசனைக்காகவும், காரத்திற்காகவும் சேர்க்கும் ஒவ்வொரு மசாலாப் பொருட்களின் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போமா!
------------------------------------------------------------------------------
பட்டை
------------------------------------------------------------------------------
இந்த நறுமணப் பொருளை உணவில் சேர்த்தால் ஒரு சூப்பரான சுவையைப் பெறலாம். பொதுவாக இதனை குழம்பு, புலாவ், பிரியாணி போன்றவற்றில் பயன்படுத்துவார்கள். இந்த பொருள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதனை அவர்கள் சாப்பிட்டால், அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரப்பதை தடுத்து, தேவையான அளவை மட்டும் சுரக்கும். மேலும் இதனை சாப்பிட்டால், செரிமான பிரச்சனை, இருமல், வயிற்றுப் போக்கு, மோசமான இரத்த சுழற்சி, மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் டென்சன் போன்றவை சரியாகும்.
------------------------------------------------------------------------------
கிராம்பு
------------------------------------------------------------------------------
இந்தியாவில் உள்ள அனைவருக்குமே கிராம்பை நன்கு தெரியும். அதிலும் இதனை உணவில் வாசனைக்காக சேர்ப்பதோடு, பல் பிரச்சனைகளை குணப்படுத்தும் ஒரு சிறந்த பொருளும் கூட. மேலும் அளவுக்கு அதிகமாக உணவை சாப்பிட்டோ மற்றும் ஆல்கஹால் அருந்தியோ அவஸ்தைப்படுவோர், ஒரு கிராம்பை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் சரிசெய்துவிடும். கிராம்பு வாந்தி, செரிமானப் பிரச்சனை, வயிற்றுப் போக்கு போன்றவற்றையும் குணமாக்கும்.
------------------------------------------------------------------------------
சீரகம்
------------------------------------------------------------------------------
பெரும்பாலான உணவுகளில் சீரகம் சேர்க்காமல் சமைக்கமாட்டார்கள். சீரகம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் ஒரு பொருள். அதுமட்டுமின்றி, இது செரிமானப் பிரச்சனை, அனீமியா, இருமல், பைல்ஸ் மற்றும் அதிகமான இரத்த அழுத்தம் போன்றவற்றை சரிசெய்யும்.
------------------------------------------------------------------------------
கருப்பு ஏலக்காய்
------------------------------------------------------------------------------
கருப்பு ஏலக்காய் வேறு, பச்சை ஏலக்காய் வேறு. பொதுவாக இந்த கருப்பு ஏலக்காய் புலாவ் மற்றும் பிரியாணிகளில் தான் பயன்படுத்துவார்கள். ஏனெனில் பிரியாணிகளில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால், வயிறு உப்புசத்துடன் இருக்கும். எனவே இந்த கருப்பு ஏலக்காய் சேர்த்தால், அந்த பிரச்சனை வராமல் இருக்கும். மேலும் இந்த கருப்பு ஏலக்காய் தொண்டை பிரச்சனை, நெஞ்செரிச்சல், ஈறு பிரச்சனை போன்றவற்றிலிருந்து விடுபட வைக்கும். கருப்பு ஏலக்காய் ஆஸ்துமாவால் அவஸ்தைப்படுவோருக்கு நல்ல நிவாணம் தரும்
------------------------------------------------------------------------------
குங்குமப்பூ
------------------------------------------------------------------------------
பொலிவான சரும அழகைத் தரும் குங்குமப்பூ, பொதுவாக நிறத்திற்காக சேர்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பிரியாணி, இனிப்பு பதார்த்தங்கள் போன்றவற்றில் தான் பயன்படுகிறது. குங்குமப்பூ மிகவும் விலை மதிப்புள்ளது. அதற்கேற்றாற் போல், இதன் நன்மைகளும் எண்ணற்றவை. ஏனெனில் குங்குமப்பூ அழகிற்கு பயன்படுவதோடு, உடலல் நலத்தில் மன இறுக்கம், மன அழுத்தம், பார்வை கோளாறு மற்றும் ஞாபக சக்தி போன்றவற்றை சீராக வைக்கவும் உதவுகிறது
------------------------------------------------------------------------------
ஜாதிக்காய்
------------------------------------------------------------------------------
இதுவும் கிராம்பு போன்ற ஒரு நறுமணப் பொருள் தான். இதுவும் பல் பிரச்சனை, அல்சீமியர் போன்றவற்றை சரிசெய்வதோடு, ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது. மேலும் இது பசியின்மையை போக்கும் ஒரு சிறந்த பொருளும் கூட. பெரும்பாலும் இது நிறைய நாட்டு மருந்துகளில் பயன்படுகிறது.
மிளகு
------------------------------------------------------------------------------
அனைவருக்குமே மிளகு எவ்வளவு காரமாக உள்ளது என்பது தெரியும். இத்தகைய மிளகு உணவுக்கு சுவையையும், காரத்தையும் கொடுப்பதோடு, உடலில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து, செரிமானத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது. மேலும் இருமல், தொண்டை கரகரப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டாலும், மிளகு ஒரு நல்ல தீர்வைத் தரும்.
------------------------------------------------------------------------------
பெருங்காயம்
------------------------------------------------------------------------------
பெருங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இது ஒரு சிறந்த வாசனைப் பொருளாக இருப்பதோடு, செரிமான மண்டலத்தில் இருக்கும் பிரச்சனையையும் சரிசெய்துவிடும் தன்மையுடையது. மேலும் இது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளான மலட்டுத்தன்மை, தேவையற்ற கருக்கலைப்பு, குறைபிரசவம், வழக்கத்திற்கு மாறான வலி மற்றும் அதிகப்படியான இரத்தப் போக்கு போன்ற பல பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது.
------------------------------------------------------------------------------
மின்சார வாரியத்துக்கே மின்சாரம் விற்பனை செய்யும் விவசாயி
மின்சார வாரியத்துக்கே மின்சாரம் விற்பனை செய்யும் விவசாயி !!!!!!!!!
------------------------------------------------------------------------------
விழுப்புரம் அருகே ஒரு விவசாயி தன் வீட்டில் சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரித்து மின்வாரியத்துக்கு விற்பனை செய்கிறார் என்ற தகவலால் ஆச்சரியமடைந்து அவரை அவர் வீட்டில் 'தி இந்து' சார்பில் சந்தித்தோம்.
------------------------------------------------------------------------------
விழுப்புரம் மாவட்டம், ராம்பாக்கம் கிராமத்தில் கரண்ட் விக்கிறவர் என்ற அடைமொழிப் பெயருடன் அழைக்கப்படும் சுப்புராயலுவை அவரது வீட்டு மொட்டைமாடியில் சென்று பார்த்தோம். சூரிய ஒளி தகடுகளைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார்.
------------------------------------------------------------------------------
அவர் நம்மிடம் பேசியது: மின்தட்டுப்பாட்டால் அவதிப்பட்ட நேரத்தில்தான் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது தொடர்பாக அறிந்தேன். வீட்டுக்கான மின்சாரத்தைத் தயாரிக்க சோலார் நிறுவனங்களை அணுகினேன். அப்போதுதான் “எங்கும் மின் விளையும்...எம்மனையும் மின் நிலையம்” என்ற திட்டத்தின்மூலம் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம்
------------------------------------------------------------------------------
1200 வாட் திறன் கொண்ட கதிர் மின்னாக்கிகளை என் வீட்டு மொட்டைமாடியில் நிறுவினேன். இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் ஆகும். இதற்கு அரசு 60 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கியது.
---------------------------------------------------------------------------------
தனியார் நிறுவனம் இத்தொகையைக் கடனாக வழங்கியது. முன்பணமாக 55 ஆயிரம் செலுத்தி மீதமுள்ள 1 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயை 10 மாதத் தவணையாக வட்டியில்லாமல் 14 ஆயிரத்து 750 ரூபாயாகச் செலுத்த ஒப்புக்கொண்டு இதனை அமைத்தேன்.
----------------------------------------------------------------------------
இது செயல்படதுவங்கியதும் என் வீட்டுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் கிடைத்தது. இதன் மூலம் தினமும் 8 மணி நேரத்தில் 9 கிலோவாட் மின்சாரம் கிடைத்தது. பகலில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பேட்டரி மூலம் சேமித்து இரவில் பயன்படுத்தினேன். உபரி மின்சாரத்தை யூனிட் 2 ரூபாய்--க்கு மின்வாரியத்துக்கு விற்கிறேன்.
------------------------------------------------------------------------------
எவ்விதப் பராமரிப்பு செலவும் இல்லை. இதனால் மின்கம்பிகள் மூலம் மின்சாரம் செல்லும்போது ஏற்படும் மின் இழப்பு இல்லை. மிகவும் லாபகரமாக உள்ளது என்றார் அவர். இத்தனைக்கும் சுப்புராயலு படிக்காதவர். வெளியே வந்த முன்னிரவு நேரத்தில் வீதியே இருளில் மூழ்கி இருக்கச் சுப்புராயலு வீடு பளிச்சென்று பிரகாசமாக இருந்தது. சூரிய மின்சாரத்தைத் தயாரிப்பதன் மூலம் மின்பற்றாக்குறையைப் போக்கலாம். அனைவரும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அழைப்புவிடுக்கிறது வீட்டு வாசலில் கட்டி வைக்கப்பட்ட விளம்பர பேனர்.
கொய்யாப் பழத்தின் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் !!
---------------------------------------------------------------------------------
பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான அடங்கியுள்ளன.முழு அளவு காட்டு கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது , இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
* வைட்டமின் . பி மற்றும் வைட்டமின் . சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.
---------------------------------------------------------------------------------
* கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும். மற்றும், குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும். கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.
---------------------------------------------------------------------------------
* கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
---------------------------------------------------------------------------------
* கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.
---------------------------------------------------------------------------------
* கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.
---------------------------------------------------------------------------------
* வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.
---------------------------------------------------------------------------------
* கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.
---------------------------------------------------------------------------------
* மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.
* கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
* சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.
---------------------------------------------------------------------------------
* நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.
---------------------------------------------------------------------------------
* கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.
---------------------------------------------------------------------------------
* கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.
இளமை இதோ இதோ:
இளமை இதோ இதோ:
------------------------------------------------------------------------
தேன் ஓர் இனிய உணவுப்பொருள் மருத்துவ குணமும் கொண்டது, பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் (திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகிறது.
------------------------------------------------------------------------
தினமும் தேன் பருகினால் என்றும் இளைமையாக இருக்கலாம் என்பது அறிவில் ரீதியான உண்மை என்று பயன்படுத்திய பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
------------------------------------------------------------------------
தேனில் அடங்கியுள்ள பொருட்கள்:
------------------------------------------------------------------------
1. தண்ணீர் 17 முதல் 70 சதவீதம்.---
2. பழச்சர்க்கரை 40 முதல் 80 சதவீதம்.----
3. திராட்சை சர்க்கரை 10 முதல் 30 சதவீதம்.----
4. கரும்பு சர்க்கரை 1 முதல் 90 சதவீதம்.---
------------------------------------------------------------------------
மேலும் சிலிக்கா, கிருப்பு, தாமிரம், மாங்கனீஸ், கால்சியம், குளோரின், பொட்டாசியம், கந்தகம், பாஸ்பரஸ், அலுமினியம், மக்னீசியம் உள்ளிட்ட பொருட்களும் அடங்கியுள்ளது.
------------------------------------------------------------------------
தேன் சாப்பிடுவதால் உள்ள பயன்கள்:
------------------------------------------------------------------------
1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதியாகும்.
------------------------------------------------------------------------
2. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி குணமாகும்.
------------------------------------------------------------------------
3. தேனும் வெங்காயச்சாறும் கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசமடையும்.
------------------------------------------------------------------------
4. தேன், முட்டை, பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா உபாதையில் இருந்து தப்பலாம்.
------------------------------------------------------------------------
5. உடம்பில் இரத்த குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும் பாலும் கலந்து சாப்பிட்டால் சோகை நோய் தீரும்.
------------------------------------------------------------------------
6. மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து சாப்பிட்டால் ஆறாத புண் ஆறிவிடும்.
------------------------------------------------------------------------
7.வயிற்று வலி ஏற்பட்டவர்களுக்கு தொப்பு ளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.
------------------------------------------------------------------------
8. ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலும்பிச்சை பழம் சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் போல் சுறுசுறுப்பாக இருக்கும் நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடி விடும்.
------------------------------------------------------------------------
9. அதிகாலையிலும், படுக்க செல்வதற்கு முன்பும் தேன் பருகினால் உடலுக்கு நல்லது.
------------------------------------------------------------------------
10. அல்சர் நோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு தேக்கரண்டி தேன் சாப்பாட்டிற்கு முன் சாப்பிட்டு வர அல்சர் நோய் குணமாகும் உள்ளிட்ட ஏராளமான பலன்கள் தேனில் உள்ளது.
டீ என்கிற தேநீர் – சில உண்மைகள்
டீ என்கிற தேநீர் – சில உண்மைகள்
கிமு 2737ல் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு புகழ்பெற்ற சீனக் கதையொன்றின்படி, வேளாண்மையையும், சீன மருத்துவ முறையையும் கண்டுபிடித்ததாகக் கருதப்படும் ஷென்னொங் என்னும் சீனப் பேரரசன், ஒரு நாள் சுடுநீர் அருந்திக்கொண்டு இருந்தானாம். அப்போது, காற்று வீச அருகிலிருந்த மரமொன்றிலிருந்து சில இலைகள் அவன் அருந்திக்கொண்டு இருந்த நீருள் விழுந்தனவாம். அப்போது நீரின் நிறம் மாறுவதை அவன் கவனித்தான். புதிய விடயங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டிருந்த பேரரசன், அந்த நீரில் ஒரு மிடறு அருந்தி அதன் வாசனையையும், உற்சாகம் தரும் இயல்பையும் அறிந்து வியந்தானாம்.
-----------------------------------------------------------------------------
இப்பேர்பட்ட தேநீரை தினமும் 3 கோப்பை குடித்தால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். முக்கியமாக தேநீர் குடிப்பது மாரடைப்பு ஏற்படுவதை பெருமளவுக்கு தடுக்கிறது.இப்படி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஏற்கெனவே பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
-----------------------------------------------------------------------------
மேலும் தினமும் 2 கோப்பைக்கும அதிகமாக தேநீர் குடிக்கும் நபருக்கு வலிப்பு நோய் வரும் வாய்ப்பு 21 சதவீதம் குறைகிறது என்றும தற்போதைய ஆய்வில் தினமும் 3 கோப்பைகளுக்கு மேல் தேநீர் குடிப்போருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு 70 சதவீதம் அளவுக்கு குறைவது தெரியவந்துள்ளது.
-----------------------------------------------------------------------------
அத்துட்ன் தேநீர் குடிப்பது கோப உணர்ச்சியையும், மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதயத்தில் ரத்தக் கட்டு ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் ரத்தக்குழாய்களை சிறப்பாக செயல்படத் தூண்டுகிறது. இதனால்தான் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
-----------------------------------------------------------------------------
இதையெல்லாம் விட மேலாக தேநீரில் நிறைய புளோரைடு உள்ளது. புளோரைடு பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது. அந்நிலையில் மண்ணில் இருக்கும் ப்ளோரைடை `தேநீர்ச் செடி உறிஞ்சி எடுத்து தனது இலைகளில் சேமித்து வைக்கிறது. எனவே பற்களுக்கான சத்துக்களை வழங்கும் ஒரு இயற்கை பானமாக தேநீர் இருக்கிறது. பற்களில் `காரை’ படிவதையும் தேநீர் தடுக்கிறது.இனி பல்லை பாது காக்க ப்ளோரைடு உள்ள பற்பசையை தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. தேநீர் குடித்தாலே போதும்.
சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது அழுகுரல் ஒன்று கேட்டது, உற்று கவனித்தேன்..!
சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது அழுகுரல் ஒன்று கேட்டது, உற்று கவனித்தேன்..!
இலைக்கு வெளியே இரண்டு சோற்றுப்
பருக்கைகள் இறைந்து கிடந்தன, அவைதாம்
அழுதுகொண்டிருந் தன."எதுக்கு இப்படி அழறீங்க" என்று கேட்டேன்?.
-----------------------------------------------------------------------------
அதில் ஒன்று கண்ணீரோடு தன் கதையைச் சொன்னது.
-----------------------------------------------------------------------------
"ஒரு ஏழை விவசாயி...
கடனை உடனை வாங்கி விதை நெல் போட்டு, வயலை உழுது,
நாற்று நட்டு, களை பறித்து,பயிர் செய்து,
நீர் பாய்ச்சி ரொம்ப கஷ்டப்பட்டு எங்களை வளர வைத்தார்..
-----------------------------------------------------------------------------
நாங்களும் நல்லா வளர்ந்தோம், என்னோட சகோதர மணிகளில்
சிலரை எலிகள் நாசம் செய்தன..
-----------------------------------------------------------------------------
பறவைகள் கொத்தித் தின்றன.. தப்பிப்
பிழைத்த நாங்கள் அறுவடைக்குத்
தயாரானோம்.
-----------------------------------------------------------------------------
அறுத்து, களத்துக்கு கொண்டு வந்து,
தூற்றி அதிலும் வீணாகிப்போன
சகோதரமணிகள் தவிர்த்து பெரிய பெரிய
பைகளில் எங்களை அடைத்து வைத்தார்கள்.
-----------------------------------------------------------------------------
அப்புறம் நெல் மணிகளிலிருந்து உமி நீக்கி எங்களை அரிசியாக்கும் போது காணாமல் போன சகோதரமணிகள்
நிறைய பேர்.
-----------------------------------------------------------------------------
விற்பனைக்கு கடையில் வைத்திருக்கும்
போது மூட்டைகளில் விழுந்த ஓட்டைகளில் சிலரும்,
எடை போட்ட போது கொஞ்சம் பேரும் வீட்டுக்கு நீங்கள்
வாங்கி வந்த போது,
-----------------------------------------------------------------------------
அரிசி களைந்து சமைக்கும்
போது என்று எல்லாவற்றிலும் தப்பிப்
பிழைத்து உங்களுக்கு உணவாகி உங்கள்
தட்டிற்கு வந்து சேர்ந்தேன்.
-----------------------------------------------------------------------------
இத்தனை பேர் உழைப்பில் விளைந்த
என்னை.. பல இடர்ப்பாடுகளை கடந்து வந்த என்னை..
இப்படி வீணாக்கினால் அழாமல் என்ன
செய்ய?" என்றது.
-----------------------------------------------------------------------------
உணவை வீணாக்காதீர்கள், தேவையில்லாத உணவுகளை வீனடிக்காமல் ஏழை எளிய மக்களுக்கு கொடுங்கள் அது கூட இல்லாமல் சிலர் இருக்கின்றனர்..
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய நிலங்களை பற்றி சில உண்மைகள்...
உலகில் உள்ள விவசாய நிலங்களில் மிகவும் அற்புதமான சில பண்புகள் கொண்ட நிலங்கள் இவை....
------------------------------------------------------------------------------------------
ஒரு ஆண்டில் எல்லா காலநிலையிலும் விவசாயம் செய்யக்கூடிய மண் நம் தாய்மண்...
இது ஒருநாளில் ஒருவரின் உழைப்பால் இப்படி மாறியது கிடையாது...
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நம் பாட்டன் பூட்டன் என அனைவரும் அரும்பாடுபட்டு நமக்காக சேர்த்து வைத்த சொத்து...
---------------------------------------------------------------------------------------
இந்த மண் இவ்வளவு செழிப்பாக இருப்பதற்கு காரணம் அவர்களின் உழைப்பு......
அள்ள அள்ள குறையாத அமுத கலசம்...
---------------------------------------------------------------------------------------
நீர்வளம்மும் அப்படிதான் என் நினைவு தெரிந்து கிணற்றில் கைகளால் தண்ணீர் அள்ளியது உண்டு....
---------------------------------------------------------------------------------------
ஆனால் இன்று இவை அனைத்தையுமே தொலைத்து கொண்டிருக்கிறோம்....
இன்று கிணறுகளை பார்ப்பதே அபூர்வமாக உள்ளது......
---------------------------------------------------------------------------------------
இது போன்ற நிலங்கள் உலகில் அபூர்வமானவை.... இந்த மண்ணின் வளத்தை பார்த்து இந்த மண் நம் நாட்டில் நம்மிடம் இல்லையே என ஏங்காதா வெளிநாட்டு விவசாயிகளே இல்லை....
வாய்ப்புகள் கிடைத்தால் நீங்களே அவர்களிடம் விசாரித்து பாருங்கள் தெரியும்...
நம்மிடம் இருப்பதினாலோ என்னவோ அதன் மதிப்பு நமக்கு தெரியவில்லை
விலைமதிப்பில்ல நம் சொத்தை விலைநிலங்களாக மாற்றிவருகிறோம்....
---------------------------------------------------------------------------------------
விழித்துக்கொள்வோம் தமிழா....
---------------------------------------------------------------------------------------
இது நம்மை சுற்றி நடக்கும் சூழ்ச்சி...
---------------------------------------------------------------------------------------
நம் வாழ்வாதாரத்தை அழித்து நம்மை பிறரிடம் கையேந்த வைக்க நடக்கும் சூழ்ச்சி....
---------------------------------------------------------------------------------------
விழித்துக்கொள்வோம்...
---------------------------------------------------------------------------------------
உலகில் மூத்தகுடியான தமிழர் இன சந்ததிகள் பிறரிடம் கையேந்தும் நிலைக்கு கொண்டுசெல்லாதீர்கள்...
1,200 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியன் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது.
தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் கரட்டு மலைப்பகுதியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியன் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது.
--------------------------------------------------------------------------------
நியூட்ரினோ என்றால் என்ன? அதனால் மக்களுக்கு என்ன பயன்? இதனால் ஏற்ப்பட போகும் ஆபத்துக்கள் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.
--------------------------------------------------------------------------------
நியூட்ரினோக்கள் என்கிற அணுத்துகள்கள் இந்த பூமி மட்டும் இல்லாது இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. ஏறக்குறைய நூறாயிரம் கோடி நியூட்ரினோக்கள் ஒவ்வொரு விநாடியும் நமது உடலுக்குள் புகுந்து வெளியேறிய வண்ணம் உள்ளன.
--------------------------------------------------------------------------------
சில ஆண்டுகளுக்கு முன் வரை, நியூட்ரினோக்களும் ஒளித்துகள்களைப் போல எடை அற்றவை என கருதப்பட்டது. ஆனால் 1998ம் ஆண்டு, நியூட்ரினோக்களுக்கு எடை உண்டு என கண்டுபிடிக்கப்பட்டது. நியூட்ரினோ என்பது சூரியன் மற்றும் விண்மீன்களிலிருந்தும் வெளிப்படும் அணுத்துகள்களாகும்.
--------------------------------------------------------------------------------
கனமற்ற இத்துகள்கள் விண்வெளியிலிருந்து கீழிறங்குகின்றன. பல கோடி நியூட்ரினோக்கள் பாய்ந்த வண்ணம் இருந்தாலும் அவற்றை ஈர்த்து, ஆய்வு செய்வது கடினம். இந்த அணுத்துகளைப் பிடித்து அதனை ஆய்வு செய்தால் சூரியன் குறித்த ரகசியங்களையும், விண்வெளியின் ஆற்றல் பற்றியும் பூமியின் பிறப்பு குறித்தும் தெரிந்து கொள்ளலாம் என்ற நோக்கத்துடன் நியூட்ரினோ ஆய்வு முயற்சி 1930களில் இருந்து தொடங்கியது.
--------------------------------------------------------------------------------
நியூட்ரினோ துகள்களை ஒரு கருவி மூலம் ஈர்த்து அவற்றை ஆய்வு செய்வதுதான் நியூட்ரினோ ஆய்வகத் திட்டம். தற்போது இந்த ஆராய்ச்சிக் கூடம், தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள பொட்டிப்புரம் எனும் ஊரிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்ளே அமைக்கப்படுகிறது. மலையின் உச்சியில் இருந்து 1.3 கி.மீ., கீழே, மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ., தூரத்திற்கு சுரங்கப் பாதை தோண்டப்படும்.
--------------------------------------------------------------------------------
அதையடுத்து பெரிய ஆய்வுக் கூடம் அமைக்கப்படும். அங்கு 50 கிலோ டன் இரும்பிலான நியூட்ரினோ டிடெக்டர் அமைக்கப்படும். இதைச் சுற்றி, நான்கு திசைகளிலும் மேலேயும் கீழேயும் குறைந்தபட்சம் ஒரு கி.மீ., பரிமாணமுள்ள பாறை இருந்தால் தான், ஆராய்ச்சி நடத்த முடியும். இவ்வளவு பெரிய பாறையால் தான், வானவெளியில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்களை தடுத்து, நிறுத்த முடியும். அதன் பிறகு தான், நியூட்ரினோவை காண முடியும்.
--------------------------------------------------------------------------------
சரி இதற்க்கு முன்னாள் கோலார் தங்க வயல் சுரங்கத்தில் செயல்பட்டு வந்த இந்திய நியூட்ரினோ ஆய்வகம் இந்த 2010 ஆம் ஆண்டு வரையில் என்ன விதமான கண்டு பிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறது என்பதும், உலக நியூட்ரினோ ஆய்வுகள் இந்த 70 வருடங்களில் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறது என்பதும், இதனால் மக்களுக்கு என்ன பிரோஜனம் என்பதும் கேள்விக்குள்ளாக்க வேண்டிய விடயங்கள் ஆகும்.
இதனால் ஏற்ப்படும் ஆபத்துக்கள் என்றவென்று பார்த்தால் தண்ணீர், விவசாயம், காற்று, இப்படி எல்லாம் மாசுபடும். இந்த ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்படும் ரசாயனம் மிகவும் ஆபத்தானது. இதில் கசிவுகள் எதுவும் ஏற்ப்பட்டால் அடுத்து ஒரு போபால் உருவாகும் ஆபாயம் உள்ளது. தேனி மாவட்டத்தின் இயற்கையை கெடுக்க வந்த அரக்கனாகவே இதை பார்க்க முடிகிறது.
--------------------------------------------------------------------------------
இத்தாலி கரோன் சாஜோ மலையில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வகத்தில் கடந்த 2002 ஆம் வருடம் ரசாயனக் கசிவு எற்ப்பட்டதன் விளைவாள் மக்கள் மீதும், காட்டுயிர்கள் மீதும், நிலத்தடி நீர் மீதும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறி, அந்த நியூட்ரினோ ஆய்வகத்தை 2003 ஆம் ஆண்டு இத்தாலி அரசாங்கம் மூடியது.
--------------------------------------------------------------------------------
விஞ்சான கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்சி கூடங்களை மற்ற நாடுகள் நடத்துகின்றன என்பதற்காக போட்டிக்கு நாமும் நடத்துவதால் எந்த பயனும் இல்லை. இது அத்தியாவாசியமான மக்களுக்கு தேவையான ஒரு ஆய்வாக இருந்தாலும் பரவாயில்லை. மக்களின் அடிப்படைத்தேவைகளே நிறைவு செய்யமுடியாத இந்தியா போன்ற நாடுகளுக்கு இது போன்ற ஆய்வகங்கள் தேவையில்லை. மேலும் இது போன்ற அழிவுத்திட்டங்கள் எல்லாம் திட்டமிட்டு தமிழகத்தை நேக்கி நகர்த்தப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை
பிளாஸ்டிக் மிக மோசமான நிலைக்கு உலகத்தை
பிளாஸ்டிக் மிக மோசமான நிலைக்கு உலகத்தை
கொண்டு செல்கிறது . விழிப்புணர்வு 0%.
எப்பொழுது மீளப் போகிறோம் ?!
நெய்யருவி..
நெய்யருவி..
குண்டாறு அணைக்கு மேல் பல இடங்களில் அருவிகள் உள்ளன . அருவிகள் பலரது பராமரிப்பில் உள்ளது , இது குண்டாறு அணையிலிருந்து சுமார் 1 கிமீ தூரத்திற்குட்பட்ட பகுதியில் உள்ளது.... இந்த அருவிக்கு செல்லும் பாதையே மிகவும் ரம்மியமாகவும் இயற்கை எழிலோடும் காட்சி தருகிறது.
டெங்கு நோயை ஒழிக்கும் சித்த மருத்துவம்
டெங்கு நோயை ஒழிக்கும் சித்த மருத்துவம்
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்ற சித்தர் கோட்பாடுகளின் படி பருவகால சூழ்நிலைகளில் பூமியில் மாறுபாடுகள் உண்டாகும் போது உடலிலும் மாற்றங்கள் ஏற்பட்டு பூமியின் தட்ப வெட்பங்களுக்கு தகுந்தார் போல் உடல் நிலை மாற்றமடையும்.
இதில் பல நோய்கள் உடலில் தோன்றி பின் மறைந்து விடும். சில நோய்கள் மட்டும் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்த நிலையில் மிகுந்த பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.
அதில் ஒன்றுதான் தற்பொழுது தமிழகத்தை மிரட்டிக்கொண்டு இருக்கும் "டெங்கு காய்ச்சல்"எனும் கொடிய நோயாகும். இது கொசுவால் பரவக்கூடிய நோயாக உள்ளது.
இதனை தடுப்பதற்கும்,ஒழிப்பதற்கும் அரசு பல்வேறு வகையில் திட்டங்கள் வகுத்து செயல் படுத்தி வருகின்றது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்தா பிரிவுகளில் "நிலவேம்பு குடிநீர்" கசாயம் இலவசமாகவே வழங்கப்படுகின்றது.
சித்த மருத்துவ முறைப்படி தயாரிக்கப்படும் 'நிலவேம்பு குடிநீர்" டெங்கு காய்ச்சலை போக்கும் ஆற்றல் வாய்ந்தது மேலும் இதனைக் குடிப்பதால் பக்க விளைவுகள் ஏதும் இல்லை இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.
சித்த மருத்துவர்களின் அறிவுரைப்படி நிலவேம்பு கசாயத் துடன்,சந்திரோதய மாத்திரை,பிரம்மானந்த பைரவ மாத்திரை, மாதுளை மணப்பாகு, அன்னபேதி செந்தூரம் போன்ற சித்தமருத்துவ மருந்துகளையும் உண்டு பயனடையலாம்.
"நிலவேம்பு குடிநீர்"கசாயம் 9-வகையான மூலிகைகள் கலந்து தயாரிக்கப் படுகின்றது. நிலவேம்பு என்பது ஒரு மிகுந்த கசப்பு சுவை கொண்ட தாவரமாகும்.
1 -நில வேம்பு
2 -விலாமிச்சை வேர்
3 -பேய்ப்புடல்
4 -சுக்கு
5 -சந்தனம்
6 -பற்படாகம்
7 -வெட்டி வேர்
8 -கோரைக் கிழங்கு
9 -மிளகு
போன்ற ஒன்பது சரக்குகளும் ஒரே எடை அளவுடன் சேர்த்து ஒன்றிரண்டாய் இடித்துக் கொள்ளவும்.
குடிநீர் செய்முறை :
25 -கிராம் சூரணத்தை 800 -மிலி தண்ணீரில் ஊரவைத்து காய்ச்சி 125 -மிலி ஆகக் குறுக்கிக் கொள்
ளவும்.
20 -மிலி நிலவேம்பு கசாயத்தை 3 -டம்ளர் நீரில் கலந்து பெரியவர்கள் காலை -மாலை என இரண்டு
வேளை குடிக்கலாம்.
குழந்தைகளுக்கு 15 -மிலி கசாயத்தை தண்ணீரில் கலந்து காலை -மாலை இரண்டு வேளை குடிக்க
லாம். இவ்வாறு குடித்து வர டெங்கு காய்ச்சலை போக்கலாம். டெங்கு காய்ச்சல் இல்லாதவர்களும்
இதை தடுப்பு மருந்தாக குடிக்கலாம்.
என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!
என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!
நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.
ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?
அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.
கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...
"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே."
காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்
தஞ்சை தரணியை பாலைவனமாக்க சதி…! நம் பூமி மலட்டு நிலமாவதை தடுக்க உதவுங்கள்…!
தஞ்சை தரணியை பாலைவனமாக்க சதி…! நம் பூமி மலட்டு நிலமாவதை தடுக்க உதவுங்கள்…!
►கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்பரேஷன் லிமிட்டட் என்ற அமெரிக்க நிறுவனம் நம் தமிழ்நாட்டில் மீதேன் வாயு எடுக்க மத்திய அரசிடமும்,மாநில அரசிடமும் அனுமதி பெற்றுள்ளது..
►மீதேன் வாயு எடுக்கப்படும் விதமும் அதனால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமானவை.
• முதற்கட்டமாக நிலத்தடியிலுள்ள 1500 அடி ஆழத்திலுள்ள நீரை வெளியேற்றி விடுவார்கள்…
• அதன் காரணமாக நிலத்தடியில் நீரை வெளியேற்றியப் பின்னர் அவ்விடத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தின் காரணமாக அங்கு கடல்நீர் உட்புகுந்துவிடும்.
• நிலத்தடி நீர் உப்பானால் அங்கு விவசாயம் செய்ய முடியாது.
• குடிப்பதற்கு கூட நீர் இல்லாமல் போகும்.
• பயிர்களும் மரங்களும் கருகி போகும்..
►மீதேன் வாயுவை எடுக்க உங்களிடம் அமெரிக்க நிறுவனமான GELCL உங்களிடம் நிலத்தை நாற்பது வருட குத்தகைக்கு கேட்கும்.
►நாப்பது வருடத்திற்கான குத்தகை பணத்தை ஒரே காசோலையில் கொடுத்து விடுவார்கள்.
►நம் நிலம்தான் நாப்பது வருடத்தில் நம் கையிக்கு கிடைத்து விடுமே, அத்துடன் விவசாயம் செய்தாலும் நாப்பது வருடத்தில் இவ்வளவு சம்பாதிக்க முடியாதே என்று ஏமாந்து நீங்களும் நிலத்தை கொடுத்து விடுவீர்கள்.
►நாற்பது வருடத்தில் உங்கள் நிலம் உங்கள் கையிலும் கிடைத்துவிடும் ஆனால் சக்கையாகி,எதற்கும் உதவாத பாலைவன நிலமாகத்தான் அது இருக்கும்.
►ஏற்கனவே ஆற்று நீரும், குளத்து நீரும் இல்லாம போன நிலையில், நிலத்தடி நீரும் இல்லாமல் போய்விடும்
►எனவே இவர்கள் உங்களிடம் நிலத்தை குத்தகைக்கு கேட்டால் தயவு செய்து கொடுத்துவிடாதீர்கள்.
►நம் எதிர்கால சந்ததியினரை வஞ்சிக்காதீர்..
►நம் எதிர சந்ததியினருக்கு நம் பசுமையான தமிழ்நாட்டை விட்டுசெல்வோம் பாலைவனத்தை அல்ல..
►ரத்தம் சிந்தி ஈன்றெடுத்த சுதந்திரத்தை மீண்டும் அயல்நாட்டு முதலாளியிடம் அடகு வைத்து விடாதீர்..
► இந்த திட்டம் முதல் கட்டமாக கும்பகோணம் சுற்றுப்பகுதியான திருவிடைமருதூர், நரசிங்கன்பேட்டை உட்பட்ட சில பகுதிகளில் எடுக்கப்பட உள்ளது. நம் நிலம் மலடாவதர்க்கு நீங்களே துணைபோகாதீர்கள் நண்பர்களே..
இதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்..”
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உலகிற்கே சோறு போட்ட இடமடா! காசுக்காக எதையும் செய்யும் பிச்சைகாரர்களே உங்களுக்கு எவ்வுளவு பணமடா வேண்டும்? கேளுங்கள் பிச்சை போடுகிறோம்! 7 கோடி பேர் இருக்கிறோம்
கண் நோய்கள் தீர
கண் நோய்கள் தீர
நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.
நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.
கண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை
வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.
வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.
வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு சட்டியுல் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டி, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.
வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும். வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும்,, பசியைப்போக்கவும் பயன்படுகிறது. வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிர் சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது வாய்ங்குவேக்காடு வராது
முதுமையை வெல்ல
இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை. ஆனால் முதுமையை வென்று என்றும் இளமையுடனும் துடிப்புடனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம்.
முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முமுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது.
ஆனால் இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர்போல் தோற்றமளிக்கின்றனர்.
அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.
இப்படி இளமையை முதுமையாக்கி உடலை நோய்களின் கூடாரமாக மாற்றியிருக்கும் இக்கால சமுதாயத்தை அன்றே உணர்ந்து என்றும் இளமையுடன் தோற்றமளிக்க தேரையர் என்ற சித்தர் தான் எழுதிய தேரன் கண்ட உண்மை என்னும் நூலில்
மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்
பொருள்
முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர்.
அரசன் அதியமான் தனக்குக் கிடைத்த அற்புத நெல்லிக்கனியை தான் உண்ணாமல் சங்கத்தமிழ் கண்ட மூதாட்டி அவ்வைக்கு கொடுத்ததாக பல வரலாற்று நூல்கள் மூலம் அறிகிறோம். இதிலிருந்து நெல்லிக்கனியின் அற்புதங்கள் அனைவருக்கும் புரியவரும்.
நெல்லிக்கனி மூப்பை தடுக்கும்முறை
முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.
ஒரு நெல்லிக்கனியில் 482.14 (Unit of super oxide dismutase) என்னும் அதிக சக்தி வாய்ந்த ச்ணtடிணிதுடிஞீச்tஞு என அழைக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.
ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.
நெல்லிக்கனி பித்தத்தை சமப்படுத்தும்
பித்த அதிகரிப்பே முதுமைக்கும், உடல் சோர்வுக்கும் முக்கிய காரணமாகிறது. பித்தத்தைக் குறைத்து உடலிலும் இரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளை உடைத்து கரைத்து வெளியேற்றும் தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு.
நெல்லிக்கனியின் சிறப்பு
நெல்லிக்கனியின் சிறப்புகளை கடந்த இதழ்களில் கண்டுள்ளோம். அதுபோல் இதன் சிறப்பை ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு பயனுள்ளது.
ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.
ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.
நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.
எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.
இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.
மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)