Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Thursday, February 20, 2014
பிரபல இணையதளமான "கூகுள்
பிரபல இணையதளமான "கூகுள்’' நிறுவனத்தில் விளம்பரப் பிரிவு அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன் பணிபுரிகிறார். "கூகுள்’' நிறுவனத்தின் வளர்ச்சியில் இவர் பெரும் பங்கு வகித்தார். தற்போது "கூகுள்” நிறுவனத்தின் துணை தலைவராக பதவி வகிக்கும் நீல் மோகன் "டிவிட்டர்’' சமூக வலை தள நிறுவனத்திற்கு செல்ல முடிவெடுத்தார். அவரைத் தடுத்து நிறுத்த விரும்பிய "கூகுள்' நிறுவனம் அவருக்கு பெரும் தொகையைக் கொடுக்க முடிவு செய்து 550 கோடி ரூபாயை போனசாக கொடுத்துள்ளது.
நேபாளத்தில் மலைப்பகுதியில் விளையும் ஒரு வகை காளான் .இன்னொரு பெயர் இமயமலை வயாக்ரா
நேபாளத்தில் மலைப்பகுதியில் விளையும் ஒரு வகை காளான், யார்சாகும்பா. இதற்கு இன்னொரு பெயர் இமயமலை வயாக்ரா. அதாவது இந்த காளானை சூப் ஆகவோ, உணவிலோ எதில் சேர்த்து சாப்பிட்டாலும், வயாக்ராவை விட அதிக சக்தி பாலியல் உறவில் கிடைக்குமாம். மேலும், பல கொடிய நோய்களையும் இந்த காளான் சர்வசாதாரணமாக நீக்குகிறதாம். இதனால் சீனா மற்றும் ஆசிய சந்தைகளில் கடும் வரவேற்பு உள்ளது. தங்கத்துக்கு நிகராக இதற்கு விலை கிடைப்பதில் இருந்தே இதன் மதிப்பை தெரிந்து கொள்ளலாம். அதாவது 450 கிராம் யார்சாகும்பா காளானுக்கு ரூ.6.21 லட்சம் வரை விலை கிடைக்கிறது.
தற்போது இமயமலைப் பகுதியில் இதன் அறுவடைக் காலம் தொடங்கி உள்ளது. இதையடுத்து, நேபாளத்தில் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த காளானை தேடி காட்டுப்பகுதிக்கு குழந்தைக்குட்டிகளுடன் சென்றுவிட்டனர். குழந்தைகளே இந்த அறுவடைக் காலத்தில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்து கொடுத்து விடுவார்களாம். மேலும், அவர்களால் மலைப்பகுதியில் வேகமாக ஏறி இறங்க முடியும் என்பதும் பெற்றோர்கள் கூறும் மற்றொரு காரணம்.
குழந்தைகளுடன் பெற்றேர்கள் சென்றுவிட்டதால், பள்ளிக்கு மாணவர்கள் வருகையே இல்லை. இதனால் மலைப்பகுதிகளில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இன்னொரு விஷயம், காட்டுப்பகுதியில் கிடைக்கும் காளானுக்கு பல லட்சம் ரூபாய் வரை கிடைப்பதால், ஆசிரியர்களும் அதை தேடி காட்டுப்பகுதிக்கு சென்றுவிட்டார்களாம்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரூ பீல் என்ற வங்கியாளர் என்கணிதத்தில் ஆர்வமிக்கவர்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரூ பீல் என்ற வங்கியாளர் என்கணிதத்தில் ஆர்வமிக்கவர்.
இவர் பீலின் யூகம் என்ற எண்புதிரை 1993 இல் உருவாக்கினார். ஆனால் இதுவரை இப்புதிரை எவராலும் விடுவிக்க முடியவில்லை.
அடிப்படையில் ஒரேமாதிரித் தோன்றும் இரண்டு புதிர்களுக்கு, அவற்றை ஊர்ஜிதப்படுத்தினாலோ அல்லது இதற்கு சரிசமமான கணக்கீடுகளினால் நேர் செய்தாலோ அவர்களுக்கு பணப் பரிசு வழங்கப்படும் என என அறிவித்தார்.
தற்போது பரிசுத்தொகை அதிகரித்துச் சென்று ஒரு மில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரூ பீல் என்ற வங்கியாளர் என்கணிதத்தில் ஆர்வமிக்கவர். இவர் பீலின் யூகம் என்ற எண்புதிரை 1993 இல் உருவாக்கினார். ஆனால் இதுவரை இப்புதிரை எவராலும் விடுவிக்க முடியவில்லை. அடிப்படையில் ஒரேமாதிரித் தோன்றும் இரண்டு புதிர்களுக்கு, அவற்றை ஊர்ஜிதப்படுத்தினாலோ அல்லது இதற்கு சரிசமமான கணக்கீடுகளினால் நேர் செய்தாலோ அவர்களுக்கு பணப் பரிசு வழங்கப்படும் என என அறிவித்தார். தற்போது பரிசுத்தொகை அதிகரித்துச் சென்று ஒரு மில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது.
வது ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில் நடைபெற்றது
7வது ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில் நடைபெற்றது. பல நாடுகளைச் சேர்ந்த 514 வீரர்களை ஏலத்தில் எடுக்க 8 அணிகள் போட்டியிட்டன. ஏலத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அதிகபட்சமாக ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இன்றைய ஏலத்தில் 146 வீரர்களை எந்த அணியும் ஏலம் எடுக்க முன் வரவில்லை. மொத்தம் 70 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டனர். ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள், அணி மற்றும் ஏலத் தொகை விவரம் பின்வருமாறு:
Sunrisers Hyderabad:
David Warner(Batsman-Australia)-ரூ.5,50,00,000
Amit Mishra(Bowler-India)-ரூ.4,75,00,000
Bhuvneshwar Kumar(Bowler-India)-ரூ.4,25,00,000
Aaron Finch(Batsman-Australia)-ரூ.4,00,00,000
Darren Sammy(All-Rounder-West Indies)-ரூ.3,50,00,000
Ishant Sharma(Bowler-India)-ரூ.2,60,00,000
Irfan Pathan(All-Rounder-India)-ரூ.2,40,00,000
Moises Henriques(All-Rounder-Australia)-ரூ.1,00,00,000
Jason Holder(Bowler-West Indies)-ரூ.75,00,000
Venugopal Rao(Batsman-India)-ரூ.55,00,000
Brendan Taylor(Wicket Keeper)-ரூ.30,00,000
Chennai Super Kings:
Faf Du Plessis(Batsman-South Africa)-ரூ.4,75,00,000
Dwayne Smith(Batsman-West Indies)-ரூ.4,50,00,000
Brendon McCullum(Wicket Keeper - New Zealand)-ரூ.3,25,00,000
Ashish Nehra(Bowler-India)-ரூ.2,00,00,000
Mohit Sharma(Bowler-India)-ரூ.2,00,00,000
Ben Hilfenhaus(Bowler-Australia)-ரூ.1,00,00,000
Samuel Badree(Bowler-West Indies)-ரூ.30,00,000
Matt Henry(Bowler-New Zealand)-ரூ.30,00,000
Delhi Daredevils:
Dinesh Karthik(Wicket Keeper-India)-ரூ.12,50,00,000
Kevin Pietersen(Batsman-England)-ரூ.9,00,00,000
Murali Vijay(Batsman-India)-ரூ.5,00,00,000
Mohammad Shami(Bowler-India)-ரூ.4,25,00,000
Nathan Coulter-Nile(Bowler-Australia)-ரூ.4,25,00,000
Quinton De Kock(Wicket Keeper-South Africa)-ரூ.3,50,00,000
Manoj Tiwary(Batsman-India)-ரூ.2,80,00,000
Jaydev Unadkat(Bowler-India)-ரூ.2,80,00,000
Jean-Paul Duminy(Batsman-South Africa)-ரூ.2,20,00,000
Rahul Sharma(Bowler-India)-ரூ.1,90,00,000
Laxmi Ratan Shukla(All-Rounder-India)-ரூ.1,50,00,000
James Neesham(All-Rounder-New Zealand)-ரூ.1,00,00,000
Saurabh Tiwary(Batsman-India)-ரூ.70,00,000
Kings XI Punjab
Mitchell Johnson(All-Rounder-Australia)-ரூ.6,50,00,000
Glenn Maxwell(All-Rounder-Australia)-ரூ.6,00,00,000
George Bailey(Batsman-Australia)-ரூ.3,25,00,000
Virender Sehwag(Batsman-India)-ரூ.3,20,00,000
Wriddhiman Saha(Wicket Keeper-India)-ரூ.2,20,00,000
Shaun Marsh(Batsman-Australia)-ரூ.2,20,00,000
Cheteshwar Pujara(Batsman-India)-ரூ.1,90,00,000
Lakshmipathy Balaji (Bowler-India)-ரூ.1,80,00,000
Thisara Perera(All-Rounder-Srilanka)-ரூ.1,60,00,000
Parvinder Awana(Bowler-India)-ரூ.65,00,000
Kolkata Knight Riders:
Jacques Kallis(All-Rounder-South Africa)-ரூ.5,50,00,000
Robin Uthappa(Batsman-India)-ரூ.5,00,00,000
Piyush Chawla(Bowler-India)-ரூ.4,25,00,000
Yusuf Pathan(All-Rounder-India)-ரூ.3,25,00,000
Shakib Al Hasan(All-Rounder-Bangladesh)-ரூ.2,80,00,000
Morne Morkel(Bowler-South Africa)-ரூ.2,80,00,000
Ranganath Vinay Kumar(Bowler-India)-ரூ.2,80,00,000
Umesh Yadav(Bowler-India)-ரூ.2,60,00,000
Mumbai Indians:
Michael Hussey(Batsman-Australia)-ரூ.5,00,00,000
Corey Anderson(All-Rounder-New Zealand)-ரூ.4,50,00,000
Pragyan Ojha(Bowler-India)-ரூ.3,25,00,000
Zaheer Khan(Bowler-India)-ரூ.2,60,00,000
Josh Hazlewood(Bowler-South Africa)-ரூ.50,00,000
Rajasthan Royals:
Steven Smith(All-Rounder-Australia)-ரூ.4,00,00,000
Brad Hodge(Batsman-Australia)-ரூ.2,40,00,000
Tim Southee(Bowler-New Zealand)-ரூ.1,20,00,000
Abhishek Nayar(All-Rounder-India)-ரூ.1,00,00,000
Kane Richardson(Bowler-South Africa)-ரூ.1,00,00,000
Ben Cutting(Bowler-Australia)-ரூ.80,00,000
Royal Challengers Bangalore:
Yuvraj Singh(All-Rounder-India)-ரூ.14,00,00,000
Mitchell Starc(Bowler-Australia)-ரூ.5,00,00,000
Albie Morkel(All-Rounder-South Africa)-ரூ.2,40,00,000
Varun Aaron(Bowler-India)-ரூ.2,00,00,000
Ashok Dinda(Bowler-India)-ரூ.1,50,00,000
Parthiv Patel(Wicket Keeper)-ரூ.1,40,00,000
Muttiah Muralitharan(Bowler-Srilanka)-ரூ.1,00,00,000
Ravi Rampaul(Bowler-West Indies)-ரூ.90,00,000
Nic Maddinson(Batsman-Australia)-ரூ.50,00,000.
கோயம்புத்தூர் அருகில் உள்ள சுற்றுலாத் தளங்கள்:
1. ஊட்டி - (90 கி.மீ. வடமேற்கு): மிகப் பிரபல மலை வாசஸ்தலம். அதிக சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்கள் பெருக்கத்தால் திணறினாலும் இன்றும் எல்லோரையும் ஈர்க்கிறது.
2. குன்னூர்: ஊட்டி செல்லும் வழியில் உள்ள மலை வாழிடம். இங்குள்ள சிம்ஸ் பூங்கா புகழ்பெற்றது.
3. முதுமலை வனவிலங்கு காப்பகம்: ஊட்டி வழியாக தமிழக எல்லையில் உள்ள பெரிய சரணாலயம் இதுவாகும்.
4. மலம்புழா அணை : பாலக்காடு அருகில் உள்ளது.
5. பழனி - (100 கி.மீ., தெற்கு): குன்றின் மீதமைந்த முருகன் கோவில். ஆறு படை வீடுகளில் ஒன்று.
6. அமராவதி அணை : முதலை பண்ணை
7. திருமூர்த்தி அணை : பஞ்சலிங்கம் அருவி
8. ஆழியாறு அணை : குரங்கு அருவி
9. டாப் ஸ்லிப் ( இந்திரா காந்தி வன விலங்கு சரணாலயம்)
10. வால்பாறை நல்ல மலை வாசஸ்தலம்
11. கோவை குற்றாலம் - கோவையில் இருந்து சிறுவாணி செல்லும் வழியில் உள்ள ஓர் அருவி
111ஆவது இடத்தில் இந்தியா!!!
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் டென்மார்க் முதலிடத்தை பெற்றுள்ளது. இந்தியாவைக் காட்டிலும் மகிழ்ச்சிக்குரிய நாடுகளாக பாகிஸ்தானும், வங்கதேசமும் கூறப்பட்டுள்ளன.
இப்பட்டியலில் டென்மார்க் முழு மதிப்பெண் பெற்று முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து இப்பட்டியலில் நார்வே, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன், கனடா, ஃபின்லாந்து, ஆஸ்திரியா, ஐஸ்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன.
கடந்த முறை 23 ஆவது இடத்தில் இருந்த அமெரிக்கா இம்முறை 17 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. துபாய் (ஐ. அ. ஏ) 14 ஆவது இடத்திலும், கத்தர் 27 ஆவது இடத்திலும், சவூதி அரேபிய 33 ஆவது இடத்திலும் உள்ளன.
பிரிட்டனுக்கு 22ம் இடமும், ஜெர்மனிக்கு 26ஆம் இடமும், ஃபிரான்ஸ் 25 ஆம் இடமும் இப்பட்டியலில் கிடைத்துள்ளன.
பாகிஸ்தானுக்கு 81 ஆவது இடமும், வங்கதேசத்துக்கு 108 ஆவது இடமும் கிடைத்துள்ள நிலையில் இந்தியாவுக்கு 111ஆவது இடமே கிடைய்யுள்ளது.
உங்கலுக்காக சில தகவல்கள்!!!
1. நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.
2. சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜுலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு சீசிரியன் என்று பெயர் வந்தது.
3. பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.
4. நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்
5. கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு இதயம்.
6. மனித உடலில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருக்கின்றன.
7. ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
8. மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.
9. பழமரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அதுவிளைச்சல் தரும்.
10. உலகிலேயே சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.
11. ஒரு தர்பூசணிபழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்துவிடலாம்.
12. பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலோமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.
13. பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.
14. நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.
15. நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.
16. யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே, யானையின் உயரம்.
17. ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.
18. தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்றபறவைகளுக்கு நடக்க தெரியாது.
முதலிடம் பிடித்தது இந்தியா!!!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வாக் ப்ரீ என்ற மனித உரிமை அமைப்பு, 162 நாடுகளில் அடிமைத்தனம் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
---------------------------------------------------------------------------
இதில், பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், கட்டாய வேலை, கடன்களால் பாதிப்பு, அடிமைத்தன பிறப்பு என உலகம் முழுவதும் சுமார் 30 மில்லியன் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------
கொத்தடிமைகள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. உலகில் உள்ள கொத்தடிமைகளில் பாதி பேர், அதாவது 13.9 மில்லியன் பேர் இந்தியாவில் இருப்பதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. கல்குவாரிகள் மற்றும் உலைகளில்தான் அதிக அளவில் கொத்தடிமைகள் வேலை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------
இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது. சீனாவில் 2.9 மில்லியன் கொத்தடிமைகள் உள்ளனர். பாகிஸ்தானில் 2.1 மில்லியன் பேரும், நைஜீரியாவில் 7 லட்சத்து ஆயிரம் பேரும், எத்தியோப்பியாவில் 6 லட்சத்து 51 ஆயிரம் பேரும், ரஷ்யாவில் 5 லட்சத்து 16 ஆயிரம் பேரும் உள்ளனர்.
---------------------------------------------------------------------------
தாய்லாந்தில் 4 லட்சத்து 73 ஆயிரம் பேரும், காங்கோவில் 4 லட்சத்து 62 ஆயிரம் பேரும், மியான்மரில் 3 லட்சத்து 84 ஆயிரம் பேரும் வங்காளதேசத்தில் 3 லட்சத்து 43 ஆயிரம் பேரும் அடிமைகளாக உள்ளனர். மொத்த கொத்தடிமைகள் எண்ணிக்கையின் முக்கால் பங்கு 10 நாடுகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளுக்கு எதிராக நாடு முழுவதும் 33,100 வழக்குகள் பதிவு: அதிர்ச்சி புள்ளி விபரம்
டெல்லி:
இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 24 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளது மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை. 2012 ம் ஆண்டு மட்டும் நாடுமுழுவதும் குழந்தைகளுக்கு எதிராக 33,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்.
-------------------------------------------------------------------------------
இந்தியாவின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம் 2012ல் இந்திய குழந்தைகள் என்ற தலைப்பில் ஆய்வுகளை மேற்கொண்டது.
-------------------------------------------------------------------------------
இதில்தான் அந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 33,100 வழக்குகள் பதிவு முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் 2011ல் இந்திய குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 24 சதவீதம் அதிகரித்துள்ளன.
-------------------------------------------------------------------------------
குழந்தை கடத்தல் விவகாரம் 43 சதவீதமும், கற்பழிப்பு வழக்குகள் 30 சதவீதமும் உயர்ந்துள்ளன. 2011ம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிராக 33,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
-------------------------------------------------------------------------------
2012ஆண்டு 6406 வழக்குகள் கூடுதலாகி உள்ளன. குழந்தைகளுக்கு எதிரான அனைத்து குற்றங்களும் 2009ம் ஆண்டில் 2.3 சதவீதம். 2011ம் ஆண்டில் அதிகரித்த குற்ற புள்ளி விவரம் 2.7 சதவீதம்.
-------------------------------------------------------------------------------
டெல்லியில் 25.4 சதவீதமும், அந்தமான் நிகோபார் தீவுகளில் 20.3 சதவீதமும், சண்டிகரில் 7 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 6 சதவீதமும், கோவாவில் 5.1 சதவீதமும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளன. உத்தரபிரதேசம் நம்பர் 1 இந்தியாவிலேயே உத்தரபிரதேசமாநிலத்தில்தான் குழந்தைகளுக்கு எதிராக 16.6 சதவீத குற்றங்கள் பதிவாகி உள்ளன
-------------------------------------------------------------------------------
. மத்திய பிரதேசத்தில் 13.2 சதவீதமும், டெல்லியில் 12.8 சதவீதமும், மராட்டிய மாநிலத்தில் 10.2 சதவீதமும், பீகாரில் 6.7 சதவீதமும், ஆந்திராவில் 6.7 சதவீதமும் வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.
-------------------------------------------------------------------------------
பெண் சிசுக்கொலை உத்திரபிரதேசம் டெல்லி போன்ற மாநிலங்கள் குழந்தை கடத்தலில் 43 சதவீதங்களுடன் முக்கிய இடம் வகிக்கிறது. 44.5 சதவீத கற்பழிப்பு வழக்குகள் மராட்டியம் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் பதிவாகி உள்ளது. சிசு கொலை 19 சதவீதம் உயர்ந்துள்ளது.
-------------------------------------------------------------------------------
இவற்றில் மராட்டியம், சட்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மட்டும் 56 சதவீத சிசு கொலைகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-------------------------------------------------------------------------------
பாலியல் தொழிலில் குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக பெண் குழந்தைகளை வாங்குவதில் மராட்டிய மாநிலம் 74 சதவீத வழக்குகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
-------------------------------------------------------------------------------
மேற்கு வங்க மாநிலத்தில் தான் பெண்களை விற்கும் குற்றம் 77 சதவீதம் நடந்துள்ளது. 18 வயதுக்கு குறைவான பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதில் 298 வழக்குகள் பதிவாகி மேற்கு வங்க மாநிலம் முதல் இடம் பிடித்துள்ளது.
-------------------------------------------------------------------------------
இதன் அடுத்த இடங்களில் பீகார், அசாம், ஆந்திரா மாநிலங்கள் உள்ளன.
-------------------------------------------------------------------------------
கற்பழிப்பு சம்பவங்கள் மத்திய பிரதேசம் மாநிலத்தில் 23.6 சதவீதம் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் உத்திர பிரதேசம், மராட்டியம் மாநிலங்கள் உள்ளன.
-------------------------------------------------------------------------------
தங்களுக்கு என்ன நடக்கிறது என்று பிஞ்சுக்குழந்தைகளுக்கு தெரிவதில்லை. இதெல்லாம் வெளியில் தெரிந்த குற்றங்களுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டவை மட்டுமே. ஆனால் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான குற்றங்கள் உள்ளன. எனவே குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.
oct.5.2012
புதிய போர்குற்ற ஆதார வீடியோ வெளியாகவுள்ளது.
புதிய போர்குற்ற ஆதாரங்கள் சில ஈழத் தமிழர் தரப்பிடம் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்தவேளை, அங்கே தற்காலிக முகாம்களை அமைத்த இலங்கை இராணுவத்தினர், தாம் கைப்பற்றி கிராமங்களுக்குச் சென்று, அங்கு மீதமுள்ள மக்களை சிறைப்பிடித்துள்ளார்கள். பின்னர் அவர்களை அந்த தற்காலிய முகாம்களுக்கு கொண்டுசென்றுள்ளார்கள். இவர்களில் பலர் பெண்கள் என்றும் கூறப்படுகிறது. அவர்களை சித்திரவதை செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று தான், தற்போது தமிழர்கள் கைகளில் சிக்கியுள்ளது அறிகிறது.
குறித்த இந்த வீடியோவும் இலங்கை இராணுவத்தில் உள்ள சிலரால் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்டதாக மேலும் அறியப்படுகிறது. ஏற்கனவே கைகளையும் கண்களையும் கட்டி தமிழ் இளைஞர்களை இலங்கை இராணுவம் கொலைசெய்யும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை தோற்றுவித்தது. தற்போது ஈழத் தமிழ் பெண்களை இலங்கை இராணுவம் நேரடியாக துன்புறுத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகவுள்ளது , உலகளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை தோற்றுவிக்கலாம். மார்ச் மாதம் ஜெனீவாவில் மனித உரிமை மாநாடு நடைபெறவுள்ள நிலையில், சனல் 4 தொலைக்காட்சியூடாக இந்த வீடியோ வெளியிடப்படலாம் என்று எதிர்பார்கப்படுகிறது.
குறித்த இந்த வீடியோ ஒரு போர்குற்ற ஆதார வீடியோ என்றும், தாம் இதனை ஆய்வு செய்து வருவதாகவும், இந்த வீடியோவை பகுப்பாய்வு செய்தபின்னரே தாம் அதனை வெளியிட முடியும் எனவும் காலம் மக்ரே மேலும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் சில பெண்களை இலங்கை இராணுவம் சுட்டுக்கொல்வதும் மற்றும் பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்தும் காட்சிகள் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் முன்றாம் ஆண்டு நினைவு நாள்
பார்வதி.. பார்வதிப் பிள்ளை... பார்வதி அம்மா... அண்ணையின் அம்மா... அன்னை... இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான, தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது!
-----------------------------------------------------------------------------------------------------
2009-ம் ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள். மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்து, 'பிரபாகரனின் தந்தை நான்’ என்று வெண்கலக் குரலில் வேலுப்பிள்ளை சொன்னார். 'நான்தான் அவர் அன்னை’ என்று மெல்லிய குரலால் சொன்னார் பார்வதி.
பரபரத்த இராணுவம், அவர்கள் இருவரையும் பனாகொடைக்கே கொண்டுபோய் ஏழு மாதங்கள் வைத்திருந்தது. எப்படி எல்லாம் அன்னையும் தந்தையும் துன்பம் அனுபவித்தனர் என்பதை அவர்கள் இருவர் மட்டுமே அறிவார்கள். அந்த சோகம்கூடச் சொல்ல முடியாமல் வேலுப்பிள்ளை மரணித்தார். அடுத்ததாக, இதோ அம்மாவும் சென்றுவிட்டார்.
-----------------------------------------------------------------------------------------------------
வல்வெட்டித்துறை வல்லிபுரம் சின்னம்மா தம்பதியினரின் மகள், இந்தப் பார்வதி. சின்ன வயதில் இவரைக் 'குயில்’ என்றுதான் கூப்பிடுவார்கள். 16 வயதில் வல்வெட்டித்துறை திருமேனியார் குடும்பத்தைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டார்.
-----------------------------------------------------------------------------------------------------
மூத்த மகன் மனோகரன், அடுத்த மகள் ஜெகதீஸ்வரி, இளைய மகள் விநோதினி ஆகிய மூவரையும் பெற்ற இந்தத் தம்பதியினர் அனுராதபுரம் புத்தளம் வீதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டுக்குப் பக்கத்தில்தான் எல்லாளன் நினைவுத் தூபி இருக்கும். தூபியைச் சுற்றிய புல்வெளியில் ஐந்து வயதான மனோகரனும் நான்கு வயதான ஜெகதீஸ்வரியும் ஓடியாடி விளையாட, கைக்குழந்தையான விநோதினி அம்மா மடியில் தவழ்ந்துகொண்டு இருப்பார்.
-----------------------------------------------------------------------------------------------------
எல்லா மாலை நேரங்களும் அவர்களுக்கு அப்படித்தான் கழியும். இந்த வேளையில்தான் புதிய கரு உண்டானது. ஈழத்தை ஆண்டதால் ஈழாளன் என்றும், அதுவே காலப்போக்கில் எல்லாளன் என்று மருவியதாகச் சொல்வார்கள். அந்த ஈழாளனின் வீரக் கதையை மற்ற பிள்ளைகளுக்கு பார்வதித் தாய் சொல்ல... கருவில் இருந்த குழந்தையும் கேட்டது. அந்தக் கரு... பிரபாகரனாக வளர எரு போட்டது பார்வதித் தாய்!
-----------------------------------------------------------------------------------------------------
பார்வதிக்கு நெருக்கமான பெண்களில் ஒருவர் இராசம்மா. சிங்கள இனவாதக் கொடுமைகளை நேரடியாக அனுபவித்தவர் இந்த இராசம்மா என்ற ஆசிரியை. இவரது கணவரான ஆசிரியர் செல்லத்துரை, சிங்கள இனவெறியன் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
-----------------------------------------------------------------------------------------------------
கணவனை இழந்ததால் தான் பட்ட துன்பங்களையும் இதே மாதிரி தமிழர்கள் அனுபவிக்கும் தொல்லைகளையும் பார்வதியிடம் இராசம்மா சொல்ல... அதை சிறுவனாக இருந்த பிரபாகரன் காது கொடுத்துக் கேட்பார்.
-----------------------------------------------------------------------------------------------------
பத்திரிகையாளர் அனிதா பிரதாப்புக்கு வழங்கிய பேட்டியில் பிரபாகரனே இந்த சம்பவத்தைக் குறிப் பிட்டு தன்னுடைய வாழ்க்கைப் பாதையைத் திருப்பிய சம்பவமாக இதையே குறிப்பிட்டார்.
-----------------------------------------------------------------------------------------------------
வேலுப்பிள்ளையும் பார்வதியும் வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டைத்தான் சிங்கள இராணுவம் இப்போது இடித்து நொறுக்கியது. இந்த வீட்டுக்கு இவர்கள் குடிவந்தபோது, ஏதும் அறியாத சிறுவன்தான் பிரபாகரன்.
-----------------------------------------------------------------------------------------------------
ஆனால், 14 வயதில் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை முதலில் கண்டுபிடித்தது பார்வதியே. சிறுசிறு போத்தல்களை எடுத்து வருவதும், பால்பேணிகளைக் கொண்டுவந்து காயவைப்பதும், பின்னர் அதை எடுத்துச் செல்வதையும் பார்வதி பார்த்தார்.
-----------------------------------------------------------------------------------------------------
சின்னச்சோதி, நடேசுதாசன் ஆகிய நண்பர்கள் வந்து போவதும், பிரபாகரனைவிட மூத்த குட்டிமணியின் நட்பும் அன்னையை யோசிக்க வைத்தது. மகனின் கையில் இருந்த மோதிரமும் வீட்டில் இருந்த காப்பும் காணாமல் போயிருந்தது. மகனின் போக்கு பற்றி மெதுவாகச் சொன்னார் பார்வதி.
-----------------------------------------------------------------------------------------------------
''நாலு மொட்டையர்களுடன் இணைந்து உன்னால் என்ன செய்ய முடியும்?'' என்று வேலுப்பிள்ளை கேட்டார். ''நாலு மொட்டை நாளைக்கு நாற்பது மொட்டை ஆகும். அது நானூறு மொட்டை ஆகும்'' என்று சொல்லிவிட்டுப் போன பிரபாகரனை இருவரும் அவரது வழியில் விட்டுவிட்டார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------
அதன் பிறகு வந்த பொலிஸ் நெருக்கடிகள் அனைத்தையும் மனதார ஏற்றுக்கொண்டார் பார்வதி. 1975-ல் தொடங்கி 2010 வரை ஒரு நிமிடம்கூட மனதால் வருந்தியிருக்கவே மாட்டார். மாறாக, பெருமையாகக் கழித்தார். 2000-ம் ஆண்டில் பார்வதியின் கால்கள் பாரிசவாதம் காரணமாக நகர மறுத்தன.
-----------------------------------------------------------------------------------------------------
இலங்கையிலும் சமாதானப் பேச்சுக்கள் தொடங்கியதால் மகனுடன் இருக்கவே நினைத்தார் பார்வதி. 2003-ல் தாயகம் வந்தார்கள் இருவரும். சில வருடங்களில் சர்வதேச சமூகத்தின் சூழ்ச்சி வலையில் சின்னஞ்சிறு தமிழர் தேசம் சிக்கிக்கொண்டது.
-----------------------------------------------------------------------------------------------------
மக்களைப் பிரியா மன்னவனும்... மன்னனைப் பிரியா அன்னை அவளும் இருக்க... சொற்களால் சொல்ல முடியாத சோகம் அது!
-----------------------------------------------------------------------------------------------------
புலியை வளர்த்த குயில் பறந்துவிட்டது. குயில் பாட்டும் புலிச் சீற்றமும் கேட்டுக்கொண்டே இருக்கும்!
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளி;க்கப்படும் - கியூபா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும் என கியூபா அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தை முறியடிக்கும் நோக்கில் இலங்கை அமைச்சர்களும் ராஜதந்திரிகளும் நட்பு நாடுகள் நோக்கி படையெடுத்துள்ளனர்.
அந்த வகையில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தற்போது கியூபாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
கியூபா விஜயம் செய்துள்ள அமைச்சர் சுசிலிடம், அந்நாட்டு துணை ஜனாதிபதி மிகியுல் டயாஸ் கானெல் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யார் இந்த விஜயதரணி? என்னைக் கேட்க இவர் யார்?
'யார் இந்த விஜயதரணி? என்னைக் கேட்க இவர் யார்? குஸ்திக்குப் பெயர் போன காங்கிரஸ் கட்சியில் கும்மாங்குத்து மோதல் குமரியில் தொடங்கி உள்ளது! கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ஐந்து தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஆனாலும் குமரி மாவட்டத்தில் மட்டும் போட்டியிட்ட மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதனால் குமரி மாவட்டம் எப்போதும் காங்கிரஸின் கோட்டை என்று மார் தட்டிக்கொண்டார்கள். இப்போது அந்தக் கோட்டையில் ஓட்டை விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள். காரணம், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் இடையே நடந்து வரும் பனிப் போர்.
மொபைல் போன், இ.எம்.ஐ., மூலம் நன்கொடை வசூல்: 'ஆம் ஆத்மி' கட்சி புது முடிவு
புதுடில்லி: வெளிநாடுகளிலிருந்து, சட்ட விரோதமாக நன்கொடை வசூலிப்பதாக, 'ஆம் ஆத்மி' கட்சிக்கு எதிராக, புகார் கூறப்பட்டுள்ள நிலையில், மொபைல் போன் மற்றும் இ.எம்.ஐ., மூலம் நன்கொடை வசூலிக்க, அந்த கட்சி திட்டமிட்டுள்ளது
------------------------------------------------------------------------------------------------------
டில்லியில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி, சமீபத்தில், ஆட்சியிலிருந்து வெளியேறியது. அந்த கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது, டில்லியில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது.
-------------------------------------------------------------------------------------------------
முன்னதாக, விதிமுறைகளை மீறி, வெளிநாடுகளில் இருந்து நன்கொடை வசூலித்ததாக, ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக, கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனால், நன்கொடை வசூலிப்பதில், புதிய நடைமுறையை அமல்படுத்த, அந்த கட்சி திட்டமிட்டுள்ளது.
----------------------------------------------------------------------------------------
இதுகுறித்து, ஆம் ஆத்மி கட்சியின் நிதிப் பொறுப்பாளர் குமார் கவுரவ் கூறியதாவது: எங்கள் கட்சிக்கு, சாதாரண பொதுமக்களும், தங்களால் இயன்ற, சிறிய அளவிலான நன்கொடைகளை செலுத்த விரும்புகின்றனர். அதற்கான வாய்ப்பு இல்லாததால், அவர்களால் நன்கொடை அளிக்க முடியவில்லை.
------------------------------------------------------------------------------------------
இதற்காக, எளிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதன்படி, மொபைல் போன்களிலிருந்து, எங்கள் கட்சியின் வங்கி கணக்கிற்கு, பணப் பரிமாற்றம் செய்யும் நடவடிக்கையை துவங்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக, மொபைல் போன் சேவை வழங்கும், இரண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து உள்ளோம். முக்கிய நகரங்களில் உள்ள, எங்கள் கட்சி அலுவலகங்களில், தவணை முறையில் நன்கொடை செலுத்தும், இ.எம்.ஐ., திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும். அதுபோல், கட்சி அலுவலகங்களில், 'ஸ்வைப்' மெஷின்கள் வைக்கப்படும். பொதுமக்கள், தங்களிடம் உள்ள கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை, இந்த மெஷினில் தேய்த்து, நன்கொடை செலுத்தலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர்' நாளிதழுக்கு, காங்கிரஸ் - எம்.எல்.ஏ., விஜயதரணி அளித்த சிறப்பு பேட்டி:
'ராஜிவ் கொலை வழக்கில் கைதான சாந்தன், முருகன், பேரறிவாளன் உட்பட, ஏழு பேர் விடுதலை செய்யப்படுவர்' என, அமைச்சரவையில் முடிவெடுத்து, சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தது பற்றி தங்கள் கருத்து?
--------------------------------------------------------------------------------------
இப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தினத்தை, தமிழக மக்களின், கறுப்பு தினமாக பார்க்கிறேன். ஏனென்றால், அவர்கள் ஏழு பேரும், குற்றமற்றவர்கள் என, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை. இன்றைக்கும் அவர்கள் குற்றவாளிகள் தான். ராஜிவ் கொலை என்பது கொடூரமான படுகொலை; பயங்கரவாத நடவடிக்கை. 'அவர்கள் விடுதலை செய்யப்படுவர்' என, சட்டசபையில் அறிவித்துள்ளனர். இதை, ஒட்டுமொத்த, தமிழக மக்களின் குரலாக பார்க்க முடியாது. இது, மக்களுக்கு எதிரான முடிவாகவே தென்படுகிறது. குற்றம் செய்தவர்களை, தமிழக அரசு விடுவிக்குமானால், இது ஒரு தவறான முன்னுதாரணமாகி விடும். கொலை செய்து விட்டு, 10 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டால் போதும், அரசாங்கம் விடுதலை செய்து விடும் என்ற நம்பிக்கை, ஒவ்வொரு குற்றவாளிகளின் மனதிலும் உருவாகி விடும். தமிழகத்தில் குற்றங்கள் செய்தால் விடுதலை ஆகி விடலாம் என, கருதி, மற்ற மாநிலங்களில் இருப்பவர்கள், தமிழகத்திற்கு வந்து, குற்ற செயல்களில் ஈடுபடுவதும் அதிகரிக்கும்.பழிக்கு பழி கொலைகளும், சர்வ சாதாரணமாக நடக்க ஆரம்பித்து விடும். நியாயம் கிடைக்காதவர்கள் எல்லாரும், கொலையாளிகளாக மாறி விடும் சூழ்நிலை ஏற்படும். ஆதாயத்திற்காகவும், முன்விரோத கொலைகளும் அதிகரிக்கும். ஏற்கனவே, தமிழகத்தில் ஆதாயக் கொலைகள், பாலியல் பலாத்காரங்கள், கொலைகள் அதிகரித்துள்ளன. ராஜிவ் கொலையாளிகளை அவசர அவசரமாக விடுதலை செய்வதற்கு, அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என, பொதுமக்கள் பரவலாக பேசிக் கொள்கின்றனர். தமிழகத்தில் இனி பாதுகாப்பாக வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றும் கருதுகின்றனர்.
தென்- ஆப்பிரிக்காவிடம் பாடம் படிக்கச் செல்லும் இலங்கைத் தூதுக்குழு
தென்னாப்பிரிக்காவிடம் பாடங்களை கற்றுக்கொள்வதற்காக அந்நாட்டுக்கு தூதுக்குழுவொன்றை அனுப்பவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
-----------------------------------------------------------------------------------------
நிறவெறி ஆட்சிக் காலத்துக்குப் பின்னரான உண்மை கண்டறியும்- நல்லிணக்க ஆணைக்குழு பற்றி கற்றறிந்துகொள்வதற்காக இந்தத் தூதுக்குழுவினர் அங்கு செல்லவுள்ளதாக இலங்கை கூறியுள்ளது.
தொடர்புடைய விடயங்கள்
-----------------------------------------------------------------------------------------
ஐந்துபேரடங்கிய இந்தத் தூதுக்குழுவினர் தென்னாப்பிரிக்காவில் இரண்டு நாட்கள் தங்கியிருப்பர்.
-----------------------------------------------------------------------------------------
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று சர்வதேச நாடுகள் இலங்கை மீது அழுத்தம் கொடுத்துவருகின்றன.
-----------------------------------------------------------------------------------------
இலங்கையின் போரில் நடந்துள்ள கொடூரங்கள் பற்றி முறையான விசாரணை நடத்தத் தவறியுள்ளமை தொடர்பில் இலங்கை மீது தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்ற அமெரிக்கா தயாராகிவருகிறது.
-----------------------------------------------------------------------------------------
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் இந்தப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு தூதுக்குழு அனுப்பும் இந்தப் புதிய நகர்வில் இலங்கை இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ராஜீவ் வழக்கில் இழப்பீடு கோரமுடியாது”: நளினி வழக்கறிஞர்
தமிழக அரசு விடுவிக்கப்போவதாக அறிவித்திருக்கும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழுபேரும் எந்தவிதமான இழப்பீடும் கோரமுடியாது என்று தமிழோசையிடம் தெரிவித்தார் நளினி மற்றும் முருகனின் வழக்கறிஞர் பா புகழேந்தி.
---------------------------------------------------------------------------------------------------
சட்டத்தின் பார்வையில் இவர்கள் ஏழுபேருமே இன்னமும் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளே என்றும், இவர்களை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு என்பது அவர்கள் இதுவரை அனுபவித்த தண்டனைக்காலமே போதும் என்கிற கோணத்தில் எடுக்கப்பட்டிருப்பதே தவிர, இவர்கள் நிரபராதிகள் என்கிற கோணத்தில் எடுக்கப்படவில்லை என்பதே சட்டத்தின் நிலைமை என்றும் கூறினார் புகழேந்தி. எனவே குற்றத்திற்காக சட்டப்படி தண்டிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரமுடியாது என்றார் அவர்.
---------------------------------------------------------------------------------------------------
இந்த ஏழுபேரில், பேரறிவாளன், நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய மூன்று பேர் இந்தியர்கள். முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய நான்குபேரும் இலங்கை குடிமக்கள். இலங்கை குடிமக்களான இந்த நான்குபேருமே சிறையில் இருந்து விடுதலையான பிறகு இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்று புகழேந்தி தெரிவித்தார். அவர்களின் விருப்பத்துக்கு மாறாக அவர்களை பலவந்தமாக இலங்கைக்கு இந்திய அரசால் திருப்பி அனுப்ப முடியாது என்றும் அவர் கூறினார்.
---------------------------------------------------------------------------------------------------
நளினி, முருகன், சாந்தன், ராபர்ட்பயஸ் வெளிநாடு செல்ல விருப்பம்
---------------------------------------------------------------------------------------------------
சிறையில் இருந்து விடுதலையானபிறகு பேரறிவாளனும் ரவிச்சந்திரனும் இந்தியாவில் இருக்கும் தத்தமது குடும்பங்களுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறினார் புகழேந்தி. இலங்கையைச் சேர்ந்த ஜெயக்குமாருடைய ஒட்டுமொத்த குடும்பமும் தமிழ்நாட்டில் இருப்பதால் அவரும் தமது குடும்பத்தவருடன் தமிழ்நாட்டிலேயே தங்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
---------------------------------------------------------------------------------------------------
நளினியும் முருகனும் லண்டனில் இருக்கும் தமது மகளோடு சேர்ந்துவாழ லண்டன் போக விரும்புகிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி தம்மிடம் கோரியிருப்பதாகவும் புகழேந்தி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். ராபர்ட் பயஸின் குடும்பம் கேனடாவில் இருப்பதால் அவர் கேனடா செல்லவிருப்பதாகவும், சாந்தனின் சகோதரர் ஒருவர் கேனடாவில் இருப்பதால் அவரும் கேனடா செல்லவே விரும்புவதாகவும் புகழேந்தி பிபிசி தமிழோசையிடன் கூறினார்.
---------------------------------------------------------------------------------------------------
இந்த ஏழுபேரின் தண்டனைக்காலத்தைக் குறைப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதலை தமிழக அரசு கோரியிருந்தாலும், மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காவிட்டாலும்கூட, அவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு சட்டரீதியில் முழு அதிகாரம் இருப்பதாகவும் புகழேந்தி தெரிவித்தார். அப்படி இவர்களின் தண்டனையை குறைத்து தமிழக அமைச்சரவை முடிவெடுத்து மாநில ஆளுநருக்கு அனுப்பினால், அதை மாநில அரசு ஒரு முறை திருப்பி அனுப்பலாம் என்றும், அப்படி மாநில ஆளுநர் திருப்பி அனுப்பிய பிறகும் மாநில அமைச்சரவை மீண்டும் அதே முடிவை எடுத்து ஆளுநருக்கு அனுப்பிவைத்தால், மாநில ஆளுநர் அதை ஏற்று இந்த ஏழு பேரையும் விடுவித்தே ஆகவேண்டும் என்றும் தமிழோசையிடம் தெரிவித்தார் புகழேந்தி.
இந்தியாவிற்கு நேரடி விமான சேவை நடாத்துவது குறித்து வட மாகாணசபையில் தீர்மானம்
இந்தியாவிற்கு நேரடி விமான சேவை நடாத்துவது குறித்து வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்றைய தினம் வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இந்த விடயம் குறித்த யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. பலாலி, திருகோணமலை ஆகிய இடங்களிலிருந்து இந்தியாவிற்கு நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இந்த யோசனையை முன்மொழிந்துள்ளதாகவும், மற்றுமொரு உறுப்பினரான கந்தையா சர்வவேஸ்வரன் வழிமொழிந்துள்ளார். தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையில் கப்பல் சேவை ஆரம்பிப்பது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடக்கில் அரச திணைக்களங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்து வருகின்றன :
வடக்கில் உள்ள அரச திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களினில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியிலான துஸ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன்.
----------------------------------------------------------------------------------------------
வடமாகாண சபையின் ஆறாவது அமர்வில் அரச திணைக்களங்களில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பாலியல் துஸ்பிரேயோகம் போன்றவற்றை கண்டித்து பிரேரனையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இக்குற்றச்சாட்டினை எழுப்பியுள்ளார்.
----------------------------------------------------------------------------------------------
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வடக்கில் உள்ள அரச திணைக்களங்கள் ; கூட்டுத்தாபனங்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களினில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் என்பன காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
----------------------------------------------------------------------------------------------
குறிப்பாக யாழ்.மாநகர ஆணையாளருக்கு எதிராக இத்தகைய பல பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.அண்மையினில் பொதுநூலக பிரதம நூலகரினை பெண் என்ற காரணத்திற்காக மிரட்டி மற்றொரு பணியாளர் கடமை நேரத்தினில் பாலியல் படங்களை கணனியினில் பார்த்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்ய நிர்ப்பந்தித்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகளுக்கு மாகாண சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் கிளிநொச்சியில் இராணுவத்தினரால் பரமாரிக்கப்படும் விவாசய பண்ணைகளில் வேலை செய்யும் பெண்கள் சிலர் விரும்ப தகாத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் விரும்பாமலோ அந்த நடவடிக்கைகளுக்கு தள்ளப்படுகின்றனர். எனவே அவ்விவசாய பண்ணைகளை வடமாகாண விவசாய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைக்கிறேன் என தெரிவித்தார்.
----------------------------------------------------------------------------------------------
அனந்தி சசிதரனின் பிரேரணையை வழிமொழிந்து அவைத் தலைவர் கருத்து தெரிவிக்கையில், வடக்கில் இவ்வாறன துஸ்பிரயோகங்கள் நடைபெறுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் வந்துள்ளன. இவ்வாறான நடவடிக்கைகளை இந்த உயரிய சபை பார்த்து கொண்டு இருக்காது அதுக்கு நடவடிக்கைகள் எடுக்கும் என தெரிவித்தார்.
ராஜிவ் கொலை குற்றவாளிகளுக்கு 3 நாட்களுக்குள் விடுதலை இன்றேல், தமிழக அரசு அதிகாரத்தை பயன்படுத்தும்
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை: அரசின் முழு அறிக்கை- இணைப்பு - 2
முதற்பதிவேற்றம் 19-02-2014 - 05:18am
----------------------------------------------------------------------------------------------
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரொபட் பயஸ் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
----------------------------------------------------------------------------------------------
இன்று காலை நடைபெற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
----------------------------------------------------------------------------------------------
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவர் மீதான தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று இரத்து செய்து தீர்ப்பளித்தது.
----------------------------------------------------------------------------------------------
இந்நிலையில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில், விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
----------------------------------------------------------------------------------------------
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ” முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ரொபர்ட் பயஸ், ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
----------------------------------------------------------------------------------------------
மூன்று நாட்களுக்குள் இவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக அரசே அதன் அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யும்” என்று முதல்வர் அறிவித்தார்.
----------------------------------------------------------------------------------------------
தூக்கு தண்டனையை இரத்து செய்து நேற்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432இன் படி தமிழக அரசு மூன்று பேரையும் விடுதலை செய்வது குறித்து முடிவு எடுக்கலாம் என பரிந்துரைத்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.
----------------------------------------------------------------------------------------------
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை: அரசின் முழு அறிக்கை
----------------------------------------------------------------------------------------------
ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவு குறித்து சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வாசித்த அறிக்கையின் முழு விபரம் பின்வருமாறு:
----------------------------------------------------------------------------------------------
"முன்னாள் பாரதப் பிரதமர், ராஜிவ் காந்தி, 21.5.1991 அன்று, ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற, தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், கலந்து கொள்ளவந்தபோது, படுகொலை செய்யப்பட்டார்.
----------------------------------------------------------------------------------------------
இந்தக் கொலை குறித்த வழக்கு, பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தடா நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
----------------------------------------------------------------------------------------------
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், நளினி, ஸ்ரீஹரன் என்கிற முருகன், சுதேந்திர ராஜா என்கிற சாந்தன், பேரறிவாளன் என்கிற அறிவு ஆகிய நான்கு பேரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தும் ; 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும், மீதமுள்ள 19 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.
----------------------------------------------------------------------------------------------
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களும் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மறு ஆய்வு மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து 8.10.1999 அன்று தீர்ப்பளித்தது.
----------------------------------------------------------------------------------------------
இதனைத் தொடர்ந்து, மேற்கண்ட தூக்கு தண்டனை கைதிகள் மேதகு தமிழக ஆளுநர் அவர்களுக்கு 17.10.1999 அன்று கருணை மனுக்களை சமர்ப்பித்தார்கள் . இந்த கருணை மனுக்கள் 27.10.1999 அன்று மேதகு தமிழக ஆளுநர் அவர்களால் நிராகரிக்கப்பட்டன.
----------------------------------------------------------------------------------------------
தமிழக ஆளுநர் அவர்களின் ஆணையினை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை கைதிகளால் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இவற்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரர்கள் தொடுத்த வழக்கு களை ஏற்று, கருணை மனுக்களை நிராகரித்த ஆளுநரின் ஆணையை தள்ளுபடி செய்ததோடு, அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை பிறப்பிக்குமாறு ஆளுநருக்கு 25.11.1999 அன்று உத்தரவு பிறப்பித்தது.
----------------------------------------------------------------------------------------------
சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி தலைமையில் 19.4.2000 அன்று நடைபெற்ற அமைச்சரவை க் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவு எடுக்கப்பட்டது:- "தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதையாகி விடும் என்று முதலமைச்சர் அவர்கள் தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும் ; மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது."
----------------------------------------------------------------------------------------------
கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவிற்கு ஆளுநர் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார். அதன்படி தூக்கு த ண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------
கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை முடிவினால் பாதிக்கப்பட்ட சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அளித்தனர். இந்த கருணை மனுக்களை 28.4.20 00 நாளிட்ட கடிதத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. 28.4.2000 அன்று தமிழக அரசால் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் மீது 11 ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்னர், 12.8.2011 நாளிட்ட கடிதத்தின் மூலம், இந்தியக் குடியரசுத் தலைவர் இந்த கருணை மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்த மத்திய உள் துறை அமைச்சகம், இந்தத் தகவலை மேற்கண்ட கைதிகளுக்கு தெரியப்படுத்துமாறு தமிழக அரசை கேட்டுக் கொண்டது. இதன் அடிப்படையில், இந்தக் கடிதத்தின் விவரம் சம்பந்தப்பட்ட கைதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------
இந்தச் சூழ்நிலையில், பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகிய மூன்று பேரையும் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தின. தனது மகன் பேரறிவாளனை விடுவிக்குமாறு, அவரது தாய் அற்புதம் அம்மாள் அவர்கள் என்னை கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டார்.
----------------------------------------------------------------------------------------------
மேற்படி மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியாது என்று தனது தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்த முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதியும், சட்ட நுணுக்கங்களை ஆராயாமல், இவர்களை காப்பாற்ற நான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிகைகள் வாயிலாக வேண்டுகோள் விடுத்தார்.
----------------------------------------------------------------------------------------------
29.8.2011 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தில், கருணாநிதியின் இரட்டை வேடத்தை நான் தோலுரித்துக் காட்டினேன். மேலு ம், உச்ச நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மேதகு ஆளுநரோ அல்லது மேதகு குடியரசுத் தலைவரோ தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மன்னிப்பு அளிக்க முடியும் என்பதையும் ; இவர்களுக்கு மேதகு ஆளுநர் அவர்கள் மன்னிப்பு அளிக்க வேண்டும் எனக் கருதப்பட்டிருந்தால், 2000-ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தான் அதற்கான முடிவு எடுத்திருக்க முடியும்; எடுத்திருக்க வேண்டும் என்பதையும் அமைச்சரவையின் அறிவுரைப்படி மேதகு ஆளுநர் அவர்களால் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, பின்னர் குடியரசுத் தலைவர் அவர்களாலும் மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் , தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கோ, நிறுத்தி வைப்பதற்கோ மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதையும் எடுத்துக் கூறினேன்.
----------------------------------------------------------------------------------------------
அதாவது, குடியரசுத் தலைவரால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே பொரு ள் தொடர்பான கருணை மனுவை மாநில ஆளுநர் பரிசீலிக்க வேண்டும் என மாநில அர சு 3 கோர முடியாது என 1991 ஆம் ஆண்டே மத்திய அரசு தெளிவுரை வழங்கி உள்ளதையும் எடுத்துக் கூறினேன்.
----------------------------------------------------------------------------------------------
இந்திய அரசமைப்புச் சட்ட பிரிவுக் கூறு 257 உட்பிரிவு (1)-ன்படி, கருணை ம னு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக் கூறு 72-ன்கீழ் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின், அதே பிரச்சனையை மாநில ஆளுநர் இந்திய அரசமைப்பு ச் சட்டப் பிரிவுக் கூறு 161-ன்படி எடுத்துக் கொள்ள முடியாது என்றும் , மீண்டும் குடியரசுத் தலைவர் தான் கருணை மனுவை மறுபரிசீலனை செய்ய இயலும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டு இருந்ததையும் சுட்டிக் காட்டினேன்.
----------------------------------------------------------------------------------------------
இந்திய அரசமைப்புச் சட்டப்படி எனது அரசின் இயலாமையை சுட்டிக்காட்டிய நான், இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ; எனக்கு வரப் பெற்ற பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில், ""தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது"" என்னும் தீர்மானத்தினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நானே முன்மொழிந்தே ன். என்னால் முன்மொழியப்பட்ட இந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------
இந்தத் தீர்மானத்தின்மீது இரண்டரை ஆண்டுகளாக மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் வரை, அதாவது மார்ச் 2013 வரை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம் வகித்தது. இதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு திரு. கருணாநிதி மத்திய அரசை வலியுறுத்தினாரா ? இல்லை ! வலியுறுத்தவில்லை ! மத்திய அரசும், அதனைத் தாங்கிப் பிடித்திருந்த திரு. கருணாநிதியும் எந்த நடவடிக்கையையும் எடுக்கமாட்டார்கள் என்று தெரிந்த திருவாளர்கள் சாந்தன், ஸ்ரீஹரன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
----------------------------------------------------------------------------------------------
இந்த மனுக்களில், தங்களுடைய கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க 11 ஆண்டு காலதாமதம் ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டும், கடந்த 23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டும் ; தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர். பின்னர் இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டன. இது குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது , இவர்களின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கூடாது என்று மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் சார்பில் ஆஜரான மத்திய தலைமை வழக்குரைஞர் எடுத்துரைத்தார்.
----------------------------------------------------------------------------------------------
இருப்பினும், இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களுடைய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 18.2.2014 அன்று தீர்ப்பளித்ததோடு, ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் சிறைவாசம் என்றும் ; எனினும் குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 432 மற்றும் 433 ஹ -ன்படி, அரசு எடுக்கும் தண்டனை மாற்றுதல் அல்லது தள்ளுபடி செய்தல் நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
----------------------------------------------------------------------------------------------
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வெளிவந்தவுடன், இதுகுறித்து உடனடியாக நான் விரிவாக விவாதித்தேன். இந்த விரிவான விவாதத்திற்குப் பின், இன்று, 1 9.2.2014, காலை எனது தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்ட த்தில் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோர் 23 ஆண்டுகளாக சிறைச்சாலையில் இருந்து வருவதைக் கருத்தில் கொண்டு, குற்ற விசாரணை முறைச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------
இதேபோன்று, ஏற்கெனவே ஆயுள் கைதியாக 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் திருமதி நளினி , ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------
இருப்பினும், இந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பினால் புலனாய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தடா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய ப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-ன்படி, தமி ழ்நாடு அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.
----------------------------------------------------------------------------------------------
எனவே, மத்திய அரசின் கருத்தினைப் பெறும் வகையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கி ற அறிவு, திருமதி நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.
----------------------------------------------------------------------------------------------
மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளிக்கப் பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி , ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் இலங்கை மீதான சர்வதேச விசாரணையை கோருவதற்கு டேவிட் கெமரூன் நடவடிக்கை எடுத்து வருகிறார்:
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான சர்வதேச விசாரணையைக் கோருவதற்கான உரிய நடவடிக்கையை பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் முன்னெடுத்து வருகிறார் என யாழ்ப்பாணத்துக்கு சென்ற செய்துள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)




