Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Sunday, February 16, 2014

ஐபிஎல்: கெவின் பீட்டர்சன் 9 கோடி ரூபாய்க்கு ஏலம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியிலிருந்து சில நாட்களுக்கு முன்பு நீக்கப்பட்ட கெவின் பீட்டர்சன், வரும் ஐபிஎல் போட்டிகளில் ஆட, டில்லி டேர்டெவில்ஸ் அணியால் 9 கோடி ரூபாய்க்கு ( 1.5 மிலியன் அமெரிக்க டாலர்கள்) ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறார். ---------------------------------------------------------------------------------------------------------------- கடந்த வாரம்தான் அவர் ஆஸ்திரேலியாவுடன் இங்கிலாந்து விளையாடி, 5-0 என்ற கணக்கில் தோற்ற ஆஷஸ் போட்டித் தொடரை அடுத்து இங்கிலாந்து அணியிலிருந்து கழற்றி விடப்பட்டிருந்தார். ---------------------------------------------------------------------------------------------------------------- அவர் இப்போது எதிர்வரும் ஏழாவது ஐபிஎல் போட்டிகள் எல்லாவற்றிலும் டில்லி டேர் டெவில்ஸ் அணிக்காக ஆடுவார். ---------------------------------------------------------------------------------------------------------------- இந்தியாவின் யுவ்ராஜ் சிங் பெங்களுர் ஐபிஎல் அணியான, ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் இதை விட அதிகத் தொகைக்கு, 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். ---------------------------------------------------------------------------------------------------------------- பெங்களூரில் நடந்து வரும் இந்த சுற்று ஐபிஎல் ஏலங்களில் மொத்தம் 514 கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் ஏலத்தில் விடப்படுகிறார்கள். இம்முறை ஏலம் இந்திய ரூபாயில் ---------------------------------------------------------------------------------------------------------------- ஒவ்வொரு ஐபிஎல் அணியும் 60 கோடி ரூபாய் வரை ஏலத்தில் செலவிடலாம் என்ற வரம்பு இருக்கிறது. ---------------------------------------------------------------------------------------------------------------- இந்த ஆண்டு அமெரிக்க டாலர்களில் அல்லாமல், இந்திய ரூபாய்களிலேயே ஏலம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ---------------------------------------------------------------------------------------------------------------- புதன்கிழமை நடந்த இந்த முதல் சுற்று ஏலங்களில் ஏலத்துக்கு எடுக்கப்பட்ட மற்ற கிரிக்கெட் வீரர்களில் ஆஸ்திரேலியாவின் மிட்ச்செல் ஜான்சன் ( 6.5 கோடி ரூபாய், பஞ்சாப் கிங்ஸ் அணி) மற்றும் டேவிட் வார்னர் ( 5.5. கோடி ரூபாய், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி), தென்னாப்ரிக்காவின் ஜாக் காலிஸ் ( 5.5 கோடி ரூபாய், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி), இந்தியாவின் வீரேந்தர் சேவாக் ( 3.2 கோடி ரூபாய் , பஞ்சாப் கிங்ஸ் அணி) , ஆகியோர் அடங்குவர். ---------------------------------------------------------------------------------------------------------------- கடந்த ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் ஏலங்களில் மிக அதிக தொகைக்கு ஏலம் போனவர் இந்தியாவின் கௌதம் கம்பீர். 2011ல் நடந்த ஏலத்தில் அவர் 2.4 மிலியன் டாலர்களுக்கு ஏலம் போனார். ---------------------------------------------------------------------------------------------------------------- ஆனால் ஏலத்தொகை ஏறக்குறைய மும்மடங்காகி விட்டாலும், ஐபிஎல் கிளப்புகளின் வருவாயில் லாபம் அதே அளவு அதிகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ---------------------------------------------------------------------------------------------------------------- இந்தப் போட்டியில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுகளும், போட்டிகளின் நற்பெயரைப் பாதித்துள்ளன என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள். ---------------------------------------------------------------------------------------------------------------- ஐபிஎல் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி மே மாதம் 30ம் தேதி வரை நடக்கின்றன.

திருச்சியில் நேற்றைய டாஸ்மாக் வசூல் 7 கோடி .......?

திருச்சி, தி.மு.க., மாநாட்டு பந்தலில், நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குடிபோதையில் ஆட்டம் போட்டதால், ஆவேசமடைந்த முன்னாள் அமைச்சர் நேரு, வேட்டியை மடித்துக் கட்டி, கட்சியினரை அடிக்கப் பாய்ந்தார். அதில், ஒரு தொண்டர், அவரை திட்டியதால், நேருவின் ஆதரவாளர்கள் செருப்பால் அடித்து, உதைத்தனர். --------------------------------------------------------------------------------------------- திருச்சியில், தி.மு.க.,வின் 10வது மாநில மாநாடு நேற்று துவங்கியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், மாநாட்டுக்கு வந்திருந்தனர். காலையில் நிகழ்ச்சி முடிவடைந்ததும், மாலை, 2:00 மணிக்கு உணவு இடைவேளை விடப்பட்டது. மீண்டும் மாநாடு துவங்கியபோது, உணவருந்தி விட்டு வந்த தொண்டர்கள் பலர், போதையில் இருந்ததை காண முடிந்தது. நாட்டுப்புறப் பாடலுக்கு ஏற்ப குத்தாட்டம் ஆடி குஷியடைந்தனர். மேடையிலும், மேடையின் முன்புறத்திலும் நின்று கொண்டு, அவர்கள் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியாமல், நிர்வாகிகள் திணறினர். போலீஸ் பாதுகாப்பும் இல்லாததால், கட்சியின் தொண்டர் படையினர் மூலம் விரட்டினர். ஆனால், அவர்களால் தொண்டர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, வேலு, கே.என்.நேரு, பூண்டி கலைவாணன் ஆகியோர் விரட்டிப் பார்த்தும் அகலவில்லை. இந்நிலையில், கே.என்.நேரு, தன்னுடைய ஆதரவாளர்களுடன் வந்து, தொண்டர்களை அங்கிருந்து விரட்டினார். அப்போது, ஒரு தொண்டர், நேருவை எதிர்த்து பேசியதுடன், போதையில் திட்டினார். ஆத்திரமடைந்த நேரு, தடுப்பை மீறிச்சென்று, வேட்டியை மடித்துக் கொண்டு, அந்த தொண்டரை அடித்தார். உடன், நேருவின் ஆதரவாளர்களும் சூழ்ந்து கொண்டு, செருப்பால் தொண்டரை அடித்து, உதைத்தனர். மேடையில் இருந்த ஸ்டாலின், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆனால், கடைசி வரை கூட்டத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. தொண்டர்களின் கோஷத்தால், மாநாட்டு வளாகம் இரைச்சல் காடாக மாறியது. செய்தி சேகரிக்க முடியாமல், பத்திரிகையாளர்கள் அனைவரும் திணறினர். --------------------------------------------------------------------------------------------- -பத்திரிக்கை செய்தி...... ---------------------------------------------------------------------------------------------

தெலங்கானா பிரிவினை: ஆந்திராவில் பதற்றம் நீடிக்கிறது

ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலங்கானா என்கிற புதுமாநிலத்தை உருவாக்கும் மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதை எதிர்த்து சீமாந்திரா பகுதியில் தொடர்ந்தும் பதற்றம் நிலவுவதாக கூறுகிறார் ஹைத்ராபாதில் உள்ள மூத்த செய்தியாளர் உமாசுதிர்

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த இலங்கை மீனவருக்குத் தடை

இலங்கையில் அதிகாரபூர்வமாகத் தடைசெய்யப்பட்டுள்ள மீன்பிடி தொழில் முறைகளை பிப்ரவரி 15 ஆம் தேதியுடன் யாழ் மீனவர்கள் கைவிடவேண்டுமென யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியான்பிள்ளை கெடு விதித்திருக்கிறார். ----------------------------------------------------------------------------------------------------------------------- இலங்கையில் அதிகாரபூர்வமாகத் தடைசெய்யப்பட்டுள்ள மீன்பிடி தொழில் முறைகளை இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறிப் பிரவேசித்துப் பயன்படுத்துவதனால், இருநாட்டு மீனவர்களுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் இன்றைய காலக்கெடு விதிக்கப்பட்டிருக்கிறது. ----------------------------------------------------------------------------------------------------------------------- பிப்ரவரி 15 ஆம் தேதியுடன் தடைசெய்யப்பட்டுள்ள தொழில் முறைகளை மீனவர்கள் கைவிட வேண்டும். அவ்வாறு கைவிடாவிட்டால், கடற்தொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், காவல்துறையினர், கடற்படையினர் ஆகியோரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கு எதிராகக்கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார். ----------------------------------------------------------------------------------------------------------------------- "ட்ரோலிங் தொழில், தங்கூசி வலை, சுருக்கு வலைகளைப் பயன்படுத்துதல், குழைபோட்டு கணவாய் பிடித்தல், வெடிபோட்டு மீன்பிடித்தல், கம்பியால் குத்தி மீன்பிடித்தல் போன்ற தொழில் முறைகள் இலங்கை அரசால் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இவற்றை, பல மீனவர்கள் பயன்படுத்துகின்றார்கள். எனவே தான் அவற்றைக் கைவிட்டு ஏனைய தொழில் முறைகளைப் பயன்படுத்துமாறு கோரியிருக்கின்றோம்" என்றார் எமிலியான்பிள்ளை. ----------------------------------------------------------------------------------------------------------------------- இலங்கை மீனவர்களுக்கு மட்டுமே, இந்த எச்சரிக்கை செய்யப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கக் கூடாது என்பதே தமது கோரிக்கை என்றும் குறிப்பிட்டார். ----------------------------------------------------------------------------------------------------------------------- இதனிடையே, ஜனவரி மாதம் 9 ஆம் தேதி இந்திய கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி அந்தோனிப்பிள்ளை எமிலியான்பிள்ளையின் தலைமையிலான மீனவர் சங்கப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணை தூதரக அதிகாரிகளிடம் மகஜர் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.----------------------------------------------------------------------------------------------------------------------- "அண்மையில் செய்து கொள்ளப்பட்டுள்ள இலங்கை இந்திய மீனவர்களின் ஒப்பந்தத்தில், கைது செய்யப்படுகின்ற இருநாட்டு மீனவர்களையும் விடுதலை செய்வதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் எமது மீனவர்கள் கைது செய்யபட்டு பல வாரங்கள் ஆகிவிட்ட போதிலும் இந்திய அதிகாரிகளினால் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. இதனால்தான் நாங்கள் எமது மீனவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மகஜர் கையளித்திருக்கின்றோம்" என பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் அந்தோனிப்பிள்ளை எமிலியான்பிள்ளை.-----------------------------------------------------------------------------------------------------------------------

முழுமையான 13-ம் திருத்தத்துக்கு ஜனாதிபதி தயாரில்லை': வாசுதேவ

இலங்கையில் மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் '13-ம் அரசியலமைப்பின் முழுமையான அமுலாக்கலுக்கு அரசாங்கம், குறிப்பாக ஜனாதிபதி, தயாராக இல்லை' என்று சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறுகிறார். ---------------------------------------------------------------------------------------------------------------------- நாட்டில் 13-ம் அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவாக உள்ள சில அரசியல் தலைவர்கள், கல்விமான்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை அழைத்து சமூக நல்லிணக்க அமைச்சு நடத்தியுள்ள சந்திப்பு தொடர்பில் தமிழோசை எழுப்பிய கேள்வியின்போதே, அமைச்சர் வாசுதேவ இவ்வாறு தெரிவித்தார். ---------------------------------------------------------------------------------------------------------------------- ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் பற்றியும் அதனால் இலங்கை எதிர்நோக்கக்கூடிய சூழ்நிலை குறித்தும் இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். ---------------------------------------------------------------------------------------------------------------------- 'இப்போதுள்ள மனித உரிமைகள் பேரவையின் கட்டமைப்பின்படி, எந்தெந்த நாடுகள்-என்னென்ன வகையான நிலைப்பாடுகளை எடுக்கும் என்பது போன்ற விடயங்கள் குறித்தும் இலங்கை மீது ஏதாவது தடைகள் விதிக்கப்படக்கூடிய நிலைமை ஏற்படுமா?, இல்லாவிட்டால் இலங்கையை பணிக்கின்ற வெறும் தீர்மானமாக மட்டும் அது அமையுமா?, இல்லாவிட்டால் ஐநா ஊடாக தனியான ஒரு சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிக்கும் நிலை ஏற்படுமா போன்ற நிலைமைகள் எல்லாம் இங்கு அலசி ஆராயப்பட்டன' என்றார் என்றார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார. ---------------------------------------------------------------------------------------------------------------------- அத்தோடு, இந்த சந்திப்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் 13-ம் அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்கள் என்றும் அமைச்சர் கூறினார். ---------------------------------------------------------------------------------------------------------------------- அப்படியென்றால், 13-ம் அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவேண்டியது தானே. இப்படியான கோரிக்கைக்கு ஏன் அரசாங்கம் இன்னும் செவிசாய்க்கவில்லை என்றும் சமூக நல்லிணக்க அமைச்சரிடம் தமிழோசை வினவியது.------------------------------------------------------------------------------------------------------------------------ ஜெனீவாவில் இந்தியா என்ன நிலைப்பாடு எடுக்கும்? ----------------------------------------------------------------------------------------------------------------------------------- அரசாங்கம் இன்னும் அதற்கு தயாராக இல்லையே.. அரசாங்கம் என்றால் ஜனாதிபதி.. அவர் தான் இன்னும் அதற்குத் தயாராக இல்லை' என்று பதிலளித்த அமைச்சரிடம் ஜனாதிபதி ஏன் தயாராக இல்லை என்று மீண்டும் தமிழோசை வினவியது. -------------------------------------------------------------------------------------------------------------------------------- 'அதற்கான முழுமையான காரணம் எனக்குத் தெரியாது. அவரது நிலைப்பாட்டின்படி தான் இந்த நிலைமை உள்ளது. இந்த 13-ம் அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி சில கருத்துக்களை கொண்டிருக்கிறார்' என்று பதிலளித்தார் வாசுதேவ. -------------------------------------------------------------------------------------------------------------------------------- இருந்தாலும் குறைந்தபட்சம் மற்ற மாகாணசபைகளுக்கு உள்ள அதிகாரங்களையாவது வடக்கு மாகாணசபையிலும் கிழக்கு மாகாணசபையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தம்மைப் போன்வர்கள் தொடர்ந்தும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். -------------------------------------------------------------------------------------------------------------------------------- இந்தியா உள்ளிட்ட இலங்கையின் நட்பு நாடுகளை ஜெனீவாவில் இலங்கைக்கு சாதகமாக இணங்க வைக்க வேண்டியிருக்கிறது என்றும் குறித்த புத்திஜீவிகளின் கூட்டத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாகவும் வாசுதேவ தெரிவித்தார். -------------------------------------------------------------------------------------------------------------------------------- அப்படியென்றால், இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படுகின்ற தீர்மானத்திற்கு எதிராக, அதாவது இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாடா இந்தக் கூட்டத்தில் பொதுவாக வெளிப்பட்டது என்றும் தமிழோசை அமைச்சரிடம் கேட்டது. -------------------------------------------------------------------------------------------------------------------------------- 'இந்தியா என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்று எங்களுக்கு இன்னும் தெரியாது. இந்தியா சிலவேளை அமெரிக்காவுக்கு ஆதரவாக- குறித்த தீர்மானத்தை ஆதரிக்கும் என்று சில ஊகங்கள் வந்தன' என்றார் அமைச்சர். -------------------------------------------------------------------------------------------------------------------------------- அதேநேரம், 'அமெரிக்காவிடமிருந்து வரக்கூடிய தீர்மானத்தின் பாரதூரமான செறிவைக் குறைத்து, இலங்கைக்கு சாதகமான நிலையை உருவாக்க இந்தியாவால் தான் முடியும்' என்றும் சிலர் வாதிட்டதாகவும் தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் கூறினார். -------------------------------------------------------------------------------------------------------------------------------- வெளிநாட்டுக் கொள்கையாக இந்தியாவுடன் இலங்கை ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும், அப்படி இல்லாவிட்டால் எதிர்காலத்தில் இலங்கையால் எதனையும் செய்ய முடியாமல் போய்விடும் என்றும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியதாகவும் அமைச்சர் தமிழோசையிடம் மேலும் தெரிவித்தார். -------------------------------------------------------------------------------------------------------------------------------- இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, ரெஜினோல்ட் குரே, டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோரும் இலங்கையின் முன்னாள் இராஜதந்திரிகளான தயான் ஜயதிலக்க, தமரா குணநாயகம் மற்றும் குமார் ரூபசிங்க உள்ளிட்ட புத்திஜீவிகளும் கலந்துகொண்டுள்ளனர். ---------------------------------------------------------------------------------------------

அர்விந்த் கேஜ்ரிவால் ராஜினாமா: ஆம்ஆத்மிக்கு அரசியல் லாபமே”

ஆம் ஆத்மி ஆட்சியின் ஊழல் தடுப்புக்கான ஜன் லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனதால் டில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பதவி விலகியிருப்பது அவருக்கு அரசியலில் லாபமே என்கிறார் பிடிஐ செய்தி நிறுவன ஆசிரியர் சந்திரசேகரன்

இலங்கையின் காணிப் பிரச்சினைகள் குறித்து கண்காணிக்கப்படும் - பிரித்தானியா

இலங்கையின் காணிப் பிரச்சினைகள் குறித்து கண்காணிக்கப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. ----------------------------------------------------------------------------------------------------------------------------- இலங்கையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் விவகாரம் மற்றும் காணிப் பிரச்சினைகள் குறித்து கண்காணிக்கப்படும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் தெரிவித்துள்ளார். ----------------------------------------------------------------------------------------------------------------------------- பிரச்சினைகளுக்கு நீண்ட கால அடிப்படையில் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். ----------------------------------------------------------------------------------------------------------------------------- இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ----------------------------------------------------------------------------------------------------------------------------- வடக்கில் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். ----------------------------------------------------------------------------------------------------------------------------- வடக்கில் பொதுமக்கள் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ----------------------------------------------------------------------------------------------------------------------------- உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் முழு அளவில் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் சென்றால் பஸ் வண்டி எரிக்கப்படும். நீங்கள் சுடப்படுவீர்கள் ....

தேசிய மீனவ ஒத்துழைப்புப்பேரவையின் அனுசரணையுடன் சனிக்கிழமை (15-02-2014) யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திற்கு கலந்து கொள்ளுவதற்காக மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற மக்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார். ----------------------------------------------------------------------------------------------------------------------- மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவ பிரதிநிதிகள், காணாமல் போனவர்களின் பிரதிநிதிகள், பாதீக்கப்பட்ட மீனவர்கள் என சுமார் 110 பேர் இன்று சனிக்கிழமை காலை 6 மணியளவில் மன்னாரில் இருந்து இரண்டு தனியார் பேரூந்துகளில் யாழ்ப்பாணம் செல்ல விருந்த போதும் இன்று காலை புலனாய்வுத்துறையினர் குறித்த பஸ்ஸின் நடத்துனர், சாரதிகளுக்கு நேரடியாகவும், தொலைபேசியூடாகவும் அச்சுருத்தல்களை விடுத்திருந்தனர்.இவர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டாம். அழைத்துச் சென்றால் என்ன நடக்கும் என்று தெரியாது என அச்சுறுத்தியுள்ளனர். ----------------------------------------------------------------------------------------------------------------------- எனினும் இவர்கள் தமது பயணத்தை தொடர்ந்த போது மன்னார்-சங்குப்பிட்டி பிரதான வீதி இலுப்பக்கடவையில் உள்ள உணவகத்தில் காலை உணவை உற்கொள்ள இறங்கிய வேளை அவர்களை பின் தொடர்ந்து சென்ற புலனாய்வாலர்கள் பஸ் சாரதிக்கு மீண்டும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு யாழ்ப்பாணத்திற்கு மீறிச்சென்றால் பஸ் வண்டி எரிக்கப்படும். நீங்கள் சுடப்படுவீர்கள் என 072-6998507 குறித்த தொலைபேசி இலக்கத்தினுடாக அச்சுறுத்தியுள்ளனர்.இதனால் பயணத்தை தொடர பஸ் சாரதிகள் தயக்கம் காட்டியமையினால் பயணம் கைவிடப்பட்டது. ----------------------------------------------------------------------------------------------------------------------- மன்னார் மாவடடத்தில் இருந்து சென்ற மக்கள் சீன மீனவர்களின் அத்துமீறிய வருகை, அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மக்களின் காணிகளை அபகரித்தல், மீனவர்களுக்கான எண்ணெய் மானியம் வழங்கப்படாமை மற்றும் எண்ணெய் விலை அதிகரிப்பு,வெளிநாடுகளில் கைது செய்யப்படுகின்ற மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும் காணாமல் போனவர்களின் நிலைப்பாடுகள் ஆகியவற்றிற்கு நீதி கோரியே குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுள்ளனர்.எனினும் நீண்ட நேரம் குறித்த மக்கள் இலுப்பைக்கடவை பாடசாலைக்கு முன் நின்ற நிலையில் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,அருட்தந்தை எஸ்.நேரு அடிகளார் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். ----------------------------------------------------------------------------------------------------------------------- பின் இலுப்பைக்கடவை பொலிஸ் அதிகாரியை அழைத்து இப்பிரச்சினை தொடர்பாக முறையிடப்பட்டது. எனினும் தமது பயணம் தடைப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் சென்ற மக்கள் இடை நடுவே மீண்டும் மதியம் 1 மணியளவில் மன்னாருக்கு திரும்பி வந்தனர்.-குறித்த மக்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் சென்ற போது புலனாய்வுத்துரையினர் அச்சுருத்தல்களை வழங்கி அவர்களை திருப்பி அனுப்பிய சம்பவத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வண்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.மக்களின் பிரச்சினைகளுக்கு அரசு உரிய முறையில் தீர்வை பெற்றுக்கொடுக்காத பட்சத்தில் மக்கள் தொடர்ச்சியாக இது போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் எனவும் இதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு மக்கலோடு நின்று ஆதரவை வழங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.