Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, February 17, 2014

இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகள் வழங்கப்பட மாட்டாது – நரேந்திர மோடி

இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகள் வழங்கப்பட மாட்டாது என பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தமது கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் இலங்கைக்கு எந்தவிதமான இராணுவ உதவிகளும் வழங்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகள் வழங்கப்படாது என நரேந்திர மோடி தமக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளா வைகோ தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக மக்கள் தீர்ப்பாயத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை மத்திய அரசாங்கம் வேடிக்கை பார்த்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

China's submarines in Indian Ocean worry Indian Navy

source http://www.hindustantimes.com/india-news/newdelhi/china-s-submarines-in-indian-ocean-worry-indian-navy/article1-1038689.asp

குஜராத் நெடுஞ்சாலைத் திட்டத்தில் உலக வங்கி இணைந்தது!!

குஜராத்: இந்தியா, உலக வங்கி இணைந்து இரண்டாவது குஜராத் மாநில நெடுஞ்சாலைத் திட்ட நிதிக்காக 175 மில்லியன் அமெரிக்க டாலர் பெருமானமுள்ள கடன் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசின் சார்பில் நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையின் இணை செயலர் (பன்னாட்டு அமைப்புகள்) நிலயா மிதாஷ் மற்றும் உலக வங்கி சார்பில் இந்தியாவிற்கான உலக வங்கி இயக்குனர் ஒன்னோ ருல் ஆகியோர் கையொப்பமிட்டனர். "இந்த 175 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் ஒப்பந்தம் இந்திய அரசு மற்றும் உலக வங்கியிடையே இரண்டாம் குஜராத் மாநில நெடுஞ்சாலை திட்ட நிதிக்காக கையெழுத்தானது" என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலை திட்டக் கடன் வழிமுறைகள் மற்றும் அமைப்புகளை நவீனப்படுத்துதல், சொத்துப் பராமரிப்பு மேலாண்மை வளர்ச்சி, சாலைப் பாதுகாப்புக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் கிழக்கு குஜராத்தில் உள்ள சில பின் தங்கிய பகுதிகளை அடையும் வழிகளின் மேம்பாடு ஆகியன இந்தத் திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களாகும். இந்தத் திட்டம் நெடுஞ்சாலை மேம்பாடு (மொத்த செலவு 290 மில்லியன் அமெரிக்க டாலர்கள்), துறைக் கொள்கை மற்றும் அமைப்பு மேம்பாடு (மொத்த செலவு 12 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) மற்றும் சாலைப் பாதுகாப்பு மேலாண்மை (மொத்த செலவு 22 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகிய மூன்று பிரிவுகளை இந்தத் திட்டம் மொண்டிருக்கும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தக் கடனானது திட்ட அமலாக்க அவகாசமான ஐந்து ஆண்டுகளுக்கு தரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டுப் பிரச்சினைகளில் சீனா-அமெரிக்கா இடையே கருத்துப் பரிமாற்றம்

சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியை சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங், அரசவை உறுப்பினர் யாங் ச்சேச்சி பிப்வரி 14ஆம் நாள் பெய்ஜிங்கில் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சிரியா வேதி ஆயுத ஒழிப்புப் பணி

சிரியா வேதி ஆயுதங்களை ஒழிப்பது குறித்து ஐ.நா பாதுகாப்பவை 6ஆம் நாள் இரகசிய கலந்தாய்வு நடத்தியது.

சீன-ரஷிய உறவுக்கான செயல்நோக்குத் திட்டம்

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங், ரஷிய அரசுத் தலைவர் புத்தினுடன் 6ஆம் நாள், சோச்சியில் பேச்சுவார்த்தை நடத்தினார். சோச்சி குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெற, சீன அரசு மற்றும் மக்களின் சார்பில், ஷி ச்சின்பீங் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார். நட்பார்ந்த, பயன் தரும் சூழ்நிலையில், இரு தலைவரும் உரையாடினர். 2013ஆம் ஆண்டில், சீன-ரஷிய உறவின் வளர்ச்சி மற்றும் பெறப்பட்ட மாபெரும் சாதனைகளை முழுமையாகத் தொகுத்துக் கூறினர். 2014ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்குமிடையில் ஒத்துழைப்புக்கான செயல்நோக்கு வரைவையும் பரவலையும் இரு நாட்டுத் தலைவர்களும் ஏற்பாடுச் செய்துள்ளனர். தவிரவும், முக்கிய சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைக்கான செயல்நோக்கு ஒத்துழைப்பு பற்றியும் இரு தரப்பினரும் முக்கிய ஒத்தக் கருத்துகளை எட்டியுள்ளனர்.

தலைசிறந்த திரைப்பட விருதைப் பெற்ற சீனத் திரைப்படம்

பிப்ரவரி 15ஆம் நாள் நடைபெற்ற 64வது பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில், சீனாவின் திரைப்படங்கள் மூன்று விருதுகளைப் பெற்றன. அவற்றில், தியாவ் யீநான் இயக்கிய பிளாக் கோல் என்னும் திரைப்படம், தங்க கரடி என்னும் தலைசிறந்த திரைப்பட விருதைப் பெற்றது. இவ்விழாவில் வழங்கப்படும் அதியுயர் விருது இதுவாகும். அத்துடன், இத்திரைப்படத்தின் கதாநாயகன் நடிகர் லீயோ ஃபான், வெள்ளி கரடி என்னும் தலைசிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.
-------------------------------------------------------------------------------------------- 64வது பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழா, பிப்ரவரி 6 முதல் 16ஆம் நாள் வரை நடைபெற்றது. 72 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 409 திரைப்படங்கள் இதில் திரையிடப்பட்டன. 20 திரைப்படங்கள் தங்க கரடி, வெள்ளி கரடி ஆகிய விருதுப் பிரிவில் கலந்து கொண்டன. அவற்றில் மூன்று சீனத் திரைப்படங்களாகும்.

உலகில் முதலிடம் வகிக்கிறது சீன தங்க நுகர்வு

கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் தங்க நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2013ஆம் ஆண்டு இந்தியாவை தாண்டி, சீனா, உலகில் மிகப் பெரிய தங்க நுகர்வுச் சந்தையாக இருந்தது. அதேவேளையில், உலகில் மிக விரைவாக வளர்ச்சியடைந்து வரும் தங்க சந்தையாகவும் சீனா ஆகும்.
------------------------------------------------------------------------------------------------ 2013ஆம் ஆண்டு முழுவதும், சீனாவில் தங்க நுகர்வு அளவு 1176.4 டன் ஆகியுள்ளது. ஆயிரம் டன் என்ற அளவை தாண்டுவது அதுவே முதல்முறை. அதன் மூலம் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் சில்லறைத் தொகை கிடைத்துள்ளது.

வைகோ கண்டனம் :அரிசி, பருத்திக்கு சேவை வரி விதிப்பதா?:

வட மாநிலங்களில் விளையும் கோதுமையைத் தவிர்த்துவிட்டு, அரிசிக்கு சேவை வரி விதிப்பது மத்திய அரசின் ஓரவஞ்சனை என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், கூறியுள்ளதாவது: "கடந்த பத்து ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் விலைவாசி கட்டுக்கு அடங்காமல் உயர்ந்து, மக்கள் தாங்கமுடியாத சுமைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ---------------------------------------------------------------------------------------------- விலை ஏற்றத்துக்குக் காரணமான இணையதள வணிகம் மற்றும் சேவை வரி விதிப்பை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கைகளை மத்திய அரசு அலட்சியப்படுத்தியது. 1994 இல் நிதி அமைச்சகச் சட்டத்தின் மூலம் காங்கிரஸ் அரசு நடைமுறைப்படுத்திய சேவை வரிவிதிப்பு முறை இன்று பூதாகர வடிவம் எடுத்துவிட்டது. ---------------------------------------------------------------------------------------------- 1994 இல் சேவை வரிவிதிப்பின் கீழ் மூன்று பொருட்கள் மட்டுமே இருந்தன. தற்போது 120 பொருட்கள் கொண்டு வரப்பட்டு விட்டன. 1994 இல் வெறும் 410 கோடி ரூபாயாக இருந்த சேவை வரி, 2012-2013 நிதி ஆண்டில் 1 இலட்சத்து 32 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உயர்ந்து விட்டது. ---------------------------------------------------------------------------------------------- மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நாட்டு மக்களுக்குச் செய்த அரிய சேவை, 'சேவை வரி' மூலம் மக்களை வாட்டி வதைத்ததுதான். 2012 நிதிநிலை அறிக்கையில், மேலும் சில பொருட்களுக்குச் சேவை வரி விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது, மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கண்டனம் தெரிவித்ததுடன், சேவை வரியையே முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. தற்போது மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் அந்திமக்காலம் நெருங்கிக் கொண்டு இருக்கின்ற வேளையில், மேலும் ஒரு பேரிடியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது மத்திய நிதி அமைச்சர் இறக்கி இருக்கிறார். விவசாய விளை பொருளான அரிசிக்கு, இதுவரை சேவை வரியில் இருந்து விலக்கு தரப்பட்டு இருந்தது. நெல், அரிசியாக்கப்பட்டுச் சேமிக்கப்படுவதாலும், சந்தைப் பண்டமாக மாற்றப்படுவதாலும் இந்த வரி விதிக்கப்படுகிறது என மத்திய நிதி அமைச்சகம் முடிவு எடுத்து உள்ளது. 2012 ஜூலை முதல் இந்த வரியை வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், வட மாநிலங்களில் விளையும் கோதுமைக்குச் சேவை வரி கிடையாது. ---------------------------------------------------------------------------------------------- எனவே இது தமிழ்நாட்டுக்குச் செய்யப்படும் ஓரவஞ்சனை என்பது வெள்ளிடைமலை. மத்திய அரசின் இத்தகைய வஞ்சகப் போக்கை, மறுமலர்ச்சி தி.மு.கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாட்டின் அரிசித் தேவை ஒரு ஆண்டுக்கு சுமார் 80 லட்சம் டன் ஆகும். இதில் சரிபாதி அளவு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இருந்துதான் வருகிறது. 12.36 விழுக்காடு சேவை வரி விதிக்கப்படுமானால், வெளிமாநில அரிசி விலை உயரும். இதனால், சந்தையில் மக்கள் அதிக விலை கொடுத்து அரிசியை வாங்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே மத்திய அரசு அரிசிக்கு விதிக்கின்ற சேவை வரியை இரத்து செய்வது மட்டும் அன்றி, குறைந்தபட்ச அத்தியாவசியப் பண்டங்களுக்கும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தில் மீண்டும் இந்தியா

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மீது சர்வதேச சம்மேளனம் வித்திதிருஇதையடுத்து சோச்சியில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் முக்கிய விளையாட்டு அரங்கில் இந்திய தேசியக் கொடி ஞாயிறன்று ஏற்றி வைக்கப்பட்டது.
சோச்சி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி பத்து நாட்கள் ஆன நிலையில், இந்திய தேசியக் கொடி சோச்சி ஒலிம்பிக்ஸ் விளையாட்டு அரங்கில் ஏற்றப்பட்டுள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் பதவியில் உள்ளனர், அரசு அந்தச் சங்கத்தின் செயல்பாடுகளில் தலையிடுகிறது என்பது உட்பட பல விஷயங்களை சுட்டிக்காட்டி கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச சம்மேளனம் இந்தியச் சங்கத்தை இடை நீக்கம் செய்திருந்தது. பல இழுபறிகளைக் கடந்து இந்த மாதம் ஒன்பதாம் தேதி இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற்று, பெரும்பாலான நிர்வாகிகள் போட்டியின்று தேர்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து புதிதாகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள தலைவரான என் ராமச்சந்திரன், சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் இந்தியச் சங்கத்தின் மீதான தடையை விரைவாக விலக்க வேண்டுமென்று சர்வதேச சம்மேளனத்திடம் கோரியிருந்தார். இறுதியாக இந்தியச் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதை குறிக்கும் வகையில் சோச்சியில் இந்தியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ராமச்சந்திரன், சோச்சியில் பங்குபெறும் மூன்று இந்திய வீரர்கள், இந்திய மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சங்க அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சோச்சி ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இந்தியா பதக்கங்கள் ஏதும் வெல்லவில்லை.ந்த இடைநீக்கம் முடிவுக்கு வந்துள்ளது.

சௌதி பத்திரிகையின் முதல் பெண் ஆசிரியர் நியமனம்

சௌதி அரேபியாவில் ஒரு பத்திரிகையின் முதல் பெண் ஆசிரியராக, சௌதி பத்திரிகையாளர், சொமய்யா ஜாபர்த்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். ---------------------------------------------------------------------------------------------------------------------- சௌதி அரேபியாவின் ஆங்கிலப் பத்திரிகையான, சௌதி கெஜட், அதன் தற்போதைய ஆசிரியரான, காலெத் அல்மயீனாவுக்கு அடுத்தபடியாக, ஜாபர்த்தி பதவி ஏற்பார் என்று தனது இணைய தளத்தில் அறிவித்திருக்கிறது. ---------------------------------------------------------------------------------------------------------------------- ஜாபர்த்தி இந்தப் பதவியைத் தனது திறமையால் பெற்றிருக்கிறார் , அவர் ஒரு மன உறுதியும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட பத்திரிகையாளர் என்று அவரைப் பற்றி தற்போதைய ஆசிரியர் காலெத் அல்மயீனா வர்ணித்திருக்கிறார். ---------------------------------------------------------------------------------------------------------------------- பெண்கள் இது போன்ற தொழில் இடங்களில் வளர்வதற்கு இருந்த ஒரு "கண்ணாடிக் கூரை"யில் ( உச்ச வரம்பு) ஒரு விரிசல் ஏற்படுத்தப்பட்டுவிட்டது, அது உடைக்கப்பட்டுவிட்டது என்ற் ஜாபர்த்தி கூறியிருக்கிறார். ---------------------------------------------------------------------------------------------------------------------- சௌதி அரேபியாவில், பெண்கள் ஆண்களுக்கு சரி சமமாக வேலை செய்வதை பல அதி தீவிர பழமைவாத முஸ்லீம் மதகுருமார்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென நவனீதம்பிள்ளை அறிக்கையில் பரிந்துரை :-

இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையார் நவனீதம்பி;ள்ளை வலியுறுத்தியுள்ளார். ------------------------------------------------------------------------------------------ எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிம்ப பேரவை அமர்வுகளில் நவனீதம்பிள்ளையினால் சமர்ப்பிக்கப்பட உள்ள அறிக்கையின் தகவல்கள் கசிந்துள்ளன. ------------------------------------------------------------------------------------------ இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதே சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற அடிப்படையில் நவனீதம்பிள்ளையின் அறிக்கை அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ------------------------------------------------------------------------------------------ இருபது பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் 74 முக்கிய விடயங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ------------------------------------------------------------------------------------------ இந்த அறிக்கையின் விபரங்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ------------------------------------------------------------------------------------------ அறிக்கையின் ஒவ்வொரு விடயம் தொடர்பிலும் ஆராய்ந்து பதிலளிக்கும் முனைப்புக்களில் வெளிவிவகார அமைச்சு தீவிரம் காட்டி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. ------------------------------------------------------------------------------------------ மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறைமையொன்று அறிமுகம் செய்யப்பட வேண்டுமென நவனீதம்பிள்ளை அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
------------------------------------------------------------------------------------------ அவ்வாறான ஓர் உள்நாட்டு விசாரணைகளை கண்காணிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஏற்றுக்கொள்ளத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ------------------------------------------------------------------------------------------ பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்தல், சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்தல், சட்டவிரோத தடுத்து வைத்தல்களை நிறுத்தல், சிறுபான்மை சமூகம், மதத் தளங்கள் மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதல்களை மேற்கொள்வேரை கைது செய்து தண்டித்தல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை மேற்கொள்ளல்(மன்னார் மனித புதைகுழி உள்ளிட்ட), சர்வதேச தரத்தில் உண்மையைக் கண்டறியும் பொறிமுறைமை ஒன்றை உருவாக்குதல், கடத்தல் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பிலான சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளல், வடக்கில் இராணுவத்தின் பிரசன்னத்தை குறைத்தல், இராணுவ நீதிமன்றங்களினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்தல், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்தல், வெளிநாட்டு பிரதிநிதிகளின் விஜயங்களை தடுக்காமல் இருத்தல், மனித உரிமைப் பேரவையின் தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------ யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்காமல் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------ கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பி;ல் இலங்கை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதிக கவனத்திற்குரிய சவாலாக மாறியுள்ள வடக்கின் விவசாயமும் உணவுப் பாதுகாப்பும் தியாகராஜா நிரோஷ்:-

வடக்கு மாகாணத்தின் உணவுப் பாதுகப்பு என்பது ஓர் சிக்கல் மிக்க நிலைக்குள் சென்றுள்ளது. வடக்கில் பருவமழை பொய்த்துப் போனதனால் தண்ணீரின்றி நெல் வயல்கள் அழிவடைந்துள்ளன. இதன் நட்டத்தினை குறிப்பாக விவசாயிகள் இன்று சுமந்து நிற்கின்றனர். இவ்வாறாக விவசாயிகள் எதிர்கொண்டுள்ள சுமை, எதிர்வரும் மாதத்தில்; அனைத்து மக்களையும் மேலும் பாதிக்கும் ஓர் துர்ப்பாக்கியமாக மாற்றமடைவதற்கான சாத்தியங்களே அதிகமாகவுள்ளன. -------------------------------------------------------------------------------------------------------- பொதுவாக வடக்கு மாகாணம் இன்று காய்கறிவகைகளில் கூட தன்னிறைவை இழந்து சகலவற்றிற்கும் தென்னிலங்கையில் தங்கியிருக்க வேண்டிய சூழல் நிலவுகின்றது. போரின் பின்பான நிலைமைகள் வடக்கின் உற்பத்தியினை வெகுவாகப் பாதித்துள்ளன. தற்போது வடக்கின் பிரதேசங்களில் நுகர்வுக்கான கலாசாரம் ஒன்றே வளர்க்கப்படுகின்றது. எனவே வடக்கு மக்களிடத்தில் உற்பத்திகள் தோன்றக்கூடியதாகவும் அவை சந்தையில் நிலைத்து நிற்க தக்கதாகவும் பாதுகாப்புக்கள் அவசியமாகவுள்ளன. இதற்கு வடமாகாண சபை தனது மேலதிக முழுக்கவனத்தினையும் செலுத்தவேண்டியுள்ளது. இதேவேளை அரசியல் சூழ்நிலைகள் வடக்கு மக்களை நிர்க்கதிக்கு உள்ளாக்குகின்ற நிலையில் காலநிலையும் எமது உற்பத்திகளுக்கு எதிராகவே திசை திரும்புகின்றது என்பது வருந்தத் தக்கதாகும்.
------------------------------------------------------------------------------------------------------- வடக்கு மாகாணத்தில் இம் முறை மழை பொய்த்துப் போனமையினால் ஏராளமான ஏக்கர் வயல்கள் கருகிவிட்டன. இத் தாக்கம் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு என சகல பிரதேசங்களையும் தாக்கும் பிரச்சினையாகவுள்ளது. உதாரணத்திற்கு இம் முறை கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 14,984.7 ஏக்கர் நெல்வயல்கள் நீரின்றி அழிவடைந்துள்ளதாக மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. ------------------------------------------------------------------------------------------------------- இவ் அழிவுக்கு பருவ மழை மழை போதாமை காரணமாகும். குளத்து நீரை நம்பிச் செய்கை பண்ணுப்பட்ட வயல்களும் குளங்கள் வற்றிப் போனதனாலும் விவசாயம் அழிவைச் சந்தித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில், பாரிய நீர்ப்பாசனக் குளங்களின் கீழுள்ள 3530 ஏக்கர்கர் வயல்களும், சிறிய நீர்ப்பாசனக்குளங்களின் கீழுள்ள 815.5 ஏக்கர் வயல்களும், மானாவாரி செய்கையில் செய்கை பண்ணப்பட்ட 10639.20 ஏக்கர்களும் வரட்சியினால் அழிவடைந்துள்ளன. இது போன்றே மன்னாரிலும் வயல் நிலங்கள் கருகிப் போயுள்ளன. யாழ் மாவட்டத்திலும் விவசாயிகள் நெல்விதைப்பிற்காக செலவிட்ட பணத்தினை ஏனும் பெற முடியத நிலையில் உள்ளனர் எனத் தெரிவிக்கின்றனர். இவ்வாறாக மாவட்டங்கள் தோறாகவும் விவசாயிகள் அழிவுகளையே சந்தித்து நிற்கின்றனர். ------------------------------------------------------------------------------------------------------- அழிவடைந்த நெல்லின் பெறுமதியுடன் மாத்திரம் நெற்செய்கை இம் முறை எதிர்கொண்டுள்ள நிலையினை நாம் வரையறுத்துவிட முடியாது. காரணம், அழிவடையாது தப்பிப் பிழைத்துள்ள வயல்களிலும் விளைச்சல் என்பது இம் முறை மிகவும் குறைவாகவே உள்ளமையினையும் கண்டுகொள்ள வேண்டும். வழமையில் ஒரு கெக்டேயரில் 3.5 மெற்றிக் தொன் நெல்விளையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இம்முறை ஏக்கருக்கான விளைச்சல்கள் வெகு குறைவாகவே உள்ளன.------------------------------------------------------------------------------------------------------- தற்போது வடக்கில் அரிசியின் விலை ஏறுமுகத்திலேயே உள்ளது. எனவே இவ் அறுவடையினைத் தொடர்ந்த காலப்பகுதியில் வடக்கில்; அரிசியின் விலை மேலும் எகிறலாம் என்ற நிலையே உள்ளது. எனவே இது தொடர்பில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன. மழை பொய்த்துவிட்டது, அறுவடையில் இலாபமின்மை போன்ற பிரச்சினைகளிடையே அறுவடை செய்யப்பட்ட புதிய நெல்லினை சந்தைப்படுத்துவதிலும் வடக்கில் விவசாயிகளின் நிலை பெரும் திண்டாட்டமாகவேயுள்ளது. வடக்கு மாகாணத்தில் விளைந்துள்ள விளைநெல்லை கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாகக் கொள்வனவு செய்வதற்கான தீர்மானம் ஒன்று கடந்த வாரத்திற்கு முன் ஏற்கனவே விவசாயிகளை பாதுகாக்கும் முகமாகவும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள உணவுத் தட்டுப்பாட்டினைத் தணிக்கும் முகமாகவும் எடுக்கப்பட்டிருந்தது. எனினும் அதனை செயற்படுத்தவதில் சிக்கல்கள் உள்ளதாகவே தெரிகின்றது. ------------------------------------------------------------------------------------------------------- இக் கட்டுரைக்காக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளை கடந்த செவ்வாய்க்கிழமையன்று சந்தித்து நிலைமைகள் அறியப்பட்டன. அக்கராயன்குளம், ஸ்கந்தபுரம், கண்ணகிபுரம் போன்ற வயல்கள் நிறைந்த பகுதிகளுக்குச் சென்றே நிலைமைகள் அவதானிக்கப்பட்டன. இங்கு விவசாயிகள், அறுவடை செய்யும் நெல்லை உரிய விலைக்குச் சந்தைப்படுத்த முடியாதவர்களாக தனியார் நெல் கொள்வனவாளர்களிடம்; அவர்கள் திண்டாடுகின்றனர். அறுவடை நிறைவுறும் நிலையில் நெல் மூட்டைகளை வீதிகளில் வைத்த வண்ணம் யாராவது வியாபரிகள் வருவார்களா என விவசாயிகள் எதிர்பார்த்திருக்கின்றனர். குறித்த பிரதேசத்தில் தனியார் வர்த்தகர்களின் பார ஊர்திகள் சிற்சில இடங்களில் நெற் கொள்வனவில் ஈடுபடுகின்றன. இம் முறைய நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏன் விவசாயிகள் அவ்வாறாக விளை நெல்லை விற்பனை செய்யத் திண்டாட வேண்டும் என்ற கேள்வி இவ்விடத்தில் இயல்பானது. ------------------------------------------------------------------------------------------------------- வன்னியில் உள்ள விவசாயிகள்; அறுவடை செய்யும் நெல்லை, உரிய விலை கிட்டும் வரையில் பாதுகாத்து விற்பனை செய்ய முடியாதவர்களாக உள்ளனர். நெல்லை உலர விடுவதற்கோ அதனை பாதுகாத்து களஞ்சியப்படுத்தி விற்பனை செய்வதற்கோ அவர்களிடம் எவ்வித வசதிகளும் இல்லை. இந்நிலையில் ஏதோ தென்பகுதி பாரஊர்திகளுக்கு விற்றுத் தீர்ப்பதே அவர்கள் முன்னுள்ள இன்றைய தெரிவாகவுள்ளது. ------------------------------------------------------------------------------------------------------- விவசாயிகளை பொருத்தளவில் ஆண்டு தோறும் அறுவடை நெல்லினை சந்தைப்படுத்துவதில் இடர்பாடுகளை எதிர்கொண்டேயாகவேண்டியுள்ளது. கடந்த வருடமும் நெல் விற்பனை நிலையங்கள் ஊடாக நெல் கொள்னவு செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதும் அவை பெருந்தாமதங்கள் இழுபறிகளின் மத்தியிலேயே நடைபெற்று முடிந்தன. ------------------------------------------------------------------------------------------------------- கூட்டுறவுச் சங்கங்கள் அரச அதிபர்களினால் வட்டியின்றி வழங்கப்படும் பணத்தினைக் கொண்டே வழமையில் நெல் கொள்வனவுகளில் ஈடுபடுகின்றன. இந் நிலையில் இம் முறை அரச அதிபர்களால் கூட்டுறவுக்கு வழங்கப்படும் கடன்களை விரைவு படுத்துவதற்கும் அது போதாத பட்சத்தில் வங்கிகளில் இருந்தாவது கூட்டுறவு சங்கங்கள் கடன்களைப் பெற ஆவன செய்யவேண்டும் எனவும் வட மாகாணத்தில் ஏற்கனவே முடிவுகள் எட்டப்பட்டு இருந்தன. இந்த இடத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் தாம் கொள்வனவு செய்யவுள்ள நெல்லை உலர விடுதல், களஞ்சியப்படுத்தல் போன்றன வசதிகள் இன்மையே தமது நடவடிக்கையினைப் பாதிக்கும் என வட மாகாண விவசாய அமைச்சர் பெ. ஐங்கரநேசன் உடன் முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில் சுட்டிக்காட்டியிருந்தன. எனினும் வட மாகாண விவசாய அமைச்சர் இருக்கின்ற வசதிகளைப் பயன் படுத்தி உச்ச பட்ட அளவில் நெல்லைக் கொள்வனவு செய்யவே பணித்திருநதார். எனினும் நடைமுறையில் தான் இவைகள் பலனளிக்கவில்லை என்றே வயல்களுக்குச் செல்லும் போது தெரிகின்றது. ------------------------------------------------------------------------------------------------------- அறுவடை என்பது ஏற்கனவே அறியப்பட்ட ஓர் விடயம். காலநிலை போன்று கூறுவதற்கு நிச்சயமற்ற ஓர் விடயமன்று. எனவே அதிகாரிகளும் அரசியல் தலைமைகளும் விளைநெல்லைக் கொள்வனவு செய்யும் விடயத்தில் பல நாட்களுக்கு முன்னரே கொள்கைகளை வகுத்து தீர்மானங்களை எடுத்திருக்க முடியும். அதற்கு ஏற்றால் போல் செயல் வடிவங்களும் அவர்களால் வழங்கப்பட்டிருந்தால் அறுவடையின் பின்பாக இவ்வாறாக விவசாயிகள் திண்டாடும் நிலைமையினைத் தவிர்த்திருக்கலாம். அதன் மூலம் விவசாயிகளின் நலன்களை அதிகளவில் பாதுகாத்திருக்கலாம். ------------------------------------------------------------------------------------------------------- இக் கட்டுரைக்குக் விவசாயிகள் இன்று எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் குறித்து கருத்துரைத்த கிளிநொச்சி மாவட்ட கமக்காரர் அமைப்பின் செயலாளர் ம. புவனேந்திரன், இங்கு விளையும் நெல்லுக்கு உரிய விலை கொடுத்து கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்திடம் இருந்து கிடையாது. அதேவேளை கூட்டுறவுத்துறையும் எம்மிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதில் பிரச்சினைகளை எதிர்கொண்டே உள்ளன என்கின்றார். அவர் மேலும், கூட்டுறவுத்துறையிடம் களஞ்சிய வசதி, நெல்லை கொள்வனவு செய்து அரிசியாக்குவதற்கான ஆலைகள் இல்லை. நெல் சந்தைப்படுத்தும் சபையின் வரையரைக்கு ஏற்ப விளை நெல்லை காயவைத்து பதப்படுத்தி விவசாயிகளான எம்மாலும் விற்பனை செய்ய வசதிகள் இல்லை. நடைபெற்ற யுத்தம் எம்மை சகலவழியிலும் நிர்க்கதியாக்கியுள்ளது. இந் நிலையில் நாம் பாடுபட்டு விதைத்த நெல்லை நட்டத்தில் தான் விற்கின்றோம் என்கின்றார். ------------------------------------------------------------------------------------------------------- இவ்வாறான நிலைமைகளால் யுத்தத்தின் பின்னர் விவசாயத்திற்காக தாம் பெற்ற கடன்களைக் கூட் செலுத்த முடியாதவர்களாகவுள்ளதாகவும் விவசாயத்திற்காக தவணைக்கட்டண முறையில் கொள்வனவு செய்த வாகனங்களுக்கு கூட தவணைக் கட்டணம் செலுத்த வழியின்றி அவற்றினை தாம் இழந்து வருகின்றோம் எனவும் குறித்துக்காட்டுகின்றார். இவ்வாறாக விவசாயிகளின் பிரச்சினைகள் நிறைந்துள்ள இடத்தில் அவற்றிகான தீர்வுகள் விரைவாக வேண்டப்பட்டனவாகவே உணரப்படுகின்றன. ------------------------------------------------------------------------------------------------------- வடக்கினைப் பொருத்தளவில் விவசாயத்துறையிலும் ஏனைய துறைகளைப் போலவே பல்வேறுபட்ட பிரச்சினைகள் நிறைந்துள்ளன. கடந்த காலத்தில் வயல்களில் கூலி வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் இன்று வேலையற்றுள்ளனர். இதில் பெண்களே வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்குக் காரணம், வடக்கில் வியாபாரத்தினை விஸ்தரித்த லீசிங் கம்பனிகள் தமது வியாபாரத்தினை மாத்திரம் கருத்தில் கொண்டு அனேக நில உடமையாளர்களிடம் இயந்திரசாதனங்களை விற்றுத் தீர்த்துள்ளன. இதன் தாக்கம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலையற்றவர்களாக்கப்படடுள்ளனர். எனவே விவசாயத்தில் தொழில்நுட்பங்களை ஏற்படுத்துவது வரவேற்கத்தக்க அதேசமயம் விவசாயத்தினை இயந்திர மயமாக்கலில் சரியான ஓர் கொள்கையும் பிரதேசங்களுக்கு ஏற்றவாறு வகுக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. இவ்வாறான பட்சத்திலேயே எம்மால் எதிர்காலத்தில் தொழிலாளர் வளத்திற்கும் இயந்திர வளத்திற்குமிடையில் ஓர் சமநிலையைப் பேணமுடியும். ------------------------------------------------------------------------------------------------------- உற்பத்தியாளர்களையும் நுகர்வோரையும் பாதிக்காதவாறு நெல் உட்பட ஏனைய விவசாய விளை பொருட்களுக்கு விலைக்கொள்கையும் அவசியம் தேவையாகவுள்ளன. போரினால் பாதிக்கப்பட்டவர்களது பிரதேச உற்பத்திகள் தென்னிலங்கை உற்பத்திகளுடன் போட்டியிடுவதிலும்; சலுகைகள் தேவையாகவுள்ளன. மேலும், எமது பிரதேசங்களில்; காலநிலை அதிகபடியாக விவசாயத்தினை பாதிக்கின்றது. இந்நிலையில் விவசாயிகள் சகலரும் பாதிக்கப்படாதவாறு விவசாயத்தில் ஈடுபடத்தக்கதான பாசன வசதியும் தண்ணீர் முகாமை பற்றியும் சிந்திக்கவேண்டியுள்ளது. ------------------------------------------------------------------------------------------------------- விவசாயத்திற்கான ஆற்றல் இருந்தும் காணி இன்றி கூலிவேலைகள் தேடி அலையும் மக்களுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுத்து அவர்களை தொழில் வருமானம் உள்ளவர்களாக பாதுகாக்கவேண்டிய தேவையும் எம்மிடத்தில் உள்ளது. விவசாயத்தின் தன்னிறைவு எமக்குத் தேவையாகவுள்ள அதேயிடத்தில், தன்னிறைவு அடைவதில் ஏற்படும் செலவுகளையும் நலன்களையும் நுணுக்கமாக ஆராய்ந்து சிக்கனமற்ற வகையில் மேற்கொள்ளப்படும் விவசாய முறைகளை முகாமைசெய்ய வேண்டிய தேவைகளும் எம்மிடத்தில் கணிசமாக உள்ளன.

பிறநாடுகளின் உளவுபார்க்கும் செயல் ஜேர்மனில் மிகவும் கடுமையாக அமையுமென ஜேர்மன் அரசு தெரிவித்துள்ளது.

ஜேர்மன் மண்ணில் இனி வரும் காலங்களில் பிறநாடுகளின் உளவுபார்க்கும் செயல் மிகவும் கடுமையாக அமையுமென ஜேர்மன் அரசு தெரிவித்துள்ளது. ------------------------------------------------------------------------------------------------------ தூதராலயங்களின் செய்திப் பிரிவிற் கடமையாற்றும் சகலரினதும் விபரங்கள் திரட்டப்பட இருப்பதோடு, தூதராலயம் இயங்கும் கட்டிடத்திலுள்ள சகல தொழிற்நுட்பக் கருவிகள் பற்றிய முழு விபரங்களையும் பெறுவதற்கான உரிமைகளோடு தடையின்றி செயற்படவல்ல அதிகாரம் பெற்ற அரசாங்கப் பிரதிநிதிகள் கடமையிலீடுபடுத்தப்படுவர். ------------------------------------------------------------------------------------------------------ அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட்ட சகல நட்பு நாடுகளின் செயற்பாடுகளும், அவற்றின் மூலத்திலிருந்து கவனிக்கப்படுமெனவும், ஜேர்மன் மண்ணில் உளவு பார்த்தல் இடம்பெறாதிருக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படுமெனவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ------------------------------------------------------------------------------------------------------ உள்விவகார, வெளிவிவகார அலுவலகங்களினதும், அங்கலா மேர்க்கலின் அலுவலகத்தினதும் இறுதி அரசியல் முடிவின் பின் நடவடிக்கைகள் ஆரம்பமாகும். அங்கலா மேர்க்கலின் கைத்தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்ட நாளிலிருந்து உளவு பார்ப்பதை முழுமையாகத் தவிர்க்கும் ஒப்பந்தமொன்றை அமெரிக்காவுடன் ஏற்படுத்த முயன்ற ஜேர்மன் அரசிற்கு வெற்றி கிட்டாது போனது. ------------------------------------------------------------------------------------------------------ ஆபத்து ஏற்படும் சமயம் பாதுகாத்துக்கொள்வது கடமையாகிறதென்றும், நட்புப் பாராட்டும் நாடுகளும் ஆபத்தை விளைவிக்கலாமெனும் எண்ணத்தோடு சகலரையும் கண்காணிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், உள்நாட்டுப் பாதுகாப்பு வல்லுனரான மைக்கல் கா(H)ட்மான் தெரிவித்துள்ளார். ------------------------------------------------------------------------------------------------------ தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்கும் பிறநாடுகளின் அரசியல் நெருக்கடி, ஆபத்திலிருந்து தப்பிக்க இவ்வுலகில் தற்பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்று வேறு எதுவும் உதவாதெனும் முடிவிற்கு ஜேர்மன் நாட்டைத்தள்ளி, நட்பு நாடுகளையும் அவதானமாகக் கண்காணிக்கும் நிலையை உருவாக்கியுள்ளதாக ஜேர்மன் பாராளுமன்ற சகல அங்கத்தவரும் கருதுகின்றனர்.

எகிப்த்தில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்கின்றன-

எகிப்த்தில் இடம் பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உல்லாசப் பயணிகளின் பேரூந்து தாக்கப்பட்டு சாரதியுட்பட நான்கு பிரயாணிகள் மரணமடைந்ததோடு 14 பேர் காயமுற்றுள்ளனர். இறந்தவர்களில் மூன்றுபேர் தென்கொரியாவைச் சேர்ந்தவர்களென்றும், இச் சம்பவம் இஸ்ரேலின் எல்லைப்புறத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் எகிப்த்து நாட்டின் வெளிவிவகாரச் செயலர் அலுவலகம் தெரிவிக்கிறது. --------------------------------------------------------------------------------------------- எகிப்த்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொகமட் மூர்ஸி கைதான காலத்திலிருந்து அங்கு குண்டு வெடிப்புகள் இடம் பெற்ற வண்ணமுள்ளன. நேற்றைய ஞாயிற்றுக்கிழமை முன்னைய ஜனாதிபதி வானூர்த்தி (Helicopter) மூலம் விசாரணைக்கென கொண்டுவரப்பட்டு, விசாரணை 23.02 வரை பின் போடப்பட்டது. வன்முறைகளில் ஈடுபட்டு நாட்டைக் காட்டிக்கொடுக்கும் சதிவேலைகளை முன்னெடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மூர்ஸி வெளியில் சப்தம் வரமுடியாத கண்ணாடிக் கூண்டினுள் அடைக்கப்பட்டு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார். --------------------------------------------------------------------------------------------- அவர் பேசிய எதையும் புரிந்துகொள்ள முடியவில்லையென அவரின் சட்டதரணி தெரிவித்தார். நீதிபதி அணிந்திருக்கும் Ear-Phone கருவி மூலம் மட்டும் மூர்ஸியின் உரையாடலை நீதிபதியால் கேட்க முடியும். சென்ற முறை விசாரணைக்கு அழைத்து வரப்பட்டபோது மூர்ஸி கூக்குரலிட்டு எதிர்ப்பைத் தெரிவித்ததன் விளைவால் இம்முறை கண்ணாடிக் கூண்டுக்குள் மூர்ஸியைக் கொண்டு வரவேண்டியதாயிற்றென அங்கு கடமையிலிருக்கும் இராணுவ அதிகாரி தெரிவித்தார். சென்ற வருடம் July மாதம் இராணுவப் புரட்சி மூலம் மூர்ஸியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஜனாதிபதி மூர்ஸி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். மூர்ஸிமேல் சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்கள் சகலதும் கடும் பாதகமான தீர்ப்பைக் கொண்டுவரக் கூடியவையென சட்டத்தரணிகள் கூறுகின்றனர். மூர்ஸியின் ஆதரவாளரிற்கும் எதிரணியினரிற்குமிடையே. ஜனாதிபதி மாளிகை முன்பாக 2012 இல் இடம் பெற்ற கலவரத்தில் இறந்த பத்துப்பேரின் மரணத்திற்கும் இவருக்கும் பங்குப் பொறுப்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முன்னைய ஜனாதிபதி அந்நாட்டில் ஒரு பயங்கரவாதியைப்போல் கையாளப்படுகிறார். --------------------------------------------------------------------------------------------- மூர்ஸியின் வீழ்ச்சிக்குப்பின் எகிப்தில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்ந்து இடம் பெறுகின்றன. முஸ்லீம்களின் இரு பிரிவினருக்கிடையே இடம் பெறும் புனிதப்போர் எகிப்தின் அழகையும், நின்மதியையும் குலைத்து நிற்கிறது.