Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, April 1, 2013

தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகள் திறப்பது எப்போது? இன்னும் முடிவாகவில்லை என்று அதிகாரிகள் தகவல்

பதிவு செய்த நாள் : Mar 31 | 07:27 pm சென்னை, - ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் மூடப்பட்ட கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று கேட்டதற்கு இன்னும் தேதி முடிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாணவர்கள் போராட்டம் இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்கவேண்டும், தனி ஈழம் அமைக்கப்படவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள், கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்ததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டு மாணவர்களோ அல்லது பொதுமக்களோ பாதிக்கப்படக்கூடாது என்று கருதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டன. பாடம் நடத்தி முடிக்கப்படவில்லை கடந்த மாதம்(மார்ச்) 18–ந்தேதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் விடுதியில் தங்கி இருந்த மாணவ–மாணவிகள் உடனடியாக விடுதிகளை காலிசெய்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.நேற்றுடன் கல்லூரிகள் மூடப்பட்டு 13 நாட்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுக்கு உரிய பாடங்கள் நடத்தி முடிக்கப்படவில்லை. செய்முறை தேர்வும் நடத்தி முடிக்கப்படவில்லை.கல்லூரிகள் திறக்கப்பட்டால் மீண்டும் மாணவர்கள் போராடுவார்களோ என்று கல்வித்துறை அதிகாரிகள் நினைக்கிறார்கள். மாணவர்கள் பலரும் என்று திறக்கும் கல்லூரிகள் என்று எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். மாணவர்களில் சிலர் இன்னும் போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.கல்லூரிகள் திறப்பது எப்போது என்று அதிகாரிகளிடம் கேட்டதற்கு அவர்கள் அளித்த பதில் வருமாறு:– அரசிடம் இருந்து அறிவிப்பு வரவில்லை அரசிடம் இருந்து கல்லூரிகளை திறப்பது குறித்து எந்தவித அறிவிப்பும் வரவில்லை. உதாரணமாக சென்னையில் உள்ள மாணவர்கள் கன்னியாகுமரி வரை வீடுகளுக்கு சென்றுள்ளதால் அவர்களுக்கு வசதியாக 3 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகும். எனவே 3–ந்தேதி வரை கல்லூரிகள் இருக்காது என்று நினைக்கிறேன்.கல்வித்துறை அதிகாரிகளுக்கும், கல்லூரிகளை நடத்துபவர்களுக்கும் எப்போது கல்லூரிகள் திறக்கவேண்டும் என்ற ஆவல் உள்ளது. ஆனால் திறந்த பின்னரும் மாணவர்கள் போராட்டம் நடத்தினால் என்ன செய்வது என்றுதான் யோசிக்க தோன்றுகிறது.இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வு தள்ளிப்போகும் நிலை எனவே கல்லூரிகள் திறக்கும் தேதி தள்ளிப்போகும் நிலை உள்ளது. அதுபோல செமஸ்டர் தேர்வுகளும் 15 நாட்களுக்கு மேலாக தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.