Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, February 24, 2014

ஒரு தனி மனிதனுக்காக

ஒரு தனி மனிதனுக்காக அப்பாவி மூன்று உயிர்களை பலி வாங்குவது காங்கிரஸ் அரசின் பழி வாங்கும் எண்ணத்தையே பிரதிபலிக்கிறது .. ---------------------------------------------------------------------------------------
போப்பால் மத்திய இந்தியாவில் உள்ள ஒரு நகராகும். இது மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமாகும். மேலும் இந்நகரம் இதே பெயருடைய ஒரு மாவட்டத்தின் தலைநகரமுமாகும். போபால் இந்தியாவின் 16வது மிகப்பெரிய நகரமாகும், மேலும் இது உலகின் 134வது பெரிய நகரமாகும். ------------------------------------------------------------------------------------- உலகின் மிக மோசமான விபத்து டிசம்பர் 3, 1984, ல் இந்தியாவில் உள்ள போபாலில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவினால் ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
------------------------------------------------------------------------------------- மத்தியப்பிரதேச தலைநகரான போபாலில் பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து விஷ வாயுவான மிதைல் ஐசோ சயனைட் எனும் வாயு கசிந்தது. இதில், சுமார் 15 ஆயிரத்து 274 பேர் மடிந்தனர். விஷவாயுவை சுவாசித்ததால் 5 லட்சத்து 74 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இன்னமும் கூட உடல் ஊனமுற்றவர்களாக பிறக்கின்றனர்.
------------------------------------------------------------------------------------- இந்த வழக்கு இன்னமும் கூட முதன்மை ஜுடிசியல் மேஜிஸ்ட்ரேட் அளவில் தான் நடந்து வருகிறது. யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவரான வாரன் ஆண்டர்சனை இந்தியா வுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்படவில்லை. இதற்கு மத்திய அரசும் காரணம் என்று தன்னார் வத் தொண்டு அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
------------------------------------------------------------------------------------- விஷவாயு கசிந்த ஆலையிலிருந்து இன்னமும் கூட நச்சுப் பொருட்கள் முழுமை யாக அகற்றப்படாத நிலை உள்ளது. 67 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த ஆலையில் இன்னமும் கூட நச்சுப் பொருட் கள் உள்ளன.
------------------------------------------------------------------------------------- விபத்து நடந்த போது யூனியன் கார்பைடு தலை வராக இருந்த ஆண்டர்சனை கைது செய்ய உள்ளூர் நீதிமன்றம் பலமுறை வாரண்ட் பிறப்பித்தது. ஆனால், மத்திய புலனாய்வுத்துறை அவரை இந்தியாவுக்கு கொண்டுவர எந்த நடவடிக்கையும் பிறப்பிக்கப்படவில்லை. இந்திய அரசினால் தேடப்படும் குற்ற வாளியாக அறிவிக்கப்பட்ட ஆண்டர்சன் இன்னமும் நியூயார்க் அருகில் உள்ள தீவு ஒன்றில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். பல ஆயிரம் பேர் சாவுக்கு காரணமான இந்தவழக்கில் ஆண்டர்சன் ஒருமுறை கூட விசாரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
------------------------------------------------------------------------------------- அதுமட்டுமல்ல உலகின் மிக மோசமான தொழிற்சாலை விபத்துகளில் ஒன்றாக கருதப்படும் போபால் விஷவாயு கசிவு தொடர்பாக, இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.
யூனியன் கார்பைடு ஆலையை டோவ் கெமிக்கல் என்ற நிறுவனம் வாங்கி நடத்தி வருகிறது. மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேசும்,
போபால் விஷவாயு கசிவு நிவாரணத் துறை அமைச்சர் பாபுலால் கவுரும் இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்றும், நச்சுக் கழிவு எதுவும் ஆலைக்குள் இல்லை என்று சாதிக்கின்றனர் என்றும் தன்னார்வ அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
-------------------------------------------------------------------------------------------------- 1989ம் ஆண்டு பிப்ரவரி 15ம்தேதி உச்சநீதிமன்றத் தின் தலையீடு காரணமாக ஏற்பட்ட உடன்பாட்டின் படி யூனியன் கார்பைடு நிறுவனம் ரூ.715 கோடி வழங்க வகை செய்தது. அரசுக் கணக்குப்படி 3 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். ஒரு லட்சத்து 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொகை எந்த வகை யிலும் போதுமானது அல்ல என்பது ஒருபுறமிருக்க, இதுவும் கூட முறையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவில்லை என்று போபால் விபத்தால் பாதிக்கப்பட்டோர் அமைப்பின் தலைவர் அப்துல் ஜப் பார் கூறியுள்ளார். ------------------------------------------------------------------------------------------- இதனால் இறந்தவர் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் ரூபாயும், பாதிக்கப்பட்ட வர்களுக்கு ரூ.25 ஆயிரமும் மட்டும்தான் 1992ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை வழங்கப்பட்டுள்ளது என் றும் அவர் கூறினார். போபால் விஷவாயுவால் இறந்தோர் நினைவாக ரூ.114 கோடி செலவில் நினைவகம் அமைக் கப்போவதாக மத்திய அரசும், மத்தியப்பிரதேச அரசும் அறிவித்துள்ளன. இறந்த வர்களுக்கு நினைவ கம் அமைப்பதை விட இன்னமும் உயிரோடு இருந்து சித்ரவதைப் பட்டுக் கொண் டிருக்கும் மக்களுக்கு இந்த தொகையை தரலாம் என்று தன்னார்வ அமைப்புகள் கூறியுள்ளன. ------------------------------------------------------------------------------------------------ பல்லாயிர கணக்கான உயிரை பலி வாங்கிய போபால் விஷ வாயு குற்றவாளிகளுக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் 14 பேர் உயிரை பலி வாங்கிய சம்பவத்தில் அப்பாவிகளான இந்த படு கொலைக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாத முருகன், பேரறிவாளன், சாந்தன் மூன்று பேருக்கு மட்டும் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது .மேலும் இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை அறிவிக்கவில்லை.. -------------------------------------------------------------------------------------------- மத்திய அரசு ராஜீவ் காந்தி என்ற ஒரு தனி மனிதற்காக மட்டும் இந்த மூன்று உயிர்களை பலிவாங்குவது மிகவும் தவறான கொல்கை. தனி ஒரு மனிதனுக்கு ஒரு சட்டம் மக்களுக்கு ஒரு சட்டம் இந்தியாவில் எங்கும் இல்லாத ஒன்று. -------------------------------------------------------------------------------------------- ஒரு தனி மனிதனுக்காக அப்பாவி மூன்று உயிர்களை பலி வாங்குவது காங்கிரஸ் அரசின் பழி வாங்கும் எண்ணத்தையே பிரதிபலிக்கிறது .. -------------------------------------------------------------------------------------------- டெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட மேலும் 4 பேரை விடுவிக்க தடைக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் விடுதலை செய்யும் முடிவை எதிர்த்து மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது. சிறையில் உள்ள ரவிச்சந்திரன், ராபர்ட் பாயஸ், ஜெயக்குமாரை விடுவிக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் போபால்?

ஆனால் போபால்? 1984 டிசம்பர் 2 நள்ளிரவு மற்றும் டிசம்பர் 3 அதிகாலையில் போபாலில் இருந்த யூனியன் கார்பைடு எனும் அமெரிக்க ஆலையில் மீதைல் ஐசோயனைடு எனும் நச்சுவாயு வெளியேறி 15,000 பேர் கொலை செய்யப்படுகிறார்கள். இரண்டு இலட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். அடுத்து வந்த வருடங்களில் இன்னும் சில ஆயிரம் பேர் இறக்க, பல ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். டிசம்பர் 4இல் யூனியன் கார்பைடு தலைவரான வாரென் ஆண்டர்சன் கைது செய்யப்படுகிறான். 2000 டாலர் ஜாமீன் கட்டிவிட்டு மீண்டும் இந்தியா வருவதாக பொய்யுரைத்த ஆண்டர்சன் உடன் அமெரிக்கா சென்று இன்றுவரை வழக்கிற்காக வரவில்லை. ஆண்டர்சனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தும், அமெரிக்கா அதற்கு அசைந்து கொடுக்கவில்லை. செப்டம்டர் 11இல் நடந்த உலக வர்த்தக மையத் தாக்குதலில் இறந்தவர்களை விட போபாலில் கொல்லப்பட்டவர்கள் பல மடங்கு அதிகம். பின்லேடனுக்காக முழு ஆப்கானையும், பாக்கையும் குண்டுகளால் சல்லடை போட்டு தேடும் அமெரிக்கா ஆண்டர்சனை பயங்கரவாதியாக கருதவில்லை. இந்தியாவும் அப்படி வலியுறுத்துவில்லை. ஏனெனில் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் பாமர இந்திய மக்கள்தானே? 1989இல் இந்திய அரசு நீதிமன்றத்திற்கு வெளியே யூனியன் கார்பைடு நிறுவனத்துடன் சமாதானம் செய்து கொண்டது. அதில் கார்பைடு நிறுவனம் அளித்த பிச்சை நிவாரணத் தொகை வெறும் 43 கோடி டாலர் மட்டுமே. கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையை தோராயமாக வகுத்துப் பார்த்தால் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் இந்திய ரூபாய் கூட கிடைக்காது. சமீபத்தில் சட்டீஸ்கரில் கொல்லப்பட்ட துணை இராணுவ வீரர்களுக்கு மொத்தமாக கிடைத்த தொகை மட்டும் தலா 75 இலட்சம் ரூபாயைத் தாண்டும். காரணம் அந்த வீரர்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்காக போர் புரிகிறார்கள். போபாலிலோ ஒரு பன்னாட்டு நிறுவனம் கொலை செய்திருக்கிறது. இப்போது நிவாரணத் தொகையின் அரசியலை நாம் புரிந்து கொள்ளலாம். இந்த பிச்சை நிவாரணத் தொகை கூட முழுமையாக வழங்கப்படவில்லை என்பது வேறு விசயம். அந்த அளவு அரசு எந்திரம் இதை பாராமுகமாக கருதுகிறது. வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே 1994இல் யூனியன் கார்பைடு நிறுவனம் தனது பங்குகளை மெக்லாய்ட் ரஸ்ஸல் நிறுவனத்திடம் விற்பதற்கு இந்திய அரசு அனுமதித்திருக்கிறது. எப்படியும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் வர்த்தக சாம்ராஜ்ஜியம் விழக்கூடாது என்று இந்த பச்சைத் துரோகம் அரசால் செய்யப்பட்டது. 1999இல் யூனியன் கார்பைடு நிறுவனம் அமெரிக்காவிலிருந்த டோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. டோ நிறுவனமோ போபால் விசவாயு கொலைக்காக தமது நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்று சொல்லிவிட்டது. பொறுப்பு ஏற்க வேண்டிய யூனியன் கார்பைடு நிறுவனமே இனி இல்லை என்று காட்டுவதற்கு இந்த அழுகுணி ஆட்டம் நடத்தப்பட்டது. இன்றும் போபால் நகரில் இந்த படுகொலையின் பாதிப்புகள் அழுத்தமான தடயங்களை விட்டுச் சென்றிருக்கின்றது. போபாலின் மண்ணிலும், நீரிலும் பாதரசத்தின் அளவு வழக்கத்தை விட 60 இலட்சம் மடங்கு அதிகம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நச்சு சூழலோடுதான் போபால் மக்கள் இன்னமும் வாழ்கிறார்கள். 1999ஆம் ஆண்டு நியூயார்க் நீதிமன்றத்தில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், அந்நிறுவனம் இந்தியாவில் நடந்த விபத்திற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று அடித்துக் கூறிவிட்டது. 2002 இல் ஆண்டர்சனுக்கு இந்திய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தாலும், அந்த அயோக்கியனை அமெரிக்காவில் காணவில்லை என்று அமெரிக்க அரசு பச்சையாக புளுகியது. ஆனால் அவன் நியூயார்க் நகரில் இருப்பதை ஒரு பிரிட்டீஷ் பத்திரிகை அம்பலப்படுத்தியது. ஒரு முதலாளியையும், ஒரு முதலாளித்துவ நிறுவனத்தையும் காப்பாற்றுவது எப்படியெல்லாம் நடந்திருக்கிறது பாருங்கள். கொல்லப்பட்ட உயிர்களுக்கு உரிய நிவாரணம் தராத நிலையில் போபாலில் உள்ள ஆலையை சுத்தப்படுத்தலாம் என அமெரிக்க நீதிமன்றம் டோ கெமிக்கல்சுக்கு அனுமதியளித்தது. அந்த ஆலையை சுத்தப்படுத்தி ரியல் எஸ்டேட்டுக்கு விற்றுவிட்டால் பணமாவது கிடைக்குமே என்று அந்த கொலைகாரர்கள் யோசித்திருக்கலாம். எழவு வீட்டிலும் வந்தவரை ஆதாயம்தானே? பிறகு அந்த 43 கோடி நிவாரணத்தொகையை வைத்திருந்த இந்திய ரிசர்வ் வங்கி அதற்கு வட்டியாக 15 கோடி டாலரைச் சேர்த்து வழங்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மொத்த குடும்பத்தினரையும் இழந்து ஒரு சிலர் மட்டும் நடைப்பிணமாக வாழும் நிலையில் இந்த பிச்சைக்காசு எம்மாத்திரம்? மட்டுமல்ல இதுவும் கூட இன்னமும் முழுமையாக வழங்கப்படவில்லை. ஏனென்றால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை இன்னமும் முழுமையாக தயாரிக்கப்படவில்லையாம். 26 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பு வந்திருக்கிறது. ஆலையில் பணியாற்றிய இந்திய உயர் அதிகாரிகள் எட்டு பேருக்கு போனால் போகிறது என்று இரண்டு வருடம் சிறைத்தண்டனை அளித்திருக்கிறார்கள். ஆண்டர்சனும், டோ கெமிக்கல்சிடம் ஒளிந்திருக்கும் யூனியன் கார்பைடு நிறுவனும் இதை கோக் குடித்தவாறு தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இரசித்திருப்பார்கள். எய்தவன் இறுமாந்திருக்க அம்புகளுக்கு மட்டும் அதுவும் ஒரு கொசுக்கடித் தண்டனை. இதுதான் முதலாளித்துவ பயங்கரவாதம். சட்டம், நீதி, நிவாரணம் என்ற பெயர்களில் ஒளிந்து கொண்டு முதலாளிகள் தாம் நடத்தியிருக்கும் பச்சையான படுகொலையை 26 ஆண்டுகளாக நாசுக்காக நீர்த்துப் போக செய்திருக்கிறார்கள். இந்திய, அமெரிக்க நீதிமன்றங்கள், இருநாட்டு அரசாங்கங்கள் இணைந்து நடத்தியிருக்கும் இந்த ஏமாற்று வேலையை வைத்தாவது முதலாளித்துவம் என்றால் அது பயங்கரவாதம்தான் என்பதை நாம் உணரவேண்டும். அப்போதுதான் இன்னமும் பரிதாபமாய் போபால் படுகொலைக்காக உயிரற்ற குரலில் போராடி வரும் அந்த பாமர மக்களது நீதியின் பக்கம் நாமும் இணைய முடியும். ஆண்டர்சனைத் தூக்கில் போடுவதோடு அமெரிக்க அரசை பயங்கரவாத அரசாக அறிவிக்க வேண்டும். அமெரிக்க அரசுக்கு ஒத்தூதிய இந்திய அரசு, அதிகாரிகள், அரசியல்வாதிகளும் தண்டிக்கப்படவேண்டும். இவையெல்லாம் இன்று நடக்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். எனினும் அந்த எளிய மக்களால், ஒரு நாள் இந்த அரசை தூக்கியெறியும் புரட்சி ஒன்று நடக்கும் போது இந்தக் குற்றங்களுக்கு வட்டியும் முதலுமாய் தண்டனை வழங்கப்படும். தாமதமான நீதி அப்போது மட்டுமே கணக்கு தீர்க்கப்படும். தீர்ப்போம்!!