Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, December 9, 2013
சாதாரண மக்களுக்கு கிடைத்த வெற்றி: அர்விந்த் கெஜ்ரிவால் பேட்டி
டெல்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த வெற்றி, சாதாரண மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கெஜ்ரிவால் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டெல்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த வெற்றி, நேர்மைக்கு கிடைத்த பரிசு. இது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி ஆகும். இ்ந்த வெற்றி, சாதாரண மக்களுக்கு கிடைத்த வெற்றி. ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கு கிடைத்த வெற்றி ஆம் ஆத்மி கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்கள் மக்களுக்காக உழைக்க வேண்டும். ஷீலா தீக்ஷித்துடன் தனக்கு தனிப்பட்ட முறையில் விரோதம் இல்லை. இது டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி, இது இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி, இது என்னுடைய வெற்றி அல்ல. இதனை மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார்.
ஆம் ஆத்மி கட்சி ஆரம்பித்து முதல் முறையாக டெல்லி சட்டமன்றத் தேர்தலை சந்தித்தது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மூன்று முறை முதல் அமைச்சராக இருந்த ஷீலா தீட்சித்தை எதிர்த்து நிற்பேன் என்று சவால் விட்டார். அதன்படி தற்போது போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி: டெல்லியில் ஆதரவு கோருகிறது பாஜக
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. டெல்லியில் பெரும்பான்மை பெறாததால் மற்ற கட்சிகளின் ஆதரவை கோரியுள்ளது பாஜக.
ராஜஸ்தானில் பாஜக முதல் அமைச்சராக பதவியேற்கிறார் வசுந்தரா ராஜே சிந்தியா
ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜக முன்னிலை வகித்தது.
199 தொகுதிகளில் நடந்த தேர்தல்களில் 162 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆட்சியை பாஜக பிடிப்பது உறுதியானது. பாஜகவின் முதல் அமைச்சர் வேட்பாளரான வசுந்தரா ராஜே சிந்தியா 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் பாஜக முதல் அமைச்சராக பதவியேற்கிறார் சிவராஜ்சிங் சவுகான்
மத்தியப்பிரதேசத்தில் பாஜக மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது. அக்கட்சியின் தொண்டர்கள் முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் வீட்டின் முன்பு திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 165 இடங்களை பாஜக கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 58 இடங்களில் வெற்றி பெற்றது. 2005 மற்றும் 2009 சட்டமன்ற தேர்தல்களில் ஆட்சியை பிடித்த பாஜக தற்போது 2013 சட்டமன்றத் தேர்த-லும் ஆட்சியை பிடிக்கிறது.
சத்தீஸ்கர் மாநில முதல் அமைச்சராக ராமன் சிங் பதவியேற்கிறார்.
சத்தீஸ்கரில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை பெற்றது பாஜக. 49 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 39 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் ராமன் சிங் தொடர்ந்து 3வது முறையாக சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கிறார்.
டெல்லியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக முதல் அமைச்சர் வேட்பாளர் ஹர்ஷவர்தன் கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆம் ஆத்மி கட்சி 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தொடர்ந்து 3 முறையாக ஆட்சி புரிந்த ஷீலா தீட்சித் ஆட்சியை இழந்ததுடன் படுதோல்வி அடைந்துடன் பதவியை ராஜினமா செய்தார். ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்க முடியாது என்று காங்கிரஸ் கட்சி கூறிவிட்டது. மற்ற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்க முயற்சி செய்வோம். இல்லையெனில் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்ற பாஜக கூறியுள்ளது.
டிசம்பர். 15ம் நாள் மண்டேலா இறுதி நிகழ்வு - உலகத் தலைவர்கள் பங்கேற்பு
நிறவெறிக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தனது 95வது வயதில் மரணம் அடைந்தார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 15ம் நடைபெறும் அவரது இறுதிச்சடங்கில் உலக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
உலக வரலாற்றில் தன் பெயரை பொன்னெழுத்துகளால் பொறித்துக்கொண்ட மகத்தான தலைவர் நெல்சன் மண்டேலா. அமைதிக்கான ‘நோபல் பரிசு’ பெற்ற இவர், தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பர் இன அதிபர்.அவரது மரணச்செய்தி உலகமெங்கும் உள்ள மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவும், துயரமாகவும் அமைந்துள்ளது. மண்டேலா உடல்நலக்குறைவால் கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும், வீடு திரும்புவதுமாக இருந்தார். கடந்த ஜூன் மாதம் 8ஆம் நாள் நுரையீரல் தொற்றுநோய் காரணமாக தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
டிசம்பர். 15ம் நாள் மண்டேலா இறுதி நிகழ்வு - உலகத் தலைவர்கள் பங்கேற்பு
டிச 8, 2013
4
நிறவெறிக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தனது 95வது வயதில் மரணம் அடைந்தார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 15ம் நடைபெறும் அவரது இறுதிச்சடங்கில் உலக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
உலக வரலாற்றில் தன் பெயரை பொன்னெழுத்துகளால் பொறித்துக்கொண்ட மகத்தான தலைவர் நெல்சன் மண்டேலா. அமைதிக்கான ‘நோபல் பரிசு’ பெற்ற இவர், தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பர் இன அதிபர்.
அவரது மரணச்செய்தி உலகமெங்கும் உள்ள மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவும், துயரமாகவும் அமைந்துள்ளது. மண்டேலா உடல்நலக்குறைவால் கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும், வீடு திரும்புவதுமாக இருந்தார். கடந்த ஜூன் மாதம் 8ஆம் நாள் நுரையீரல் தொற்றுநோய் காரணமாக தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நெல்சன் மண்டேலாவின் மறைவுச்செய்தியை தென்னாபிரிக்காவின் அதிபர் ஜேக்கப் ஜூமா முறைப்படி அறிவித்தார். இதுதொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரை ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில், “நமது அன்புக்குரியவரும், தென் ஆப்பிரிக்க ஜனநாயகத்தின் நிறுவனர் அதிபருமான நெல்சன் மண்டேலா காலமானார். அவர் இப்போது நிரந்தரமாக ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார். அவர் இப்போது அமைதியாக இருக்கிறார். நமது தேசம், அதன் மிகப்பெரிய புதல்வரை இழந்து விட்டது. நமது மக்கள் தங்கள் தந்தையை இழந்து விட்டனர்” என்றார்.
தொடர்ந்து அவர், “மண்டேலாவின் ஓய்வு ஒழிச்சலில்லா விடுதலைப்போராட்டம், அவருக்கு உலகமெங்கும் மதிப்பை தேடித்தந்தது. அவரது பணிவு, கருணை, மனிதநேயம் ஆகியவை மக்களின் அன்பைப் பெற்றுத்தந்தது. நமது சிந்தனையெல்லாம், உலகமெங்கும் மண்டேலாவை தங்களது சொந்தத் தலைவராக, அவரது நலனை தங்கள் நலனாக கொண்ட கோடானுகோடி மக்களுடன் கலந்திருக்கிறது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.மண்டேலாவின் மறைவுக்கு உலக தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து, அவரது வாழ்நாள் சேவைக்கு புகழாரம் சூட்டி உள்ளனர்.
நெல்சன் மண்டேலாவின் உடல் தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள யூனியன் கட்டிடத்தில் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு மக்கள் அணி, அணியாக சென்று தங்கள் உள்ளம் கவர்ந்த தலைவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
டிசம்பர். 15ம் நாள் மண்டேலா இறுதி நிகழ்வு - உலகத் தலைவர்கள் பங்கேற்பு
டிச 8, 2013
4
நிறவெறிக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தனது 95வது வயதில் மரணம் அடைந்தார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 15ம் நடைபெறும் அவரது இறுதிச்சடங்கில் உலக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
உலக வரலாற்றில் தன் பெயரை பொன்னெழுத்துகளால் பொறித்துக்கொண்ட மகத்தான தலைவர் நெல்சன் மண்டேலா. அமைதிக்கான ‘நோபல் பரிசு’ பெற்ற இவர், தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பர் இன அதிபர்.
அவரது மரணச்செய்தி உலகமெங்கும் உள்ள மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவும், துயரமாகவும் அமைந்துள்ளது. மண்டேலா உடல்நலக்குறைவால் கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும், வீடு திரும்புவதுமாக இருந்தார். கடந்த ஜூன் மாதம் 8ஆம் நாள் நுரையீரல் தொற்றுநோய் காரணமாக தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நெல்சன் மண்டேலாவின் மறைவுச்செய்தியை தென்னாபிரிக்காவின் அதிபர் ஜேக்கப் ஜூமா முறைப்படி அறிவித்தார். இதுதொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரை ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில், “நமது அன்புக்குரியவரும், தென் ஆப்பிரிக்க ஜனநாயகத்தின் நிறுவனர் அதிபருமான நெல்சன் மண்டேலா காலமானார். அவர் இப்போது நிரந்தரமாக ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார். அவர் இப்போது அமைதியாக இருக்கிறார். நமது தேசம், அதன் மிகப்பெரிய புதல்வரை இழந்து விட்டது. நமது மக்கள் தங்கள் தந்தையை இழந்து விட்டனர்” என்றார்.
தொடர்ந்து அவர், “மண்டேலாவின் ஓய்வு ஒழிச்சலில்லா விடுதலைப்போராட்டம், அவருக்கு உலகமெங்கும் மதிப்பை தேடித்தந்தது. அவரது பணிவு, கருணை, மனிதநேயம் ஆகியவை மக்களின் அன்பைப் பெற்றுத்தந்தது. நமது சிந்தனையெல்லாம், உலகமெங்கும் மண்டேலாவை தங்களது சொந்தத் தலைவராக, அவரது நலனை தங்கள் நலனாக கொண்ட கோடானுகோடி மக்களுடன் கலந்திருக்கிறது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மண்டேலாவின் மறைவுக்கு உலக தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து, அவரது வாழ்நாள் சேவைக்கு புகழாரம் சூட்டி உள்ளனர்.
நெல்சன் மண்டேலாவின் உடல் தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள யூனியன் கட்டிடத்தில் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு மக்கள் அணி, அணியாக சென்று தங்கள் உள்ளம் கவர்ந்த தலைவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மண்டேலாவின் இறுதிச்சடங்கு எதிர்வரும் 15ம் நாள், அவரது சொந்த கிராமமான குலுவில் நடத்தப்படும் என தகவல்கள் கூறுகின்றன. இதில், உலகமெங்கும் உள்ள தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
மண்டேலாவின் ஆன்மா அமைதி பெறுவதற்காக, நாட்டு மக்கள் அனைவரும் 8ம் நாள் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா கேட்டுக்கொண்டுள்ளார்.மறைந்த தலைவர் மண்டேலாவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டேலாவின் இறுதிச்சடங்கு நடந்து முடிகிற வரை தென் ஆப்பிரிக்காவில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். 10 நாள் அரசு முறை துக்கம் கடைப்பிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மண்டேலாவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக அந்த நாட்டு அரசு, சிறப்பு இணையதளம் ஒன்றினை உருவாக்கி உள்ளது.
அவரது வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘மண்டேலா, விடுதலைக்கு நீண்ட நடை’ என்ற சினிமா படம் கடந்த வாரம்தான் உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தை இந்திய வம்சாவளி தென் ஆப்பிரிக்க இயக்குனர் ஆனந்த் சிங் 20 ஆண்டுகளாக தயாரித்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரசுக் கட்சிக்கு, மீள முடியாத படுதோல்வி - தமிழக மக்களுக்கு ஆறுதல்: வைகோ
ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், மக்கள் விரோத காங்கிரசு கட்சிக்கு, இதுவரை வரலாறு காணாத படுதோல்வி கிடைத்து உள்ளது.
தமிழக வாழ்வாதாரங்களுக்கு வஞ்சகமும், ஈழத்தமிழர் படுகொலையில் பங்காளியாகச் செயல்பட்ட துரோகமும் எண்ணி, நெஞ்சம் கொதித்த தமிழக மக்களுக்கு, காங்கிரசின் படுதோல்வி ஆறுதல் தந்து உள்ளது.
2014 இல் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில், நரேந்திர மோடி பிரதமர் ஆவார் என்பதற்கு இத்தேர்தல் முடிவுகள் கட்டியம் கூறுகின்றன.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, ஓராண்டு காலத்தில் மக்களின் மதிப்பையும், ஆதரவையும் பெற்று, மதிக்கத்தக்க இடங்களைப் பெற்று உள்ளது, பாராட்டுக்கு உரியதாகும்.
2014 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் காங்கிரசு கட்சிக்கு பூஜ்யம்தான் மக்களின் தீர்ப்பாக இருக்கும்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச்செயலாளர்
08.12.2013 மறுமலர்ச்சி தி.மு.க.
Subscribe to:
Posts (Atom)